காவிமயமாக்கப்பட்டு வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்!

பெரியாரை “காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர் எனவும் இந்த மண்ணின் இருண்ட இருள்" என இழிவாகப் பேசி அறிக்கை வெளியிட்டுள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டந்த செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு Deepotsav 23 என்னும் பெயரில் ஆக்கிரோசமாக வில்லேந்திய காவி நிற இராமன் உள்ளிட்ட இந்துத்துவ அடையாளங்களை வைத்தும், ஜெய் ஸ்ரீ ராம் வாசகம் மற்றும் அயோத்தி ராமர் கோவிலைக் கோலங்களில் வரைந்தும், துணைவேந்தர் முன்னிலையில் யாகம் வளர்த்து பார்ப்பனிய முறையில் பூஜையும் நடத்தியுள்ளனர்.

இதுபோன்று, தொடர்ச்சியாக ஜனநாயகத்திற்கு எதிரான வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ்  சித்தாந்தத்தையும் மாணவர்கள் மத்தியில் திணிக்கும் வேலைகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.

படிக்க : உலகக் கோப்பை: தேசவெறிக்கு நாங்கள் பலியாக மாட்டோம்!

ஒரு பக்கம் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட ஆட்களைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்து இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களைத் திட்டமிட்டே ஒழித்துக் கட்டும் வேலை செய்து வரும் சங்கிக் கும்பல், மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மாணவர்களிடம் புகுத்தி, மாணவர்கள் மத்தியில் பிரிவினைகளைத் தூண்டிவிட்டு வருகிறது.

ABVP மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை

மதச்சார்பற்ற முறையில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்களில் இவ்வாறு திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைத் திணித்து பல்கலைக்கழகத்தைப் பார்ப்பனமயமாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பல்.

பல்கலைக்கழகத்தில் பார்ப்பனிய முறைப்படி பூஜை நடத்தியதோடு மட்டுமல்லாமல், பெரியாரை “காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர் எனவும் இந்த மண்ணின் இருண்ட இருள்” என இழிவாகப் பேசி அறிக்கை வெளியிட்டுள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க : பாலஸ்தீன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது குற்றமாம்!

தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மண்ணிற்கும் எதிராக வேலை செய்யும் துணைவேந்தரை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் மதக் கலவரங்களைத் தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக, ஏபிவிபி போன்ற சங்கப் பரிவாரக் கும்பல்களைத் தமிழ்நாட்டில் தடைசெய்ய வேண்டும்.

மக்கள் அதிகாரம்,
திருவாரூர். 6383461270

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க