“உயர்நீதிமன்றத்தில் தமிழ்”
வழக்குரைஞர் போராட்டம் வெல்க!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்கள் பிப்ரவரி 28 முதல் உண்ணா நிலை போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

அப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது மட்டுமல்ல; உயர்த்திப் பிடிக்க வேண்டியதும் நம்முடைய கடமை.

விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் என்று கூறப்பட்ட போதும் தமிழை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்கவே இன்னும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதே மிகவும் இழிவான நிலை. வழக்காடிக்கு தனக்கு புரிகின்ற மொழியில், தன்னுடைய தாய் மொழியில் ஒரு வழக்கு நடத்தக்கூட உரிமை இல்லை என்றால் இதற்குப் பெயர் என்ன ஜனநாயகம்?

மருத்துவம், பொறியியல், சட்டம் அறிவியல் என அனைத்து துறைகளிலும் தாய் மொழியில் கற்கும் போது தான் அனைவருமே அந்தத் துறையில் ஈடுபாட்டுடன் படித்து முன்னேற முடியும்.

உயர்நீதி மன்றத்தில் தமிழை, மாநிலத்தின் மொழியை வழக்காடு மொழியாக்காமல் தடுப்பது எது?

படிக்க : உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்!

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348 (2) இன் படி ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் இசைவுடன் இந்தியையோ அல்லது அந்தந்த மாநில அலுவல் மொழியையோ ஆங்கிலத்துடன் சேர்த்து கூடுதல் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்கலாம் என்று வழிவகை செய்கிறது.

அதன் அடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 18 நாட்களிலேயே இராஜஸ்தான் மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியைப் பெற்று இந்தியை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்கினார்.

அதற்குப் உத்தரபிரதேசம், பிந்தைய ஆண்டுகளில் மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தி மொழியானது எனது உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்கப்பட்டது.

(துண்டறிக்கை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே அழுத்தவும் – உயர்நீதிமன்றத்தில் தமிழ்)

2006 ஆம் ஆண்டு தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க ஒப்புதல் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று மேற்கு வங்காளம், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடக ஆகிய அரசுகள் தங்கள் மாநில மொழியை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்று தங்களது சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில்களைக் கேட்டால் உச்ச நீதிமன்றம், உணர்ச்சிப்பூர்வமான மொழி பிரச்சனை சட்டம் ஒழுங்கு சிக்கல் வரும் என்று தகவல் தெரிவிக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் இலக்கணம் என செழுமைமிக்க மொழியானது நம்முடைய மொழி. தமிழைக் காக்க பல நூறு பேர்தங்கள் உயிரை தியாகம் புரிந்திருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக மொழிப்போர் கண்டதும் நம் தமிழ் மொழியே. இப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த வரலாறு படைத்த நம் தமிழ் மொழிக்கு ஏன் இன்னும் உயர் நீதிமன்றத்தில் மட்டும் இடமில்லை?

தற்போது இருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348 (2) இன் படி உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்காமல் நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அதன்படி சட்டமன்றத் தீர்மானத்திற்கு இசைவு பெற முடியும் என்ற சூழல் தற்போது இருக்கும் போது கூட திட்டமிட்டு ஒன்றிய அரசுகள் மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க மறுக்கின்றனர்.

படிக்க : வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்கறிஞர்கள்

இந்த நாட்டையே இந்துராஷ்டிரமாக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பல் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், என்று நாட்டையே மறுக்கட்டமைப்பு செய்து கொண்டிருக்கும் இந்தச்சூழலில்தான்,

உயர்நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

இது வெறும் மொழி சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல, இந்துராஷ்டிரக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் பாசிஸ்டுகளின் கண்ணாடிக் கோட்டையில் எறியப்படும் கல்.

இதோ மொழி காக்கும். மண் காக்கும் போராட்டத்தில் தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள் முன்னணியில் முன்னணியில் நிற்கிறார்கள்.

  • தமிழுக்க! போராட்டத்தை மக்கள் போராட்டமாக்குவோம்.
  • தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க