அகதிகளா தலித் மக்கள் ?- புதிய கலாச்சாரம் மின்னூல்
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’அகதிகளா தலித் மக்கள்?’ புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !
அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !
“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் பெட்ரோலாகும்” என்றார்.
நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !
அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள். அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.
குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !
''மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது" என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.
மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !
கருப்புப் பண பேர்வழிகளை வருமான வரித் துறை புகைபோட்டு பிடிக்கப் போவதாக, பிலிம் காட்டிய மோடி கும்பல், பணமதிப்பழிப்பிற்குப் பிறகு பிடிபட்ட தமிழகப் பிரமுகர்களின் தலையைத் துண்டித்து விட்டதா என்ன ?
சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !
நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.
என்னது மறுபடியும் முதல்ல இருந்தா ?
2015 - 16 நிதியாண்டைக் காட்டிலும், 2016 - 17 நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.4 இலட்சமாக அதிகரித்திருந்தாலும், அவர்களுள் யாரும் பெரிய பண முதலைகள் கிடையாது.
சாதி அரசியலைத் தூண்டும் பாஜகவின் நரித்தனம் !
இந்துத்துவ அரசியல் மூலம் பார்ப்பன மேலாண்மையைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, சாதிச் சண்டைகளை கிருஷ்ணசாமி, ராமதாஸ் போன்ற பிழைப்புவாதிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்திருக்கிறது.
பணமதிப்பழிப்பு : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !
நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை வங்கிக்குள் வரவிடாமல் தடுத்துவிடுவோம் என அப்பொழுது பேசியவர்கள், இப்பொழுது அத்துணை பணமும் வங்கிக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் எங்களது வெற்றி எனக் கூசாமல் கூறுகிறார்கள்.
சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !! – மோடியின் பணமதிப்பழிப்பு !
மலையைக் கெல்லி எலியைப் பிடித்த பழமொழியோடுகூட ஒப்பிடத் தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப் பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது.
சிறப்புக் கட்டுரை : ராம் ரகீம் சிங் – வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம் !
ஜெயலலிதா செத்துவிட்டார், சசிகலா சிக்கி விட்டார் என்பது தமிழகத்தின் கதை. ராம் ரகீம் சிக்கிக் கொண்டான், ஹனிபிரீத் தப்பி விட்டாள் என்பது அரியானாவின் கதை.
அரசியல் 420-யும், ஆன்மீக 420-யும் – மோடி, ராம் ரகீம்சிங்
சோப்புக்குமிழிகளைப் போல பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே அன்றாடம் ஊதிவிடும் ஒரு மனிதனை, பிரதமர் என்று ஏற்கக்கூடிய நாட்டில், ராம்ரகீம் கடவுளாவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது.
செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !
பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது.
ஆன்மீக 420 -யும் அரசியல் 420 -யும் ! – செப்டம்பர் 2017 மின்னூல்
இந்த இதழில் விவசாயம், ஜெயலலிதா, மோடி, ராம் ரஹிம் சிங், கார்ப்பரேட் சாமியார்கள், பணமதிப்பழிப்பு நடவடிக்கை தோல்விகள், கார்ப்பரேட் நலன், சாதி அரசியல், நீட் தேர்வு, மாணவி அனிதா படுகொலை மற்றும் இதர...
ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2017 மின் நூல்
நிழலை நிஜமாகக் கருதி கண்ணி விடுவதற்கும், நிஜத்தை நிழலெனக் கருதி சிரிப்பதற்கும் பழக்கப்படுத்தப்படுகிறோம். மெல்ல மனிதத் தன்மையை மறந்து வருகிறோம்.





















