மதுரை: வேதாந்தாவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலையும் மக்களின் உயிரையும் காவு வாங்கிக்கொண்டிருந்த கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை, தங்களது இன்னுயிரை ஈந்து மூடிய தமிழ்நாடு மக்களின் போராட்டம், தற்போது அதே வேதாந்தாவின் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மதுரையிலிருந்து தொடங்கியிருக்கிறது.
மத்தியப்பிரதேச மக்களை துரத்தும் போபால் விஷவாயு படுகொலை
1984-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபால் மக்களைக் கொலையுண்டதற்குத் துணைபோன அரசு நிர்வாகம், இன்று பீதாம்பூர் மக்களை அழிவில் விளிம்பிற்குத் தள்ளுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது.
அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! | மீள்பதிவு
காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.
எண்ணூர் அனல்மின் நிலையம்: கருத்துக் கேட்பு என்னும் பெயரில் கண்துடைப்பு நாடகம்!
”இதுநாள் வரை காற்றுமாசுவை தடுக்காதவர்கள், இனிமேல் தடுப்பார்கள் என இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. 2019-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் இப்போது கருத்துக் கேட்பது தவறு. இத்திட்டத்தைச் செயல்படுத்தவே கூடாது”
வயநாடு நிலச்சரிவு: மக்கள் உயிரைக் குடித்த சுற்றுலா பொருளாதாரம்
கர்நாடகம் மகாராஷ்டிரம் கேரளம் ஆகிய மாநிலங்கள் காட்கில் அறிக்கை மாநிலத்தின் பொருளாதார மேம்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி நிராகரித்து விட்டன. ஒன்றிய அரசும் அதே பார்வையுடன் அந்த அறிக்கையை புறந்தள்ளிவிட்டது.
ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!
சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
எண்ணூர்: முருகப்பா – கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட போராடிவரும் மக்களுடன் கரம்கோர்ப்போம்!
மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் திமுக அரசு முருகப்பா-கோரமண்டல் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது.
2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்
பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகள்: பேராபத்தைக் காண மறுக்கும் பாசிச மோடி அரசு!
பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!
தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.
ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?
மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?
காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!
ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.
பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!
உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும்.
பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!
எம்பரர் பென்குயின் அழிந்துவரும் உயிரினங்களாக மாறியது என்பது அவசர காலநிலை நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாகும்.