கடந்த வாரம் நிகழ்ந்த ஒடிசா இரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. மோடி – அமித்ஷா கும்பலின் இரயில்வே துறையினை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாலும் அலட்சியத்தாலும் எண்ணிலடங்கா உயிர்கள் காவு வாங்கப்பட்டன. மிக கோரமாக நடந்த இவ்விபத்தில் 288 மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி தங்களது கை, கால்களை இழந்தவர்கள், விபத்தில் இருந்து மீண்டாலும் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் தேடி அலையும் மிக மோசமான நிலை. உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களே அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் நசுங்கி போயுள்ளன.
உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்தது முன்பதிவில்லாத பெட்டிகளில்தான். மொழித் தெரியாத மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி சென்றவர்களை இழந்து பல ஏழை குடும்பங்கள் மீள முடியாத பெருந்துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. பீகாரில் இருந்து சென்னைக்கு கூலி வேலைத்தேடி சென்ற தனது 17 வயதான மகனை தேடி அலைந்த பீகார் கூலித் தொழிலாளிக்கு, ஒருநாள் தேடலுக்கு பிறகு தனது மகனின் நசுங்கிய உடல்தான் கிடைத்தது. இப்படி தனது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்த பிள்ளைகளும் பெற்றோர்களும் தேடி அழையும் துயரக் காட்சிகள் நமது நெஞ்சை கனக்க வைக்கிறது.
இக்கோர சம்பவம் தொடர்பாக அல்ஜஸீரா இணையதளம் வெளியிட்ட படங்கள்:
000
000
000
000
000
தாரகை
நன்றி: அல்ஜசீரா