புதிய ஜனநாயகம்
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்!
கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் !
வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.
மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை !
மக்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, காஷ்மீரை முன்வைத்து தேசிய வெறியையும் ராமர் கோவிலை முன்வைத்து இந்து மதவெறியையும் கிளறிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களைத் திசைதிருப்ப முயலுகிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.
மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !
இந்த ஆண்டு தீபாவளி போனசாக தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும், பங்குசந்தை சூதாடிகளுக்கும் வரிக்குறைப்பு, வரித் தள்ளுப்படி போன்ற சலுகைகளை வழங்கியிருக்கிறது மோடி அரசு
தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !
மாறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?
காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லத் தொடர்ந்து முயன்றுவரும் பாகிஸ்தானின் நோக்கத்திற்குத்தான் மோடி - அமித் ஷாவின் நடவடிக்கை பயன்பட்டிருக்கிறது.
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
ஜம்மு காஷ்மீர் மக்கள் தமக்கு நீதி வேண்டும் எனக் கோரிப் போராடுகிறார்கள். மோடி அரசோ அவர்கள் மீது மென்மேலும் அடக்குமுறைகளை ஏவி அநீதி இழைத்து வருகிறது.
காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !
இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து தப்பித்த காரணத்தினால்தான், காஷ்மீர் உழவர்களுக்கு நிலம் கிடைத்தது. அந்த நிலத்தைப் பிடுங்குவதற்குத்தான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம்.
காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !
இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என நம்பி அதனுடன் இணைந்த காஷ்மீரிகளின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறது, பா.ஜ.க.
காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
காஷ்மீர் மக்களின் உரிமைகள் ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டன. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மற்ற மாநிலங்களின் உரிமைகளோ ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.
அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு !
ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு 370-ஆவது சட்டப்பிரிவு தடையாக இருக்கவில்லை, படிக்கல்லாக இருந்திருக்கிறது.
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.
மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்
பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறைகளும் தவிர்க்கவியலாமல் மக்களைப் போராட்டக் களத்துக்கு இழுக்கும். அவர்களை வரவிடாமல் தடுப்பதற்குத்தான் எதிரிகள் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பரப்புகிறார்கள்.
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.