மசூதியினுள் ஜெய் ஸ்ரீ ராம்: பாசிஸ்டுகளுக்கு துணைநிற்கும் நீதித்துறை
கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெய்ஸ்ரீராம் என்கிற இந்து மத வெறி முழக்கத்திற்கு சொற்பிரித்து விளக்கமளித்து ”ஸ்ரீராமன் வாழ்க” என்கிற முழக்கம் எப்படி பிற மதத்தவர்களை புண்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.
கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது குற்றமில்லையாம்: நீதிமன்றங்களின் முகத்திரை கிழிகிறது
உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர்.
இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அம்பேத்கரை இழிவுபடுத்திய பாசிசக் கும்பலை போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!
அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.
மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்
மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.
திருவண்ணாமலை: பள்ளிக்குச் செல்வது படிக்கவா, பல்லக்குச் சுமக்கவா?
பஜனை பாட வைப்பதும், பல்லக்குத் தூக்க வைப்பதுமா ‘திராவிட மாடல்’? இதைத்தானே குஜராத்திலும் உ.பி.யிலும், சங்கிகள் வலுவாக இருக்கும் பிற மாநிலங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே வழியில் பயணிப்பதன் பெயரா பாசிச எதிர்ப்பு?
மோடி அரசின் பாசிசத் தாக்குதல்களை எதிர்த்து உறுதியுடன் போராடும் விவசாயிகள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கொடிய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ள போதிலும் உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள போதிலும் சுகதேவ் ராம் உள்ளிட்ட விவசாயிகளின் போராட்ட உணர்வுதான் மோடி அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பஞ்சாப்: விவசாய சங்கத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!
இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் அஞ்சாத விவசாயிகள் தொடர்ந்து பாசிசக் கும்பலுக்கு எதிராக தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முன்பைவிட வலிமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடிப்பு: உச்சநீதிமன்ற தடை அரணாகுமா?
வழிபாட்டு தலங்களுக்கு அரண் என சொல்லப்பட்ட 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பே சந்திரசூட் போன்ற கரசேவகர்களால் இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதெனில், நேற்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நினைத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்! | இணைய போஸ்டர்கள்
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்!
***
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றதா?
இவ்வாறான பாசிசத் திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி எதிர்த்த எதிர்க்கட்சிகள், அவை நடைமுறைக்கு வந்த பின்னர், அதற்குக் கட்டுப்படத் தொடங்கிவிடுகின்றன. இத்திட்டங்களுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தால், அதனை எதிர்ப்பதைப் போல நாடகமாடுகின்றன.
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? | மீள்பதிவு
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன 'மேல்' சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்.
குஜராத்தில் அரசு குடியிருப்பில் முஸ்லிம்களுக்கு இடம் இல்லை – சவால் விடும் பாசிசக் கும்பல்!
461 வீடுகள் இந்துக்களுக்கும் ஒரு வீடு மட்டும் கடைநிலை அரசு ஊழியரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்று வரையிலும் அந்த முஸ்லிம் பெண் தனது வீட்டில் குடியேற முடியவில்லை.
சங்கப் பரிவார கும்பலின் கைகளில் சைனிக் பள்ளிகள்
மே 05, 2022 மற்றும் டிசம்பர் 27, 2023 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 40 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவ தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதில் குறைந்தது 25 பள்ளிகளை அமைக்கும் உரிமம் சங்கப் பரிவார கும்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.