Saturday, July 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 48

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

நாளை (28-05-2024) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த மூன்று நாடுகளின் பிரதமர்களும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த புதன் கிழமையன்று (22-05-2024) செய்தியாளர்களை சந்தித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறினார். மேலும், “நிரந்தரத் தீர்வு என்பது இரு நாடுகளின் ஆதரவின் மூலம் மட்டுமே அடையப்படும். பாலஸ்தீன மக்களுக்கு ”சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படை மற்றும் சுதந்திரமான உரிமை உள்ளது. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் அந்தந்த நாடுகளில் நிம்மதியாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு” என்றும் கூறினார்.


படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!


ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடந்த வியாழக் கிழமையன்று (23-05-2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, அமைதி, நீதி மற்றும் உறுதித்தன்மை ஆகிய மூன்று காரணங்களுக்காக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாகக் கூறினார்.

டப்ளினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், “பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது அமைதியைக் கொண்டு வருவதற்கு மிகவும் தேவையான நடவடிக்கை” என்று கூறினார்.

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ள நிலையில், இதற்கு இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மூன்று நாடுகளில் இருந்து தனது நாட்டு தூதர்களையும் திரும்ப அழைத்துள்ளது.

மற்றொருபுறம், ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை ஹமாஸ் அமைப்பு மற்றும் பாலஸ்தீன அரசு வரவேற்றுள்ளது. இந்த முடிவு சர்வதேச அரங்கில் முக்கியமான மற்றும் தீர்க்கமான திருப்புமுனையாக அமையும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை வரவேற்றுள்ள சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், இதுவொரு நேர்மறையான நடவடிக்கை என்றும் மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1967-ஆம் ஆண்டு, பாலஸ்தீன அரசை அங்கீகரிக்குமாறு சர்வதேச நாடுகளை, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை 140 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதில் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 22 நாடுகளை கொண்ட அரபுக் குழு, 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் 120 உறுப்பினர்களைக் கொண்ட அணிசேரா இயக்கம் ஆகியவையும் அடங்கும்.

1988-இல்அப்போதைய பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் பாலஸ்தீனத்திற்கான கொடியை அறிமுகப்படுத்தி பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை கோரியபோது, அதனை முதன்முதலில் அங்கீகரித்தது அல்ஜீரியாதான். அதன் பிறகு துருக்கிவும், இந்தியாவும் ஆதரித்தன.

பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளில் ஸ்வீடனை தவிர வேறு எந்த நாடும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டனை போல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.


படிக்க: பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை


ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நார்வே, ஸ்பெயின், அயர்லாந்த் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முடிவானது முக்கியத்துவம் வாய்ந்தது. 200 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்கள்தான் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் முடிவை நோக்கி நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைத் தள்ளியுள்ளது.

அந்தவகையில் உலகம் முழுக்க நடக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும், மக்கள் மத்தியில் உருவாகிவரும் பாலஸ்தீன ஆதரவு மனநிலையும்தான் பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் தொடுத்துள்ள இன அழிப்பு போருக்கு முடிவுக்கட்டி பாலஸ்தீன விடுதலைக்கு வழிவகுக்கும்.


தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!

டந்த பத்தாண்டுகால பாசிச பேயாட்சியில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் படுகுழிக்கு தள்ளிய பா.ஜ.க. கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “ஆப்கி பார் 400 பார்” (இம்முறை 400-ஐ தாண்டும்), “பா.ஜ.க-விற்கு 370, என்.டி.ஏ-க்கு 400” போன்ற கோஷங்களை முன்வைத்து மிருகப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போகிறது என்ற பிம்பத்தை தேர்தலுக்கு தொடங்குவதற்கு முன்னரே கட்டமைக்க தொடங்கியது. ஆனால், தற்போது இரண்டுகட்ட தேர்தலே நிறைவடைந்துள்ள நிலையில் பா.ஜ.க. கட்டமைத்துவந்த பிம்பம் சுக்குநூறாகி வருகிறது.

“அஞ்சி நடுங்கும் பா.ஜ.க. கும்பல்”, “150 தாண்டாது”, “பழிவாங்க காத்திருக்கும் அமைச்சர்கள், மோடிய கழட்டி விட்டுருவாங்க”,“மோடிக்கு தோல்வி பயம் வந்துடுச்சி, அவர் கண்ணுல அது தெரியுது” என மோடிக் கும்பலை நக்கலடித்துக் கொண்டிருக்கின்றன யூ-டியூப் சேனல்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள இந்தி, ஆங்கில ஊடகங்களும் சர்வதேச பத்திரிகைகளும் கூட மோடி கும்பல் நெருக்கடியில் உள்ளதை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன.


படிக்க : அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி! | மக்கள் அதிகாரம்


ஏறக்குறைய, பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ளது என்பதை அனைவருமே வெவ்வேறு வார்த்தைகளில் பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், பாசிசக் கும்பலின் இத்தோல்வி முகமானது நடந்துகொண்டிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் பா.ஜ.க-விற்கு பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆதிக்கச் சாதியினர் போராட்டம்
சரியும் பாசிஸ்டுகளின் மக்கள் அடித்தளம்

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததற்கு ஆதிக்க சாதியினரின் வாக்குகள் முக்கிய பங்காற்றின. அச்சமயத்தில் ஆதிக்கச் சாதிகளை சேர்ந்தோர் மகா-பஞ்சாயத்துகளைக் கூட்டி ஒட்டுமொத்த மக்களும் பா.ஜ.க-விற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ.க-வை வெற்றியடையச் செய்தனர். இதன் காரணமாக, 56 சதவிகித ஆதிக்க சாதியினரின் வாக்குகள் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு விழுந்தது. இது 2009 நாடாளுமன்றத்தேர்தலுடன் ஒப்பிடும்போது 30 சதவிகிதம் அதிகமாகும். பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்திபேசும் மாநிலங்கள் இந்த வாக்கு சதவிகிதத்தில் பெரும்பகுதியை கொண்டிருந்தன. ஆனால், தற்போதைய 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. வெற்றிப்பெற காரணமாக இருந்த ஜாட், ராஜ்புத், மராத்தா உள்ளிட்ட ஆதிக்கச் சாதிகளை சேர்ந்த கணிசமானோர் பா.ஜ.க-விற்கு எதிராக திரும்பியுள்ளனர்.

பல ஆண்டுகளாக பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்துவந்த பணக்கார விவசாயிகளான ஜாட் சாதியினர், மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான “டெல்லி சலோ” போராட்டத்தில் பா.ஜ.க-வின் கோர முகத்தைக் கண்டுக்கொண்டனர். இப்போராட்டம் விவசாயிகளை ஜனநாயகப்படுத்தியதோடு ஜாட் சாதியில் கணிசமானோரை பா.ஜ.க-விற்கு எதிராக திருப்பியது. பா.ஜ.க-விற்கு எதிராக போராடும் மற்ற பிரிவினருடனும் விவசாயிகள் கைக்கோர்க்க ஆரம்பித்தனர்.

“ஹரியானாவின் சகோதரிகள்” என்று அழைக்கப்படும் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வல்லுறவு செய்த பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யுமாறு போராடிய வீராங்கனைகளை மோடி அரசு கொடூரமாக ஒடுக்கியது ஜாட் சாதியினரை ஆத்திரமூட்டியது. குறிப்பாக, மல்யுத்த வீராங்கனைகள் ஜாட் சாதியைச் சேர்ந்த€வர்கள் என்பதால் இப்போராட்டம் ஹரியானாவில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் வசிக்கும் ஜாட் சாதியினரிடமும் கடும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்நிலையில், பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷனின் மகனுக்கு பா.ஜ.க-வில் எம்.பி. சீட்டு கொடுக்கப்பட்டுள்ளதும் டெல்லி எல்லைகளில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை மோடி அரசு மிருகத்தனமாக ஒடுக்கிவருவதும் ஜாட்களிடம் இன்னும் எதிர்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில் ஜாட்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றகட்சியாக திகழ்ந்த பா.ஜ.க., இத்தேர்தலில் ஜாட் அல்லாதோரின் வாக்குகளை குறிவைத்து தேர்தலை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்த மற்றொரு சாதியினரான ராஜ்புத் மக்கள் குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பசுவளைய மாநிலங்களில் தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. பர்ஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சாதியினரை இழிவுப்படுத்தும் விதமாக பேசியது ராஜ்புத் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட ராஜ்புத் சாதியினர் வேட்பாளராக நிற்கும் ரூபாலாவை திரும்ப பெறக்கோரி பா.ஜ.க-விற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களையும் மாநாடுகளையும் முன்னெடுத்தனர். இப்போராட்டத்தால் அஞ்சி நடுங்கிய பாசிசக் கும்பல், ராஜ்புத் மக்களை சமாதானம் செய்வதற்காக பர்ஷோத்தம் ரூபாலாவை மன்னிப்பு கேட்க வைப்பது, ராஜ்புத் சாதியைச் சேர்ந்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வைத்து ராஜ்புத் மக்களிடம் சமாதானம் பேசுவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக பெண்கள்  முன்நின்று போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


படிக்க : எட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!


மேலும், குஜராத் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மகாபஞ்சாயத்தை நடத்திய ராஜ்புத்கள் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை புறக்கணிக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றினர். “2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா பஞ்சாயத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவியது. பின்னர் அவர்கள் எங்களை புறக்கணித்தனர். இங்கு எந்த வேலையும் இல்லை, எந்த திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை. மக்கள் அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக உள்ளனர். இனி, இந்த நிலமே பா.ஜ.க-வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்”  என பாசிஸ்டுகளை கதிகலங்கச் செய்தனர்.

அதேபோல், ஒன்பது சதவிகித ராஜ்புத் மக்களை கொண்ட ராஜஸ்தானில் இப்போராட்டம் பா.ஜ.க-விற்கு தேர்தலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  பா.ஜ.க. மீது ஆத்திரத்தில் உள்ள ராஜ்புத்களில் கணிசமானோர் தேர்தலை புறக்கணித்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு விகிதம் பெரியளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 25 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க-விற்கு இம்முறை ராஜஸ்தான் பெரும் சவாலாக இருக்கும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்புத் மக்களின் இப்போராட்டம் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஒருபுறம் ரூபாலாவை திரும்பபெறுமாறு ராஜ்புத் மக்கள் தேர்தல் சமயத்தில் நெருக்கடி கொண்டுக்கின்றனர். மற்றொருபுறம், படேல் சாதியைச் சேர்ந்த ரூபாலாவை திரும்ப பெற்றால் படேல் சாதி மக்களிடமும் ராஜ்புத் சாதி அல்லாத மக்களிடமும் எதிர்ப்பு கிளம்பும். இதனால் பா.ஜ.க. கும்பல் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது.

அதேபோல், 33 சதவிகித மராத்தா சாதியினரைக் கொண்ட மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடுக்கோரி மராத்தா மக்கள் நடத்திய போராட்டம் இத்தேர்தலில் பா.ஜ.க-விற்கு பின்னடைவாக மாறியுள்ளது கடந்த காலங்களில் பெரும்பாலும் பா.ஜ.க-வை ஆதரித்துவந்த மராத்தா சாதியினர் பத்து சதவிகித இசஒதுக்கீடுக்கோரி கடந்தாண்டு இறுதியில் பிரம்மாண்டமான போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொளிக்கும் என்று அஞ்சிய பா.ஜ.க-வின் அடிமை ஏக்நாத் ஷிண்டே அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் மராத்தா மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றியது.

ஆனால், இச்சட்டம் நீதிமன்றத்தின் முன் நிற்காது என்பதையும் மராத்தா மக்களின் கோவத்தை தணிக்க பா.ஜ.க. மேற்கொண்ட கண்துடைப்பு நாடகம் என்பதையும் மராத்தா மக்கள் உணர்ந்துகொண்டனர். மேலும், ஏக்நாத் ஷிண்டே வெறும் பொம்மைதான் என்றுணர்ந்துள்ள மக்கள் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் தங்களை ஏமாற்றியதாக நம்புவதால் மக்களின் கோவம் நேரடியாக பா.ஜ.க-விற்கு எதிராகத் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, மராத்தா சாதியில் ஒரு பிரிவினர் தேர்தலை புறக்கணிக்கும் நிலையில் மற்றொரு பிரிவினர் பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.

பா.ஜ.க-வின் ‘கோட்டை’ என்று சொல்லப்பட்ட பசுவளைய மாநிலங்களில், பா.ஜ.க. ஆட்சிக்கு வர ஆதரவாக இருந்த ஆதிக்கச் சாதியினர் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பது பாசிசக் கும்பல் எதிர்ப்பார்க்காதப் பெரிய நெருக்கடியாகும். அது தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் தாக்கம் புரிந்து வருகிறது.


படிக்க : புதிய ஜனநாயகம் – மே 2024 | மின்னிதழ்


மேலும், ஆதிக்கச் சாதியினரின் எதிர்ப்பு வெறுமனே வாக்குவங்கி சரிவு மட்டுமல்ல. பா.ஜ.க-வின் மக்கள் அடித்தளமே கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. சாதிவெறி, மதவெறியைத் தூண்டி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தன்னுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்ளும் பா.ஜ.க-வின் உத்தி தற்போது பா.ஜ.க-விற்கே எதிராகத் திரும்பியுள்ளது.

மதவெறி போதையை கலைக்கும்
மக்கள் போராட்டங்கள்

கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசு  பொதுத்துறைகள் நிறுவனங்களை கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்த்து விட்டு,  அரசுத்துறை வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தமயமாக்ககி வருவதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளில் அரசு வேலைவாய்ப்புகள் பெரியளவில் குறைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலை இந்தியா முழுவதும் தாக்கம் செலுத்தினாலும் தனியார்த்துறை வேலைவாய்ப்புகள் உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களைக் காட்டிலும், அரசு வேலைகளை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள வடமாநிலங்களில் கோரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்மைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்னொருபுறம், கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. இந்தியாவில் வறுமையும் ஏற்றத்தாழ்வும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை பல ஆய்வறிக்கைகள் தரவுகளோடு நிரூபித்துள்ளன. ஆனால், இந்த கோரநிலையை உணர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு பெரும்பான்மை மக்களுக்கு மதவெறி போதை ஊட்டப்பட்டிருந்தது. ஆனால், மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பல பிரிவு மக்கள் பா.ஜ.க.வின் பாசிச திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தது. மக்களிடம் உள்ள மதவெறி போதையை கலைத்து மக்களை எதார்த்தத்தைக் காணச் செய்துள்ளது.

சான்றாக, கடந்த 2022-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த ராணுவத்தை கார்ப்ப்பரேட்மயமாக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போர்குணமிக்க இளைஞர்களின் போராட்டம் வெடித்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் எதிர்ப்பு இன்னமும் நீர்த்துப் போகாமல் அப்படியே உள்ளது,

அதேப்போல். இந்தாண்டு தொடக்கத்தில் போலீஸ் தேர்வு முறைகேடுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டம் மற்றொரு சான்றாகும். அம்மாநிலத்தில், வெறும் 67,000 போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு 48 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் போட்டியிட்டனர். ஆனால், இத்தேர்வில் பல முறைகேடுகளும் வினாத்தாள் கசிவுகளும் நடந்தது அம்பலமானதையடுத்து, மறுத்தேர்வு நடத்த வேண்டுமென்று மாநிலம் முழுவதும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராடினர். சாதி மற்றும் மதங்களைக் கடந்து பல ஆயிரம் இளைஞர்கள் பிரயாக்ராஜில் உள்ள உத்தரப்பிரதேச பொதுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தை நடத்தி பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இளைஞர்களின் போராட்டத்தினால் பணிந்த யோகி ஆதித்யநாத் அரசு அத்தேர்வை ரத்து செய்தது.

இதேபோல், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலைவாய்ப்பிற்காகவும் அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கு எதிராகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது தற்போது தொடர் கதையாகியுள்ளது. இதன்விளைவாக, மக்களிடையே பா.ஜ.க.வின் மதவெறி பிரச்சாரம் எடுபடாமல், வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் இந்தியாவின் முதன்மையான பிரச்சினையாக மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

தேர்தல் களத்தில் எதிரொளித்த நெருக்கடி

மக்கள் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளால் முதல் இரண்டு கட்ட தேர்தலில் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய அடியை ஏற்படுத்தியது. முதல்கட்ட தேர்தல் முடிந்தவுடனேயே மோடியின் பேச்சில் பயம் தெரிவதாக பலர் சமூக ஊடகங்களில் பேசவும் எழுதத் தொடங்கினர்.

ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என மோடி கும்பல் முயற்சித்துவந்த தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களின் வாக்குப்பதிவு நிலவரம் பா.ஜ.க-விற்கு ஏமாற்றமளித்ததோடு கர்நாடகாவும் இம்முறை கைக் கொடுக்காது என தகவல்கள் வெளியாகின.

வடக்கிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை, மணிப்பூரில் குக்கி இன மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்னின்று நடத்திய கலவரத்தின் காரணமாக குக்கி இன மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெய்தி மக்களும் வாக்களிப்பதில் அக்கறை காட்டவில்லை. மேலும், நாகாலாந்தில் அங்குள்ள ஆயுதக் குழுக்களுடன் மோசமான அணுகுமுறையை மேற்கொண்டதாலும் கடுமையாக ஒடுக்கி வருவதாலும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

கடந்த தேர்தல்களில் காங்கிரசை விட ஒன்றிரண்டு சதவிகித வாக்குகள் மட்டுமே அதிகம் பெறுவதன் மூலம் கணிசமான தொகுதிகளில் வெற்றியை தக்கவைத்துள்ள பா.ஜ.க-விற்கு, இத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைவதானது மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

இவ்வாறு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்கு விகிதம் குறைவது பா.ஜ.க-வை நேரடியாக பாதிக்கும் என்பதால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஊழியர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்களிக்க வலியுறுத்த வேண்டுமென்றும் மக்கள் வாக்களித்தனரா என்று சோதிக்குமாறும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.

மேலும், வாக்கு விகிதம் குறைவது மோடி பிராண்டுக்கு விழுந்த அடியாகும். எப்போது போல இத்தேர்தலிலும் மோடியே நட்சத்திர பிரச்சாரகராக முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வாக்களிக்க வராததது மோடியின் பிராண்ட் போணியாகாததையேக் காட்டுகிறது.

மோடியின் வெறுப்பு பேச்சு
தோல்வி பயத்தின் வெளிப்பாடு

இத்தகைய கடுமையான நெருக்கடி காரணமாக எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மோடி-அமித்ஷா கும்பல், கடைசி அஸ்திரமான மதவெறி பிரச்சாரத்தை கையிலெடுத்தது. எதிர்க்கட்சிகளுக்கு இந்து-விரோதி சாயம் பூசுவது, இஸ்லாமிய வெறுப்பு பேச்சு பேசுவது, போணியாகாத பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தூக்கியெறிந்துவிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கொண்டு இஸ்லாமிய வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என அப்பட்டமான இந்துமுனைவாக்க வேலையில் இறங்கியது. இதனை மோடியே முன்னின்று தொடங்கி வைத்தார்.

இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, தோல்வி பயம் தலைக்கேறிய மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று பேசியது சர்வதேச அளவில் விவாதமானது. ஏன் ‘விஷ்வகுரு’ முதல்கட்ட தேர்தலுக்கு பிறகு தனது முகமூடி நழுவ அனுமதித்தார்? என பத்திரிகைகள் கட்டுரை எழுதின.


படிக்க : முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை


உண்மையில், குஜராத் படுகொலை குற்றவாளியான மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ஆளும் வர்க்க கும்பலும் முகமூடிகளை அணிவித்து 2014 தேர்தலில் ‘வளர்ச்சி நாயகனாக’ முன்னிறுத்தியது. ஆனால், அடுக்கடுக்கான மக்கள் போராட்டங்களால் அந்த முகமூடி கிழித்தெறியப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் தனது சுயரூபத்தை காட்ட வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார். ஆனால், இந்துமதவெறி ஊட்டப்பட்ட வாக்காளர்ப் பிரிவினர் மத்தியில் மோடியின் இந்துத்துவ பிரச்சாரம் தாக்கம் செலுத்தினாலும், போராட்டங்களால் விழிப்படைந்துள்ள பெரும்பான்மை மக்கள் முன்னர் போல் மோடியின் மதவெறி பேச்சுக்கு பலியாகப்போவதில்லை.

எனவே, இதற்கடுத்தடுத்த கட்டதேர்தலில் இந்துமதவெறி பிரச்சாரத்தை தொடரலாமா? கைவிட்டுவிடலாமா? எனப் புரியாமல் மோடி-அமித்ஷா கும்பல் தலையை பிய்த்துக்கொள்கிறது.

மோடிக்கும்பலை திக்குமுக்காட வைப்பது மக்கள் போராட்டங்களே

பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு இத்தேர்தலில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும் ஆதிக்கச் சாதியினரின் எதிர்ப்பு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குவிகிதம் குறைவது, மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை கண்ணுற்றுள்ளது போன்றவையெல்லாம் மோடி-அமித்ஷா தோல்விமுகத்தில் இருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இத்தோல்வி முகத்திற்கு, பா.ஜ.க. கட்சிக்குள் உள்ள நெருக்கடி, ஆளும் வர்க்க முரண்பாடு, இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் போன்றவையே காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில், களத்தில் நடந்த மக்கள் போராட்டங்களே பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியது, பா.ஜ.க தற்போது தேர்தல் களத்தில் சந்தித்துவரும் நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படையானது மக்கள் போராட்டங்களே என்பதை யாரும் பேசுவதில்லை.

கடந்த 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமன் கோவில் தீர்ப்பு, சி.ஏ.ஏ. சட்டம் நிறைவேற்றம் என தன்னுடைய நிகழ்ச்சிநிரல்களை மூர்க்கமாக நடைமுறைப்படுத்த தொடங்கியது. இதற்கிடையே பா.ஜ.க-விற்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு இறுதியில் சி.ஏ.ஏ-க்கு எதிராக இந்தியா முழுவதும் கிளர்ந்தெழுந்த இஸ்லாமிய மக்களின் போராட்டம் பாசிச கும்பலுக்கு தோல்வி முகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது. அதனைத்தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் முன்னெடுத்த “டெல்லி சலோ” போராட்டம், அக்கும்பலை தோல்வி முகத்திற்கு அடித்து வீழ்த்தியது.

தற்போது வரை பாசிசக் கும்பலால் இந்த தோல்வி முகத்திலிருந்து மீள முடியவில்லை. அடுத்தடுத்து நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்தி வந்தாலும் அதிகபட்சம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மக்கள் போராட்டங்கள் மேலெழுந்து பாசிசக் கும்பலை திக்குமுக்காடச் செய்கின்றன. குறிப்பாக, மணிப்பூரில் தனது காவி-கார்ப்பரேட் நலனிற்காக குக்கி பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் பா.ஜ.க கும்பலுக்கு எதிராகவே திரும்ப ஆரம்பித்தது. குக்கி இன பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பா.ஜ.க-விற்கு எதிராக குரல் எழுப்ப வைத்தது.

2023-ஆம் ஆண்டு இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, ராமர் கோவில் திறப்பு, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம், சி.ஏ.ஏ. அமல் என அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல்களை மோடி-அமித்ஷா கும்பல் அமல்படுத்தி வந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் புகைக்குப்பி வீசிய சம்பவம், மூன்று தண்டனைத் திருத்தச்சட்ட அம்சங்களுக்கு எதிராக இந்திபேசும் மாநிலங்களில் நடந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் போன்றவை பா.ஜ.க-வை பயமுறுத்தி வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டமானது பாசிசக் கும்பலின் நெருக்கடியை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த மக்கள் போராட்டங்களின் தொடர்ச்சியாகதான் இன்று தேர்தல்களத்தில் பா.ஜ.க கும்பல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

ஆனால், பா.ஜ.க தேர்தல் களத்தில் சந்திக்கும் நெருக்கடிகளை பார்த்து நம்பிக்கையடைந்து பேசும் எதிர்க்கட்சிகளுக்கும் மற்றவர்களுக்கும் இத்தனை ஆண்டுகளாக நடந்த மக்கள் போராட்டங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. சிலர், “ஒருவேளை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிப்பெற்றுவிட்டால் அமைதிவழி மக்கள் போராட்டங்களை கட்டியமைக்கலாம்” என்கிறார்கள். இது இவர்கள், பா.ஜ.க.-வை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பதற்கு மக்கள் போராட்டங்களை  எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.


படிக்க : குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?


மாறாக எதிர்க்கட்சிகளுக்கே மக்கள் போராட்டங்கள்தான் பல கட்டங்களில்  நம்பிக்கையளித்துள்ளது. சான்றாக, பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்தான் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் நகர்வை ஏற்படுத்தியது. தற்போது தேர்தலில் கூட பா.ஜ.க. கும்பலுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், பா.ஜ.க. எம்.பி-க்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி மக்கள் நிராகரித்தாலும் மாற்று கொள்கை வைத்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்க காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. பா.ஜ.க. எதிர்ப்பு மற்றும் கவர்ச்சிவாதத்தை மட்டுமே நம்பி எதிர்க்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த கையாலாகத்தனம் மக்கள் போராட்டங்களால் நெருக்கடியில் இருக்கும் பா.ஜ.க-விற்குதான் ஆதரவாக போய் முடியும்.

எனவே, பா.ஜ.க கும்பலை அச்சுறுத்தும் ஒரே ஆயுதமாக இருக்கும் மக்கள்  போராட்டத்தை கட்டியெழுப்புவது மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கும், பாசிச கும்பலுக்கு முறியடிப்பதற்கான ஒரே வழி! ஆகவே, பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுத்து, பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை நோக்கி முன்னேறுவோம்!

துலிபா
புதிய ஜனநாயகம்
மே 2024

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் | பாகம் 2

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின்
ஆறாம் ஆண்டு நினைவேந்தல் | பாகம் 2

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?

ழு கட்டங்களாக நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. நடந்துமுடிந்த இரண்டு கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த இறுதி புள்ளிவிவரங்களை ஏப்ரல் 30-ஆம் தேதி  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று இரவு 7 மணிக்கு, முதற்கட்ட தேர்தலில் 60 சதவிகிதமும் இரண்டாம் கட்டத்தில் 60.96 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு தரவுகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஆறு சதவிகிதம் வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், முதற்கட்ட வாக்குப்பதிவு (ஏப்ரல் 19) நடந்து 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (ஏப்ரல் 26) நடந்து நான்கு நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் இப்புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதிலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவிக்காமல் வெறுமனே வாக்கு சதவிகிதத்தை மட்டும் அறிவித்துள்ளது.


படிக்க: இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!


இதுகுறித்து தனது “எக்ஸ்” பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘இறுதி வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் இவ்வளவு காலதாமதம் செய்வது இதுவே முதன்முறை. கடந்த காலங்களில், வாக்களித்த உடனேயே அல்லது 24 மணி நேரத்திற்குள் இறுதி வாக்காளர் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிடும்” எனக் கூறியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் முன்பு வெளியிட்ட சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகித வாக்குகள் உயர்ந்துள்ளது கவலையளிப்பதாகவும், பா.ஜ.க-விற்கு ஆதரவு இல்லாத இடங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். சி.பி.ஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இதுகுறித்து விளக்கமளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தற்போதுவரை வாக்கு சதவிகிதம் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தையும், வாக்கு எண்ணிக்கையை அறிவிக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலையும் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.

இதேபோல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நிறைவடைந்த அன்று மாலை 7 மணி நிலவரப்படி, 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். ஆனால், அதன்பிறகு தேர்தல் ஆணையம் நள்ளிரவில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த பத்திரிகையாளர்கள், ‘‘பெரும்பாலும் தேர்தல் முடிந்த பிறகு அறிவிக்கும் வாக்கு சதவிகிதத்திற்கும், அதிகாரப்பூர்வ வாக்கு சதவிகிதத்திற்கும் இடையில் 1 முதல் 1.5 சதவிகிதம் அளவிற்குதான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இம்முறை சில இடங்களில் சுமார் 11 சதவிகிதம் வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியினர் வெற்றிப்பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. ஆனால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே, இரண்டு கட்ட தேர்தலின்போது பல இடங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.க-விற்கே வாக்கு பதிவாகிறது என எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். தற்போது தொடர்ச்சியாக வாக்குப்பதிவு விவரங்களில் முன்னுக்குபின் முரணான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இவையெல்லாம், தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.

பா.ஜ.க-விற்கு முற்றும் நெருக்கடி
ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கைகள் விவாதத்தை கிளப்பியிருக்கும் அதேசூழலில், கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை காட்டிலும் இத்தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்திருப்பது பா.ஜ.க-விற்கு நெருக்கடியாக மாறியுள்ளதும் விவாதப்பொருளாகியுள்ளது.

தற்போதய தேர்தலை போலவே ஏழு கட்டங்களாக நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விகிதம் கிட்டதட்ட நான்கு சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விகிதம் மூன்று சதவிகிதமும் குறைந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த 21 மாநிலங்களில் சுமார் 19 மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களான (Hindi Heartland States) உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் 2019 தேர்தலை விட வாக்கு சதவிகிதம் அதிகளவு குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவது ஒரு போக்காக மாறியுள்ளது. ஏற்கெனவே தேர்தல் களத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் பா.ஜ.க-விற்கு தன்னுடைய செல்வாக்கு மண்டலமாக திகழ்ந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைந்து வருவது தலைவலியாக மாறியிருக்கிறது.

வாக்குப்பதிவு நடந்த மாநிலங்களை இந்திபேசும் மாநிலங்கள், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் யூனியன் பிரதேசங்கள்) என மூன்று குழுக்களாக பிரித்து பகுப்பாய்வு செய்து ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையதளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதற்கட்ட வாக்குப்பதிவில் இந்தி பேசும் மாநிலங்களில்தான் அதிகளவு வாக்குப்பதிவு குறைந்துள்ளது எனவும் அதைத்தொடர்ந்து கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக தேர்தல் நடந்த 102 தொகுதிகளில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது என்.டி.ஏ. கூட்டணி 50 தொகுதிகளையும் ‘‘இந்தியா கூட்டணி’‘ கட்சிகள் 49 தொகுதிகளையும் வென்றிருந்தது. தற்போது  என்.டி.ஏ. கூட்டணியிடம் உள்ள 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு 5.1 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் ‘‘இந்தியா கூட்டணி” கட்சிகள் வென்றிருந்த 49 தொகுதிகளில் 2.4 சதவிகிதம்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தரவுகள், பா.ஜ.க. வெற்றிப்பெற்ற இடங்களில்தான் வாக்குப்பதிவு அதிகளவு குறைகிறது என்பதைத் துலக்கமாகக் காட்டுகின்றன. இக்கருத்து மேலும் வலுசேர்க்கும் விதமாக பா.ஜ.க-வின் “இரட்டை இன்ஜின் அரசு” செயல்படும் இடங்களில் வாக்குப்பதிவு அதிகளவில் குறைந்துள்ளதாக ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” கட்டுரை குறிப்பிடுகிறது.

சான்றாக, ராஜஸ்தானில் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 74.62 சதவிகிதம் வாக்குகள் பதிவாகிருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக நடந்த தேர்தலில் 57.65 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 17 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. ராஜஸ்தான் தேர்தலோடு இணைத்து நடத்தப்பட்ட மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 76.22 சதிவிகித வாக்குகள் பதிவாகிருந்த நிலையில், தற்போது முதற்கட்டத்தில் 67.75 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. 9 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.

இதேபோல், உத்தரப்பிரதேசத்தில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற காசியாபாத் தொகுதியில், வாக்குப்பதிவு 55.89 சதவிகிதத்திலிருந்து 49.88 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-இல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்ற கௌதம புத்தா நகரில், 60.49 சதவிகிதத்திலிருந்து 53.63 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், பா.ஜ.க. மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதால் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது என பா.ஜ.க-வை சேர்ந்தவர்களே விளக்குவதாக தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வின் மாவட்ட பிரச்சார மேலாளர்களில் ஒருவரான அனிருத் சிங், ‘‘ராமர் கோவில் திறப்பு ஏற்படுத்திய தாக்கம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், ஏராளமான தேர்தல் பலன்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், கோவில் திறப்பு விழாவிற்குப் பிறகு மோடிக்கான மக்கள் ஆதரவைப் பெறுவதில் பா.ஜ.க. தோல்வியடைந்துவிட்டது. மத உணர்வானது வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் பெருமளவில் மாறிவிட்டது” என்றுக் கூறியுள்ளதை அக்கட்டுரை குறிப்பிடுகிறது.


படிக்க: எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்


மேலும், பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளர்கள் சிலரே, ‘‘இம்முறை நோட்டாதான் (None of the above) சிறந்த தேர்வு” என வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டுள்ளார்கள். இது குறித்து பேசிய பா.ஜ.க. செயற்பாட்டாளர் ஒருவர், ‘‘இந்த முறை எந்த உற்சாகமும் இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வருமானம் உயராமல் இருப்பது மக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது. உள்ளூர் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் கூட பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத பயனற்ற அரசியலை புரிந்துக்கொள்ள பத்தாண்டு காலம் மிகவும் அதிகம். ஆனால், இம்முறை நாங்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் எங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்ளவில்லை” என்றார்.

இவ்வாறு பா.ஜ.க. ஆதரவாளர்களே அக்கட்சிக்கு வாக்களிக்க விரும்பாததும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவதும் பா.ஜ.க-விற்கு பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி இல்லையா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் குறைவதற்கான காரணமாக பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மோடி தோற்கடிக்க முடியாதவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை; மோடியின் மதவெறுப்பு அரசியலால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்; மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்விரோத திட்டங்கள், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவை மக்களை ஒருவித சோர்வு (Fatigue) மனநிலைக்கு தள்ளிவிட்டது என பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதில் பாதி உண்மை உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் மக்கள் சிலர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். சான்றாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்துகாவுன் என்ற மாவட்டத்தில் இருந்து பேசிய விகாஷ் குமார், ‘‘பா.ஜ.க. தன்னுடைய ஆட்சியின் சாதனைகள் மூலம் வாக்குகளை கேட்பதற்கு மாறாக வகுப்புவாதத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்வதால் நாங்கள் ஆர்வத்தை இழந்துவிட்டோம்” என்று கூறியுள்ளார். அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் கடை வைத்துள்ள இஸ்லாமியரான கமல் அப்பாஸ், ‘‘தேர்தலில் மோடி கட்சிதான் வெற்றிப்பெறும் என்பதால் வாக்களிக்க தனது சொந்த ஊரான பிரயாக்ராஜுக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க மாட்டேன். பெரும்பான்மை ஆட்சியில் சிறுபான்மையினரின் வாக்குகள் எங்கும் நிற்காது. நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை” என்றுக் கூறியுள்ளார்.

ஆனால், வாக்குசதவிகிதம் குறைவதற்கு இது காரணம் இல்லை. பா.ஜ.க. வேண்டாம் என்று முடிவெடுத்துள்ள, பா.ஜ.க. ஆதரவாளர்கள் உட்பட பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பா.ஜ.க-விற்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்காமல் ஏன் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்பதில்தான் வாக்குப்பதிவு குறைவதற்கான முழுமையான காரணம் அடங்கியுள்ளது.

வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளதை தொகுதி வாரியாக பரிசீலிக்கும்போது, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதை காண முடிகிறது. உத்தரப்பிரதேசம் கைரானாவில் 2019-இல் 67.45 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு தற்போது 62.46 சதவிகிதமாக குறைந்துள்ளது. முசாபர்நகர் தொகுதியில் 68.42 சதவிகிதத்திலிருந்து 62.46 சதவிகிதமாகவும், மொராதாபாத் தொகுதியில் 65.46 சதவிகிதத்திலிருந்து 62.18 சதவிகிதமாகவும், ராம்பூர் தொகுதியில் 63.29 சதவிகிதத்திலிருந்து 55.85 சதவிகிதமாகவும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இஸ்லாமியர்கள் பா.ஜ.க-வின் வாக்குவங்கி அல்ல. பெரும்பாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கியாகவே கடந்த காலங்களில் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஏன் இம்முறை எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை.

இதேபோல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொகுதி வாரியாக ஒப்பிட்டு பார்க்கும்போது, ராஜஸ்தானின் கங்காநகர் மற்றும் சுன்சுனு, மத்தியப்பிரதேசத்தின் சிதி ஆகிய மூன்று தொகுதிகளில் சாராசரியை விட குறைவாக வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளில், கங்காநகர், விவசாயிகளின் போராட்டத்தால் அதிகம் தாக்கம்புரிந்த தொகுதி. சுன்சுனு அக்னிபாத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிகம் இருக்கும் தொகுதி. சிதி மத்தியப்பிரதேசத்தின் மிகவும் ஏழ்மையான பகுதி, 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பழங்குடியின மற்றும் தலித் மக்கள் வாழும் சாதோல் நகரத்தை கொண்ட தொகுதி.

இத்தொகுதிகளில் உள்ள மக்களுக்கு பா.ஜ.க-விற்கு எதிரான மனநிலையும் போராட்ட உணர்வும் உள்ளது. ஆனால், இங்கும் மக்களின் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு அறுவடையாகாமல் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. இங்குதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயமே உள்ளது.

பா.ஜ.க. வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும் பா.ஜ.க-விற்கு எதிரான சரியான மாற்று இல்லை என்பதே மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணமாக இருக்கிறது. மக்கள் வாக்களிக்காமல் இருப்பதால், பா.ஜ.க-விற்கு ஏற்படும் நெருக்கடியை பக்கம் பக்கமாக விளக்கும் பலர், பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் மக்கள் ஏன் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முன்வரவில்லை என்பதையும் அதனால், எதிர்க்கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதையும் விளக்காமல் சந்தர்ப்பவாதமாக மூடி மறைக்கின்றனர்.

மக்கள் கோருவது மாற்றுக் கொள்கை!
உண்மையில், மக்கள் சோர்வுற்று இருப்பதால் வாக்களிக்கவில்லை என்று கூறுவதே அயோக்கியத்தனமானது. மக்கள் போராட்டக் களத்தில் போர்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சோர்வுற்று இருப்பதென்னவோ எந்த மாற்றும் தென்படாத இந்த தேர்தலின் மீதுதான். அச்சோர்விற்கு பா.ஜ.க. மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் பங்குள்ளது.

மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் எதிரான மக்களின் மனநிலை என்பது, மக்கள் விரோத திட்டங்களுக்கும், பாசசி கும்பல் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிர சர்வாதிகாரத்திற்கும் எதிரானது.

இவற்றிற்கு எதிராக தனியாக போராடிக் கொண்டிருக்கும் மக்களுடன் எதிர்க்கட்சிகள் கைக்கோர்த்து நிற்பதில்லை. கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடும்போது அவர்களை ஒடுக்கவும் செய்கின்றன. பா.ஜ.க-வின் பாசிச கொடுங்கோன்மைக்கும் மக்கள்விரோத சட்டங்களுக்கும் எதிரான போராட்டங்களில் மக்களுடன் தோளோடு தோள் நிற்காத, மக்கள் எதிர்க்கும் பாசிச சட்டங்களை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளிக்காத எதிர்க்கட்சிகளை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டு மாற்றாக பார்ப்பார்கள்?


படிக்க: தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பு!


சி.ஏ.ஏ. உள்ளிட்ட இஸ்லாமிய விரோத சட்டத்திட்டங்களை ரத்துச் செய்வோம், இஸ்லாமியர்களை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார குண்டர் படைகளை தடை செய்வோம் என்ற உத்தரவாதத்தை அளிக்காத காங்கிரஸ் உள்ளிட்ட ‘‘இந்தியா” கூட்டணியினரை இஸ்லாமிய மக்கள் எப்படி மாற்றாக பார்ப்பார்கள்?

எனவே, மேற்சொன்ன எதையும் செய்யாமல், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் மாற்றுக் கொள்கையையும் திட்டத்தையும் முன்வைக்காமல், மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை மட்டும் அறுவடை செய்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் பகல் கனவு கண்டால், அது கடைசிவரை பகல் கனவாக மட்டுமே இருக்கும் என்பதையே வாக்கு சதவிகித குறைவு உணர்த்துகிறது.

தலையங்கம்
புதிய ஜனநாயகம்
மே 2024

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா? பஞ்சாப், ஹரியானா மக்களிடம் பாடம் கற்போம்! | தோழர் ரவி

பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா?
பஞ்சாப், ஹரியானா மக்களிடம் பாடம் கற்போம்!
தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீன விடுதலைப் போரில், வெல்வது நிச்சயம் நாங்களே! | கவிதை

குளிர்ந்த மேகமழை பொழியும்
எங்க தேசத்துல,
பாஸ்பரஸ் குண்டுமழை பொழியுது.

வானை எட்டும் மருத்துவக்
கட்டடங்கள் இப்போ,
ஊனமுற்று ஒடைஞ்சி கெடக்குது.

அன்பு வெள்ளம் வழியும்
எங்க  தெருக்களில்,
ரத்தம் பெருக்கெடுத்து வழியுது.

காரு போகும் சாலையில
பாசிச இசுரேலின்,
பீரங்கி டேங்கர்கள் வலம்வருது‌.

தங்க  வீடு  இல்லேன்னு
கூடாரத்துல குடிபுகுந்தா,
குண்டு வந்து மேலவுழுது.

பிஞ்சு கொழந்தைங்க ஒடம்பயெல்லாம்
வெடிமருந்து கந்தகமோ,
பிச்சு தனியே எடுக்குது.

தெற்கு  காசா  வீதிகளில்
எங்களின் அழுகுரலாய்,
மரண ஓலம் கேட்குது.

ஒருவேளை சோத்துப் பொட்டலத்த
கண்ணால பாக்குறதே
பெரிய பாடா ஆகிபோச்சி.

அமெரிக்கா கொடுக்குற ஆயுதம்
யூதவெறி புடுச்ச
இசுரேலு அரசுக்கோ பேராதாயம்.

உலகப்  பஞ்சாயத்து ஓநாய்களோ
எங்கநாட்ட கூறுபோட,
கொளுத்திவுட்டு குளிர் காயுதுங்க.

யாருமில்லா கூட்டமென்று கொக்கரிக்கும்
இனவெறி பாசிச மிருகங்களே,
எத்தனை எத்தனை ஆதரவு போராட்டங்கள்
எங்களுக்காய் பாருங்களேன்.

உங்க  அதிகாரத் திமிரடக்க
ஓங்கி ஒலிக்குது போராட்டச் சத்தம்;
பார்  முழுவதும்  நடக்குது
மாணவர்களின் வீரிய யுத்தம்.!

பாலஸ்தீன விடுதலைப் போரில்,
வெல்வது நிச்சயம் நாங்களே!


தென்றல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி! | மக்கள் அதிகாரம்

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி!
போக்குவரத்து ஊழியர்களை பழிவாங்கும்
போலீசுத் துறையின் அராஜகத்துக்கு முடிவு கட்டுவோம்!

24.05.2024

த்திரிக்கை செய்தி

யுதப்படை போலீசான ஆறுமுகபாண்டியன், நாங்குநேரியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு வந்த போது நாங்குநேரி பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். டிக்கெட் எடுக்க முடியாது என்பதை உரிமையாகப் பேசி அவர் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வைரலாக பரவின.

அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தும் போது அவர் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

போலீசு பணியின் போது அரசுப் பேருந்தில் செல்ல நேர்ந்தால் அதற்குரிய அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும் என்பதுதான் விதியாகும்.

அனுமதிச்சீட்டை ஆறுமுக பாண்டியன் கொண்டு வராமல், ஏன் உங்களுக்கெல்லாம் பேருந்து இலவசமாக இல்லையா? என்று குதர்க்கமாக கேள்வி கேட்பது மட்டுமல்லாமல், போலீசு என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற தொனியில் மிரட்டுகிறார்.

அவர் மீது துறை ரீதியாக உடனே நடவடிக்கை எடுக்காத போலீசு துறையோ, போலீசையா கேள்வி கேட்கிறாய் என்றபடி தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக தொடர்ந்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருகின்றது. போலீஸ் எந்த செயலைச் செய்தாலும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் செயலாகும் இது.

இது ஏதோ தனிப்பட்ட சிலரின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அரசின் பிற அனைத்து துறைகளும் தனக்கு கீழ்ப்பட்டு நடந்தாக வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது போலீசுத் துறை.

நாங்குநேரியில் ஒரு போலீசு டிக்கட் எடுக்க மறுத்ததால் நடந்த பிரச்சனையை, தமிழ்நாடு முழுவதும் பேருந்து ஊழியர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையை தொடங்கியது யார்?

ஒரு போலீஸ்காரரின் சட்டவிரோத செயலுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த போலீஸ் துறையே செயல்பட்டுக் கொண்டிருப்பதைத் தடுக்காமல் தமிழ்நாடு அரசு அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

அதுமட்டுமன்றி சட்டவிரோதமாக செயல்பட்ட அந்தப் போலீசுக்கு ஆதரவாக அண்ணாமலை அறிக்கை விட்டிருப்பதும் மிகக் கேவலமானதாகும். ஆகவே தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிரான போலீசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அனைத்து போலீசு உயர் அதிகாரிகள் மீதும் உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



1.07கோடி ஓட்டுகள் மோசடி! பாசிச பாஜகவின் மோசடி தேர்தல் ஆணையம்!

1.07கோடி ஓட்டுகள் மோசடி! பாசிச பாஜகவின் மோசடி தேர்தல் ஆணையம்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்

தூத்துக்குடி :
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பிளிங்கன் ஒரு போர்க்குற்றவாளி | படக்கட்டுரை

டந்த செவ்வாய்க்கிழமை (21-05-2024) அன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் பிளிங்கன் செனட் குழுவின் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள் ”பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு நீ தான் பொறுப்பு” என்று கூறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதில் இருந்த பெண் ஒருவர், நீ ஒரு ”குற்றவாளி” என்று கூறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அந்த பெண்ணை போலீசு அங்கிருந்து வெளியேற்றியபோது, நீங்கள் என்னை கைது செய்யக்கூடாது “போர்க்குற்றவாளியான பிளிங்கனை” தான் கைது செய்ய வேண்டும் என்றார்.

இன்னும் பலர் தங்களுடைய கைகளில் சிவப்பு வண்ணத்தை வரைந்து, கைகளை உயர்த்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தற்போது அமெரிக்கா முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போரை நடத்துவதற்கு உற்ற துணையாக இருக்கும் அமெரிக்க அரசுக்கு எதிராக அமெரிக்க மக்களே நடத்தக்கூடிய இத்தகைய போராட்டங்கள் தான் பாலஸ்தீன மக்களின் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

போர்க்குற்றவாளியான பிளிங்கனை கைது செய் என்று எழுதப்பட்ட போஸ்டரை கையில் வைத்திருக்கும் அமெரிக்கர்.
போர்க்குற்றவாளியான பிளிங்கனுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பிய பெண்ணை வெளியேற்றும் போலீசு.
தங்களுடைய கைகளில் சிவப்பு வண்ணத்தை வரைந்து, கைகளை உயர்த்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை வெளியேற்றும் போலீசு.
போர்க்குற்றவாளி பிளிங்கன் பங்கேற்ற கூட்டம் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் நிறைந்திருந்தது.

நன்றி: அல் ஜஸீரா


தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



How to defeat the fascist BJP in the elections? || Booklet – PDF Free Download!

Dear working people,

The 2024 parliamentary elections have been announced. This election will decide the future of the country.

The fascist Modi – Amit Shah mob, which looted India over the past decade, is looking to secure a third term. It is striving to win 370 seats i.e. crossing the two-thirds majority mark.

To achieve this feat, the fascist mob is indulging in various conspiratorial and fraudulent acts through the RSS mob infiltrated into the State structure.

Suppressing the opposition through the Election Commission and Enforcement Directorate; rigging elections using EVMs; deceived the North with Hindutva and the South by highlighting ‘growth’; Spreading exaggerated fanciful news, fake news and portraying Modi as a national leader; spreading rumours through Sangh Parivar mob, increasing anti-Muslim hate speech campaigns, meticulously planned attacks on the people and the opposition parties; instilling fear and panic; are only a few examples of the fascist activities of the Modi – Amit Shah mob.

The Election Commission of India had devised the dates for the upcoming parliamentary elections based on Modi’s election campaign; State Bank of India tried to save the Modi – Amit Shah mob by going against the Supreme Court’s order in disclosing details pertaining to the electoral bonds; the arrest of Telangana’s Bharat Rashtra Samithi (BRS) leader Kavitha using the Enforcement Directorate; arrest of Aam Aadmi Party (AAP) leader Arvind Kejriwal; freezing of bank accounts of the Indian National Congress by the IT department: these recent activities of the Modi – Amit Shah mob showcases that they would go to any extent to win the elections.

Considering that this booklet should reach many people, we are providing it as an electronic paper in PDF format.

Click below link to download PDF…

Link 1
How to Defeat BJP Ebook (PDF) Link 1

Link 2
How to Defeat BJP Ebook (PDF) Link 2

Follow us on social media:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மே 22: “போராடு” எனும் உரத்தினை ஊட்டிச் சென்ற நாள் | கவிதை

று ஆண்டுகள்
ஆயினும் ஆரா ரணமாய்
ஆர்ப்பரிக்கிறது தூத்துக்குடி துப்பாக்கி சூடு…

நீர் வெப்பத்தில் ஆவியாகி
மேகத்தை முட்டி
மண்ணில் மழையென பொழிந்து
வீரத்தின் விதைகளாய் மண்ணில் புதைந்து
“போராடு” எனும்
உரத்தினை ஊட்டிச்
சென்ற நாள்!!!

30 ஆண்டுகால புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க
மலடாய் மாறிவிட்ட மண்ணினை மீட்டெடுக்க,
தாகம் தணிக்கும் தண்ணீரை விஷமாக்கிய
ஸ்டெர்லைட் எனும்
கொலைகார கார்ப்பரேட் கம்பெனிக்கு
எதிராகப் போராடி
15 உயிர்களின் குருதி கொடுத்து
தங்களின் அடுத்த சந்ததியினரின்
இன்னுயிர் காத்த
தூத்துக்குடி மக்களின்
வீரம் செரிந்த போர்தான்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!!!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு
தங்களின் உரிமை மீட்க
போராட்ட களம் வந்த
ஸ்நோலினை
எதிரிகளைச் சுடும்
உயர் ரக துப்பாக்கியினைக் கொண்டு
மறைந்திருந்து வாயிலேயே சுட்டது
கேடுகெட்ட போலீசு!

கொல்லப்பட்ட ஸ்னோலினை காண வந்த
தாயின் கதறலும்,
கம்பெனியை மூடாமல்
தன் மகளின் உடலை வாங்க மாட்டேன்
என உறுதியாக போராடிய
அந்தத் தாயின்
போர்குணமிக்கப் போராட்டமும்
நீங்காமல் நிற்கிறது நினைவுகளாய்!!!

இணையதளத்தை
துண்டித்து விட்டு
வீடு வீடாக புகுந்து
போராடிய மக்களையும், பொதுமக்களையும்
வேட்டையாடி தீர்த்தது,
கொலைவெறி பிடித்த போலீசு!!

உரிமைக்காக போராடிய
தூத்துக்குடி மக்களை
அகர்வாலும் – அரசும் இணைந்து நடத்திய
பச்சைப் படுகொலை தான்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு.

உரிமை மீட்க கூடிய
உழைக்கும் மக்கள் கூட்டம் முன்பு
அதிகார வர்க்கம் தலைத்தெறிக்க ஓடும்
என்பதை நிரூபித்து காட்டியது
இந்த வீரஞ்செறிந்த போராட்டம்!!

போராட்டம் இன்னும் முடியவில்லை!
மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்க
பாசிச மோடி கும்பல் திட்டம் தீட்டிவருகிறது!!!

இப்போராட்டங்களே நமக்கான மாற்று!!!
தமிழக அரசே,
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்று!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று (22-05-2024) செலுத்தப்பட்டது.

நெல்லை

விருத்தாச்சலம்
கடலூர் மண்டலம் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் பாலு தலைமையில் ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்ற வேண்டும். ஜெகதீசன் அறிக்கையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தோழர்கள் மற்றும் நண்பர்கள் கொண்டனர் கலந்து கொண்டனர்.

 

காஞ்சிபுரம்
தோழர்களுக்கு செவ்வணக்கம்!
இன்று (22.5.2024) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பாக, காஞ்சிபுரம் பகுதியில் அய்யங்கார்குளம் மற்றும் நெமிலி-பனப்பாக்கம் ஆகிய இடங்களில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தியாகிகளான போராளிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை 11 மணி அளவில்  நெமிலி-பனப்பாக்கம் பகுதியிலும், மாலை 5:30 மணி அளவில் அய்யங்கார்குளம் பகுதியிலும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பகுதி மக்கள் பலரும் கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்ட பின், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “கார்ப்பரேட்டுக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தில் தியாகிகளான போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்” என்றும், “வேதாந்தாவின் கையாளாக செயல்பட்டு சொந்த நாட்டு மக்களையே காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற போலீசையும், உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளையும் அருணா ஜெகதீசன் ஆணையக் குழு பரிந்துரைத்தபடி உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றும், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டை விட்டு நிரந்தரமாக தூக்கி எறிய சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாலை அய்யங்கார்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோழர் திலகவதி மக்கள் அதிகாரம் கண்டன உரையாற்றினார்.

தனது கண்டன உரையில், “ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் , வேதாந்தா, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை தாரைவார்க்கக்கூடிய பல்வேறு திட்டங்களை திணித்து வருகிறது. கார்ப்பரேட் கொள்கைகளில் இதற்கு பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன.  இதற்கு சான்றாக, தமிழ்நாட்டில் பரந்தூர்  விமான நிலையம், மேல்மா சிப்காட், எண்ணூர் துறைமுகம் என அடுக்கிக் கொண்டே போகலாம். திராவிட மாடல் என்ற பெயரில் இயங்கும் தமிழ்நாடு அரசும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.

மின்சாரம், துறைமுகங்கள், கல்வி குழுமங்கள் தொலைத் தொடர்புத்துறை என நாட்டின் பல்வேறு துறைகளையும் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுக்கு சூறையாடக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலை வீழ்த்த மக்கள் எழுச்சியை உருவாக்குவதே நமது உடனடிக் கடமையாக உள்ளது. பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று அரசு கட்டமைப்பு தான் கார்ப்பரேட் சூரையாடல்களில் இருந்து மக்களை விடுவிக்கும் ஒரே மாற்று” – என்பதை வலியுறுத்தினார்.

நன்றி,
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்பு குழு)
மக்கள் அதிகாரம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
9786076201

மதுரை
தூத்துக்குடி தியாகிகளின் 6-ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
மதுரையில் நினைவேந்தல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது…

 

ஆரியப்பட்டி
மே 22 6 ஆம் ஆண்டு நினைவு தினம்.

தோழர் ஜெயராமனுக்கும், ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கும் ஆரியப்பட்டியில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க-பு.மா.இ.மு-
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டபம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! | மக்கள் அதிகாரம்

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்
ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை போராடுவோம்!


21.05.2024

பத்திரிக்கைச் செய்தி,
மா
பெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு இது. லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் ! என்று முழக்கமிட்டு செய்து காட்டினார்கள்  தூத்துக்குடியின் வீரமிக்க போராளிகள்.

நிலத்தையும் காற்றையும் நீரையும் நாசமாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிரான மக்களின் தீரமிக்க போராட்டம் அது .

மே 22, 2018 ஆம் ஆண்டு  நீதி கேட்டு குடும்பம் குடும்பமாக ,குழந்தை, குட்டிகளோடு  மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மக்களை ஸ்டெர்லைட் ஆலையும்  தமிழ்நாடு போலீசும் இணைந்து, மறைந்திருந்தும் வேன்மீது ஏறி இருந்தும் மக்களை சுட்டுக் கொன்றனர்.

15 வயது சிறுமி ஸ்னோலின், எமது மக்கள் அதிகாரம் தோழர் மதுரை ஆரியப்பட்டி ஜெயராமன்  உட்பட  13 பேர்  போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகியானார்கள். உடல்கள் மரித்தாலும் உணர்வுகள் மரிப்பதில்லை என்பது போல ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடலை பெற மாட்டோம் என்று உறுதியாய் நின்றார்கள் தூத்துக்குடியின் மக்கள்.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் கைது செய்வதும் ஊர்களில் சென்று மக்கள் மீது வலுக்கட்டாயமாக தாக்குதல் நடத்தி கைது  – சித்திரவதை  போன்ற போலீசின் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன.

எமது மக்கள் அதிகாரம் தோழர்களும் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு பலர் சித்திரவதைக்குள்ளப்பட்டனர்.

அன்று முதல் இன்று வரை அதிமுக அரசு போய் திமுக அரசு வந்த பிறகும் கூட ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு கூட போலீஸ் அனுமதி கொடுப்பதில்லை என்பதே உண்மை.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் சுட்டிக்காட்டிய,  மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அன்றைய தினம்  தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன்,   டிஜிபி,  முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மக்கள் போராட்டத்தின் விளைவாகவே ஸ்டெர்லைட் மூடப்பட்டது. அதன் காரணமாகவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அதனை அங்கீகரித்து இருக்கிறது. உடனடியாக திமுக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்தையே அப்புறப்படுத்த வேண்டும்.

மாபெரும் மக்கள் போராட்டத்தின் நினைவாக தியாகிகளுக்கு மணி மண்டபத்தை தமிழ்நாடு அரசே கட்ட வேண்டும் .

மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கிறது.

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கவிதை | பாசிசம்!

ஹிட்லரின் நாஜிசம்
வீழ்த்தப்பட்டது..
இரண்டு கோடி மக்களின்
உயிர்த் தியாகத்தால்!

முசோலினி பாசிசம்
முறியடிக்கப்பட்டது..
மக்கள் போராட்டத்தால்!

மீண்டும் முளைக்கிறது
பாசிசம்..

பாசிசப் பாம்புகள்
ஊர்ந்த தடங்கள்
அழிக்கப்படாதவரை..

மூலதனத்தில் முளைத்த
பாசிசத்தின் வேர் தேடி அறுத்தெறியப்படாதவரை..

சனாதனத்தின்
சங்கைப் பிடித்து
அதன் உயிர்மூச்சை நிறுத்தாதவரை.‌.

பாசிசம் வளர
கொடை கொடுத்த
சக்கரவர்த்திகளின் கருவூலங்கள்
கைப்பற்றப்படாதவரை..

காலுடைந்த
ஜனநாயக ஏணியின்
மீதேறி..
மீண்டும் நுழையும்
பாசிசப் பாம்பு!

இதோ!
பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதம்
கண்டெடுக்கப்படுகிறது..
போராட்டக் களத்தில்!

மக்கள் போராட்டங்களே
பாசிச இருள் கிழிக்கும்
தீப்பந்தங்கள்..!

எரியும் சுடரென
எழுவோம்!
பாசிசத்தை கொளுத்துவோம்!


ஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube