திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்!

போலீஸின் இந்த வன்மத்திற்கு காரணம் காவி வெறி தலைக்கேறி உள்ளது என்பதே. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் நமது முழக்கங்களை போலீஸின் உதவியோடு அழித்து அதை செல்பி எடுத்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முகநூலில் பதிவிட்டு குதூகலம் அடைந்து வருகிறது.

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்த போலீஸ்,
பிஜேபி கும்பலின் மறைமுக கைப்பாவை

திருவாரூர் பகுதியில் மைய இயக்கத்தைத் ஒட்டி “வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம்” என்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த சுவர் விளம்பரத்தை பார்த்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எரிச்சல் அடைந்து போலீஸை தூண்டி விட்டு சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பி.ஜே.பி என்ற முழக்கங்களை மட்டும் கருப்பு மையைக் கொண்டு அழித்துவிட்டது.

போலீஸ் துறையின் இந்த அராஜக போக்கைக் கண்டித்து திராவிட கழக மாவட்ட தலைவர் அய்யா மோகன், நகரத் தலைவர் ஐயா சிவராமன், இயற்கை உழவர் இயக்கத்தின் தோழர் ஜி வரதராஜன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர். முஜிபுர் ரஹ்மான், CPI(M) கட்சியின் நகரச் செயலாளர் தோழர் தர்மலிங்கம், விடுதலை சிறுத்தை கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தோழர் புரட்சி நெப்போலியனின், மே 17 இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கலைவாணன், அனைத்து நீதி மக்கள் கட்சியின் மாநில தலைவர் தோழர் பாட்ஷா, மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத், மாவட்ட பொருளாளர் தோழர் முரளி, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின் ஆகியோர் இணைந்து சங்கிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகர போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

உழைக்கும் மக்களே ஜனநாயக சக்திகளே!

“ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ”வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் எமது அமைப்புகளின் சார்பாக சுவர் விளம்பரங்கள் செய்து வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டன. இந்த சுவர் விளம்பரத்தை பார்த்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எந்த அளவிற்கு எரிச்சல் அடைந்ததோ அதே அளவிற்கு போலீஸும் எரிச்சல் அடைந்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி காலையில் தோழர் முரளி அவர்களுக்கு போலீஸ் அதிகாரி போன் செய்து சுவர் விளம்பரத்தை அழிக்குமாறு கூறினார். ஆனால் தோழர் முரளி அழிக்க இயலாது என்று கூறியதால் போலீஸ் துறையினர் ஒருவரை அழைத்து வந்து நாம் செய்திருந்த சுவர் விளம்பரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!”, ”வேண்டாம் பி.ஜே.பி” என்ற முழக்கத்தை மட்டும் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர்.

போலீஸின் இந்த வன்மத்திற்கு காரணம் காவி வெறி தலைக்கேறி உள்ளது என்பதே. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் நமது முழக்கங்களை போலீஸின் உதவியோடு அழித்து அதை செல்பி எடுத்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முகநூலில் பதிவிட்டு குதூகலம் அடைந்து வருகிறது.

போலீஸ் துறை எப்படி பாசிசமயமாக மாறி வருகிறது என்பதற்கு இதெல்லாம் நேரடியான சாட்சிகள். இது மட்டுமல்லாமல் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளை ஒட்டி திருவாரூர் தெற்கு வீதியில் பேரணிக்கு அனுமதி கேட்ட போது திருவாரூர் போலீஸ் துறை அனுமதி தர மறுத்தது. ஆனால் இந்து முன்னணி அமைப்பு சார்பாக விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தும் விதமாக நடைபெற்ற பேரணிக்கு மட்டும் செப்டம்பர் 17 தேதி அனுமதி வழங்கியது. ஆனால் மற்ற கட்சிகள் சார்பாக ஆர்பாட்டங்களோ‌ வேறு நிகழ்ச்சிகளோ நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


படிக்க: சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


இது ஏதோ எமது அமைப்புகளின் மீது மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கை என்று பார்க்க முடியாது. இதே போன்று திருவாரூரில் பெரியார் மற்றும் வள்ளலார் 200 என்ற நிகழ்ச்சி ஒன்றை தனியார் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதை அறிந்த ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி கும்பல் போலீஸ் துறையிடம் கூறி அந்த நிகழ்ச்சியைத் தடுத்துள்ளது.

அதனால்தான் சொல்கிறோம் போலீஸ் காவி பாசிஸ்டுகளாகவே மாறி வருகிறார்கள்.

சுவர் விளம்பரங்களை அழித்த போலீஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் -பி.ஜே.பி கும்பலை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் அதிகாரம், திருவாரூர்.


தகவல்
மக்கள் அதிகாரம் – திருவாரூர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க