“காப் 30” மாநாடு எனும் கேலிக்கூத்தும் உலகம் எதிர்நோக்கியுள்ள அபாயமும்
உலகின் பல்வேறு நாடுகளில் பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய பாசிச கும்பல்கள் பெயரளவிற்கான, போலித்தனமான இயற்கைப் பாதுகாப்பு என்ற முகமூடியைக் கூட அணிந்துகொள்ளத் தயாராக இல்லை. குறிப்பிட்ட நிதிமூலதன கும்பல்களின் இலாபவெறிக்காக, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளையை நியாயப்படுத்தும் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
பீகார்: தொழிற்சாலைக் கழிவுகளால் தாய்ப் பாலில் யுரேனியம்
நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டெல்லி உச்சகட்ட காற்று மாசுபாடும், மக்களின் போராட்டங்களும் உணர்த்துவது என்ன?
பாசிச பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதானி - அம்பானி - அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் நலனுக்காகவும் சுற்றுச்சூழலை அழிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு எந்தவொரு கேள்வியுமின்றி அனுமதி அளித்து வருகிறது.
காஷ்மீர்: சி.ஆர்.பி.எஃப் தளம் அமைக்க அழிக்கப்படும் காப்புக்காடுகள்
உள்ளூர்வாசிகள், தங்களது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “பசுமை மண்டல” (green zone) பகுதியில் நிலப் பயன்பாட்டு முறையை மாற்றுவது என்பது மேற்கு இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய மலைகளை (eco-fragile hills) பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
COP-30 மாநாடு எனும் கேலிக்கூத்து!
காப்-30 மாநாடு நடக்கும் இடத்தில், அமேசான் பூர்வக்குடி மக்கள் தங்களது நிலம், வனம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் “நம் வனம் விற்பனைக்கு அல்ல” என்று பதாகைகளை ஏந்தி போராடினார்கள்.
கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி
கிரேட் நிகோபார் திட்டம்:
கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி
https://youtu.be/bMLa06Rt0lE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
விநாயகர் சிலை கரைப்புக்காக நாசப்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் கடற்கரை
பிளாஸ்டர் அஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளில் வேதிப்பொருட்கள் உள்ளன. சிலைகளுக்குப் பூசப்படும் இரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. ஆனால் உத்தரவுகளையெல்லாம் மீறி இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
கனிமவளக் கொள்ளையை எதிர்த்தால் படுகொலை செய்யும் மாஃபியாக்கள்!
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி கொள்ளையர்களால் பார்வார்ட் பிளாக் நகரச் செயலாளர் சசி என்ற சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு: தீவிரமடையும் சூழலியல் நெருக்கடி!
ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்.
அபாயமாகும் உயிரி மருத்துவக் கழிவுகள் – பொறுப்பேற்குமா அரசு?
உயிரி மருத்துவக் கழிவுகளை தரம் பிரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இவற்றை கையாள்வதால் எச்.ஐ.வி (HIV), கல்லீரல் தொற்று (Hepatitis) போன்ற பல தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
சத்தீஸ்கர்: 14 கிராமங்களை அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்
பல ஆண்டுகளாக அதானி பவர் நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மக்கள் தங்களது உணர்வுகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
என்.எல்.சி-யை ஒட்டிய கிராமங்களின் அவல நிலை!
கடலூரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இதன் நீர் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம்: வாழத் தகுதியற்ற இடமாக்கப்படும் வடசென்னை!
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், தற்போது ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு
விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது
கேரளா: கடலில் மூழ்கிய கப்பலால் சுற்றுச்சூழல் பேராபத்து!
கரை ஒதுங்கும் அமிலப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கப்பலிலிருந்த 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயில் உள்ளிட்ட எரிபொருள்களும் கடலில் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.





















