Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 50

காசாவின் டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்கள் | படக்கட்டுரை

0

பாலஸ்தீன மக்கள் இஸ்‌ரேலின் ஆக்கிரமிப்பு போரால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். முழுமையாகப் பாலஸ்தீனத்தைப் பாசிச இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமித்ததால், இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் மேற்குக் கரைக்கும் காசா முனைக்கும் சுருக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில் இன அழிப்பு போரைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் காசா முனையிலும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில், பெண்கள் குழந்தைகள் உட்படப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காசா முனையிலும் பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்திருக்கும் வெளி மிகவும் சுருங்கியுள்ளது. உணவு, தண்ணீர் எதுவுமின்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் தொற்று நோய்களாலும் குழந்தைகள் இறக்கின்றனர்.

தற்போது காசா பகுதியில் உள்ள டெய்ர் எல்-பாலாஹ் (Deir el-Balah) பகுதியில் தஞ்சமடைந்திருக்கும் மக்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது பாசிச இஸ்ரேல் இராணுவம். இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சிறிய பைகள், போர்வைகள், படுக்கைகள், சிறிதளவு உணவு என்று சில அடிப்படை பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கால்நடையாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

***

இஸ்ரேலின் உத்தரவுக்கு பிறவு, டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்

***

பல பாலஸ்தீன குடும்பங்கள் டெய்ர் எல்-பாலாவின் மேற்குப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

***

பாலஸ்தீனிய பெண்களும் குழந்தைகளும் மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேறும் வாகனங்களில் அமர்ந்துள்ளனர்.

***

தங்கள் தற்காலிக கூடாரங்களை அமைக்கும் காலி நிலத்தை தேடுகின்றனர் பாலஸ்தீனியர்கள். அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளும் கிடைக்கவில்லை

***

காசாவின் 2.3 மில்லியன் மக்களில் குறைந்தது 90 சதவீதம் பேர் அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து ஒரு முறையாவது இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

***

டெய்ர் எல்-பாலா மற்றும் கான் யூனிஸ் ஆகியோருக்கான சமீபத்திய வெளியேற்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் கிரேன்ஜர், “இஸ்ரேல் தொடர்ந்து மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வது மனிதாபிமானமற்றது” என்றார்.

***

டெய்ர் எல்-பாலாவில் உள்ள அபு அரீப் மற்றும் அல்-மஸ்ரா பகுதிகளை காலி செய்யுமாறு இஸ்ரேல் ராணுவம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் மீண்டும் இடம்பெயருகின்றனர்.

***

டெய்ர் எல்-பாலாவில் இருந்து கான் யூனிஸுடன் நகரத்தை இணைக்கும் சாலைகளை இஸ்ரேல் இராணுவம் தடுப்பதாக இடம்பெயரும் பாலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர்.

***

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவால் காசாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலைத்தெரிவித்துள்ளனர்.

***

கடந்த வாரம் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் (UNRWA) காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதிகளை வெறும் 11 சதவீத நிலப்பரப்பாக இஸ்‌ரேல் குறைத்துள்ளது. இது இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியது.

காசா அரசின் கூற்றுப்படி, கடந்த 2023 அக்டோபர் முதல் தற்போது வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 93 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.


கல்பனா

நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாணவர்-இளைஞர்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள்! | பேரா.ப.சிவக்குமார்

மாணவர்-இளைஞர்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள்!
பேரா.ப.சிவக்குமார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் | கோவை

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்

தேதி : 30.08.2024 நேரம் : மாலை 5.00 மணி
இடம் : அண்ணாமலை அரங்கம் (சாந்தி தியேட்டர் அருகில்), கோவை.

நிகழ்ச்சி நிரல்

தலைமை உரை :
தோழர். மாறன்,
மக்கள் அதிகாரம், கோவை.

கருத்துரை :
தோழர். பன்னீர்செல்வம்,
வழக்கறிஞர்,
தலைவர், சமூக நீதிக்கட்சி.

திரு. கோவை இப்ராஹிம்,
மத்திய மாவட்ட தலைவர்,
வெல்ஃபேர் கட்சி.

திரு. அக்பர் அலி,
மாநில பிரதிநிதி, மனிதநேய மக்கள் கட்சி

திரு. ஜெமீஷா,
வழக்கறிஞர்,

மாவட்ட தலைவர், SDPI வழக்கறிஞர் அணி.

தோழர். ஜீவா,
மே 17 இயக்கம்.

சிறப்புரை :
தோழர். சக்திவேல்,
வழக்கறிஞர்,
இணைச் செயலாளர், JAAC.

தோழர். மருது,
வழக்கறிஞர்,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.

நன்றியுரை :
தோழர். ராஜன்,
மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரம், கோவை.

ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள், வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக!

  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: இந்துராஷ்டிரத்திற்கான போலீசு இராஜ்ஜியமே!
  • முடிவுக்கு வரும் சட்டத்தின் ஆட்சி! அரங்கேற்றப்படும் பாசிச கும்பல் ஆட்சி!
  • எதிர்க்கட்சிகளே, சட்டங்களைத் திருத்துவது அல்ல: திரும்பப் பெறுவதே தீர்வு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.

தொடர்புக்கு : 94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய குற்றவியல் சட்டங்கள்: மறுசுழற்சி செய்த மக்குகளின் சட்டம்! | வழக்குரைஞர் தி.லஜபதிராய்

புதிய குற்றவியல் சட்டங்கள்: மறுசுழற்சி செய்த மக்குகளின் சட்டம்!
வழக்குரைஞர் தி.லஜபதிராய்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போராட்டம் ஓய்வதில்லை! | கவிதை

போராட்டம் ஓய்வதில்லை!

ல கனவுகளோடும்
எண்ணங்களோடும்
மருத்துவம் படிக்க வந்தேன்…

பிறகுதான் தெரிந்தது
மருத்துவ பணியில்
நீண்ட காலம்
நீடிக்க முடியாதென்று..

மக்களின் மருந்துகளை
மறுவழியில் விற்கலாமா?
எதிர்த்து கேள்வி கேட்டேன்!
மிரட்டல் வந்தது
உன்னைக் கொன்றுவிடுவோம்
பயப்படவில்லை
துணிந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்…

கேள்விகள் கேட்கிறேன் என்பதற்காக
இரவில் வேலைக்கு
வரச் சொல்வது..
இயந்திரத்தை மிஞ்சிய
வேலை வாங்குவது என
பழிவாங்கப்பட்டேன்
அதிகார வர்க்கத்தால்..

அந்த நாளும் வந்தது
கண்கள் விழித்து
வேலை பார்த்து
பார்வை மங்கியது,
எழுந்திருக்க முடியாத
அளவிற்கு உடல்வலி
வயிறு வலியும் கூடவே…

அரைத் தூக்கத்தில்
அறைக்குச் சென்று
தூங்கினேன்
சிறிது நேரத்தில்
வெறிபிடித்த நரிகளாலும் நாய்களாலும்
குதறப்பட்டு
கண்களில் கண்ணீருடனும்
கால்கள் வலியுடனும்
உதிரம் சிந்த… சிந்த..
கொடூரமாய் கொல்லப்பட்டேன்…

இரவு மிருகங்களிடமிருந்து
தப்பிப்பதற்கு
இறுதிவரை போராடினேன்..

போராட்டத்தின் அடையாளங்களாய்
என் உடம்பில் மிருகங்களின் நகக் கீறல்கள்..
கடித்துக் குதறியதால்
கழுத்தில் ஏற்பட்ட
காயங்கள்..
சொல்ல முடியா வலி மிகுந்த
இரத்தப் போக்கு..
இறுதியில் போராட்டம் ஓய்ந்தது..

நான் எழுப்பிய கேள்விகளின்
ஓசை
அடங்கியிருக்கலாம்..
மெழுகுவர்த்தி போல்
போராட்டமும்
மாணவர்கள் மனதில்
எரிந்து கொண்டிருக்கும்
போராட்ட உணர்வும்
ஓயப் போவதில்லை…


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாணவர்களுடன் உரையாடுங்கள்! | பேரா. இரா.முரளி

மாணவர்களுடன் உரையாடுங்கள்! | பேரா. இரா.முரளி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மருத்துவர்கள் போராட்டம் வெல்லட்டும்! | கவிதை

போராட்டம் வெல்லட்டும்!

ருத்துவ மாணவி
பாலியல் வன்கொடுமை
செய்து கொலை..
இது செய்தி அல்ல..
நாட்டையே உலுக்கிய
அதிகார வர்க்கத்தின்
கொடூர அநீதி..

எங்களுக்கு பாதுகாப்பென்று நினைத்த
மருத்துவமனை
இன்று அஞ்சி
நடுங்கக் கூடிய
நரகத்தினைப் போன்றுள்ளது…

போராட்டம் என்னும்
அணையா நெருப்பு
மருத்துவ மாணவிகள் மனதில்
கொழுந்து விட்டெரிகிறது..

காட்டுத்தீயாய் பரவும்
மாணவர் போராட்டத்தால்
அஞ்சி நடுங்கும்
அதிகார வர்க்கம்..

கொடிய மிருகங்களை
கூண்டில் அடைக்கும் வரை
ஓயாது போராட்டம்..

நீதி கிடைக்கும் வரை
நிற்கப் போவதில்லை
போராட்டம்
நாடு எங்கும்
மருத்துவர்கள்
வேலை நிறுத்தம்..

அதிகார வர்க்கமே,
எங்களின் போராட்டம்
சிறு துளி அல்ல..
கைகளை, தடிகளை
வைத்து தடுப்பதற்கு…
பொங்கிப் பெருகும்
பெரு வெள்ளத்தினைப் போன்றது..
அணையையும் உடைத்துவிடும்…

மக்களின் உயிரைக்
காக்கும்
மருத்துவர்களின்
உரிமைப் போராட்டம் வெல்லட்டும்..


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் | மதுரை

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்

தேதி : 24.08.2024 நேரம் : மாலை 5.30 மணி
இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.

தலைமை உரை :
தோழர் அ.கின்ஷன்,
சட்டகல்லூரி மாணவர், மக்கள் அதிகாரம்.

வாழ்த்துரை :
வழக்கறிஞர் மோகன் குமார்,
செயலாளர், மதுரை வழக்கறிஞர் சங்கம்.

சிறப்புரை :
வழக்கறிஞர் லஜபதிராய்,
மூத்த வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்றம்.

தோழர் அமிர்தா,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

நன்றியுரை :
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் கலை இலக்கிய கழகம்.

ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள், வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக!

  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: இந்துராஷ்டிரத்திற்கான போலீசு இராஜ்ஜியமே!
  • முடிவுக்கு வரும் சட்டத்தின் ஆட்சி! அரங்கேற்றப்படும் பாசிச கும்பல் ஆட்சி!
  • எதிர்க்கட்சிகளே, சட்டங்களைத் திருத்துவது அல்ல: திரும்பப் பெறுவதே தீர்வு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

தொடர்புக்கு :
97916 53200, 94448 36642,
73974 04242, 99623 66321.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! | தோழர் வ.தீரன்

கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! | தோழர் வ.தீரன்

திருத்தம்: இந்த உரையில் சுரேஷ் சந்திர ஆர்யா என்பவர் மகா சபை என்ற ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர் என்று தவறாக கூறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் சந்திர ஆர்யா என்பவர் ஆரிய சமாஜ் என்ற அமைப்பை சார்ந்தவர் என்பதுதான் சரியானது.

அதேபோல் ஆரிய சமாஜ் அமைப்பின் பிரச்சார அமைப்பின் பெயரையும் தவறாக கூறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய பிரச்சார அமைப்பின் பெயர் “சர்வதேசியே பிரச்சார பிரதிநிதி சபா”என்பதுதான் சரியானது.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி: எங்க நிலத்தை ஆக்கிரமிச்சிட்டாங்க! | குமுறும் மாற்றுத்திறனாளிகள்

ரூ.55 – ரூ.150 தான் எங்கள் சம்பளம்!
எங்க நிலத்தை ஆக்கிரமிச்சிட்டாங்க!
குமுறும் மாற்றுத்திறனாளிகள்

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமத்தில் அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக நபர் ஒருவருக்கு 2.5 சென்ட் என்ற அளவில் இலவச பட்டா 01.04.15 அன்று வழங்கப்பட்டது. அதில் 12 பேர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.

இன்று வரையும் அந்த பட்டாவில் இந்த மாற்றுத்திறனாளிகள் பெயர்கள்தான் இருக்கின்றது.

மாற்றுத்திறனாளிகள் அந்த இடத்தில் கம்பி வேலி போட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவர் அந்த இடத்தில் கட்டிடத்தை எழுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டிடம் கட்ட பணம் இல்லாததால் அந்தக் கட்டடத்தை பாதியளவில் நிறுத்தியிருக்கிறார். ஆனால் சில ஆக்கிரமிப்பாளர்கள் இந்த வேலியை பிடுங்கி, அந்த கட்டடத்தை இடித்து வீடு கட்டியுள்ளனர். நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு குறித்து மாற்றுத்திறனாளிகள் கேட்டபோது “நீ நொண்டி, கண் தெரியாத நீ எல்லாம் என்ன செஞ்சிரப்போற ஓடிரு, உன்னை கொன்றுவேன்” என்று அவர்களை மிரட்டியுள்ளார்கள். இதனால் மாற்றுத்திறனாளிகள் தங்கள் நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியர்,துணை ஆட்சியர், தாசில்தார், விஏஓ, போலீஸ் என பலரிடமும் மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் இன்று வரை இவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

அரசு கொடுத்த நிலத்திற்கான உரிய ஆவணம் இருந்தும் அதை மீட்டுக் கொடுக்க அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசுத் துறைகளின் படிக்கட்டுகளில் இன்றுவரை ஏறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

அரசு தலையிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்களுக்கே மீட்டுத் தர வேண்டும் என்று நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!


தகவல்
மக்கள் அதிகாரம், நெல்லை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி அரசின் உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா?

நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் (ஐ.சி.ஏ.ஆர்.) 109 புதிய ரக உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவை, சிறு தானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட 34 வகையான வயல் பயிர்கள் மற்றும் பழங்கள், பூக்கள், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்ட 27 வகையான தோட்டப் பயிர்கள் என மொத்தம் 61 பயிர்களுக்கான விதைகள் ஆகும்.

இந்த உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் அதிக மகசூலை தரும் என்றும் அனைத்து பருவநிலைகளையும் தாங்கி வளரும் என்றும் மோடி அரசால் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விதைகளில் பெரும்பாலானவை ஐ.சி.ஏ.ஆர். விஞ்ஞானிகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் மோடி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி-அமித்ஷா கும்பலால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கை-2024-இல், அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரக்கூடிய 109 பயிர் ரக விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வது என்று அறிவித்திருந்ததன் படியே இந்த விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மட்டுமல்ல, தன்னுடைய பத்தாண்டுக்கால பாசிச ஆட்சிக்காலத்திலும் அதிக மகசூல் தரும் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் என்று கூறி ஆயிரக்கணக்கான விதைகளை மோடி அரசு விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. சான்றாக, கடந்த 10 ஆண்டுகளில் பாரம்பரிய பயிர்களை விட 25 சதவிகிதம் குறைவான தண்ணீர் தேவைப்படும் அரிசி வகைகள் உட்பட, சுமார் 2,500 காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பயிர்களை மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளதாக ஆங்கில செய்தி ஊடகமான மிண்ட் தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இத்தகைய உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும், அதிக மகசூலைத் தரும் என்று மோடி அரசாலும் விவசாய விஞ்ஞானிகளாலும் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவை அப்பட்டமான பொய்யாகும். இதற்கு இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட கலப்பின பயிர் ரகங்களான பி.டி.கத்தரிக்காய், பி.டி.பருத்தி போன்றவற்றால் மகசூலை அதிகரிக்க முடியவில்லை என்பதுதான் வரலாறு. மேலும், பி.டி.பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதையும் நாம் மறந்து விடமுடியாது.


படிக்க: அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்


மாறாக, இந்த உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் கார்ப்பரேட்டுகளின் இலாப நோக்கத்திற்காகவே விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனால்தான், மோடி அரசு உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்று புகழ்கின்றனர்.

“ஒன்றிய நிதிநிலை அறிவிப்பில் விவசாயிகளுக்கு 109 புதிய உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்துவது என்ற அம்சத்தை சேர்ப்பது, அதிக மகசூல் தரும் மற்றும் காலநிலையை எதிர்க்கும் விதை வகைகளில் அரசாங்கத்தின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது விவசாயத்துறைக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் சாதகமான அறிகுறியாகும்” என்று பார்ச்சூன் ஹைபிரிட் விதைகளின் இயக்குநர் ராவ் கூறியுள்ளதே அதற்கு சிறந்த சான்றாகும்.

மேலும், பல முதலாளித்துவ பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் இந்திய விவசாய உற்பத்திமுறை படிப்படியாக கலப்பின மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளாலான உற்பத்தி முறையாக மாற்றப்பட்டு வருவதால் இந்திய விவசாய விதை சந்தை மதிப்பு அதிகரிக்கும் என்று தங்களது ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சந்தை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான மோர்டோர் இண்டலிஜென்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் விதை சந்தை 2024-இல் 3.61 பில்லியன் டாலராக இருக்கும் என்றும், 2030 ஆம் ஆண்டில் 5.01 பில்லியன் டாலராக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, விவசாயத்தில் பாரம்பரிய விதைகளிலான உற்பத்தி முறையை சிதைத்து கலப்பின விதைகளிலான உற்பத்தி முறை நிலைநாட்டப்பட்டு வருவதைப் போல, உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளிலான உற்பத்தி முறையை நிலைநாட்டுவதும் விவசாயிகளை விதைகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கி விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதன் ஒரு அங்கம் ஆகும்.

விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிராக, தங்களின் உயிராதாரமான கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயக் கடன் தள்ளுபடி, மின்சாரத் சட்டத் திருத்தம் (2020) ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்திவரும் நிலையிலும் மோடி அரசு, விவசாயிகளுக்கு அதிக மகசூல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பயிர்களை அறிமுகப்படுத்துகிறோம் என்று கூறி நயவஞ்சகமாக விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவும் வேலைகளில் தான் ஈடுபட்டு வருகிறது.


அகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கல்வியைப் பாதுகாக்க மிகப்பெரிய அரசியல் போராட்டம் தேவை! | பேரா.ப.சிவக்குமார்

கல்வியைப் பாதுகாக்க மிகப்பெரிய அரசியல் போராட்டம் தேவை!
| பேரா.ப.சிவக்குமார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கொல்கத்தா பாலியல் வன்கொலை: நாடுமுழுவதும் மருத்துவ மாணவர்கள் கண்டன போராட்டம்! | படக் கட்டுரை

0

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய மருத்துவர்கள் ஆகஸ்டு 18 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையின் ஓர் அறையிலிருந்து 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கழுத்தை நெறிக்கப்பட்டுள்ளதாகவும், கழுத்தெழுப்பில் முறிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க : மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்


அதிகாலை 4 மணிக்கு ஒரு நபர் கொலை நடந்த கட்டிடத்தில் நுழையும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், கொலை நடந்த இடத்தில் அந்த நபர் தனது புளுடூத் எட் செட்டை விட்டு சென்றுள்ளதாகவும் விசாரணையில் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றிவரும் சஞ்சய் என்பவரை குற்றவாளி என கூறி போலீசு கைது செய்துள்ளது. ஆனால், உண்மையான குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லை என்று மருத்துவரின் குடும்பத்தினரும், போராடும் மருத்துவ மாணவர்களும் கூறுகின்றனர்.

பெண் மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் மிகுந்த சோகத்தையும் கொந்தளிப்பான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் பெண் மருத்துவரின் பாலியல் வன்கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெண் மருத்துவரின் படுகொலையை கண்டித்து கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். “குணப்படுத்தும் கைகளில் இரத்தம் வரக் கூடாது” என்பது போன்ற பல்வேறு முழக்கங்களை கைத்தட்டிகளாக வைத்திருந்தனர்.


படிக்க : மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்


இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று நாடுமுழுவதும், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப்பணியாளர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப்

***

***

பெங்களூரு

***

ஜம்மு

***

உத்தரப்பிரதேசம்

***

கொல்கத்தா

***

மும்பை

***

புதுடெல்லி

***

குஜராத்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இந்தியாவில் ஒரு முக்கியப்பிரச்சினையாகும். 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


கல்பனா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர்கல்வி மாணவர்களை சுரண்டும் மாஃபியா கும்பல்! | பேரா. கி.கதிரவன்

உயர்கல்வி மாணவர்களை சுரண்டும் மாஃபியா கும்பல்! | பேரா. கி.கதிரவன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்! | தோழர் அ.மாயவன்

ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்!
| தோழர் அ.மாயவன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube