Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 23

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 அக்டோபர், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 23 | 1986 அக்டோபர் 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: துரோகத் தலைமை வீழ்க! தொழிலாளர் போராட்டம் வெல்க!
  • தஞ்சை தனியார் பஸ் தொழிலாளர் போராட்டம்
  • கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்தார்கள்! பற்றிக் கொள்கிறதே என்று பதறுகிறார்கள்!
  • ஆபாச அரசியல் கோமாளிகள்
  • அவதிப்படுகிறார்கள் தொழிலாளர்கள்
    லஞ்சத்தில் மிதக்கிறார்கள் அதிகாரிகள்
    வீழ்த்தப்பட வேண்டியது அரசு!
  • ஜனதா எம்.எல்.ஏ-வின் ரவுடித்தனம்
  • யாருக்காக ஒன்றிணைந்தார்கள்?
  • அரசே நடத்தும் லாட்டரி சூதாட்டம்
  • இதுவா பத்திரிக்கைச் சுதந்திரம்?
  • நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்…
  • அணு உலை அபாயம்!
  • அதிகாரிகள் தான் ஆளுகிறார்கள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 அக்டோபர், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 22 | 1986 அக்டோபர் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கழுதைக்குப் பதிலாக ஓநாய்கள்!
  • அரசியல் அலிகளுக்கு அடாவடித்தனமே மூலதனம்
  • நரியிடம் நாட்டாண்மை கொடுத்தால்…
  • பாசிஸ்ட்டுக்குப் பாடம் சொல்லும் பாசு
  • திருச்சி டி எஸ் டி பஸ் தொழிலாளர்களின் போராட்டம்
  • நீதியான யுத்தம் நிச்சயம் வெல்லும்!
  • கொத்தடிமைக் கூடாரம்
  • வதையின் கதை
  • ஆசிய விளையாட்டு சியோல் 1986: இராணுவ கும்பலின் விபரீத விளையாட்டு
  • காவிரி நீர்: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
  • வறுமையை ஒழிக்க வாய்ப்பந்தல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 30 செப்டம்பர், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 21 | 1986 செப்டம்பர் 16 – 30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?
  • போலீஸ் அதிகாரிகள் எஸ்டேட்டு முதலாளிகள் காட்டுமிராண்டித்தனம்
  • பன்னாட்டு முதலாளிகளுக்குப் பாய்விரிப்பு
  • நெய்குப்பை: மீண்டும் ஒரு வெண்மணி!
  • இந்திவெறியர்களின் திமிர்
  • மாண்புமிகு மக்கள் விரோதிகள்!
  • அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்த ஓர் அற்பப் புழு!
  • மில்முதலாளியா? மனிதமிருகமா?
  • கும்பி கூழுக்கு அழுகுது கொண்டை பூகேக்குதா?
  • கட்டாயமாக்கினால் கழுதையும் மதிக்காது!
  • பிழைப்புவாத தொழிற்சங்கங்களின் துரோகத்திற்கு எதிராக….
  • மக்கள் துரோக அரசு – அது மக்களை எவ்வாறு கவனிக்கும்?
  • தினவெடுத்துத் திரிகிறார்கள் திரிபுவாதிகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 செப்டம்பர், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 20 | 1986 செப்டம்பர் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இன்னும் இரண்டு பாசிச சட்டங்கள்!
  • புதிய 20 அம்சத் திட்டம்: புதிய மொந்தையில் பழைய கள்ளு!
  • கிழக்கு திமோர்: இனவெறியர்களுக்கு எதிரான உரிமைப் போர்
  • பாலைவன கங்கையல்ல, ஊழல் சமுத்திரம்!
  • வாதாடி பெறுவதல்ல போராடி பெறுவது உரிமை
  • பெரிய மனிதர்கள் ‘போர்ஜரி’ பேர் வழிகள்!
  • இதிலே இவர்களுக்கு என்ன கிடைத்துவிடும்? இப்படியும் பிழைக்க முடியுமா?
  • விமரிசனமும் விளக்கமும்
  • ஏய்க்கிறார்கள் ஏமாந்துவிடாதீர்கள்!
  • காவிரி நீர்: தமிழக உரிமைக்கான மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்
  • கண்பறிக்கும் கயவர்கள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 ஆகஸ்ட், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 19 | 1986 ஆகஸ்ட் 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தேசிய வெறியூட்டுவது தேசபக்தியல்ல; தேசத்துரோகம்!
  • காமன்வெல்த் மாநாடு: ஏகாதிபத்தியவாதியின் பிடிவாதமும் எடுபிடிகளின் சரணாகதியும்
  • காவிரி நீரில் தமிழக உரிமையை நிலைநாட்டப் போராடுவோம்!
  • அவதூறும் அடக்குமுறையுமே போலிகளின் அரசியல்!
  • டி.வி.எஸ் நிர்வாகத்தின் அடாவடித்தனம்
  • ஓட்டுக் கட்சிகள் மாற்றுத் தீர்வல்ல! (சென்ற இதழின் தொடர்ச்சி)
  • பாய்லர் ஆலையில் பரிதவிக்கும் தொழிலாளர்கள்!
  • மேலை நாடுகளில் வளம் கொழிக்கவில்லை வறுமை தாண்டவமாடுகிறது
  • இந்தித் திணிப்பு: புதிய கூலிப்பிரச்சாரகர்கள்!
  • இதுதான் இன்றைய இந்தியா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து அம்மாநில கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தீர்ப்பில் இவ்வழக்கை அரிதினும் அரிதான வழக்காகக் கொள்ள முடியாது என்றும் இவ்விவகாரத்தில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி என்றும் நீதிமன்றம் தெரிவித்திருப்பது மருத்துவ மாணவர்கள், கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு குரல் கொடுத்து வந்த ஜனநாயக சக்திகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனையடுத்து இத்தீர்ப்பை ஏற்க மறுத்தும் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும் கொல்கத்தா மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைக் கண்டு அதிர்ந்துபோன மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் சி.பி.ஐ. கூட்டு, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தூக்குத் தண்டனை வாங்கித் தரப் போவதாகச் சவடால் அடிக்கிறது. அதாவது இக்குற்றத்தில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி என்பதை நிறுவுவதற்கான அடுத்தகட்ட முயற்சியில் இறங்க உள்ளது.

ஆனால், மருத்துவ மாணவியின் மரணம் என்பது ஒரு  தனிப்பட்ட பெண் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் மருத்துவக் கட்டமைப்பு கிரிமினல்மயமானது இக்கொலைக்கான முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், இவை குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை. குற்றத்தை மூடிமறைக்கும் நோக்கிலேயே மேற்குவங்க அரசும் பா.ஜ.க. கும்பலும் செயல்பட்டு வருகின்றன. இத்தீர்ப்பும் அதற்குச் சாதகமாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவ மாணவியின் மரணத்திற்குக் காரணம் மருத்துவ கட்டமைப்பு கிரிமினல்மயமாகி இருப்பதும் அரசும்தான் என்பதை நிறுவும் விதமாக 2024 செப்டம்பர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!” என்ற கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்.

***

2012-ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை பொதுசமூகத்தில் ஏற்படுத்தியது. தற்போது, கொல்கத்தா பாலியல் வன்கொலை சம்பவத்திற்கு பிறகு பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் அதிக கவனம்பெற தொடங்கியுள்ளன. ஆனால், கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளின் கோரத்தை மட்டுமின்றி மருத்துவத்துறை கிரிமினல்மயமாகியுள்ளதையும் ஆளும் அரசுகள் அதற்கு பக்கபலமாக இருப்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மம்தா அரசு

ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் அக்கல்லூரியின் கருத்தரங்க அறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கண், வாய், வயிறு, கழுத்து, இடது கால், வலது கை, பிறப்புறுப்பு போன்ற அனைத்து உடலுறுப்புகளிலும் ரத்தம் கசிந்திருந்த நிலையில் மாணவியின் உடலில் காயங்கள் இல்லாத பாகமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிருகத்தனமாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டிருந்தார். அவரது இடுப்பு எலும்புகளும் கழுத்து எலும்பும் உடைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இதனையடுத்து, மாணவியை வல்லுறவு செய்த சஞ்சய் ராய் என்பவனை போலீசு கைது செய்துள்ளது.

மாணவிக்கு இழைக்கப்பட்ட இக்கொடூரத்திற்கு நீதிகேட்டும் மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்புக் கோரியும் அக்கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் முன்னெடுத்த போராட்டம் இந்தியா முழுவதும் பற்றிப் பரவியது. ஒரு மாதத்திற்கும் மேலாக கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இவ்வழக்கை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், “முதலில் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். நீங்கள் பணிக்கு திரும்பிய பிறகு, அதிகாரிகள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என நயவஞ்சகமாக நாடகமாடி மருத்துவக் கட்டமைப்புக்கு எதிரான மருத்துவர்களின் இப்போராட்டதைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

அதேபோல், மருத்துவ மாணவி கொலை சம்பவம் நடைபெற்றதிலிருந்தே மேற்குவங்கத்தின் மம்தா அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதமாகவே செயல்பட்டு வருகிறது. இக்கொலைக் குறித்து 9-ஆம் தேதியன்று காலை 10.10 மணியளவில் போலீசு குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது; ஆனால் இரவு 11.45 மணிக்குத்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சந்தேக மரணம் என்று போலீசு பதிவு செய்வதற்கு முன்பாகவே கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டது; மாணவி கொல்லப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் இக்கொலைக் குறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை; இவ்வாறு அடிப்படையான சட்ட வழிமுறைகள்கூட இவ்விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. இவற்றிலிருந்தே கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு அம்மாநில அரசு முயற்சிப்பது நிரூபணமாகிறது.

அதேபோல், மாணவியின் கொடூரமான கொலையை ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷும் மருத்துவமனை நிர்வாகமும் முதலில் தற்கொலை என்றே சித்தரிக்க முயன்றனர். மாணவியின் பெற்றோரிடமும் அவ்வாறே தெரிவிக்கப்பட்டது. சக மருத்துவர்களின் எதிர்ப்பு தீவிரமடைந்ததால் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்தாலும் நான்கு மணி நேரத்திலேயே அவர் தேசிய மருத்துவக் கல்லூரியின் மருத்துவராக நியமிக்கப்பட்டதும் அவரை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே.

அதுமட்டுமின்றி, கடந்த ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற இரவுப் போராட்டத்தின் போது, தடயங்களை அழிக்கும் விதமாக குண்டர்களால் மருத்துவமனை சூறையாடப்பட்டுள்ளது. இத்தாக்குதலை மம்தா கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் நடத்தியிருப்பார்கள் என்று பா.ஜ.க-வினரும், பா.ஜ.க. குண்டர்கள் நடத்தியிருப்பார்கள் என்று திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இவ்விரு கட்சியைச் சேர்ந்த குண்டர்களே மருத்துவமனையை சூறையாடியிருக்கலாம்.

மேலும், இக்கொலையால் பெண்கள் மத்தியில் மம்தாவிற்கான செல்வாக்கும் குறைந்திருக்கிறது, எதிர்க்கட்சிகள் இவ்விகாரத்தைக் கையிலெடுத்திருப்பதால் மம்தா அரசிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, தனது கையில் படிந்துள்ள ரத்தக்கறையை மறைப்பதற்காக பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட பேரணியில் மம்தா கலந்துக்கொண்டார்.

மேலும், திரிணாமுல் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாளில் பேசிய மம்தா, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனைக் கொடுப்பதற்கேற்ப சட்டம் நிறைவேற்றுவதற்கு சிறப்புக்கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம், மம்தா பெண்கள் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார் என்று நாம் கருதினால் அது உண்மையில்லை. அவசர அவசரமாக ‘விசாரித்து’ தூக்குத்தண்டனை கொடுப்பது குற்றத்தின் பூதாகரமான பல உண்மைகளை மறைத்து உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கே உதவும் என்பதையும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் விசாரணை நடப்பதால்தான் குறைந்தபட்ச உண்மைகளாவது வெளிச்சத்திற்கு வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு பாலியல் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக மம்தா அரசு இவ்வளவு தீவிரமாக செயல்படுகிறதா? என்றால் அங்குதான் நாம் விவாதிக்க வேண்டிய விவகாரமே உள்ளது. மருத்துவ மாணவியின் மரணத்தை சஞ்சய் ராய் என்ற தனிநபர் தொடுத்த பாலியல் வன்முறையாகவே மேற்குவங்க அரசும் ஊடகங்களும் சித்தரிக்க முயற்சிக்கின்றன. ஆனால், உண்மையில் கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.

மருத்துவக் கட்டமைப்பின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராகப் போராடிய மாணவி

மாணவி கொலைச் செய்யப்பட்ட ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெறும் சட்டவிரோத கிரிமினல் குற்றங்கள் குறித்தும் இம்மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்தும் அம்மாநில அரசிடம் 2023-ஆம் ஆண்டிலிருந்தே பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளரான அக்தர் அலி, “ஆர்.ஜி.கர்.மருத்துவமனையில் உரிமைகோரப்படாத மற்றும் அடையாளம் தெரியாத சடலங்களை கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் விற்பனை செய்து வந்தார். அத்துடன் மருத்துவக் கழிவுகளை வங்கதேசத்துக்கு கடத்தும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இது தொடர்பான விசாரணைக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இந்த விசாரணைக்குழுவில் சந்தீப் கோஷ் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனாலும் சந்தீப் கோஷ் மீது மேற்குவங்க அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. மாறாக, இந்த அறிக்கையை சமர்ப்பித்த நாளிலேயே நான் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சந்தீப் கோஷுக்கு 20 சதவிகித கமிஷன் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒன்றாக இருந்தது” என்று கிரிமினல் சந்தீப் கோஷ் மற்றும் மேற்குவங்க அரசின் முகத்திரையை கிழித்துள்ளார்.

மேலும், சந்தீப் கோஷ் சில முன்னாள் மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களைக் கொண்டு சட்டவிரோத பாலியல் மற்றும் போதைப்பொருள் வியாபாரமும் செய்து வந்தார் என்றும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்து வந்தார் என்றும் இதற்காக பல மருந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி பணியிட மாறுதலுக்காக ரூ.20-30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாகவும், அப்பணத்தை அம்மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் சிலர் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி இந்த சட்டவிரோத கிரிமினல் குற்றங்களுக்கு எதிராகப் போராடியிருக்கிறார். அதனால் அவரது மருத்துவப் படிப்பிற்குரிய ஆய்விற்கு ஒப்புதல் வழங்கவில்லை; இரவு நேர பணியே ஒதுக்கப்பட்டது; அவரைப் பழிவாங்குவதற்காகவே தொடர்ச்சியாக 36 மணி நேர பணி தரப்பட்டதாக அவருடன் பணியாற்றும் சக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் “சம்பவத்தின் போது கருத்தரங்கு அரங்கில் மருத்துவ மாணவி தனியாக இருப்பது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராய்க்கு எப்படித் தெரியும்” என்றும் மருத்துவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மருத்துவர்களின் கூற்றை நிரூபிக்கும் விதமாக மாணவியின் பெற்றோரும், “தங்கள் மகள் தனது துறையில் ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கலாம்” என்று கூறியுள்ளனர். மேலும், தனது மகள் கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு வரை மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, மருத்துவ மாணவியின் மரணம் என்பது மருத்துவக் கட்டமைப்பின் கிரிமினல் குற்றங்களைத் திட்டமிட்டு மூடிமறைப்பதற்காக நடத்தப்பட்ட படுகொலையாகும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளை நரவேட்டையாடியது அம்மாநில பா.ஜ.க. அரசு. இதற்கு எதிராக தனது சொந்த செலவில் ஆக்சிஜன் உருளைகளை வாங்கி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றப் போராடியதோடு, ஆக்சிஜன் உருளைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தியும் வந்தார் அம்மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் கபீல்கான். இதற்காக கபில்கான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பல்வேறு காரணங்களைக் கூறி அவரை விடுதலை செய்ய மறுத்தது உ.பி. அரசு. பல்வேறு மக்கள் – சட்டப்போராட்டங்களுக்குப் பிறகே கபில்கான் விடுதலையானார். உ.பி.யில் மருத்துவக் கட்டமைப்பின் கிரிமினல்மயத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கபீல்கான் சிறை வைக்கப்பட்டார் என்றால் மேற்குவங்கத்தில் மருத்துவமனை கிரிமினல் குற்றங்களை எதிர்த்ததற்காக பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும், பெண் என்பதால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

சி.பி.ஐ. வழக்கு விசாரணையும் அதன் திசைவழியும்

கடந்த 13-ஆம் தேதியன்று இவ்வழக்கு விசாரணையை மாநிலக் போலீசுதுறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது அம்மாநில உயர்நீதிமன்றம். சி.பி.ஐ. இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப் பதிவுசெய்து, அவரது தொடர்புடைய வீடுகளில் சோதனையும் நடத்தி வருகிறது. இக்கொலைக் குற்றவாளியென மேற்குவங்க போலீசுதுறையால் கைதுசெய்யப்பட்ட ஊர்க் காவல்படையை ஒத்த போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் மற்றும் கொலை செய்யப்பட்ட மருத்துவருடன் இரவு உணவருந்திய 4 மருத்துவர்களென 5 பேரிடம் உண்மையறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஊழல் சோதனை, உண்மையறியும் சோதனை என சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறுவதுபோல் ஒருபுறம் காட்டப்படுகிறது. மற்றொருபுறம் சஞ்சய்ராய் மட்டும்தான் குற்றவாளியென சித்தரிப்பதற்காக அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய சி.சி.டி.வி. காட்சிகள், மற்றும் அவன் பயன்படுத்திய “ஹெட்போன்” ஆகியவற்றை ஆதாரமாக சி.பி.ஐ. வெளியிட்டிருக்கிறது. உண்மையறியும் சோதனையில் சஞ்சய் ராய் கூறியவை ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. இதிலிருந்து சஞ்சய் ராய் ஆபாச காணொளிகளை அதிகம் பார்ப்பவன், விபச்சாரப் பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய பழக்கமுடையவன் என்பவையெல்லாம் வெளியாகியிருக்கிறது.

இதன்மூலம், மாணவி மரணம் பாலியல் வன்கொலைதான் என்ற கருத்தைப் பொது சமூகத்தில் கட்டமைக்க சி.பி.ஐ. முயல்கிறது. ஆனால் அதே வேளையில், உண்மையறியும் சோதனையில் மற்ற மருத்துவர்கள் என்ன கூறினார்கள் என்பதையெல்லாம் வெளியிடப்படாதது கவனிக்கத்தக்கது.

கொல்லப்பட்ட மருத்துவரின் உடற்கூராய்வு அறிக்கையில், அம்மருத்துவரின் கைநகங்களில் ரத்தக் கறைகள் இருப்பது, பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயங்கள், உதடு, கன்னம் உள்ளிட்டு உட்புறம் மற்றும் வெளிப்புறமாக 25 காயங்கள் இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டு மருத்துவர் சுபர்னா கோஸ்வாமி இது ஒரு கூட்டுப் பாலியல் கொலை என்று கூறியிருக்கிறார். ஆனால், மம்தா அரசும், சி.பி.ஐ-யும் தற்போதுவரை இது கூட்டுபாலியல் வன்கொலை இல்லை என சாதித்து வருகின்றன. சஞ்சய்ராயின் பாலியல் இச்சைக்காக இக்கொலை நடந்துள்ளதாகவே வழக்கை நகர்த்துகிறது சி.பி.ஐ.

கிரிமினல்மயமாகியிருக்கும் மருத்துவத்துறை

மருத்துவக் கழிவு கடத்தல், அடையாளம் தெரியாத மற்றும் உரிமைக் கோரப்படாத சடலங்கள் விற்பனை, போதைப்பொருள் மற்றும் பாலியல் வியாபாரம் போன்ற கிரிமினல் குற்றங்கள் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் மட்டும் நடைபெறவில்லை. இத்தகைய கிரிமினல் குற்றங்கள் நாடுமுழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில், கேரள மாநிலத்தில் லேக் ஷோர் மருத்துவமனையில் உடல் உறுப்பு விற்பனை நடைபெறுவதும், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை செய்வதும், குஜராத்தில் வாடகைத் தாய் முறை நடைபெறுவதும் ஊடகங்களில் வெளியாகி நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதற்காக, கடன்வலையில் சிக்கியவர்களையும், வறுமையில் வாடுபவர்களையும் மூளைச்சலவை செய்வது, கடத்தல், கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுவது என பெரிய மாஃபியா வலைப்பின்னலே செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், வளரும் மற்றும் பின் தங்கிய நாட்டு மக்களை தங்களின் மருத்துவச் சோதனைச் சாலைக்கான எலிகளாகப் பயன்படுத்துகின்றனர். உள்முரண்பாடுகளாலும் தீவிரப் பாதிப்புகள் ஏற்படும் போதும் மட்டுமே இக்குற்றங்கள் பொதுச் சமூகத்திற்கு தெரியவருகிறது என்பதுதான் மிகப்பெரும் கொடூரம்.

இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது இந்திய அரசு அமல்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கையாகும். இக்கொள்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து “மருத்துவ சுற்றுலா” என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கான மருத்துவச் சந்தையாக இந்தியா மாறியிருக்கிறது. அதற்கேற்ப அரசுக் கட்டுமானத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவத்துறை போன்ற சேவைத்துறைகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆணையங்கள், சமூகப் பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் கும்பலிடம் தாரைவார்க்கப்படுகிறது. இதனால், சேவைத்துறைகள் அனைத்தும் வியாபாரமாகியுள்ளதோடு, மக்களைக் கொள்ளையடிக்கும் துறையாக மாறிவருகிறது. இதற்கேற்ப அரசின் அனைத்துக் கட்டுமானங்களும், துறைகளும் கிரிமினல்மயமாகியுள்ளது. ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள்- உள்ளூர் கார்ப்பரேட் முதலாளிகள் – அரசு அதிகாரிகள் – அரசியல்வாதிகள் – உள்ளூர் கிரிமினல்கள் என மருத்துவத்துறையில் ஒரு கிரிமினல் கூட்டு உருவாகியிருக்கிறது. இதுவே, இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது.

மேற்குவங்கத்தில் 2005-ஆம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளை நிர்வகிப்பதற்காக ரோகி கல்யாண் சமிதி என்ற நோயாளிகள் நலக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், என்.ஜி.ஓ-க்கள், அரசு அதிகாரிகள் இருப்பர் என்றும் இக்குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் மருத்துவமனையின் சீரான செயல்பாடு மற்றும் சிறந்த தேவைக்கான நிதி ஆதாரங்களை உருவாக்கிக் கொள்ளவும், பயன்படுத்தவும், பரிந்துரைக்கவும் சுதந்திரம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு மருத்துவத்தை வழங்க வேண்டிய அரசு, தன்னுடைய கடமையை கைகழுவுவதோடு, கிரிமினல் கும்பல்களின் பிடியில் மக்களை சிக்கவைக்கிறது.

இத்திட்டத்தின் மூலம், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. கொலைக்குற்றம் நடைபெற்ற ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குரிய ரோகி கல்யாண் சமிதி உறுப்பினரான திரிணாமுல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென், பயிற்சி மருத்துவரின் கொலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கள்ளச்சாராயம் காய்ச்சுவதுகூட உள்ளூர் அரசு அதிகாரிகள்-போலீசு-அரசியல் கட்சிகளின் உதவியின்றி செய்ய முடியாது எனும் போது, போதைப்பொருள் வியாபாரம், பாலியல் முறைகேடு, ஒப்பந்தங்களில் கமிஷன் பார்ப்பது, வங்கதேசத்துடனான மருத்துக்கழிவு விற்பனை போன்ற சமூகவிரோதக் குற்றங்களை அதிகார வர்க்கம்-மாநில-ஒன்றிய அரசியல் கட்சிகளின் துணையில்லாமல் நடத்துவது சாத்தியமற்றது. குறிப்பாக, அம்மாநிலத்தின் உள்துறையும் சுகாதாரத்துறையும் அம்மாநில முதல்வரான மம்தாவின் கையில்தான் இருக்கிறது. எனவே, இக்கொலை வழக்கைத் துருவினால் பல கிரிமினல் குற்றங்களும் பல பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகும் என்பதாலேயே இம்மருத்துவரின் கொலையைத் தற்கொலையாக முடிவுக்குக் கொண்டுவர எத்தணிக்கிறது மேற்குவங்கக் போலீசுதுறையும் மம்தா அரசும்.

எனவே பயிற்சி மருத்துவரின் கொலைக்கு கார்ப்பரேட்மயமாக்கமும், கிரிமினல்மயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்புமே முதன்மைக் குற்றவாளியாகும். கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் வெறும் அம்பு மட்டுமே.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஆகஸ்ட், 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 18 | 1986 ஆகஸ்ட் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எதிர்கொண்டிருக்கும் சவால் பஞ்சாப் பிரச்சினை மட்டுமல்ல!
  • டி.வி.எஸ். நிறுவனத்தின் குள்ளநரித்தனம்
  • விபத்து அல்ல படுகொலை!
  • நான்காவது சம்பளக் கமிஷன் அறிக்கை: அதிகார வர்க்கத்திற்கு பெரும் சலுகை, அடிமட்ட ஊழியர்களுக்கு பட்டைநாமம்!
  • இஸ்ரேல்: மதவெறியர்களின் காலடியில்..
  • பயணிகள் நெரிசலில் திணறுகிறார்கள்! அதிகாரிகள் ஊழலில் திளைக்கிறார்கள்!
  • மதம் ஒரு அபினியே இருப்பினும் மதம் மாறும் உரிமை ஒரு ஜனநாயக உரிமையே! (சென்ற இதழ் தொடர்ச்சி)
  • போலீசு அட்டூழியம்
  • ஓட்டுக் கட்சிகள் மாற்றுத் தீர்வல்ல!
  • கத்தியின்றி ரத்தமின்றி வெட்கமின்றி..!
  • காட்டிலாகா அதிகாரிகளின் காட்டுதர்பார்
  • விமர்சனமும் விளக்கமும்: மார்க்சியம் புறக்கணிக்கப்படுகிறதா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 101-ஆம் ஆண்டு நினைவு தினம்!

ரசிய சோசலிச புரட்சியை நிகழ்த்திக் காட்டிய ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவர், தோழர் லெனின். பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 101-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (ஜனவரி 21), அவரை நினைவுகூரும் வகையில் ஜனவரி 2024 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்து, ஜனவரி 19 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 100-ஆம் ஆண்டு நினைவு தினம்!

1924 ஜனவரி 21 அன்று, அந்த செய்தியைக் கேட்ட பிறகு உலகப் பாட்டாளி வர்க்கம் உறைந்துதான் போனது. வார்த்தைகள் இல்லை; கண்களில் நீர் தாரைதாரையாய் வழிந்தது. உலகப் பாட்டாளி வர்க்கம் தன் தலைவனின், ஆசானின் ஈடு செய்ய முடியாத இழப்பை எண்ணி வருந்தியது.

இந்த ஆண்டு, நாடு கடந்து உலகப் பாட்டாளி வர்க்கத்தால் நேசிக்கப்பட்ட, 1917-இல் ரசிய சோசலிசப் புரட்சியை நிகழ்த்தி, அழுக்கு சட்டைகளின் அதிகாரத்தை நிலைநிறுத்திய தோழர் லெனினின் 100-ஆம் ஆண்டு நினைவுதினம்.

தோழர் லெனின் நோயுற்றிருந்த தருணத்தில் தோழர் ஸ்டாலின் அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “தோழர் லெனினைப் பார்த்தவுடன் நமது மனதில் பட்டுத் தெறிக்கும் விசயம், செய்திகளை அறிவதற்கான அவரது தணியாத தாகம்; கடமையாற்றுவதற்கான அடங்காத – அடக்கவே முடியாத அவரது துடிப்பு; இவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர் ஏதோ பட்டினி போடப்பட்டவர் போல காணப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது”.

“எல்லா உழைப்பாளர்களின்பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது” என்று “லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்பீன்ஸ்கி.

“லெனின் மனிதக்குலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத்திறன் காரணமாகவே அவரால் காண முடிகிறது என்று எனக்குத் தென்பட்டது” எனக் கூறுகிறார் போல்ஷ்விக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அலெக்சாந்தரா கொலந்தாய். ரத்தக்களறியும் குழப்பமும் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் லெனினது அச்சமற்ற உறுதியைக் கண்டு வியக்கிறார் கொலந்தாய். ஆம், அவரது அசாதாரண சிந்தனைத்திறன் என்பது மார்க்சியத்தைத் தொடர்ச்சியாக இடைவிடாமல் நடைமுறையில் இருந்து கற்றுக்கொண்டிருந்ததோடு தொடர்புடையது.


படிக்க: பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்


லெனின் ஒரு புரட்சியாளர் என்பதற்காக மட்டும் நாம் அவரை நினைவுகூரவில்லை, பாட்டாளி வர்க்கத்திற்காக மண்ணில் ஒரு சொர்க்கமான சோசலிச ரஷ்யாவிற்கு அடித்தளமிட்டவர்; பாட்டாளி வர்க்க அரசு வந்தவுடன் பெண்களின் கைகளிலிருந்து கரண்டிகளையும், துணிகளையும், பாத்திரங்களையும் பிடுங்கி எறிந்துவிட்டு அவர்களது கைகளில் புத்தகங்களையும், டிராக்டர்களையும் கொடுத்து, உழைப்பு சுரண்டலிலிருந்து விடுவித்த பெண்ணியவாதி; ரஷ்ய நாட்டை மின்மயமாக்கியவர்; பொது சுகாதாரக் கட்டமைப்பு, பொது ரேசன், மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி, தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் என உலகப் பாட்டாளி மக்கள் குறைந்தபட்சமாவது பெற்றிருக்கிறோம் என்றால் அதன் அடிநாதம்தான் தோழர் லெனின்.

லெனினது நினைவுகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன, நூற்றாண்டு கடந்தும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான விடை தோழர் லெனின்.

அம்பானி-அதானி கும்பலுக்கான மோடி-அமித்ஷாவின் பாசிச பேயாட்சியில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்படுகிறது; உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கப்படுகிறது; காவிகளின் சாதி-மதக் கலவரங்களால் உழைக்கும் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்; போலி ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்படுகின்றன; பெண் என்பவள் அடிமை என்கிற பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராகவும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு தடையாகவும் இருப்பதால் பெண்களுக்கான மாதவிடாய்கால விடுப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய கொடூர சூழலில் உழலும் இந்திய உழைக்கும் மக்களாகிய நமக்கு அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைத்தளையிலிருந்து விடுபடவும், பாசிச அபாயத்தை முறியடிக்கவும் தோழர் லெனின் தேவைப்படுகிறார்.

1914, முதல் உலகப்போர் காலகட்டத்தில் காவுத்ஸ்கி தலைமையிலான இரண்டாம் அகிலத் தலைவர்கள் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி புரட்சியை நீர்த்துப் போகச் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர்; புரட்சியெல்லாம் தேவையில்லை, முதலாளித்துவத்தின் கீழேயே மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று முதலாளித்துவ அடிமைத்தனத்தைப் பரப்பிக் கொண்டிருந்தனர், சந்தர்ப்பவாதப் புதைசேற்றில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தனர்; இன்னொரு பக்கம் ரசியாவில் மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய பிளக்கானவ் உள்ளிட்டோர் ஏகாதிபத்திய போர்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் புரட்சியை நடத்துவது பற்றிய பார்வையின்றி தேசவெறியில் மூழ்கினர்.

அந்தப் பிற்போக்கான சூழலில்தான், முதலாளித்துவத்தை ஆய்வு செய்து, “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சககட்டம்” என்ற நூலின் மூலம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்திருக்கிறது என்று உலகிற்கு அறிவித்தார் லெனின். ஏகாதிபத்தியமாய் வளர்ந்த முதலாளித்துவத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்கப் புரட்சிதான் தீர்வு என்று அதற்கான புரட்சிகர நடைமுறையையும், புதிய பாணியிலான போல்ஷ்விக்மயமான கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டியமைத்தார். ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி என்பது காலனிய நாடுகளின் விடுதலை எழுச்சியுடன் தொடர்புடையது என்று ஆசான் மார்க்சின் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கத்துடன் “ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை இணைத்து மார்க்சியத்தை லெனினியமாக வளர்த்தெடுத்தார்.

ரஷ்ய சோசலிசப் புரட்சி மூலம் உள்நாட்டு-வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களை ஒருசேர வீழ்த்தி, காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஒளியூட்டினார். அந்த ஒளியில்தான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் உண்மையான விடுதலையை அடைந்தனர்.

மேலும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஊடாகத்தான் உண்மையான தேசிய இன விடுதலையைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கோட்பாட்டு ரீதியாகவும், பல்வேறு தேசிய இனங்கள் விருப்பப்பூர்வமாக ஒருங்கிணைந்திருந்த சோவியத் யூனியனை உருவாக்கி நடைமுறை ரீதியாகவும் வழிகாட்டினார், லெனின். ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து வாழவே முடியாது என்ற முதலாளித்துவ தேசியவாதத்தை, கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டு அம்சங்களிலும் அடித்து நொறுக்கினார்.


படிக்க: சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி


லெனினின் நினைவுநாளில், உழைப்பாளி வர்க்கத்தின் மீதான நேசமும், புரட்சியின் மீதான உறுதியும், மார்க்சியத்தை இடைவிடாது கற்றுக்கொண்டு செயல்படுத்திய அவரது அரசியல் மேதைமையும் நாம் அவரிடமிருந்து இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய பண்புகள்.

எனினும், இவற்றையெல்லாம் தாண்டி, தோழர் லெனினது மகத்தான பங்களிப்புகளில் இன்று நாம் முதன்மையாக நினைவுகூர வேண்டியது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிகாட்டுகின்ற, உறுதிமிக்க ஒரு போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைத்ததைத்தான். ஏனெனில், இன்றைய உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மைத் தேவை அதுதான். ஏகாதிபத்திய-முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் அமைப்பு, “அமைப்பு மட்டுமே!”

கம்யூனிஸ்ட்டுகளின் பணி தொழிற்சங்கப் போராட்டங்கள் என்று புரட்சியிலிருந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிரித்து, முதலாளித்துவத்திற்கு சேவைசெய்த லெனின் காலத்து திரிபுவாதிகளைப் போல இன்றும் சித்தாந்தத்தை, கொள்கைகளை முதலாளித்துவத்திடம் அடகுவைத்துவிட்டு சொல்லில் சோசலிசம் பேசுகின்ற பலவண்ண திரிபுவாதிகள் உலகெங்கும் இருக்கின்றனர்.

உலகெங்கும் நடைபெறுகிற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள், எழுச்சிகளைப் புரட்சியை நோக்கி வளர்த்துச் செல்லாத இத்திரிபுவாதிகள்தான் புரட்சியின் தடையரண்கள். மனிதவளம், இயற்கைவளம் என ஒட்டுமொத்த புவிக்கோளத்தையும் தனது கட்டற்ற லாபவெறிக்காக சுரண்டும் முதலாளித்துவத்தால் பட்டினி, பசி, போர், அகதிகளாகப் புலம்பெயர்வு, தேசிய இன அடக்குமுறைகள், சூழலியல் நெருக்கடிகள் என உலகமே பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த வலிகளுக்கு விடுதலையும், இளைப்பாறுதலும் கொடுப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே! அத்தகைய புரட்சியை நடத்துவதற்குரிய, லெனினியக் கட்சியை உடனடியாகக் கட்டியமைப்பதன் மூலமே இந்தியப் பாட்டாளி வர்க்கமாகிய நாம் தோழர் லெனினை நினைவுகூர்வதற்கு உரிமையுள்ளவர்களாவோம்!


இனியன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 ஜூலை, 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 17 | 1986 ஜூலை 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தஞ்சை தரிசு நிலமாகிறது
  • அரசியல் பிழைப்புவாதியின் மரணம் இறகைவிட லேசானது
  • இவர்கள் நேற்றுவரை இந்திய குடிமக்கள் இன்று?
  • சீரழிவுக்கு சித்தாந்த விளக்கம்
  • மதம் ஒரு அபினியே! இருப்பினும் மதம் மாறும் உரிமை ஒரு ஜனநாயக உரிமையே!
  • நீதியும் விசமாகி போனது
  • கோமாளி மட்டுமல்ல கொடுங்கோலன்
  • மறைக்கப்படும் கிரிமினல் குற்றவாளிகள்!
  • மிஜோ ஒப்பந்தம்: வாளை விற்று யாழை வாங்கி…
  • விமர்சனம் விளக்கம்?!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பேரிடர் அல்ல, நவீன தீண்டாமை!

ந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் புயல்கள், பெரு வெள்ளம், வறட்சி, வெப்ப அலை உள்ளி   ட்ட பேரிடர்கள் உருவாகிப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனினும், உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகின்ற விவசாய வர்க்கம்தான், இதனால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் வர்க்கமாக உள்ளது என்பதைக் கடந்த சில மாத அனுபவங்களே நமக்கு உணர்த்துகின்றன.

நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஒரு நாளில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட மிக அதிகமான மழை பெய்தது பாதிப்புகள் அதிகரிப்பதற்கான ஒரு காரணமாகும். சான்றாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில், இதுவரை இல்லாத அளவிற்கு, 23 மணி நேரத்தில்  50 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு இரண்டு லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டதால் வெள்ளம் பெருக்கெடுத்தது.

தென்பெண்ணை ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், கடலூர், விழுப்புரம் மாவட்ட விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே, தமிழ்நாட்டில்  2.11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1.29 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த கனமழையால் 6,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நாசமாயின.

விளைநிலங்களில் இடுப்பளவு வெள்ள நீரில் நின்றுகொண்டு வேதனையுடன் விவசாயிகள் அளித்த பேட்டிகள்; வெள்ளத்தில் அழுகிய பயிர்களை விவசாயிகள் எடுத்துக்காட்டும் காணொளிகள் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தன. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் இந்த புயலால் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் நிர்கதியாகியுள்ளனர்.

மழையினால் உடைமைகள் இழப்பு மட்டுமின்றி, கடன்வாங்கி விளைவித்த பயிர்களும் அழிந்ததால் விவசாயிகள் ஒன்றிய, மாநில அரசுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால், இந்த அரசுகளோ விவசாயிகளை நிர்கதியில் நிறுத்திவிட்டன.

தமிழ்நாட்டில், 33 சதவிகிதத்திற்கு அதிகமாக பாதிப்படைந்துள்ள நெற்பயிர் விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000, மானாவாரி பயிர் விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 என்று சொற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்தது, தி.மு.க. அரசு. அந்த நிவாரணத் தொகை விவசாயிகளை சென்றடைந்துள்ளதா என்றால், அதுவும் கேள்விக்குறியே ஆகும்.

பெஞ்சல் புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக டிசம்பர் 12 முதல் 14 வரை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இக்கனமழையினால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் பகுதியில் 40,000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசிப் பயிர்களை வெள்ளம் சூழ்ந்ததால் அவை அழுகி நாசமாயின. விளாத்திக்குளம் பகுதியிலும் 6,000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.

இதே காலத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெள்ளத்தின் பாதிப்புகளை பார்க்க முடிந்தது. வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் 120 கி.மீ. வேக பலத்த காற்றுடன் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை தாக்கியது. அப்புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தில்  கிழக்கு மிட்னாபூர், ஹூக்ளி மற்றும் ஹவுராவில் 25,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமடைந்ததாக ஆரம்பக் கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டது. கிழக்கு மிட்னாபூரில் மட்டும் 20,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இப்பகுதியில் நெல், பூ மற்றும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு பர்த்வான் மற்றும் மேற்கு மிட்னாபூரில் உள்ள நெல் விவசாயிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


படிக்க: விவசாயிகள் மகாபஞ்சாயத்து: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்


வெள்ள பாதிப்புகளைப் போலவே, மழை பொய்த்துப் போனதும் கடும் வெப்பமும் விவசாயத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. பீகார் மாநிலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே, தென்மேற்கு பருவமழைக் (ஜூன் -செப்டம்பர்) காலத்தில் குறைவான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி பீகாரில் 585 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது இக்காலத்தில் பெய்யவேண்டிய 789 மி.மீ. மழையை விட 26 சதவிகிதம் குறைவாகும். மழைப் பற்றாக்குறையால் விளைநிலங்கள் வறண்டு பயிர்கள் காய்ந்து விடுகின்றன.

இவ்வாறு பருவமழை பொய்த்துப் போவதால் பீகார் விவசாயிகள் பயிர் இழப்புக்கு உள்ளாவது ஒருபுறமென்றால், மற்றொருபுறம், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாவதாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டில் பீகார் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில், 2.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பீகார் மாநில விவசாயிகள் வறட்சி மற்றும் வெள்ளம் என்ற இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் புது வகை பூச்சிகள் உருவாகி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பருத்தி பயிர்களை நாசம் செய்கின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் விவசாயிகளும், நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போயுள்ளதால் கோதுமை, பார்லி போன்ற பயிர்களை உரிய காலத்தில் விதைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அக்டோபர் 1 முதல் நவம்பர் 24 வரையிலான காலத்தில் உத்தராகண்டில் வழக்கத்தை விட 90 சதவிகிதம் குறைவான மழை பதிவாகியுள்ளது. உத்தராகண்ட் மலைப்பகுதிகளில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயமானது மழைப்பொழிவை நம்பியே உள்ளது. மழை பொய்த்துப் போனதால் நிலங்கள் வறண்டு தரிசாகி, இப்பகுதி விவசாயிகளால் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, தென்மேற்கு பருவமழையின் முதல் மாதமான ஜூன் மாதமானது, மானாவாரி விவசாயத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் 61 சதவிகித விவசாயிகள் தங்களுடைய விதைப்பு நடவடிக்கைகளை தொடங்கும் மாதமாகும். ஆனால், பருவநிலை மாற்றத்தினால் ஜூன் மாதத்தில் தொடங்கிய மழைப்பொழிவு மிகவும் சீரற்றதாக இருப்பதால், விவசாயிகள் பயிர் விதைப்பை ஜூன் மாதத்திலிருந்து ஜூலைக்கு மாற்றியுள்ளனர்.

ஜூலை ஐந்தாம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் மாத இறுதியில் வெறும் 2.27 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே நெல் விதைக்கப்பட்டிருந்தது. இந்த அளவானது. (இந்தியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட 2015-ஆம் ஆண்டைத் தவிர) கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவாகும்.

மேலும், காலநிலை மாற்றத்தினால் புதுப்புது வகையிலான பூச்சிகள் உருவாகி, அவை பயிர்களை தாக்கி அழித்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பருத்திப்பயிர்களானது இளஞ்சிவப்பு காய்ப்புழு மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இப்பூச்சிகளை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடியாததால் பருத்தி விவசாயத்திலிருந்து நெல்லுக்கு மாறி வருகின்றனர்.

ஜூலை முதல் வார நிலவரப்படி, இம்மூன்று மாநிலங்களிலும் 10.29 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பருத்திப் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 லட்சம் ஹெக்டேர் குறைவாக இந்தாண்டு பருத்திப் பயிரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பருத்தி பயிர்களை புதுப்புது நோய்கள் தாக்குவது இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

மேற்கூறியவை, காலநிலை மாற்றத்தினால் சமீபத்தில் இந்தியாவின் ஒரு சில மாநிலப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டுமே. புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science and Environment) என்ற சிந்தனைக் குழுவின் அறிக்கையின்படி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களால் 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 3.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2024-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட நிலங்களின் பரப்பளவு ஏறக்குறைய 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை வருங்காலங்களில் மேலும் தீவிரமடையும் என்பதையே வானிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் ஆய்வறிக்கைகளும் நமக்கு உணர்த்துகின்றன.

ஆனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், அவர்களை கையறு நிலையிலேயே விட்டுவிடுகின்றன. சொற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்து அதையும் முறையாக வழங்குவதில்லை.


படிக்க: தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்


மேலும், பாசிச மோடி அரசானது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் புயல், வெப்ப அலை உள்ளிட்ட பேரிடர்களை கணிப்பதற்கான வானிலை முன்கூட்டியே அறிவியலை வளர்த்தெடுக்காமல் உள்ளது. சமீபத்தில், வானிலை நிகழ்வுகளை சரியாகக் கணிக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் குறித்து கருத்து தெரிவித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ‘‘வானிலையியலை முழுமையாக அறிந்துகொள்ள அறிவியல் கிடையாது. வானிலையை கணிப்பதற்கு தொழில்நுட்பக் கருவிகள் மட்டும் போதாது. கருவிகள் புள்ளிவிவரங்களைத்தான் கொடுக்கும். அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

அறிவியலும் தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும் போதுதான் எதிர்ப்பார்க்கின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்’’ என்று பேசியிருந்ததே அதற்கு சான்றாகும்.

ஆனால், ஒன்றிய அரசோ இப்பணிக்காக நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் வணிக நோக்கத்திற்காக பல்வேறு செயற்கைக்கோள்களை ஏவும் ஒன்றிய அரசு விவசாயத்துறை வளர்ச்சிக்காக சொற்ப நிதியை ஒதுக்கி விவசாயிகளை வஞ்சிக்கிறது.

விவசாயத்துறையை கார்ப்பரேட் டிஜிட்டல்மயமாக்குவது, விளைநிலங்களை கையகப்படுத்துவது, உள்ளீடு பொருட்கள் உற்பத்தியைக் பாசிச மயமாக்குவதற்காக கார்ப்பரேட்மயமாக்குவது உள்ளிட்ட பல சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது; இதன்மூலம் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுகிறது. பாசிசக் கும்பல் தனது இந்த நவீன தீண்டாமைக்கு இயற்கைப் பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை நல்வாய்ப்பாகக் கருதுகிறது.

மொத்தத்தில், இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் மேற்கண்ட நவீன தீண்டாமையின் அங்கமாகும்.

மேலும், காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவது என்பது அந்த வர்க்கத்தினரின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, நாட்டு மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்வது பற்றிய பிரச்சினையாகும். உணவு தானிய உற்பத்தியில் உருவாகும் பற்றாக்குறையை காரணம் காட்டி நாட்டு மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்வதை அம்பானி அதானி கார்ப்பரேட் கும்பல்களின் கைகளில் ஒப்படைக்கும் பாசிச சதித்திட்டத்துடன் தொடர்புடையதாகும்.

எனவே, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குகின்ற மக்கள் விரோத கார்ப்பரேட் கொள்கைகளை கைவிடுவது, தொடர்ந்து வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மாற்று இடங்களில் விவசாயம் செய்வதற்கான நிலங்களை வழங்குவது, இயற்கை சார்ந்த முறையில் விவசாயத்தை ஊக்குவிப்பது, விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை அகற்றுவது உள்ளிட்ட மாற்றுக் கொள்கைகள் இன்று அவசியமானதாக உள்ளன.

இந்தக் கொள்கைகளை விரிவாக வகுக்கவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஒன்றிய, மாநில அரசுகளை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளின் உடனடி மற்றும் முதற்பணியாகும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பாசிஸ்ட் டிரம்ப் பதவியேற்பு: கிளர்ந்தெழுந்த அமெரிக்க மக்கள்

ன்று (ஜனவரி 20) அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்காக உள்ள நிலையில், அமெரிக்கா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து பாசிஸ்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“சியரா கிளப் மற்றும் முன்னணி”, “கருக்கலைப்பு நடவடிக்கை இப்போது”, “​​செயல்பட வேண்டிய நேரம்”, “சகோதரி பாடல்”, “பெண்கள் பேரணி”, “மக்கள் ஜனநாயகத்தில் நடவடிக்கை”, “ஹாரியட்டின் காட்டு கனவுகள்”, “பெண்ணிய முன்னணி”, “இப்போது”, ​​“திட்டமிடப்பட்ட பெற்றோர்”, “தேசிய பெண்கள் சட்ட மைய நடவடிக்கை நிதி” உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கீழ் நேற்று (ஜனவரி 19) அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தினர். இந்த அமைப்பு ஜனவரி 2017-இல் டிரம்ப் முதன்முறையாக பதவியேற்றபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கிய ஆர்ப்பாட்டம் லிங்கன் நினைவுச்சின்னம் அருகே ஒன்றிணைந்து பெரும் போராட்டமாக நடந்தது. டிரம்பிற்கு எதிரான சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள், பதவியேற்கவுள்ள டிரம்பிற்கு எதிராகவும், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

“பெண்கள், சமத்துவம், குடியேற்றம் என தற்போது நாங்கள் இழக்க உள்ள அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் இங்கு வர விரும்பினோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பிரிட்டானி தெரிவித்தார். பேரணியில் கலந்துகொண்ட மக்கள், “நாங்கள் கீழ்ப்படியவில்லை அல்லது பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நமது சமூகங்களுக்கு நிரூபிக்க வெகுஜன போராட்டம் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும், மேலும் மக்களையும் அதையே செய்வதற்கு அழைக்கிறது” என்று கூறினர்.


படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!


இப்பேரணியில், “எழுந்திரு, எதிர்த்துப் போராடு!”, “கறுப்பினப் பெண்களை நம்பு!” மற்றும் “நாங்கள் அமைதியாக இருக்க முடியாது”, “டிரான்ஸ் லிவ்ஸ் மேட்டர்!” (Trans Lives Matter!) உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இப்பேரணிகள் சிறிய அளவில் இருந்தாலும், நியூயார்க், சியாட்டில், சிகாகோ உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்கள்தோறும் நடந்தன. மேலும், டிரம்பின் பதவியேற்புக்கு முன்னதாக வார இறுதி முழுவதும் இத்தகைய போராட்டங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

வெள்ளை இனவெறி பாசிஸ்டான டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், கருப்பின மக்கள், புலம்பெயர் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகும். டிரம்பின் கடந்த ஆட்சி காலத்திலேயே நலிவுற்ற மக்கள் மீது இத்தகைய அறிவிக்கப்படாத பாசிசப் போர் தொடுக்கப்பட்ட நிலையில் இம்முறை அது மேலும் தீவிரமடையும் என்பதாலேயே டிரம்ப் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க மக்கள் போராடி வருகின்றனர்.

முன்னதாக, கடந்தாண்டு இறுதியில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே அமெரிக்காவில் உள்ள பெண்கள் அமைப்புகள் டிரம்பின் குடியரசுக் கட்சியின் சிந்தனை குழாமான ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அப்போராட்டத்தில் பிற அமைப்புகளும் கலந்துகொண்டிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கும்போது இந்த பாசிச கூட்டங்கள் ஓட்டம் பிடிப்பது திண்ணம்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜூலை, 1986 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 16 | 1986 ஜூலை 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: புதிய கல்விக் கொள்கை: பாசிச கும்பலின் புதிய ஆயுதம்
  • சுரண்டும் கும்பலுக்கு ஒரு வரப்பிரசாதம்
  • ஈழம்: ஆதிக்க வெறியர்களின் புதிய உத்தி
  • சட்டப்பூர்வ வழிப்பறிக் கொள்ளையர்கள்
  • அரசியல் பித்தலாட்டத்தை அடையாளம் காண்போம்
  • அணு உலைகள் மனித உயிர் பறிக்கும் பலிபீடங்கள்
  • ‘மோதல்’ கொலைகளும் நீதிமன்றங்களின் யோக்கியதையும்
  • பியர்லஸ் மோசடிக்கு அரசே உடந்தை
  • உழைக்கும் மக்களின் உதிரத்தை உறிஞ்சும் மோசடிச்[பரிசு] சீட்டுகள்
  • எரிகிறது நமது வரிப்பணம்
  • தென் கொரியா: சுழன்றடிக்கும் புரட்சிப்புயல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம்: முதல் தோழன்

திடீரென அவனது நினைவு வந்துவிட்டது.

அவனைப் பற்றி பெரிதாக பலரும் பேசுவதில்லை.
ஆகையால், அவனைப் பற்றி நாம் பேசுவோம்.

உயிர்த் தியாகம் செய்யப் புறப்பட்டவர்களில் அவனும் ஒருவன்.
ஆம், பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தோழர்களைப் போல.

அவன் ஒரு சோசலிஸ்ட், ஆகையால், அவன் ஒரு கம்யூனிஸ்ட்.

பிரிட்டிஷ் இந்தியாவில் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த
அனுசீலன் சமிதியில் இணைந்த இளந்தோழர்களில் அவனும் ஒருவன்.

1921-இல் ஒத்துழையாமை இயக்கம் மேற்கொள்ளப்பட்ட போது,
அதில் ஊக்கமாக அவன் பங்கேற்றான், சிறை சென்றான்.
அப்போது அவனுக்கு வயது, 17.

இதுபோல, ஒத்துழையாமை இயக்கத்தின் போது மட்டும்,
ஒரு மாதம், மூன்று மாதங்கள் என
அவன் பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டான்.

ஒத்துழையாமை இயக்கம் தள்ளிவைக்கப்பட்டபோது, அவன் கல்லூரியில் சேர்ந்தான்.

1924, ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேசன் (எச்.எஸ்.ஆர்.ஏ.)
புரட்சிகரக் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தான்.

அப்போது அவனுக்கு வயது, 20.

1925-இல் அவன் கைது செய்யப்பட்டு,
இன்றைய பங்களாதேஷில் இருக்கும் மைமென்சிங்-கில் சிறை வைக்கப்பட்டான்.
அப்போது அவனுக்கு வயது, 21.

சிறையிலும் அவன் ஓயவில்லை.
சிறைக் கைதிகளை மிருகத்தனமாக நடத்தும்
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கெதிராக குரல் கொடுத்தான்.
அதற்கு அவன் கடைப்பிடித்த போராட்டம்தான்
சிறையில் உண்ணாநிலைப் போராட்டமாகும்.

இருபது நாட்கள் நீடித்த உண்ணாநிலைப் போராட்டத்திற்குப் பிறகு
சிறைக் கண்காணிப்பாளர் அவனிடம் மன்னிப்புக் கேட்டான்.
இது அவனது மன உறுதிக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த முதல் வெற்றி!

1926 நவம்பர் 7, ரசியப் புரட்சிநாள்தான். ஆனால், இந்தியாவுக்கு இதில் வேறொரு சிறப்புள்ளது.

அது காகோரி ரயில் கொள்ளை. புரட்சியாளர்கள், ஆயுதங்களை வாங்க, பிரிட்டிஷ் கஜானாவைக் கொள்ளையடித்த புரட்சிகர நடவடிக்கை.

இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக, அவன் கைது செய்யப்பட்டான்.
அப்போது, அவனுக்கு வயது, 22.

குற்றம் உறுதியாகவில்லை, இருப்பினும் சிறையே அவனது வாசமாகியது.

கட்சிக்குப் பணம் சேர்ப்பதில் அவன் படுகில்லாடி.
இந்தோ-பர்மா பெட்ரோலியம் கம்பெனியின் பணத்தைக் கொள்ளையடித்தது இவனது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். அந்தப் பணத்தைக் கொள்ளையடித்த சாகசமே பெரும் சாகசம்.

அதுமட்டுமா, புரட்சியின் ஊழியருக்கு வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் தெரியவேண்டும். அதிலும் இவன் கைதேர்ச்சிப் பெற்றவன்.

புரட்சியின் ஊழியர் பிரச்சாரத்தின் முன்னோடி அல்லவா?

இதோ, கட்சியின் கொள்கை அறிக்கையான, “புரட்சியாளனை” (தி ரெவெல்யுஷனரி)
வங்கத்தின் வீதிகள் எங்கும் பரப்பினான்.

அப்படியானால், அவன் முரட்டு குணம் கொண்டவன் என்று நீங்கள் கருதினால், அது தவறு.

அவன் கம்பீரமாக தோற்றமளிப்பான், அமைதியாக இருப்பான்,

குறைவாகப் பேசினாலும் இனிமையாகப் பேசுவான்,

மற்றவர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் அற்புதச் சக்தி அவனது பேச்சில் இருக்கும்.

1928 கல்கத்தா காங்கிரசு மாநாடு. பகத்சிங் கல்கத்தா சென்றிருந்தார்.
அப்போதுதான், சில நாட்களுக்கு முன்பு அவன் விடுதலை செய்யப்பட்டதை பகத்சிங் அறிந்து அவனை சந்தித்தார். கட்டிப்பிடித்து, ஆரத்தழுவினார்.
புரட்சியின் விடாப்பிடியான தோழனல்லவா, அவன்.

1929 ஜூன் 14, இப்போது அவனுக்கு வயது 24.

அவன் இப்போது பகத்சிங், படுகேஷ்வர் தத் ஆகியோருடன் கைது செய்யப்பட்டான்.
அவன் மீது சுமத்தப்பட்ட குற்றம்,
நாடாளுமன்றத்தில் வீசுவதற்கான குண்டைத் தயாரித்துக் கொடுத்தான் என்பதாகும்.


படிக்க: தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு


அதே, பிரிட்டிஷ் சிறைதான், சித்திரவதைக்கு ஒன்றும் குறையில்லை.
ஐரோப்பிய அரசியல் கைதிகளைவிட இழிவாக நடத்தப்பட்டனர் இந்திய அரசியல் கைதிகள்.
இந்தியக் கைதிகள் உடுத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்ட சாக்குத் துணியைத் துவைக்கக் கூடாது;
கரப்பான் பூச்சிகளும் எலிகளும் விளையாடும் மோசமான உணவு;
செய்தித்தாள் படிக்க அனுமதி இல்லை என்ற அந்த அடக்குமுறைகளின் பட்டியல் நீளமானவை.

இந்த சிறை சித்திரவதைகளுக்கெதிராக
அவனும் அவனது தோழர்களும் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர்,
இது அவனுக்கு இரண்டாவது முறை.

1929, ஜூலை 13, தொடங்கியது உண்ணாநிலைப் போராட்டம்.

உண்ணாநிலைப் போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டம். இது தோழர்களின் புரிதல்.
அதனால், அனுபவம் இல்லாதவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை.
அதனால்தான், அவன் இந்தப் போராட்டத்தில் முன்னிலையில் இருந்தான்.

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது.

தோழர்கள் நடமாடுவதை நிறுத்திய செய்தி ஊடகங்களில் வெளியானது.
படுக்கையிலிருந்தவர்கள் பலமுறை நினைவு தப்பிய செய்திகள் நாட்டையே திடுக்கிட வைத்தது.

மருந்து ஊற்றியும் குடிக்கவில்லை, அடுத்த செய்தி.

தோழர்களின் வாயில் குழாயைச் செறுகி பலமுறை உணவு ஊற்றப்பட்டது.
ஆனால், அவன் உண்ணவில்லை,
அந்த உணவு வாயில் ஊற்றிய சிறை மருத்துவர்களின் முகத்திற்கே சென்றது.

செய்தி மக்களைக் கொந்தளிக்கச் செய்தது.

உண்ணாநிலைப் போராட்டத்தில் அவன், 63 நாட்கள் தொடர்ந்தான்.
போராட்டத்தில் வெற்றியடைந்தான், அதற்காக அவன் உயிரைத் தியாகம் செய்தான்.

அவன் பிறந்தது, 1904 அக்டோபர் 27,
உயிர்த்தியாகம் செய்யும் போது அவனுக்கு வயது, 24.

லாகூர் சிறை வாயிலில் பெருந்திரளாக மக்கள் கூடினர்.
லாகூரில் இருந்து கல்கத்தா வரை இரயிலில் அவனது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
1,700 கிலோமிட்டர். ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது,
மண்ணின் மைந்தனுக்கு அஞ்சலி செலுத்த.

இந்திய வரலாற்றில் இணையற்ற நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

கல்கத்தாவில் அவனுக்கு இறுதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐந்து லட்சம் மக்கள் கூடியதாக, வைஸ்ராய் அலறினான்.
மக்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந்தார்கள்.
தோழர்களில் ஒருவரான துர்காவதி தேவி, அவனது இறுதி ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்தியா முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் பிரிட்டிஷ் அரசுக்கெதிராகப் போராட்டங்களில் இறங்கினர்.


படிக்க: அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்


செப்டம்பர் 14, அவனது உயிர்த்தியாகத்திற்கு சட்டமன்றத்தில் (அன்றைய நாடாளுமன்றம்) அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரிட்டிஷ் அரசை சபிக்கும் வகையில் முகமது அலி ஜின்னா ஆற்றிய உரையில் கூறியதாவது:

“இது போர்ப் பிரகடனமாகும். அவர்கள் தம் உயிரைத் துறக்கவும் தயாராகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். இது ஒன்றும் விளையாட்டல்ல. எல்லோரும் சாகும்வரை உண்ணாநிலை இருக்க முடியாது. உண்ணாநிலை இருப்பவனுக்கு உள்ளம் என்று ஒன்றிருக்கும். தான் மேற்கொண்டுள்ள உண்ணாநிலை நியாயமானதென்பதிலே அவனுக்கு முழுநிறைவான நம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்டவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது; அவன் கொலை செய்யும் குற்றவாளியாகவும் இருக்க மாட்டான். வெறுக்கத்தக்க இந்த அரசுக் கொள்கையை பொதுமக்கள் எதிர்க்கின்றனர்; வெளியிலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!”

இதே குரலில், சனாதனவாதிகளும் உரையாற்றினர்.

அவை, பிரிட்ஷ் அரசுக்கெதிரான கண்டனங்கள் அல்ல, அச்சத்தின் வெளிப்பாடு.

அவனது உயிர்த்தியாகம் மக்களைப் பற்றிக்கொண்டால் புரட்சி வெடித்துவிடும் என்ற அவர்களின் உணர்வாகும்.

எச்.எஸ்.ஆர்.ஏ. தோழர்களின் சிறைப் போராட்டங்கள் குறித்த
வீர தீர செய்திகளில் இவனது உயிர்த் தியாகம் முக்கியத்துவமுடையது.
பின்னாளில், பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது,
இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு
அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.

ஆம், அவனது உயிர்த் தியாகம், கோடிக்கணக்கான மக்களை உயிர்ப்பெறச் செய்தது!

அவன் பெயர், ஜிதேந்திர நாத் தாஸ்.

இவன் கதை இத்துடன் முடிந்துவிட்டதா…?

நீங்கள் நாட்டுப்பற்றுடன் இருக்கிறீர்கள் என்றால்,
உங்கள் மனதிலிருந்து இவன் பெயர் இனி நீங்காது அல்லவா?

உங்களுக்குள் இருக்கும் நாட்டுப்பற்றையும் கொள்கை உறுதியையும் இவன் சோதிப்பான் அல்லவா?
சோதிக்கட்டும்!


பரமேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜன.22: போக்குவரத்துத் தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 22 அன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இப்போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு. காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன் கூறுகையில், “தினமும் 2.75 கோடி பேர் பயணம் செய்யும் ரயில்வேக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தினமும் 3 லட்சம் பேர் பயணிக்கும் சென்னை மெட்ரோ ரயிலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.35 ஆயிரம் கோடி வழங்குகிறது.

தினமும் 1.75 கோடி பேர் பயணம் செய்யும் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு நாங்கள் ரூ.7500 கோடி இழப்புத்தொகைதான் கேட்கிறோம். அரசு ரூ.1500 கோடிதான் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. 2024-இல் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளனர்.

கடனோடு கடனாக பெற்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மின் வாரியத்திற்கு கடன் பெற்று வழங்கிய அரசு, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு மட்டும் வஞ்சனை செய்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் கே. ஆறுமுக நயினாா் கூறுகையில், “தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்வதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றன. பேருந்து மூலம் உத்தேசமாக ரூ.100 வசூலானால் அதில் ரூ.12-ஐ வங்கியிலிருந்து பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. தினமும் ஒரு கோடி கி.மீ இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் தற்போது 80 லட்சம் கி.மீ. மட்டுமே இயக்கப்படுகின்றன. அதாவது, ஏராளமான வழித்தடங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளன. வாரிசு வேலை மறுப்பது; பேருந்து எண்ணிக்கையைக் குறைப்பது என அ.தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட எட்டு அரசாணைகளை தி.மு.க. அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது” என தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை அம்பலப்படுத்தினார்.

எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும்; போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதுடன், மறைமுகமாக தனியாா்மயமாக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும்; பணியிலிருந்து ஊழியா்கள் ஓய்வு பெறும்போது, ஓய்வு பெறும் அன்றே ஓய்வுகால பலன், ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்; தோ்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதுடன், காலிப் பணியிடங்களைப் நிரப்ப வேண்டும்; வாரிசு வேலை வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22 அன்று தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்த உள்ளனர்.

முன்னதாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9 அன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்லவன் இல்லம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து முறை வேலைநிறுத்தப் போராட்டம், தர்ணா, உண்ணாநிலை போராட்டம், மறியல் என பல கட்ட போராட்டங்களை கடந்த பத்து வருடங்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், ஆளும் அரசுகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட தொழிலாளர் விரோதப் போக்கையும் போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்கத்தையும் கண்டு ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். தி.மு.க-வும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை முன்னெப்போதும் நடந்ததை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

போக்குவரத்துத்துறையில் ஏற்படும் நட்டத்தையும் இழப்புகளையும் சரிக்கட்டுவதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்காமல் அதனையே காரணம்காட்டி போக்குவரத்துத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் சதித்திட்டத்தை தி.மு.க. அரசு அரங்கேற்றி வருகிறது. நிதி பற்றாக்குறையை காரணம்காட்டி போக்குவரத்துத்துறையில் ஒப்பந்தமுறையை அறிமுகப்படுத்தி கார்ப்பரேட்டுகளை உள்நுழைப்பது; அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு குறைப்பது; பல வழித்தடங்களில் அரசு பேருந்துகளை நிறுத்துவது; அதேசமயம், போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வழித்தடங்களில் ஒப்பந்தமுறையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது; நடத்துனர் பணியை காண்டிராக்ட்மயமாக்கி நட்டத்தை தீவிரப்படுத்தி ஒட்டுமொத்தமாக கார்ப்ப்பரேட்டிடம் தாரைவார்ப்பது; அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக அன்றி ஒப்பந்தமுறையில் புதிய பேருந்துகளை வாங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது; ஆம்னி பேருந்துகளை ஊக்குவிப்பது ஆகியவை என தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்தேறி வருகின்றன.

தி.மு.க. அரசின் இப்போக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இருப்பினும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை அளித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் இத்தொழிலாளர்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என தி.மு.க. கனவு காணுகிறது. ஆனால், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களிப்பதாக இல்லை என போக்குவரத்துத் தொழிலாளர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

உண்மையில், தி.மு.க. அரசின் மக்கள் விரோ தத் நடவடிக்கைகளும் கார்ப்பரேட் நல கொள்கையும் பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கும் அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி, த.வெ.க. விஜய் போன்ற பா.ஜ.க-வின் நரல்களுக்குமே சாதமாக அமைகின்றது. எனவே, தொழிலாளர்கள், விவசாயிகள், பரந்துபட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தராமல், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் கார்ப்பரேட் நலத் திட்டங்களை கைவிடாமல் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க. கருதுவது, பா.ஜ.க. கும்பல் கொள்ளப்புறமாக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு வழியேற்படுத்தி தருவதாகவே அமையும்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!

ன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியும் எல்&டி நிறுவனர் எஸ்.என்.சுப்ரமணியனும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 70 – 90 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று பேசியது விவாதத்தையும், பல்வேறு தரப்பிலிருந்து கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“தொழிலாளர்கள் வீட்டில் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்” என்று திமிர்த்தனத்தோடு கூறியுள்ளார் எஸ்.என்.சுப்பிரமணியன்.

ஏற்கெனவே, தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் தினசரி 12 மணி நேர வேலை நேரத்தை சட்டமாக்க முயற்சி செய்து, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கின. அச்சமயத்தில் இது குறித்து பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலை நேரத்தை 12 மணி நேரமாக சட்டமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால்தான் அவ்வாறு முடிவு செய்ததாக கூறினார். கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவில் ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசுகள் வேறு எதைப் பேச முடியும்?

எட்டு மணி நேர வேலை நேர சட்டம் நடைமுறையில் இருக்கும் தற்போதைய நிலையிலேயே எந்த முதலாளிகளும் அதை மதிப்பதில்லை. தொழிலாளர்களை 12 மணிநேரம், 14 மணிநேரம் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நாராயணமூர்த்தியும், எஸ்.என்.சுப்பிரமணியனும் வெளிப்படையாக இதை முன்வைப்பதன் மூலம் இந்திய தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தரமான இருண்ட காலத்தை உருவாக்குவதற்கான வேலைகள் தொடங்கி விட்டது என நிச்சயமாக சொல்ல முடியும்.

தற்போதைய நிலையிலேயே முதலாளிகளின் இலாபவெறிக்காக சுரண்டலுக்கு உள்ளாகும் இளந்தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது அதிகமாவதை செய்திகள் தொடர்ச்சியாக தெரிவிக்கின்றன. 70 – 90 மணி நேர வேலைநேரம் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தால் நிலைமை என்னவாகுமென்று யோசித்துப் பாருங்கள்?

ஏற்கெனவே குடும்பம், நிறுவனம் என்ற இரட்டைச் சுரண்டலுக்குள் இன்னல்படும் பெண்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தொழிலாளர்கள் தங்களுக்கென்று சிறிது நேரத்தைக் கூட ஒதுக்க முடியாமல் போகும்போது ஏற்படும் உளவியல் நெருக்கடிகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?

நீது மொஹங்கா என்ற பெண் கணக்கு தணிக்கையாளர், 14 மணி நேர வேலை நேரத்தால் தனது மகளின் குழந்தைப் பருவத்தை இழந்ததைப் பற்றிக் கூறியது பாதிப்பின் தீவிரத்தை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது. “என் மகள் 5 வயதில் என் குடும்ப உறுப்பினர்களை ஓவியமாக வரைந்தாள். அதில் நான் இல்லை. இது குறித்து அவளுடைய ஆசிரியர் கேட்டபோது, ‘என் அம்மா எப்போதும் அலுவலகத்தில்தான் இருப்பார்’ என கூறியிருக்கிறாள். அந்தப் படத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். நினைவுப் பொருளாக அல்ல, வெற்றிக்குப் பதில் அதன் தாக்கத்தை அளவிட வேண்டும் என்பதை நினைவுப்படுத்துவதற்காக வைத்திருக்கிறேன். ஒரு வாரத்தில் 55 மணி நேரத்துக்கு மேல் பணிபுரியும்போது செயல்திறன் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பாதிக்கப்படுவதுடன் குடும்ப உறுப்பினர்களின் பாசத்தையும் படைப்பாற்றலையும் இழக்க நேரிடுகிறது” என நீது மொஹங்கா கூறியுள்ளார்.

இதைப் பற்றியெல்லாம் இலாபவெறி பிடித்த கார்ப்பரேட் ஓநாய்களுக்கு எப்போதும் கவலையில்லை. தங்களின் இலாபத்தின் பங்கு சிறிது கூட குறைந்து விடக் கூடாது என்பதில்தான் இவர்களது கவனம் உள்ளது.

தற்போதைய புள்ளிவிவரத்தின்படியே, 2023-24 காலகட்டத்தில் மட்டும் இன்போசிஸ் நிறுவனம் 27,000 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது. இக்காலகட்டத்தில் எல்&டி நிறுவனத்தின் இலாபம் 9,000 கோடி ரூபாய். வாரத்திற்கு 40 மணி நேரம் தொழிலாளி உழைக்கும்போதே இந்தளவிற்கு இலாபம் வருகிறதென்றால், 70 – 90 மணி நேரம் நடைமுறைக்கு வந்தால் இந்த இலாப விகிதம் எந்தளவுக்கு அதிகரிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தற்போதைய செய்தி என்னவெனில், 2025-இல் ஊதிய உயர்வு கிடையாது என இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார மந்தம் என்ற காரணத்தைக் கூறி பல கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊதிய உயர்வை ரத்து செய்வது, லே–ஆஃப் அறிவிப்பது என்பதை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இவர்களின் இலாப விகிதத்தில் எந்த வகையிலும் குறைவு வந்துவிடக்கூடாது என்பது மட்டுமே இவர்களுடைய இலக்கு.

பாசிச மோடி அரசோ இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைத்தான் நாட்டின் வளர்ச்சி என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களோ அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியைக் கூட கட்டாமல் பல வழிகளில் ஏமாற்றுவதுடன் (சட்டங்கள் இதற்கு சாதகமாக இருக்கின்றன), வரிச்சலுகையைப் பெற்றுக் கொண்டு நாட்டின் இயற்கை வளங்களையும், மக்களின் உழைப்பையும் வரைமுறையற்று சுரண்டிக் கொள்ளையடித்து வருகின்றனர்.

தொழிற்துறையில் காண்ட்ராக்ட்மயம் தீவிரப்படுத்தப்பட்டு, பெயரளவிலான தொழிலாளர் சட்டங்கள் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டு, வேலையின்மையும், வாழ்க்கை உத்தரவாதமின்மையும் சொல்லொணாத் துயரங்களை உருவாக்கிவரும் சூழலில், இந்த கார்ப்பரேட் ஓநாய்கள் இப்படிப் பேசியிருப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தை எந்தளவுக்கு கிள்ளுக்கீரைகளாக கருதுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

எல்லா வாசலையும் அடைத்து விட்டோம், வேறு வழியில்லை என்று தொழிலாளர் வர்க்கம் இதனையும் கடந்து போகும், அதிகார வர்க்கத்தின் துணையோடு தங்களது திட்டத்தை நடைமுறைப்படுத்தி விடலாம், தொழிலாளி வர்க்கத்தின் மீது நிரந்தரமாக கொடுங்கோன்மையை நிலைநாட்டி விடலாம் என்று இந்த கார்ப்பரேட் கொள்ளையர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வரலாறு நிச்சயம் திரும்பும். அந்நாள் வெகு தொலைவில் இல்லை.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram