Friday, July 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 49

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்!

வேண்டாம் ஸ்டெர்லைட்!
வேண்டும் ஜனநாயகம்!

தமிழக அரசே…
• ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்று!
• தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைத்திடு!
• அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்த, மக்களை சுட்டுக்கொல்ல காரணமான போலீசு மற்றும் அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடு!

நன்றி: மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்… | போர் கவிதை

ப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்

கால்கள் களைத்து
இரைந்து கேட்கிறது ஓய்வை..

உழைக்க ஓடிய கால்களும்
ஓடியாடி விளையாடிய கால்களும்
உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன..

அப்பாவின் அப்பா இறந்து போனதை
அவரின் கால்தழும்புகள்தான் அடையாளம் காட்டின..

அப்பா அடிக்கடி சொல்லுவார்
வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை
நாடில்லா வாழ்க்கை நரகம் என்று…

எப்போதும் அவர் உடலில்
எதையாவது கிறுக்கியபடி இருப்பார்
ஏனென்று கேட்டால்
குண்டடிப்பட்டு இறந்து போனால்
அடையாளமற்ற பிணமாக மாட்டேன்.
இதுவே எனதுடலின் அடையாளம் என்பார்…
சவக்களை கொண்ட விழிகளோடு…

நானும் தங்கையுமே ஒருநாள் அப்பாவிடம் கேட்டோம்
எப்போது நாங்கள் தெருக்களில் விளையாட முடியுமென்று?..

இந்த போர் விளையாட்டுகள் அனைத்தும் முடியும்
அன்று விளையாட முடியுமென்று அப்பா சொன்னார்..

அம்மாவின் திருமண நாளில்
குண்டுகள்தான் அட்சதையாம்
சொல்லி சிரித்துவிட்டு
எங்களை வெறித்து பார்ப்பாள்..

ஆசைப்பட்ட வாழ்க்கை நீர்க்குமிழி போல்
எப்போது வெடிக்குமென்று யாருக்கு தெரியும்?..

வெடித்துதான் போனது ஒருநாள்…

எத்தனையோ சடலங்களின் இடுக்கில்
அப்பாவின் உடல் சிதறி கிடந்தது
அன்றைய நாளிலும் அப்பா ஏதோவொன்றை
கிறுக்கி கொண்டிருந்தாரோ என்று எண்ணினேன்…

ஆனால்…

துண்டித்துக் கிடந்த கைகளில்
அப்பா இப்படி எழுதியிருந்தார்
என்னவளே இனியவளே
உரிமைகீதம் பாட ஏங்கும் உன்னை நினைத்தபடியே
காதல் கீதம் பாடுவேன் என் இறுதி வரை…

குருதி வெளியேறி குப்புற கிடந்த
அப்பாவின் மார்பில் இப்படி எழுதியிருந்தது
என் மகளே,
இளம் விதவை பட்டம் உனக்கு கிட்டாமல் போகட்டும்..

உள்ளங்கையில் வீட்டின் முகவரியும்
எனக்கான வாழ்த்தையும் இப்படி எழுதியிருந்தார்
மகனே நீயாவது பேரன் பேத்தி பெற்று
பெருவாழ்வு வாழ்ந்து மடி அல்லது வாழ்ந்து முடி என்று
எழுதியிருந்ததா என்ற
விடையற்ற குழப்பத்தில் நின்றபடி
அப்பாவின் கால்களைப் பார்க்க ..

எம் முன்னோர்கள் சுவாசித்த
மூச்சு காற்று உலாவும்
இந்நாடு என்நாடு என்று
கால்களில் எழுதி இருந்தது

இப்போது இதே வரிகளை எனது கால்களில் எழுதி
எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்…!


கலைவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர்கல்வியின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் | பேரா.ப.சிவக்குமார்

உயர்கல்வியின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் | பேரா.ப.சிவக்குமார்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நேரலை: காடுகள், மலைகள், விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

நேரலை: காடுகள், மலைகள், விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!

இது match fixing தேர்தல் | தோழர் மருது

இது match fixing தேர்தல் | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வாக்காளர்களை மிரட்டிய பாஜக! | தோழர் அமிர்தா

வாக்காளர்களை மிரட்டிய பாஜக! | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் | மத்திய ஆப்கானிஸ்தான்

டந்த வாரம் தொடங்கிய கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பல கிராமங்களை முற்றிலுமாக அழித்துவிட்டது. இதனால் அங்கு வசித்துவந்த மக்களில் 315 பேர் உயிரிழந்துள்ளனர். 1,600 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை (20-05-2024) அன்று பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 50 பேர் இறந்துள்ளனர்.

மத்திய கோர் மாகாணத்தின் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் தலைநகரான ஃபெரோஸ்-கோவில், மக்கள் வசித்து வந்த 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. 4,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. 2,000 க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

ஷேக் ஜலால் மாவட்டம், பாக்லான் மாகாணம், ஆப்கானிஸ்தான்
(REUTERS/Sayed Hassib)
ஷேக் ஜலால் மாவட்டம், பாக்லான் மாகாணம், ஆப்கானிஸ்தான் (REUTERS/Sayed Hassib)
ஷேக் ஜலால் மாவட்டம், பாக்லான் மாகாணம், ஆப்கானிஸ்தான். (REUTERS/Sayed Hassib)
ஷேக் ஜலால் மாவட்டம், பாக்லான் மாகாணம், ஆப்கானிஸ்தான் (REUTERS/Sayed Hassib)


தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஈழ இனப்படுகொலை – வர்க்கமாய் ஒன்றிணைவோம்! : கவிதை

ஈழ இனப்படுகொலை – வர்க்கமாய் ஒன்றிணைவோம்! : கவிதை

எத்தனை யுகங்கள் கடப்பினும்
ஈழத்தில் செத்து வீழ்ந்த
எம் தமிழ் உறவுகளின் கதறல் சத்தமும்,
வீழ்ந்த குண்டுகளின் சத்தமும்
மண்டைக்குள் நித்தம் ஒரு யுத்தத்தை
நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கிறது
எழுத பேனா எடுத்தா..
அதுவும் தன் குருதியை வரியா வடிச்சு கொடுக்குது.

எத்தனையோ பால்மணம் மாறா பச்சிளம் பிஞ்சுகளை
சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு
துண்டு துண்டாக்கி முச்சந்தியில் வீசியெரிந்தது!
தடுத்த தாயையும் நிர்வாணமாக்கி,
பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்தது !

இளம் பெண்களோ பெற்ற தகப்பனின் கண்முன்னே அம்மணமாக்கப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவங்கள் கேட்கும் மனித மனங்களை ஆழ்துளைக்கு இட்டுச் செல்ல மறப்பதில்லை!

ஆயிரக்கணக்கான ஆண்களோ அடித்தே கொல்லப்பட்டார்கள்!
ஆடைகள் அவிழ்த்து துப்பாக்கி ரவைகளை மண்டைக்குள் புதைத்தது இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு!

ரத்த வெறிபிடித்த அமெரிக்காவும் இந்தியாவும்
தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும்,
இலங்கையின் வளங்களை கொள்ளையடிக்கவுமே இப்போரை நிகழ்த்தியது.

அமெரிக்காவும், இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு கொடுத்த ஆயுதங்களும்
செய்த நாசகர வேலைகளும்
லட்சம் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கவும், லட்சம் மக்கள் அகதிகளாக்கப்படவும் மூலதனமாகியது !

இனவெறி நஞ்சை சிங்கள மக்களிடம் விதைத்து,
தமிழ் மக்களின் பிணங்களை அறுவடை செய்த ராஜபக்சேவின் கோர முகம்
நாடு நெருக்கடியில் சிக்கியபோது இலங்கை மக்களிடம் அம்பலமானது.
இன்று ராஜபக்சே சொந்த மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டது, வரலாறு மக்கள் பக்கம் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.

இனம், மொழி பேதம் கடந்து
வர்க்கமாய் யாவரும் ஒன்றாவோம் !
இப்போராட்டங்களே நமக்கான வழி !
களம் காண்போம் வாருங்கள் உறவுகளே !
விடுதலை காற்றினை சுவாசிக்க !


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை

முடிவுறாப் பயணம்?
புலம்பெயர் தொழிலாளர்கள் கவிதை

இதுநாள் வரையிலான
எங்கள் பயணங்களில்
எதையுமே திட்டமிட்டதில்லை
கொரானா ஊரடங்கிற்கு முன்பு வரை…

அனைத்து ஊரிலும்
அனைத்து ஊர்திகளும் அமைதியாக்கப்பட்டிருந்தது
அரசின் திடீர் அறிவிப்பால்..

நெடுந்தூரம் கடக்க
திட்டம் என்ன இருக்கு?
சிந்தனையில் அமிலம் இறங்கி
சிந்திக்க சிரமமாக்கியது…

எட்டும் தூரம் என்றாலுங்கூட
எழுநூறு மைல் தள்ளி இருக்கிறார்கள்
என் பெற்றோர் உற்றார் உறவுகள்..

குடுவைத் தண்ணீர்
கொஞ்சம் ரொட்டிப் பைகள்
கைப்பிடியளவு தைரியம்
நோயுற்ற மிதிவண்டிகளோடு
நெடும் பயணத்தை நிகழ்த்தினோம்…

உச்சி வெயில் உச்சந்தலையில் விழ
வெஞ்சினமாய் வெப்பக்காற்று வீச
தாகத்திற்கு உதவா கானல்நீர் பாதையெங்கும் பளபளக்க
கல்லும் முள்ளும் கால்களை பிளக்க
தொடர்ந்தது பயணம்…

ஓய்வு கேட்டு உடல் உருக
இளைப்பாற நெஞ்சம் மறுக
மெல்லத் தவழும் மிதிவண்டியும் முனக
இருள்கவிந்த இடமாய் எங்கும் தென்பட
ஓடித் தேய்ந்த மிதிவண்டிகளை ஓரம் நிறுத்தி விட்டு
வல்லிய பசியில் மெல்லிய பாடல் பாடியபடி
ஊரே அடங்கியபின் ரயிலா வரப்போகிறதென்றெண்ணி
தண்டவாளத்தில் தலைவைத்து
இரவுக்கும் களைப்புக்கும் அடிபணிந்து
உறங்கிப் போனோம் …

ஓநாயென ஊளையிட்டு வந்த ரயில்
முந்நூறு மைல்கள் கடந்து வந்த
உடல்களைச் சிதைத்தப் போது
முடிவுக்கு வந்தது
எங்கள் முடிவுறாப் பயணம்…!

ஏகலைவன்

மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி

மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை

பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்?

பாலஸ்தீனம்!
உலக வரைபடத்தில் இருந்து
களவாடப்பட்ட ஓர் தேசம்!

இளம் பிஞ்சுகளின்
இறுதி கதறல்களும்,
மரண ஓலங்களும் கேட்கும்
மரண தேசம்!

காசா வீதிகளில் கட்டிட குவியல்களுக்கு
அடியில் புதைந்து கிடக்கும்
பச்சிளம் குழந்தைகளும்
பிறக்காமலேயே தாயின் கருவறையிலேயே
புதைக்கப்பட்ட சிசுக்களின் கதைகளும்
நம் இதயத்துடிப்பை ஒரு நிமிடம்
நிறுத்திவிட்டே செல்கிறது…

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளினால்
மரணித்த தாயின் மார்பினில் பால் தேடும்
குழந்தைக்குத் தெரிய வாய்ப்பில்லை,
தன் தாயின் மரணச் செய்தி.

இஸ்ரேல் எனும் யூத இனவெறி பிடித்த ஓநாய்
பாலஸ்தீன மக்களின் ரத்தம் குடிக்க
நடத்தும் இறுதி யுத்தமே, இப்போர்!

படிக்க: நாங்கள் ராமனின் அணில்கள் அல்ல! | கவிதை

அமெரிக்கா எனும் மரண வியாபாரியின்
அரசியல் மேலாதிக்க போட்டிக்கும்,
ஆயுத வியாபார முதலைகளுக்கு
தீனிபோடவுமே இப்போர்!

உருக்குலைந்த உடல்களையும்,
எஞ்சிய உயிர்களையும் காப்பாற்ற
தப்பிப்பிழைத்த மக்கள் தஞ்சம் புகுந்த மருத்துவமனை மீது
குண்டு மழை பொழிந்து கொல்கிறது, இனவெறி இஸ்ரேல்.

பசித்த வயிறு ஒட்டிக் கிடக்க,
துண்டு ரொட்டிக்கு மக்களை
திண்டாட வைத்துவிட்டு சத்தமின்றி
மற்றொரு யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

35 ஆயிரத்திற்கும் அதிகமான
பிணங்களை கண்ட பின்பும்
லட்சம் மக்களை அகதிகளாக்கிய பின்பும் அடங்காத
இஸ்ரேலின் ரத்த வெறிக்கு
அடுத்தக் குறி ரஃபா!

ஆனால்,
சுட்டெரிக்கும் சூரிய வெப்பம்
நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல,
சாளர கம்பிகளுக்குப் பின் இருந்துக்கொண்டு
விடுதலைக்கான சுவாசக்காற்றினை
ஒருபோதும் சுவாசிக்க முடியாது
என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம்
போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.

அந்த ஆயுதம்,
அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களை பூகம்பமாய்
ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.

ஆம், அதுவே நமக்குமான ஆயுதம்!
உலகம் முழுவதும் அவ்வாயுதங்களை
ஏந்தி களம் காண்போம்!
பாலஸ்தீன விடுதலைக்கான
விடியலை நோக்கி
பாதைகள் படைப்போம்!

செந்தாழன்

புதிய ஜனநாயகம் – மே 2024 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

மே 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

குறையும் வாக்குப்பதிவு:
பா.ஜ.க-விற்கு மட்டும்தான் நெருக்கடியா?

தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!

பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!

நாடாளுமன்றத் தேர்தல்: மாற்று அரசு கட்டமைப்பைக் கோரும் மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!

பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? வழிகாட்டும் வெளியீடு!

பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை: மோடி கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!

சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை

ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா-இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு

மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி!

 

நாங்கள் ராமனின் அணில்கள் அல்ல! | கவிதை

முன்குறிப்பு: ஏப்ரல் மாதத்தில் மட்டும் வரி என்னும் பெயரில் உழைக்கும் மக்களிடம் மோடி அரசு உறிஞ்சி கொழுத்தது, 2 லட்சம் கோடியை தாண்டுமாம்! மக்கள் மீது வரி விதிப்பதில் அமெரிக்காவையும், சிங்கப்பூரையும் முந்திச் செல்கிறது, பாசிச மோடியின் அம்பானி-அதானி சேவை இந்தியா!

பச்சிளம் பிஞ்சுகள் குடிக்கும் பாலுக்கும் வரி!
பசிக்கு உண்ணும் பிஸ்கட்டுக்கும் வரி!
தயிருக்கு வரி!
மோருக்கு வரி!
பருத்திக்கு வரி!
நூலுக்கு வரி!
ஜவுளிக்கு வரி!
விற்பனைக்கு வரி!
பணக்காரர்களுக்கு ஒரு வரி!
ஏழைகளுக்கு ஒரு வரி!
இங்கு இதுவே நியதி!

பெண்கள் பயன்படுத்தும்
நாப்க்கினுக்கு வரி!
முதியவர்கள் பயன்படுத்தும்
மாத்திரைகளுக்கு வரி!
அதானியின் கஞ்சாவுக்கு மட்டும்
துறைமுகத்தில் என்ட்ரி  ஃப்ரீ!

ஜி.எஸ்.டி-க்கு பின்
சிறுகுறு முதலாளிகளின்
முகவரி கேட்டால்,
பெரும்பாலும் கல்லறைக்கு
வழி சொல்கிறார்கள்.
மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ,
தொழில் என்னாச்சி எனக் கேட்டால்,
“எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள்.
மானம் மறைக்க கோவணம் கட்டியவனின்
கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!

அவசரத்திற்கு மூத்திரம் வந்தாலும்,
இனி அதற்கும் வரி!
பிணங்களை எரிக்கும்
சுடுகாடுகளை விட்டு வைத்திருக்கிறார்கள்.

அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால்,
அதற்கொரு வரிப்போட்டு
செத்தவன் நெற்றிக் காசையும்
களவாண்டு விடுவார்கள்.

இன்னும் எத்தனை வரிகளைதான்
தாங்கும் எங்கள் முதுகுகள்.
பாசிசக் கூட்டமே,
நாங்கள் ஒன்றும் அணில்கள் அல்ல,
உங்கள் ராமனின் வரிகளை
முதுகிலே சுமந்துத் திரிய!

செந்தாழன்

பாசிஸ்டுகளின் “சூரத் ஃபார்முலா”

காவிகளின் “சூரத் ஃபார்முலா”:
தேர்தல் ‘ஜனநாயகத்துக்கு’ வெட்டப்படும் சவக்குழி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மோடி – அமித்ஷா கும்பல், தன்னுடைய அதிகார பலம், பண பலம், ஊடக பலம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மூலம் பல்வேறு சதி நடவடிக்கைகள், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, தன் கட்சியினரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் சுயேட்சை வேட்பாளர்களையும் மிரட்டி, வேட்பு மனுக்களை திரும்பபெற வைத்துக் கொண்டு இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்பு மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி சௌரப் பார்தியால் நிராகரிக்கப்பட்டது. இவர்களின் மனுக்களை முன்மொழிந்திருந்த நால்வரும், மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று தன்னிடம் புகாரளித்ததை அடுத்து வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க : ஃபெலிக்ஸ் சவுக்கோட முடியாது! | தோழர் மருது நேர்காணல்

மேலும், சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 7 சுயேட்சை வேட்பாளர்களும் ஒரு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரும் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். எனவே, முகேஷ் தலாலை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாத காரணத்தால்தான் அவர் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை முன்மொழிந்தவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், பகுஜன் கட்சியின் வேட்பாளர் ஆகியோர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த குண்டர்களாலும், குஜராத் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சியே வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை திரும்பப்பெற்று கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, சுயேட்சை வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு தனது கட்சி கோரிக்கை விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளதே அதற்கு சான்றாகும். அதாவது வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு மிரட்டியதைதான் கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்.

அதேபோல, ஏப்ரல் 29-ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்திபாம், தனது வேட்புமனுவை திரும்பப்பெற்று பா.ஜ.க-வில் இணைந்தார். காந்திபாமின் இந்நடவடிக்கையானது, 2007-ஆம் ஆண்டு அவர் மற்றும் அவருடைய தந்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிலத் தகராறு வழக்கில் சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி) சேர்க்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில நாட்களுக்கு பிறகே நடந்துள்ளது. எனவே இதன்மூலம் காந்திபாமும் பா.ஜ.க குண்டர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தே தன்னுடைய வேட்புமனுவை திரும்பப்பெற்றுக்கொண்டு காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார் என்பதும் உறுதியாகிறது.

அதேபோல, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களில் 12 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். 4 பேர் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களும் பா.ஜ.க குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர்.

16 பேரில் மூவர், தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்காக உள்ளூர் பா.ஜ.க அரசியல்வாதிகள் மற்றும் பா.ஜ.க கட்சியுடன் தொடர்புடையவர்களால் மிரட்டப்பட்டதாக ஆங்கில ஊடகமான “ஸ்க்ரோல்”-யிடம் கூறியுள்ளனர். மேலும் அவர்களில் இருவர், தங்களை குஜராத் போலீசும் மிரட்டியது என்றும் கூறியுள்ளனர். வேட்பு மனுவை திரும்பப்பெற்ற சுயேட்சை வேட்பாளரான ஜிதேந்திர சவுகான், “என் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்; இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள்; அது ஆபத்தில் உள்ளது” என்று தான் வெளியிட்ட காணொளியில் கூறுகிறார்.

காந்திநகரில் பிரஜாதந்திர ஆதார் கட்சி சார்பில் போட்டியிடும் 43 வயதான சுமித்ரா மவுரியா காவிக்குண்டர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறார். காவிக் குண்டர்களின் மிரட்டலில் இருந்து தன்னை தற்காலிகமாக தற்காத்துக் கொள்ள 400 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற சுமித்ரா மௌரியாவையும் குஜராத் போலீசு அவர் இருக்கும் இடத்திற்கே சென்று மிரட்டியுள்ளது. ஆனால், அவர் இன்றுவரை தன்னுடைய வேட்பு மனுவை திரும்பப்பெறவில்லை.

இவ்வாறு, மோடி – அமித்ஷா கும்பல் தற்போது வரை மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுக்களை திரும்பப்பெற வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவுதான் முடிவுற்றுள்ள நிலையில், மேலும் பல எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப்பெற காவிக் குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்படுவர் என்றே கருதத்தோன்றுகிறது. பா.ஜ.க. கும்பலின் இந்நடவடிக்கையானது முதலாளித்துவ ஊடகங்களிலாலேயே “சூரத் ஃபார்முலா” என்று விமர்சிக்கப்படுகிறது.

இந்த மூன்று தொகுதிகளும் இதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். தற்போதைய தேர்தலிலும் பா.ஜ.க-வினரே நிச்சயம் வெற்றி பெறுவர் என்று நம்பப்படுகிறது. தாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க-வினர் கருதுகின்ற தொகுதிகளிலும் ஏன் எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்ட வேண்டும் என்ற கேள்வியை முதலாளித்துவ ஊடகங்களும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் எழுப்புகின்றனர்.

“1984 முதல் சூரத் மற்றும் இந்தூர் மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால், 2024-இல் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு, வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்யப்பட்டுள்ளனர். ஏன்?” என்று தன்னுடைய “எக்ஸ்” பதிவில் கேள்வியெழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

படிக்க : மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி

பா.ஜ.க கும்பல் தன்னுடைய தோல்வி பயத்தால் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜ.க-வின் இந்நடவடிக்கைகளை அந்த அடிப்படையில் பார்க்க முடியாது. மாறாக, பா.ஜ.க கும்பலின் நீண்டகால கனவான ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் ஒரே கட்சி என்ற நோக்கத்தின் அடிப்படையிலான “எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா” என்பதன் ஓர் அங்கமாகும்.

அந்த நோக்கத்திலிருந்துதான், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னுடைய அடியாட்படைகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுவது, அடிபணிய வைப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க. கும்பல், தற்போது சுயேட்சை வேட்பாளர்களையும் காவிக் குண்டர்கள் மூலமும் போலீசின் மூலமும் மிரட்டத் தொடங்கியுள்ளது.

இனி வருங்காலங்களில் சூரத் ஃபார்முலா அடிப்படையிலான நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். அதன்மூலம், சூரத்தை போன்று தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட ஆட்களே இல்லாத நிலையை உருவாக்க காவிக்கும்பல் விழையும்.

இவ்வாறு இந்த பெயரளவிலான ஜனநாயக அரசுக் கட்டமைப்பை தங்களுடைய இந்துராஷ்டிர அரசுக் கட்டமைப்பாக படிப்படியாக மாற்றி வருகின்றனர் பாசிஸ்டுகள்.

கதிர்

மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி

மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!