மணிப்பூர் பற்றி மோடி: அவரது நடிப்புத் திறனுக்குச் சான்று!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கைவிரலில் பட்ட சிறு அடிக்குக்கூட நலம் விசாரித்து, டுவிட்டரில் கண்ணீர் விடும் பாசிஸ்ட் மோடி, இந்த 79 நாட்களில் ஒருமுறை கூட மணிப்பூர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 150-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ணிப்பூர் கலவரம் மே 3 அன்று துவங்கியது. அன்று முதல் 79 நாட்களாக மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அரசு நிர்வாகமே பெரும்பான்மை கலவரக்காரர்களுக்கு உடந்தையாக மாறியிருக்கிறது. அங்கு பா.ஜ.க அரசாங்கம் நடக்கிறது. தேவாலயங்கள் எரிக்கப்படுகின்றன. பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக மக்கள், குறிப்பாக பழங்குடி மக்கள், மாறியிருக்கின்றனர்.

மணிப்பூரின் மலை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்காக மெய்தி, குக்கி இன பழங்குடி மக்களிடையே வன்முறையை தூண்டி அதனை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றபோது, மோடியால் தேசத்தின் பெருமையாகப் புகழப்பட்ட மல்யுத்த வீராங்கனை மேரிகோம், “எனது மாநிலம் பற்றி எரிகிறது; உதவுங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு டிவிட்டர் வாயிலாகக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மோடியோ கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பஜ்ரங் பலி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். “இது ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை” என்று பல பத்திரிகையாளர்களும் மோடியை விமர்சித்திருந்தனர்.


படிக்க: போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!


கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கைவிரலில் பட்ட சிறு அடிக்குக்கூட நலம் விசாரித்து, டுவிட்டரில் கண்ணீர் விடும் பாசிஸ்ட் மோடி, இந்த 79 நாட்களில் ஒருமுறை கூட மணிப்பூர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 150-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, எகிப்து, ஃபிரான்ஸ் நாடுகளுக்கு சென்ற பாசிஸ்ட் மோடி இந்தியாவில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு ஒருமுறை கூட இதுவரை செல்லவில்லை. முதலாளிகளின் நலன்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்த பாசிஸ்ட் மோடி மணிப்பூர் மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் கிளப்பப்படும்; நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பி தன்னைப் பதிலளிக்குமாறு வலியுறுத்துவார்கள் என்பதை உணர்ந்த பாசிஸ்ட் மோடி வழக்கம் போல குறுக்கு வழியைக் கையாண்டார். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு ஜூலை 20 அன்று திடீரென ஊடகங்களை வரவழைத்த பாசிஸ்ட் மோடி, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மைக்குகள் முன்பு, 78 நாட்களுக்கு பின்னர் மணிப்பூர் குறித்து வாய் திறந்தார்.


படிக்க: இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?


“இந்த ஜனநாயகக் கோவிலுக்கு அருகில் நிற்கும்போது, என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரிக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடான சம்பவம். என் இதயமே வலிக்கிறது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்கவே முடியாது. இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானகரமானது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் மோடி.

மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங்கை குறிப்பிட்டு தனியாக எதுவும் கண்டிக்காத பிரதமர் மோடி, “அனைத்து மாநில முதல்வர்களும் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொத்தாம் பொதுவாக பேசினார்.  அத்துடன், மணிப்பூர், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களையும் கலவர பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.

இப்படி பல வேடங்களில் பேசி, நடித்துக் கொண்டிருக்கும் பாசிஸ்ட்டுகளை போராட்டக்களத்தில் வீழ்த்தினால் தான் துடைத்தெறிய முடியும்.


ராபர்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க