ந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியர்கள் உண்ணும் உணவுகள் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பல்வேறு விவாதங்கள் இன்று வரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் சைவ சிறந்த உணவு என்றும் அதை சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாகவும், அதே நேரத்தில் அதிக காலம் வாழ்வதாகவும் தனதுக்கு தெரிந்ததை வைத்து விவாதித்து கொண்டு இருக்கிறனர் பலர் குறிப்பாக சங்கிகள்.
ஒன்றிய அரசும், அதன் அமைச்சர்களும் அசைவ உணவு குறித்து அவதூறும் செய்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை அடித்துக் கொலை செய்தும், அதை விற்பனை செய்தவர்களை கடுமையான தண்டணைக்கும் உள்ளாக்கியும் வருகின்றனர். இவர்கள் அனைவரும், எங்களுடைய முன்னோர்கள் எல்லோறும் சைவ உணவை சாப்பிடுபவர்கள் என்றும், சைவ உணவை உண்ண தொடங்கியது எங்கள் பரம்பரை தான் என்றும் அதனால் நாங்கள் தான் மேன்மையானவர்கள், புனிதமானவர்கள் என்று வெள்ளை நூல் அணிந்துகொண்டு வெளங்காத கருத்துக்களையும், இழிவான செயல்களை செய்பவர்களின் சிந்தனை கொண்ட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களின் செய்லகள்தான் இது.
சரி இது ஒருபுறம் இருக்கட்டும். அசைவ உணவுகள் குறித்து அவதுறுகள் பலவந்தாலும் தற்போதை ஒரு ஆய்வின் முடிவு அசைவ உணவிற்கு ஆதரவாக வந்து இருக்கிறது. ஆம்… அதுதான் சமீபத்தில் வெளியான அசைவ உண்வுகள் குறித்து தேசிய சுகாதார கணக்கெடுப்பின் தகவல். அதன்படி இந்தியாவில் அசைவ உணவுகள் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
படிக்க :
இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !
குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !
காவி கும்பல்களுக்கு பிடிக்காத மாட்டுக்கறியை தவிர மீன், சிக்கன் மற்றும் மட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான இறைச்சிகள் இந்த ஆய்வின் ஆய்வு பொருளாக இருந்தது. 15 வயது முதல் 49 வயது வரை உள்ள ஆண்கள் 83.4 சதவீதத்தினர் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ அசைவ உணவுகளை உண்ணுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் 70.9 சதவீத பெண்கள் தனக்கு தேவையான இறைச்சியை சாப்பிடுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
எந்தவிதமான இறைச்சியும் சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை கடந்த 2015-ம் ஆண்டில் 21.6 சதவீதமாக இருந்தது என்றும், அந்த விகிதம் 2021 ஆண்டில் 16.6 சதவீததினராக குறைந்துள்ளது என்றும் இந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அசைவம் சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.
இதேபோல் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள அசைவம் சாப்பிடாத பெண்கள் கடந்த 2015-ம் ஆண்டு 29.9 சதவீதத்தினராக இருந்து 2021-ம் ஆண்டு அது 29.4 சதவிதமாக குறைந்துள்ளது. இதன்மூலம் அசைவம் சாப்பிடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அசைவ உணவுகள் மீது பரப்பப்படும் அவதுறுகளுக்கு மத்தியில் அதை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்பது ஆறுதலான செய்திதான். உணவை முறையை வைத்துகொண்டு இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மீது தனது பார்ப்பனிய கலாச்சார தாக்குதலை தொடுப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகளையும் செய்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார கும்பல்.
இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை அமைக்க அனைத்து வழிகளிலும் முன்னேறி வரும் இந்த காவி பாசிஸ்டுகளை உணவை உள்ளட்டக்கிய பண்பாட்டு துறையிலும் வீழ்த்துவது அவசியமே.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க