காசா – லெபனான் மீதான இஸ்ரேலின் படுகொலை | அமெரிக்க அரசை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்! | படக்கட்டுரை

ANSWER (Act Now to Stop War and End Racism) என்ற கூட்டமைப்பு சார்பாக, "லெபனானை விட்டு வெளியேறு!", "லெபனான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரை உடனே நிறுத்து!", "மத்திய கிழக்கைவிட்டு வெளியேறு!", "சுதந்திர பாலஸ்தீனம்", "பைடன், கமலா, டிரம்ப் மற்றும் நெத்தன் யாகு; எங்கள் ஊரில் யாருக்கும் அனுமதி இல்லை" போன்ற பதாகைகள் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

0

காசா – லெபனான் மீதான இஸ்ரேலின் படுகொலைகளுக்கு ஆயுதம் வழங்குவதை உடனே நிறுத்து! அமெரிக்க அரசை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்!

த்திய கிழக்கில் போர் அபாயம் அதிகரித்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவம் ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

செப்-23 காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 குழந்தைகள் உட்பட குறைந்தது 560 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 1,800 பேர் காயமடைந்துள்ளார்கள். இஸ்ரேலின் இத்தாக்குதலை கண்டித்து செப்-24 அன்று மாலை நியூயார்க் நகரில் உள்ள ஹெரால்ட் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துகொண்டிருக்கும் அதேவேலையில், லெபனானிலும்  தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்களை படுகொலை செய்து வருகிறது கொலைவெறி பிடித்த இஸ்ரேல். எனவே, இஸ்ரேலுக்கு ஆயுதத்தடை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்க மிட்டனர்.

ANSWER (Act Now to Stop War and End Racism) என்ற கூட்டமைப்பு சார்பாக, “லெபனானை விட்டு வெளியேறு!”, “லெபனான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரை உடனே நிறுத்து!”, “மத்திய கிழக்கைவிட்டு வெளியேறு!”, “சுதந்திர பாலஸ்தீனம்”, “பைடன், கமலா, டிரம்ப் மற்றும் நெத்தன் யாகு; எங்கள் ஊரில் யாருக்கும் அனுமதி இல்லை” போன்ற பதாகைகள் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கிவரும் பெருமளவிலான குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவையே லெபனான்-காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு மிகவும் அடிப்படை” என்று ANSWER கூட்டமைப்பு குற்றம்சாட்டுகிறது.

வாஷிங்டனை தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், சான் அன்டோனியோ மற்றும் பீனிக்ஸ் ஆகிய நகரங்களிலும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்க அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.

***

நியூயார்க்கில் பாலஸ்தீனிய மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது ஒரு தெருவை போலீசு போராடுபவர்களை தடுத்து நிறுத்தினர்.

***

நியூயார்க்கில் ஒரு போராடும் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார்

***

நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசு கைது செய்தது.

***

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் லெபனான் மற்றும் பாலஸ்தீனத்துடன் தனது ஆதரவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியிபடுத்தினர்.

***

“பைடன், கமலா, டிரம்ப் மற்றும் நெத்தன் யாகு; எங்கள் ஊரில் யாருக்கும் அனுமதி இல்லை” என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பினர்.

***

காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளன.

***

வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அருகிலும் இதே போன்ற போராட்டம் நடைபெற்றது.

சந்துரு
நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க