Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 583

தூணிலும் துரும்பிலும் இருப்பவன் சேரியில் இருக்க மாட்டானா ?

4

பெரியார் பிறந்தநாள் சுடர்கள்!

1-ஊர்

பெரியார் சுடர்
புடுங்கித்தின்னும் கோயில் மாட்டுக்கு தொட்டுக் கும்பிடு!

பொழுதுக்கும்
உழைக்கிற மாட்டுக்கு
சூடு.
புடுங்கித்தின்னும்
கோயில் மாட்டுக்கு
தொட்டுக் கும்பிடு!

2-அபிஷேகம்

தாளிக்க
எண்ணெய் இல்லை
சாமிக்கு
ஆயில் மசாஜ்!

3-காவல்

தோப்புக்கரணம் போட்டு
காப்பாற்ற வேண்டிக்கொண்டு
திரும்பிப்பார்த்தால்
பிள்ளையாரைக் காப்பாற்ற
இரண்டு போலீசு!

4-சாமி குத்தம்

பெரியார் சுடர்
பைரவருக்கு படுகோபம்

பைரவருக்கு
படுகோபம்,
“இந்து மதத்தெய்வம்
நான் இருக்கையில்
எச்சு ராஜா
எப்படி குலைக்கலாம்
என் மதிப்பை!”

5-தீர்த்த – யாத்திரை

நரேந்தர தபோல்கர்
கோவிந்த் பன்சாரே
கல்பர்கி..
அடுத்தடுத்து இவர்களை
தீர்த்துக்கட்டினாலும்
கட்டாயம் நீங்கள் நம்பலாம்
இந்து மதம்
சகிப்புத்தன்மை மிக்கது
அடுத்த கொலை வரைக்கும்!

6-மாயை

பாலை
சந்தியில் கொட்டினால்
பரிகாசம்,
நந்தியில் கொட்டினால்
பிரதோசம்!

பெரியார் சுடர்
பாலை நந்தியில் கொட்டினால் பிரதோசம்!

7-தொழில் பக்தி

ஆட்டோகாரர்
மீட்டருக்கு மேலே கேட்டால்
அநியாயம்…
அய்யர்
தட்டுக்கு மேல கேட்டால்
ஆன்மீகம்!

8-தீர்ப்பு

உழவாரப்பணி செய்த
அப்பரை
ஊருக்கு ஊர்
அலையவிட்ட ஈசன்

கொலைகார அமித்ஷாவுக்கு
தில்லையிலே திருக்காட்சி,
இப்பிறவி நீங்கி வர
தீக்குளியல் போடச்சொல்லி
நந்தனுக்கு வந்த அசரீரி
இப்போது காணோம்.

ஊழல் பணத்தில்
ஊருக்கு ஊர் அபிசேகம்
ஒவ்வாமை வரவில்லை
எந்த சாமிக்கும்

அம்மா விடுதலைக்கு
அளவில்லா அர்ச்சனைகள்..
எரிச்சலாகி எந்த சாமியிடமிருந்தும்
கோபம் வந்து சாபம் இல்லை..
குமாரசாமிக்கோ கொண்டாட்டம்

புரிகிறது!
கடவுள் இல்லை
`கன்பார்ம்’!

9-ஆமாஞ்சாமி

சொந்த சாதிக்கு
கட்டுப்பட்டால்
சாமிக்கு
சூடம் எரிகிறது

தாழ்த்தப்பட்டவர்க்கு
ஒத்துப்போனால்
சாமியோட
தேர் எரிகிறது!

தூணிலும் இருப்பான்..
துரும்பிலும் இருப்பான்..
சேரியில் மட்டும்
இருக்கமாட்டானா?

10-நஞ்சு

ராஜநாகம்
தலைதெறிக்க
தப்பித்து ஓட்டம்,
அருகில்
ஆர்.எஸ்.எஸ். தலைமையில்
கூட்டம்!

– துரை.சண்முகம்

பெரியார் என்று சொல்லடா ! பார்ப்பன பயங்கரவாதம் வெல்லடா !

18

அடடா என்ன ஒரு ஆளுமை பெரியார்!

periyar-remembered-thiruvallur-bannerவமானங்களோடு வாழ மக்களை அனுமதிக்காதவர் பெரியார், அவர்களே அதை விரும்பினாலும் கூட!

“நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீதான் முட்டாள்” என்று தன் மேல் கோபப்பட்டவர்களை தயங்காமல் அனுமதித்தவர் பெரியார். “இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.

“நான் சொன்னாலும் கூட பகுத்தறியாமல் ஏற்காதே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்” என சொந்த முட்டாள்தனங்களின் மீது சுரணை எழுப்பியவர் பெரியார்.

“என்ன தெரியும் உனக்கு வாயை மூடு, சொல்றதை மட்டும் கேள்!” என்று ஈன்ற தந்தையே ஈட்டியாய் பாய்கையில், “என்னையும் விடாதே! ஏன் என்று கேள்!” என்று பகுத்தறிவு பாய்ச்சினாரே அதனால்தான் அவர் தந்தை பெரியார்.

யாருக்கு வரும் அந்த அறிவுத்துணிச்சல், “கடவுள் இல்லை இல்லை என்கிறாயே வந்தால் என்ன செய்வாய்?” என்று கடவுளின் காப்பாளர்கள் சீறிய போது, சிறிதும் `வெறி’ இன்றி “வந்தா ஏத்துக்கப் போறேன்!” என்றாரே என்ன ஒரு சிந்தனை அழகு!

பெரியார் வாயெடுத்த போதெலாம் வாயடைத்து போனது அறிவீனம். “கடவுள் நம்பிக்கைகாக ஒருவன் பார்ப்பானுக்கு அடிமையாக, கீழ் சாதியாக இருக்க வேண்டுமா?” என்று பெரியார் எதார்த்த சமூக நிலைமைகளிலிருந்து கேட்ட கேள்விக்கு இன்று வரை பார்ப்பனியம் யோக்கியமாக பதில் சொன்னதில்லை.

அந்தக் கடவுளே ஆனாலும் பெரியார் பார்ப்பன பிறவி ஒடுக்குமுறையை எதிர்த்தார் என்பதை பக்குவமாக மறைத்துவிட்டு, பெரியார் கடவுளை எதிர்ப்பவர் என்று மட்டும் மக்களிடம் பிரச்சாரம் செய்து உண்மையை மறைக்கிறார்கள் இன்றளவும்.

பெரியார்
“இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது.”

ஒவ்வொரு மதமும் தன்னை வந்து சேர்ந்தவர்களை கோட்பாட்டளவில் இஸ்லாமியராக, கிருத்தவராக வரித்துக்கொண்டது. பார்ப்பன இந்துமதமோ சித்தாந்த அடிப்படையிலேயே சொந்த மதத்துகாரனையே நீ சூத்திரன் தள்ளிநில்லு, பள்ளன் , பறையன், தீண்டப்படாதவன் என்று சாதியாக விலக்கி வைக்கிறது. இந்த அயோக்கியத்தனம் ஒரு மதமா என பெரியார் கேட்டது சரிதானே!

அதுமட்டுமல்ல, ” உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” என்றார். இதிலென்ன தப்பு.

“இந்து மதத்தை விட்டு நீங்காமல் இழிவு நீங்காது” என்றார்! சொந்த விருப்பு வெறுப்பிலிருந்தல்ல சமூக எதார்த்தத்திலிருந்து சரியாகவே சுட்டிக்காட்டினார் இப்படி. “இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!” என்று இந்துமதத்தை தோலுரிக்கையில் எந்த மத்ததையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.

கருத்து உபதேசியாக காலம் தள்ளவில்லை பெரியார். கலகக்காரகவும் களம் கண்டவர் பெரியார். அனைத்து சாதியினருக்கும் ஆலய நுழைவு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என்ற போராட்டங்களின் ஊடாக சாதியம்தான் இந்துமதம் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை பக்தர்களுக்கும் புரியவைத்தார்.

“ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால், அந்த ஆண்டவனை பிறவி அடிப்படையில் பார்ப்பனனைத் தவிர பிறிதொருவர் தெட்டு பூசை செய்தால் சாமி தீட்டாகிவிடும்” என்பது பார்ப்பன சதியா? பகவான் சதியா? என்று சுயமரியாதையை தூண்டினார்.

“உன்னை பிறப்பிலேயே இழிவுபடுத்தும் இந்து மதம் ஒரு மதமா கொடுமையா?” என்ற பெரியாரின் கேள்விகள் பக்தனாய் இருப்பதற்காக சுயமரியாதையை இழக்கவேண்டியதில்லை என்று இன்றும் பின்தொடர்கின்றன. பதில் சொல்ல நியாயமற்ற பார்ப்பன இந்து மதம் இன்றும் கோயில் கருவறையிலேயே “கடவுளை பரப்பியவன் அயோக்கியன்” என்ற பெரியாரின் கருத்துக்கு சாட்சியாய் நிற்கிறது.

பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்று பார்ப்பனர்கள் வகுத்துவிட்ட எந்த கட்டுக்கதைகளையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.

எல்லோரும் முருகன் வள்ளி தெய்வானை என்று கன்னத்தில் போட்டு கும்பிட்ட நேரத்தில் பெரியார், “நடுவில் முருகன் இரண்டுபக்கமும் வள்ளி தெய்வானை என்று கும்பிடுகிறாயே, இதே போல நடுவில் வள்ளி இரண்டு பக்கம் ஆண் என்று இருந்தால் கும்பிடுவாயா? கோபப்படுவாயா?” என்று புத்திக்கு உரைக்கும்படி கேட்டார். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்பதற்காக புராண ஆபாசங்களையும் மக்களை முட்டாளாக்கும் மடமைகளையும் விட்டுவைக்காமல் பெரியார் விளாசித்தள்ளியதால்தான் ஆரியபார்ப்பன கொடும்கோன்மைக்கு எதிரான அரசியல் அடித்தளம் இன்னும் இங்கே பட்டுவிடாமல் இருக்கிறது.

“பெண் பிள்ளைகளை சில்லுகோடு விளையாடவிடாது சிலம்பம் கற்றுக்கொடு” என்றார். “பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம்” என்றார்.

ஜகத்குரு கைம்பெண்களை விதவை எனவும் தரிசுநிலம் எனவும் அவமதித்து ஒதுக்கிவைக்க உபதேசிக்கிறபோது, பார்ப்பன எதிர்ப்பாளர் பெரியாரோ பார்ப்பன பெண்கள் உள்பட யாராயிருந்தாலும் மறுமணத்தை ஆதரித்தும், அவர்கள் மீதான மத பிற்போக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று வலியுறுத்தியதோடு அது பகுத்தறிவாக விளங்கவேண்டும் எனவும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஊக்கப்படுத்தினார். பெண்களே ஒரு மாநாட்டில் அவரது பணிகளை சிறப்பித்து வழங்கிய பட்டம்தான் பெரியார் என்பது. பெண்கள் இப்படி மதிப்பளிக்கும் அளவுக்கு யோக்கியதை எந்த சாமியாருக்காவது சங்கராச்சாரிக்காவது உண்டா? அதனால்தான் அவர் சமூகத்திற்கே பெரியார் ஆனார்!

சொல்லும் கருத்துக்களை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது, தனக்கென சுயநலமாக ஆதாயம் பார்க்கமல் சமுகமாற்றத்திற்காக வாழ்நாட்களை அர்ப்பணிப்பது, மக்கள்மீது நம்பிக்கை வைத்து வேலை செய்வது என்ற விடாப்பிடியான போராட்டங்களில் இளமை துடிப்புதான் பெரியார். பல்வேறு சமூகபரிமாணங்களோடு நாத்திகத்தையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக கட்டியெழுப்பிய சிந்தனை உறுதிதான் பெரியார். சூழ்ந்திருக்கும் பார்ப்பன பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க நம் ஒவ்வொருவருக்கும் அந்த உறுதி இப்போது தேவைப்படுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் சொன்னார், “இந்த வேலைகளை செய்வதற்கு யாரும் முன்வராததால் இவைகளை தோள்மேல் சுமந்துகொண்டு நான் செய்தேன் என்பதைத்தவிர இதற்கான தகுதியும் யோக்கியதையும் எனக்கு இருக்கிறது என்பதால் அல்ல”, எனும் பொருள் படும்படி பேசியிருப்பார்.

எந்த வகையிலும் சமூகமாற்றத்திற்கான வேலைகளை தட்டிக்கழிக்காமல் பெறுப்பேற்றுக்கொள்ள ஏன் நமக்கு இப்படி தோன்றுவதில்லை! பதிலுக்கு பெரியார் காத்திருக்கிறார் போராட்ட களங்கள் எங்கும்!

– துரை.சண்முகம்

பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

4

சென்னை சேத்துப்பட்டு

செப்டம்பர் -17 தந்தை பெரியார் பிறந்த நாளில் இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்க உறுதியேற்போம்!

தந்தை பெரியார் பிறந்தநாள்ந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாளையொட்டி சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காலை 8:00 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் பகுதி தோழர்கள் மாலை அணிவித்தனர்.

இன்றைய சூழலில் அதிகாரத்தில் அமர்ந்துள்ள பார்ப்பன பாசிஸ்டுகள் ஜனநாயகவாதிகளையும், பகுத்தறிவுவாதிகளையும் அட்டவணையிட்டு படுகொலை செய்யும் அளவுக்கு ஜனநாயக எதிர்ப்பும் பாசிசமும் கோலோச்சுகிறது.

இச்சூழலில், ‘தமிழகத்திற்கு, ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பார்பனிய எதிர்ப்பிற்கும் முன்னோடியாக திகழ்ந்த தந்தை பெரியார் பிறந்த தமிழகத்தில் எப்படியும் கால் ஊன்றிவிட வேண்டும். இதற்கு மக்களின் மத உணர்வுகளை மதவெறியாக மாற்றும் நோக்குடன் உழைக்கும் மக்கள் வாழும் பகுதியில் பிள்ளையார் சிலை அமைப்பது, பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது அதன் மூலம் கலவரங்களைத்தூண்டி விடுவது என செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, இந்துத்துவ கும்பல்களை நாம் நமது பகுதிகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இவர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமானவர்கள் என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது வரை இல்லாமல் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஜெகன்நாதபுரம், பள்ளிச் சாலையில் அமைந்துள்ள துளுக்கானத்தம்மன் கோவிலில் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியால் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவல் துறை சென்ற ஆண்டு பிள்ளையார் சிலைகள் வைத்த இடங்களைத் தவிர்த்து புதிய இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது எனக் கூறியுள்ள போதிலும் இம்முறை புதிதாக அந்த பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்து மதவெறிக் கும்பலால் வைக்கப்பட்ட சிலையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்து முன்னணி கும்பல்களை ஊருக்குள் விட்டால் காலம் காலமாக சகோதரர்களாக பழகிவந்த இசுலாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்துவார்கள் இதற்கு தமிழகத்தில் நடந்த மண்டைகாடு கலவரமே சாட்சி.

சமீபத்தில் கூட சென்ற பிள்ளையார் ஊர்வலத்தின் போது சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது கல்லெறிந்துள்ளனர். சென்ற ஆண்டு புதுப்பேட்டை பகுதியில் கொலை வரை சென்றுள்ளனர் இந்த இந்து மதவெறிக் கும்பல்.

ஆகவே உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் இக்கும்பலை அனுமதிப்பது நம் வீட்டை நாமே கொளுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும் என அந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பகுதியில் உள்ள ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கட்சியினரையும் சந்தித்து விளக்கியுள்ளோம். அவர்களும் நமது கருத்துக்களை ஏற்றுக் கொண்டதுடன் அச்சிலையை உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

பெரியார் பிறந்தநாள்
பெரியாரின் வாரிசுகளான களத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள்

ஆனால், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், எங்கள் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்” என்று போராடிய பச்சையப்பன் மாணவர்களையும், மாணவிகளையும் வெறி கொண்டு தாக்கிய சேத்துபட்டு போலீசார் மக்களிடம் துவேசத்தை பரப்பும் இச்சிலையை அகற்றுவதில் அவ்வளவு வேகம் காட்டவில்லை.

எனவே நேரில் காவல் நிலையம் சென்று மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் இந்து முன்னணியினரால் வைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளரிடம் சொல்லப்பட்டுள்ளது. காவல் துறை அச்சிலையை அகற்றாத பட்சத்தில் சேத்துப்பட்டு பகுதி வாழ் உழைக்கும் மக்கள் அதை நிறைவேற்றுவார்கள்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

திருவள்ளூர் கிழக்கு

பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கு கல்லறை கட்ட தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்போம்! என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பொன்னேரியில் பறை ஓசையுடன், விண்ணதிரும் முழக்கங்களுடன் மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பெரியார் பிறந்தநாள்மாவட்ட துணைத் தலைவர் தோழர் நாகராஜ் அவர்கள், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சி அமைந்த பிறகு பற்றி படரும் இந்துமதவெறி பாசிசத்தையும், அதற்கு ஊது குழலாக இருக்கின்ற பாசிச ஜெயாவையும் அம்பலப்படுத்தி, இதனை முறியடிக்க பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி  பிரசுரம், இனிப்பு கொடுத்து விழாவினை சிறப்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிள்ளையாரை வைத்து அரசியல் செய்யும் பார்ப்பன-பாசிச கும்பலை விரட்டியடிக்க மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

திருவள்ளூர் மேற்கு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கு கல்லறை கட்ட தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்போம்! என்ற தலைப்பில் பட்டாபிராம் மற்றும் இந்துக் கல்லூரி அருகில் உள்ள அண்ணாநகர் சேக்காடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைகளின் அருகில் பெரியார் படம் வைத்து பூமாலை அணிவித்தும், ஆவடி பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் பூமாலை அணிவித்து மூன்று இடங்களில் தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரியார் பிறந்தநாள்செப்டம்பர் 17, காலை 8 மணிக்கு பட்டாபிராம், CTH சாலையில் உள்ள (கிரேஸ் மருத்துவமனை) அம்பேத்கர் சிலை அருகில் தந்தை பெரியாரின் படம் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. இக்கூட்டத்திற்கு தோழர் முகிலன் தலைமை தாங்கினார். இன்றைய சூழலில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தந்தை பெரியாருக்கு ஜெய தென்னரசு பூமாலை அணிவித்தும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு தோழர் விஜயகுமார் பூமாலை அணிவித்தனர். அப்பகுதி மக்களுக்கு இனிப்பும், பிரசுரமும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிய பு.ஜ.தொ.மு செயற்குழு உறுப்பினர் தோழர் எழில்மாறன் தான் படிக்கும் காலத்தில் பாட புத்தகத்தில் எவ்வாறு பார்ப்பன புரட்டுகள் இருந்தது என்பதை நினைவு கூர்ந்ததுடன், மனுதர்மத்தை அம்பலப்படுத்தியும், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் இந்துமதவெறி பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்களை பற்றியும் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

பகுத்தறிவு கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்நெறி பு.ஜ.தொ.மு நடத்தும் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் இது போன்ற கூட்டங்களை அதிக அளவில் நடத்த வேண்டும் எனவும் கூறினார்.

அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த நீலக்கொடி ஜெயராமன் கள்ளுண்ணாமைக்காக தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார் பெரியார். ஆனால் இன்று பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் (அ.தி.மு.க) பெரியாரின் கொள்கைக்கு மாறாக டாஸ்மாக்கை திறந்து கொள்ளையடித்து வருகிறது என்று கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சார்லஸ் பேசும் போது அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் இது போன்ற கூட்டங்களை பு.ஜ.தொ.மு நடத்துவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பழங்குடியினர் நலமுன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கிய ஜெய தென்னரசு தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பல போராட்டங்களை எளிய மொழியில் நினைவு கூர்ந்து தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சார்ந்த தயாளன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கடைசியாக பேசிய பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் பா. விஜயகுமார்  நாட்டை கவ்வியுள்ள காவி பயங்கரவாதம் தற்போது பாசிசமாக உருவெடுத்து வரும் அபாயத்தை அம்பலப்படுத்தியும், இத்தருணத்தில் தந்தை பெரியாரின் பிறந்த தமிழக மண்ணில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தின் கல்லறையாக்க அணிதிரள வேண்டிய அவசியத்தையும் விளக்கி உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கூட்டத்தில் புஜதொமு-வின் கிளை மற்றும் இணைப்பு சங்கத்தை சார்ந்த தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !

1

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்து போதிக்கப்பட்டிருக்கிறது. “கடவுள் துகளையே” கண்டுபிடிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்து வகுப்பா? என இதைப் படிக்கும் வாசகர்களுக்குத் தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றலாம். ஆனால், இந்த விசயம் இப்படி சலித்துக்கொண்டு ஒதுக்கிவிடக்கூடிய அளவிற்கு சாதாரணமானது அல்ல. ஏனெனில், “அது பயிற்சி வகுப்பு என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஷாகா” என்பதையும், “பள்ளிக்கல்வித் துறையே உத்தரவு போட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களை அனுப்பி வைத்திருப்பதையும்” அவ்வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் நக்கீரன் இதழ் (ஆக.08-11, பக்.10) வழியாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

சென்னையிலுள்ள பார்ப்பன சேரியான மயிலாப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அறம் மற்றும் பண்பாட்டு முனைவு மையம் என்ற அமைப்புதான் இப்பயிற்சி வகுப்பை ஒழுங்குசெய்து நடத்தியிருக்கிறது. இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் விஷக் கொடுக்குகளுள் ஒன்று. தயானந்த சரசுவதி, ஆடிட்டர் குருமூர்த்தி, பத்மா சுப்பிரமணியன், திருமதி ஒ.ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான தமிழகத்துப் பார்ப்பன கும்பல்தான் அவ்வமைப்பிற்குத் தலைமையேற்றுள்ளது. இந்த விவரங்களெல்லாம் பார்ப்பன ஜெயா அரசுக்கும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தெரியாத விடயமல்ல. ஆசிரியர் பயிற்சி வகுப்பு என்ற பெயரில் அங்கு பார்ப்பன மூடக் கருத்துகளும், ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியலும்தான் ஆசிரியர்களின் மூளையில் திணிக்கப்படும் எனத் தெரிந்தேதான், பள்ளிக்கல்வித் துறை ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தலா ஒரு ஆசிரியரை அப்பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. எனில், ஜெயா அரசு-ஆர்.எஸ்.எஸ்-க்கு இடையே உள்ள இந்தக் கூட்டின் உள்நோக்கமென்ன என்ற கேள்வி முக்கியமானது.

இன்று இரண்டு அபாயங்கள் தமிழக பள்ளிக் கல்வியைக் கவ்வக் காத்திருக்கின்றன. ஒன்று, மொழிப் பாடத்திட்டத்தில் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு கமுக்கமாக நடைபெற்றுவரும் முயற்சிகள்; மற்றொன்று, அரசுப் பள்ளிகளில் பார்ப்பனப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சி. இந்த வகுப்பு அந்த முயற்சிகளின் முன்னறிவிப்பு.

05-rss-imposing-on-education

இப்பயிற்சியின் தொடக்கமே ஆர்.எஸ்.எஸ்.இன் ‘தேசிய’த் திட்டமான கோமாதாவைக் காப்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. அதனை நேரடியாகச் சொல்லாமல், “சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும், வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்; யானை, பாம்பு, மாடு ஆகிய விலங்குகளைக் கொல்லக்கூடாது” என ஜீவகாருண்யவாதிகள் போல பேசத் தொடங்கி, “இதையெல்லாம் புனிதமா மதிக்கணும்” என முடித்துத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுள்ளனர்.

இதனையடுத்து, “துவ்ருக்ஷா வந்தனம், துளசி வந்தனம், பூமி வந்தனம், பித்ரு வந்தனம், சுவாசினி வந்தனம், பாரத் மாதா/பரம்வீர் வந்தனம் என்ற ஆறுவிதமான சமஸ்காரங்களைப் பண்ண வேண்டும்” எனப் பார்ப்பன சடங்குகளைப் பற்றியும், பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்தும் பிரசங்கம் நடந்திருக்கிறது. “இந்தியாவோட ஒற்றுமை நமக்கு முக்கியம். அதற்கு இந்து மத கலாச்சராம்தான் சரியாக இருக்கும்” என உபதேசம் செய்திருக்கிறார், சனாதன தீவிரவாதி ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி.

பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்களுள் ஒருசாரர் இந்தப் பார்ப்பன கதாகலாட்சேபத்திற்கு அங்கேயே எதிர்ப்பு தெரிவித்ததோடு, “பசு புனிதமென்றால், ஆடு, கோழி எல்லாம் புனிதமில்லையா?” என்று திருப்பி அடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மூக்கை உடைத்துள்ளனர். மேலும், “இது என்ன ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியா, நீங்க என்ன ஆர்.எஸ்.எஸ்.யூனிட்டா?” எனக் கேட்டு அக்கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளனர். இந்த அயோக்கியத்தனம் பத்திரிகைகளின் வாயிலாக அம்பலப்பட்ட பிறகு, “இது பற்றி விசாரணை நடத்தப்படும்” என சால்ஜாப்புகள் நிறைந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது, பள்ளிக்கல்வித் துறை.

தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. இதற்காக ஆர்.எஸ்.எஸ்.-ன் குட்டிகளுள் ஒன்றான பாரதிய சிக்ஷா மண்டல் புதிய கல்வித் திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கியிருப்பதாகவும், அவ்வமைப்பின் தலைமையில் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மீண்டும் மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவருவது இப்புதிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சமாக உள்ளது. இப்புதிய கல்விக் கொள்கையையும், பாடத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையோடு, சமஸ்கிருதத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்ப்பது தொடர்பாகவும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் இக்கருத்தரங்களை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் கருத்தரங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இக்கருத்தரங்குகளில் 13 தலைப்புகளின் கீழ் கருத்துக் கேட்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதில் 11-வது தலைப்பின் கீழ் மும்மொழிக் கொள்கை மற்றும் சமஸ்கிருதத்தை வளர்ப்பது தொடர்பாக 9 வகையான கேள்விகள் இடம்பெற்றிருப்பதாகக் கல்வியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் மொழிப் பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என 2006-ல் சட்டம் கொண்டு வரப்பட்டு, அச்சட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் கட்டாயமாகிறது. இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் நிலுவையில் உள்ளன. இச்சட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடையேதும் விதிக்கவில்லை என்றபோதும், தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் – மெட்ரிக் மற்றும் நடுவண் வாரியப் பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.) இச்சட்டத்தை ஒருபொருட்டாக மதிப்பதேயில்லை. அப்பள்ளிகளில் தமிழ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. குறிப்பாக, நடுவண் வாரியப் பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு 20 முதல் 40 நிமிடம் மட்டுமே கற்பிக்கப்படும் அளவிற்கு தமிழ் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் தமிழைத் தீண்டத்தகாத மொழியாகப் புறக்கணித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் முதன்மைப் பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருந்துவருகிறது. அதற்கும் வேட்டு வைக்கும் வகையில் ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தீவிரமாகத் திணித்துவருகிறது, பார்ப்பன ஜெயா அரசு. இன்னொருபுறம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் அரசுப் பள்ளிகளிலும் திணிப்பதற்கான ஏற்பாடுகளில் மோடி அரசோடு கைகோர்த்துச் செயல்படத் துணிந்திருக்கிறது. இவற்றுக்கு அப்பால் அரசுப் பள்ளிகளில் பார்ப்பன பண்பாட்டைத் திணிப்பதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்துவருகிறது, ஜெயா கும்பல்.

கல்லூரிகளில் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில்கூட மாணவர்கள் சாதிரீதியாகப் பிரிந்து மோதிக்கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் வேளையில்; கல்லூரி மாணவர்களிடேயே போராட்டக் குணம் மழுங்கடிக்கப்பட்டு, சுயநலமும், பிழைப்புவாதமும், சீரழிவும் அதிகரித்துள்ள நிலையில், கல்வித் திட்டத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பையும், பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, பார்ப்பனக் கும்பல். 1965-களில் நடந்த மாணவர் போராட்டத்தைப் போன்றதொரு வலிமையான போராட்டத்தை இப்பார்ப்பன சதிக்கு எதிராகத் தமிழக மாணவ சமுதாயம் நடத்தத் துணியாவிட்டால், சுயமரியாதை மரபு கொண்ட தமிழகம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் அடிமையாக மாற்றப்படுவதைத் தடுத்துவிட முடியாது.

– குப்பன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்

2

தூத்துக்குடியில் மீனவர் சங்கத் தலைவர் தலைவர் பார்த்திபனை விசைப்படகு முதலாளிகளின் கைக்கூலிகள் குத்திக்கொன்று விட்டனர்.

மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகளும் அதில் உழைக்கும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் நீரின்மேல் நிலையின்றி ஆடும் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கு என்ன காரணம்?

தோழர் பார்த்திபன்
குத்தி படுகொலை செய்யப்பட்ட தோழர் பார்த்திபன்

முதலாளிகளின் சுரண்டலை கொள்ளையை தட்டிக்கேட்டதுதான் காரணம். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலை நம்பி தொழில்செய்பவர்களான பரதவர்களில் முதலாளிகள் மட்டும் செழிப்பாக இருக்க, கடுமையாக உழைக்கும் தொழிலாளிகள் மட்டும் ஏன் முன்னேற முடியவில்லை என்று சிந்தித்து போராட்டத்தை வழிநடத்தியதால்தான்.

மீன்பிடிதொழிலாளர்களின் உழைப்பால் விசைப்படகு முதலாளிகள் எப்படி கொழுக்கிறர்கள்?

பிடித்துவரும் மீனை விற்று வரும் பணத்தில் அனைத்து செலவையும் கழித்துவிட்டு எஞ்சியதை முதலாளிக்கு 65%, தொழிலாளர்களுக்கு 35% என்று பிரித்துக்கொண்டுதான் கொழுத்தனர். இதை எதிர்த்து 61%-39% என்று பிரித்துக்கொள்ள நிர்பந்தித்து போராடி வென்றது தொழிற்சங்கம். இதற்கு முக்கிய பங்காற்றியவர் தோழர் பார்த்திபன்தான். அப்படி இருந்தும் மீன்பிடி தொழிலால் கோடிகளில் புரள்கிறார்கள் முதலாளிகள்.

தொழிலாளர்களுக்கு ஏன் முன்னேற்றம் வரவில்லை?

அவர்களின் உழைப்பை நயவஞ்சகமாக முதலாளிகள் திருடிக்கொள்வதால்தான். 10 தொழிலாளிகள் அதிகாலை 4.00 மணிக்கு படகில் ஏறி நள்ளிரவு 11.00 மணிக்கு திரும்பி மீன்களை விற்று முடிக்க நள்ளிரவு 1.00 கூட ஆகும். படகு கரைக்கு வரும் முன்னரே அடுத்த நாள் போகவேண்டிய 10 பேர் இரவு 9.00 மணிக்கே வந்து காத்திருப்பர். இரவு 1.00 மணிக்கு மேல் இரண்டு மணிநேரம் தூங்கி அடுத்தநாள் 4.00 மணிக்கு தொழிலுக்கு செல்வர்.

இவர்கள் ஒரு நாளுக்கு பேட்டாவாக ரூ 700 வீதம் 20 தொழிலாளிக்கு ரூ 14,000 செலவாக காட்டினால், முதலாளி கரையில் நின்று மேற்பார்வை மட்டும் பார்த்துவிட்டு தனக்கும் 20 பேரின் பேட்டாவான அதே 14,000-ஐ எடுத்துக் கொள்கிறார். இதுபோக டீசலுக்கு, ஐஸ்க்கு, உணவு செலவுக்கு என்று பிடித்துக்கொள்வார்கள். 1 லட்சத்துக்கு அதிகமாக ஏலம் போனால்தான் அடக்கச் செலவை ஈடுசெய்ய முடியும். அப்படி இல்லாமல் ஒருநாள் மீன்பாடு குறைந்து செலவை ஈடுகட்டாத போது அடுத்தநாள் மீன்பாடிலிருந்து வரும் தொகையில் பழைய நிலுவை பேட்டாவை பிடித்துக் கொள்கிறார்கள்.

படகை சொந்தமாக வைத்திருப்பதால்தான் முதலாளிக்கு நிகர வரவில் 61% ஒதுக்கப்படுகிறது. ஆனால் செலவுக் கணக்கில் எவ்வளவுக்கு மீன் ஏலம்போனதோ அதில் 6% வட்டக்காரர்களுக்கு என்று எடுத்துக்கொள்கிறான் முதலாளி. அதாவது ரூ 1 லட்சத்துக்கு மீன் விற்றிருந்தால் 6,000  ரூபாயை வட்டக்காரனுக்கு என்று எடுத்துக்கொள்கிறார்கள்.

யார் இந்த வட்டக்காரர்கள்?

சுமார் ரூ 85 லட்சம் வரை செலவிட்டு நவீன இரும்பு விசைப்படகை கடலில் இறக்கும் முதலாளிக்கு ரூ 40 லட்சம் வரை வட்டிக்கு – தினசரி விற்பனையில் 6% வசூலித்துக்கொள்ள – பணம் தருபவர்கள்தான் இந்த வட்டக்காரர்கள். உண்மையில் சுமார் 270 விசைப்படகுகளில் 200-ல் முதலாளியே வட்டக்காரனாகவும் – ஓனர் வட்டமாக – இருக்கிறார். ஒருவரே 6 விசைப்படகுகளை வைத்துள்ள நிலையிலும் அதில் பிடிக்கும் மீன்களை விற்றதிலும் 6% வட்டம் பிடிக்கப்படுகிறது. இதை கண்டித்தது தொழிற்சங்கம். மீன் ஏலத்தையே இந்த வட்டக்காரர்கள் – ஓனர் வட்டங்கள் – கட்டுப்படுத்தி அதிலும் காசு பார்க்கின்றனர்.

ஏலத்தில் என்ன பிரச்சினை?

சென்னையிலும், நாகையிலும், ராமேஸ்வரத்திலும், கொச்சியிலும் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கும் மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் ஏஜெண்டுகள் தூத்துக்குடியில் மட்டும் விலையை குறைத்தே எடுக்கிறார்கள். இங்கு ஏலம் எடுக்க ஏஜெண்டுகள் வட்டக்காரர்களிடம் சீட்டு – அட்டை – வாங்க வேண்டும். ஒரு படகுக்கு 3 அட்டை என்ற கணக்கில் வட்டக்காரர்கள் வியாபாரிக்கு தருகிறார்கள். வட்டக்காரர்களோ என்ன மதிப்புக்கு ஏலம்போனதே அதில் 2% கமிசனாக வசூலித்துக் கொள்கிறார்கள். எனவே அதற்கேற்ப ஏலத்தொகையை இங்கு மட்டும் குறைத்துக் கொள்கின்றன கம்பெனிகள். ஏலம் குறைவாக போனால் அது தொழிலாளர்களை பாதிக்கிறது. இந்த 2% வசூலை ரத்துசெய்யக்கோரி, அட்டை முறையை, வட்டக்காரர்களை – முதலாளிகளை எதிர்த்தன தொழிற்சங்கங்கள். பேச்சுவார்த்தை பல சுற்று நடந்தது.

பேச்சுவார்த்தையில் என்ன முடிவானது?

விசைப்படகு உரிமையாளர்கள், வட்டக்காரர்கள் மற்றும் தொழிற்சங்கம் கூடி பேச்சுவார்த்தை நடத்தி சில முடிவுகளுக்கு வந்தனர்.

  1. 2% கமிசன் எடுக்க தடை.
  2. 1 வட்டக்காரர் 1 படகுக்கு 1 அட்டை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இதை வட்டக்காரர்கள் எதிர்த்தனர். உரிமையாளர்களை தம் தரப்புக்கு மாற்றினர். ஒப்பந்தத்தை மீறி 1% கமிசன் எடுப்பதாக தட்டி வைத்தனர்.

தொழிற்சங்கங்கள் என்ன முடிவெடுத்தது?

சிறிய படகு தொழிலாளர் சங்கமும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கமும், முத்து நகர் விசைப்படகு தொழிலாளர் சங்கமும் 01-09-2015 அன்று இரவில் கூட்டுக்கூட்டம் போட்டனர். நாளை விசைப்படகை எடுத்துக்கொண்டு தொழிலுக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்தனர். நுழைவாயிலில் கயிற்றை கட்டி தடுப்பை ஏற்படுத்தினர்.

முதலாளிகள் என்ன செய்தனர்?

மறுபுறம் முத்துநகர் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கடலுக்கு செல்ல ஐஸ்களை படகில் ஏற்றினர். முடிவைமீறி சென்ற விசைப்படகை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தடுத்து, முதலில் வந்த சிட்டுக்குருவி படகை தாக்கி மீண்டும் திரும்ப வைத்தனர்.

இதை அவமானமாக எடுத்துக்கொண்டு பழிதீர்த்து விட்டனர் முதலாளிகள். சங்கத்திலிருந்து மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த தலைவர் பார்த்திபனை குத்திக்கொன்று விட்டனர். இன்று பார்த்திபனின் மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும் நிர்கதியாக நிற்கின்றனர்.

இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக மீனவர்கள் ஒன்று திரண்டனரா?

இல்லை. நாட்டுப்படகு வழக்கம்போல் தொழிலுக்கு சென்றது. தருவைக்குளம் மீனவர்களும் நாடார் – பரதவர் என்று பிளவுபடுத்தப்பட்டு விலகியே நின்றனர். கடலை நம்பி வாழும் பைபர் படகு மீனவர்களோ விசைப்படகை தமது போட்டியாளராக – எதிரியாக பார்ப்பதால் அதில் எழும் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. ஆற்றுக் கழிமுகங்களை, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் கரையோரங்களை விசமாக்கும் நச்சு ரசாயன ஆலைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவதில்லை. வேம்பாரும், வைப்பாரும், புன்னக்காயலும், பெரியதாழையும், தூத்துக்குடியும் ஒன்றுபட்டு போராடியதில்லை. கடலைக் காக்க, இயற்கையைக் காக்க, கனிமச்செல்வங்களை காக்க நடக்கும் போராட்டங்களில் குறிப்பாக ஒரே மதமாக இருந்தும், வழிநடத்துவதற்கு ஊருக்கு ஊர் பாதிரிமார்கள் இருந்தும் ஒன்றுபடவேயில்லை.

அரசு என்ன செய்தது?

ஆழ்கடலை அன்னிய மீன்பிடிக்கப்பல்களுக்கு தாரை வார்த்துவிட்டு இங்குள்ள படகுகளுக்கு இவ்வளவு தொலைவுதான் செல்ல வேண்டும், இவ்வளவுக்குதான் மீன் பிடிக்க வேண்டும், படகின் நீளம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், இத்தனை நாள் தடைக்காலம் என்றெல்லாம் ஆயிரம் கட்டுப்பாடுகளை போடுகிறது அரசு.

மீன்பிடி துறைமுகத்தில் வட்டக்காரர்களின் அடாவடி வசூலை தடுக்காமல் மீன்வளத்துறை இயக்குனர் வேடிக்கை பார்த்திருந்துள்ளார். காவல்துறையோ இவ்வளவு பதட்டமாக துறைமுகம் இருந்தும், முதலாளிகள் பேச்சுவார்த்தையை அப்பட்டமாக மீறிய நிலையிலும், தொழிலாளர்கள் கொந்தளித்து கல்லெறிந்த பின்னரும், எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் முதலாளிகளின் திட்டம் நிறைவேற மறைமுகமாக துணைபோயுள்ளனர். வட்டமும், அட்டையும், கமிசனும் என்னவாகப் போகிறது?

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
ஆலைச்சாவுகளைப் பொறுத்த வரையில் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சார்பாக RDO, இன்ஸ்பெக்டர் போன்றோரும், பாதிக்கப்பட்ட தொழிலாளி சார்பாக சங்கங்களும் அமைப்புகளும் சில ஆயிரம் அல்லது லட்சம் வாங்கித்தருகிறோம் என்று கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து விடுகின்றனர்

பொதுவாக தூத்துக்குடி என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முத்துக்குளிப்பும், வ.உ.சி. ஓட்டிய சுதேசிக் கப்பலும்தான். இன்று நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக தூத்துக்குடி வளர்ந்துள்ளதாக பெருமிதப்படுவோரும் உண்டு. இந்த வளர்ச்சி யாருக்கானது?

இன்று தூத்துக்குடியில் என்ன நடக்கிறது?

பாதுகாப்பின்றி வேலைவாங்கப்படுவதால் அனுதினமும் நடக்கும் விபத்துகளும், உயிரிழப்புகளும்தான் அன்றாட நிகழ்வுகளாகிறது. இந்நகரம் வட இந்தியத் தொழிலாளர்கள் உட்பட நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் இடமாக மாறிவிட்டிருப்பது மட்டுமல்ல; பலநேரங்களில் இவ்விபத்துகளும் படுகொலைகளும் சக தொழிலாளர்களால் சாதாரணமானதாக பார்க்கப்படுவதும், மரத்துப் போனவர்களாக மாற்றப்படுவதும் தொடர்கிறது.

தூத்துக்குடி முக்கிய தொழில் நகரமா?

ஆம். இங்கு பெயர்பெற்றிருப்பது ஸ்பிக், ஸ்டெர்லைட், VV மினரெல்ஸ் போன்ற உர, தாமிர, கனிம ஆலைகள் மட்டுமல்ல; KSPS, சகாயமாதா சால்ட் போன்ற உப்பளங்களைக் கொண்ட உப்பு நிறுவனங்களும்; DSF, நிலா சீ ஃபுட்ஸ் போன்ற மீன் ஏற்றுமதி நிறுவனங்களும், ரமேஷ் பிளவர்ஸ் போன்ற மலர் ஏற்றுமதி நிறுவனங்களும்; செயிண்ட் ஜான், ஹரி & கோ போன்ற ஷிப்பிங் கம்பெனிகளும்தான். இதையெலாம் விட முக்கியமானது தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள TTPS, IBPL, கோஸ்டல் எனர்ஜியான் போன்ற இயங்கும் பவர்பிளாண்டுகளும், புதிதாக கட்டி இயக்கப்பட்டு வரும் NTPL அனல்மின் நிலையமும்தான். மேலும் முத்துக்குளி இல்லாவிட்டாலும் சங்குகுளியும், மீன்பிடிப்பும் பெரும் அளவு நடக்கிறது.

பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது என்றகிறார்களே அது உண்மையா?

இல்லை. உண்மையில் அனைவரும் காண்ட்ராக்ட் முறையில் நவீனமாக ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். சிலர் உயிரையும் பறிகொடுக்கிறார்கள். கட்டுமானத்திலிருந்து உற்பத்திவரை அனைத்திலும் காண்ட்ராக்டுக்கு உள்காண்ட்ராக்ட் என்று பல்வேறு படிநிலைகளில் பிரிக்கப்படுகிறார்கள் தொழிலாளர்கள்.

IBR வெல்டரான சசி “எங்க IBBL கம்பெனியில நாங்க OEG காண்ட்ராக்ட்ல பல வருசமா வேலை செஞ்சோம். இப்ப பழைய ஆட்கள் யாரும் இல்லை. கம்பெனி மேனஜரே நல்ல ஆப்பர்சூனிட்டி வரும்போது கம்பெனிய மாத்தினாத்தான் நீங்க முன்னேற முடியும்னு பகிரங்கமா சொல்றான்” என்று பணி நிரந்திரக் கனவை விட்டுவிடும்படி நிர்ப்பந்திப்பதை தோலுரித்தார்.

தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் ஒரே வேலையில் ஈடுபட்டிருந்தாலும் தாம் யாருக்காக – யாரிடம் வேலைசெய்கிறோம் என்று புரியாமலேதான் ரூ 200-க்கும் குறைவான தினக் கூலிக்கு கடுமையாக உழைக்கிறார்கள். ஒரே வேலைக்கு ஒவ்வொரு காண்ட்ராக்டிலும் ஒவ்வொரு விதமான சம்பளம் தரப்படுகிறது. பல கோடிகளைப் போட்டு பிரம்மாண்ட எந்திரங்களைக் கொண்டு மின்நிலையத்தை அமைக்கும் நிறுவனம் ஏன் நேரடியாக உற்பத்தியில் இறங்குவதில்லை. அதிகார வர்க்கத்திற்கு தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு எடுத்து மின்னுற்பத்தி செய்யவைப்பது முடியாத ஒன்றா என்ன?

ஏன் ஆப்பரேசன் & மெயிண்டனென்ஸ் (O&M) என்ற முறை புகுத்தப்படுள்ளது?

ஆலைக்கும் தொழிலாளர்களுக்கும், அதாவது உண்மையான முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவை மூடிமறைத்து ஏமாற்றும் தந்திரமாகத்தான் O&M கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது துல்லியமாக திட்டமிட்ட உற்பத்தியை நடத்தி கிடைக்கும் உத்தரவாதமான லாபம் மட்டும் முதலாளிக்கு; இழப்புகளுக்கு பொறுப்பேற்காமல் இந்த லாபத்திற்கு அடிப்படையான உழைப்பு சக்தியை செலவிட்ட, உடல் உறுப்புகளை அல்லது உயிரையே இழக்கும் தொழிலாளிக்கோ பட்டை நாமம் போடுவது என்பதை செய்யவே O&M.

இன்று புதிதாக கட்டி இயங்கத் தொடங்கியுள்ள NTPL-ல் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 500 பேர். ஆனால் இவர்களை வேலைக்கு நியமித்துள்ள கண்ட்ராக்ட்காரர்களோ (L&T, ABB உள்ளிட்டு) 50 பேர். இந்த பிளாண்ட்டை இரவு பகலாக கடும் உழைப்பை செலுத்திக் கட்டிய ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்தம் முடிந்ததும் விரட்டப்பட்டு விட்டனர்.

1979-ல் உற்பத்தியை தொடங்கிய TTPS தொடர்ந்து 7 ஆண்டுகளாக உற்பத்தி இலக்கை சரியாக எட்டியதற்கான மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. ஒரு யூனிட் கரண்ட்டை ரூ 2.50-க்கு தந்து லாபத்தில் இயங்கிவரும் இப்பிளாண்ட்டிலும் காண்ட்ராக்ட் முறை திணிக்கப்பட்டுள்ளது. இங்கு 2,000 பேர் நிரந்தரத் தொழிலாளிகள் இருக்க ஒப்பந்தத் தொழிலாளிகளின் எண்ணிக்கையோ அதையும் தாண்டுகிறது. அதாவது படிப்படியாக தனியார்மயம் மூக்கை நுழைக்கின்றது.

இதற்கு பதில் பாதுகாப்பாக உற்பத்தியை செய்யலாமே?

செய்யலாம்தான். ஆனால் அதற்கான கருவிகளுக்கும், கடைபிடிப்பதற்க்கும் பணம் செலவாகுமே! பாதுகாப்பை முன்வைத்தால் உற்பத்தி அளவும் – அதாவது லாபமும் குறையுமே! அதைவிட மலிவான உத்திதான் O&M மூலம் உள்..உள் காண்ட்ராக்ட்டுகளை புகுத்தியிருப்பது. இம்முறையில் யாராவது அடிபட்டாலோ உயிரை விட்டாலே காண்ட்ராக்ட் காரர்களே கட்டப்பஞ்சாயத்து பேசி பிரச்சினையை அதிக செலவின்றி முடித்துவிடும்போது எந்த முதலாளி பாதுகாப்பான உற்பத்தி முறையை விரும்புவான்? நம் உடல் உறுப்புகளும், உயிரும் எவ்வளவு மதிப்பற்றதாக கீழானதாக மாற்றப்பட்டுள்ளது!

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
கடந்த ஆகஸ்ட் 2015ல் படுகொலையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி.

அரசு – பொதுத்துறை நிறுவனங்களாவது பாதுகாப்பு விதிகளை மதிக்கிறதா?

ஆம். அதாவது எந்திரங்களை எப்படி சேதமாக்காமல் இயக்குவது என்று அதிஉயர் பாதுகாப்பை நடைமுறைப் படுத்துகிறார்கள். அதனால்தான் கொதிகலன்கள் வெடிப்பதில்லை. எந்திரங்கள் உடைபடுவதில்லை. ஒவ்வொரு நிறுவனத்திலும் முறையாக வார, மாத, காலாண்டு பராமரிப்புகளை சரியாக செய்கிறார்கள்தான்.

பவர்பிளாண்ட்டை – எந்திரங்களை பராமரிக்க என்றே அதிகாரிகளின் பெரும் பட்டாளத்தை நியமிக்கிறது அரசு. உதாரணத்திற்கு 1010 MW திறனுள்ள தூத்துக்குடி தெர்மல் பவர் ஸ்டேசனில் (TTPS) ல் மட்டும் 1 தலைமைப்பொறியாளர் (சம்பளம் – ரூ 2 லட்சம்), 7 மேற்பார்வை பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 1 3/4 லட்சம்), 25 செயற்பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 1 1/2 லட்சம்), 50 உதவி செயற்பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 80,000.00 – 1 லட்சம்), 130 உதவிப் பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 25,000.00 – 60,000.00) என்று பெரும் கூட்டம் இயங்குகிறது.

இந்த அதிகாரிகள் மனித உயிர்களை மதிக்கிறார்களா?

எங்கே மதிக்கிறது? இனி யாருக்கும் நிரந்திர வேலை தரத்தேவையில்லை என்று உற்பத்தியில் ஒப்பந்த, உள் ஒப்பந்த முறையை புகுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் முன்னோடிகளாக இருப்பவர்கள்தானே இந்த அதிகார வர்க்கத்தினர்! இவர்களா பாதுகாப்பு விதிகளை மதிப்பார்கள்? ரோட்டில் வண்டியில் அடிபட்ட நாயை அணுகுவதற்க்கும் ஆலையில் விபத்தில் சிக்கிய தொழிலாளியை அணுகுவதற்க்கும் இந்த அதிகார வர்க்கத்தினரிடம் பெரிய வேறுபாடு கிடையாது. இதனால் எல்லாம் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் கிடையாதே!

பாதுகாப்பு விதிமீறல்களால் யாருக்கு – என்ன பாதிப்பு?

ஸ்டெர்லைட்டிலும், IBPL, கோஸ்டல் எனர்ஜியான், டாக்கில் மட்டுமல்ல TTPS, NTPL ஆகிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலேயே படுகொலைகள் தொடர் நிகழ்வுகளாகி உள்ளன.

TTPS-ல் கார்த்திக் என்ற இளம் தொழிலாளியை, “மேலே ஏறி வெல்டிங் செய்” என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் மின்னிணைப்பை தந்து அதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகொலையானார். தவறான மின் சுற்று வந்தால் தானாகவே இணைப்பை துண்டிக்கும் கருவியை (டிரிப் ஸ்விட்ச்சை) பொருத்தாமல் தமிழ்நாடு மின்சார வாரியமே விதியை மீறியதன் விளைவே இப்படுகொலை.

ntpl
என்.டி.பி.எல்

NTPL-ல் சிம்னியில் தொங்கியபடி பெயிண்ட் அடிக்கவைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மேலிருந்து விழுந்து உடல் சிதறியுள்ளனர். இக்கொடுமைக்கு பயந்து குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக வேலையை விட்டு சென்றும் உள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் ஆகஸ்ட்டில் 100 அடி உயரத்துக்கு மேல் கோல் பங்க்கர் பைப்லைனில் வேலை செய்ய அதிகாரிகள் இளம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஏவியுள்ளனர். அதில் மூன்று பேர் நெருப்பால் தாக்கப்பட்டு தோல் கருகிய நிலையில் மயங்கி கீழே விழும்போது கீழுள்ள பைப்களில் மோதி ஆனந்த்தும் முத்துக்குமாரும் உயிரை விட மரிய எக்ஸிலின் ஜெகன் தீவிரசிகிச்சையில் சேர்க்கப்பட்டார். 25 வயதேயான முத்துக்குமாரின் மனைவியோ வயிற்றில் கருவை சுமந்தபடி தன் வாழ்வே பறிபோனதாக கதறுகிறார்.

பொதுத்துறை கட்டுமானத்தின் போது இறந்தும் கூட இதற்க்கு பொறுப்பேற்கவோ இழப்பீடு தரவோ அரசு தயாரில்லை. இரங்கல் தெரிவிக்கவோ, குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக்கூட அதிகாரிகள் வருவதில்லை. காண்ட்ராக்ட் முதலாளிகளின் ஏஜெண்ட்டுகள்தான் RDO, இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் பேரம் பேசி முடிக்கின்றனர். இப்படுகொலைக்கு இதுவரை எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
தொழிலாளர்களின்உடலை வாங்க மறுத்து போரடும் மக்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும்தான் ஆபத்தா?

இல்லை. தூத்துக்குடியில் இருக்கும் அனைவருக்குமே ஆபத்துதான். மணலிலிருந்து எவ்வளவு தாதுவை வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ள VV டைட்டானியமும் (கில்பெர்ன் கெமிக்கல்ஸ்), இறக்குமதியாகும் தாமிரத்தாதுவிலிருந்த எவ்வளவு தாதுவை வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ள ஸ்டெர்லைட்டும், நிலக்கரியை வ.உ.சி. துறைமுகம் வழியாக கொண்டுவந்து எரித்து எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் மின்சாரத்தை விற்க பவர்பிளாண்ட்களும் தாராள அனுமதியை பெற்றுள்ளன. இதுதான் தாராளமயம்.

நள்ளிரவில் வெளியேற்றும் வாயுக்களால் புறவழிச்சாலையில் வாகனத்தில்கூட செல்லமுடியவில்லை. “மூச்சு முட்டுகிறது; நெஞ்சு அடைக்கிறது” என்று லாரி ஓட்டுனர்கள் எச்சரிக்கை மணி அடித்தார்கள். இன்றோ மதுரை மீனாட்சி மிசனில் புற்றுநோய்க்கு சிகிச்சைபெறுபவர்களை “ என்ன, தூத்துக்குடியா?” என்று இயல்பாக கேட்கும் அளவு நிலைமை மோசமாகி விட்டுள்ளது. சென்னையில் அப்பல்லோவில் சிகிச்சை தரும் சிறந்த தோல் சிகிச்சை நிபுணர் தன்னிடம் தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த ஒருவரிடம் “நீங்க அலர்ஜின்னு இனி எந்த டிரீட்மென்ட் எடுத்தும் பலனில்ல. தூத்துக்குடி வேண்டாம். பேசாம ஊர மாத்திடுங்க. தமிழ்நாட்டுல கும்மிடிப்பூண்டிக்கு அடுத்தபடியா தூத்துக்குடிதான் வாழத்தகுதியில்லாத ஊர்” என்று அக்கறையுடன் சொல்லியுள்ளார். உப்பளங்களில் குவிக்கும் உப்பின்மீது சாம்பல் படிந்து கருப்பாகி விடுவதாகவும் இனி மேலும் புதிதாக அனல்மின் நிலையங்களை கட்டக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளும் இப்படி எதிர்த்துள்ளனர்.

காற்று மட்டும்தான் கெட்டுப்போனதா?

இல்லை! நீரும்தான் மாசுபட்டுப்போனது. “10 அடியில் நல்ல தண்ணீர் இருந்தது. தெருவே அதைத்தான் குடிச்சுது. இப்ப 40 அடியில் எண்ணை கலந்தாப்பலதா தண்ணீ கிடைக்கிது. அதை கக்கூஸ்க்கு மட்டும்தான் ஊத்தறோம்” என்றார் காமராஜ் நகரிலுள்ள ராமர். ஸ்டெர்லைட்டுக்கு கிழக்கு பகுதியில் நிலத்தடி நீர் பயனடுத்த தகுதியற்றதாகி விட்டது.

கம்பெனிகள் பெருகிவிட்ட 10 ஆண்டுகளில் அதே வேகத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக புலம்புகின்றனர் பொதுமக்கள். “நான் வெவரம் தெரிஞ்சதுலிருந்து எப்பவும் கடலில் குளிப்பேன். ஆனா இப்ப மீன் பிடிக்கறப்ப, படகை ஹார்பர்ல வச்சு வேலை செய்யறப்ப தண்ணில எறங்கறோம். அப்ப ஒடம்பெல்லாம் அரிக்குது. எங்க பசங்க கடல்ல வெளயாடறதேயில்லை. கொஞ்ச நேரம் உள்ள நிக்கற நமக்கே ஒத்துக்கல்லியே, அப்ப கடல்லயே கெடக்கற மீன் மட்டும் இங்க இருக்குமா?” என்றார் 50 வயதை நெருங்கும் மீனவர்.

ஆறுமுகனேரி, சாகுபுரத்தில் உள்ள தாரங்தாரா கெமிக்கல் ஒர்க்க்ஸ் (DCW) வெளியேற்றும் அமிலக்கழிவுகள் நேரடியாக கடலில் பாய்ச்சப்படுகிறது. இதனால் புன்னக்காயல் வட்டார கடலோரங்களில் கடல்வாழ் உயிரினச் சமநிலை கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. இதை எதிர்க்கும் மீனவர்களை ஒடுக்க ஆய்தம் தாங்கிய குண்டர் படையின் ரோந்துகள் இங்கே சகஜமான ஒன்று.

நிலத்தில் என்ன நடக்கிறது?

மகாராஷ்டிர மக்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஜெயலலிதாவால் 1994-ல் நம் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டது. 428 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்து அடிக்கல் நாட்டியவரும் அம்மாதான்.

லண்டன் வாழ் இந்திய மார்வாடி அனில் சந்தீப் அகர்வாலுக்கு நம்மீது என்ன அக்கரை? நமக்கு வேலை தரவா இக்கம்பெனியை தொடங்கினான்? கொள்ளை லாபத்துக்காக தாமிரம், கந்தக அமிலத்தை போன்றவற்றை உற்பத்திசெய்துவிட்டு பல லட்சம் கிலோ ஆர்சனிக்கழிவுகளையும், கதிர்வீச்சுத்தன்மையுடைய பாஸ்போ ஜிப்சத்தையும் நிலத்தில் கொட்டுகிறான்.

கந்தக டை ஆக்சைடு வாயுக்கசிவால் பசுமைத் தீர்ப்பாயத்தால் தடைசெய்யப்பட்ட ஸ்டெர்லைட்டின் பெயர்தான் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உட்பட நகரெங்கும் பிரம்மாண்டமாக உள்ளது.

தாமிர உருக்காலையின் கழிவுகள் ரயில்வே பிளாட்பாரத்தில் (மேலூர்) ட்ராக்கின் அருகில் கொட்டப்பட்டு சமன்செய்யப்பட்டுள்ளது. இது பயணிகளின் காலையும் பதம்பார்த்துள்ளது. தாமிரக் கழிவுகள் ஊரைச்சுற்றிலும் கொட்டப்படுவது மட்டுமல்ல, கம்பெனிக்குள்ளும் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டின் திரவுக்கழிவுகளை கடலில் விட மீனவர்கள் எதிர்த்ததால் அவை பூமிக்குள் செலுத்தப்படுகின்றன. ஐ.நா.வால் பாதுகாக்க வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தின் அருகில் இயங்கும் ஆலையின் இக்கழிவுகள் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

ஆலையில் நடக்கும் விபத்துகளில் நம்மை கொல்வது மட்டுமில்லாமல் நம் குடும்பத்தையும் நோயாளியாக்கிவிட்டு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் ஏற்பாடும் செய்கிறது ஸ்டெர்லைட். கணவனை காண்ட்ராக்ட்டில் அற்பக் கூலிக்கு பிழியும் இதே கம்பெனிதான் ஆயிரக்கணக்கில் பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அவர்களையும் கடன் வலையில் வீழ்த்துகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பருவ மழையை விரட்டி விவசாயத்தை அழித்துவரும் அதே வேளையில் விவசாயக்கூலிகளின் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் தந்து கிராமப்புறங்களில் தமது கார்ப்பரேட் பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறது.

தமது கம்பெனியில் கசிந்த வாயுவால் அனைத்து மரங்களும் இலைகளை உதிர்த்து மொட்டையாக நின்ற கொடூரத்தை லயன்ஸ் டவுன் மீனவ பெண்கள் விவரிக்க, ஸ்டெர்லைட்டோ நகரைச்சுற்றிலும் பூங்காக்களின் பராமரிப்பை செய்ய அனுமதிக்கிறார் மாநகராட்சி ஆணையாளர். அவ்வளவு ஏன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தையே ஸ்டெர்லைட்தான் பராமரிக்கிறது.

நாம் எதை முக்கியமாக பார்க்க வேண்டும்?

தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள். அதாவது தொழிலாளிகளுக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள். அதாவது தமது சொந்த பரதவ குல மக்களுக்கு எதிராகவே முதலாளிகள் என்று வர்க்கமாக ஒன்றிணைகிறார்கள்.

பவர் பிளாண்ட் தொடங்கி நடத்திவரும் IBPL ரெட்டி, கோஸ்டல் எனெர்ஜியானின் முஸ்லீம் முதலாளி, VV மினரல்ஸ் நாடார் வைகுண்டராஜன், நிலா சீ புட்ஸின் கிறிஸ்தவ முதலாளி, அரசு பவர்பிளாண்ட்களை இயக்கும் தலைமைப்பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் நமக்கு எதிராக – தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஒரே அணிவரிசையில் நிற்கிறார்கள். இவர்கள் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து நம்மைச் சுரண்டவே ஒன்றிணைகிறார்கள்.

பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டின் உற்பத்தியை தடை செய்தால் உச்சநீதிமன்றமோ ஆசீர்வதித்து ஆலையை திறக்க அனுமதிக்கிறது. தாதுமணல் கொள்ளையனான வைகுண்டராஜனுக்கு மத்திய அரசால் சிறந்த ஏற்றுமதியாளர் விருது தரப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா இரண்டில் எது ஆண்டாலும் நம்மை ஒடுக்கும் சட்டங்களை மட்டும் தவறாமல் போட்டுவருகிறது. மாநிலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என யார் ஆட்சி நடந்தாலும் நம்மீதான அடக்குமுறை மட்டும் குறைவதே இல்லை. இவர்களுடன் கூட்டணி சேரும் ஓட்டுப்பொறுக்கி கட்சியினர் நாம் தொடர்ந்து கொல்லப்படும்போது திரும்பியே பார்ப்பதில்லை. ஏனெனில் இக்கட்சியினரும், இவர்களின் தொழிற்சங்கத் தலைமையும் முதலளிகளின் பணப்பெட்டிக்குமுன் மகுடிக்கு ஆடும் பாம்பாகி விட்டவர்கள்தான். நம் நாடு மறுகாலனியாகி வருவதை மறைத்து நாடகமாடவே தேர்தல்களும் நடத்தப்படுகிறது.

உழைக்கும் மக்கள் எதை செய்யவேண்டும்?

தூத்துக்குடி பகுதி ஆலைச்சாவுகளைப் பொறுத்த வரையில் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சார்பாக RDO, இன்ஸ்பெக்டர் போன்றோரும், பாதிக்கப்பட்ட தொழிலாளி சார்பாக சங்கங்களும் அமைப்புகளும் சில ஆயிரம் அல்லது லட்சம் வாங்கித்தருகிறோம் என்று கட்டப்பஞ்சாயத்து பேசி மொத்தத்தையும் முடித்து விடுகின்றனர். உயிர்போகக் காரணமான ஆலையின் அதிகாரிகளையும், பாதுகாக்கத்தவறிய அரசின் தொழிலாளர் ஆய்வாளரையும், தொடர்ந்து படுகொலை நடந்தாலும் திரும்பியே பார்க்காத மாவட்ட ஆட்சியரையும் குற்றத்துக்கு பொறுப்பாக்காத இந்த சமரசம் எப்படி படுகொலைகளை (விபத்துகளை) தடுக்கும்? மொத்தத்தில் இந்த கட்டமைப்பு நம்மை காக்க வக்கற்றது என்பதைத்தான் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளது.

நம்மை ஒடுகிவரும், சுரண்டி வரும் முதலாளிகளுக்கு எதிராக, இந்த சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக, நம்மை ஆளத்தகுதி இழந்துவிட்டுள்ள இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கமாக அணி திரள வேண்டும். ஒடுக்கப்படும் அனைத்து பிரிவினருடனும் சாதி, மத, மொழி, இன வேறுபடுகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும். தொழில் ரீதியாக உள்ள பல்வேறு வேற்றுமைகளை புறந்தள்ளி அமைப்பாக வேண்டும். நாட்டையே சீரழிக்கும் முதலாளிகளிடம் இனியும் கெஞ்சிக்கொண்டிரமல் நம் வியர்வையால் வளர்த்த ஆலையின்மீதான நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். நாமே ஆலையின் உரிமையை கைப்பற்றுவோம்.

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !

3

ரசுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தக் கோரி 39 நாட்களாக நடைபெற்று வந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஊதிய உயர்வுக் கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 27 இரவு முதலாகத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

என்.எல்.சி.யில் 12 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 10 ஆயிரம் ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். 2011 டிசம்பர் 31-ம் தேதியுடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 43 மாதங்களாக புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து நிர்வாகம் அடாவடி செய்து வந்தது. ஆண்டுக்கு ரூ 1500 கோடி இலாபமீட்டியுள்ள போதிலும்,தொழிலாளர்கள் கோரும் 24 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுக்கும் நிர்வாகம், 10 சதவீத அளவுக்கே தரமுடியும் என்று பிடிவாதமாக நின்றது. ஊதிய உயர்வுக்காக 30 முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள போதிலும், நிர்வாகம் சற்றும் இறங்கிவராத நிலையில்தான் புதிய ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்கள் பெற்றுவந்த அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

இவ்வேலை நிறுத்தத்துக்குத் தடை விதிக்கக் கோரி என்.எல்.சி.யின் மண்டலத் தலைமை மேலாளர்  தாக்கல் செய்த மனுவை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதித்தது. இத்தடையை  மீறித்தான் கடந்த ஜூலை 20-ம் தேதி முதலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, வேலை நிறுத்தத் தடையுத்தரவை மீறியதாகத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளதுடன், அத்தலைவர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக் கூடாது என்று காரண அறிக்கையும் கொடுத்து அச்சுறுத்தியது. தொ.மு.ச. தொழிற்சங்கத் தலைவர் திருமாவளவனைப் பணி நீக்கம் செய்திருப்பதோடு, மற்ற தொழிற்சங்க நிர்வாகிகளை , “ஏன் உங்களை வேலை நீக்கம் செய்யக் கூடாது” என்று விளக்க நோட்டீசு கொடுத்து அச்சுறுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

நல்ல இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தபோதிலும், ஊதிய உயர்வைக் கொடுக்க மறுத்து என்.எல்.சி. நிர்வாகம் திமிர்த்தனமாக நடந்து கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் காரணமென்ன? ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், நிர்வாக அலுவலக முற்றுகை, ரயில் மறியல், உண்ணாவிரதம் – எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்திய போதிலும் இப்போராட்டம் தோல்வியடையக் காரணம்தான் என்ன?

நிர்வாகத்தின் திமிர்த்தனத்தையும், வேலைநிறுத்தத்துக்குத் தடைவிதித்த நீதித்துறையின் சர்வாதிகாரத்தையும் கண்டு தொழிலாளி வர்க்கம் அச்சப்படவோ, போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளதைக் கண்டு அவநம்பிக்கை கொள்ளவோ கூடாது. இது தோல்விதான் எனினும், போராட்டத்தில் தோல்வி ஏற்படுவது தவறல்ல. ஆனால், ஏன் தோல்வி ஏற்பட்டது என்று பரிசீலிக்காமல் இருப்பதுதான் தவறு.

இதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து அற்பக் கூலிக்கு உழைத்துவரும் என்.எல்.சி.ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2008-லும், அதன் பின்னர் 2014-லும் போராடிய போதிலும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. மைய அரசோ, உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துகிறது. என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க நீதித்துறை மறுக்கிறது. அதேசமயம், தற்போது நிரந்தரத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உடனே தடைவிதிக்கிறது.

என்.எல்.சி தொழிலாளர்கள்
அனல் மின் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் செல்லும் என்.எல்.சி தொழிலாளர்கள்.

நீதித்துறையானது தொழிலாளர்களின் உரிமைகளையும்  மக்களின் உரிமைகளையும் பறிக்கும்  ஒடுக்குமுறை நிறுவனமாகவே மாறி நிற்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு வேலை நிறுத்தத்தைத் தடைசெய்வதை சட்டப்படி தவறு என்று கூறுகிறார். ஆனாலும், தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் நீதித்துறையின் சர்வாதிகாரத்துக்கு எதிராக என்.எல்.சி. தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராடவில்லை. தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்து சட்டபூர்வ வழியில் போராடினாலும், நீதித்துறையும் அரசும் நிர்வாகமும் அதனைக் கடுகளவும் மதிப்பதில்லை. அரசும் நிர்வாகமும் நீதித்துறையும் தாங்கள் போட்ட சட்டத்தை தாங்களே மதிக்காத நிலையில், என்.எல்.சி. தொழிலாளர்கள் சட்டவரம்புகளை மீறிப் போராடவும்  முன்வரவில்லை.

நெய்வேலியில் ஊதிய உயர்வு கோரி நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும்,பெருமளவு பாதிப்போ தடையோ இல்லாமல் மின் உற்பத்தி வழக்கம் போலவே தொடர்ந்து கொண்டிருந்தது. ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு மின் உற்பத்தி தடைபடாமல் அனல் மின்நிலையத்தை நிர்வாகம் இயக்கியது. நிரந்தரத் தொழிலாளர்கள் போராடினாலும், ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை நிர்வாகத்துக்கு இருக்கிறது. அதனால்தான் நிரந்தரத் தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு போராடிய போதிலும், கடுகளவும் அசைந்துகொடுக்க மறுத்ததோடு, தொழிற்சங்க முன்னணியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

போராடிய நிரந்தரத் தொழிலாளர்கள், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து கூட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்து போராடியிருந்தால், நெய்வேலியில் மின் உற்பத்தியை முற்றாக முடக்கி, நிர்வாகத்தை நிலைகுலைய வைத்து பணிய வைத்திருக்க முடியும் . ஆனால், இதற்கு நிரந்தரத் தொழிலாளர்களும் அவர்களது தொழிற்சங்கங்களும் தயாராக இல்லை. இதனால்தான் என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கண்டு நிர்வாகம் அஞ்சவில்லை. நிரந்தரத் தொழிலாளியை வேலைநீக்கம் செய்து  வீட்டுக்கு அனுப்பினால்கூட நிர்வாகத்தை ஒன்றும் செய்ய முடியாத அவமானகரமான நிலைமைதான் உள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவதற்கும், அதிகாரிகள் ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு சம்பளத்துடன் கொழுப்பதற்கும், என்.எல்.சி. யின் லாபம் பெருகியதற்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் முக்கிய காரணமாக உள்ளனர். ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர் போராடினால் நிரந்தரத் தொழிலாளர்கள் ஆதரவாக நிற்பதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமும், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமுமாக தொழிற்சங்கத் துரோகிகள் தொழிலாளர்களைப் பிரித்து வைத்துதான் இயக்குகின்றனர். நெய்வேலி மட்டுமல்ல; இதர அரசுத்துறை, தனியார் துறைகளிலும் இப்படித்தான் நடக்கிறது.

இதனால் நிரந்தரத் தொழிலாளர்கள் போராடினால், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியைத் தொடர்வதும், போராடும் நிரந்தரத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதும் தொடர்கிறது. நிரந்தரத் தொழிலாளியும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளியும் ஐக்கியப்பட்டு போராடாவிடில் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்துக்கே அழிவுதான். இதனைப்  படிப்பினையாகக் கொண்டு நிரந்தரத் தொழிலாளர்களும் தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடினால்தான் உற்பத்தியை முடக்கி நிர்வாகத்தை பணிய வைக்க முடியும். தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டிவளர்த்து போராடுவதற்கான பாதை விரிந்து கிடக்கிறது. பயணத்தைத்தான் தொழிலாளி வர்க்கம் தொடங்க வேண்டியிருக்கிறது.

– மனோகரன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

காட்டுவேட்டை காசுவேட்டையானது !

0

மேஷ் பிரசாத், ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள குண்ட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான பழங்குடியின இளைஞர். அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலுள்ள கீழ்சந்தை போலீசு நிலையத்தில், “தனக்கு மத்திய ரிசர்வ் போலீசு படையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தினேஷ் பிரஜாபதி, ரவி போத்ரா ஆகிய இருவரும் தன்னிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக’’க் குற்றஞ்சுமத்தி புகார் ஒன்றை அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் தினேஷ் பிரஜாபதியும் ரவி போத்ராவும் கைது செய்யப்பட்டாலும், பமேஷ் பிரசாத்துக்கு வேலையும் கிடைக்கவில்லை, அவர் கையூட்டாக அளித்த பணமும் கிடைக்கவில்லை, அவர் அளித்த புகாரின் மீது மேற்கொண்டு விசாரணையும் நடக்கவில்லை.

பமேஷ் பிரசாத் ஏமாற்றப்பட்டிருப்பது, நாள்தோறும் நாடெங்கும் நடந்துவரும் சாதாரண “சீட்டிங்” விவகாரம் போன்றதல்ல. இந்தப் புகாரை முறையாக விசாரணை செய்தால், குற்றவாளிக் கூண்டில் தினேஷ் பிரஜாபதியும், ரவி போத்ராவும் மட்டும் நிற்கமாட்டார்கள். ஜார்கண்ட் மாநில போலீசும், அம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக இறங்கியிருக்கும் மைய ரிசர்வ் போலீசு படையும் (சி.ஆர்.பி.எஃப்.) கூண்டில் ஏற வேண்டியிருக்கும். ஏனெனில், பமேஷ் பிரசாத் அளித்துள்ள புகார் மைய ரிசர்வ் போலீசு படையும் ஜார்கண்ட் மாநில போலீசும் தேசப் பாதுகாப்பு, மாவோயிச தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தியிருக்கும் மிகப்பெரும் கிரிமினல் மோசடித்தனத்தை, ஊழலை அம்பலப்படுத்தும் துருப்புச் சீட்டாக உள்ளது.

போலி மாவோயிஸ்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, சரணடையச் செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்கள்.
சி.ஆர்.பி.எஃப் படை அதிகாரிகளால் போலி மாவோயிஸ்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, சரணடையச் செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்கள்.

பமேஷ் பிரசாத்திடமிருந்து இரண்டு இலட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்ட தினேஷ் பிரஜாபதி, ரவி போத்ராவை பமேஷ் பிரசாத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ரவி போத்ரா பமேஷ் பிரசாத்திடம், “போலீசிடம் சரணடையும் மாவோயிச தீவிரவாதிகளை மைய ரிசர்வ் போலீசு படையில் சேர்த்துக் கொள்ளும் திட்டமொன்று உள்ளது. நீ செய்யவேண்டியதெல்லாம், நானொரு நக்சலைட்டு எனக் கூறி ஆயுதத்தோடு போலீசிடம் சரணடைந்து, சில மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும். அதன் பிறகு திருந்திய தீவிரவாதி என்ற அடிப்படையில் மைய ரிசர்வ் போலீசு படையில் உனக்கு வேலை கிடைக்கும்” எனக் கூறியதற்கு ஏற்ப, ஆயுதத்தோடு சரணடைந்த பமேஷ் பிரசாத், ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள மைய ரிசர்வ் போலீசின் சிறப்பு அதிரடிப் படை (கோப்ரா படை) முகாமில் அடைக்கப்பட்டார்.

அந்த முகாமில் பமேஷ் பிரசாத் போலவே, பல நூறு பழங்குடியின இளைஞர்கள் – ஏறத்தாழ 514 பேர் – மாவோயிச தீவிரவாதி எனக் கூறி சரணடைந்து, மைய ரிசர்வ் போலீசு படையில் சேரும் கனவோடு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பழங்குடியின இளைஞர்கள். பத்தாவதோ, +2-வோ, ஐ.டி.ஐ படிப்போ முடித்துவிட்டு வேலைதேடி அலைந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரவி போத்ராவையும், தினேஷ் பிரஜாபதியையும் தெரிந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பழங்குடியின மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் எதிர்பார்ப்பு ஒன்றாகவே இருந்தது. அரசுப் படையில் சேர்ந்துவிட்டால் தமது குடும்பத்தைப் பிடித்தாட்டும் வறுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற ஆசையில், தமக்குச் சொந்தமான வயல்வெளிகளை விற்றுவிட்டோ, கடன் வாங்கியோ ஒரு இலட்ச ரூபாய் முதல் இரண்டரை இலட்ச ரூபாய் வரை இலஞ்சமாகக் கொடுத்துவிட்டு, அவர்கள் அம்முகாமை வந்தடைந்தனர். வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆறு மாதம், ஒரு வருடம் என அந்த முகாமில் அடைபட்டு, வேலைக்கான உத்தரவு இன்றோ அல்லது நாளையோ வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கிடந்து வந்தனர்.

07-sundara-kujurஆனால், பமேஷ் பிரசாத் உள்ளிட்டு, அவர்களுள் ஒருவருக்குக்கூட அரசுப் படையில் வேலை கிடைக்கவில்லை. மாறாக, சரணடைந்த தீவிரவாதி என்ற முத்திரையோடு அவர்கள் ராஞ்சி முகாமிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இன்று அந்த முத்திரையே வேறு வேலை தேடுவதற்கு பெருந்தடையாக மாறிவிட்டது. கொடுத்த பணத்தை மீட்க அதிகார வர்க்கத்தோடு பமேஷ் பிரசாத் போராடிக் கொண்டிருக்கிறார் என்றால், சுந்தர குஜுர் 400 மைல்களுக்கு அப்பால் உ.பி.யிலுள்ள ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமையைப் போல வேலை பார்த்துவருகிறார். “இந்த விசயத்தில் ஒருபோதும் நீதி கிடைக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால், அடகு வைக்கப்பட்ட குடும்ப நிலத்தை மீட்க 40,000 ரூபாய் நான் சம்பாதிக்க வேண்டும் ” என்கிறார், அவர்.

0000

தேசப் பாதுகாப்பு, தேச ஒருமைப்பாடு, தீவிரவாத ஒழிப்பு என்ற பெயர்களில் இராணுவமும், போலீசும் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொட்டடிச் சித்திரவதைகளை நாடெங்கும் நடத்தி வருகின்றன. அப்பாவிகளைக்கூட மாவோயிச தீவிரவாதிகளாக, முசுலீம் தீவிரவாதிகளாக, அல்லது அவர்களது ஆதரவாளர்களாகப் பொய்க் குற்றஞ்சுமத்தி சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றன. அத்தகைய குற்றங்களின் இன்னொரு பக்கம்தான் இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழல். அவை மனித உரிமை மீறல் குற்றங்கள் என்றால், இந்த ஊழல் கடுந்தண்டனைக்குரிய சதி, மோசடி, அதிகார முறைகேடுகள் நிறைந்த கொடுங்குற்றம்.

மத்தியில் காங்கிரசு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபொழுது, இடதுசாரி தீவிரவாத அமைப்புகளிலிருந்து விலகி போலீசிடம் சரணடைபவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதியைக் கூட்டித் தரப் போகும் திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில்தான் ஜார்கண்டில் இந்த போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழலும் தீவிரமாக நடந்தது. இந்த ஊழலின் வெளிப்புற முகமாக அம்பலமாகியிருக்கும் ரவி போத்ரா, சில்லறைத்தனமான போர்ஜரி வேலைகளைச் செய்யும் சாதாரண கிரிமினல் பேர்வழி அல்ல. போலீசாலும், இராணுவத்தாலும் தயார்படுத்தப்பட்டவன். நாகலாந்து மாநில போலீசில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவன், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பணிநீக்கம் செயப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நான்கே நாட்களில் பிணையில் வெளியே வந்தான். அதன் பிறகு, மணிப்பூர், அசாம் மாநிலங்களில் இராணுவத்திற்கு ஆள்காட்டியாக வேலை செய்திருக்கிறான்.

07-kuldeep-bharaஇந்த அனுபவம், தொடர்புகளோடு ஜார்கண்டிற்கு வந்து சேர்ந்த அவன், தன்னை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியாகப் பழங்குடியின இளைஞர்களிடம் காட்டிக் கொண்டான். அவனின் இந்த “பில்ட்-அப்”பிற்கு அனைத்துமாக இருந்தது, சி.ஆர்.பி.எஃப். படை. அவன் ஊரைச் சுற்றி வருவதற்கு சி.ஆர்.பி.எஃப்.க்குச் சொந்தமான ஜீப்பும் அவனுக்கு சி.ஆர்.பி.எஃப். சிப்பாகளின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவனது மோசடி வேடத்திற்கு ஒரு நம்பகத்தன்மை உருவாக்கப்பட்டது.

இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஜார்கண்டு மாநில போலீசு டி.ஜி.பி. ஜி.எஸ்.ராத் முன்னிலையிலும் நடந்தது. சரணடைந்த இளைஞர்களுள் ஒருவர்கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த வழக்கும் புனையப்படவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் மத்திய ரிசர்வ் படையின் முகாமில் அடைக்கப்பட்டு, அம்முகாமும் மத்திய ரிசர்வ் போலீசு படையாலேயே பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்குத் தேவையான உணவு ராஞ்சியிலுள்ள மத்திய சிறைச்சாலையிலிருந்து போலீசு அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.

முகாமில் இருந்த இளைஞர்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் போலீசுக்குரிய உடற்பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் நகரத்திற்குள் சென்றுவரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் சொந்த கிராமத்திற்கு ரிசர்வ் போலீசு படையின் வாகனங்களில் சென்று திரும்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த கிராமத்துப் பழங்குடியின இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்த மோசடி வலைக்குள் விழுந்துள்ளனர். இந்த 514 பேரிடமும் தலைக்கு ஒன்று முதல் இரண்டரை இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் பெறப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, தீவிரவாதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு அரசு கொடுத்த நிதியையும் போலீசும் மத்திய ரிசர்வ் போலீசு படையும் பங்கு வைத்து சுருட்டிக் கொண்டுவிட்டன.

07-karam-dayal-tikkaஇந்த 514 பேரும் கையில் நவீன ஆயுதங்களுடன் ஜார்கண்ட் மாநில போலீசிடம் சரணடைந்துள்ளனர். இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழலே மத்திய ரிசர்வ் போலீசு படையும் ஜார்கண்ட் மாநில போலீசும் நடத்திய சதி என்பதால், அந்தப் படைகளின் அதிகாரிகளைத் தவிர, வேறு வழியில் இந்த நவீன ஆயுதங்கள் சரணடைந்த பழங்குடியின இளைஞர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது. இத்துணை பெரும் தொகையிலான, பல்வேறுவிதமான ஆயுதங்களை போலீசு அதிகாரிகள் சப்ளை செய்திருக்கிறார்கள் என்பது, எவ்விதக் கணக்கிலும் வராத, சட்டவிரோதமான, கள்ளத்தனமான ஆயுதக் கிடங்குகளை போலீசும் துணை இராணுவமும் நடத்திவருவதை அம்பலப்படுத்துகிறது.

2012-ம் ஆண்டின் இறுதியில் மத்திய ரிசர்வ் போலீசு படையில் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட எம்.வி.ராவ், ராஞ்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் குறித்துப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, இது குறித்து விசாரிக்குமாறு ஜார்கண்ட் மாநில போலீசுக்குக் கடிதம் எழுதினார். இதன் பிறகு, முகாமில் இருந்த இளைஞர்களைச் சொந்த ஊருக்குத் துரத்தியடித்ததுதான் நடந்ததேயொழிய, விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பமேஷ் பிரசாத் மார்ச் 2014-ல் போலீசில் புகார் கொடுத்த பிறகு ரவி போத்ராவும் தினேஷ் பிரஜாபதியும் கைது செயப்பட்டு, இந்தப் புகார் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப் போவதாக சவுண்டு விடப்பட்டதைத் தாண்டி எதுவும் நடைபெறவில்லை.

07-vijay-kobe“போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள்தான் தன்னை இயக்கியதாக” ரவி போத்ரா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும்கூட எந்தவொரு அதிகாரியும், போலீசுக்காரனும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. மூத்த வழக்குரைஞரான ராஜீவ் குமார், “இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கோரி ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகாரை முறையாக விசாரிக்கத் தொடங்கினால் பல உயர் போலீசு அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல; சரணடைந்த இடதுசாரி தீவிரவாதிகள் மறுவாழ்வுத் திட்டம் என்பதே துணை இராணுவப் படைகளும், போலீசும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடாக இருந்துவருவதும் அம்பலமாகிவிடும் என்பதால்தான் இந்த ஊழல் புகாரை ஊறுகாய் பானைக்குள் போட்டு வைத்திருக்கிறது, அரசு.

07-krishna-oranபமேஷ் பிரசாத், சுந்தர குஜுர், குல்தீப் பாரா, தேவ்தத் கோபே, சுக்தேவ் முண்டா, ரோஷன் குடியா, கரம் தயாள் டிக்கா, ரோஷன் திர்கே, அம்ரித் பிரகாஷ் திர்கே, விஜ கோபே – என இந்த மோசடியில் சிக்கவைக்கப்பட்ட ஒவ்வொருவரின் எதிர்காலமும் இன்று இருண்டு போவிட்டது. அவர்கள் அனைவரும் இன்று அரசிடம் வேலை கேட்கவில்லை. தங்களை ஏமாற்றி பறிக்கப்பட்ட பணத்தைக் கேட்கவில்லை. மாறாக, தங்கள் பகுதி போலீசு நிலையத்திலிருந்து, “நாங்கள் மாவோயிச தீவிரவாதி இல்லை” என்ற நன்னடத்தைச் சான்றிதழை வழங்குமாறுதான் கோருகிறார்கள். இந்த 514 பேரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை ஒத்துக்கொண்டுள்ள அரசாங்கமோ, இந்த மோசடி குறித்து விசாரணையும் நடத்தவில்லை. அவர்கள் கோருகிற நன்னடத்தைச் சான்றிதழையும் வழங்க மறுக்கிறது.

எப்பேர்பட்ட பொறுப்பற்ற, இரக்கமற்ற, மோசடியான அரசு அமைப்பின் கீழ் வாழுமாறு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருப்பதை வாசகர்கள் நிச்சயம் உணர முடியும். ஆனால், நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதனை மட்டுமல்ல. மாவோயிச தீவிரவாதம்தான் மிகப் பெரும் உள்நாட்டு அபாயம் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது என்றும் முத்திரை குத்தி, அதனை ஒழிப்பதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வெளிப்படையாக மட்டுமின்றி, நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் இரகசியமாகவும் செலவழிக்கப்படுகிறது. அரசுப் படைகள் மாவோயிச தீவிரவாதத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதாகவும், அதனால் அப்போரில் நடைபெறும் அத்துமீறல்களைப் பெரிதுபடுத்தக் கூடாதென்றும் கூறி, அரசுப் படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது.

ஆனால், ஜார்கண்டில் நடந்துள்ள இந்த ஊழல் “மாவோயிச தீவிரவாதத்தை ஒழிப்பது” என்ற கடமையை நிறைவேற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் துணை இராணுவப் படையும், போலீசும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் போலியான மாவோயிஸ்டுகளை உருவாக்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது. அரசுப் படைகள் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைக்கு எதிராகச் செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது. கேள்விக்கிடமற்ற புனிதக் கடமைகளாகக் கூறப்படும் தேசப் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்றவற்றைக்கூட அதிகார வர்க்கம் தனது சொந்த ஆதாய நோக்கிலிருந்து மட்டுமே அணுகியிருப்பதை, அதற்கு அப்பால் அக்‘கடமைகளின்’பால் அவர்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையை நிறைவேற்றும் தகுதியும் நம்பகத்தன்மையும் இல்லாத, கொள்ளைக்கூட்டமாக அரசுப் படைகள் சீரழிந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது.

வேலியே பயிரை மேய்வதா என்பன போன்ற அறத்திற்கெல்லாம் இப்பொழுது அதிகாரக் கட்டமைப்பில் இடமில்ல. மாறாக, பயிரை மேய்வதே வேலியின் கடமை என்பதாக அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளும், இந்த அதிகார கட்டமைப்பும் மாறிவிட்டதைதான் இத்தகைய ஊழல்களும், அதிகார முறைகேடுகளும், மனித உரிமை மீறல்களும் எடுத்துக்காட்டுகின்றன.

– செல்வம்

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

மூடு டாஸ்மாக்கை ! சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை

0

கஸ்டு 3 சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தை ஒட்டி கைது செய்யப்பட்ட மாணவர்கள் 38 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.தோழர்கள் சாரதி, ஆசாத், மாரிமுத்து, செல்வக்குமார், நினைவேந்தன், திருமலை, தினேஷ் ஆகியோர் புழல் சிறையில் இருந்து முழக்கமிட்டபடியே வெளியே வந்தனர். அதே போல பெண்கள் சிறையிலிருந்து தோழர்கள் நிவேதிதா, வாணிஸ்ரீ, ரூபாவதி, ஜான்சி ஆகியோரும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியோடு வெளியே வந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சிறை வாயிலில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் அணிதிரண்டு வரவேற்றனர். விடுதலை செய்யப்பட்ட தோழர்களை கடுமையாக அடித்தும், உளவியல் சித்திரவதை செய்தும் போலீசு துன்புறுத்தினாலும் அவர்களின் மன உறுதியை குலைக்க முடியவில்லை. இவர்களை விடுவிக்க கூடாது என்று போலீசு மட்டுமல்ல, நீதிமன்றமும் எத்தனை எத்தனை இடையூறு செய்தாலும் தோழர்கள் உறுதி குலையாமல் அதை எதிர் கொண்டார்கள். வழக்கு போராட்டத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மேற்கொண்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதே போன்று கடலூர் சிறையிலிருந்து மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மற்றும்  தோழர்கள், கோவை சிறையிலிருந்தும் ஐந்து தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்டு பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு சிறை வாசம் தொடர்ந்தாலும் தோழர்கள் உறுதியாக அதை எதிர் கொண்டு போராடினார்கள். அனைவரையும் பெருந்திரளான மக்கள், தோழர்கள் கூடி நின்று வரவேற்றனர்.

tasmac-protest-com-raju-released-14டாஸ்மாக்கை மூடும் வரை போராட்டம் ஓயாது என்று மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறைக்கு வெளியே அறிவித்தார். அதையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் புழல் சிறை முகப்பில் அறிவித்தனர்.

ஏதோ சிறையில் அடைத்து பிணை மறுத்தால் போராட்டம் முடங்கிவிடும் என்று அரசு நினைப்பது நடக்காது.

 

 

 

 

தகவல்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்

ஊழல் நீதிபதிகளை எதிர்த்தால மத்திய போலிசு படை !

7

அன்பார்ந்த வழக்கறிஞர்களே,பொதுமக்களே!

நேற்று (15.09.2015) சென்னை உயர்நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், சிவஞானம் அமர்வு,  தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சில வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து, உயர்நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. நீதிமன்றத்தின் மாண்பைப் பாதுகாப்பது என்ற பெயரில் வழக்குரைஞர் சமூகத்தையே குற்றவாளிகளாகச் சித்தரித்திருக்கிறது.

madras-high-courtவழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு (1) மதுபாட்டிலோடு வருகிறார்கள் (2) பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள் (3) கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் (4) கட்சிக்காரர்கள் பெரும் தொகை கொடுக்காவிட்டால்,பொய்ப் புகார் கொடுக்கிறார்கள் (5) தவறே செய்யாத போலீசு மீது குற்றம் சுமத்துகிறார்கள் (6) நீதிமன்றங்களில் ஊர்வலம், போராட்டம் நடத்துகிறார்கள் (7) யோகா வகுப்பு நடத்த விடாமல் தடுக்கிறார்கள் (8) மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் – என்று போலீசார் எழுதிக் கொடுத்த குற்றப்பத்திரிகையை வாசித்து, விசாரணை நடத்தும் முன்னரே தண்டனையையும் அறிவித்து விட்டார்கள். இனிசென்னை, மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமாம். நீதித்துறையின் இறையாண்மையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தையும் பிடுங்கி மத்திய அரசிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார்கள் மாண்புமிகு நீதிபதிகள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் வழக்காடவும் வழக்குரைஞர்களாகிய நாம் தயார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்லவும் தயார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி நீதியரசர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதே நாம் முன்வைக்கும் கேள்வி. சென்னை, மதுரை வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைக் காட்டிலும் கடுமையான எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உயர்நீதி மன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது இருக்கின்றன.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் (1) சேம்பரில் மது அருந்துகிறார்கள் (2) நீதிமன்ற பெண் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள் (3) கிரானைட், தாதுமணல்,கார்ப்பரேட் வழக்குகளில் ஊழல் செய்து பல நூறு கோடி சம்பாதிக்கிறார்கள் (4) காசு வராத வழக்குகளில் தொடர்ந்து வாய்தா போடுகிறார்கள் (5) பெண் நீதிபதிகளை டான்ஸ் ஆடச் சொல்கிறார்கள் (6) கீழமை நீதிமன்ற நீதிபதிகளை மீன் குழம்பு வைத்து வரச் சொல்கிறார்கள் (7) சாதிவெறியோடு செயல்படுகிறார்கள் (8) நீதிமன்ற டெபாசிட் பணத்தை கையாடல் செய்கிறார்கள் (9) அரசு-போலீசுக்கு ஆதரவாக முறைகேடாகத் தீர்ப்புச் சொல்கிறார்கள் (10) நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் ஊழல் செய்கிறார்கள் என ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு நீதிபதிகள் தயாரா? நீதிமன்ற அவமதிப்பு என்ற கவசத்தைப் பயன்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை அழிப்பவர்கள் நீதிபதிகள்தான் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

ட்டாய ஹெல்மெட் என்ற உத்தரவும், அணியாதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, மக்கள் நலனுக்கு எதிரானது என்பது மதுரை வழக்குரைஞர் சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடைய கருத்து. எனவேதான், மதுரை வழக்குரைஞர்களாகிய நாங்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்தோம். விமரிசித்தோம். இது ஒரு கருத்துரிமை. கருத்தை வெளிப்படுத்தும் குடிமக்களின் உரிமையைப் பறிக்கின்ற அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. நாங்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்றால் ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களையும், இந்த தீர்ப்புக்கு எதிராக அன்றாடம் பேசி வரும் லட்சக்கணக்கான மக்களையும் உயர்நீதிமன்றம் தண்டிக்கட்டும்.

எங்களுக்கு எதிராக 16-09-2015 அன்று நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணை குறித்து நீதிபதிகள் சி.டி.செல்வம், தமிழ்வாணன் அமர்வு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, மற்ற வழக்கறிஞர்கள் உள்ளே வரக்கூடாதாம்; இன்– கேமரா விசாரணையாம்; வீடியோ பதிவாம்; சீருடை அணிந்த-அணியாத போலீசு பாதுகாப்பாம்! நூற்றுக்கணக்கான கொலைகளை அரங்கேற்றிய சாதி, மதவெறி கிரிமினல்களின் வழக்குகள் கூட திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்படுகின்றன.  வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட நடந்திராத வகையில் வழக்குரைஞர்களை பயங்கரவாதிகளைப் போல சித்தரிக்கிறது இந்த உத்தரவு.

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் உயர்நீதிமன்ற வளாகத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைப்பது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன் காமெரா விசாரணை – என்பன போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். உண்மை அதுவல்ல.

இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 10-ம் தேதியன்று தென்மாவட்ட வழக்கறிஞர்கள் சுமார் 1500 பேர் மதுரையில் கூடி நீதித்துறை ஊழலுக்கெதிராகப் பேரணி நடத்தினோம். ஊழல் நீதிபதிகள் பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட்டோம்.  நீதித்துறை ஊழலைப் பற்றி பகவதி முதல் கட்ஜு வரை பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பேசியிருக்கிறார்கள். வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊழலை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு ஆண்டுக்கணக்கில் தூங்குகிறது. பல அரசியல் வாதிகளும் ஊடகங்களும் இதனைக் கூறியிருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாத நீதிபதிகள், 1500 வழக்குரைஞர்கள் வீதிக்கு வந்து குறிப்பான நீதிபதிகள் மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியவுடனே கொந்தளிக்கிறார்கள். தங்களுடைய உண்மை முகம் மக்கள் மத்தியில் அம்பலமாவதை அவர்களால் சகிக்க முடியவில்லை.

ழக்குரைஞர்கள் பொதுப்பிரச்சினைக்காகப் போராடுவது இது முதல் முறையல்ல.

காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், உரிமையியல்-குற்றவியல் சட்டத்திருத்தங்கள், மூவர் தூக்கு என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்குரைஞர்கள் போராடியிருக்கின்றனர். நீதிபதி சுபாஷண் ரெட்டியின் பாசிசக் கட்டளைகளை எதிர்த்துப் போராடி முறியடித்திருக்கிறோம். இவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல்தான் பிப்ரவரி 19-ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் போலீசு படை புகுந்து தாக்குதல் நடத்தியது. நீதிபதிகள், பெண் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என்று பலரை போலீசார் தாக்கியதற்கும், வாகனங்களை நொறுக்கியதற்கும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அந்த வழக்குகள் தூங்குகின்றன.

இப்போது நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றுவதென்று முடிவு செய்து விட்டார்கள் நீதியரசர்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நகைப்புக்குரியவை. ‘’வழக்குரைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கார்களை நிறுத்துகிறார்கள்’’ என்று உப்பு சப்பில்லாத குற்றச்சாட்டுகளை தலைமை நீதிபதி அடுக்குகிறார். மாட்டுக்கறியும் அசைவமும் சாப்பிடுபவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். யோகா என்ற பெயரில் உயர் நீதிமன்றத்துக்குள் இந்துத்துவ பிரச்சாரம் செய்வதை எதிர்ப்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தடுத்து, நீதித்துறையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டுமானால், மத்திய போலீசு படையிடம் உயர் நீதிமன்ற வளாகத்தை ஒப்படைக்க வேண்டுமாம் !

“ஊழல் நீதிபதிகளிடமிருந்து நீதியின் மாண்பைக் காப்பாற்றுவோம்” என்று குரல் எழுப்பினால், அப்படிக் குரல் எழுப்பும் “வழக்குரைஞர்களை மட்டுமல்ல, நீதிமன்ற வளாகத்தையே போலீசிடம் ஒப்படைப்போம்” என்கிறார்கள் நீதியரசர்கள். இதைவிடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பை யாரேனும் இழைக்க முடியுமா?

ழக்கறிஞர்கள் குற்றமே இழைக்காதவர்கள் என்று நாம் ஒரு போதும் சொல்லவில்லை. குற்றமிழைப்பவர்கள் யாராயிருந்தாலும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால் கடந்த 67 ஆண்டுகளில் எந்த உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டதில்லை.  இவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், வெளிப்படையாக துணிச்சலாக ஊழல் குற்றம் முதல் பாலியல் குற்றம் வரை அனைத்தையும் செய்கிறார்கள். தட்டிக் கேட்டால், குற்றமிழைக்கும் நீதிபதிகளே, நீதிமன்ற அவமதிப்பு என்று நம்மை மிரட்டுகிறார்கள்.

நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு அகற்றப்படாத வரை நீதித்துறை ஊழலை ஒழிக்கவே முடியாது. அரசியல்வாதிகள் சொத்துக் கணக்கை காட்டவேண்டும் என்று ஒப்புக்காவது ஒரு சட்டமிருக்கிறது. ’’நீதிபதிகளோ சொத்துக்கணக்கு காட்ட மாட்டோம். ஏனென்றால் நாங்கள் நீதிபதிகள்’’ என்று கூச்சமே இல்லாமல் அறிவிக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் உயர் நீதிமன்றத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள் நீதியரசர்கள்.

“முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பை மத்தியப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டால் அது கேரள அரசின் உரிமை என்று கூறும் நீதிமன்றம், தமிழகத்தின் உயர் நீதிமன்றத்தை மத்தியப் படையிடம் ஒப்படைக்கக் கோருகிறது. தமிழே தெரியாத தலைமை நீதிபதிகள், தமிழே தெரியாத போலீசு படைகளின் கட்டுப்பாட்டில் தமிழகத்தின் உயர் நீதிமன்றம்! நெய்வேலியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஒரு அப்பாவித் தொழிலாளியைச் சுட்டுக் கொன்று விட்டு, அதனை எதிர்த்த பிற தொழிலாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காட்சியைத் தமிழகமே கண்டது. உயர் நீதிமன்றத்திலும் நாளை இது நடக்கும். “நீதிபதிகளின் ஊழலை எதிர்த்தால் என்கவுன்டர்” என்பதுதான் தற்போது பிறப்பிக்கப் பட்டிருக்கும் உத்தரவுக்குப் பொருள்.

இந்த சர்வாதிகாரத்துக்கு பணிய மாட்டோம் என்பதைத் தமிழகத்தின் வழக்குரைஞர்கள்  நிரூபித்துக் காட்டுவோம்!

நீதித்துறை ஊழலுக்கு முடிவு கட்டுவோம்.

000

ஊழல் நீதிபதிகளை எதிர்க்கும்
வழக்குரைஞர் சமூகத்தை மிரட்டுவதற்கு
வருகிறது மத்திய போலிசு படை !

நீதிமன்றங்கள் இனி போலீசு நிலையங்கள் !

ஜனநாயகத்தை
குழி தோண்டிப் புதைக்கும்
நீதிமன்றப் பாசிசம்!

ஆர்ப்பாட்டம்

நாள்:16.09.2015 புதன்
இடம்:ஆவின் முன்பு,
உயர்நீதிமன்றம்,சென்னை.

அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள்தமிழ்நாடு

ஊழல் நீதிபதிகள் மீதான புகார்களைத் தெரிவிக்க
மதுரை வழக்கறிஞர் சங்கம்
தொலைபேசி   எண்
: 0452- 2537120

சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு

2

barathmata sunniபுண்ணிய பாரத தேசத்தின் புதல்வர்களாம் ஹிந்துக்கள் முக்தியடைந்து வைகுந்தமோ கைலாயமோ செல்வதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாத சிந்தித்து வருபவர் மானனீய ஸ்ரீ வீரத்துறவி இராம கோபாலன்ஜி அவர்கள். அம்பாளுக்கு உகந்த ஹிந்துக்களின் புனித தினமாம் வெள்ளிக்கிழமை (11/09/2015) அன்று இன்னொரு (குட்டி) தேசபக்தர் திருவாளர் ரஜினி காந்துக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மானனீய வீரத்துறவிஜி.

”பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவர் திப்பு சுல்தானின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கவுள்ளதாகவும், அதில் நடிக்க ரஜினி காந்திடம் பேச்சு நடத்தப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன்; அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது” என்று மானனீய ஸ்ரீ வீரத்துறவி ராம கோபாலன் அறிவுறுத்தியுள்ளார். இதை பரம்பூஜனிய மோடிஜியின் பெயரில் ஆணையாக ஸ்ரீமான் ரஜினி சார்வாள் புரிந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.

மேலும் அன்னாரது அறிக்கையில், ”கொங்கு பகுதியான பொள்ளாச்சியில் வசித்து வந்த அமரர் எம்.ஜி.ஆரின் தமிழ் மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும் தான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “திப்பு சுல்தான் ஒரு ஹிந்து மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. புரட்சித் தலைவரின் மூதாதையர்களை கொன்றவன் என்பதால் புரட்சித் தலைவியும், ரத்தத்தின் ரத்தங்களும் பொங்கி இந்த தர்ம யுத்தத்திற்கு ஆதரவு அளித்தாக வேண்டும். கூடவே தேச நலன் கருதி உருவாக இருக்கும் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு இந்த அறப்போர் ஒரு ஓப்பனிங்காக இருக்கும் என்பது நிச்சயம்.

மானனீய ஸ்ரீ வீரத்துறவியார் அவர்கள் ஹிந்துக்களின் நலன் குறித்து பேச ஆரம்பித்தாலே வயிற்றுப் போக்கு வந்த ஆசன வாய் போல் நில்லாது கொட்டும் என்பது ஈரேழு லோகமும் அண்ட சராசரங்களும் அறிந்த உண்மை. அப்படியிருக்க, விதேசி சித்தாந்தத்தை இறக்குமதி செய்து பேசும் இடதுசாரிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட பத்திரிகை உலகம் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் அறிக்கையை கத்தரித்திருக்கவே வாய்ப்புள்ளது.

இது ஒரு பக்கமிருக்க, நீங்களே யோசித்துப் பாருங்கள். கொடுங்கோல முஸல்மான் திப்பு சுல்தானின் கொடுமைகள் அதிகரித்த காரணத்தால் பச்சைத் தமிழ்க் கொங்குவேளாள கவுண்டர்களான எம்ஜியாரின் முன்னோர்கள் பாலக்காட்டுக்கு இடம்பெயர்ந்ததோடு மதமாற்றத்தைத் தவிர்க்க மலையாள நாயர்களாக ஜாதியே மாறியுள்ளனர்.

சாட்சாத் அந்த மதுரை மீனாக்‌ஷியின் திருவுளத்தால் திப்புவின் கொடுங்கோன்மை ஒரு கட்டுக்குள் இருந்திருக்கிறது; ஒருவேளை அடங்காதிருந்து கவுண்டரிலிருந்து நாயராக ஜாதி மாறாமல் ஒரேயடியாக எல்லோரும் அய்யராகவும் அய்யங்காராகவும் மாறியிருந்தால் வருண தருமத்தின் நிலை என்னவாகியிருக்கும்? எல்லோரும் ஆன்மீகப் பணியில் ஆழ்ந்திருக்க, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர தர்மங்கள் என்னவாகியிருக்கும்? தோளும் உடலும் காலுமின்றி – அதாவது முண்டம் இல்லாமல் – தலை மட்டுமே கொண்ட ஸமூகம் நிலைகுலைந்திருக்குமே?

மீனாக்‌ஷி காப்பாற்றினாள்.. போகட்டும்.

மானனிய ராமகோபாலன்ஜி பெரியவாள் கூறியிருப்பதில் ஒரு உண்மையை பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று கொங்கு மண்டலத்தில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு பெண்களை மயக்கும் ஈனச்சாதி ஆண்களை எதிர்த்து தளபதி யுவராஜின் தலைமையில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு மகாபாரத யுத்தமே நடத்தி வருகிறார்கள். பிறகு கொங்கு வேளாள சிங்கங்களுக்கு போதிய பெண்கள் கிடைக்காததால், மலையாள தேச நாயர் பெண்களை மணம் செய்து வருகின்றனர். இந்த படிக்கு பார்த்தாலும் புரட்சித் தலைவரின் முன்னோர்கள் நாயராக அவதாரமெடுத்தது பொருந்தி வருகிறது.

சதா சர்வகாலமும் ஹிந்துக்களின் நலன் குறித்தே சிந்திக்கும் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் மூளைச் சுரப்பை நாங்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், சுருக்கப்படாத அன்னாரின் அறிக்கையின் பிற பகுதிகள் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருவது ஹிந்து பூமியில் பிறந்தவர்கள் என்ற முறையில் எமது கடமை; அதை அவ்வண்ணமே கீழேயுள்ள வியாஸத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளோம்.

ஓம்

வீர ஷிவாஜியின் அவதார பூமியில் பிறந்த ரஜினிகாந்த் வெள்ளைக்காரனோடு சண்டை போட்ட தீவிரவாத முஸல்மான் திப்பு சுல்தானின் வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறதாம். இந்த நாட்டில் ஹிந்துக்களின் நிலை மிகவும் தாழ்ந்து போய் விட்டது. அப்படித்தான் மன்னர்கள் வேடத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஆழ்வார்களும், நாயன்மார்களும், சாதுக்களும் நடமாடிய தமிழகத்தில் ஹிந்து மன்னர்களுக்கா பஞ்சம்?

பாண்டிய மன்னர்கள் இருந்தார்கள், சோழ மன்னர்கள் இருந்தார்கள்.. இன்னும் வேளிர்குல குறுநில மன்னர்கள் ஏராளம் ஏராளம்… இன்னும் மைசூர் மாநிலத்திலே மைசூர் மகாராஜா வம்சத்தினர் இன்னும் கொலுவீற்றிருக்கிறார்கள். ஆந்திர தேசத்தில் கிருஷ்ண தேவராயர் எனும் மாபெரும் ஹிந்து சக்கரவர்த்தி இருந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஹிந்துக்கள்; ஹிந்து ஸநாதன தருமத்தைப் போஷித்தவர்கள். பாண்டியனாகவும் சோழனாகவும் ராயராகவும் நடிக்க வேண்டியது தானே? நான் திருவாளர் ரஜினிகாந்த்தை கண்டிப்பதாக நினைக்க கூடாது. பரம பூஜனிய ஸ்ரீமான் மோடிஜியை தன்னுடைய சொந்த வீட்டில் தரிசிக்கும் பாக்யதை பெற்ற இரண்டாவது தேசபக்தர் ரஜினி என்பதை நாங்கள் அறிவோம். போயஸ் தோட்டத்தில் இருக்கும் முதல் தேசபக்தர் புரட்சித் தலைவி அம்மாஜி என்பதையும் இவ்வியாஸத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

என்றாலும், பாண்டிய ஹிந்துத் தமிழ் மன்னர்களும் சோழ நாட்டு ஹிந்துத் தமிழ் மன்னர்களும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு மக்களைக் கொன்றவர்கள் தானே என்று ஆசிய சீனாவிடம் காசு வாங்கும் இடதுசாரி தீவிரவாதிகள் கேட்பார்களோ என்று ரஜினிகாந்த் பயந்திருக்க வேண்டும். அவர்கள் அப்படிக் கேட்டால் தான் என்ன? வன்னியத் தமிழர்களும் கொங்கு வெள்ளாளத் தமிழர்களும் தலித் தமிழர்களைக் கொன்ற போது ”அண்ணன் தம்பிகளுக்குள்ளே இதெல்லாம் சகஜமப்பா” என்று தமிழ் ஹிந்து உணர்வாளர்கள் காவி தருமத்தை விளக்கிய திறமை ஹிந்து தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் இல்லாமலா போய் விட்டது? நமது குட்டி உணர்வாளர்கள் பதினாறடி பாய்ந்தால் தாயான நாம் முப்பத்திரண்டடி பாய மாட்டோமா என்ன?

சரி, அப்படித்தான் புராண காவியங்களில் நடிக்க ரஜினிக்கு ஆசையென்றால் ஹிந்து ஸநாதன தருமத்தின் பெரும் சாதனைகளாம் காமசூத்ரா காவியத்தையும், கஜூராஹோ ஓவியங்களையும் பற்றிய விழிப்புணர்வை பரத வர்ஷத்து மக்களிடையே ஏற்படுத்த அல்லும் பகலும் அயராமல் கலைச்சேவை செய்து வரும் புன்யஸ்த்ரீ சன்னி லியோனுக்கு ஜோடியாக நடித்திருக்க வேண்டும். அட, வயதாகி விட்டது என்று ஸ்ரீமான் ரஜினிகாந்த் யோசிப்பதாக இருந்தால், குறைந்த பட்சம் அதே கலைச்சேவையை ரிஷிகளும் முனிகளும் உலாவிய கடவுளின் சொந்த தேசத்தில் (கேரளா) செய்த ஸ்ரீமதி ஷகீலாவுக்காவது ஜோடி போட்டிருக்க வேண்டும்.

ஏன் ரஜினிகாந்த் இப்படி ஆக்கப்பூர்வமான வழிவகைகளில் யோசிக்க மறுக்கிறார்? அக்மார்க் ஐயங்காரை மணந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்கள் மனது வைத்தால் தெற்கிலாவது ஹிந்து தர்மத்தின் கீர்த்தியை பரப்பலாமே? ஏற்கனவே மும்பையில் மூன்று கான்கள் உட்கார்ந்து கொண்டு பாரத தேசமெங்கும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள். பகவான் மோடியை அவர்கள் கண்டு சேவித்தாலும், விழுந்து நமஸ்கரித்தாலும் அடிப்படையில் அவர்கள் அனைவரும் முசல்மான் ஜாதி அல்லவா? தமிழகத்தில் குஷ்புவை இப்போது ஒரு ஆளாக்கி ஐ.எஸ்.ஐ சதி செய்வது நம்மவாளுக்கு தெரியுமா என்ன?

ஏனென்றால் இதற்கெல்லாம் காரணம் நமது மூளைகளில் படிந்திருக்கும் ஐரோப்பிய மையவாத சிந்தனைகளும், அந்த சிந்தனைகளுக்கு அடிப்படையான சீனா மற்றும் பாகிஸ்தானின் சதியும் தான். இன்றைக்கு ஹிந்துக்களுக்கும் அவர்களது ஸநாதன தருமத்திற்கும் எந்தப் பாதுகாப்புமின்றிப் போய் விட்டது.

யோசித்துப் பாருங்கள், அக்காராடிசிலும், புளியோதரையும் ஆண்ட ஹிந்து தமிழ் பூமியை இன்று திண்டுக்கல் தலப்பாகட்டியும், ராவுத்தர் பிரியாணியும் ஆக்கிரமித்துள்ளன. தயிர் சாதம் சதிராடிய ஹிந்து தமிழ் பூமியில் ஞாயிற்றுக் கிழமையானால் தெருவுக்குத் தெரு ஆடும், மாடும், கோழியும் தோலுரிந்து தொங்குகின்றன. இதற்குப் பின்னே உள்ள பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ சதியை பாரதத் தாயின் தமிழ் வடிவமான புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சீக்கிரம் முறியடிப்பார் என்று எனது நண்பர் சோ ராமசாமி சமீபத்தில் என்னிடம் சொன்னார்.

சாப்பாடில் மட்டுமா? உடுக்கும் உடையைக் கூட ஐரோப்பிய மையவாத சிந்தனை விட்டு வைக்கவில்லை. நாகா சாமியார்களைப் போல் காற்றோட்டமாக திரியும் ஹிந்து ஞான மரபு இன்றைக்கு சீரழிந்து கெவின் க்ளெய்ர் ஜட்டியோடு அலைகிறார்கள் இளைஞர்கள். நடிகர்கள் கூட நமது ஹிந்து பாரம்பரிய உடையாம் கோவணத்தை மறந்து லீவைஸ் ஜீன்ஸ் போட்டு ஆடுகிறார்கள். என்ன அக்கிரமம்? பெண்களைப் பாருங்கள், மொகலாய முஸல்மான்கள் அறிமுகம் செய்த சல்வார் கமீசும் சுடிதாரும் அணிந்து வளைய வருகிறார்கள். கிறித்தவர்கள் கண்டுபிடித்த ஜட்டியும், பிராவும், லங்கோட்டை கொன்று போட்டது குறித்து மானமுள்ள ஹிந்து சகோதரன் என்றைக்காவது யோசித்திருப்பானா?

இப்படி நமது ஸநாதன தருமம் தறிகெட்டுக் கிடக்கும் நிலையை மாற்றத் தான் ஹிந்து முன்னணி வாதாடியும் போராடியும் வருகிறது. மிலேச்சர்களின் அநாச்சாரம் இன்றைக்கு எல்லை மீறிப் போனதன் விளைவு தான் ஒரு கன்னட தயாரிப்பாளர் ரஜினியிடம் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க பேச்சு நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தி.

அப்படி அவர் படமெடுக்க வேண்டுமென்றால், திப்புவை விட மைசூர் உடையாரின் வரலாற்றைத் தான் எடுக்க வேண்டும். பாகிஸ்தானைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாதியான திப்பு சுல்தானைப் போலன்றி மைசூர் மன்னர் உடையார் பரம்பரை என்பது எட்டப்பன் தொண்டைமான் சக்கரவர்த்திகளின் முன்னோடி அல்லவா?

திப்பு சுல்தான் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடியவர் என்று சில வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கலாம். இந்த விசயத்தை மேன்மை பொருந்திய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனிக்க வேண்டும். உடனடியாக பழைய பதிப்பு வரலாற்று நூல்களை திரும்ப பெற்று புதிய பதிப்பை அச்சிட ஆவண செய்ய வேண்டும். இன்னும் மத்திய ஸர்க்காரால் திருத்தப்படாத பழைய வரலாற்றை ஹிந்துக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? அது இரண்டு மிலேச்சர்களுக்குள் நடந்த சண்டை. திப்பு ஒரு முஸல்மான் – அப்படி என்றால் அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாட்டார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடாதவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்? கொழுக்கட்டையை விழுங்காதவர் எப்படி ஹிந்து ஞான தருமத்தை பின்பற்ற முடியும்?

meghna - vinavu cartoonதேசபக்தியைப் புரிந்து கொள்ள முதலில் நமது தேசபக்தர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். வீர சாவர்கர், பரமபூஜனிய ஹெட்கேவார், வாஜ்பாய் போன்றவர்களின் வரலாற்றை ஹிந்துக்கள் படிக்க வேண்டும். வெள்ளைக்காரனோடு சண்டை என்று வந்தால் இவர்கள் குபீரென்று அவன் காலில் விழுந்தவர்கள் ஆயிற்றே என்று தீயவர்களான கம்யூனிஸ்டுகள் தூற்றலாம். ஆனால், அதில் இருக்கும் ராஜதந்திரத்தை இவர்களின் ஐரோப்பிய மையவாத மூளை பார்ப்பதில்லை. அப்படிக் காலில் விழுந்து என்ன செய்தார்கள்? ஹிந்து ஸநாதன தர்மத்திற்கு தொண்டாற்றினார்கள். அது தான் ஒரு தேசபக்தனுக்கு அழகு.

அதனால் தான் சொல்கிறோம், விடுதலைக்காக போராடியதாக சொல்லப்படும் (மீண்டும் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனத்திற்கு) திப்புவை விட, வெள்ளைக்காரன் காலில் விழுந்தாவது ஆட்சியில் அமர்ந்து ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம், முக்கால பூஜை நடத்தவும், புரோஹிதர்களை போஷித்தும் கோயில் திருவிழாக்களில் நாட்டியமாடிய தேவதாசிகளை பராமரித்தும் சிறப்பாக செயல்பட்ட உடையார், குவாலியர் மன்னர் பரம்பரை, திருமலை நாயக்கர், எட்டப்பர், தொண்டைமான், தஞ்சை சரபோஜி போன்றோரின் செயல்பாடுகளே மிகச் சிறந்த தேசபக்திக்கு அடையாளம். இன்றும் மானனீய இல.கணேசன்ஜியிடம் கேட்டால் தஞ்சையில் எப்படி மாமன்னர் சரபோஜி குடும்பம் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளை கவனிக்கிறது என்பதை வில்லுப்பாட்டாகவே பாடுவார்.திருவாளர் ரஜினிகாந்த் இதையெல்லாம் சிறப்பாக சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டும்.

திருமதி லதா ரஜினிகாந்த் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. பாரத தேசத்திற்கு இழுக்கு வரும்போது ஒரு ஐயங்கார் ஆத்து மாமி இன்னேநரம் மடிசாரை கட்டிண்டு பொங்கி வெடித்திருக்க வேண்டாமோ? என்ன இருந்தாலும் ரஜினி சார்வாள் நம்மவதான். இல்லையென்றால் ஹரிஜன்களைப் பற்றி படமெடுத்த ரஞ்சித் என்ற இயக்குநரை பிடித்துப் போட்டு மயிலை கபாலிஸ்வரர் பெயரில் ஒரு படமெடுக்க வைக்க முடியுமா?

என்னமோ அவருக்கு கொஞ்சம் பணப் பிரச்சினை. புத்திரிகள் பொம்மைப் படமெடுத்து கடனாக்கிவிட்டார்கள். இதை நம்ம அதானியிடமோ அம்பானியடமோ எடுத்துச் சொன்னால் ஸிம்பிளா தீர்த்து விடலாமே? எதற்கு இந்த கேடுகெட்ட முஸல்மான் திப்புவாக நடித்து பிச்சையெடுக்க வேண்டும்?

அவருக்கு தற்போது கொஞ்சம் கிரகம் சரியில்லை. எல்லாம் ஷேமமாகிவிடும்.

பாரத் மாதாகி ஜெய்!
வந்தே மாதரம்!

ஹிந்து என்று சொல்லு! தலை நிமிர்ந்து சொல்லு!

ஓம் காளி ஜெய் காளி!

இவண் – இராம கோபாலன்
ஹிந்து முன்னணி, தமிழ்நாடு
_________________________________________

–    தமிழரசன்

தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி !

0

ராண்டுக்குள் இரண்டாவது முறையாக மீண்டும் ஒருமுறை ஆளும் ஜெயா – சசி கும்பலுடைய அடிமை விசுவாசிகளின் அமளி-துமளி, அட்டகாசம்-அராஜகக் கூத்துகளை எவ்வித எதிர்ப்புமின்றி தமிழ்நாடு கண்டிருக்கிறது. இடையிடையே அக்கும்பலின் விடுதலைக்காக அதே அடிமை விசுவாசிகளின் அனைத்து மதப் பிரார்த்தனைகள், யாகங்கள் – பூசைகள், பால்குடம் – தீச்சட்டிகள், பரிகாரங்கள், தாடி – மொட்டை – தற்கொலைகள், இரண்டு இடைத்தேர்தல்கள் ஆகிய கோமாளிக் கூத்துகளையும் தமிழ்நாடு கண்டிருக்கிறது. இவையெல்லாம் தமிழக மக்களையும் பொதுச்சொத்தையும் அந்தக் கட்சிக்காரன்கள் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு சாராயத்தையும், கறி பிரியாணியையும், சில்லறைக் காசையும் வாரியிறைத்துச் செய்தவை.

ஜெயா வழிபாடு
அடிமை விசுவாசிகளின் மதப் பிரார்த்தனைகள், யாகங்கள் – பூசைகள், பால்குடம் – தீச்சட்டிகள் (கோப்புப் படம்)

இந்தப் பட்டியலில் கடைசியாக இடம் பெற்ற, தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் ஆடிய அருவருக்கத்தக்க கோமாளிக் கூத்து, அவர்களின் தலைமையே திட்டமிட்டு உத்திரவு போட்டு அரங்கேற்றியதாகும். இது, எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டுவதைப் போல அரசு டாஸ்மாக் சாராயக் கொள்ளைக்கு எதிராகத் தமிழக மக்கள் கொந்தளித்து, எழுச்சியுற்று நடத்திவரும் போராட்டங்களால் தனிமைப்பட்டிருக்கும் ஜெயா-சசி கும்பல் அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் செய்யப்படும் சதிதான் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக் கோரும் போராட்டங்கள் தமிழகமெங்கும் உச்ச கட்டத்தில் இருந்தபோது வெடித்தன அ.தி.மு.க. காலிகளின் இளங்கோவன் எதிர்ப்பு அராஜகங்கள். சட்டமன்றம் கூடுவதற்கு முதல்நாள் அவற்றை நிறுத்திக் கொள்ளும்படி ஜெயா-சசி கும்பல் உத்தரவு போட்டது.

கடந்த ஆகஸ்டு இரண்டாம் வாரம் நடந்த மோடி-ஜெயா சந்திப்பு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கீழ்த்தரமாகப் பேசிவிட்டார் என்பதைக் காரணங்காட்டி, ஒருவாரம் கழித்து, ஆளுங்கட்சிப் பொறுக்கிக் கூட்டம் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர், முன்னாள் அரசு ஊழியர் தேர்வாணையர், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எல்லாவற்றையும் விட ஜெயா-சசி கும்பலுடைய சொத்துக் குவிப்பு வழக்கறிஞர் நவநீதகிருட்டிணன் தலைமையில் திரண்டு இளங்கோவன் அலுவலகத்தையும் வீட்டையும் தாக்க முனைந்துள்ளது. ஜெயா-சசி கும்பலிடம் தனக்குரிய விசுவாசத்தைக் காட்டுவதற்காக ஆளுங்கட்சிப் பொறுக்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டில் நினைத்த இடங்களிலெல்லாம், நினைத்த நேரங்களில் போராட்டங்கள் என்ற பெயரில் தமது காலித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள்; இளங்கோவன் உருவ பொம்மைகளைக் கொளுத்தினார்கள். அவர் படங்களைச் செருப்பால், துடைப்பத்தால் அடித்தார்கள்; ஆபாச வசவுகளால் அர்ச்சனை செய்தார்கள்.

பல மணி நேரங்கள் சாலைப் போக்குவரத்தை முடக்கினார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலைத் தண்டித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக நாய், பன்றிகளை வைத்து அசிங்கப்படுத்தியதைப்போல மீண்டும் செய்தார்கள். தங்கள் பங்கிற்கு பா.ஜ.க. பரிவாரங்களும் இளங்கோவன் எதிர்ப்பு கலவரங்கள் நடத்தினர். குடிதண்ணீர், சாலைவசதி கேட்டும், டாஸ்மாக் சாராயக்கடைகளையும் மணற் குவாரிகளையும் மூடக்கோரியும் போராடும் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வழக்குப் போட்டு, சிறையிலடைக்கும் போலீசும் எல்லா மட்ட நீதிமன்றங்களும் ஆளும் கட்சி காலிகளின் அராஜகங்களை வேடிக்கை பார்க்கின்றன.

இத்தனையும் எதற்காக நடத்தப்பட்டன? மோடி-ஜெயா சந்திப்பு, உறவு குறித்து தனிப்பட்ட முறையில் அவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் இளங்கோவன் பேசினார். ஓட்டுக்கட்சி அரசியலில் இதெல்லாம் ‘சகஜமப்பா’ என்றாகி விட்டது. ‘காமராஜர்-ராஜாஜி காலத்தில் அரசியல் நாகரிகமாக இருந்தது. திராவிட அரசியல் புகுந்துதான் எல்லாம் பாழாகிவிட்டது’ என்று அதே பல்லவி பாடப்படுகிறது. அது நிலவுடைமை, சாதி ஆதிக்கப் பிற்போக்கு அரசியல் என்று புதைக்கப்பட்டு அரை நூற்றாண்டாகி விட்டது. இப்போது அந்தப் பழங்கதையைப் பேசிப் புதுப்பிக்கும் முயற்சி பலிக்காது என்பது மட்டுமல்ல, அதற்கு மாற்றாக வந்த திராவிட, சுயமரியாதை, சமூகநீதி அரசியலும் அண்ணா-கருணாநிதியின் வெறும் சினிமா கவர்ச்சி அரசியலாகச் சீரழிந்து, இறுதியில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கும்பலின் பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலாகப் பரிணமித்தது. இப்போது அதை சாராயம்-கறி பிரியாணி-ரூபாய் நோட்டு பரிமாறுவதும், ரிக்கார்டு டான்சு, சினிமா நடிக-நடிகைகளின் காமெடி, கவர்ச்சிப் பேசசுகள் மூலம் தேர்தல் பிரச்சாரம் என்று மக்களது ஆதரவைத் திரட்டுவதும், இவற்றுக்கு ஏற்பாடு செய்யும் பிரமுகர்களையே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மேயர்களாகவும் அமைச்சர்களாகவும் நியமிப்பதும், போலீசு, அரசு அதிகாரிகள், நீதிபதிகள் இலஞ்ச-ஊழலில் தாராளமாக மிதக்க அனுமதிப்பதும், இவர்களையெல்லாம் வைத்துத் தேர்தல் தில்லுகளில் தன்னை யாரும் வெல்ல முடியாதவாறு பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலை ஜெயலலிதா உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்.

பழைய சினிமாக்களில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆருடன் அரைகுறை ஆடையுடன் தான் போட்ட கவர்ச்சி ஆட்டங்களைக் கூச்சநாச்சமின்றி இன்னமும் ஒளிபரப்பித் தனது ரசிகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டிவரும் புரட்சித் தலைவியை இளங்கோவனுடைய பேச்சு அவமானப்படுத்தி விட்டதாகக் கூறித் தமிழகமெங்கும் மேற்படிக் கூத்துகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஜெயலலிதா என்னவெல்லாம் பேசி இப்போதைய நிலைக்கு வந்தார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற துணிச்சலில் இப்படி ஆட்டம் போடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயாவின் அரசியல் தலைவர் என்பதற்கு மேல் என்ன உரிமையில், உறவில் அவரது பிண வண்டியில் ஏறித் தலைமாட்டில் உட்கார்ந்து அடாவடி செய்தார்! அவரோடு சேர்த்து உடன்கட்டைப் பேச்சுப் பேசினார்! எம்.ஜி.ஆருக்கு பாலில் விஷம் கொடுத்துக் கொன்றதாக ஜானகி மீது பழிபோட்டார்; எம்.ஜி.ஆரின் முன்னாள் நாயகி சரோஜாதேவியை மோர்க்காரி என்று வசைபாடினார். ‘இராஜீவைக் கொன்ற குற்றவாளி’ கருணாநிதியுடன் தேர்தல் கூட்டுவைத்த சோனியாவைப் பத்தினியா என்று கேட்டு, அவரது இத்தாலி பூர்வீகத்தைக் கேலி செய்தார். சட்டமன்றத்தில் தன்னைத் தி.மு.கழகத்தினர் மானபங்கபடுத்தி விட்டதாகத் தலைவிரி கோலத்துடன் நாடகமாடினார். அந்தப் புனிதவதி, தன் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடச் செய்தார் என்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்துக்குத் தனது மகளிரணியை ஏவிவிட்டு, சுப்பிரமணியசுவாமி முன்பாக ஆடையைத் தூக்கிக் காட்டி, ஆபாசக் கூச்சல் போடச் செய்தார்; சொத்துக் குவிப்பு வழக்குக்கு அனுமதியளித்தார் என்பதற்காக ஆளுநர் சென்னாரெட்டி தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாகப் பகிரங்கமாகப் புளுகினார். இப்படித் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளும் மாதரசியை இளங்கோவன் அவமானகரமாகப் பேசிவிட்டார் என்று கொந்தளித்துப் போகிறார்கள், அவரது கூலிப்படையினர்.

பணம் வாங்குவதற்காகவே தம்மைக் கற்பழித்துவிட்டதாக போலீசு மீது புகார் கூறுகிறார்கள் என்று வெட்கமின்றி, மனச்சாட்சியின்றி தமிழ்ப் பெண்கள் மீது பழிபோட்டவர்தான், இந்த ஜெயலலிதா! இதையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லுங்கள்! எதையாவது செய்து, யாரையாவது அவதூறாகப் பேசி தன் மீது கவனத்தை ஈர்த்து அரசியல் ஆதாயம் அடைவது என்கிற ஜெயாவின் அதே அதிரடிப் பொறுக்கி அரசியல் உத்தியைத்தானே இளங்கோவன் கையிலெடுத்துக் கொண்டுள்ளார்! இதற்காக நாமோ தமிழக மக்களோ ஏன் அக்கறைப்பட வேண்டும்!

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !

3

1. திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள்

மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பிரிவு மக்களும் போராடி வருகின்றனர். வீட்டுக்கு ஒரு மரம் நடவேண்டும் என்ற அரசின் கொள்கை போய், வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை வகுத்து செயல்படுவதாகவே தெரிகிறது.

தமிழகம் குடிபோதையில் தள்ளாடுகிறது. இந்நிலையை மாற்ற இந்தியாவிற்கே முன்மாதிரியாக மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், அப்படி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவிகளை 15 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும், சமூக விரோதிகள் என சித்தரிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதேபோல டாஸ்மாக்கை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகளை போட்டு சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. இதனை பார்க்கும் போது இந்த அரசு சமூக விரோதச் செயலை எதிர்ப்போரை பழிவாங்குவதாகவே கருதுகிறோம்.

நாட்டையே சீரழிக்கும் குடிவெறியால் நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதைத்தான் அரசு விரும்புகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது.

சமூகவிரோத செயல்களை தடுப்பதற்காகத்தான் சட்டமும், அரசும், போலீசும் உள்ளன. ஆனால், தமிழகத்தில் கடந்த இருமாதங்களாக நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது அரசுதான் சமூகவிரோத செயல்களை ஊக்குவிக்கிறது என்பதாக கருத முடிகிறது. ஆகவே, தமிழக அரசு குடிகெடுக்கும் இந்த டாஸ்மாக் கொள்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

  • தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்!
  • அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழக மக்களை போதையில் ஆழ்த்துவதை அனுமதிக்க முடியாது!
  • போராடிய மாணவர்க்-வழக்கறிஞர் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 18-08-2015 அன்று காலை உறையூர் குறத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபிநாத் தலைமையேற்று நடத்தினார்; துணைத்தலைவர் மணிகண்டன் உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். தோழர் மணலிதாஸ் நன்றியுரை கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி முழுவதிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி

2. திருச்சி குட்செட் தொழிலாளர்கள்

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் இயங்கிவரும் சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சி குட்செட்டில் கடந்த 24-08-2015 அன்று மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. புரட்சிகர அமைப்பின் கோரிக்கையை அங்கீகரித்து மாற்று சங்கத் தொழிலாளர்களும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், ஒப்பந்ததாரர்களின் ஆதரவுடன் அன்றையதினம் திருச்சி குட்செட்டில் அனைத்து தொழிலாளிகளின் சார்பில் முழுநாள் வேலை நிறுத்தமும் நடந்தது.

trichy-sumai-workers-posterலாரி உரிமையாளர்கள், ஒப்பந்த தாரர்களும் அன்றைய தினம் வேலையை தவிர்த்து ஆதரவு தந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியடைய செய்தனர். அன்றைய தினம் குட்செட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது (பார்க்க – பத்திரிக்கை செய்திகள்)

[செய்திகளைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

அதனை தொடர்ந்து காலை 9 மணி முதல் 11 மணிவரை திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

trichy-sumai-workers-notice

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் தோழர். குத்புதின் தலைமை தாங்கி பேசுகையில் மதுவிலக்குப் போராட்டத்தினை அரசு துச்சமென நினைப்பதாகவும், மக்களின் பேரெழுச்சியாக, தொடர் போராட்டங்கள், சசிபெருமாள் அவரது மரணம், மாணவர் – வழக்கறிஞர் தீர மிகு போராட்டங்களுக்கு பிறகும் அரசு மௌனம் காப்பதாகவும் சாடியதோடு, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் “மக்கள் முழுக்க அரசியல் கற்றால் தான் போரட்டத்திற்கு வீதிக்கு வருவார்கள்” என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார். பெரியார் போன்ற தலைவர்கள் இன்றில்லாத நிலையில் எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள்தான் இன்றளவும் மக்களுக்காக போராடி வருகின்றன என்று சுட்டிக் காட்டினார்..

கண்டன உரை ஆற்றிய சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் ராஜா தமிழகத்தின் பல்வேறு அரசியல் சார்ந்த மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் தன்னெழுச்சியாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மதுவிலக்கு மற்றும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராடிய போது அவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதற்க்கு கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

ஈழ விடுதலைக்காக முதல் முதலாக குரல் கொடுத்து அவர்கள் போராடியதை குறிப்பிட்டு, மூடு டாஸ்மாக்கை என அவர்கள் மூட்டிய தீ பரவட்டும் என்று பேசினார்.

“அரசு காவல்துறையை ஒரு அடியாள் படையாகவே பயன்படுத்துகிறது. கூடுதலாக சமீபத்தில் புனே நகரில் போராடிய திரைப்பட கல்லூரி மாணவர்கள் மீது தனியார் குண்டர் படையை ஏவி காட்டுமிராண்டிதனமாக தாக்குதல் செயலில் இந்த அரசாங்கம் ஈடுபடுகிறது. இந்த போலீசு குறைந்தபட்சம் சரி தவறு எது என சிந்திக்க தெரியாத மிருகம் போல் ஏவல் படையாக மாறியுள்ளது. அதனால் தான் பெண் காவலர்களை டாஸ்மாக்கு காவல் போடுகிறான். எவ்வளவு கேவலமாக குடிகாரர்கள் பேசினாலும் சகிச்சிக்கிட்டு டாஸ்மாக் முன்னாலே நாயா நிக்கனும்.. தேவையா இந்த தொழில் என சிந்திக்க வேண்டும்.”

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் தோழர். காவிரிநாடன் தனது கண்டன உரையில், “மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ அவர்கள் விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட சென்ற போது அவர் மீது கடை ஊழியரை கடப்பாறையால் குத்த முயற்சி செய்தார் என்ற பொய் வழக்கு போலீசால் போடப்பட்டுள்ளது.

தோழர் ராஜூ பல்வேறு மக்கள் மாணவர்கள் பிரச்சனையை ஒட்டி பல முறை போராட்டம் நடத்தியுள்ளார். குறிப்பாக தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராகவும், கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி கட்டப்பட்ட கட்டணத்தினை திரும்ப பெற்று தந்ததோடு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த தடை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்.

கடந்த 68 ஆண்டுகளாக மக்கள் தமது கோரிக்கைகளை மனுக்களாகவே கொடுத்து அதில் தீர்வு ஏற்படவில்லை. இனி மக்கள் தங்கள் தேவைகளை போராடி பெறுவதுதான் ஒரே வழி” எனவும் பேசினார்.

சங்க உறுப்பினரும் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்க்கு பொருட்களை ஏற்றும் SWHC ஐ சேர்ந்த தோழர் தனக்கோடி பேசுகையில், ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் அவர் 5 வருடங்களில் சுமார் 1.80 லட்சம் வரை செலவு செய்வதாகவும், ஆனால் அரசு ஒரு குடும்பத்திற்க்கு சுமார் 3000 முதல் 4000 ரூபாய் வரையே இலவச பொருட்கள் வழங்குவதாகவும் புள்ளி விவரங்களை கூறி பேசியது சிறப்பாக இருந்ததுடன் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

மைய கலைக்குழு தோழர்கள் விளக்கமளித்து பாடிய பாடல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை உணர்ச்சியின் விளிம்பிற்கே கொண்டுவரும் வகையில் இருந்தன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவரொட்டி ஒட்ட சென்ற போது சில மாணவர்கள் எங்களிடம் வந்து “இந்த போஸ்டர் தயாரிக்க ஒன்றிற்கு எவ்வளவு செலவாகும்” என்று கேட்டனர். “எங்களிடம் ஐந்தாறு குடுங்கள், எங்களது வீட்டில் ஒட்ட வேண்டும். எங்கள் அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதால் எங்களால் சரியாக படிக்க முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்று கூறினர். எங்கள் நினைவுக்கு வந்தது “படிப்ப கெடுத்திட்டியே அம்மா” என்ற கலைக் குழு தோழர்கள் பாடிய பாடல்வரிகள் தான்.

சங்க செயலர் தோழர் ரத்தினம் நன்றியுரையாற்ற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி கிளை.

3. குடந்தை

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்,அடக்குமுறையை ஏவும் அரசு, குதறும் காவல்துறை, துணைநிற்கும் நீதிமன்றம் என்ற தலைப்பில் 07-09-2015 அன்று குடந்தை காந்திபூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

prpc-tnj-demo-bannerமாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் பறை இசையோடு துவங்கியது ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக்கை இழுத்து மூடக்கோரியும் காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை அம்பலப்படுத்தியும் முழக்கம் இடப்பட்டது.

மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயாவுக்கு விடுதலையாம்! டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய மக்களுக்கு தண்டனையாம்! என்ற முழக்கமும் ஊத்திகொடுத்த தாய் மாமனுக்கு 307 செக்சன் பாரு! மொத்தமக்களையும் குடிகாரனாக்கும் அம்மாவுக்கு என்ன செக்சன்? என்ற முழக்கமும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைபெற்றது.

prpc-tnj-demo-poster-2மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்டஅமைப்பாளர் வழக்குரைஞர் தோழர் தமிழ்.ஜெயப்பாண்டியன் தலைமையுரையாற்றுகையில், “பச்சையப்பன்கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் மண்டைய உடைக்குது, மாணவிகளை அவமான படுத்தியது. ஆனால் E.V.K.S.இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க குண்டர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயரும் சேலையை மடிச்சிக் கட்டிக்கிட்டு கையில் வெளக்கமத்தோடு நின்று அராஜகம் செய்தவர்களை வேடிக்க பார்கிறது போலீசு.

சாராயக்கடைக்கு எதிராக போராடினா போலீசு ஒடுக்குகிறது. இந்த அரசு அறிவிக்கப்படாத அவசரநிலை காட்டாச்சி நடத்துகிறது” என்று இந்த அரசையும் காவல்துறையையும் அம்பலப்படுத்தி பேசினார்.

குடந்தை வழக்குரைஞர் தியாகு பேசுகையில், “நடக்கக்கூடிய குற்றங்கள் பலவற்றுக்கு டாஸ்மாக்தான் காரணம் அந்த டாஸ்மாக்கை எதிர்த்து மாணவர்கள் போராடினால் குற்றம் என்று சொல்கிறது அரசு. மாணவர்களையும், இளைஞர்களையும் மதுபோதையில் சிந்திக்கவிடாமல் செய்வதன் மூலமாக தங்களுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று இந்த அரசும் ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள்” என்பதை அம்பலப்படுத்தினார்.

BSP மாவட்ட வழக்கறிஞர் அணித்தலைவர் வழக்கறிஞர் கோ.ராஜ்குமார், “மாணவர்களையும் இளைஞர்களையும் சிந்திக்கவிடாமல் செய்வதுதான் இந்த அரசின் கொள்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள் ஊழல் நீதிபதிகள் என்று நீதிபதிகள் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடுக்கப்பட்டது இன்றுவரை விசாரணை இல்லாமல் இருக்கிறது” என்று நீதிமன்றத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

வி.சி.க.முன்னாள் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சா.விவேகனந்தன் பேசுகையில் “அலுவலகங்கள் பள்ளிகள் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் கூட இல்லை. ஆனால், டாஸ்மாக் 500 மீட்டருக்கு 1 கடை உள்ளது. காவல்துறை குடித்துவிட்டு வண்டி ஓட்டினா கேஸ் போடுகிறார்கள். ஆனால் அதே காவல்துறைதான் டாஸ்மாக் கடைக்கு காவல் இருக்கிறது. நீதிமன்றங்கள் அரசாங்கத்தை கண்டிக்க துப்பில்லாத நிலையில் இருக்கின்றன” என்று நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அம்பலப்படுத்தினார்.

shutdown-tasmac-kudanthai-demo-1

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் காவிரிநாடன் நிறைவுரையாற்றுகையில், “மாணவர்கள் போராட்டம் சட்டபூர்வமானது நியாயமானது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் சரத்து 47 பூரண மதுவிலக்கை அமுல்படுத்த சொல்கிறது. ஆனால் ‘அரசே சராயக்கடையை நடத்துவது சட்டவிரோதமானது’ என்று அதை கண்டிக்காத நீதிமன்றம் சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. காவல்துறை செய்யும் அத்துணை குற்றங்களுக்கும் நீதிமன்றம் துணைநிற்கிறது” என்று காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அம்பலப்படுத்தினார்.

“அரசுக்கு வருமானம் வருது அதனாலதான் சாராயக்கடையை நடத்துறோம் என அரசு சொல்கிறது அம்மா விபச்சாரவிடுதி என நடத்தலாமே அதனாலையும் வருமானம் வருமே” என்று பேசிய போது மக்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.

ஒரு பெரியவர், “வெற்றிகொண்டான் பேச்சுக்கு பிறகு ஒரு சிறப்பான பேச்சை இப்போதுதான் கேட்கிறேன் இன்னும் 10 நிமிடம் பேசினாலும் கேட்கலாம்” என்று சொன்னார்.

ஒரு அம்மா போலீஸ்காரர்களை திட்டினார். அப்போது உளவுத்துறை போலீஸ்காரர்கள், பச்சமிளகா கடிச்ச மாதிரி, “இவங்க ஆர்ப்பாட்டம் நடத்துறதால நமக்கு ஆப்பாயிடும் போல” என்று அவர்களுக்குள்ளாகவே பிதற்றிக் கொண்டிருந்தனர்.

தோழர் இறுதியாக, “உழைக்கும் மக்கள் நம்மளை நாமே ஆளுவதற்கு அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.

நிறைவுரையை அடுத்து சிறப்பானதொரு கலைநிகழ்ச்யை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக் குழு தோழர்கள் நடத்தினர். கலைநிகழ்ச்சியில் மூடுடாஸ்மாக்கை என்ற பாடல் குடந்தை மக்களிடத்தில் போராட்ட உணர்வை தட்டிஎழுப்பியது.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்தும் எச்சரிக்கை, எச்சரிக்கை என்ற பாடல் பாடிய போது வாகனத்தில் சென்றவர்கள் கூட நின்று கலைநிகழ்சியை கவனித்தார்கள்.

கூட்டம் அதிகமாவதை பார்த்த உளவுத்துறை போலீஸார் பதற்றத்துடன் நிகழ்ச்சியை நிறுத்துமாறு நெருக்கடி கொடுத்தார்கள். “ஆர்ப்பாட்டம் நடத்துறோங்கிற பேர்ல பொதுக்கூட்டம் நடத்துறிங்களா” என்று கேட்டனர்.

கலைநிகழ்ச்சியின் போது மக்கள் தாமாகவே முன்வந்து நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர் இறுதியாக நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டம் முடிக்கப்பட்டது.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
குடந்தை

4. கரூர்

ரூர் காணியம்பட்டியில் உள்ள அரசு பாலி-டெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் 24-08-2015 அன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.45 மணியளவில் கல்லூரி வாசலின் முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு, “டாஸ்மாக்கை மூட வேண்டும், கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழருமான தோழர் சுதர்சனன் மாணவர்களை ஒருங்கிணைத்து பேசினார். மாணவர்கள், “இழுத்து மூடு இழுத்து மூடு, டாஸ்மாக்கை இழுத்து மூடு” என்று முழக்கங்கள் எழுப்பினர்.

கல்லூரி நிர்வாகம், “டி.சி கொடுத்து விடுவேன், இன்டெர்னல் மதிப்பெண் போட மாட்டேன்” என்று மிரட்டியதை துணிவோடு எதிர்கொண்ட மாணவர்கள், “போராடுவது எங்கள் உரிமை, டாஸ்மாக்கை மூடச் சொல்லுங்கள், நாங்கள் கலைந்து சொல்கிறோம்” என்று துணிவோடு பதிலளித்தனர்.

மாணவர்கள கல்லூரி வாயிலில் இருந்து நோட்டிஸ் வினியோகித்து, கண்டன முழக்கம் அடங்கிய தட்டிகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். கரூர் மணப்பாறை சாலை கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில் தொடர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

“யாரைக் கேட்டு போராட்டம் செய்தீர்கள்? யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்” என்று  மிரட்டிய போலீசிடம், “போராடுவது எங்கள் உரிமை, உங்களிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை” என்று தைரியமாக பதிலளித்தனர் மாணவர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“டாஸ்மாக்கை இழுத்து மூடும் வரை, கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யும் வரை ஓயாது எங்கள் போராட்டம்” என்பதை பறைசாற்றும் வகையில் இந்த போராட்டம் அமைந்தது.

தகவல்

இரா பாக்கியராஜ்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

5. கடலூர்

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்

6. விருத்தாசலம்

கஸ்ட் 24-ம் தேதி விருத்தாசலம் பாலக்கரையில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

shutdown-tasmac-virudai-demo

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

 

 

குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி – புதிய ஜனநாயகம் – செப் 2015 மின்னிதழ்

0

puthiya-jananayagam-september-2015
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. “மூடு டாஸ்மாக்கை” – போர்க்களமான தமிழகம்!

2. தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி!

3. குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி!
தமிழக அரசும் நீதிமன்றங்களும் “சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்” அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசிடம் மனு கொடுத்துக் காத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

  • துணைவேந்தரின் அடாவடி!
  • தொடை நடுங்கிப் போன அரசு!
  • தமிழக போலீசின் வக்கிரம்!
  • வென்றது மக்கள் அதிகாரம்!
  • டாஸ்மாக் ஊழியர்களே, உங்களைக் கொல்வது மதுவா, மக்கள் போராட்டமா?

4. சசிபெருமாள் தவறு செய்துவிட்டார்; அவர் ஏறியிருக்க வேண்டியது செல்போன் கோபுரமல்ல, உயர் நீதிமன்றக் கோபுரம்!
ஜெயா அரசுக்கு எதிராகப் போராடுகின்றவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்டாக மாறிக் கொண்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

5. தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி: பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி!

4. என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்!
நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என சுரங்கத் தொழிலாளிகள் இருவேறு சங்கங்களாக பிரிந்து கிடப்பதை ஒன்றுபடுத்த தவறியது பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.

5. அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை!
தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக் கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு.

6. விவசாயிகள் தற்கொலை:மோடியின் பொய்யும் புரட்டும்!
புள்ளிவிவர மோசடிகளின் மூலம், காங்கிரசு ஆட்சியை விடத் தமது ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்து விட்டதாகக் கணக்குக் காட்டியிருக்கிறது, மோடி அரசு.

7. காட்டுவேட்டை காசுவேட்டையானது!
மாவோயிச பயங்கரவாதிகளை ஒழிக்கப் போவதாகக் கூறி இறக்கிவிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படை ஜார்கண்டு மாநில போலீசோடு சேர்ந்து போலி மாவோயிஸ்டுகளை உருவாக்கி சரணடையச் செய்து, பல கோடி ரூபாய் பெறுமான மோசடியை நடத்தியிருக்கிறது.

8. வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)
ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

மதுரை பேரணியில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது !

2

ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது-நீதித்துறை ஊழலுக்கெதிரான வழக்கறிஞர்கள் மாபெரும் பேரணி!

துரையில் கடந்த 10-09-2015 அன்று நீதித்துறை லஞ்சம் – ஊழல் ஒழிப்புப் பேரணி – ஆர்ப்பாட்டம் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, தென்மாவட்ட வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டது. நிலைமையை எதிர் கொள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டம் பலமுறை நடத்தப்பட்டு வருகிறது.

madurai-lawyers-rally-posterபேரணி காலை சுமார் 11 மணிக்கு மதுரை மாவட்டநீதிமன்றத்தில் தொடங்கி உயர்நீதிமன்றத்தை அடைந்தது. பேரணி முடிவில் ஊழல் நீதிபதிகளின் முதல் பட்டியல் தென்மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளால் வெளியிடப்பட்டது.

madurai-lawyers-banners-2போராட்டத்தில் நாகர்கோயில், தூத்துக்குடி, இராமநாதபுரம், முதுகுளத்தூர், திருப்பத்தூர், காரைக்குடி, திருச்சி, குளித்தலை, கரூர், திண்டுக்கல், பழனி, தேனி, பெரியகுளம், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 1500 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி- ஆர்ப்பாட்டத்தில் பேசிய வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் லஞ்சம்-ஊழலை ஆதாரங்களோடு அப்பலப்படுத்திப் பேசினர். மேலும், உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பாலோனோர் ஊழலில் திளைத்து, ஒட்டு மொத்த நீதித்துறையும் அரசின் தொங்கு சதையாக மாறிவிட்டதை அம்பலப்படுத்தினர்.

பேரணியில் கீழ்கண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மன்னர்கள் அல்ல! மன்னர்கள் அல்ல!
நீதிபதிகள் மன்னர்கள் அல்ல!
மக்களின் வரிப்பணத்தில்
சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள்!

சமூக விரோதிகள்! சமூக விரோதிகள்!
ஊழல் நீதிபதிகள்
சமூக விரோதிகள்! சமூக விரோதிகள்!

சிறை உண்டு! சிறை உண்டு!
ஊழல் அதிகாரிக்கும், ஊழல் அமைச்சருக்கும்
சிறை உண்டு! சிறை உண்டு!
ஊழல் நீதிபதிக்கு —– சிறை எங்கே? சிறை எங்கே?

கிரானைட் கொள்ளைக்கு —– நீதிபதி சி.டி.செல்வம்!
தாதுமணல் கொள்ளைக்கு – நீதிபதி ராஜா!
நோக்கியா கொள்ளைக்கு —– நீதிபதி ராஜேந்திரன்!
எல்லாக் கொள்ளைக்கும்
உடந்தை கவுலு! —— தலைமை நீதிபதி கவுலு!

விசாரணை நடத்து! விசாரணை நடத்து!
சென்னை உயர்நீதிமன்ற
ஊழல் நீதிபதிகள் மீது —— பாராளுமன்றமே விசாரணை நடத்து!

பொய்யடா! பொய்யடா! —— சட்டத்தின் ஆட்சி என்பது
பொய்யடா! பொய்யடா!
நடக்குது! நடக்குது! பணத்தின் ஆட்சிதான்
நடக்குது! நடக்குது!
சல்மான்கானுக்கு ஒரு நீதி! —— சாமானியனுக்கு அநீதி!
இதுதான் இங்கே புதுநீதி!

சுதந்திரப் போராட்டத்தில் —– ஈடுபட்டது வக்கீலு!
காவிரி-ஈழம்
முல்லைப் பெரியார் போராட்டத்த —— நடத்துனது வக்கீலு!

போராடினோம்! போராடினோம்! —- மக்களுக்காகப் போராடினோம்!
ஹெல்மெட் பிரச்சனையில்—— மக்களுக்காகப் போராடினோம்!

குற்றமா? குற்றமா?—— நீதித்துறையே குற்றமா?
ஹெல்மெட் கட்டாயம்! —– பெண்களுக்கு கட்டாயம்!
டாஸ்மாக் கட்டாயமா? —– பெண்களுக்கு கட்டாயமா?
பதில் சொல்! பதில் சொல்! —– நீதித் துறையே பதில்சொல்!

சுத்தம் செய்வோம்! சுத்தம் செய்வோம்!
யுத்தம் செய்வோம்! யுத்தம் செய்வோம்!
ஊழலுக்கு எதிராக —– யுத்தம் செய்வோம்! யுத்தம் செய்வோம்!

பேரணியில் விநியோகிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் அடங்கிய பிரசுரம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! மக்கள் அடிமைகளும் அல்ல!

“நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்”

அன்பார்ந்த பொதுமக்களே!

madurai-lawyers-rally-2கடந்த 15 நாட்களாக நீதித்துறை ஊழலுக்கெதிராக மதுரை வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகிறோம். நீதித்துறையின் ஒரு அங்கமான வழக்கறிஞர்களே, நீதிபதிகளின் ஊழலைப் பேசுவது ஒருவகையில் ‘பூசாரியே கடவுள் இல்லை’ என்று சொல்வதற்கு ஒப்பானது என்றாலும் “உண்மையைச் சொல்வது வழக்கறிஞர்களின் கடமை” என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் நீதித்துறை தொடர்பான சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

  • கடந்த 1947-லிருந்து 2015-வரை சுமார் 67 வருடங்களாக எந்த ஒரு ஊழல் நீதிபதியாவது விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் உத்தமர்களா?
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அவர்கள் ”வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்” என உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் புகார் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். யார் நடவடிக்கை எடுப்பது?
  • உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், A.M.அகமதி, M.M.புன்சி, A.S.ஆனந்த், Y.K.சபர்வால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூசன், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். இன்றுவரை அம்மனு விசாரிக்கப்படாத மர்மம் என்ன?
  • கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ”சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டு வழக்கு நடந்து வரும்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், ராஜா, கர்ணன், தனபாலன்-வேலுமணி (Junior Judge) ஆகியோர் கிரானைட், தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது ஏன்?
  • madurai-lawyers-rally-1தமிழக மக்களின் வேர்வை சிந்திய வரிப்பணம் ரூ 22,000 கோடியைக் கொள்ளையடித்தது பன்னாட்டு நோக்கியா கம்பெனி. எட்டப்பன்போல் ஸ்டே கொடுத்து, ஓடிப்போக உதவி செய்கிறார் நீதிபதி பி.ராஜேந்திரன். இது தேசத் துரோக குற்றமல்லவா?
  • உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் என்னாயிற்று?
  • நீதிபதி கர்ணன் மீது கொடுத்த லஞ்சப் புகார்களை உண்மையென ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம்- கர்ணன் பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்துவார் என்பதால்தானே?
  • சல்மான்கான் போல சாமானிய மக்களுக்கு உடனடி நீதி கிடைக்குமா?
  • அமித்சா வழக்கில் தீர்ப்புச் சொல்லி – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநர் பதவி பெறுவது சரியா?
  • சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் நீதிபதிகளின் உறவினர்கள், சாதிக்காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பது நீதியானதா?
  • வழக்கறிஞர்களுக்கு அடிக்கடி நேர்மையை உபதேசிக்கும் நீதிபதி பி.என்.பிரகாசு அவர்கள் கொள்ளையர்கள் வைகுண்டராஜன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமின் வழங்கியது மனுநீதிப்படியா?
  • நீதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களிடம் அத்துமீறல் செய்த நீதிபதி டாக்டர் தமிழ்வாணன் மீதான நடவடிக்கை என்ன?
  • கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி வழங்கத் தகுதியானவர்களா?
  • சட்டத்தை விட, நியாயத்தை அதிகம் பேசும் நீதிபதி இராமசுப்பிரமணியன் அவர்கள் நீதித்துறையை சீரழித்த புரோக்கர் வக்கீல் சங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதன் காரணம் என்ன?
  • ஹெல்மெட்டை மக்கள் மீது திணிக்கும் நீதிமன்றம் டாஸ்மாக்கை மூட மறுப்பது சரியா?
  • நீதித்துறை மாண்பைக் கெடுப்பது – நீதிபதிகளின் ஊழல்- பாலியல் குற்றங்கள்-அரசு ஆதரவு தீர்ப்புகளா? இல்லை வழக்கறிஞர் போராட்டங்களா?
  • நீதித்துறை ஊழல் தொடர்பாக என்றாவது FULL COURT-ல் விவாதித்தது உண்டா?
  • நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தால் நீதிபதிகள் பயப்படுவதேன்?

பாராளுமன்றமே!

  • சென்னை உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைத்திடு!

பொதுமக்களே!

  • நீதிபதிகளின் ஊழல்களைக் கேள்வி கேளுங்கள்! போராடுங்கள்!

———————————————————————————————————————————

அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு
ஊழல் நீதிபதிகள் மீதான புகார் தெரிவிக்க
மதுரை வழக்கறிஞர் சங்கம் தொலைபேசி எண் : 0452- 2537120

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

PRESS RELEASE

ADVOCATE BAR ASSOCIATIONS, TAMILNADU

SPEAK UP AGAINST CORRUPTION IN INDIAN JUDICIARY 

More than one thousand advocates across Tamil Nadu have jointly conducted Procession and Demonstration against Corruption in Indian Judiciary on 10-09-2015.

For the first time in the history of Indian Judiciary, All Tamil Nadu Advocates Associations have come together and conducted this historical procession and demonstration against the widespread corruption in our Judiciary particularly in the Madras High Court and subordinate courts in Tamil Nadu. Presently Indian Judiciary is in the throes of its worst ever morality crisis due to bribe received by Judges. Corruption has to be uprooted from the judiciary.

  • The issue is intermittently debated in the last five years when former Kolkata High Court judge Soumitra Sen became the first judge in the country to be impeached by the Rajya Sabha for misappropriation of funds in 2011.
  • P.D. Dinakaran, the former Chief Justice of the Sikkim High Court, had to resign in July 2011 following graft allegations.
  • The next year, former Chief Justice of India K. G. Balakrishnan faced allegations that his family members had amassed wealth disproportionate to their known sources of income.
  • In 2003, the CBI arrested Shamit Mukherjee, a former Delhi High Court judge, for his alleged involvement in a land scam.

A Judiciary which considers the rule of law a part of its basic structure must abandon the culture of corruption. Judiciary is one of the institutions of most corrupt practices hiding under the veil of secrecy and provision of contempt of court. For further positive reforms there is need of feedback and pointing out of problems but Provision of contempt of court and attitude of judiciary to avoid public scrutiny and being away from the transparency which restrict the criticism of errors, malpractices and loopholes in judiciary, which are truly against the spirit of democracy.

Justice Markandey Katju, retired judge of the Supreme Court made serious allegations against the Chief Justice of Supreme Court Mr.H.L.Dhattu and a judge of the Madras High Court.

Judiciary failed to look into People’s grievance and no action taken against Government Officials for violating Court order. But a division bench of Justice S Tamilvanan and Justice C T Selvam issued contempt of court notices to Madurai Bar Association president A Dharmarajan and secretary A K Ramasamy, asking them to explain as to why action should not be initiated against them under the Contempt of Courts Act. The bench issued the notice taking suo motu note of reports it had received from poilce officers and high court officials about incidents during advocates’ agitation and boycott of court proceedings in the aftermath of a high court order making helmet compulsory for two-wheeler riders.  The Judges use the Suo Moto Contempt power for preventing Advocates to speak against the Order of Court among public. It is a judicial threat against the democracy system. Therefore all the Advocates Association will jointly fight against corruption and to save judiciary.

During the last two decades corruption has been growing in the Indian judiciary. A Former Chief Justice of India had to openly admit that 20% of the judges could be corrupt. In March 2010 a sitting Chief Justice of a Gujarat high court openly made a statement. The statement was published by the Times of India in its issue of 6th March 2010 with the headlines “In our judiciary, anybody can be bought, says Gujarat chief justice”. That India became a republic in 1950, when the people became sovereign. They got the right to constitute their institutions, the executive, the legislature and the judiciary, to serve them, who would be accountable to them. Before 1950, corruption was almost non existent in the High Courts. The Federal Court had in 1949 got Justice Shiv Prasad Sinha removed from the Allahabad High Court, merely on the finding that he had passed 2 judicial orders on extra judicial considerations. However appears that thereafter the judiciary has adopted the policy of sweeping all allegations of judicial corruption under the carpet in the belief that such allegations might tarnish the image of the judiciary. It does not realize that this policy has played a big role in increasing judicial corruption.

The Constitution of India prescribed removal by impeachment as the only way of removing judges who commit misconduct since it was believed at the time of the framing of the Constitution that misconduct by judges of the higher judiciary would be very rare. However those expectations have been belied as is apparent from the surfacing of a series of judicial scandals in the recent past. The case of Justice V. Ramaswami and subsequent attempts to impeach other judges has shown that this is an impractical and difficult process to deal with corrupt judges. The practical effect of this has been to instill a feeling of impunity among judges who feel that they cannot be touched even if they misconduct.

The corruption by judges is a cognizable offence. The Code of Criminal Procedure requires that First Information Report (FIR) has to be filed with respect to a cognizable offence and it is the statutory duty of the police to investigate the offence. The police have to collect evidence against the accused and charge-sheet him in a competent court. He would then be tried and punished by being sent to jail. The Supreme Court has however by violating this statutory provision in the CrPC given a direction in its Constitution bench judgment in the Veeraswamy case of 1991 that no FIR would be registered against any judge without the permission of the Chief Justice of India. In not a single case has any such permission ever been granted for the registration of an FIR against any judge after that judgment. So, the result of this direction has been that a total immunity has been given to corrupt judges against their prosecution. No wonder that judicial corruption has increased by leaps and bounds.

The honest judiciary enjoying public confidence is an imperative for the functioning of a democracy, and it is the duty of every right thinking person to strive to achieve this end. The level of corruption in judiciary is needed to be exposed in public domain for effective honest judicial system. It is the common perception that whenever such efforts are made by anyone, the judiciary tries to target them by the use of the power of contempt. It is the reputation of the judge which is his shield against any malicious and false allegations against him. He doesn’t need the power of contempt to protect his reputation and credibility.

Hence, we the advocates from Tamil Nadu strongly believes that a responsible citizen should be prepared to undergo any amount of suffering in the pursuit of the noble cause of fighting for a clean judiciary. Today we release the first list of CORRUPT JUDGES OF MADRAS HIGH COURT pertaining to the illegal mining cases. People must read the following judgments to know the corruption in judiciary.

1. JUSTICE T. RAJA – W.P.16716 & 19641 0f 2014

2. JUSTICE C.S.KARNAN –W.P.12862 of 2014

3. JUSTICE V.DHANAPALAN – W.A.1505 to 1521 0f 2014

4. JUSTICE C.T.SELVAM – Crl.O.P.19370 to 19374

Therefore we plead the Parliament to constitute a committee to enquire against the judges for impeachment proceedings and further we appeal to parliament to enact a separate law for enquire the corruptions of judges at earliest.

10.09.2015 MADURAI
For all bar associations
MADURAI BAR ASSOCIATION

Press Reports

[To view larger images click on them]

மதுவை ஒழிக்க முடியுமா ?

2

“82 லேர்ந்து 97 வரைக்கும் எனக்கே போதை ஊசி பழக்கம் இருந்தது. அப்ப நான் மாநில அளவிலான கால்பந்தாட்ட குழுவில் இருந்தேன். விளையாட்டில் கிடைத்த தோல்வி…. அப்புறம் மற்ற ஏமாற்றங்கள் என்னை போதையின் பக்கம் தள்ளி விட்டது. அப்புறம் 97-ல் ஒரு மறுவாழ்வு மையத்தோட தொடர்பு கிடைச்சது. ரெண்டு வருசம். அந்த நரகத்திலேர்ந்து வெளியே வந்தேன். அப்புறம் இதையே ஒரு சர்வீசா செய்யலாமேன்னு 99-ல் இருந்து செய்துகிட்டு வர்றேன்”

மதுவை ஒழிக்க முடியுமா?சென்னையில் மது அடிமை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

“இத்தனை வருச அனுபவத்தில் சொல்றேன். டாஸ்மாக்கை தடை செய்ய முடியாது. முடியாதுன்னு சொல்றதை விட கூடாதுன்னு சொல்றேன். வெற்றிகரமா மதுவை ஒழித்த ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தையாவது காட்டுங்க பார்க்கலாம்? நான் கூட பி.ஜே.பி காரன் தான். தோ நேத்து சென்னைல அவங்க டாஸ்மாக் முன்னால ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு கட்சிக்காரனா போயிருந்தேன். சுத்த முட்டாள்தனம் – வேறு என்னான்னு சொல்ல. குஜராத்லயே மதுவை ஒழிக்க முடியலை. குஜராத்ல எந்த ஏரியாவா இருந்தாலும் சரி, போன் போட்டா வீட்டுக்கே கொண்டாந்து சரக்கு சப்ளை பண்றான். நீங்க தமிழ்நாட்டில் தடுப்பது பத்தி பேசறீங்க”

“சார், மனுஷன் சந்தோசத்தை அனுபவிக்கப் பிறந்தவன். சந்தோசங்களைத் தேடித் தேடி அனுபவிக்கணும் அப்படிங்கற உந்துதல் அவனோட மரபணுவிலேயே இருக்கக் கூடிய ஒரு விசயம். எங்க புள்ளிவிவரப்படி தண்ணியடிக்கிறதுல நூத்துக்கு 20 பேரு அதுக்கு அடிமையாகறான். அதுக்காக மத்த எண்பது பேரோட சந்தோசத்தை தடுக்கணுமா? உலகத்திலேயே மற்ற வியாதிகளை விட நீரிழிவு நோயால தான் அதிக பேரு சாவறான். இந்தியா தான் உலக சர்க்கரை வியாதியின் தலைநகரம் – அதுக்காக ஊர்ல இருக்கிற சர்க்கரை ஆலைகளை மூடிடலாமா?”

“சார், இப்ப பள்ளிக்கூட பிள்ளைங்க கூட குடிக்கிறாங்களே?” இடைமறித்து கேட்டோம்.

“குடிக்கலைன்னா என்னா செய்திருப்பான்? மனவுளைச்சல்ல தற்கொலை செய்திருப்பான். உங்களுக்கு அது சந்தோசமா? 1920களிலே அமெரிக்காவில் மதுவிலக்கு கொள்கை அமுல்படுத்த முயற்சி செய்து மண்ணைக் கவ்வியது. அங்கேயே கள்ளச்சாராயம் ஆறாக ஓடியதை அடுத்து அரசாங்கமே பின் வாங்கியது. மது குடிப்பது என்பது மனிதனின் உயிரியல் கூறோடு சம்பந்தப்பட்ட ஒன்று – இதுக்கு ஒரு வரலாற்று மரபும், தொடர்ச்சியும் உண்டு. நாம் அதிகபட்சம் இந்த பழக்கத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது பற்றி சொல்லிக் கொடுக்கலாம்; அவ்வளவு தான். அதுக்கு மேலே ஒண்ணும் முடியாது.”

மது அடிமைகளிடம் பல்லாண்டுகள் வேலை செய்து வருவதாக சொல்லிக் கொண்ட அவர் தொடர்ந்து மதுவிலக்கின் சாத்தியமின்மை குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். மது விலக்கு சாத்தியமில்லை என்பதை முன்வைத்துப் பேசும் பின்நவீனத்துவ அறிஞர் பெருமக்கள் மற்றும் முதலாளித்துவ சந்தை நிபுணர்களின் வாதமும் இதுதான். கூடுதலாக, சாராய வியாபாரத்தில் அரசுக்குக் கிடைகும் வருவாயை சுட்டிக் காட்டுவோரும் உண்டு.

மனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்தவன் : எது மகிழ்ச்சி?

மதுவை ஒழிக்க முடியுமா?சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி போட்ட கோணல் கணக்கால் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி. ரேசனில் துவரம் பருப்பு தீருவதற்கு முன் வரிசையில் இடம் கிடைத்தால் ஏழைத் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி. சாலையை அடைத்து வைக்கப்படும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர் அம்மாவின் பார்வையில் பட்டால் அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி. அந்த பேனரின் பெயரில் காசை பிடுங்காமல் இருந்தால் வணிகர்களுக்கு மகிழ்ச்சி.

பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது நடுத்தர வர்க்கப் பெற்றோருக்கு மகிழ்ச்சி – அதனால் கிடைக்கப் போகும் வசூல் தொகையின் பிரமாண்டம் கல்வி வள்ளல்களுக்கு மகிழ்ச்சி. காலச் சக்கரத்தைப் பின்னோக்கித் திருப்பி கற்காலத்திற்கு சமூகத்தை அழைத்துச் செல்லும் கருத்துக்கள் இந்துத்துவ கும்பலுக்கு மகிழ்ச்சி – காலத்தை முன்னே தள்ளி புதியதொரு எதிர்காலத்தை மக்களே படைக்க அவர்களைப் போராடத் தூண்டும் கருத்துக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு மகிழ்ச்சி.

மனிதன் மகிழ்ச்சியை, இன்பத்தைத் தேடும் இயல்பினன் என்பது எந்தச் சார்புமின்றி எல்லோருக்கும் பொதுவான ஒன்றேயானது அல்ல. ஆளும் வர்க்கங்களின் மகிழ்ச்சி என்பது ஆளப்படும் வர்க்கங்களின் துன்பம். ஒரு ரூபாய்க்கு ஒரு சதுர மீட்டர் நிலம் என்ற கணக்கில் குஜராத் மாநில அரசு அதானி குழுமத்திற்கு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அள்ளிக் கொடுத்த நடவடிக்கை கௌதம் அதானிக்கு மகிழ்ச்சியையும், அந்த நிலத்தையே நம்பி வாழ்ந்த விவசாயிகளுக்கு துன்பத்தையும் ஒரே நேரத்தில் வழங்கியது.

சாராய போதை யாருக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியும்? ஒரு மனிதனின் சமூக செயல்பாட்டில் இயல்பாக எழும் உணர்ச்சிகளைத் தாண்டி, உடலின் நரம்பு மண்டலங்களைத் தாக்கி இலகுவாக்கும் போதை வஸ்துக்களை ‘மகிழ்ச்சிக்காக’ நாடுவது ஒரு குறுக்கு வழி. சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் சமூக சிக்கல்களில் இருந்து ஒரு தற்காலிக தப்பித்தலை சாராய போதை வழங்குகிறது.

வேறு ஒரு கோணத்திலிருந்து இதையே தான் மத நம்பிக்கையும் செய்கிறது. தம்மைத் தாக்கும் பிரச்சினைகளை நேர்கொண்டு சந்திப்பதை விடுத்து மக்களை ’ஆண்டவனின்’ சந்நிதானங்களுக்கு வழிநடத்திச் செல்கிறது.

சாராய வரலாறு : மக்களின் வரலாறா?

மதுவை ஒழிக்க முடியுமா?குடியின் வரலாறு பற்றி இருபத்தியோராம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ ரசனைக்காரர்கள் அளிக்கும் சித்திரம் என்பது இவ்வாறானதாக உள்ளது : ஆதி காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான். மனித சமூகத்தின் குடிப்பழக்கம் பண்டைய இலக்கியங்களிலும், அகழ்வாய்வுத் தடயங்களிலும் ஆதாரங்களாக இரைந்து கிடக்கின்றன. குடிக்கு எதிரான பிரச்சாரம் என்பது மனித சமூகத்தின் இயல்புக்கே எதிரானது.

என்.ஜி.ஓ.க்கள் முதல் பின்நவீனத்துவ ’அறிவுஜீவிகள்’ வரையிலானவர்கள் அளிக்கும் இந்த சாமர்த்தியமான விளக்கம் அடிப்படையில் உண்மையல்ல. நிலநடுக்கோட்டிற்கு வட கோடியில் அமைந்துள்ள பகுதிகளின் மக்களுக்கு குடி என்பது குளிருக்கு எதிரான கவசங்களில் ஒன்று. கேளிக்கை அம்சம் முக்கியமல்ல.

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலோ மன்னர்களின் அந்தப்புரங்களே சாராய நதியின் ஊற்றுமூலமாக விளங்கியுள்ளது. மக்களைப் பொறுத்தவரை நிலபிரபுத்துவ காலகட்டத்தின் ஒடுக்குதலிலும் சுரண்டலிலும் சிக்குண்டு கிடந்தனர். பிழைத்துக் கிடப்பதே போராட்டமான அந்த காலப் பகுதியில் குடிப்பதும், கேளிக்கைகளும் மக்களுக்கு சாத்தியமாகியிருக்குமா? குடிப்பதும், குடித்துக் களிப்பதும், இசையில் மூழ்கித் திளைப்பதும், நடனம் போன்ற கலைகளின் புரவலர்களாக இருப்பதுமான நடவடிக்கைகள் அன்றைய சமூகத்தின் மேல் வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது.

சாதாரண உழைக்கும் மக்கள் தரங்குறைந்த, போதை குறைந்த மதுவகைகளைக் குடித்தாலும், அது வர்க்க ரீதியான ஒடுக்குமுறையின் அவலங்களை, குறிப்பாக கடுமுழைப்பின் வலிகளைக் கடந்து போகும் அத்தியாவசியமாகவும் இருந்திருக்கிறது.

உழைக்கும் மக்களை மலிவான சாராய போதையில் ஆழ்த்தி வைப்பது ஆட்சியாளர்களுக்கு எந்தளவுக்கு நன்மை பயக்கும் என்பதை அக்குவேறு ஆணி வேறாக விளக்கியுள்ளான், சாணக்கியன். மதுவின் கேளிக்கைகள் மேட்டுக் குடியினருக்கானதாகவும், அதன் தீமைகள் மக்களுக்கானதாகவுமே அன்றும் இன்றும் தொடருகிறது.

அளவோடு குடிக்கலாமா?

மதுவை ஒழிக்க முடியுமா?பூரண மதுவிலக்கிற்கு எதிராகப் பேசும் என்.ஜி.ஓ.க்கள், மது அருந்துவது தனிநபர் உரிமை சம்பந்தப்பட்டதாகவும், ஒருவன் அளவோடு குடிப்பது என்று தீர்மானித்தால், அவரது தனிப்பட்ட மகிழ்ச்சியில் யாரும் தலையிடக் கூடாது என்றும் தமது வாதங்களை முன்வைக்கின்றனர். மதுவின் அளவு அதிகரித்து, சாராய போதை இல்லாமல் எந்தக் வேலையும் ஓடாது என்கிற நிலை ஒரு ‘நோய்’ என்றும், அந்த நிலையை அடையாத வரை நாம் மதுப்பழக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் சொல்கின்றனர்.

இது சாத்தியமா?

தொண்டையில் இறங்கும் சாராயம் இரைப்பையை அடைந்த நொடியில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சடாரென்று உயர்த்துகிறது. உயரும் சர்க்கரை, உடலின் ஆற்றலை மூளையின் கட்டுப்படுத்தும் சக்திக்கு மீறி உயர்த்துகிறது. இதன் விளைவாக ஒருபக்கம் உடலின் அசைவுகளை மூளை கட்டுப்படுத்தும் திறனை தற்காலிகமாக இழக்கும் அதே நேரம், இன்னொரு பக்கம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி மூளையின் தர்க்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலைக் குலைக்கிறது. சுருக்கமாக நிதானத்தை தவற வைக்கிறது என்று சொல்லலாம்.

மூளையின் தர்க்க அறிவு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் எது நிறுத்திக் கொள்ளும் அளவு என்று தீர்மானிப்பதே ஒரு மனிதனால் இயலாத ஒன்று. இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து சாராயம் உட்கொள்ளும் ஒருவரின் உடல் போதையின் தாக்குதலை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகிறது. முதல் நாளில் ஒரு ’கட்டிங்’ அடித்தால் ஏற்படும் அதே அளவு போதை, சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பின் பல ’கட்டிங்குகளை’க் கோரும்.

மதுவுக்கு அடிமையான பலரும் ”நான் ஒரு தலை சிறந்த சாராய அடிமை ஆகப் போகிறேன்” என்கிற லட்சியத்தோடு துவங்குவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலோ, கண நேர சபலமோ, விரும்பிய நடிகரின் வெள்ளித்திரை சாராய சாகசம் ஏற்படுத்திய குறுகுறுப்போ தான் தற்செயலான தூண்டுதாக அமைந்து சாராய போத்தலின் முன்னே எதிர்கால மது அடிமையை அமர வைக்கிறது. விளையாட்டாக குடிக்கப் பழகிய ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிக்கு குடி, தோல்விக்கு குடி, மகிழ்ச்சிக்கு குடி, மனவருத்தத்திற்கு குடி என்கிற பழக்கத்திற்கு வந்து சேருகிறார். ஒரு கட்டத்திற்குப் பின் குடிப்பதற்காகவே காரணங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின் எந்தக் காரணங்களும் இன்றி குடிக்கும் அடிமை நிலையை அடைகிறார்.

இதன் பொருளாதாய விளைவு என்ன?

மதுவை ஒழிக்க முடியுமா?2010-ல் 12 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் விற்பனை தற்போது 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான டாஸ்மாக் விற்பனை இலக்கை 30 ஆயிரம் கோடியாக நிர்ணயித்துள்ளது அரசு. பத்தாண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் குடிப்பழக்கம் என்பது அருவருக்கத்தக்கதாய் இருந்தது மாறி, தற்போது இயல்பான ஒன்றாகியிருக்கிறது. இளைஞர்கள் குடித்த காலம் போய், தற்போது பள்ளி மாணவர்கள் மாணவிகள் வரை குடி இயல்பானதாகியிருக்கிறது.

மது அடிமைகள் மறுவாழ்வு : என்.ஜி.ஓ.க்களின் அட்சய பாத்திரம்

கட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்ற என்.ஜி.ஓ நபருடனான நீண்ட உரையாடல் அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் காரணமாக நிறைவு பெற்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

“சார், பொதுவா நாங்க ஒரு பெட்டுக்கு மாசம் பதினாறாயிரம் சார்ஜ் பண்றோம். நீங்க வேற ரெக்கமென்டேசன்ல வந்திருக்கீங்க…. சரி, நீங்க பத்தாயிரம் கட்டிருங்க. அப்புறம் முக்கியமா, நீங்க பத்தாயிரம் தான் கட்டிருக்கீங்கன்னு வேற யார்ட்டயும் சொல்லிக்கிடாதீங்க. சரியா?” என்று செல்பேசி இணைப்பைத் துண்டித்தவர், நம்மிடம் திரும்பினார்.

“சார், போன ஆறு மாசமா ரொம்ப நெருக்கடியா போகுதுங்க. நான் இங்க ஒரு போதை மறுவாழ்வு மையம் நடத்திட்டு வர்றேன். மொத்தம் பத்து படுக்கைகள். இப்ப கொஞ்சம் போட்டி அதிகமாயிடுச்சா.. அதனால, வர்ற பேசண்டுங்க ரொம்ப பேரம் பேசறாங்க. ஒரு பெட்டுக்கு ஒரு மாத சார்ஜ் பத்தாயிரம் தான் போகுது இப்ப.. வட்டி கட்டி, சம்பளம் குடுத்து, பேசண்டுகளுக்கு ஒரு மாசம் சோறு போட்டு… கடைசில நமக்கு பெட்டுக்கு ரெண்டு மூணாயிரம் தேர்றதே பெரும்பாடா இருக்கு. முப்பதாயிரத்தை வச்சிகிட்டு சென்னைல என்னா செய்ய முடியும் சொல்லுங்க?”

“மத்தபடி செலவுக்கு எப்படி சமாளிக்குறீங்க?”

“முன்னெயெல்லம் நன்கொடை வரும்… இப்ப அரசு கட்டுப்பாடு அதிகமாயிட்டதாலே அதுவும் குறைஞ்சு போச்சு.. மத்தபடி எங்கனா ரோட்ரி க்ளப் லயன்ஸ் க்ளப்லேர்ந்து செமினார், வொர்க் சாப்னு கூப்டுவாங்க.. அதுல கொஞ்சம் தேறுது. ஏதோ கைய கடிக்காம ஓட்டிகிட்டு இருக்கேன்…”

“இந்த நிலைமை அப்படியே போயி மறுவாழ்வு மையம் மூடும் நிலை வந்தா என்ன செய்வீங்க?”

“நமக்கெல்லாம் அங்கங்க இருக்குற தொடர்புதான் முதலீடே. ஆயிரத்தெட்டு திட்டங்கள் இருக்கு”

போதை மறுவாழ்வு மையம் இன்றைய தேதியில் என்.ஜி.ஓ.க்களின் தொழில் வாய்ப்புகளில் ஒன்றாக சக்கை போடு போட்டு வருகிறது. நாங்கள் சந்தித்தவரை விட பலமடங்கு பெரிய தொடர்பு வலைப்பின்னலைக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள் பலர் சென்னையில் லாபகரமாக ‘மது அடிமை மீட்பு’ வியாபாரத்தில் ஈட்டுபட்டு வருகிறார்கள்.

பத்துக்கு பத்து அளவில் நான்கு அறைகளும், அரசு மட்டத்தில் நல்ல தொடர்புகளும் இருந்தால் போதும் – போதிய பயிற்சிகளோ, அரசின் அனுமதியோ, தணிக்கையோ இன்றி யார் வேண்டுமானாலும் போதை மறுவாழ்வு மையம் துவங்க முடியும். சென்னையில் மட்டும் சில நூறு ‘மறுவாழ்வு’ மையங்கள் செயல்பட்டு வந்தாலும், இவை எதுவும் அரசின் கண்காணிப்பிற்கோ, தணிக்கைக்கோ உட்படுத்தப்படுவது இல்லை.

சென்னையில் நடத்தப்படும் பெரும்பாலான ’மறுவாழ்வு’ மையங்கள் சேது படத்தில் காட்டப்படும் பாண்டி மடங்களைப் போல் தான் நடத்தப்படுகின்றன. போதை ‘நோயாளிகளின்’ குடும்பத்தாரை அணுகும் என்.ஜி.ஓ ஆள்பிடி ஏஜெண்டுகள், பாதிக்கப்பட்டவரை அள்ளிச்சென்று தாம் நடத்தும் மறுவாழ்வுக் கொட்டகையில் அடைக்கின்றனர். தொடர்ந்து பல வாரங்கள் உளவியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள், ஒருகட்டத்தில் மது போதையை தாம் மறந்து விட்டதாக நடிப்பதன் மூலம் மட்டுமே தப்பிக்கிறார்கள்.

இவ்வாறு மனிதத்தன்மையற்ற முறையில் மறுவாழ்வு மையத்தால் நடத்தப்பட்ட சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இருவர், 2010 மே மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். நீதி மன்றம் அரசு எந்திரத்தை மயிலறகால் கடுமையாக அடித்ததைத் தொடர்ந்து அரசு எந்திரம் மறுவாழ்வு மையங்களின் மேல் எடுத்த கடுமையான ’நடவடிக்கை’யின் கதி என்னவாயிற்று என்பதைப் பற்றிய உருப்படியான தகவல் ஏதும் இல்லை.

மறுவாழ்வு மையங்களில் இருந்து தப்பிக்கும் மது அடிமைகள் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. எனினும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள என்.ஜி.ஓ பெருச்சாளிகள் தமது வருமான வாய்ப்பைப் பாதிக்காதவாறு மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை சமீப காலத்தில் முடுக்கி விட்டுள்ளனர்.

என்ன தான் தீர்வு?

டாஸ்மாக் சாராயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஒரு தலைமுறையையே சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் மெல்ல மெல்ல மாற்றி வருகிறது ’அம்மா’தலைமையிலான அரசு. ஜெயா 2003-ல் பற்ற வைத்த நெருப்பிற்கு பின்னர் வந்த கருணாநிதி எண்ணெய் வார்த்துச் சென்றுள்ளார். மீண்டும் பதவிக்கு வந்த ஜெயா ஊதி ஊதி பெரும் காட்டுத் தீயாக வளர்த்துள்ளார்.

மொத்த சமூகத்தையும் துருவாக அரித்துத் தின்னும் சாராயத்தை அரசே தடுக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இன்னும் குடி வாடிக்கையாளர்களாக எந்தப் பிரிவு மக்களைச் சேர்க்கலாம், புதிதாக என்ன பிராண்டு சாராயத்தை இறக்கலாம், அடுத்த ஆண்டு சாராய வருமானத்திற்கு எதை இலக்காக வைக்கலாம் என்று தீர்மானிப்பதில் அரசு எந்திரம் மொத்தமும் தீவிரமாக சிந்தித்து வருகிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

அரசிடம் கோரிக்கை வைத்து சோர்ந்து போய், கடைசியில் தாமே நேரடியாக களமிறங்கி தங்கள் கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடையைத் தகர்த்தெறிந்து அழிவிடைதாங்கி கிராம மக்கள் நம்முன் ஒரு முன்னுதாரணத்தை படைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அழிவிடைதாங்கியாக மாறுவது ஒன்று மட்டும் தான் நம்முன் உள்ள சாத்தியமான, சரியான தீர்வு.

– தமிழரசன்