முதல்வராக ஜெயா: கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!
"சமுதாயத்தின் வேறு எந்தப் பிரிவினரும் தவறு செய்தால் மன்னிப்பே கிடையாது; கல்வி கற்றால், சாதிமாறி மணம் புரிந்தால் கூட சிரச்சேதம் உட்பட கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். பார்ப்பான் கடும் குற்றங்கள் புரிந்தாலும் மொட்டை போடுவது போன்ற பரிகாரங்கள் உண்டு"
புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
நீதித்துறையை அம்மணமாக்கிய ஜெயா, ஓராண்டு மோடி ஒப்பனை கலைந்தது, செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் பாலியல் வக்கிரக் கூடங்கள் - இன்னும் பிற கட்டுரைகளுடன்...
குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு
இன்று அந்தக் குற்றவாளி வெற்றியுலா வருகிறார். தமிழகம் மவுனம் காக்கிறது. அவமானகரமான இந்த மவுனத்தை உடைக்கும் கருவியாக இவ்வெளியீடு நிச்சயம் பயன்படும்.
யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?
ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்
நீதித்துறையின் புனிதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரம், ஊடகங்களின் நடுநிலைமை, அதிகார வர்க்கத்தின் நேர்மை எல்லாம் போலியானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜெயாவுக்கு நன்றி.
புர்ரட்சித் தலைவி
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.
அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இந்தக் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.
செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம் !
செம்மரம் கடத்தும் உரிமை அரசுக்கு மட்டுமே உரியது எனக் காட்டுவதற்குத்தான் இருபது தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.
மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!
கர்நாடகா அரசு காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சட்டங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும்போது தமிழக விவசாயிகள் மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு ஏன் போராட வேண்டும்?
குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !
காலாவதியான தடா மற்றும் பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இயற்றப்பட்டிருக்கும் குஜராத் சட்டம்.
கந்துவட்டிக் கும்பலை வளர்க்கும் முத்ரா வங்கித் திட்டம்
குறுந்தொழிலுக்கு நிதியுதவி அளிப்பது என்ற போர்வையில் கந்துவட்டித் தொழிலை அமைப்புரீதியாகத் திரட்டி, பராமரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது மோடி அரசு.
மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்
மோசடியான முதல் தகவல் அறிக்கை, 28 ஆண்டு கால வழக்கு இழுத்தடிப்பு போன்ற சதிகளின் மூலம் முசுலீம்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.
பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?
பகத்சிங் குறித்த விழிப்புணர்வு பேருரைகள் நிகழ்த்துவது, முன்னணி நாளேடுகளில் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவது என்று முனைப்பாகச் செயல்பட்டு வரும் பேராசிரியர் சமன்லால் நேர்முகம்.
உழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை
ஒப்பந்தச் சேவைகளுக்கு அரசு அமர்த்தும் செலவுத் தொகையை வைத்து அவற்றுக்கான எல்லாச் சாதனங்களையும் சொந்தமாக வாங்கிக் கொள்ளவும் முடியும். பல இலட்சம் பேருக்கு அரசு வேலையளிக்கவும் முடியும்
மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !
"பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்" என்ற பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.