அரசியல் அனாதையல்ல தமிழகம் ! காவிரி போராட்ட செய்திகள் !
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னையில் மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது.
காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு ! போராட்டச் செய்தி – படங்கள்
தமிழகத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கி, காவிரிக்காக மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் - மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மற்றும் போராட்டப் படங்கள்!
டெல்லியை முடக்குவோம்! காவிரி போராட்டச் செய்திகள் !
தொடர்ந்து தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், காவிரியை முடக்கிய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்பினர் நடத்தும் போராட்டங்கள்.
காவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் !
காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.
காவிரிக்காக திருச்சியை அதிர வைத்த மக்கள் அதிகாரம் முற்றுகைப் போராட்டம் ! படங்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடன் அமைக்க கோரி திருச்சியில், மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த பிரம்மாண்டமான முற்றுகைப் போராட்டம் - படங்கள்!
மோடி அரசிடமிருந்து காவிரியை மீட்போம் ! நாளை திருச்சி முற்றுகை !
“கடைமடை வரை காவிரி நீர் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை... உறவும் இல்லை...” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நாளை 24.03.2018 அன்று திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக.
காவிரியில் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் மார்ச் 24 முற்றுகைப் போராட்டம் !
காவிரியில் தமிழகத்தின் முதுகில் குத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடன் அமைக்கக்கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வருகின்ற மார்ச் 24 -ம் தேதி திருச்சியில் தலைமை அஞ்சலக முன் மாபெரும் முற்றுகைப்போராட்டம் நடைபெறவுள்ளது.
காவிரி நீர் வரும்வரை டெல்லியுடனான உறவுகளைத் துண்டிப்போம் !
காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவைக் குறைத்தது உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் போக்கு காட்டுகிறது மத்திய அரசாங்கம். இவ்வாறு தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து கிருஷ்ணகிரி பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் 13.03.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11.03.2018 அன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து அதையொட்டி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா?
ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !
காவிரியைத் தடுப்பானாம்! பெரியார் சிலையை உடைப்பானாம்! நீட் தேர்வு என்ற பெயரில் கல்வி உரிமையை பறிப்பானாம்! விவசாயத்தை அழித் தொழிக்க கெயில் குழாயை புதைப்பானாம்! கொதித்தெழு தமிழகமே தமிழக மக்களின் வாழ்வை மீட்க! போராடு தமிழகமே!
கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !
திருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை ! எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் ! மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
விழுப்புரத்தில் பெரியார் கையால் எச்ச ராஜாவுக்கு செருப்படி ! படங்கள்
எச்.ராஜாவை கண்டித்தும் விருதை BSNL அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தோழர் மணியரசன் தலைமையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
தஞ்சை சிண்டிகேட் வங்கி மோசடி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தஞ்சையில் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று கோடிக்கணக்கில் ஏமாற்றிய சிண்டிகேட் வங்கி முகவரைக் கைது செய்யக் கோரியும், மோசடி செய்யப்பட்ட பணத்தை சிண்டிகேட் வங்கியே திருப்பித் தரவேண்டியும் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் ! மக்களிடம் கையெழுத்தியக்கம் !
காவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்கள், உயிழப்புக்கள் மற்றும் மக்களிடம் வழிப்பறி செய்வதையும் நிறுத்தக்கோரி திருச்சி மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரம் நடத்தும் கையெழுத்து இயக்கம்.