திருவள்ளூர்: பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி – தி.மு.க அரசே குற்றவாளி!
பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா என்பது முறையாகச் சோதிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முன்பே ஆய்வு செய்து இவற்றை புனரமைத்திருந்தால், மாணவனின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.
மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!
நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலை நிதி நெருக்கடியை அம்பலப்படுத்திய தோழருக்கு போலீசு மிரட்டல்
சென்னை அண்ணா சதுக்கம் டி-6 போலீசு நிலையத்திலிருந்து அழைத்த போலீசு அதிகாரி, “பல்கலைக்கழக நிதி நெருக்கடி தொடர்பாக எந்த விதமான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினாலும், போலீசிடம் முறையாக அனுமதி பெற்றே நடத்துவோம் என்று போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்” என்று மிரட்டல் விடுத்தார்.
சிதைக்கப்படும் கல்வி வளாக ஜனநாயகம்: அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்
பார்ப்பனிய ஆணாதிக்கம், ஆபாச வெறியூட்டும் மறுகாலனியாக்க நுகர்வுவெறி, போதைக் கலாச்சாரம் ஆகியவை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு கல்வி வளாக ஜனநாயகம் பறிக்கப்படுவதும் முக்கிய காரணமாகும்.
ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கப்படும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்! போராடும் மாணவர்களுக்குத் துணை நிற்போம்!
மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பறிக்கப்படும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் இறுதியாக தேர்வு எழுத விடாமல் முடக்கும் பல்கலைக்கழகத்தின் சதியை எதிர்த்துத்தான், சட்ட ரீதியாகவும், களத்தில் உண்ணாநிலை போராட்டத்தையும் தற்போது மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு: சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர்...
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர் தீரன்
https://youtu.be/8osR0qjPUyw
***
சென்னைப் பல்கலை “தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
நீதிமன்ற ‘அறிவுரை’ எத்தகையது? | தோழர் தீரன்
https://youtu.be/jQIvpIKGEc4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில்...
Delhi police’s brutal attack on JNU’s leftist students – RSYF condemns
At the entrance of the police station, the students were brutally assaulted by the police. The police kicked them, tore their clothes, and verbally abused them with caste-based slurs before arresting them. Most of the attackers were policemen in plain clothes.
ஜே.என்.யூ: இடதுசாரி மாணவர் அமைப்பினரைத் தாக்கிய ஏ.பி.வி.பி குண்டர்கள்! | பு.மா.இ.மு கண்டனம்
JNU-வில் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் குழு ஒன்று அமைக்கப்படும். அதற்கான கலந்துரையாடல் கூட்டத்திற்கு கும்பலாக அணிதிரண்டு வந்த ABVP குண்டர் படையினர் சாவர்க்கர் என முழக்கமிட்டும் அங்கிருந்த இடதுசாரி மாணவர்களைத் தாக்கியும் உள்ளனர்.
பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | பு.மா.இ.மு | சென்னை
தேதி: 14.10.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம்.
புதுச்சேரி பல்கலை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை கைது செய்!
புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்தது புதுச்சேரி போலீசு.
பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | சென்னை | பு.மா.இ.மு
நாள்: செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: காலை 11 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
தூய்மைப் பணியாளர்களின் நம்பிக்கைக்கு முகமாக விளங்கிய தோழர்கள்!
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பதிவு செய்யாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டன. ஆனால், போராடும் மக்களின் பக்கம் நின்று களச் செய்திகளையும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை விரிவாக விளக்கும் காணொளிகளையும் வினவு யூடியூப் சேனல், சமூக ஊடகப் பக்கங்களில் தோழர்கள் பதிவு செய்து வந்தனர்.
எஸ்.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: கார்ப்பரேட்மயமாகிவரும் அரசுக் கட்டமைப்பு
தேர்வில் நேர்மையான அணுகுமுறை வேண்டுமென்று கருதுபவர்கள் தேர்தலில் நேர்மையான முறை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வில் மட்டுமல்ல, தேர்தலிலும் நேர்மையான முறையில்லை.
ஐ.ஐ.எம். உதய்பூரில் இஸ்லாமிய மாணவன் மர்ம மரணம்
“அந்த அறையின் உயரத்தைப் பார்த்தால், ஒரு குழந்தை கூட தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் சகோதரர் உயரமாகவும் பெரியவராகவும் இருப்பார். அந்த மின்விசிறியில் அவர் தொங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தார்.
























