Monday, August 25, 2025

அரசு மருத்துவர்களை வஞ்சித்துவரும் தி.மு.க அரசு!

"கரோனா தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்யாமல் உள்ளனர். இதனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது."

டெல்லி: தமிழர்களின் குடியிருப்பை தரைமட்டமாக்கிய பா.ஜ.க அரசு

மதராஸி முகாமில் உள்ள தமிழர்கள் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று வேலைகளுக்குச் சென்று தான் தங்களது வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகரத்திலிருந்து 50 கி.மீட்டர் தொலைவில் குடியமர்த்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது.

அசோகா பல்கலை பேராசிரியர் கைது – ஆபரேஷன் சிந்தூர் குறித்துக் கேள்வி கேட்டால் தேசத் துரோகமாம்!

மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதை எதிர்த்து 1,200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டு அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு

விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது

கீழடியை கருவறுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தொல்லியல் துறை!

கண்முன்னே கிடைத்த கீழடி தமிழ் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரீகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.

அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!

ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.

ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!

சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!

பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!

2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.

பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்

பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார் https://youtu.be/X9rLMqfFm9Y காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பூர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் தொடரும் மலக்குழி மரணங்கள்!

தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் விசவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட சிலரும் விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம்: ‘ஜெய் ஶ்ரீ ராம்’ற்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ அல்ல

பா.ஜ.க-வை எதிர்ப்பதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறிக்கொள்வதென்பது, தேர்தலில் மட்டுமே எதிர்ப்பதாக உள்ளது. மாறாக பாசிச பா.ஜ.க நடைமுறைப்படுத்திவரும் இந்துத்துவக் கொள்கைகளையோ அதன் கார்ப்பரேட் சேவைகளையோ எதிர்ப்பதாகவும் அவற்றிற்கான கருத்தியல் ரீதியான மாற்றை முன்வைப்பதாகவும் இல்லை.

தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார்

தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார் https://youtu.be/uL51iuP4DbU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!

தற்போது வரை வன்முறை தாக்குதலில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மருந்து, நிவாரண பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

செவிலியர்கள் போராட்டத்திற்குத் துணைநிற்போம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நமது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக-வை நிர்ப்பந்திக்கும் வகையிலான களப்போராட்டங்களைக் கட்டியமைக்கும் போது மட்டுமே அவை நிறைவேற்றப்படும் என்பதே நிதர்சனம்.

அண்மை பதிவுகள்