Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 24

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 30 ஜூன், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 15 | 1986 ஜூன் 16 – 30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ‘பஞ்சாப் நிலைமை சிக்கலாகிறது’ சிறுபான்மையினர் விரட்டப்படுகின்றனர்
  • நினைவிருக்கிறதா?
  • கூர்க்கா போராட்டம்: இன்னுமொரு அசாம்
  • அரசியல் வாணவேடிக்கை
  • புறக்கணிக்கப்படுகிறது தமிழகம்
  • அறக்கட்டளை மோசடி
  • யாருக்காக இந்திய இராணுவம்?
  • சந்தைக்கு வந்துவிட்ட சரக்கு!
  • காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கம். வாக்காளர் பட்டியலே உறுப்பினர் பட்டியலாக உருமாறியவிதம்
  • தென்னாப்பிரிக்கா: நிறவெறிக்கு எதிராக மக்கள் பேரெழுச்சி
  • TVS: உழைப்பை மட்டுமல்ல உயிரையும் பறிக்கிறது
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜல்லிக்கட்டில் சாதி வேறுபாட்டை கலைவது குறித்து – மீள்பதிவு

மிழ்நாடு மக்கள் போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்தாண்டு பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக நடந்தேறியது. இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டியலின மக்களுக்கு எதிராக சாதித் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தாண்டும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி தலித் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஊடகங்களில் வெளிவராமல் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதித் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் சாதி வேறுபாட்டை கலைந்து அதனை ஜனநாயகப்படுத்துவது குறித்து 2024 ஜனவரி மாத புதிய ஜனநாயகம் இதழின் “பு.ஜ. உடன் ஓர் உரையாடல்” பகுதியில் கேள்வி-பதில் கொண்டுவரப்பட்டது. பிப்ரவரி 15, 2024 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட இக்கேள்வி-பதில் பதிவு சில திருத்தங்களுடன் தற்போது மீள்பதிவு செய்யப்படுகிறது.

***

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பின் ஜல்லிக்கட்டு போட்டியில்
என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ள
ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்து ஏழாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?

கோவில் வழிபாடு உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்திற்காகப் போராடுவதை போல ஜல்லிக்கட்டிலும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு போராட வேண்டும். தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு மரபில் தலையிட்டு ஜல்லிக்கட்டை தடை செய்த பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் மரபாக ஜல்லிக்கட்டு வரித்துக் கொள்ளப்பட்டதன் அடையாளம்தான் 2017 ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்.

ஆனால், அன்றைக்கும் கூட, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டுமென்று, அ.தி.மு.க. அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை மீறி தலித் மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முற்பட்டபோது, போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டன. இன்றும் அரசினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதுவே, மிகப்பெரிய உரிமை பறிப்பாகும்.

அதேபோல், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் அவதூறுகளைத் தவிர்த்து, போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மாடுகளுக்கு போதையேற்றுவது, விளையாட்டு வீரர்கள் போதையில் கலந்து கொள்வதைத் தடுப்பது, விளையாட்டு வீரர்களுக்குப் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்வது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற அவசியமான கட்டுப்பாடுகளும் முறைப்படுத்துதல்களும் தேவையாக உள்ளது.

ஆனால், இவை மட்டுமே ஒரு விளையாட்டை ஜனநாயகப்படுத்தும் முறை அல்ல. பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சாதி ஆதிக்கம் வெவ்வேறு வகைகளில் வெளிப்படையாகக் கடைபிடிக்கப்படுகிறது. தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர். இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

அரசு தலையிடத் தொடங்கிய பின்னர், இப்போட்டிக்கான விதிமுறைகள் பொதுத்தன்மை பெற்று வருகின்றன. இருப்பினும், இவை இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியை நெறிப்படுத்துவது என்ற முகாந்திரத்தில், இப்போட்டியை உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

ஆகையால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மரபு ரீதியான பகுதிகளில் பாதுகாப்பான வகையில் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும். தற்போது தி.மு.க. அரசு மதுரையில் அமைத்திருக்கும் மைதானமும் (முதலாவது ஜல்லிக்கட்டு மைதானமாகும்), அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே அன்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் செல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

சில மாடுகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தாக்குவது, வீரர்கள் முறைமீறல்களில் ஈடுபட்டால், அவர்களை போலீசை கொண்டு தாக்குவது போன்றவை நடக்கின்றன. இதனை தடுக்க முறையான விளையாட்டு நெறியாளர்கள், கள நெறியாளர்கள் போன்ற முறைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் யார், வெற்றி பெற்ற மாடு எது என்பதற்கான விதிமுறைகளில் பொதுவில் குழப்பங்கள் இல்லையெனினும், முறைப்படுத்தல் தேவைப்படுகிறது. வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிடுவது, அதனைப் பிடிப்பது, சில காளை மாடுகள் விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றிவருவதால் வீரர்கள் காயமடைவது என பல அம்சங்களில் இம்முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பரிசுப்பொருளாக வழங்கப்படும் மோட்டார் சைக்கிள், அண்டா, மின்விசிறி, மெத்தை, நாற்காலி, பானை போன்றவையெல்லாம் இன்றைய வீரர்களுக்கு பயனளிப்பவை அல்ல. முதலிடம் பெற்ற வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக மாடுகளை அடக்கி முதலிடம் பெற்றுவரும் அபிசித்தர் என்ற வீரர் தனக்கு கார் வேண்டாம், அரசு வேலை வேண்டும் என்று கோருவதானது, நாட்டில் நிலவும் வேலையின்மையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டையும் முறைப்படுத்துவது என்ற பெயரில் கார்ப்பரேட் ஆதிக்கம் புகுத்தப்படுவதற்கான முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும், மக்களின் பங்கேற்புடனான, சமத்துவத்தை வளர்க்கும் வகையிலான, மக்கள் பண்பாடாக அது தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும்.

ஆனால், மக்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி-மத வேறுபாடுகளை ஒழிக்காமல் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் ஜனநாயகப்படுத்துவது தனியாக நடந்தேறிவிடாது. மேற்கண்ட அளவுக்கு இவ்விளையாட்டு முறைப்படுத்தப்பட்டதற்கு காரணம் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தவகையில், சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் நோக்கிலான ஒரு மக்கள் எழுச்சிதான், விளையாட்டைப் போன்று பண்பாட்டு, கலை, இலக்கியங்களிலும் ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்கும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 ஜூன், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 14 | 1986 ஜூன் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அமைச்சரவை மாற்றங்களும் பதவிகளைப் பகிர்வதற்கான சண்டையும்
  • மேல்சபை ஒழிப்பு: பெருச்சாளிகள் நுழைய ஒரு பொந்து மட்டுமா?
  • திருச்சி ஸ்டீல் ரோலிங் மில்ஸ் தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம்
  • இழிபிறவிகளின் ஈனச்செயல்கள் இறுதி வெற்றியைத் தடுத்துவிடாது!
  • பொறுப்பற்ற அரசு! வேண்டாத சதைப் பிண்டம்!!
  • சட்டங்கள் இயற்றுவதும் திட்டங்கள் தீட்டுவதும் கிரிமினல் குற்றவாளிகளே!
  • யாருக்காக இந்திய இராணுவம்?
  • தென்னாப்பிரிக்கா: நிறவெறிக்கு எதிராக மக்கள் பேரெழுச்சி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நூல் அறிமுகம்: சூத்திரக் கலகம்

பாசிசத்திற்கு எதிரான போராட்டம், ஒரு சித்தாந்தப் போராட்டமாகும். அது, சாதி ஒழிப்புடன் இணைந்ததாகும். சாதியை ஒழிக்க வேண்டுமென்று பலரும் விரும்பினாலும், அதற்கான சரியான சித்தாந்தப் புரிதல் வேண்டும். அதற்கு இந்திய துணைக்கண்டத்தில் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தையும் அதற்கெதிரான போராட்டத்தின் பரப்பையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.

தலித்திய சிந்தனையாளரும் செயல்பாட்டாளருமான காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் அவர்கள் எழுதிய “சூத்திரக் கலகம்” (The Shudra Rebellion) என்ற நூலுக்கான அறிமுகம், இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு, ஒரு தூண்டுகோலாக அமையும். “பண்டைய இந்தியாவில் விவசாயவாதம்” என்ற தலைப்பிட்ட அந்த கட்டுரை, “கவுண்டர் கரண்ட்ஸ்” (Countercurrents) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையானது, விவசாயம், சாதி, உற்பத்தி, பார்ப்பனியத்திற்கு இடையிலான உறவை புதிய கோணத்தில் விளக்குகிறது. பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட அனைவருக்கும் இந்த நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

மூவாயிரம் ஆண்டுகளாக, பார்ப்பனியம் விவசாயத்தையும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளையும் சூத்திரர்களாக ஒடுக்கி வைத்தது; அது மட்டுமின்றி, கைவினைஞர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளிகள் என உழைக்கும் மக்கள் அனைவரையும் சூத்திரர்களாக ஒடுக்கி வருகிறது. அந்த ஒடுக்குமுறையின் முக்கியமான அம்சம், அவர்களுக்கு கல்வி உரிமையை மறுப்பதாகும்.

உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்கப்படாமல் போனதால், உழைக்கும் மக்களின் பண்பாடு, கலை, சித்தாந்தம் போன்றவை எழுத்தில் அரங்கேறாமல் போய், வளர்ச்சிப் பெறாமல் போய்விட்டது. அதன் பாதிப்புகளில் ஒன்று, “விவசாய இயல்” (விவசாயவாதம்) வளர்ச்சிப் பெறாமல் போனதாகும்.

அந்தவகையில், இந்தப் பிரச்சினையின் பல புதிய பரிமாணங்களை இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூல், அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும். அதனை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வகையில், இந்நூல் குறித்த அவரது அறிமுகக் கட்டுரையை சாரம் குலையாமல் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளோம்.

000

பண்டைய இந்தியாவில் விவசாயவாதம்
(
Philosophy of agriculturism)

“சூத்திரக் கலகம்” எனும் என்னுடைய சமீபத்திய நூலுக்கான ஆராய்ச்சியின் போது புராதன இந்தியாவில் வேத காலத்திலோ அல்லது அதற்கும் முந்தைய காலத்திலோ விவசாயவாதத்திற்கானத் (agriculturism என்ற ஆங்கிலச் சொல்லை விவசாயத்தை ஒரு சித்தாந்தமாக குறிப்பிடும் வகையில், உழவியல்வாதம், விவசாயவாதம் என்று மொழிபெயர்த்துள்ளோம்) தத்துவப் பள்ளிகள் ஏதேனும் இருந்தனவா என்று பண்டைய இலக்கியங்களில் தேடிப் பார்த்தேன். அப்படிப்பட்ட பள்ளிகள் இருந்ததற்கான எழுத்துப்பூர்வ ஆதாரம் எதுவும் எனக்குக் கிட்டவில்லை. இந்தியாவைத் தவிர பண்டைக்கால சீனா, கிரீஸ், இஸ்ரேல், எகிப்து ஆகிய நாடுகள் பழங்காலத்திலேயே தத்துவப் பள்ளிகளைக் கட்டி வளர்த்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

எனவே, இப்படிப்பட்ட விவசாயவாத பள்ளிகளும் அந்நாடுகளில் இருந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதென உணர்ந்தேன். பின்னர் நான் முன்னுணர்ந்தவாறே கி.மு. 770 முதல் கி.மு. 221-க்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய சீனாவில் உழவியலுக்கான மிகச் சிறந்த தத்துவப் பள்ளிகள் இருந்திருப்பதைக் கண்டறிந்தேன். விவசாயவாதம் குறித்து எழுதிப் பரப்புரை செய்த தத்துவ ஆசிரியர் “சூ சிங்” (Xu Xing) ஆவார். இவை பேசப்பட்டது கி.மு. 372 முதல் கி.மு. 289 வரையிலான காலம். இவை சீன வரலாற்றின் பகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் உழவுத் தொழில் வளர்ந்த நாகரீகம் சீனாவுக்கு முந்தையதாகும். ஆரியர்களுக்கு முந்தைய இந்திய பழங்குடிகள் உருவாக்கி வளர்த்திருந்த ஹரப்பா நாகரீகத்தில் விவசாய உற்பத்தி நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால், அக்காலத்தில் சீன விவசாயம் அவ்வளவு முன்னேறி இருக்கவில்லை. சீனாவில் ஹூனான் பிராந்தியத்தில் இருக்கும் “சாங் சௌ” (Chang – Zhou) நகரம் கி.மு. 2,600-இல் நிறுவப்பட்டது. அதுவே, சீனத்தின் மிகப் பழமையான நகரமாகும். சீனத்தின் ஆகப் பழமையான “சாங் சௌ” நகரத்தில் சுட்ட செங்கற்கள், முன்னேறிய கைவினைப் பொருட்கள், வெண்கலத்தாலான கருவிகள் என்று தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும், அது மிகச் சிறிய நகரமாகும்.

ஹரப்பா நாகரிகத்தில் உலகின் வேறு எந்த நகர நாகரிகத்திலும் இல்லாத அளவிற்கு முதிர்ந்த அறிவுப் பணிகள் காணப்படுகின்றன. முறையான முன்னேறிய விவசாயவாதத் தத்துவ வளர்ச்சி இல்லாமல் முன்னேறிய அறிவியல் கருவிகளை வடிவமைப்பது சாத்தியமில்லை. தத்துவமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய அறிவு வளர்ச்சி செயல்பாடுகளாகும். வேத காலத்திற்கு முற்பட்ட இந்தியாவில் அவ்வாறான தத்துவமும் அறிவியலும் இணைந்ததொரு சிந்தனைச் செயல்பாடு இருந்திருக்கின்றது.

விவசாயவாதமும் வேதங்களும்

வேதங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தால் எழுதப்பட்ட பிறகு மெல்ல மெல்ல விவசாயவாதம் ஒரு தத்துவம் என்கிற வகையில் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் தகுதியற்றதாகக் கருதப்படலாயிற்று. ஆகவே, மிகவும் வருந்தத்தக்க வகையில் அப்பள்ளிகள் காணாமல் மறைந்து போயின. அதனால் பண்டைய மற்றும் மத்திய கால இந்தியாவில் விவசாயம் மற்றும் கைவினைத் தொழில் சார்ந்த உற்பத்தியும் அறிவியலும் வளர்ச்சி குன்றி பெருமளவில் தேக்கமடைந்தன.

தோல் தொழில்நுட்பம் அதன் உற்பத்தியாளனோடு சேர்த்து தீண்டத்தகாததாகக் கருதப்பட்டதும், விவசாய உற்பத்தியின் மண்வெட்டியும் கலப்பையும் எக்காலத்திலும் நாகரீக வளர்ச்சியின் அடையாளமாகக் கொள்ளப்படாததும் உற்பத்தியின் முன்னேற்றத்தை பலவீனப்படுத்தியது. அந்தச் சூழ்நிலை மாற்றம் காண்பதற்காக யாரோ சிலரின் வரவுக்காக காத்திருந்தது.

வேறு தத்துவங்களுடன் முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். ஆனால், இங்கிருந்த ஆரிய பார்ப்பன பண்டிதர்கள் உடனடியாகவே ஆட்சியாளர்களை சூழ்ந்து அவர்களைச் சுற்றிலுமாகத் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டனர். இந்தியாவில் தங்களின் பரம்பரைச் சாதி புனிதமானது என்றும் தங்களைத் தவிர சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு இறைவனின் கட்டளையால் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது என்றும் அரசர்களுக்கு எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்தனர்.

ஆக, இந்திய விவசாயவாதம் என்பது சீனாவினுடையதை விட மிகவும் முன்னேறியதாகும். வேதங்கள் அல்ல, மாறாக விவசாயவாதமே நம் தேசத்தின் அடிப்படைத் தத்துவமாகும். ஆனாலும் வாழ்வியல் பற்றி எழுதவும் அவற்றை பாதுகாக்கவும் இந்திய சாதியக் கலாச்சாரம் அனுமதிக்கவில்லை என்பதனால் விவசாயவாதத் தத்துவம் அழிந்துபோனது. ஏனெனில், ஆரியர்களுக்கு முந்தைய ஹரப்பா மக்களிடம் எழுத்துமுறை வளர்ந்திருக்கவில்லை. ஆதலால் அவர்கள் எதையும் எழுதி வைக்க வாய்ப்பில்லை. அதேசமயம், வேதகாலத்திற்குப் பிந்தைய விவசாயிகள் சூத்திர அடிமைகள் எனும் நான்காவது வர்ணத்தவராக அறிவிக்கப்பட்டு விட்டனர். அந்த சூத்திர வர்ணத்தில் ரெட்டிகள், கம்மாளர்கள், காப்புகள், மராத்தாக்கள், பட்டேல்கள், ஜாட்கள், முதலியார்கள், சக்கலியர்கள் (துணி வெளுப்பவர்கள்) மற்றும் நாவிதர்கள் ஆகிய ஜாதிகள் அனைத்தும் அடக்கம். ஆகையினால், ஆங்கிலேயர்கள் வந்து கல்விக்கூடங்கள் திறக்கும் வரையில் அவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை.

பின்னாளில் அக்பர் போன்ற முஸ்லீம் அரசர்கள் வந்த போதும் அவர்களும் பார்ப்பன பண்டிதர்களின் ஆலோசனைகளின்படி பெர்சிய கல்வியில் இருந்தும் சூத்திர ஜாதியினர் விலக்கி வைக்கப்பட்டனர். வரலாற்று வழியிலான இந்த எழுத்தறிவின்மையின் தாக்கத்தை சூத்திர, தலித் மற்றும் பழங்குடி மக்களிடையே இன்றளவும் காண முடிகின்றது.

ஏராளம் பணம் படைத்த செல்வந்தர்களாக இருக்கின்ற சூத்திர சாதியினர், தலித் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட இன்றளவும் தங்களை தத்துவக் கல்வியில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்பதையும் அதற்கான தடைகளைப் பற்றியும் “சூத்திரக் கலகம்” என்னும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. அதுபோலவே, சமகால இரு பிறப்பாளர்களான பார்ப்பனர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ். பள்ளியினால் வழிநடத்தப்படுவதால் விவசாயவாதத் தத்துவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்பதுடன் வேதங்கள்தான் இந்திய தத்துவ ஞானத்தின் ஊற்று மூலம் என்று தொடர்ந்து ஓயாமல் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த வேத புத்தகங்கள் எதிலும் விவசாயவாதம் பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. இவ்வுலகத்தில் வேறு எங்குமே புத்தகங்களை அறிவின் ஊற்று மூலம் என்று பார்ப்பதில்லை. வயல்களில் உழைக்கும் மக்களின் தத்துவ அறிவின் பிரதிபலிப்பாக மட்டுமே புத்தகங்கள் இருக்க முடியும். மேலும் வேதங்கள் விவசாய உற்பத்தி சார்ந்த தத்துவத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை.

சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் தத்துவம் சார்ந்த கருத்துகளை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்று, இன்றளவும் இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனச் சிந்தனையாளர்கள் ஏற்பதில்லை. வேதங்களுக்கும் விவசாயவாதத்திற்கும் இடையே அவர்கள் பெரும் சுவரை கட்டியெழுப்பி இருக்கிறார்கள். பார்ப்பனியம் என்னும் இந்த தடைச்சுவர் விவசாய உற்பத்தியில் படைப்பாற்றலை அழித்ததுடன் சீனம் மற்றும் ஐரோப்பாவைப் போல கைவினைத் தொழில் உற்பத்தி வளர்வதையும் அனுமதிக்கவில்லை.

நமது கிராமங்களில் விவசாயச் சமூகத்தினர் இடையே சிறந்த உற்பத்தி முறைகள் பற்றியும், நிலம் மற்றும் விதைகளுக்கிடையிலான உறவுகள் பற்றியும், மண்ணின் தன்மை, மண்ணுடன் விதைக்குள்ள உறவு மற்றும் கால்நடைகள், வனவிலங்குகள் இன்னும் மனிதர்கள் பற்றி எல்லாம் பல பல கண்ணோட்டங்களும் தொலைநோக்குப் பார்வையும் இருப்பது உண்மை இல்லையா? நமது கிராமங்களில் தத்துவம் சார்ந்த கருத்துகள் இன்னமும் மக்கள் வாழ்வில் ஒரு நுட்பமான பாத்திரம் வகிக்கின்றனவா, இல்லையா? ஆமாம். அவை யாவும் கிராம வாழ்வில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன.

தாவரங்கள், தானியங்கள், பழங்கள் மற்றும் நீர் குறித்த கிராம மக்களின் பொதுவான தத்துவப் பார்வைதான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியன போதுமான உணவளிக்காத போது வயல்களில் இருந்து உணவை உற்பத்தி செய்ய வைத்தது, அந்தத் தொடர்ச்சி இப்போதும் இருக்கிறது.

இந்தியாவில் விவசாயம் அல்லாத இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனக் குடும்பங்களில் இருந்து வந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைச் சேர்ந்த அறிவுஜீவிகள் இந்திய குழந்தைகளும் இளைஞர்களும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வேதம் மற்றும் புராணங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், இந்த நூல்களில் விவசாயம் மற்றும் கைவினைத் தொழில் குறித்து எந்த கருத்தாடலும் இல்லை. மேலும், அத்தொழில்களின் அடிப்படையில் உற்பத்தி மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வெற்றிகண்ட சமூகப் பிரிவினர் குறித்தும் எந்தத் தகவலும் இந்த நூல்களில் கிடையாது. பிறகு, உணவு உற்பத்தியாளர்களும் கைவினை நுட்பத் தொழிலாளர்களும் இல்லாமல் வேதபுராணங்களை பாராயணம் செய்த அந்த சமூகம் எப்படி உயிர் பிழைக்க முடிந்தது?

மாற்று முறைகள் (Alternative Method)

எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே மாற்று, மறைந்து அழிந்து போன இந்திய விவசாயவாதத் தத்துவத்தை மீண்டும் முறையாகக் கட்டி எழுப்புவதற்கும் அதனூடாக ஹரப்பா விவசாயவாதத்தின் மூல வேர்களை தேடிக் கண்டடைவதற்கும் இன்றைய கிராமங்களில் வாழும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வை பொறுப்புடன் ஆய்வு செய்வதாகும்.

மேற்குறிப்பிட்ட நூலில், “சூத்திரர்களின் விவசாயவாதம் மற்றும் இந்திய நாகரீகம்” என்றோர் அத்தியாயம் உள்ளது. உண்மையில், சீனாவுடன் ஒப்பிடும்போது, இது இந்திய விவசாயவாதத் தத்துவத்தின் தொடக்க நிலை (Preliminary) ஆய்வேயாகும். அது இந்திய விவசாய செயல்பாடுகள் எவ்வாறு பொருள் முதல்வாதத்துடன் இணைந்த தத்துவார்த்தக் கருத்துகளைக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது. மதம் மட்டுமே தத்துவத்துடன் தொடர்புடையது என்பதே இந்துத்துவக் கண்ணோட்டம். உண்மையில், ரிக் வேதம் இயற்றப்படுவதற்கு முன்பே, ராமாயணமும் மகாபாரதமும் எழுதப்படுவதற்கும் முன்பே, விவசாயவாதம் ஆன்மீக தத்துவத்துடன் ஆழப் பதிந்துள்ளது (ஆசிரியர் ஆன்மீக தத்துவத்தையும் இந்துத்துவத்தையும் வேறுபடுத்துகிறார்-மொ.பெ.).

விவசாயிகளை சூத்திர அடிமைகள் என்று ஒடுக்கியதன் மூலம் வேத பார்ப்பனர்கள் விவசாயவாதத் தத்துவத்தையும் ஒதுக்கினார்கள். அதாவது இழிவுப்படுத்தி இருட்டடிப்பு செய்தார்கள். விவசாயவாதத் தத்துவத்திற்கு எதிரான அந்த கோணல் புத்திதான் இன்றும் தொடர்கிறது.

இருப்பினும், இந்திய விவசாயவாதம் குறித்து ஏராளமான புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், வேதவியல் (Vedhism), வேதாந்தம், துவைதம், அத்வைதம் ஆகிய அனைத்துக்கும் மேலான தகுதியை, கௌரவத்தை விவசாயவாதத்திற்கு வழங்க வேண்டும். ஏனெனில், விவசாயவாதம் மனித வாழ்வின் இருத்தலையும் வாழ்வியலையும் தீர்மானிக்கும் அதன் ரத்த ஓட்டமாகும். உற்பத்தியின் தத்துவத்திலிருந்து முழுவதுமாக விலகி, மதம் ஒருமுறை, சுயேச்சையான தத்துவப் பள்ளியாக உருவெடுத்தவுடன், மதத் தத்துவவாதிகள் அறிவுக் கட்டமைப்பின் மீது தமது ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டார்கள்.

இருந்தபோதும், ஒரு படைப்பாற்றல் கொண்ட தேசமாக இருப்பதற்கு, நாம், மகத்தான விவசாயவாதம் போன்ற பள்ளிகளை மீட்டுருவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும். முன்னொரு காலத்தில், இன்று நாம் காண்கின்ற சீராக ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் எவையும் இருந்ததில்லை. இனிவரும் சில பல நூற்றாண்டுகளுக்கு பிறகு அவை இருக்கப் போவதுமில்லை.

காஞ்சா அய்லய்யா ஷெப்பார்ட்
(கவுண்டர் கரண்ட்ஸ் இணையத்தில்)
தமிழில்: சுந்தரம்


(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு

இன்றுடன் (17.01.2025) ரோகித் வெமுலா நிறுவனப் படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. ரோகித் வெமுலா சந்தித்த கொடுமைகள் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களும் இக்கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பெங்களூரு ஐ.ஐ.எம்-இல் பேராசிரியர் கோபால் தாஸ் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமையே இதற்கான சமீபத்திய சான்று.

ரோகித் வெமுலாவிற்கு நடந்த கொடூரத்தை நினைவுகூரும் வகையில் ஜனவரி 19, 2016 அன்று வினவு தளத்தில் வெளியான கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவன் ரோகித் வெமுலா!- நாம் செய்ய வேண்டியது என்ன?

ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா

ஹைதராபாத் பல்கலைக்கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்துத்துவக் காலிகளுக்கு எதிராக போராடியதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடி தலையீட்டின் கீழ், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் இப்பல்கலையைச் சேர்ந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து தலித் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதி, நூலகம், வகுப்பறை மற்றும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி-ஆல் வெளியேற்றப்பட்ட அம்பேத்கர் கூட்டமைப்பு மாணவர்கள்.
ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி-ஆல் வெளியேற்றப்பட்ட அம்பேத்கர் கூட்டமைப்பு மாணவர்கள்.

பல்கலைக்கழகத்தின் பாரபட்சமான இந்த பார்ப்பன பாசிச நடவடிக்கையை எதிர்த்தும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கொட்டகை அமைத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர். இந்நிலையில் தான் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் நாடெங்கிலும் ஜனநாயக சக்திகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறது.

தலித் மாணவனின் மரணத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த மத்திய மோடி அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை கைது செய்யுமாறும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்யுமாறும் போராடி வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவனின் தற்கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் பகிரங்க தலையீட்டுக்கான காரணம் என்ன?

முசாபர் நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் திட்டமிட்ட சதிச்செயலை அம்பலப்படுத்தும் “முசாபர்நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட்டிருக்கின்றனர்.

முசாபர்நகர் பாக்கி ஹை ஆவணப்படத்தின் டீசர்

முன்னதாக, இந்த ஆவணப்படம் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் திரையிடப்படுவது இந்துத்துவக் கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக முற்போக்கு மாணவர் அமைப்புகள் இந்துத்துவ பாசிசத்தை தனிமைப்படுத்தி வேரறுக்கும் விதமாக முசாபர்நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிச்செயலை அம்பலப்படுத்துவதில் முனைப்பு காட்டினர். இதன் ஒரு பகுதியாகவே ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு “முசாபர்நகர் பாக்கி ஹை” ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், யாகூப் மேமன் துக்கிலிடப்பட்டதில் அரசின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் விதத்திலும் இம்மாணவர் கூட்டமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

rohit-vemula-3இதனால் காவிக்கூட்டம் மாணவர்கள் மத்தியில் முழுக்கவும் அம்பலப்பட்டு போனது. பார்ப்பனிய இந்து மதத்தின் சேவகனாக தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று சொன்ன சாவர்க்கரின் ஆணையை தலித்துகள் மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக்கும்பல் இம்மாணவர் கூட்டமைப்பு மீது தாக்குதலில் இறங்கியிருக்கிறது. அது தொடர்பான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் இம்மாணவர் கூட்டமைப்பிடம் மன்னிப்புக் கோர வைக்கப்பட்டனர்.

ஆனால், அரசு அடக்குமுறை இயந்திரத்தை தன் கைகளில் வைத்திருக்கிற காவிக்கூட்டம் தனக்கே உரித்தான நைச்சிய பாணியில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை பல்கலையில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் தாங்கள் தாக்கப்பட்டதாக பொய்வழக்கை புனைந்தது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பண்டாரு தத்தாத்ரேயா, “ஹைதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக-சாதிய-பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ரோகித் வெமுலாவின் தற்கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்
ரோகித் வெமுலாவின் தற்கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்

இப்படித்தான் காவி வானரங்கள் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் ‘மோடிக்கு எதிராக பேசுகிறது’; ‘இந்துமதத்தை கொடூரங்களின் கூடாரம் என்று சொல்கிறது’ (அம்பேத்கர் சொன்னது!!); ‘தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுகிறது’ என்று ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடுதாசி போட்டனர். அ.பெ.ப.வ முன்னணி மாணவர்களும் ரோகித் வெமுலா உள்ளாக்கப்பட்ட இதே உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் ஜனநாயக சக்திகளின் வீச்சான போராட்டமும் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுமும் புரட்சிகர இயக்கங்களின் இடையறாத தாக்குதலும் இந்தியாவெங்கும் மோடி கும்பலின் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்தி காவிக்கும்பலை பின்வாங்க வைத்தது.

ஆனால், தெலுங்கானாவிலோ தலித் மாணவனை காவுவாங்கி இந்துத்துவம் தன் கோரப்பற்களைக் காட்டியிருக்கிறது. ஸ்மிருதி இரானியின் தலையீடு; அதற்குப் பிந்தைய துணைவேந்தரின் ஒருதலைபட்சமான நடவடிக்கை; தலித் பேராசிரியர்கள் என்று கூறிக்கொண்டவர்களே ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக மாறிப்போய் மவுனம் சாதித்தது என டிசம்பர் 21 அன்று அம்பேத்கர் மாணவர் அமைப்பின் ஐந்து முன்னணியாளர்களும் பல்கலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

ரோகித் வெமுலாவின் ஆராய்ச்சி உதவித்தொகை கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில், அவர் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மத்திய, மாநில, பல்கலைக்கழக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை கருவிகள் ஒரு சேர இம்மாணவர்களின் மீது ஏவப்பட்டிருக்கிறது. இறுதியில் பார்ப்பனியம் நிலைநாட்டப்பட்டு மாணவர் ரோகித் வெமுலா தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துத்துவத்தின் ஊதுகுழலாக இருக்கும் அ.தி.மு.க கட்சியின் அம்மா அடிவருடி துணைவேந்தர் தாண்டவனும் சென்னை மாணவர்களுக்கு ரோகித் வெமுலா அனுபவித்த அத்துணை கொடுமைகளையும் ஏவத்தான் செய்தார். இதனாலயே சென்னை மாணவர்கள் ஒருகட்டத்தில் பல்கலைக்கழக கட்டிடத்தில் ஏறி ‘பல்கலைக்கழகம் தங்களை மீண்டும் அனுமதிக்காவிட்டால் உயிர் துறப்பதாக’ பகிரங்கமாக அறிவித்தனர்.

சென்னைப் பல்கலையில் நடக்கவிருந்த படுகொலை ஹைதாராபாத் பல்கலையில் நடந்தேறியிருக்கிறது என்பதில் இருந்து என்ன தெரிகிறது?

மாணவர்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் பணியில் தங்களை சமரசத்திற்கு இடமின்றி ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இது எதைவிடவும் ஆபத்து என்பதை பாசிஸ்டுகள் உணர்ந்திருக்கின்றனர். மாணவர்களை மூர்க்கமாக ஒடுக்காவிட்டால், போராட்டத்தின் திசைவழி ஆளும்வர்க்க கும்பலை அச்சுறுத்தும் என்பதில் மரண பீதியுற்றிருக்கின்றனர்.

ஆகையால் தான், பொதுவெளியில் தலித் மாணவர்கள் அடையாள அரசியல் என்ற எல்லைக்குள் நின்று பேசுவதை அனுமதிக்கிற ஆளும் வர்க்கம், அதே மாணவர்கள் முசபார்நகர் தாக்குதலை அம்பலப்படுத்துவதில் நிற்கிற பொழுது என்ன செய்கிறது என்பதற்கு ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு வகைமாதிரியாக வந்து நிற்கிறது.

அது மட்டுமல்ல. இசுலாமியர்களுக்கு எதிராக தலித்துகளைத் திரட்டிவிட முடியும் என்று கனவு கண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டத்தை சுக்கு நூறாக ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர்கள் நடைமுறையில் உடைத்துக் காட்டியிருக்கின்றனர். இதை ஆளும் இந்துத்துவக் கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதும் ரோகித் வெமுலாவின் கொலையிலிருந்து தெரியவருகிறது.

ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் வெமுலாவின் பலி நாடெங்கும் கோப அலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.

ஊர், சேரி என்று பிரித்து வைத்து தலித்துக்களை அடக்கி வைத்து அடிமையாக நடத்திய பார்ப்பனிய மதம் நவீன காலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மூலம் அதை தொடர்கிறது. அம்பேத்கர் துதி, தலித்துக்களின் மீதான ஓநாய் இரக்கம்  போன்ற ஊசிப்போன ‘கருணை’யால் மோடி அரசின் உண்மை முகம் தெரியாமல் போய்விடவில்லை. நாடெங்கும் கிளம்பும் மாணவர் போராட்டங்கள் மோடி அரசுக்கு வெறும் தலைவலியாக மட்டும் இருக்காமல் மரண அடியாக மாறவேண்டும்.


இளங்கோ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 மே, 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 13 | 1986 மே 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சமூக வெறியர்களா?
  • குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ.
  • குடிநீர் கேட்டுத் தவிக்கிறார்கள் கானல் நீர் காட்டி ஏய்க்கிறார்கள்
  • யாருக்காக இந்திய இராணுவம்?
  • அச்சுறுத்தும் அணு உலைகள்
  • ஒழுங்குமுறை விற்பனைக்கூடமா? கொள்ளைக் கூடாரமா?
  • மீண்டும் ஜாலியன்வாலாபாக்!
  • சிலி நாடு தந்த படிப்பினை சமாதான மாற்றம் சாத்தியமில்லை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 மே, 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 12 | 1986 மே 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரஸ் பட்டுப்போகும் நச்சுமரம்
  • தொடரும் அமெரிக்க அடாவடித்தனம்
  • மானியங்கள் மக்களுக்கில்லை!
  • எம்பிக் குதித்த நரி அம்பலப்பட்டு ஓடியது
  • துப்பாக்கிகளைக் குவிக்கிறார்கள்! துருப்பிடிப்பதற்காக அல்ல!
  • ஒட்டிய வயிறுக்கு வட்டிலில் படைக்கும் தானம் தட்டிப்பறித்து விட்ட வாழ்வுக்கு தரும் சமாதானம்
  • நிகரகுவா: பிணந்தின்னிகளுடன் ஜீவமரணப் போராட்டம்
  • தமிழக மஞ்சள் பத்திரிக்கைகள்
  • இவர்களின் வாழ்வும் சாவும் விலை பேசப்படுகின்றன…..
  • மரணப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட அரசுத்துறை
  • மே நாள் சூளுரை!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



உனக்கான அரசியல் பேசு | “சிவப்பு அலை” புதிய பாடல்

உனக்கான அரசியல் பேசு
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் “சிவப்பு அலை” கலைக் குழுவின்
புதிய பாடல்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 30 ஏப்ரல், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 11 | 1986 ஏப்ரல் 16 – 30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரச பயங்கரவாதத்துக்கு அங்கீகாரம்!
  • சமரச சக்திகளை சுட்டெரிப்போம்
  • அந்நிய ஏஜெண்டுகளுக்கு அரசு மரியாதை
  • உங்களுடைய மளிகைச் சாமான்கள் பட்டியலில் திராவக பல்புகளும், இரும்புத் தடிகளும், கத்திகளும்…..
  • எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டுவோம்! இந்தியப் புரட்சியை சாதிப்போம்!
  • போலீஸ் கொலை வெறியாட்டம்
  • உயிர்குடிக்கும் மருந்துகளோ உழைப்பாளிக்கு அதிநவீன சிகிச்சைகளோ ஆட்சியாளர்களுக்கு
  • கலப்பு மணத்திற்குப் பரிசு மரணம்
  • உலக வங்கியின் எடுபிடிகளே பாசிச கும்பலின் பொருளாதார நிபுணர்கள்!
  • ’குந்தகை’ என்ற பட்டயம் வேண்டும் – ’சொந்தம்’ என்ற பட்டா வேண்டாம்!
  • ஏகாதிபத்தியக் கழுகின் சிறகொடியும்!
  • குழப்பம் தீர ஒரு விளக்கம்
  • இதுதான் இன்றைய இந்தியா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



உனக்கான அரசியல் பேசு | “சிவப்பு அலை” புதிய பாடல் | டீசர்

உனக்கான அரசியல் பேசு
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் “சிவப்பு அலை” கலைக் குழுவின்
புதிய பாடல் | டீசர்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 ஏப்ரல், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 10 | 1986 ஏப்ரல் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப்: நெருக்கடி முற்றுகிறது
  • தேசியத் தொழில்களுக்கு வேட்டு
  • பியர்லஸ்: மோசடியே மூலதனம்
  • பிழைப்புவாதமே போலிகளின் அரசியல்
  • இரசாயனப் போர்: குவிக்கப்படும் கொலைக்கருவிகள்
  • கடலூர் மோட்டார் தொழிலாளர்கள்மீது போலீஸ் ரௌடிகளின் வெறித் தாக்குதல்
  • சிறைச்சாலைகள்: குற்றவாளிகளுக்கு சொர்க்கம் புரட்சியாளர்களுக்கு நரகம்
  • வாரங்கல் மத்திய சிறையிலிருந்து ஒரு கடிதம்
  • அரசியலதிகாரத்தை வென்றெடுப்போம்! சாதிகளை வேரறுப்போம்!!
  • ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி
  • உயிரோடு உதிரத்தை உறிஞ்ச உருவான ஒரு திட்டம்
  • ஊழல் திமிங்கிலங்கள்
  • இதுதான் இன்றைய இந்தியா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 மார்ச், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 09 | 1986 மார்ச் 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்திய – இலங்கை பாசிச கும்பல்களின் புதிய சதி!
  • அமெரிக்காவின் புதிய உத்தி
  • கருப்பு வைரம் தோண்டுவோரின் கண்ணீர்க் கதை
  • துப்புரவுத் தொழிலாளர்கள் குமுறுகிறார்கள்
  • தெற்கு ஏமன்: ருஷ்ய சதுரங்கத்தின் பகடைக் காய்கள்
  • முஸ்லீம் விவாகரத்துச் சட்டம் – மதவெறியர்களிடம் ராஜீவ் சரண்
  • நிலமும் அதிகாரமும்!
  • பட்ஜெட்: வறியவர்களைச் சாகடிப்பது நடுத்தர மக்களை வறியவர்களாக்குவது
  • மார்க்சின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
  • தொட்டியம் துப்பாக்கிச் சூடு: சாதி வெறியர்களின் பதவி வெறி பலியானதோ அப்பாவி மக்கள்
  • இதுதான் இன்றைய இந்தியா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பார்ப்பனிய எதிர்ப்பு புரட்சி நடக்காமல் போனதற்கான காரணம் || அம்பேத்கர்

பார்ப்பனியத்தை எதிர்த்து ஏன் புரட்சி நடக்கவில்லை என்பது குறித்து அம்பேத்கர் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். குறிப்பாக, பார்ப்பனியத்தால் நிலைநிறுத்தப்பட்டுள்ள படிப்படியான சமத்துவமற்ற சாதிய – வர்ணாசிரம முறையானது பார்ப்பனர் அல்லாதோர் பார்ப்பனியத்தை எதிர்த்து ஒன்று சேரவிடாமல் எவ்வாறு தடுத்து வருகிறது என்பதை விளக்கியுள்ளார்.

இக்கட்டுரை ”பார்ப்பனியத்தின் வெற்றி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

பார்ப்பனியம் குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்குத் துணைபுரியும் என்பதால் வாசகர்களுக்கு இக்கட்டுரையை வழங்குகிறோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் இந்நூலைப் பெறலாம். இந்நூல் அலைகள் வெளியீட்டகம் மற்றும் நிமிர் பதிப்பகம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.

***

மத்துவம், சமத்துவமின்மை என்ற மொழியில் கூறினால், இதன் பொருள் பார்ப்பனன் எல்லோரிலும் உயர்ந்தவனாகிறான்; ஏனென்றால் அவன் யாருக்கும் அடிமையாக முடியாது என்பதோடு எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களையும் அவன் அடிமையாக வைத்துக் கொள்ளமுடியும். சூத்திரன் எல்லோரிலும் தாழ்ந்தவன் ஆகிறான்; ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம்; ஆனால் அவன் சூத்திரனைத் தவிர வேறு யாரையும் அடிமையாக வைத்துக் கொள்ள முடியாது. க்ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இடம், படிப்படியான சமத்துவமின்மையைப் புகுத்துகிறது. பார்ப்பனனை விடத் தாழ்ந்தவனான க்ஷத்திரியன், பார்ப்பனனுக்கு அடிமை ஆகலாம். அதே சமயம் அவன் வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் உயர்ந்தவனாக இருக்கிறான்; ஏனென்றால் அவன் அவர்களை அடிமைகளாக வைத்துக்கொள்ள முடியும். வைசியர்களும் சூத்திரர்களும் க்ஷத்திரியனைத் தங்கள் அடிமையாக வைத்துக்கொள்ள உரிமை இல்லை.

இதேபோல வைசியன், பார்ப்பனர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் தாழ்ந்தவனாக, அவர்களைத் தனது அடிமையாக வைத்துக்கொள்ள முடியாதவனாக இருந்தாலும், அவன் குறைந்த பட்சம் சூத்திரனுக்காவது தான் மேலானவனாக இருப்பதாகப் பெருமைப்படுகிறான். ஏனென்றால் அவன் சூத்திரனைத் தனது அடிமையாக்கிக் கொள்ள முடியும்; ஆனால் சூத்திரன், வைசியனைத் தனது அடிமையாக்கிக் கொள்ளமுடியாது.

இதுதான் பார்ப்பனியம்; மக்களின் ஊனுக்குள்ளும் எலும்புக்குள்ளும் ஊடுருவி நிற்குமாறு புகுத்தி வைத்த படிப்படியான சமத்துவமற்ற முறை அநியாயத்தைத் தூக்கியெறிய முடியாமல் சமூகத்தை முடக்கி வைப்பதற்கு இதைவிட மோசமாக வேறு எதையும் செய்திருக்க முடியாது. இதன் விளைவுகள் தெளிவாக அறியப்படவில்லை என்றாலும், இதன் காரணமாக இந்துக்கள் செயலிழந்து போய்விட்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சமூக அமைப்பு ஆய்வாளர்கள் சமத்துவத்துக்கும் சமத்துவமின்மைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் கவனிப்பதோடு நின்று விட்டார்கள். இந்த இரண்டும் தவிரப் படிப்படியான சமத்துவமின்மை என்ற ஒன்று இருப்பதை ஒருவரும் உணரவில்லை.

ஆயினும், சமத்துவமின்மையின் அபாயம் படிப்படியான சமத்துவமின்மையின் அபாயத்தில் பாதியளவு கூட இல்லை. சமத்துவமின்மைக்குள்ளேயே அதன் அழிவை ஏற்படுத்தும் வித்துக்களும் உள்ளன. சமத்துவமின்மை நீண்ட காலம் நீடிக்காது. முற்றிலும் சமத்துவமின்மை மட்டும் உள்ள நிலைமையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. அது பொதுவாக எல்லோரிடையிலும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இது புரட்சிக்கு வித்தாகிறது.

இரண்டாவதாக, சமத்துவமின்மையினால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு பொது எதிரியை எதிர்த்து, ஒரு பொதுவான தீமையை ஒழிக்கும் குறிக்கோளுடன் ஒன்றுசேருகிறார்கள். ஆனால், படிப்படியான சமத்துவமின்மையின் தன்மையும் அதனால் ஏற்படும் நிலைமைகளும் இந்த இரண்டில் எதுவும் நடக்க இடமில்லாமல் செய்கின்றன. படிப்படியான சமத்துவமின்மை முறை, அநியாயத்தை எதிர்த்த பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. எனவே அது புரட்சிக்கு மையமாக உருவாக முடியாது.

இரண்டாவதாக, இதனால் பாதிக்கப்படுபவர்களிடையேயும் சமத்துவமின்மை இருக்கிறது. இந்த முறையின் நன்மைகளையும் தீமைகளையும் பெறுவதில் அவர்களிடையே சமமான நிலை இல்லை. எனவே இந்த முறையின் அநியாயத்தை எதிர்த்து எல்லா வகுப்பினரும் பொதுவாக ஒன்று சேரும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. எடுத்துக்காட்டாக, திருமணம் பற்றிய பார்ப்பனியச் சட்டம் அநியாயம் நிறைந்ததாக உள்ளது. பார்ப்பனன் தனக்குக் கீழே உள்ள மூன்று வகுப்புகளிலிருந்தும் பெண் கொள்ள உரிமை அளித்து, அதே சமயம் அந்த வகுப்புகளுக்குப் பார்ப்பனப் பெண்ணைக் கொடுப்பதைத் தடை செய்யும் சட்டம் நியாயமற்றது.

ஆனால் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகிய மூன்று வகுப்பினரும் இதை ஒழிப்பதற்கு ஒன்று சேர மாட்டார்கள். க்ஷத்திரியன், பார்ப்பனனுக்கு இந்த உரிமை இருப்பது பற்றிக் குமுறுவான். ஆனால் அவன் வைசியனுடனும் சூத்திரனுடனும் சேரமாட்டான். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, பார்ப்பனன் மூன்று வகுப்புகளின் பெண்களை மணக்க உரிமை இருந்தால், தனக்கு இரண்டு வகுப்புகளின் பெண்களை மணக்க உரிமை இருப்பதற்கு அவன் திருப்தியடைகிறான். அவனுக்கு உள்ள பாதிப்பு மற்ற இரண்டு வகுப்புகளின் பாதிப்பு அளவுக்கு இல்லை. இரண்டாவதாக, திருமணம் பற்றிய இந்த அநியாய ஏற்பாட்டை எதிர்க்கும் பொதுவான புரட்சியில் அவன் சேர்ந்தால், ஒரு விதத்தில் அவன் பார்ப்பனனுக்குச் சமமான நிலைக்கு உயருவான்; ஆனால் மற்றொரு விதத்தில் எல்லா வகுப்புகளும் சமம் ஆகிவிடுவதால், வைசியனும் சூத்திரனும் க்ஷத்திரியனின் நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள்; அதாவது அவர்கள் க்ஷத்திரியயப் பெண்களை மணந்து கொள்வார்கள். இதன் பொருள் அவன் அந்த இரண்டு வகுப்புகளின் நிலைக்குக் கீழிறங்கி விடுவான் என்பதாகும்.

இதேபோல வேறு எந்த அநியாயத்தையும் எடுத்துக் கொண்டு, அதை எதிர்த்துப் பொதுவான புரட்சி நடப்பதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். இதே மாதிரியான சமூக மனப் போக்குக் காரணமாக அதை எதிர்த்துப் பொதுவான புரட்சி நடப்பது முடியாமல் போகிறது.

பார்ப்பனியத்துக்கும் அதன் அநியாயங்களுக்கும் எதிராகப் புரட்சி எதுவும் நடக்காமல் போனதற்கான காரணங்களில் படிப்படியான சமத்துவமின்மை முறை ஒன்றாகும். இந்தக் கொள்ளை முறையை மற்றவர்கள் ஆதரிக்கச் செய்வதற்காக அவர்களுக்குக் கொள்கையின் லாபத்தில் பங்கு கொடுக்கும் ஏற்பாடு இது. அநியாயத்தை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்கு மனிதன் கண்டுபிடித்திருக்கக் கூடிய மிகக் கேவலமான சூழ்ச்சிகள் நிறைந்த முறை இது. இது, அநியாயத்தை எல்லோரும் ஆதரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த அநியாயத்தின் ஆதாயத்தில் பங்கு பெற அழைப்பு விடுப்பதேயன்றிவேறல்ல.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 மார்ச், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 08 | 1986 மார்ச் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்து – முஸ்லீம் கலவரம்: கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறியும் பாசிச கும்பல்
  • பிலிப்பைன்ஸ்: தேர்தல் தில்லுமுல்லு – பாசிச மார்கோசுக்கு ருஷ்யா ஆதரவு புதிய அடிவருடிக்காக அமெரிக்கா தலையீடு
  • ஆந்திரா: சட்டப்பூர்வமாகும் பாசிசத் தாக்குதல்
  • நிலமும் அதிகாரமும்!
  • வங்கி மோசடிகள்: வேலியே பயிரை மேய்கிறது
  • எது பயங்கரவாதம்
  • வேலைவாய்ப்பு அலுவலகம்: அதிகார வர்க்க ஆணவம்
  • அமெரிக்காவின் அடாவடித்தனம் கடாபியின் கயவாளித்தனம்: லிபியா – அமெரிக்கா மோதல்
  • மின்சார வாரியம்: இருண்ட சக்திகளின் பிடியில்
  • இதுதான் இன்றைய இந்தியா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இருமுனைப் போராட்டம், இன்றைய தருணத்தின் கடமை

ண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை தி.மு.க. அரசு மூடிமறைப்பதற்கும் திசைத்திருப்புவதற்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இச்சம்பவம் தி.மு.க. அரசின் மக்கள்விரோதத் தன்மைக்கு ஒரு சான்று மட்டுமே. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதனைப் போல பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட முடியும்.

டிசம்பர் மாதத் தொடக்கத்தில், பெஞ்சல் புயலால் வடதமிழ்நாட்டின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது; மக்கள் தங்களது உடைமைகளை இழந்தனர். ஆனால், அரசும் அதிகாரிகளும் மிகவும் மெத்தனமாக செயல்பட்டனர். முன்னெச்சரிக்கை செய்யப்படாமல் சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது.

இதனால், பல ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல இயலாமலும் தங்களது உடைமைகளைப் பாதுகாக்க முடியாமலும் தவித்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.

மக்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்காததால் ஆத்திரமுற்ற மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் இறங்கினர்; பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி, காரைவிட்டுக் கீழே இறங்கி வராமல் காரில் இருந்தபடியே மக்களிடம் விசாரித்ததைக் கண்டித்து அவர் மீது சேற்றை வீசினர். இத்துடன், செங்கம் வட்டம் தண்டராம்பட்டு பகுதியில் 16 கோடி ரூபாய் செலவில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தரைமட்டமானது தி.மு.க. அரசின் ஊழலை அம்பலப்படுத்தியது.

ஆனால், பாதிக்கப்பட்டு உடைமை இழந்த மக்களுக்கு ரூ.2,000 என்ற அற்பத்தொகையை இழப்பீடாக வழங்கிவிட்டு மக்களை நிர்கதியாகக் கைவிட்டது தி.மு.க. அரசு.

தி.மு.க அரசானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்குவதை கைவிட்டு விட்டு, “நாங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம்” என பள்ளிக்கல்லூரி மாணவிகளை போராட வைத்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தது.

டிசம்பர் 8-ஆம் தேதி, மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் ஒன்றிய அரசு கொண்டுவர முயற்சிக்கும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க. அரசு. இதன்மூலம், டங்ஸ்டன் திட்டத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டது.

ஆனால், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஆய்வுகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. அத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதற்கெதிராக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இது, தி.மு.க. அரசுக்கும் தெரியும். அப்படியிருந்தும் மக்கள் போராட்டம் தீவிரமடையும் வரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக தி.மு.க. அரசு தி.மு.க. வாய்திறக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் எம்.பி.க்கள் இத்திட்டத்திற்கு தெரிவித்து எதுவும் பேசவில்லை. எதிர்ப்புத் இவையெல்லாம், தி.மு.க-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தின.

மேலும், சுற்றுச்சூழல் சீர்க்கேட்டின் மையமாக மாற்றப்பட்டிருக்கும் வடசென்னையின் எண்ணூர் பகுதியில் சீர்க்கேட்டை மேலும் அதிகரிக்கும் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்துக்கேட்புக் கூட்டத்தை டிசம்பர் 20-ஆம் தேதி தி.மு.க. அரசு நடத்தியது. இத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவளிப்பதாகக் காட்டுவதற்கு அனல்மின் நிலைய ஒப்பந்தகாரர்களும் அதிகாரிகளும் ஆட்களைத் திரட்டி கருத்துக்கேட்புக்கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றனர்.

குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு நீதிகேட்டு வேங்கைவயல் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இரண்டாண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கிறது தி.மு.க. அரசு.

இதற்கு அப்பகுதி மக்களும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போனாலும் தற்போதுவரை இத்திட்டத்தைக் கைவிடுவதாக தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.

இவை மட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு காலத்தில் இறந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு நான்காண்டுகளாக அரசு வேலை வழங்கப்படவில்லை; பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யும் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை; மருத்துவக் கழிவுகள் கேரளாவின் சட்டவிரோதமாக தமிழ்நாட்டின் எல்லையோர கிராமங்களில் கொட்டப்படுவதைத் தடுக்கவில்லை; கனிமவளக் கொள்ளை, இயற்கை சுற்றுச்சூழல் அழிப்புக்கெதிராக போராடுபவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்களும் தொடர்கின்றன; மோடியின் எஜமான் அதானிக்காக தமிழ்நாட்டை திறந்துவிடும் போக்கு தீவிரமாகிறது; கல்வித்துறை, சுகாதாரத்துறை போன்ற பல துறைகளில் மெல்ல மெல்ல கார்ப்பரேட் திட்டங்கள் புகுத்தப்படும் செய்திகள் இந்த மாதத்திலேயே பலமுறை வெளிவந்துள்ளன.

இப்பிரச்சினைகள் அனைத்தின் போதும், அமைச்சர்களும் இப்பிரச்சினையில் தொடர்புடைய அதிகாரிகளும் திமிரடியாக பதிலளிக்கும் போக்கும் பிரச்சினையை திட்டமிட்டு திசைதிருப்பும் போக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றது.

இவையெல்லாம், தி.மு.க. அரசின் ஆட்சியின் அவலங்களையும் அதன் செயலின்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. ஒருபக்கம் கார்ப்பரேட் திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது அதற்கெதிராக போராடும் மக்களை ஒடுக்குவது; இன்னொரு பக்கம், அரசு அதிகார வர்க்கத்தின் இலஞ்ச ஊழல், முறைகேடுகளால், நிர்வாகம் செயலிழந்து போயிருப்பது; அமைச்சர்களின் அதிகாரத்துவப் போக்குகள் மக்களின் கண்டனத்திற்குள்ளாவது போன்றவை தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

பாசிச பா.ஜ.க-வையும் அடிமை அ.தி.மு.க- வையும் நிராகரித்த தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க-விற்கு வாக்களித்துள்ளனர்; பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற ஜனநாயக சக்திகள் தி.மு.க. அரசுக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஆனால், தி.மு.க-வோ அதன் கார்ப்பரேட் வர்க்கப் பாசத்தையும், மக்கள் விரோத அணுகுமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சரியான கூட்டணி அமைந்துவிட்டால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் எனக் கனவு காண்கிறது.

தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைப் பயன்படுத்தி பாசிச பா.ஜ.க., அடிமை அ.தி.மு.க., பினாமி விஜயின் த.வெ.க. போன்ற கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இந்தப் போக்கானது, தமிழ்நாட்டில் மீண்டும் பா.ஜ.க- வின் அடிமை ஆட்சி அமைவதற்கே வழிவகுக்கும்.

எனவே, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

ஆம், பாசிச சக்திகளையும் அதன் பினாமி கூட்டத்தையும் விரட்டியடிப்பது, பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கு துரோகமிழைக்கும் எதிர்க்கட்சிகளை அம்பலப்படுத்துவது என்ற இருமுனைப் போராட்டமின்றி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது.


தங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram