நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்: மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை!
பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.
மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.
லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்
தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.
ஆகாஷ் கொட்டடிப் படுகொலையின் 100-வது நாள்: புரட்சிகர அமைப்புகளின் வலுவானதொரு கண்டனம்!
தலித் மக்களிடமும், முன்னேறிய உற்பத்தி சக்திகளிடமும் ஏற்பட்டிருக்கும் சமூக எழுச்சியின் ஓர் அங்கமாக ஆகாஷ் அமைந்துள்ளார். உள்ளூரில் காணும் அநீதிகளைத் தட்டிக் கேட்பது, ஆதிக்கச் சாதிவெறியர்களுடன் துணிந்து நேருக்கு நேர் மோதுவது என அவர் செயல்பட்டுள்ளார். சாதி கடந்து காதலித்த தலித் இளைஞர் கவின் ஒரு பக்கம் என்றால், சாதிவெறியர்களுக்கு எதிராக களத்தில் மோதிய ஆகாஷ் இன்னொரு பக்கம்.
கள்ளக்குறிச்சி கணையார்: ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகளை இடிக்கும் அரசு
இந்த இடத்தை நீர் நிலை பிடிப்பு என்று சொல்லி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இரத்து: மதுரை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கரசேவை!
இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 1
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
- உடலை வாங்க மறுத்த 100வது நாள்
- தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, உடலை வாங்க மறுத்த 100வது நாளில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பில்...
ஆகாஷ் படுகொலை: 100 நாட்களாக தொடரும் போராட்டம் | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!
ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர். இது ஆகாஷின் படுகொலைக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்தது.
ஆகாஷ் டெலிசன் உடலை வாங்க மறுத்த 100வது நாள்! தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம்
தேதி: 15.06.2026 | இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: 80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை:
80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
https://youtu.be/nrNZffC5bqc
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: டி.டபுள்யூ நியூஸ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை சரி என்று பாசிஸ்டுகளுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்!
குடியுரிமையைச் சோதிப்பது, சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டடைவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குறுக்குவழியில் இப்பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டதை தற்போது உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. ஆகவே கொள்ளை புற வழியாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் பாசிச மோடி அரசின் நோக்கத்தை அங்கீகரித்து நிறைவேற்றித் தந்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தோழர் முருகானந்தம் – மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்ப்பதா? | இ-போஸ்டர்
மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்த்து துன்புறுத்தும் விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ்!
மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வீட்டில்
நள்ளிரவு 12 மணிக்கு போலீசுக்கு என்ன வேலை?
விருத்தாச்சலத்தில் கொலை, கொள்ளை, எந்த சட்டவிரோத தவறுகளும் நடைபெறவில்லையா?
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியது
மணல் கொள்ளையை தடுத்து...
செயலிழந்து போன நிலைக்குழுக்கள்: நாடாளுமன்றம் பாசிசமயமாகி வருவதன் நீட்சி
மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர், மக்களை எந்தளவிற்கு வேண்டுமானாலும் ஏய்க்கலாம்; ஆனால் அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இந்திய ‘ஜனநாயகத்தின்’ இழிநிலை. இதற்கு இந்திய அரசியலமைப்பு பக்கபலமாக இருக்கிறது.
மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
























