இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.

0
Global-poverty

ந்தியாவில் சுமார் 51 சதவீத குழந்தைகள் வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இரட்டை தாக்கத்தின்கீழ் வாழ்கின்றனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் 222 மில்லியன் குழந்தைகள் உட்பட ஆசியா முழுவதும் கிட்டத்தட்ட 350 மில்லியன் குழந்தைகள் உள்ளனர்; அவர்கள் வறுமை மற்றும் காலநிலை பேரழிவு ஆகிய இரண்டிலும் சிக்கித் தவிக்கின்றனர் என்று ‘Generation Hope: 2.4 billion reasons to end the global climate and inequality crisis’ என்ற அறிக்கை கூறுகிறது.

குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவ் தி சில்ட்ரன் மற்றும் ப்ரூஸ்ஸல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட, இந்த “இரட்டை அச்சுறுத்தலை” எதிர்கொள்ளும் ஆசிய நாடுகளின் பட்டியலில் கம்போடியா முதலிடத்தில் இருப்பதாகவும், அந்நாட்டில் 72 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதைத் தொடர்ந்து மியான்மர் (64 சதவீதம்) மற்றும் ஆப்கானிஸ்தான் (57 சதவீதம்). இருப்பினும், வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த “இரட்டை அச்சுறுத்தலை” எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.

இந்தியாவில் 351.9 மில்லியன் குழந்தைகள் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு தீவிர காலநிலை நிகழ்வால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது; அவர்களில் சிலர் ஆபத்தில் உள்ளனர்; ஏனெனில் அவர்கள் வறுமையில் வாழ்கிறார்கள். உலகளவில், 774 மில்லியன் குழந்தைகள் இந்த உயர்-ஆபத்து வலையத்திற்குள் வருகிறார்கள். அதிக வருமானம் கொண்ட நாடுகளும் இந்த “இரட்டை அச்சுறுத்தலில்” இருந்து விடுபடவில்லை என்றும் அறிக்கை கூறியுள்ளது.

படிக்க : இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

பருவநிலை பேரழிவு மற்றும் வறுமை ஆகிய இரண்டையும் எதிர்கொள்ளும் 121 மில்லியன் குழந்தைகள் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்வதாக அறிக்கை கண்டறிந்துள்ளது. பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளில் நான்குக்கும் மேற்பட்டோர் (12.3 மில்லியன்) அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வாழ்கின்றனர். காலநிலை மற்றும் சமத்துவமின்மை நெருக்கடிகள் அவசரமாக கவனிக்கப்படாவிட்டால், மனிதாபிமான மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தன்மை உயரும் என்று சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள குழந்தைகளின் முதன்மை செயல் அதிகாரி சுதர்சன் சுசி, “அஸ்ஸாம், கேரளா மற்றும் ஒடிசாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் விளிம்புநிலை சமூகங்களை கடுமையாக பாதித்தது; ஆயிரக்கணக்கான மக்களை பசி மற்றும் வீடற்றவர்களாக்கியுள்ளது” என்றார்.

வறுமையில் வாடும் மற்றும் காலநிலை பேரழிவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, 159 நாடுகளில் உள்ள 1,925 துணை தேசிய பிராந்தியங்களில், மொத்த குழந்தை மக்கள் தொகையில் 98 சதவீதத்தை உள்ளடக்கிய காலநிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விகிதத்தை சேவ் தி சில்ட்ரன் மதிப்பிட்டுள்ளது. ஆய்வின் நோக்கங்களுக்காக, 1.156 பில்லியன் குழந்தைகளைக் கொண்ட 24 நாடுகளின் பட்டியலாக ‘ஆசியா பிராந்தியம்’ வரையறுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், புருனே, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், தென் கொரியா, லாவோ PDR, மலேசியா, மாலத்தீவு, மங்கோலியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம். இந்த நாடுகளில், மொத்தம் 1.146 மில்லியன் குழந்தைகள் (ஆசியாவில் 99.1 சதவீத குழந்தைகள்) கொண்ட பகுப்பாய்வில் 20 பேர் சேர்க்கப்பட்டனர்.

இந்தியாவின் குழந்தைகள் வறுமையிலும், காலநிலை பேரழிவிலும் பாதிக்கப்பட்டுகொண்டிருக்கும் இவ்வேலையில் அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் சுரண்டி கொள்ளை இலாபமீட்டி வருகின்றனர். பசி பட்டினியிலும் இயற்கை பேரழிவிலும் குழந்தைகள் பாதிக்கப்படுவதென்பது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கொடூர இலாபவெறியை நமக்கு உணர்த்துகிறது.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க