பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

லகின் பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியா நாடு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. தீவிர வெப்ப காற்று வீசுவது, ஒரே நாளில் ஒரு மாதத்திற்கான மொத்த மழையும் பெய்துவிடுவது, அதனால் அதீதவெள்ளம் வருவது, உடல் விரைத்து போகும் அளவிற்கு கடுங்குளிர் என பல்வேறு இயற்கை பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் ஆஸ்திரேலிய மக்கள்.

இப்படி மாறுபட்ட காலநிலையால் மக்கள் ஒருபக்கம் பாதிப்பை எதிர் கொண்டுவரும் நிலையில், அந்நாட்டிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விளையாட்டில் ஆர்வமாக இருப்பதால் ஆஸ்திரேலியா நாடு 30 சதவிதம் வருமானத்தை விளையாட்டின் மூலம் ஈட்டி வருகிறது அரசு. விளையாட்டு பொருட்கள் விற்பனை என அனைத்திலும் மிகப்பெரும் வருமானம் ஈட்டப்படுகிறது.

படிக்க : இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

இந்தியாவில் மக்கள் பொழுது போக்கிற்கு சுற்றுலா, சினிமா என செல்வார்கள். ஆஸ்திரேலிய மக்கள் பொழுது போக்கிறகாகக் கூட மைதானத்தில் தான் அதிகம் விளையாட செல்வார்கள். கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து என அனைத்து விளையாட்டுகளையும் தவறவிடமாட்டார்கள். கடன் வாங்கியாவது மைதானம் சென்றுவிடுவார்கள்.

இந்த மோசமான காலநிலை மாற்றத்தால் தற்போது ஆஸ்திரேலியாவில் வெளியரங்க போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நேரப்படி மதிய நேரத்திலேயே மேகமூட்டத்தால் வானம் இருண்டது. சூரியன் உச்சத்தில் நிற்கும் மதிய நேரத்தில் எப்படி வானம் இருட்டாகும். இதுதான் காலநிலை மாற்றத்தின் புதிய சர்ச்சை. இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் இனி வெளியரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடியாத சூழல் உருவாகி பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு சந்திக்ககூடும் என எச்சரிக்கின்றனர் ஆஸ்திரேலியா  பொருளாதார நிபுணர்கள்.

கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு கோடைகாலத்தில் மட்டும் 2.84 கோடி ஏக்கர் பசுமைக் காடுகள் கடும் காட்டுத் தீ-ஆல் நாசமானது. இதில் 300 கோடி விலங்குகள் இடம்பெயர்ந்தும் இறந்தும் போனதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் பொதுமக்கள் 30 பேர் இறந்துள்ளனர். இது பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியா எதிர்கொண்டுவரும் அபாயகரமான நிலையை நமக்கு உணர்த்துகிறது.

இதேபோன்று அமெரிக்கா மௌனா லோவா தீவில் அமைந்துள்ள ஹவாய்  எரிமலை, நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரமாக வெடித்து நெருப்பு குழம்புகளை அதிக அளவில்  வெளியேற்று வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படக்கூடும், எனவே அனைவரும் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்நாட்டு அரசு எரிமலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மேலும் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்படும் காட்டு தீ  என்பது 1972 முதல் 2018 வரை இருப்பதைக்காட்டிலும் தற்போது 5 மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த காட்டு தீயினால் வெளியேறும் கரும்புகை மற்றும் சாம்பல்களினால் அந்த நகரமே இருள் சூழ்ந்தது போன்று மாறியுள்ளது.

படிக்க : பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!

அதை தொடர்ந்து ஆசிய கண்டத்தின் பருவநிலை மாற்றத்தின் வெளிப்பாடாக இதுவரை கண்டிராத அளவுக்கு பாகிஸ்தான் நாட்டின் நிலப்பகுதி 3 பங்கில் 1 பங்கு முழுவதும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. அதிலிருந்து அந்நாட்டை மீட்க பல்வேறு நாடுகள் பலகட்ட உதவி செய்கின்றன. கடுமையாக பாதிப்பட்ட அந்நாட்டு மக்கள் தன் உயிரை காப்பற்றிக் கொள்ள கடும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

இப்படி உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே உள்ள பிணைப்பு அறுந்து இயற்கையை சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவ லாபவெறியை எதிர்ப்பதை தவிர வேறேன்ன இருக்கிறது நமக்கு.

டேவிட்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க