கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு
இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.
மாலிப்டினம் சுரங்க திட்டம்: பழனி மலைக்கு குறிவைக்கும் பாசிச கும்பல்!
“முருகன் மீது உண்மையான அக்கறை இருந்தால் மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.”
விமானிகள் குறித்து அக்கறைப்படாத டி.ஜி.சி.ஏ
தங்களால் விமானிகளை அதிகப்படுத்த இயலும் எனினும் விமானிகளின் ஓய்வு நேரத்தை 36-இல் இருந்து 40 மணி நேரம் என்று மட்டுமே வழங்க முடியும் என்றும் 48 மணி நேரமாக வழங்க முடியாது என்றும் நீதிமன்ற தீர்ப்பை மறுத்துரைத்துள்ளன விமான நிறுவனங்கள்.
ஆபரேஷன் ககரை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
காடுகள் களவாடப்படுவதற்குத் தடையாக உள்ள மாவோயிஸ்டுகளையும் பழங்குடி மக்களையும் படுகொலை செய்யும் ஆபரேஷன் ககர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலைக்கு நீதி விசாரணை நடத்தக் கோரியும் திருவாரூரில் ஜூன் 17 அன்று மாலை 4:30 மணிக்கு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழக மாவட்டப் பொருளாளர் தோழர் முரளி தலைமை தாங்கினார்.
https://www.facebook.com/vinavungal/videos/702542615899382
ஆர்ப்பாட்டத்தில் பிரபாகரன், மருதம் மீட்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்; தங்க தமிழ்ச்செல்வன், விடுதலைச்...
அகமதாபாத் விமான விபத்து: கார்ப்பரேட் கிரிமினல்களின் லாபவெறியே காரணம்
அகமதாபாத் விமான விபத்தானது போயிங், டாடா போன்ற கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனங்களின் லாப வெறி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவை ஆகியவற்றின் விளைவே ஆகும்.
பழங்குடி இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து | கருத்தரங்கம்
14.06.25 (சனிக்கிழமை) | மாலை 3.00 மணி | சர்.பி.டி.தியாகராயர் கலையரங்கம், தி.நகர், சென்னை.
ஒட்டச்சுரண்டப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்
வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டட - கட்டுமான பணிகள், ரயில்வே தொழிற்சாலைகள் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளில் எந்தவித பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப்படுகின்றனர்.
“அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது” – மனம் உடைந்த பெங்களூரு மென்பொறியாளரின் குமுறல்!
சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம்.
“அதானி காப்பீட்டுக் கழக”மாகும் எல்.ஐ.சி!
மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கி வைத்துள்ள விதிமுறைகளைக்கூட பின்பற்றத் தயாராக இல்லாத கொள்ளைக்காரன்தான் அதானி. இந்த கொள்ளைக்காரனுக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைக்கும் எல்.ஐ.சி. பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு
விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
“உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.”
கல்லாங்காடு சிப்காட்டிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
சிப்காட் தொழிற்பேட்டை வருவதன் மூலம் கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயம், கால்நடைகள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கால சின்னங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், காட்டுயிர்கள், கோவில்கள் என கல்லாங்காடு பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்நிலை மோசமடையும் அவலநிலை உள்ளது.























