ஒன்றிய அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு அக்டோபர் 1 ஆம் தேதி தக்கலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தை நடத்தவுள்ளது.
அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மிடாலம், கீழ் மிடாலம், இனையம், ஏழுதேசம், புத்தன்துறை, கொந்தன்கோடு ஆகிய கிராமங்களில் உள்ள மோனோசைட், சீர்கான், இலமனைட், ரூடைல், சிலிமைட், லூக்காசின் போன்ற அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு 1,144 ஹெக்ட்டர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பாதற்கு மத்திய அரசின் கீழ் உள்ள அணுசக்தித் துறை முடிவு செய்துள்ளது.
ஒன்றிய அரசின் இத்திட்டத்தினை பற்றி பூவுலகின் நண்பர்கள் கூறுகையில், “அணுக்கனிம சுரங்கம் அமைக்கத் திட்டமிட்ட பரப்பளவில் 353 ஹெக்ரெர் பரப்பளவானது பத்துக்காகப்பட்ட கடலோர மண்டலத்தின் கீழ் வருகிறது. மற்றும் இயற்கையாகவே அப்பகுதி கதிரியக்கம் அதிகம் கொண்ட பகுதி என்பதால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, குமரி போன்ற கடற்கரை மாவட்டங்கள் தாதுமணல் கொள்ளையால் கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மேலும் இத்திட்டத்தினால் இனப்பெருக்கத்திற்காகவும் உணவிற்காகவும் கடற்கரைக்கு வரும் வரும் கடல் உயிரினங்கள் அழிந்து போகும் நிலை உள்ளது. இது கடல் வளத்தையும் மண் வளத்தையும் பாதிக்கக் கூடிய திட்டமாகும்.
படிக்க: தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு
மேலும் கன்னியாகுமரியில் உள்ள மீனவக் கிராம மக்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு தைராயிட்டு புற்றுநோய், தோல்நோய், கருச்சிதைவு , மலட்டுத்தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இப்பகுதிகளில் அணுக்கனிமங்களை வெட்டி எடுப்பதால் கடற்கரையிலேயே வாழும் மக்களுக்கும், மீனவர்களுக்கும் அதிகமான கதிரியக்க பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் 69.6 கி. மீட்டர் நீளம் கொண்ட கடற்கரைப் பகுதியில் 44.56 கி. மீட்டர் பகுதி அரிப்புக்குள்ளாகி வருவதாகவும், முக்கியமாக இனையம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி கிராமங்களின் கடற்கரைப் பகுதிகளில் கடலரிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடுகிறது. எனவே இப்படிப்பட்ட நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
படிக்க: வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!
கிள்ளியூரைச் சேர்ந்த ஜோஸ் பெல்பின் கூறுகையில், “கடல் அரிப்பினால் நாங்கள் அனைவரும் வீடுகளை இழந்து கடற்கரையோரத்தில் வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகிறோம். 2006 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசானது அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கான திட்டத்தைக் கொண்டு வந்ததிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஆனால் அரசு இத்திட்டத்தை நிறுத்தவில்லை.
இதனால் ஏற்பட்ட நோயினால் இங்கிருக்கும் மக்கள் அருகிலுள்ள திருவனந்தபுரம் போன்ற வேறு மாநிலப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக அணுக்கனிம சுரங்கம் அமைப்பது என்பது எங்களை திட்டமிட்டே வெளியேற்றும் நடவடிக்கையாகும். எனவே எங்கள் கிராமத்திலிருந்து ஒரு பிடி மண்ணையும் எடுக்க விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டைக் குப்பை தொட்டடி போல் கருதி பல்வேறு அணுக்கனிம திட்டங்களைச் செயல்படுத்த முனைகிறது. அணுக்கழிவுகளைக் கூட கூடங்குளத்திலேயே வைக்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டை இந்துராஷ்டிரத்தின் பின்நிலமாக மாற்றும் நடவடிக்கையே இந்த அணுக்கனிம சுரங்கத் திட்டமாகும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram