லகின் அனைத்து பென்குயின்களிலும் மிக உயரமான மற்றும் பருமனான எம்பரர் பென்குயின், காலநிலை மாற்றத்தால்பறவைகளுக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அமெரிக்க அரசாங்கத்தால் அழிந்துவரும் உயிரினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவைச் சேர்ந்த பென்குயின்கள், இந்த நூற்றாண்டில் கடல் பனிப்பாறைகள் குறைவதின் காரணமாக கிட்டத்தட்ட அழிவு நிலைக்கு சென்றுள்ளது.

எம்பரர் பெங்குவின் 4 அடி உயரம் வரை நிற்கும். ஆண்களும் பெண்களும் தங்கள் முட்டைகளை காலநிலை சூழலுக்கு ஏற்ப பாதுகாக்கின்றன. மற்றவை உணவு தேடுகின்றன. பென்குயின் நிலத்தில் ஏறக்குறைய நகைச்சுவையான நடையைக் கொண்டிருந்தாலும், அவை மீன்களை கடலில் திறமையாக வேட்டையாடக் கூடியவை.

கடல் பனிப்பாறைகளை சுற்றியுள்ள நீர் பகுதிகள் மற்றும் பனிப் பாறைக்கு அடியில் உள்ள நீர்பகுதிகளில் பென்குயின்களுக்கு அதிகம் உணவு கிடைக்கும் பகுதிகளாக உள்ளன. பென்குயின்கள் ஓய்வெடுக்கவும், பனிப்பாறைகள் ஆண்டுக்காண்டு உருகும்போது தங்குமிடமாகவும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும் பனி மிகவும் அவசியம். ஆனால், உலகளாவிய வெப்பமயமாதல் காரணமாக கடல் பனியின் உருகுதல், இந்த பென்குயின்களின் வாழ்விடத்தை அழித்து வருகிறது, அதே நேரத்தில் கடல் அமிலமயமாக்கல் முக்கிய உணவு ஆதாரங்களை குறைக்கிறது.

படிக்க : இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

கடந்த 2016 ஆம் ஆண்டில் ஹாலி விரிகுடாவில் கடல் பனிப்பாறை உடைந்தபோது 10,000-க்கும் மேற்பட்ட பென்குயின் குஞ்சுகள் இறந்தன. இன்னும் சரியாக நீந்தத் தயாராகாத குஞ்சுகள் நீரில் மூழ்கின.

மார்ச் ஆஃப் தி பென்குயின் திரைப்படத்தில் இடம்பெற்ற பாயிண்ட் ஜியோலஜியில் உள்ள எம்பரர் பென்குயின் எண்ணிக்கை 1970-களில் இருந்த எண்ணைக்கையை விட 50 சதவிதம் குறைந்துள்ளது.

வரலாற்று அளவுடன் ஒப்பிடுகையில், வளிமட்டலத்தின் வெப்பமூட்டும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகள் கடுமையாக குறைக்கப்படாவிட்டால், இந்த வகையான பேரழிவுகள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மொத்த எம்பரர் பென்குயின் எண்ணிக்கையில் 99 சதவிதம் சரிவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காலநிலை நெருக்கடியின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முன்னர் துருவ கரடி, நீ நாய் (ringed seal) மற்றும் பல்வேறு வகையான பவழங்களை அதன் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் பட்டியலிட்டுள்ளது.

உயிரியல் பன்முகத்தன்மை மையத்தின் காலநிலை அறிவியல் இயக்குனர் ஷே வுல்ஃப், “எம்பரர் பென்குயின் அழிந்துவரும் உயிரினங்களாக மாறியது என்பது அவசர காலநிலை நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாகும். பருவநிலையை வெப்பமாக்கும் புதைபடிவ எரிபொருட்களைக் குறைப்பதற்கும், பூமியில் உள்ள உயிர்களுக்கு மீளமுடியாத சேதத்தைத் தடுப்பதற்கும் நமது அரசாங்கம் இப்போது வலுவான நடவடிக்கை எடுக்கிறதா என்பதைப் பொறுத்தே பென்குயின் இருப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.

படிக்க : அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் : முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் தீர்வு இல்லை !

காலநிலை மாற்றத்தினால் அண்டார்டிகாவின் பனி பிரதேசமே உருகி குறைகிறது எனும் பட்சத்தில் மற்ற இடங்களில் இருக்கும் பனி பாறைகளின் நிலையை பற்றி கூறவேண்டியதில்லை. பனி பிரதேசங்களும் பனிப்பாறைகளுமே பென்குயின் போன்ற உயிரினங்களுக்கு வாழ்விடம். அவைகளின் வாழ்விடம் அழியும்போது நிச்சயம் அவையும் அழிந்துபோக்கும். இவற்றின் அழிவு இயற்கையின் பல்வேறு அழிவுகளை நமக்கு எச்சரிக்கைவிடும் வகையில் அமைந்திருக்கிறது. புவி வெப்பமயமாதலின் முக்கிய காரணம் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி வளிமண்டலத்தில் அதிகரிப்பதே ஆகும். அதனை உருவாக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை அழிக்காதவரை, பல்வேறு உயிரினங்கள் காலநிலை நெருக்கடிநிலையினால் அழிவுக்குள்ளாவதை யாராலும் தடுக்கமுடியாது.

கல்பனா
செய்தி ஆதாரம் : கார்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க