கூடங்குளம் போராட்டம் – ஆவணப்படுத்திய ஆஸ்திரேலியர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

தமிழ்நாடும் மத்திய அரசும் ஒரு பெரிய நிலநடுக்கப் பிழைக் கோட்டில் ஆறு அணு உலைகளைக் கட்ட முடிவு செய்தபோது, அது தங்கள் சொந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கே - இலங்கை மற்றும் பிற சுற்றுப்புற நாடுகளுக்கும் - பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் பிராட்பரி.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆவணப்படுத்திய ஆஸ்திரேலியரைத் இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது பாசிச மோடி அரசு.

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, 73 வயதான ஆஸ்திரேலிய ஆவணப்பட தயாரிப்பாளர் டேவிட் பிராட்பரி தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக வந்த அவர், இந்திய நாடு முழுவதும் உள்ள ஐந்து வெவ்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, குடும்ப ஹோட்டல்களை முன்பதிவு செய்தார். அவர்களது உள்நாட்டுப் பயணத்திற்கான மற்ற ஏற்பாடுகளையும் பிராட்பரி செய்திருந்தார். இருப்பினும், அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அவரது குழந்தைகளான நகீதா பிராட்பரி (21) மற்றும் ஓமர் பிராட்பரி (14) ஆகிய இருவர் மட்டுமே “குடியேற்றம்” மூலம் அனுமதிக்கப்பட்டனர். பிராட்பரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பிராட்பரி 24 மணி நேரத்திற்கும் மேலாக இந்திய போலீசின் கஸ்டடியில் வைக்கப்பட்டார், ஆஸ்திரேலிய தூதரகத்திற்குத் தொடர்பு கொள்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டார். அவர் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் போலீசார் அவரிடமிருந்து பிடுங்கினர், அவர் கழிப்பறைக்குச் செல்ல அனுமதி கேட்டும் போலீசார் இரக்கமின்றி அதை மறுத்துள்ளனர், இறுதியில் அவரது குழந்தைகள் இந்தியாவில் இருக்கும்போதே அவர் மட்டும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிராட்பரியின் முதல் இந்தியா வருகை இதுவல்ல. 2012 ஆம் ஆண்டில், மும்பை சர்வதேச திரைப்பட விழாவிற்கான நடுவர் குழுவின் உறுப்பினராக அவர் இந்திய நாட்டிற்கு வந்திருந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு, பிராட்பரி, அவரது மனைவி ட்ரீனா லெந்தால் (சில மாதங்களுக்கு முன்பு காலமானார்) மற்றும் ஓமர் (அப்போது அவருக்கு மூன்று வயது) ஆகியோருடன், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான இடிந்தகரைக்கு சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து சில கி.மீ. தூரத்தில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தங்கி பிராட்பரி அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை ஆவணப்படுத்தினார்.


படிக்க: காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!


பிராட்பரி மற்றும் அவரது குடும்பத்தினர் கிராமத்தில் வாழ்ந்து, கிராமவாசிகளின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த விடயங்கள் உட்பட அனைத்தையும் ஆவணப்படுத்தினர்.

மேலும், போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய கிராம மக்கள் மற்றும் பிராட்பரி ஆகியோர் போலீசு வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.

பிராட்பரி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியதும், அவர் உள்ளூர் செய்தி நிறுவனத்தில் இப்போராட்டம் குறித்து ஒரு கட்டுரையையும் வெளியிட்டார். அந்த நேரத்தில், கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டம் தீவிரமடைந்தது.

எனவே இதனடிப்படையில் பிராட்பரி மீண்டும் இந்தியா வந்தது இந்நோக்கத்தில்தான் என்று கூறி போலீசார் அவரைத் தடுப்பு காவலில் வைத்தும், அதைத் தொடர்ந்து நாடு கடத்தவும் செய்தனர்.

பிராட்பரி தனியார் செய்தி நிறுவனமொன்றில் அளித்த பேட்டியில், விமான நிலையத்தில் அவர் உயர் கூரையுடன் கூடிய சிறிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அவ்வறை ஒரு அழுக்கு மெத்தை படுக்கையும் கீழ் தரையில் காகிதங்கள் மற்றும் குப்பைகள் கொண்ட அருவருப்பான அறையாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும் போலீசார் அவரிடம் தற்போது இந்தியாவிற்கு வந்ததற்கான நோக்கம், மற்றும் 2012 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்ததற்கான காரணம், நாட்டில் உள்ள தொடர்புகள் ஆகியவற்றை விளக்குமாறும் கேட்டுள்ளனர்.


படிக்க: இஸ்ரேலின் நலனுக்காக 10,000 இந்தியர்களின் உயிரைப் பணையம் வைத்துள்ள பாசிச மோடி அரசு


இந்தியாவில் உள்ள தனது நண்பர்களின் தொடர்பு எண்களைப் பகிருமாறும் அதிகாரிகள் வற்புறுத்தியபோது அவர் அதை மறுத்துவிட்டார்.

பிராட்பரி போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது அவர் புது டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதி கோரியும், அவரது அனுமதி கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். உடல்நலக்குறைவு கொண்ட பிராட்பரி, பலமுறை கோரிக்கை வைத்த பின்னரும் தனக்கான மருந்துகள் போலீசாரால் மறுக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், “நான் அணிந்திருந்த உடைகள் அதிகமாக உஷ்ணத்தை ஏற்படுத்துகின்றன. நான் சிறுநீர் அவசரமாகக் கழிக்க வேண்டும். எனவே நான் கழிப்பறைக்குச் செல்ல அனுமதி கேட்டபோது, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பிறகு நான் வைத்திருந்த காகித கோப்பையில் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”, என்று அவர் கூறினார்.

பிராட்பரியின் மனைவி, சமூக ஆர்வலர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ட்ரீனா, புற்றுநோயால் ஐந்து மாதங்களுக்கு முன்பு காலமானார். இந்த பயணத்தின் போது, பிராட்பரி தனது குழந்தைகளுடன் வாரணாசிக்குச் சென்று இந்துக்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும், அடுத்த ஜென்மத்தில் தங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து விடைபெறுவதையும் தனது மகன் ஓமருக்குக் காட்ட விரும்பியதாகக் கூறினார்.

தமிழ்நாடும் மத்திய அரசும் ஒரு பெரிய நிலநடுக்கப் பிழைக் கோட்டில் ஆறு அணு உலைகளைக் கட்ட முடிவு செய்தபோது, அது தங்கள் சொந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கே – இலங்கை மற்றும் பிற சுற்றுப்புற நாடுகளுக்கும் – பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் பிராட்பரி.

அந்த அணு உலைகளில் ஒன்று ஃபுகுஷிமா அல்லது செர்னோபில் அல்லது அமெரிக்காவில் உள்ள த்ரீ மைல் தீவு போன்ற உருக்கலைக் கொண்டிருந்தால், அணுமின் கதிர்வீச்சு கசிவிலிருந்து புற்றுநோயின் விளைவுகள் மற்றும் தூண்டுதல் ஆகிய பேரழிவை மக்கள் நேரெதிராக சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.

இதனால் பிராட்பரி இல்லாமலேயே இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வேண்டிய நிலை நகீதா மற்றும் ஓமர் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது. பாசிச மோடி அரசு திட்டமிட்டே பிராட்பரிக்கு இந்த நெருக்கடியைக் கொடுத்துள்ளது.


தமிழ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க