Friday, August 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4250 பதிவுகள் 3 மறுமொழிகள்

காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் தொடரும் பட்சத்தில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைவிட மேலும் அதிகரிக்கும். எனவே, 160 நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துவரும் இன அழிப்புப் போருக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

கோவை அரசு மருத்துவமனையில் கட்டணப்பிரிவு மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தி.மு.க.!

திராவிட மாடல் அரசு, சமூக நீதி அரசு, பாசிச பா.ஜ.க. எதிர்ப்பு அரசு என்று சொல்லிக்கொண்டே மக்களுக்கு கல்வியையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கும் கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!

பட்டினியை முடிவுக்கு கொண்டுவரவும், பஞ்சத்தின் அனைத்து அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான உதவிப் பொருட்கள் தடையின்றி நுழைவதற்கும் விநியோகிப்பதற்கும் இஸ்ரேலின் தடையை நீக்கவும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!

முதலாளித்துவ கும்பல்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதன்மூலம் ஒருகாலும் பாசிச சர்வாதிகாரத்தை வீழ்த்த முடியாது. அதற்கு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை முன்னிபந்தனையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் ஒரே வழி. அதுவே தோழர் பகத்சிங்கின் வழி!

ஆதிஷ் அகர்வாலா – கட்டமைப்பிற்குள் பதுங்கியிருந்த கார்ப்பரேட் அடியாள்

கார்ப்பரேட் நிறுவனங்களை "பாதிக்கப்பட்ட ஜீவன்கள்" போல் காட்ட திரு.அகர்வாலா தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தி வாதிட்டுள்ளார்.

பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்

நூற்றுக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகளுக்கு பல லட்சக்கணக்கான பேர் போட்டியிடும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதைத் தீர்க்க வக்கற்ற பாசிச கும்பல் சுயதொழில் தொடங்குங்கள் என்று இளைஞர்களிடம் பசப்பிக் கொண்டிருக்கிறது.

ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!

சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல் பா.ஜ.க குண்டர்படை அட்டூழியம்

மசூதி கட்டுவதற்கான இடம் உரிய பத்திரங்களோடு வைத்திருக்கும் போதே, "விதி மீறல்; பள்ளிவாசல் இந்த இடத்தில் அமையக் கூடாது; அருகில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்"  என புதுப்புது நியாயங்களை பேசிக்கொண்டே கலவரம் உண்டாக்க முயற்சித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.

WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!

மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தைச் சுரண்டி, பெரும் லாபத்தைப் பெறுவதற்கு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைத் தளமாக WTO இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா

பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி

சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி https://www.youtube.com/watch?v=qZz_P6XAt1Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!

மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துக்கள் போன்ற பயிர்களை விளைவிப்பவர்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தி நிலைமை இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.