ரக்பர் கான் கொலை வழக்கின் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம்!

ரக்பரின் சகோதரர் ஹாருன் கான், “பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுவித்ததை போன்று இந்த கொலை வழக்கிலும் நீதிமன்றம் கொலையாளிகளை விடுவித்து விடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்றார்.

0

டந்த 2018 ஆம் ஆண்டு ரக்பர் கான் பசுக் குண்டர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பசுக் குண்டர்கள் ஐந்துபேரில் நான்கு பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், ஒருவரை விடுவித்தும் மே 25 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம்.

***

ஜூலை 20, 2018 அன்று இரவு, ரக்பர் கான் தனது நண்பர் அஸ்லம் கானுடன், அல்வாரில் உள்ள லால்வண்டியில் தங்கள் வீட்டிற்கு மாடுகளைக் கொண்டு சென்றபோது பசுக் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143 (சட்டவிரோத கூட்டம்), 341 (தவறான கட்டுப்பாடு), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 302 (கொலை) மற்றும் 34 (பொது நோக்கத்திற்காக பலர் செய்த செயல்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பரம்ஜீத் சிங், தர்மேந்திரா, நரேஷ் மற்றும் விஜய் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலை விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் நவல் கிஷோர் சர்மா வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

படிக்க : பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !

பல ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் மே 25, 2023 அன்று இத்தீர்ப்பு வழங்கியுள்ளது அல்வாரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம். தர்மேந்திர யாதவ், பரம்ஜீத் சிங், விஜய் குமார் மற்றும் நரேஷ் குமார் ஆகிய நான்கு குற்றவாளிகள் மீதும் 304, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என சிறப்பு அரசு வழக்கறிஞர் அசோக் சர்மா தெரிவித்தார். விஎச்பி தலைவரான நேவல் கிஷோர், “அவருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால்” அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் அசோக் ஷர்மா, தண்டனைகளில் மகிழ்ச்சியாக இருந்தாலும், வழங்கப்பட்ட தண்டனையில் திருப்தி இல்லை என்றும், மேல்முறையீட்டைப் பரிந்துரைக்க வேண்டுமா என்பதை அரசுத் தரப்பு ஆராயும் என்றும் கூறினார். “நேவல் (கிஷோர்) மற்ற குற்றவாளிகளுடன் தொலைபேசியில் பேசியதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அவரை விடுவித்துள்ளார்கள்.

குற்றவாளி நேவல் கிஷோர், “மற்ற நால்வரும் நிரபராதிகள், எங்களுக்கு உயர்நீதிமன்றத்தில் முழு நம்பிக்கை உள்ளது. அரசியல் அழுத்தம் இருப்பதாக நான் கூறமாட்டேன் (விசாரணை நீதிமன்றத்தில்), அவர்கள் புரிந்து கொண்டபடி செயல்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு ஓரளவு நீதி கிடைத்துள்ளது.

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஐபிசி பிரிவு 302 மற்றும் 147 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக பாதுகாப்பு வழக்கறிஞர் ஹேம்ராஜ் குப்தா கூறினார்.

தீர்ப்பை அறிவித்த கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி சுனில் குமார் கோயல், குற்றமற்ற கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும், தவறான தடைக் குற்றச்சாட்டின் கீழ் தலா ஒரு மாத சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரசுத் தரப்பு எதிர்பார்த்த அளவுக்குக் கடுமையாக இல்லாத தண்டனைக்குப் பிறகு, சிலர் “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “சத்ய கி ஜெய் ஹோ!” என்று முழக்கமிட்டனர். (உண்மை வெல்லட்டும்) என நீதிமன்ற வளாகத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

படிக்க : பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !

ரக்பரின் மனைவி அஸ்மினா முக்கிய குற்றவாளி விடுவிக்கப்பட்டுள்ளார், மற்றவர்களுக்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது – இதை அதிகரிக்க வேண்டும். இது நீதியல்ல என்று தீர்ப்பை கண்டு வேதனை அடைந்துள்ளார்.

ரக்பரின் சகோதரர் ஹாருன் கான், “பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுவித்ததை போன்று இந்த கொலை வழக்கிலும் நீதிமன்றம் கொலையாளிகளை விடுவித்து விடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்றார்.

பெஹ்லு கானை அடித்து கொன்ற கொலை குற்றவாளிகளை விடுதலை செய்த, அதே நீதிமன்றம் தற்போது ரக்பர் கானை கொன்ற குற்றவாளிகளையும் விடுதலை செய்ய எத்தனிக்கிறது. முஸ்லீம் மக்கள் மீது பசுக் குண்டர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தி கொலை செய்துவரும் காவி பயங்கரவாத கும்பலுக்கு நீதிமன்றமும் போலீசும் ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது மீண்டும் இந்த தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க