.ஐ.டி (இந்திய தொழில்நுட்பக் கழகம் – Indian Institute of Technology), ஐ.எம்.எம் (இந்திய மேலாண்மைக் கழகம் – Indian Institute of Management) உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் பதவிகளில் இருக்கின்ற பெரும்பகுதியானோர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிற தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் தெரியவந்துள்ளது.

அகில இந்திய ஓ.பி.சி மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் கவுட் கிரண் குமார், செப்டம்பர் மாதத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு முறை குறித்துக் கேட்டுள்ளார். அதன்படி மத்திய உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து தனித்தனியாகப் பெற்ற தகவலின்படி, இரண்டு ஐ.ஐ.டி-க்கள் மற்றும் மூன்று ஐ.எம்.எம்-களில் உள்ள ஆசிரியர் பதவிகளில் உள்ளவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்தகவலின்படி, 13 ஐ.எம்.எம்-களில் உள்ள ஆசிரியர் பதவிகளில் 82.2 சதவிகித இடங்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும், எஸ்.சி (Scheduled Castes) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 5 சதவிகித இடங்களும், எஸ். டி (Scheduled Tribes) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 1 சதவிகித இடங்களும் ஓ.பி.சி (Other Backward Classes) பிரிவினருக்கு 9.6 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் ‘பொருளாதார ரீதியாக நலிவடைந்த’ (Economically Weaker Sections) மற்றும் ஊனமுற்றோருக்கான தனிப்பட்ட இடங்களை உள்ளடக்கியது.

மேலும் 21 ஐ.ஐ.டி-களில் உள்ள ஆசிரியர் பதவிகளில் 80 சதவிகிதம் பேர் பொதுப் பிரிவினராகவும், 6 சதவிகிதம் பேர் எஸ்.சி பிரிவினராகவும், 1.2 சதவிகிதம் பேர் எஸ்.டி பிரிவினராகவும், 11.2 சதவிகிதம் ஓ.பி.சி பிரிவினராகவும் உள்ளனர்.

இந்தூரில் உள்ள ஐ.எம்.எம்-ல் உள்ள 109 ஆசிரியர் பணி இடங்களில் 106 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களாக (97.2 சதவிகிதம்) உள்ள நிலையில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.

இதனைப் போன்று உதய்பூரில் மற்றும் லக்கேனாவில் உள்ள ஐ.எம்.எம் நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்களில் 90 சதவிகிதம் பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், பெங்களூரில் உள்ள ஐ.எம்.எம்-இல் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 85 சதவிகிதம் பேர் ஆசிரியர்களாக உள்ளனர்.

மும்பை மற்றும் காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி-களில் உள்ள ஆசிரியர் பதவிகளில் 90 சதவிகிதத்தினர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், மண்டி, காந்திநகர், குவஹாத்தி மற்றும் டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி-களில் 80 – 90 சதவிகித ஆசிரியர் பதவிகளில் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.


படிக்க: ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!


மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மாறாக பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனம், ஜம்முவில் உள்ள ஐ.எம்.எம் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இட ஒதுக்கீடு முறையை ஓரளவு பின்பற்றியுள்ளன. இருப்பினும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், RTI தகவலின்படி 7 ஐ.ஐ.எம்-களில் காலியாக உள்ள 256 பணியிடங்களில் நியமிக்க வேண்டியவர்களில் எஸ். சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 54 பேர், எஸ். டி பிரிவைச் சேர்ந்தவர்கள் 30 பேர் மற்றும் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 88 பேர். ஆனால், இந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படாமல் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல், 11 ஐ.ஐ.டி-களில் காலியாக உள்ள 1557 பணியிடங்களில் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 234 இடங்களும், எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 129 இடங்களும், ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 415 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் எஸ்.சி பிரிவினருக்கு 15 சதவிகித இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 7.5 சதவிகித இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள இந்த இட ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. மாறாக பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களே, அதாவது பார்ப்பனர்கள் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினரே ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்-களில் பணிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே நிலைமை இவ்வாறிருக்க பாசிச மோடி அரசு 2019 ஆம் ஆண்டு உயர்கல்வி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளையும் பார்ப்பனக் கும்பலிடம் ஒப்படைக்கும் வகையில் உயர்சாதி ஏழைகளுக்கான (Economically Weaker section – EWS) 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்கது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



2 மறுமொழிகள்

  1. ஏன் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகிறது என்பதற்கு விளக்கம் வேண்டும்! அதுவே உங்களுக்கான பதிலகவும் அமையும்! ஏண்டா பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளே, மூவாயிரம் ஆண்டுகளாக படிக்கக் கூடாது என சட்டமாக்கி, மீறினால் நாக்கை அறுத்து, ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றி தண்டனையும் கொடுத்த பயங்கரவாத கும்பலே நீங்கள் பேசுகிறீர்கள் தகுதி, திறமை பற்றி! மனு ( அ )நீதியை சட்டமாக்கத் துடிக்கும் நீங்கள் கதறும் அளவு இந்த 70 ஆண்டுகளில் தகுதி திறமையை அதிகரித்துக் கொண்டதால் இட ஒதுக்கீடு கூடாது என கூச்சல் போடுகிறீர்களே மூவாயிரம் ஆண்டு அநீதிக்கு என்ன செய்யலாம்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க