இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு
எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.
சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
1,400-க்கும் மேற்பட்ட பெரும்பான்மை ஊழியர்கள் இந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் பத்து நாட்களாக ஈடுபட்டிருப்பினும் தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காமல் நிர்வாகம் 1,500-க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உற்பத்தியைத் தொடர்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் கோரமுகம்: ஒரேநாளில் 400 ஊழியர்கள் வெளியேற்றம்
"இந்த நிமிடம் முதல் நீங்கள் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் அல்ல. ஆகவே இன்று மாலை 6:00 மணிக்குள் அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். நிறுவனத்திற்குச் சம்பந்தமில்லாத யாரும் வளாகத்திற்குள் தங்கியிருக்க அனுமதிப்பதில்லை"
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி மணமாகாத ஊழியரின் பெற்றோருக்கும் கூட ஓய்வூதியம் கிடையாது. இது, இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் எவ்வளவு குரூரமான மனசாட்சியே இல்லாத பாசிஸ்டுகள் என்பதை உணர்த்துகின்றதல்லவா?
விசாகா உருக்கு ஆலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளர் போராட்டம்
ஒன்றிய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய உருக்காலையை அழிவுக்குத் தள்ளிவிடும் வகையில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கபள்ளியில் வரவிருக்கும் புதிய தனியார் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலையை கட்டியமைக்க ஏதுவாக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.
சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு தழுவிய போராட்டம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.
70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!
இந்த கார்ப்பரேட் ஓநாய்கள் இப்படிப் பேசியிருப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தை எந்தளவுக்கு கிள்ளுக்கீரைகளாக கருதுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.
மாருதி சுசுகி: புத்தாண்டில் வெடித்த தொழிலாளர் போராட்டம்
பணியில் இருக்கும் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இல்லாமல் வெளியே இருக்கும் தற்காலிக நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்று அனைவரும் தனித்தனி தொழிற்சங்கங்களாக அமைத்துக் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்குமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்
தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இளைஞர்களை கொத்தடிமைகளாக்கும் “பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டம்”
இளைஞர்களுக்கு வழங்கப்படும் அடிமாட்டு கூலியைக் கூட மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊதியமற்ற வேலையாட்களை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு
சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.
சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் ஐ.டி துறையில் ஆட்குறைப்பு: அம்பலப்படுத்தும் அமெரிக்க இணையதளம்
2024 ஆம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மட்டும், உலக அளவில் ஐ.டி துறையில் முக்கிய நிறுவனங்களாக பேசப்படுகின்ற 333 நிறுவனங்களில் மட்டும் 98,834 ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
வெப்ப அலைக்கு பலியாக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்: அரசே முதல் குற்றவாளி
பிரேம்காலியின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்கு செல்வதாகவும், கைரி மற்றும் ஜ்வாஹ்ரா போன்ற சில பக்கத்து கிராமங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மும்பை இரசாயன ஆலை விபத்து: தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அரசே காரணம்!
இராயன ஆலை இயங்குவதற்கு அடிப்படையான பாய்லர் மற்றும் இன்னும் பிற சாதனங்கள் - கருவிகளை பரிசோதிக்க தவறியது, புதியவற்றை வாங்க மறுத்தது என்ற முதலாளித்துவ லாப வெறிதான் பத்து தொழிலாளர்கள் மரணத்திற்கு காரணம்.