”பற்றி எரியுது மணிப்பூர்! பற்ற வைப்பது காவி பாசிஸ்டுகள்!” என்ற தலைப்பில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தோழர் மோகன் பொருளாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். கூட்டத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.
இதில் கண்டன உரையாற்றிய தோழர் திலகவதி (மக்கள் அதிகாரம்) அவர்கள் ”பற்றி ஏறிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! மணிப்பூர் சிறப்பு அந்தஸ்து உள்ள மாநிலம். தனி நாடாக இருந்த மணிப்பூர் 1948-க்கு பிறகு மணிப்பூர் மக்களின் எதிர்ப்பை மீறி இந்தியாவோடு வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது. 1958-இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு அதிகார சட்டம் அன்று முதல் இன்று வரை மணிப்பூரில் அமலில் இருக்கிறது. ஆர் எஸ் எஸ் பஜ்ரங்தள் அமைப்பின் சித்தாந்தத்தை கொண்ட அரம்பை தெங்கால் மெய்தி லீபன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையை நடத்தியுள்ளனர் என்ற சான்று வெளியாகி உள்ளது.
இதற்கு காரணம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைகளில் பெட்ரோலியம் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அதை கார்ப்பரேட்டுக்கு பலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காவிகள் அங்கே இக்கலவரத்தை நடத்துகின்றனர். பாசிச பாஜகவின் பிரித்தாலும் சூழ்ச்சி இங்கே அமல்படுத்தப்பட்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பூர்வகுடி மக்களான குக்கி இன மக்களை அழித்து மணிப்பூரை சூறையாட நினைக்கும் காவி பாசிஸ்டுகள் கார்ப்பரேட்டுகளை ஒழிக்காமல் தீர்வு இல்லை என்பதை மணிப்பூர் மக்களின் போராட்டம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
மணிப்பூரில் மட்டுமல்ல சட்டீஸ்கரில் சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுகளை வீசி கொன்றதை நாம் பார்த்தோம். காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்தின் மூலமாக இன்று கார்ப்பரேட்டுகளின் பிடியில் காஷ்மீர் மாறிவருவதை பார்க்கிறோம். அடுத்து மணிப்பூர்; இது மணிப்பூரோடு நின்றுவிடப் போவதில்லை. அடுத்த தமிழ்நாடு தான். ஏனென்றால் இன்று கார்ப்பரோட் முதலாளிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கும் சக்தி மக்கள் இழந்து வருகின்றனர். பொருளாதார மந்தம் வேலையின்மை வேலைக்கேற்ற ஊதியமின்மை விவசாயம் நெசவு சிறு வணிகம் அழிவு ஜி.எஸ்.டி கொரோனாவுக்கு பிறகான தொழில்கள் முடக்கம் போன்றவை மக்கள் வாங்கும் சக்திகளற்றவர்களாக மாறிவருகிறது. ஆதலால் இந்த கார்ப்பரேட்டுகள் சேவை துறையை நோக்கி கால் பதித்தனர் கல்வி மருத்துவம் என தொடர்ந்து இன்று பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களை சூறையாடும் திட்டத்தை முன்வைக்கின்றனர்.
அதன் ஒரு பகுதிதான் சென்னை சேலம் எட்டு வழி சாலை திருவண்ணாமலை மலைக் கொள்ளைகள் பாலியப்பட்டு சிப்காட் பரந்தூர் விமான நிலையம் எண்ணூர் துறைமுகம் என்று தமிழ்நாட்டிலும் திட்டங்கள் அடுக்கி வைக்கப்படுகிறது. இதை சாதி இன மத நிற மொழிகளுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் வர்க்கமாக அணி திரண்டு எதிர்க்காமல் பாசிசை எதிர்த்து மக்கள் முன்னணியை கட்டாமல் இருந்தால் நமக்கும் மணிப்பூர் நிலைதான். ஆக வர்க்கமாக அணி திரள்வோம் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டுவோம்” என்று கண்டன உரையை நிறைவு செய்தார்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநிலஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சுந்தர் அவர்கள் தனது கண்டன உரையில் பாசிசித்தால் இன்று தொழிலாளர் வர்க்கம் எந்த அளவுக்கு சீரழிந்து வருகிறது என்பதையும் வேலைவாய்ப்பு புதிய தொழில் வளர்ச்சி என்று பொய் சவடால் அடித்துக்கொண்டு 2 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிதருவதாக கூறி தேர்தலில் வெற்றி பெற்று இன்று பகோடா விற்றுக் கொள் எனபேசுவது; சட்ட திருத்தம் என்ற பெயரில் இந்தியா முழுக்க கலவரங்கள் சிறுபான்மை மக்கள் மீது ஒடுக்கு முறைகளை செலுத்தி தனது இந்துராஷ்ரத்தை கனவை நிறைவேற்றுகிறது என்பதை கண்டன உரையில் பதிவு செய்தார் .தமிழ் புலிகள் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி, திராவிட விடுதலைக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் தனது கண்டன உரையை பதிவு செய்தனர். முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
தகவல்:
பு.ஜ.தொ.மு,
மக்கள் அதிகாரம்,
வேலூர், காஞ்சி.
