கடைசிச் சுழற்றில் cube-ன் ஒவ்வொரு பக்கமும் அதனதன் வண்ணக் கன சதுரங்கள் போய் உட்கார்ந்து கொள்வது போல் மூளையில் ஆங்கில இலக்கணம் போய் உட்கார்ந்து ஆங்கிலம் புரிந்து விட்டது.
ரங்கராஜனின் அயோக்கியத்தனங்களை சென்னை நகரம் முழுக்க சுவரொட்டி மூலம் நாறடித்து அக்கல்லூரி பாடம் புகட்டும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறது பு.மா.இ.மு.
வலி தாங்க முடியாமல் என் நண்பன் பாதியிலேயே பின்புறத்தை தேய்க்க, அடி பல மடங்குகளாகியது. ஆசிரியரின் கை ஓய்ந்துபோகும் வரை அவனுக்கு அடி விழுந்து கொண்டே இருந்தது.
"கங்குலி ராஜினாமா செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும்" என்று வக்கீல் வண்டுமுருகனாக வந்து நிற்கிறார் சோலி சொராப்ஜி.
"மார்க்கு போட்டா போடறான், போடாட்டி போறான். பேப்பர் திருத்தறவன் பெரிய புடுங்கியெல்லாம் கிடையாது. எனக்குத் தெரியாதா அவுனுக பவுசு?”
நகரத்தில் நான் தொலைந்து போவது போல உணர்ந்தேன். இந்த நிலையில் என்னை மீட்க உதவி செய்தது பள்ளி வாழ்க்கையில் ஆங்கில மொழியில் நான் பெற்ற அடித்தளம் தான்.
அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார்.
பிரம்ம ரகசியத்தை அறியப்போன நசிகேதனின் தலை சுக்கு நூறானதோ இல்லையோ, காஞ்சி பிர்லா மாளிகையின் ரகசியத்தை அறிந்த சங்கர்ராமனின் தலை சுக்கு நூறானது.
ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியராலேயே இவ்வளவு செய்யமுடியும் என்றால், நாடு முழுவதும் பள்ளிகளில் சொர்ணவல்லி மிஸ் போல பரவியிருந்தார்கள் என்றால் எவ்வளவு அருமையான சமுதாயமாக மலரும்.
பள்ளிப் பாடங்கள் வேப்பங்காயாக கசந்தாலும், பலர் ஒன்று கூடுவதால் மட்டுமே கூட்டாம்படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக புத்தகத்தை திறந்ததால் மட்டுமே தேர்ச்சி பெற்ற நண்பர்களை நான் அறிவேன்.
பெரும் பெருச்சாளிகளான வக்கீல்களின் ஆலோசனைப் படி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பல ஆண்கள் வழக்கமாக செய்வதையே தருண் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டுன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு.
ஆசிரியர்கள் தங்கள் அறிவுத் தேடலை துரிதப்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக இருப்பதைக் காட்டிலும் வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
"மக்கா, எங்களை நம்பி வந்துட்டீங்க, உங்களை பத்திரமா நாங்க பாத்துக்கணும்"
ஆசிரியப்பாவுக்கு அகவலோசை உண்டு எனப் படித்த எனக்கு கவிமணியிடமிருந்து உதாரணங்களைப் பாடிக் காண்பிப்பார். நளவெண்பாவுக்கு செப்பலோசை இருப்பதை அவரைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன்.












