விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் வெள்ள பாதிப்பினால் முற்றிலும் சிதைந்துள்ளது.மின்சாரம் இன்றி, நல்ல குடிநீர் இன்றி அத்தியாவசிய பொருட்களான உடை, உணவுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் போன்றவை நீரில் மூழ்கி வீணாகிப் போய் உள்ளது. இந்தப் பகுதிக்கு இதுவரை யாரும் உணவு பொருட்கள் பிற உதவிகள் எதுவும் செய்யவில்லை.
அரசியல்வாதிகள் அதிகாரிகள் யாரும் இந்த பகுதிக்குப் போகவில்லை. எந்த உதவியும் கிடைக்காமல் மக்கள் துன்பப்படுகிறார்கள். தங்களிடம் இருந்த கொஞ்சநஞ்ச உணவுப் பொருட்களும் வீணாகிவிட்டது. ஆனாலும் அந்த வீணாகிப்போன உணவுப் பொருட்களை எடுத்துக் காயவைத்து அதைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று அந்த மக்கள் முயற்சி செய்தாலும் சமைப்பதற்கான எரிபொருள் எதுவும் அவர்களிடத்தில் இல்லை.
கேஸ் அடுப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கி வீணாகிப் போய் உள்ளது. சிலரிடம் கேஸ் அடுப்புகளே இல்லாத நிலை உள்ளது. விறகு ஏதும் கிடையாது.
இப்படிப்பட்ட அவல நிலையில் சமத்துவபுரம் மக்கள் இருக்கிறார்கள். நேற்று (03/12/24) மாலை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் இரண்டு பேர் அந்த இடத்தை பார்ப்பதற்கு எதேச்சையாகச் சென்ற போது எங்களைத் தூரத்தில் பார்த்த அந்த மக்கள் நாங்கள் ஏதோ உணவுப் பொருள் கொண்டு வந்திருக்கிறோம் என்று எங்களை நோக்கி வந்தார்கள். நாங்கள் எந்த உணவுப் பொருளும் கொண்டு செல்லவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இந்த அவல நிலையில் இருக்கின்ற மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்தாக வேண்டும். எனவே இன்று முதல் அந்த மக்களுக்கான உணவுப் பொருட்களைத் தயார் செய்து கொடுக்க உள்ளோம். இதற்கு நிதியாகவோ பொருளாகவோ உதவ வாய்ப்புள்ள தோழர்கள், நண்பர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும். வாய்ப்புள்ளவர்கள் எங்களோடு நேரடியாக அந்த கிராமத்திற்கு வந்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
சாந்தகுமார்,
மக்கள் அதிகரம்
96296 06386
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram