டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி
டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை
சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி
https://youtu.be/3PLRgJ3Z0Ak
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மனோன்மணியம் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு! வந்தே மாதரம் பாடல் திணிப்பு!
தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் மூலம் தமது பாசிசத் திட்டங்களையும், அதன் வழியாக மாநில உரிமைகளை நசுக்கி, அதன் குரல் வளையை நெறித்து தமக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது, பாசிச கும்பல். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
சிறுபான்மையினர் வாக்காளர்களின் பெயர் நீக்கம் குறித்து ஐ.நா. கவலை!
மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் இஸ்லாமியர்கள் சுமார் 25 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களில் 95 சதவிகிதம் இஸ்லாமியர்களினுடையது என்பதில் இருந்தே இந்த திட்டமிட்ட சதியை புரிந்துகொள்ள முடியும்.
தீவிரமடையும் நாடு கடத்தல்: மேற்குவங்க இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடு கடத்துவது என்ற பெயரில் மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைப் பறித்து, எல்லை மாவட்டங்களிலும் பெருநகரங்களிலும் இராணுவத்தைக் குவிக்க வேண்டும் என்ற சதித்திட்டமும் பாசிச மோடி அரசிற்கு உள்ளது.
6 மாதங்களில் 101 மலக்குழி மரணங்கள்: மோடி அரசே குற்றவாளி!
இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.
மகாராஷ்டிரா: இஸ்லாமிய சிறுவர்களை கட்டிவைத்து அடித்த சாதிவெறியர்கள்!
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
மேற்குவங்கம்: மார்க்சிய ஆய்வாளர் ராகுல் சாங்கிருத்தியாயன் சிலையை அகற்றிய காவி கும்பல்
பாசிச கும்பல் திட்டமிட்ட சதியின் பேரில், கடந்த ஜூலை 13 அன்று இரவு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயலிழக்கச் செய்து, தெருவிளக்குகளை அணைத்துவிட்டு தோழர் சாங்கிருத்தியாயனின் சிலையை உடைத்து அகற்றியுள்ளது.
அரசு விழாக்களில் இசுலாமிய விரோத வந்தே மாதரம் பாடல் கட்டாயம்! மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையை முறியடிப்போம்!
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மோடி அரசு இப்பொழுது வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஆக்குவதுடன் அப்பாடலைப் பாட மறுப்போருக்கு எதிராக வந்தே மாதரம் ‘அவமதிப்பு’ என சட்டத் திருத்தம் மேற்கொண்டு அதன் மூலம் சிறுபான்மை மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கவும் ஒழிக்கவும் சதி செய்து வருகிறது.
இஸ்லாமியர்களின் இட-ஒதுக்கீட்டைப் பறிக்கும் தீர்ப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடத்தை திரைகிழிப்போம்!
16 ஜூலை 2026 தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம்
மேற்குவங்கம்: நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நல நிதிக் குறைப்பு!
மேற்குவங்கத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைத்த பிறகு சங்கிக் கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்சியமைத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இஸ்லாமியர்கள் நடத்தும் வணிகக் கடைகள் மீது இந்துத்துவக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். தான் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிதிக் குறைப்பும் அரங்கேறியுள்ளது.
அயோத்தி இராமன் கோவில் பணத்தைக் களவாண்ட காவிக் கும்பல்
பக்தி என்ற பெயரில் இராமன் கோவிலை மையமாக வைத்து சுற்றுலாப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல். இன்று இராமன் கோவிலின் பணத்திலும் கொள்ளை நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இரத்து: மதுரை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கரசேவை!
இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஆர்.எஸ்.எஸ். மட்டும் விதிவிலக்கு – இதுதான் இந்துத்துவ நீதி!
அமெரிக்காவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு வரும் நிதி, ஆண்டுக்குத் தோராயமாக ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை (சுமார் 15 முதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும் எனப் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுக் கட்டமைப்பை இந்துமுனைவாக்கத்திற்கான ஓர் கருவியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல்
அசாமில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தற்காலிக தங்குமிட முகாம்களில் அம்மக்களை அடைப்பது, குஜராத், ராஜஸ்தானில் ‘கலவர’ப் பகுதிகள் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக பாசிச நடவடிக்கைகள் மூலம் இந்து மக்கள் மத்தியில் இருந்து சிறுபான்மை மக்களைப் பிரித்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
























