25.11.2024

பத்திரிகைச் செய்தி

நவ: 26. நாடு தழுவிய தொழிலாளர் – விவசாயிகள்
கூட்டுப்போராட்டம் வெல்லட்டும்!

ன்றிய மோடி 3.0 அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும் ஜனநாயக சக்திகள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்து எதிர்வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய அளவில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள், இன்னவகைப் போராட்டங்களை நடத்த விவசாயிகளது ஐக்கிய அமைப்பும் (SKM), மத்திய தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன.

2020 ஆம் ஆண்டில் இதே நவம்பர் 26- ல் தான் விவசாயிகள் நடத்திய தலைநகர் (டெல்லி) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நவ.26 என்கிற தினத்தைத் தான் விவசாய பெருமக்கள் தங்கள் போராட்டத்தின் துவக்க நாளாக அறிவித்தனர்.

2020 -இல் துவங்கப்பட்ட முற்றுகைப் போராட்டத்தின் நான்காவது ஆண்டு நிறைவு தினத்தில் SKM அமைப்புடன் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து உழைக்கும் மக்களது வாழ்வாதாரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க 22 கோரிக்கைகளுடன் நாடுதழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் அமைப்புசாரா இயக்கங்கள், துறைவாரியான தொழில்வாரியான பகுதி – பிராந்தியவாரியான தொழிற்சங்கங்களும், சுயேச்சையான தொழிற்சங்க அமைப்புகளும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளன.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்தல், காண்டிராக்ட் வேலைமுறையை ஒழித்தல், 4 புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை (Labor Codes) கைவிடுதல் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறுகின்ற இந்த ஒன்றுபட்ட போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தன்னை இணைத்துக் கொள்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவும், ஆலைவாயில்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அறைகூவல் விடுக்கிறது.


மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க