டெல்லி பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் முதல்வர் ராம ஷர்மா, விடுதி உணவகத்தில் (கேன்டீனில்) அசைவ உணவு ரத்து என்ற முடிவை மாற்ற இயலாது என்று ஜனவரி 18 அன்று கூறினார். ஏனெனில் இந்த கல்லூரி ஆரிய சமாஜத்தின் தத்துவத்தைப் பின்பற்றுகிறது என்றார்.
கோவிட்-19 ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரியில் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜனவரி 18 அன்று ஷர்மா, கல்லூரி மாணவர்களில் 90 சதவிகிதம் சைவ உணவு உண்பவர்கள் என்றும், இதற்கு முன்பாகவே விடுதியில் அசைவ உணவு வழங்குவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். இறைச்சித் தடை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்ற மாணவர்களின் கூற்றையும் மறுத்த அவர், விடுதியில் அசைவ உணவு வழங்கப்படமாட்டாது என்று ஹாஸ்டல் ப்ரோஸ்பெக்டஸ் (பள்ளி/கல்லூரித் தகவல் ஏடு) குறிப்பிடுவதாகக் கூறினார்.
படிக்க : இந்தியாவில் அதிகரிக்கும் அசைவ உணவு உண்பவர்களின் சதவீதம் !
“அசைவ உணவு தொடர்பான அறிவிப்பை நாங்கள் திரும்பப் பெறப்போவதில்லை” என்று ஷர்மா தெரிவித்தார். “இது ஒரு ஆரிய சமாஜ் கல்லூரி. எங்கள் தத்துவத்தின் படி நாங்கள் அசைவ உணவுகளை வழங்க மாட்டோம். நாங்கள் செயின்ட் ஸ்டீபனின் (கல்லூரியில்) ‘ஹவன்'(யாகம்) நடத்தச் சொல்லவில்லை, கல்சா கல்லூரி விதிகளில் தலையிட மாட்டோம். பிறகு ஏன் நாங்கள் மட்டும் விசாரிக்கப்படுகிறோம்?” என்று கூறினார்.
இதனிடையே, ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளாகத்தில் அசைவ உணவு வழங்கக்கோரி, கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் ஜனவரி 20 அன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.
கல்லூரியில் உள்ள இந்திய மாணவர் சங்கம் (SFI), அசைவ உணவை நிறுத்துவது “வளாகத்தை காவி நிறமாக்கும்” முயற்சி என்று கூறியுள்ளது. கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிட்டத்தட்ட 75 சதவிகித மாணவர்கள் அசைவ உணவு உண்பவர்கள் என்று அம்மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
“கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கோழிக்கறி உணவு வழங்கப்பட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி மீண்டும் தொடங்கியதும், கல்லூரி நிர்வாகம் கோழிக்கறி உணவை நிறுத்திவிட்டது” என்று இரண்டாம் ஆண்டு தத்துவ மாணவர் ஒருவர் கூறினார். “அவர்கள் இனி முட்டைகளை கூட வழங்க மாட்டார்கள்” என்றார்.
படிக்க : அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !
“மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மற்றொரு மாணவர் இந்த முடிவின் காரணமாக விடுதியை விட்டு வெளியேறி ஒரு தனியார் விடுதிக்கு மாற வேண்டியிருந்தது” என்றார்.
75 சதவிகித மாணவர்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கும் நிலையில், ஆரிய சமாஜ் என்ற பெயரில் 90 சதவிகித மாணவர்கள் சைவ உணவு உண்கிறார்கள் என்று பொய் கூறி, மாணவர் விடுதியில் வழங்கப்படும் அசைவ உணவை தடைசெய்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி – கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதை போன்ற காவி சித்தாந்தத்தை புகுத்தும் ஓர் நடவடிக்கையே இந்த ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் அசைவ உணவு தடை நிகழ்வாகும்.
புகழ்