40 ஆண்டுகளாக காவிரி நீர் சிக்கலைத் தீர்க்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகளையும் மக்களையும் வஞ்சித்து வந்த ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் தற்போது இம் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிலத்தடி நீரை நம்பி நடக்கும் கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் ஒழித்துக் கட்ட முனைகின்றன.
சுமார் 667 சதுர கி.மீ பரப்பளவில் விரிந்து பரவியுள்ள நிலக்கரி வளத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில் அதன் முதல் கட்டமாக அதற்கு மேல் படிந்துள்ள மீத்தேன் வாயுவை எடுக்கவும் வணிக நோக்கில் மின் திட்டங்களை இயக்கவும் ஒப்பந்தம் போட்டு அனுமதித்துள்ளது அரசு. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலத்தைப் பறித்து அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து நாடோடிகளாக விரட்டியடிக்கும் இந்த திட்டம் குறித்து பாதிப்புக்குள்ளாகவுள்ள மக்களிடம் கருத்து கூட கேட்காமல், அவர்களின் விருப்பம் மற்றும் முடிவுக்கு எதிராக இந்த திட்டத்தை மக்கள் மீது திணித்துள்ளன அதிகார வர்க்கமும் ஆட்சிக்கு வந்த கட்சிகளும்.
தற்போது நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து ஓட்டுக் கட்சிகளுமே இந்த திட்டத்தை எதிர்ப்பதாக நாடகமாடினாலும் ஓட்டுப் பொறுக்கிய பின் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர்.
மறுபுறம், திருவாரூர் மாவட்ட ஆட்சியரோ கிராமசபைகள் இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடுவதைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல் வாய்வழி மிரட்டல் விடுத்துள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளின் தாசனாக செயல்பட்டுள்ளார்.
மக்களுக்கு துளியும் பொறுப்பாக நடந்து கொள்ளாத இந்த அதிகார வர்க்கத்தின் ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் உண்மையான ஜனநாயகத்துக்கான, மாற்று மக்கள் அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் அதற்கான போர்க்குணமிக்க போராட்ட முறைகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் மக்களிடம் உணர்த்தும் வகையில் இந்த போராட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
இந்த பிரச்சாரத்தை கொண்டு சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மற்றும் இளைஞர்களின் ஊக்கமான பங்கேற்பை காண முடிந்த்து.
அந்த வகையில் கிழக்கிந்திய கம்பெனியை விரட்டிய மக்கள் இந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தையும் விரட்டியடிப்பார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.
மக்களுக்கு சொந்தமான கனிச்செல்வங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கானதாக மாற்றும் அரசின் தனியாரமய-தாராளமள-உலகமய கொள்கைக்கு எதிரான நியாயமான மக்கள் போராட்டம் வெல்லும்.
நடக்கவுள்ள முற்றுகைப் போராட்டம் இந்த வெற்றியை முன்னறிவிக்கும்.
இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை மாவட்டங்களிலிருந்து கலந்து கொள்கின்றனர். நாட்டுப் பற்று கொண்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அறைகூவி அழைக்கிறோம்.
மே நாளில் கொள்ளைக்கார GEECL ( கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட்) அலுவல முற்றுகைப் போராட்டம்!
காலை 10.30 மணிக்கு தஞ்சை இரயிலடியிலிருந்து பேரணி.
தலைமை: தோழர். மாரிமுத்து, வட்டார அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை வட்டம்.
சிறப்புரை தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
மே 1, மீத்தேன் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கான முழக்கங்கள்:
டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம்!
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
துலங்கும் ஆயிரம் சொல்லெடுத்தாலும்
தொழிலாளி என்பதைப் போல்
விளங்கும் பொருள் தருவன வேறில்லை!
சொல்லணி, பொருளணி
ஏகதேச உருவக அணி… இன்னும்
எத்தனை அணியிருந்தாலும்
உழைக்கும் வர்க்கமே உன் முன்னணிபோல்
உலகை கவிதையாக்கும் ஓர் அணியில்லை!
உரிமைகள் மறந்ததால்
பெருமைகள் மறந்தாய்,
தொழிலாளியே! புவி ஆளத்தான்
நீயே பிறந்தாய்…
கல்லாய் கிடந்த உலகம்
சிலையாய் மிளிர்ந்தது உன்னால்,
புல்லாய் கிடந்த பூமி
நெல்லாய் நிறைந்தது உன்னால்.
இயந்திரங்கள் புது உலகு படைத்தன
உனது இயக்கு விசையால்,
இயற்கைக்கும் சிறகு முளைத்தன
உன் உழைப்பு தசையால்.
நதிகளில் கலந்த
உன் உதிரம்
அணைக்கட்டுகளாய் இறுகின.
ஆழ்கடல் துடித்த உனது இதயம்
முத்துக்களாய் சிதறின.
மலைகளில் உரிந்த
உன் நரம்புகள்
தேயிலை இலைகளில் பரவின.
அலைகளில் தெறித்த
வியர்வைகள்
மீன்களின் செவுள்களில் சிவந்தன.
நெடிதுயிர்ந்த மலைகளின் புதுவழி
உன் கண்களில் அடங்கின!
விரிந்த கானகத்தின் விளை பயன்
உனது கைகளில் தொடங்கின.
உலகின் ஒவ்வொரு அழகும்
உழைப்பாளியே உன்னிடம் மயங்கின!
முதலில்
நாம் ஏதோ என்ற
எண்ணம் தகர்,
தாரணிக்கே நீதான் நிகர்!
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின்
நிறங்கள்
உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன.
சில்லிடும் காற்றின் இனிமை
உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன.
இயற்கையின் உதடுகள்
விரும்பும் இன்சொல்
தொழிலாளி!
இருப்பும் பெருமையும்
இப்படியிருக்க,
நம்மை ஏறி மிதிப்பதா முதலாளி?
தொழிலாளி தயவில்தான்
முதலாளி – தோழா
இதைத் தெரிந்தவன்தான் அறிவாளி!
முதலாளிக்கேது மூலதனம்
எல்லாமே
நம் உழைப்பு கொடுத்த சீதனம்,
சிப்ட்டு, சிப்ட்டாய்
நீ சிந்திய ரத்தம்தான்
கட்டு கட்டாய்
அவன் கைகளில் நோட்டு!
ஓராயிரம் கோடி மூலதனம்
முதலாளியிடமிருந்தால் என்ன?
உழைப்பாளர் கை படாவிட்டால்
அது அனாதைப் பிணம்!
ஒரே நாள்
உலகின் தொழிலாளர்
உழைப்பை மறுத்தால்
பங்கு சந்தை நாறிப் போகும்,
ஒரு வாரம்
துப்புரவு தொழிலாளி
தொழிலை மறுத்தால்
ஊரே நாறிப் போகும்!
தொழிலாளிதான் உலகின் தேவை!
முதலாளி
அவன் வளர்க்கும் நாய்க்கே சுமை.
எப்பேற்பட்ட இயக்கம் நீ
தொழிலாளியே!
அதிகாலை முதல் அந்திசாயும் வரை
சுரண்டிய முதலாளித்துவத்தை
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே
பணியவைத்த மே நாளின் மேன்மை நீ!
பிலடெல்பியா, நியூயார்க், சிகாகோ
என அமெரிக்க முதலாளித்துவத்தின்
ஆணவத்தை
நடுத்தெருவில் மிதித்தவன் நீ,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு
ஜெர்மன்… எங்கும்
முதலாளித்துவத்தின் மென்னியைப் பிடித்து
“எட்டு மணிநேர வேலையை”
வென்றெடுத்தவன் நீ,
அமெரிக்க ஹே சந்தையில் எரிந்து…
அய்ரோப்பிய வீதிகளில் சிதைந்து…
இந்திய ஆலைகளில் புகைந்து…
தமிழகத் தெருக்களில் அதிர்ந்து…
தொழிலாளி வர்க்க உரிமைகளை
பெற்றுத்தந்த பரம்பரையின்
நீட்சியடா நீ!
இதைப் பற்றிக்கொள்ள
பலமிழந்து பரிதவிப்பதோ நீ?
வர்க்க உணர்வுதான்
தொழிலாளியை வாழவைக்கும்,
போராட்ட உணர்வுதான்
துயரத்திலிருந்து மீள வைக்கும்.
கட்டிடத் தொழிலாளி
கம்பளித் தொழிலாளி
ரொட்டி தயாரிப்பு தொழிலாளி
அனைவரும் ஒன்று சேர்ந்ததால்
அன்று மே நாள் சிலிர்த்தது!
நீ ஹீண்டாய் தொழிலாளி
நான் நோக்கியா தொழிலாளி
நீ காண்ட்ராக்ட் தொழிலாளி
நான் கம்பெனித் தொழிலாளி
என பிரிந்து நிற்பதால்
சா நாள் வதைக்குது இன்று.
கட்டிடத் தொழிலாளி கையில்
திமிசு,
கணிணித் தொழிலாளி கையில்
மவுசு,
இதிலென்ன நான் பெரிசு, நீ பெரிசு
எம்.என்.சி. பவுசு,
கரணையோ, கணிணியோ
உழைப்பின் சுரணை ஒன்றானால்
முதலாளித்துவம் காட்டுமா ரவுசு?
மூலதனத்தின் மீது
வெறுப்பை உமிழ்ந்தான்
முன்னோடித் தொழிலாளி,
வளர்ச்சி என்று வாயைப் பிளந்தவன்
இதோ நோக்கியா வாசலிலேயே காலி!
மூடநம்பிக்கையினும் மோசமானது
முதலாளித்துவ நம்பிக்கை!
மூலதனம் நம்மை வாழவிடாது,
வேலை, கம்பெனி எதுவானால் என்ன
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றுபடு!
சொந்த இனமாயினும்
சுரண்டும் முதலாளி பகைவனே,
எந்த இனமாயினும்
உழைக்கும் வர்க்கம் தோழனே!
பிளவுபடுத்தும் சாதிகளை
தூர ஓட்டு!
இனி பேச்சுக்கே இடமில்லை
உழைக்கும் வர்க்க அதிகாரத்தை
நிலை நாட்டு!
எல்லா பொருளையும் படைத்தவன் நீ
தொழிலாளியே!
எல்லோர்க்கும் பொருளை படைத்தவன் நீ
உனக்கான சிந்தனையை உருவாக்கு
வர்க்க உணர்வை கருவாக்கு!
இனி உழைப்பவர் வைத்ததே சட்டம்!
உழைப்பவர் உரைப்பதே நீதி!
உழைப்பவர் ஆளவே சகலமும்!
இதை மறுப்பவர்க்கெதிராய் கலகம்!
இதுதான் இனிவரும் உலகம்!
தோழா! பரம்பரை வர்க்க உணர்வை
பற்றிக் கொண்டு போராடு!
பன்னாட்டு கம்பெனி, பார்ப்பன சர்வாதிகாரத்தை
வெட்டி எறி வேரோடு!
இயற்கையே எதிர்பார்க்கும்
இனிய இயங்கியல் நீ,
உலகின் அழகிய விடியலனைத்தும்
உழைப்பாளியே!
உன் முகத்தில் விழிக்க துடிக்கின்றன…
உலகின் மெல்லிய பூக்களனைத்தும்
உனது படைப்பின் உணர்ச்சியை கேட்கின்றன…
மேலான உன் உழைப்பின்
பொது நலன் பார்த்தே
மேகங்கள் மார்பு சுரக்கின்றன…
மேதினி மாற்றும்
உன் போர்க்குணம் பார்க்கவே
காற்றின் இமைகள் திறக்கின்றன!
ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மோடி ‘அலை’ உண்மையில் காவி சாக்கடையின் கழிவு அலை என்பதை காலம் நிருபித்து வருகிறது. வட இந்தியாவுக்கே அதிகம் உள்ள பார்ப்பனிய நிலவுடமை கொடூரத்தின் விஷ நாக்குகள் பாஜக புண்ணியத்தில் தினவெடுத்து ஆடுகின்றன. அதிலும் முற்றும் துறந்ததாக மறைத்துக் கொள்ளும் சாமியார்கள் இதை நிர்வாணமாக ஒத்துக் கொள்கிறார்கள்.
பாபா ராம்தேவ் தனது கோணல் வாயைத் திறந்திருக்கிறார்.
அதன்படி பாபா ராம்தேவ் தனது கோணல் வாயைத் திறந்திருக்கிறார். “ராகுல் காந்தி தலித்துகளின் வீடுகளுக்கு இன்பச் சுற்றுலாவுக்கும் தேனிலவு கொண்டாடவும் தான் செல்கிறார். ஒருவேளை அவர் தலித் பெண் யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து பிரதமராக கூட ஆகியிருக்கலாம்” – மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் பாபா ராம்தேவ் கடந்த 25-ம் தேதி லக்னோவில் பேசும் போது இப்படி திமிராக பேசியுள்ளார்.
தேனிலவு எனும் வார்த்தையும், படிமங்களும் ஒரு சாமியார் பயலின் சிந்தனையில் எப்படி வர முடியும்? சாயி பாபா, ஜெயேந்திரன், நித்தி, ஆஸ்ரம் பாபு, போன்ற பாஜக ஆசி பெறும் பொறுக்கிகளே நாடறிந்த சாமியார்களாக வலம் வரும் போது ராம்தேவ் மட்டும் அமைதி காக்க முடியாதல்லவா?
அடுத்து சாதிய ‘கௌரவத்திற்கு’ குந்தகம் விளையும் வண்ணம் நடக்கும் தனது சொந்த சாதி உறவினர்களை, ஆதிக்க சாதி வெறியர்கள் இப்படித்தான் தலித்துக்களோடு சேர்த்து கேலி செய்வார்கள். தலித்துக்களின் சாதிகளைச் சொல்லி “என்ன அவன் மாதிரி உடையணிகிறாய், அந்த பெண்கள் மாதிரி அழகில்லாமல் இருக்கிறாய், உன் குழந்தை சேரிக் குழந்தை மாதிரியே இருக்கிறது” என்று தினுசு தினுசாக திமிரைக் காண்பிப்பார்கள். எனவே ராகுல் காந்தியை இளக்காரமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக பார்ப்பனியத்தின் அதே ஆதிக்க சாதி திமிரை இதிலும் கக்கியிருக்கிறார், ராம்தேவ்.
ஆக இது வாய்தவறியோ இல்லை உளறிக் கொட்டிய வார்த்தைகளோ அல்ல. தெளிவான பார்ப்பன கொழுப்பு. அதுவும் கேள்வி கூட கேட்கமுடியாது எனும் வட இந்திய பாலைவனத்தில் உறைந்திருக்கும் நூற்றாண்டுகள் கடந்த கொழுப்பு.
பிரிக்க முடியாத ராம்தேவ் – மோடி அரசியல்
ராம்தேவின் கருத்து வெளியானதைத் தொடர்ந்து நாடெங்கும் தலித் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பல்வேறு பகுதிகளில் ராம்தேவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் துவங்கின. வெவ்வேறு அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நீதிமன்றங்களில் ராம்தேவுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து வருகின்றன. தனது சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் தோல்வி மனப்பான்மையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மூன்றாம் அணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து புலம்பலை ஆரம்பித்திருந்த காங்கிரசு கட்சி, வந்த வாய்ப்பை தவற விடவில்லை. உடனடியாக உத்திரபிரதேச தேர்தல் ஆணையத்திடம் ராம்தேவுக்கு எதிரான புகாரை தட்டி விட்டிருக்கிறது. இதன் மூலம் இழந்து விட்ட தலித் வாக்கு வங்கியை கொஞ்சமாவது மீட்கலாம் என்ற நப்பாசையும் காரணம்.
தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்குத் தடை என்கிற அளவில் விவகாரம் இருந்த வரை அமைதியாக இருந்த ராம்தேவ், அதைத் தொடர்ந்து தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவானதையும், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் கமிஷனர் அம்மாநிலத்தில் ராம்தேவ் யோகா முகாம் நடத்த தடை செய்து உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்தும் தனது திமிரை மறைப்பதற்கு முயன்று வருகிறார்.
ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இப்படி இயல்பான திமிரில் பேசி மாட்டிக் கொள்ளும் போது கையாளும் அதே உத்தியான “எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டு விட்டது” என்பதையே ராம்தேவும் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அது தவறில்லை, இயல்பான பார்ப்பன வன்மம் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
இவ்வாறாக ஊரே அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கும் போது பாரதிய ஜனதா மட்டும் இதெல்லாம் ஒரு மேட்டரா என்பதாக கண்டு கொள்ளாமல் இருந்தது. பிறகு தலித் மக்களின் எதிரி எனும் உண்மை அதிகம் பேசப்படுமோ என்று பயந்த பாரதிய ஜனதா, இந்த சம்பவம் பற்றி கட்சியின் இசுலாமிய முகமூடியான ஷா நவாஸ் ஹுசைனை வைத்து வெளியிட்டது. அதாகப்பட்டது ராம்தேவ் ஒரு சாமியார் என்பதால் ஹனிமூன் (தேனிலவு) என்கிற ஆங்கில வார்த்தையை அவர் பயன்படுத்தியதை, அந்த சூழலுக்குப் பொருத்தி தான் அர்த்தம் கொள்ள வேண்டுமாம். கட்சிகளிடையேயான உறவை தேனிலவு என்று சொல்லும் அர்த்தத்தில் கூட அவர் சொல்லியிருக்கலாம் என்று இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
சொல்லப்பட்ட இடம், சூழல், பின்னணியிலேயே ஆதிக்க சாதித் திமிர் தெளிவாக இருக்கும் போது இது பொதுவாகச் சொல்லப்பட்ட உவமை என்று அதுவும் பாய் ஒருவரை நரித்தனமாக பேச வைத்து வெளியிட்டிருக்கிறது பாரதிய ஜனதா. அதோடு நில்லாமல், பாரதிய ஜனதாவில் தலித் அடையாளத்தோடு செயல்பட்டு வரும் உதித் ராஜ் என்கிற விபீஷணத் தலைவர் ஒருவரை விட்டு ராம்தேவ் சொல்லியதில் தவறு ஏதும் இல்லை என்றும் அறிவிக்கச் செய்திருக்கிறது.
ராம்தேவ் யோகா முகாம் நடத்த தடை செய்து உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பயந்து பின்வாங்கும் ராம்தேவ்.
இஸ்மாயில் என்கிற முசுலீம் பெயரைப் பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றே கோட்சேயின் அந்தச் செயலுக்கு பின் இருந்த அதே உத்திதான் இங்கும் தொழிற்படுகிறது. பார்ப்பனிய ஆதிக்க சாதி வன்மத்தின், தலித் விரோத கருத்துக்களை தலித்துகளாகவும் இசுலாமியர்களாகவும் அறியப்படும் தனது கட்சியின் முகமூடிகளைக் கொண்டே வெளியிடச் செய்துள்ளது பாரதிய ஜனதா. இதுவரை ராம்தேவின் பொறுக்கித்தனமான பேச்சுக்கு கேடி மோடியோ, இல்லை பாஜக தலைமையோ கண்டிக்கவில்லை என்பது எதிர்பார்த்ததுதான்.
பொதுவாக ஓட்டுக் கட்சிகள் எதிர்பார்க்கும் தலித் மக்களின் ஓட்டு வங்கியை விட பார்ப்பன ஆதிக்கம்தான் பெரிது என்று இந்துமதவெறியர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக வட இந்தியாவில் தலித்துக்களை விட ஆதிக்க சாதிகள்தான் இந்துமதவெறியர்களின் அரசியல் அடிப்படையாக இருக்கிறார்கள். அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது எனுமளவிலும் இந்த தலித் விரோதம் காவிக் கூட்டத்திற்கு தேவையாகத்தான் இருக்கிறது.
’தலித் மக்கள் மலம் அள்ளுவதை ஆத்ம சுத்தியோடு செய்தால் ஆன்ம விடுதலை பெறமுடியும்’ என்று பீயள்ளுவதை கர்மயோகமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலையில் கட்டிய மோடியின் சொந்தக் கருத்தும், தலித்துகளைப் பற்றி எத்தகையதாக இருக்கும் என்பதை தனியே விவரிக்கத் தேவையில்லை.
அவ்வகையில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கும்பல் தலித்துகளுக்கு விரோதமானவை என்பதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை – ஏனெனில், இந்துத்துவத்தின் ஆன்மாவான பார்ப்பனியம் தன் இயல்பிலேயே தலித்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் மட்டுமின்றி தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளும் அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது தான்.
ராம்தேவிடம் வெளிப்பட்ட கருத்துக்கள் என்பது தனிப்பட்ட ஒரு சாமியாரின் திமிரில் இருந்து எழுந்தது அல்ல. தமிழை நீச பாஷை என்று சிதம்பரம் கோயிலில் பூணூலை உருவிக் காட்டும் தீட்சிதனிடமும், கருவறைக்குள் நுழைந்தால் தீட்டு என்று சூத்திரர்களையும் கோயிலுக்குள் நுழைந்தாலே தீட்டு என்று பஞ்சமர்களையும் விலக்கி நிறுத்தியிருக்கும் பார்ப்பன இந்துத்துவத்தின் இயக்கு சக்தியே இந்த தீண்டாமை தான்.
தேர்தல் முடிவடையாத நிலையிலேயே கூட இந்தளவுக்கு பார்ப்பன மேலாதிக்கத் திமிரை வெளிப்படுத்த முடிகிறது என்றால், இவர்கள் வெற்றி பெற்றால் பார்ப்பனியத்தின் வன்கொடுமை, உழைக்கும் மக்கள் மீது எவ்வாறெல்லாம் ஏவிவிடப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ளவதோடு அந்த பாசிச ஒடுக்குமுறையை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும்.
ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.
ஓசூர் டி.வி.எஸ் ஆலையில் ஸ்தாபகர் தின விழா என்பது தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலை மறைக்கும் சதி! ஓசூர்-டி.வி.எஸ் ஆலையில் ஸ்தாபகர் விழாவில் கலந்து கொள்வது தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்!புறக்கணிப்போம்!
நாடளவில் உழைக்கும் மக்கள் மீது வகைவகையான அடக்குமுறைகள் செலுத்தப்படுகின்றன. தொழிற்துறையை பொருத்த வரை பல இடங்களில் பயிற்சி தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி என்ற பல பெயர்களில் நிரந்தரத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு விட்டது. தொழிலாளர்கள் பலரும் நிரந்தர வேலையை எதிர்ப்பார்ப்பதைவிட குறைந்த பட்சம் உயிர் வாழ்வதற்காகவாவது வேலை வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியுள்ளது. டிப்ளமோ, இஞ்ஜினியரிங், ஐடிஐ போன்ற படிப்புகளை முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி ஒசூர் நகர வீதிகளில் அலைவதைப் பார்த்தாலே இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
படம் : நன்றி http://www.thehindubusinessline.com
இதனைத் தாண்டி ஆலைக்குள் உற்பத்தி நிலைமை, சுகாதாரம், பாதுகாப்பு, உற்பத்தி இலக்கு போன்ற எவற்றையும் தொழிலாளர்கள் தங்களின் உரிமை என்று அறிந்து கொள்ளவில்லை. இதனால், முதலாளிகள், எச்.ஆர். அதிகாரிகள், சூப்பர்வைசர்கள் வைப்பதுதான் சட்டம் என்ற முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்து கோர தாண்டவமாடுகிறது. ‘இம் என்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம்’ என்ற அளவில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை அடிமை நிலைக்குத் தாழ்ந்து விட்டது.
இந்நிலையில்தான் மேற்கண்ட முழக்கங்களைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சுவரொட்டிகளை கண்ட தொழிலாளர்கள் தங்களின் செல்போன்களில் எல்லாம் படம் எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் பகிர்ந்தும் தங்களுக்குள்ளும் விவாதித்துக்கொள்கின்றனர்.
குறிப்பாக, பெரிய பெரிய கார்ப்பரேட் (லேலாண்டு)ஆலைகளில் கெம்பா என்ற பெயரில் கருங்காலிகளை உருவாக்கி அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகைகள் வழங்குவது, டூரிஸ்ட் என்று வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்வது, தொழிலாளர்களின் ஒற்றுமை உணர்வை குலைத்து போராட்ட உணர்வை சீர்குலைப்பது என்ற யுத்தியை கையாள்கிறது என்றால்…., டி.வி.எஸ் ஆலையில் தொடரும் தொழிலாளர்கள் மீதான உழைப்பு சுரண்டலை மறைக்கவும்,கட்டற்ற அடக்குமுறைகளை அரங்கேற்றவும் நடத்துவதுதான் ஸ்தாபகர் தினவிழா. இந்த விழாவில் தொழிலாளியின் மனைவி மக்களுடன் செல்வதற்கு அனுமதி கொடுக்கின்றனர். ஆலையில் கோயில் திருவிழா போல அத்தனை பொருட்களும் அங்கு இருக்கும். ஆலை முழுவதும் ஜிகு ஜிகு வென லைட் செட்டிங்கை பார்க்கும் போது குடும்ப பெண்களுக்கு ஒரே பிரமிப்பூட்டும் வகையில் உணவு வகைகள் என்று ஆலைக்குள் சென்று வெளியே வந்தால் சொர்க்கத்தை பார்த்து வந்தது போல இதைப் பற்றியே ஆண்டு முழுவதும் பேசுவார்கள்.
ஆலையின் அடக்குமுறைக்கு எதிராக கேள்வி கேட்டால் நிர்வாகத்தை விட தொழிலாளியின் மனைவிமார்களே மன்னிப்பு கேட்டு வேலைக்கு போக சொல்வார்கள். தொழிற்சாலையில் உள்ள தொழிற்சங்கமோ தொழிலாளர்களின் உரிமையை விட நிர்வாகத்தின் குரலைத்தான் பேசுவார்கள்.
இவ்வாலையில் பத்து ஆண்டுகள் வேலை செய்தாலும் காண்ட்ராக்ட்டு தான். ஆனால் 480 நாட்கள் வேலை செய்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். இதனை மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை டி.வி.எஸ் நிர்வாகம். சட்ட விரோதமாக செயல்படும் போக்கை கண்டித்தாலோ பணிநீக்கம், அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற கேவலமான வேலைகளை செய்வதில் முதலிடம் தான் டி.வி.எஸ் ஆலை.
டி.வி.எஸ் ஆலையின் குழும நிறுவனமான ஹரிதா ரப்பர் ஆலையை சென்ற ஆண்டு மும்பையை சேர்ந்த மெகா ரப்பர் என்ற ஆலைக்கு தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்காமல் விற்றுவிட்டது. இதனை எதிர்த்து பணி தொடர்ச்சியுடன் வேலை கேட்ட 12 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. அவர்கள் பல கட்சிகளை பார்த்தும் தொழிலாளர்களின் நியாயத்தை உணராமல் டி.வி.எஸ்ஸை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டனர். பிறகு புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு-வில் தங்களை இணைத்து கொண்டு அச்சங்கத்தின் வழி காட்டலின் படி நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் போராடி வருகின்றனர்.
ஸ்தாபனர் நாளை எதிர்த்து பு.ஜ.தொ.மு போஸ்டர்
அந்த வகையில் மேற்கண்ட முழக்கங்களை வடித்து நகரம் முழுவதும் போஸ்டர் போட்டு ஒட்டப்பட்டது. போஸ்டரை பார்த்த, படித்த இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை ஒட்டு மொத்த தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமாக வளர்த்தெடுப்போம். தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்!
இவண் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தர்மபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள். தொடர்புக்கு 9788011784, ஓசூர்.
நாட்டு அதிபர் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், அரச படைகள் ஆயுதமற்ற அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாகவும் கடற்படை துணைத்தளபதி ஊடகங்களில் அறிவிக்கிறார்; எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சி ஒளிபரப்பப்படுகிறது.
அதையடுத்து அதிபர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகளும், ‘மக்களும்’ போராட்டத்தில் குதிக்கின்றனர், இராணுவமும், அதிபர் பதவி விலக காலக்கெடு விதிக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுகிறார்; கைது செய்யப்படுகிறார். வழக்கமான காட்சிகள்தான் என்றாலும் காட்சிகளின் பின்னே உள்ள உண்மை அவ்வாறில்லை.
காலவரையற்ற பொது வேலைநிறுத்தம்
அரபு வசந்தத்திலும் அதையடுத்த லிபியா, சிரியா, தற்போது உக்ரைன் என பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு அரசுகளுக்கு எதிராக மக்கள் எழுச்சிகள் நடந்து வரும் சூழலில் இதையொத்த காட்சிகளை நாம் காணுற்றிருக்கிறோம். இப்போராட்டங்களில் சில மக்கள் விரோத அரசுகளை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், 2002-ம் ஆண்டு வெனிசுலாவில் நிகழ்த்தப்பட்ட ‘மக்கள் எழுச்சிகள்’ அதிபரை பதவியிலிருந்து தூக்கியெறிவதுடன் முடிவுக்கு வரவில்லை. மாறாக, உண்மையான மக்கள் எழுச்சி அப்போது தான் ஆரம்பித்தது. தூக்கியெறியப்பட்ட அதிபர் சாவேஸ் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் பதவிக்கு வருகிறார்.
சாவேஸ் பதவி விலக்கப்பட்ட அந்நிகழ்வு, பின்னணியிலிருந்து திட்டமிட்ட முறையில் திரைக்கதை எழுதி இயக்கப்பட்டதை அம்பலப்படுத்துகிறது ‘ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் கூறுகள்’ என்ற ஆவணப்படம்.
2000-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சாவேஸ் அதிபர் பதவிக்கு வந்ததும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகையை உயர்த்தி அதை மக்கள் நலனுக்கு திருப்பி விட்டார். அன்னிய கூட்டுப்பங்கு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக சட்டமியற்றினார்.
2001-ல் சாவேஸ், 49 மக்கள் நல சட்டங்களை நிறைவேற்றினார். பெரும் பண்ணையார்களிடம் உபரியாக இருந்த நிலங்களை பெற்று நிலமற்றோருக்கு விநியோகிப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சீர்திருத்தங்களை தடையின்றி நிறைவேற்ற அரசுக்கு முழு அதிகாரமளிக்கும் சட்டதிருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். எதிர்க்கட்சிகள் சாவேஸ் ஜனநாயகத்துக்கு விரோதமாக அதிகாரத்தை தம்மிடம் குவித்து சர்வாதிகாரியாக மாறிவருவதாக குற்றம் சுமத்தி போராட்டங்களில் ஈடுபட்டன.
சாவேஸ் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனையும், அப்போதைய லிபிய அதிபர் கடாபியையும் சந்தித்து பேசினார்.
15 நாடுகளில் சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய சாவேசை ஹிட்லர், முசோலினிக்கு நிகரான முட்டாள் சர்வாதிகாரியெனவும், பதவிப் பித்தராகவும், புகழ்விரும்பி, பைத்தியம் எனவும் அமெரிக்க நியூஸ் வீக் பத்திரிகை கட்டுரை வெளியிட்டது.
“அதிபர் மக்களின் நம்பிக்கையை பொய்ப்பித்து விட்டார்”
வெனிசுலாவில் நிலவும் ‘சர்வாதிகார அரசை அகற்றி ஜனநாயக அரசை நிறுவும் போராட்டங்களை’ அமெரிக்கா ஆரம்பித்து வைப்பதற்கு மேற்சொன்ன காரணங்களே போதுமானதாக இருந்தன.
பிப்ரவரி 2002-ல் விமானப்படையின் கர்னல் பேடரோ விசென்டே சோடோ தலைமையில் ராணுவத்தின் ஒரு பிரிவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. சாவேஸ் இராணுவத்தை சிவில் வேலைகளில் ஈடுபடுத்தி நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டதாகவும், மக்களின் நம்பிக்கையை அவர் இழந்து விட்டதாகவும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் ராணுவ உயரதிகாரிகள் பேட்டியளிக்கின்றனர்.
ஏப்ரல் 6-ம் தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட, முறைகேடுகளில் ஈடுபட்ட 19 அதிகாரிகளை வேலை நீக்கம் செய்து உத்தரவிடுகிறார் சாவேஸ். இதை எதிர்த்து எண்ணெய் நிறுவனத்தின் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டில் எண்ணெய் உற்பத்தி முடக்கப்படுகிறது.
ஏப்ரல் 9 அன்று அறிவிக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம் குறைந்த அளவு ஆதரவையே பெற்ற போதிலும் எண்ணெய் நிறுவன ஊழியர் போராட்டத்துக்கு ஆதரவாக நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது வலதுசாரி தொழிற்சங்க கூட்டமைப்பு.
“வெனிசுலா மக்களுடன் நிற்கிறோம்”
முன்னரே திட்டமிட்டபடி போராட்டங்களை ஆதரித்து எல்லா எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதிக்கின்றன. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் மற்ற ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பரவவுமில்லை, பாதிக்கவுமில்லை.
மறுபுறம், சாவேஸ் ஆதரவாளர்கள் அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அனைத்து ஊடகங்களும் அரசு ஆதரவு போராட்ட செய்திகளையும், அரசுத்தரப்பு விளக்கங்களையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்ததுடன் நாடு முழுவதும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மட்டுமே நடப்பதைப் போலொரு பொய்யான பிம்பத்தை கட்டியெழுப்பின. அரசு சர்வாதிகாரத்தன்மையுடன் ஊடகங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம் சுமத்தி தொடர் பிரச்சாரம் செய்தன.
ஏப்ரல் 11 அன்று போராட்டக்காரர்கள், எண்ணெய் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்கிறார்கள். அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட திருப்பி விடப்படுகின்றனர். இது தன்னெழுச்சியாக நடந்த நிகழ்வல்ல. போராட்ட தலைவர்களால் முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் சாவேஸ் ஆதரவாளர்கள் அதிபர் மாளிகையின் அருகில் கூட ஆரம்பிக்கின்றனர். சாவேஸ் தொலைக்காட்சியில் தோன்றி போராட்டங்களை திரும்பிப் பெறுமாறும் அமைதி காக்குமாறும் நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறார். தொலைக்காட்சியில் சாவேஸ் பேசிக் கொண்டிருக்கும் காட்சித்திரை பாதியாக்கப்பட்டு மறுபாதியில் போராட்டக்காரர்களின் மீதான தாக்குதல், உயிரிழந்தோர், காயமுற்றோரின் காட்சிகள் காட்டப்படுகின்றன. சாவேஸின் ஆதரவாளர்களும், போலீசாரும் போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது போலுள்ள காட்சி, அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.
சாவேஸ் ஆதரவாளர்களை தாக்கும் போலீஸ்
ஆனால், சாவேஸ் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் தான் மோதல் நடந்ததாக நேரடி சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுட்டது போலீசோ, அரசபடையினரோ அல்லது சாவேஸ் ஆதரவாளர்களோ அல்ல. ஏகாதிபத்திய சதிகாரர்கள் பணிக்கமர்த்திய மறைந்திருந்து சுடுபவர்கள் (snipers) தான் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். தங்களது சதிக்கு தார்மீக ஆதரவை பெறுவதற்கும், ஆட்சிகவிழ்ப்புக்கு நியாயம் கற்பிப்பதற்கும் அப்பாவி மக்களை கொன்றிருக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே போராட்டக்குழு தலைவர்களும், வலதுசாரி தொழிற்சங்க தலைவர்களும் போராட்டக் களத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்கள் வெளியேறியவுடன் மறைந்திருந்து சுடுபவர்கள் அப்பாவி மக்களை படுகொலை செய்திருக்கின்றனர்.
ஜனநாயகத்தின் தூண்களான ஊடகங்கள் திட்டமிட்டு மிக கவனமாக எடிட் செய்து ஆட்சி கவிழ்ப்பு திரைக்கதைக்கு தேவையானவற்றை செய்திகளாக தயாரித்திருக்கின்றன.
சி.என்.என் செய்தியாளர் ஒட்டோ நியுஸ்டல்ட்டுக்கு, போராட்டத்தில் வன்முறை ஏற்படும் என்றும் சிலர் உயிரிழக்கலாமென்றும் ராணுவத்தின் உயர்அதிகாரிகள் சிலர் சாவேசை பதவிவிலக கோருவார்கள் என்றும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிச் சூட்டை கண்டித்த ராணுவ தளபதிகளின் பேட்டி துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு பலமணிநேரம் முன்னதாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார்.
குறிப்பாக சாவேஸ் அப்பாவி மக்களை கொல்வதாக கூறும் கடற்படை துணைதளபதி பெரேசின் அறிக்கை துப்பாக்கி சூடு நடப்பதற்கு பல மணிநேரத்திற்கு முன் ஒளிப்பதிவு செய்யப்பட்டது தான்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருமாறு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார் சாவேஸ். ஆனால் ராணுவம் சாவேஸ் அரசின் கட்டளைகளுக்கு பணிய மறுக்கிறது. சுமார் 20 மேல்நிலை அதிகாரிகள், “சாவேஸ் பதவி விலக வேண்டும்” என தொலைக்காட்சியில் பேட்டியளிக்கின்றனர்.
இதையடுத்து, ராணுவம் அதிபர் மாளிகைக்குள் நுழைகிறது. சாவேஸ் கைது செய்யப்படுகிறார். சாவேஸ் பதவி விலகிவிட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. வெனிசுலா வர்த்தக சங்க தலைவரான பேட்ரோ கர்மோனா தற்காலிக அதிபராக நியமனம் செய்து கொண்டார். இவ்வாறாக ‘மக்கள்’ போராட்டத்தால் அதிபர் தூக்கியெறியப்பட்டார்.
பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உச்சநீதிமன்றம் மற்றும் மற்ற ஜனநாயக அமைப்புகளை கலைத்து உத்தரவிடுகிறார் கர்மோனா. சாவேசின் அமைச்சர்கள், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் புதிய அரசின் தாக்குதலுக்கு இலக்காகினர். சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் பெயரால் பாசிசம் தலைவிரித்தாடுகிறது. அதாவது ஜனநாயகம் என்பதே ஏகாதிபத்தியங்கள் மற்றும் பெருநிலவுடைமையாளர்களின் சர்வாதிகாரம் தான் என்று அம்பலமானது.
சிறையில் சாவேஸ்
இதன் பின் பதவியிறக்கப்பட்ட தங்கள் அதிபருக்கு ஆதரவாக நாடெங்கிலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்தனர். இராணுவமும் பிளவுபட்டது. அதை பற்றி செய்திகளை வெளியிடாமல், திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த ஊடகங்கள், நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.
சாவேஸ், தான் பதவி விலகவில்லை என்றும், சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கும் தகவலை ராணுவத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் வெளியிடுகிறார். மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்து சதிகாரர்களை சிறை வைத்தனர். ராணுவத்தில் சாவேஸின் ஆதரவுப்பிரிவு அப்போது உதவிக்கு வருகிறது. அது அதிபர் மாளிகையை சுற்றி வளைத்து சதிகாரர்களை கைது செய்ததுடன், சாவேசை மீண்டும் அதிபராக்கியது.
மறுபுறம் கொலம்பியாவை தவிர வேறு எந்த தென்னமெரிக்க நாடும் “இப்புரட்சிகர நடவடிக்கைகளை” ஆதரிக்காததால், ஆட்சிக் கவிழ்ப்பில் பழம் தின்று கொட்டை போட்ட அமெரிக்காவின் சி.ஐ.ஏ முகத்தில் கரியை பூசிக்கொண்டது.
சி.ஐ.ஏ மற்றும் ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை போன்ற அமெரிக்க அரசின் அமைப்புகள் இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னால் இருந்து இயக்கி நிதியளித்த உண்மை அம்பலமாகியது. இன்றும் அமெரிக்காவின் ஆண்டு பட்ஜெட்டில் அமெரிக்க – வெனிசுலா வெளியுறவு பிரச்சனைக்கான நிதியாக 5 மில்லியன் டாலர்க்கும் மேல் அதிகாரபூர்வமாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சாவேசுக்கு ஆதரவாக மக்கள் திரள்
வெனிசுலாவில் 1989-ல் உலக வங்கி, ஐ.எம்.எஃபின் நிர்ப்பந்த்தத்தால் தீவிரப்படுத்தப்பட்ட தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அந்நாட்டையும் மக்களையும் சூறையாடி ஓட்டாண்டிகளாக்கியது. வேலையிழந்து வாழ்விழந்த மக்கள் நாடோடிகளாக நகரங்களை நோக்கி விரட்டப்பட்டனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் தீவிரமாகியது. விலைவாசி விண்ணை முட்டியது. மானியங்கள் வெட்டப்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டன. மக்கள் இத்தனியார்மய, தாராளமயத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகத் திரண்டு போராடினர்.
இந்தப் பின்னணியில் 1992-ல் நாட்டுப் பற்றும், சோசலிச நாட்டமும் கொண்ட ஆயுதக் குழுவொன்றை இராணுவத்திற்குள் உருவாக்கியிருந்த சாவேஸ் அமெரிக்க கைக்கூலி அரசை நீக்க முயன்று தோற்றார். கைது செய்யப்பட்ட சாவேசும் அவரது ஆதரவாளர்களும் இரண்டாண்டுகள் சிறை தண்டனையை பெற்றனர்.
1998-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேசுக்கு ஓட்டுக் கட்சிகளின் ஊழல், ஒடுக்குமுறை ஆட்சிகளாலும், தனியார்மய தாராளமய தாக்குதலாலும் வெறுப்புற்றிருந்த உழைக்கும் மக்கள் ஏறத்தாழ 56% வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
ஆட்சிக்கு வந்த சாவேஸ், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும், அதிபரையும் திரும்பி அழைக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை 88% மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றினார். எதிர்க்கட்சிகள் இதை பலமாக எதிர்த்தன.
2000-ம் ஆண்டு தமது அரசை கலைத்துவிட்டு புதிய அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர்தலை நடத்தினார். அத்தேர்தலிலும், உழைக்கும் மக்கள் சாவெசுக்கு ஏறத்தாழ 59% வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
2002-ல் வெனிசுலா அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முற்றிலுமாக முறியடிக்கப்படவில்லை. மக்கள் போராட்டங்களால் ஆளும் வர்க்க, எதிர்கட்சிகள் தற்காலிகமாக பின்வாங்கிக் கொண்டு சாவேஸ் அரசுக்கு அடுத்தடுத்து பல நெருக்குதல்களை கொடுத்து வந்தன.
மீண்டும் அதிபரான சாவேஸ்
ஒட்டு மொத்த முதாளித்துவ அமைப்பும், மக்கள் நலத்திட்ட சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கத்திய நாடுகளிலேயே காலாவதியாகிவிட்ட நிலையில் சாவேஸ் தேர்தலின் மூலம் நிலவும் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடவும், மக்கள் நல சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் பிரச்சனைகளை தீர்த்துவிட முடியுமென நம்பினார். அதையே 21-ம் நூற்றாண்டின் சோசலிசம் என்றார்.
ஆனால், ஆளும் வர்க்க அரசமைப்பையே ஜனநாயக அமைப்பாக சாவேசும் அவரது ஆதரவாளர்களும் கருதிக் கொண்டிருக்க, ஆளும் வர்க்கங்கள் அதற்கு முரணாக, அவர்களின் ஜனநாயக கட்டமைப்பின் விதிமுறைகளை மதிக்காமல் அவ்வமைப்பை தூக்கியெறியும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்ற ஆண்டு சாவேசின் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவரின் உற்ற தோழரான நிகலோஸ் மாதுரா வெற்றி பெற்று அதிபரானார். அவர் எதிர்க்கட்சி வேட்பாளரை விட 1.5% வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றதால் அவருடைய தரப்பு பலவீனமாக இருப்பதாக கணித்த ஆளும்வர்க்க எதிர்க்கட்சிகள் மீண்டும் புரட்சியை நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன.
முதலாளிகளும், ஆளும் வர்க்கங்களும், திட்டமிட்ட முறையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளன. மேலும், ஆளும் வர்க்கங்கள் அரசியல் ரீதியாக வீழ்த்தப்படாததால், சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சீரடையவில்லை. இவற்றின் காரணமாக பணவீக்கம் விண்ணை தொட்டுள்ளது. சமூக ஒழுங்கு சீரழிந்து குற்றங்களும், வன்முறைகளும் மலிந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முன்னாள் மிஸ். வெனிசுலா அழகியும் அவரது கணவரும், சில வழிப்பறி கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பிப்ரவரி மாதம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இவ்வன்முறைகளுக்கு எதிராக சில மாணவர்களும், மக்களில் ஒரு பிரிவினரும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் மாதுரா அரசு செயலிழந்து விட்டதாகவும், அதிபர் பதவி விலக வேண்டுமென்றும் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
இரண்டு மாதங்களுக்கும் மேல் வெனிசுலாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு இவ்வாண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் முதல், பாப் பாடகர் மடோனா உள்ளிட்ட பலரும் ஆதரவளித்துள்ளனர். ஆனால் வழமை போலவே, உயர் நடுத்தர வர்க்க பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பரவவுமில்லை, பாதிக்கவுமில்லை.
புரட்சிகர வர்க்கங்களின் மக்கள் ஜனநாயக குடியரசை நிறுவாமல், ஏகாதிபத்தியங்கள், முதலாளிகளின் கூட்டுச்சதியை முறியடிக்க முடியாது. இது தான் பாரிஸ் கம்யூன் முதல் வெனிசுலா வரையிலான இப்போராட்டங்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.
எனினும் அமெரிக்காவின் சிஐஏவும், ஊடகங்களும் ஒரு ஏழை நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு என்ன சதிகளையெல்லாம் அரங்கேற்றுகின்றன என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. ஜனநாயகத்தின் மெக்கா என்று ‘நம்பப்படும்’ அமெரிக்காதான் உண்மையில் ஜனநாயகத்தை கொல்லும் நரகம் என்பதை அறிய வேண்டுமா, இந்த படத்தை பாருங்கள்!
முழுநிர்வாணமாய்
கொள்ளிக்கட்டை பிடித்தால்
மழைவரும் எனும் நம்பிக்கை
மடத்தனம், அசிங்கம் என்றால்,
அரைநிர்வாணத்தோடு
அர்ச்சகர்களை குளத்தில் இறக்கிவிடும்
வருண ஜபம் மட்டும் சுவிங்கமா?
சூத்திர சம்புகன் நம்பிக்கை
சவம்!
பார்ப்பன அம்பிகளின் நம்பிக்கைக்கு
ஜபம்!
எப்படியோ!
வருண ஜபத்தின் புண்ணியத்தால்
யாகம், கும்பம், கலச ஆவாகனம்
புண்ணியாவாஜனம், சிறப்பு பூஜை
என பார்ப்பனக் காட்டில் மழை!
பூணூல் அறிக்கைக்கு பல கோடி,
படித்த பையன் கேட்கிறான்
வானிலை மையம், வானிலை அறிக்கை
நாட்டுக்கு எதுக்கு டாடி?
மழை வாரா காரணத்தை
மறைக்கும் மறைகளின் பயங்கரம்
அரசும், பார்ப்பனியமும்!
காட்டு மரக் கொள்ளை
ஆற்று மணல் கொள்ளை
இயற்கையைச் சீரழிக்கும்
கனிமவளக் கொள்ளையென
பருவகாலத்தை சீரழித்த பங்காளிகளோடு
வருண ஜபத்தில் தப்பிக்கிறார்கள் கயவர்கள்.
மழைக்கொலை செய்த பாவிகளே
வருண ஜபம் செய்வதைப் பார்த்து
காறித்துப்புகிறது சூரியன்!
புத்திவராத தேசத்தில்
மழைவந்து என்ன ஆகப் போகிறது?
என்று தோலை உரிக்கிறது கோடை!
அவசரமாய் நடந்து முடிந்தது தேர்தல். ஆனால், அவசியமாய் பேசவேண்டியது எதுவும் பேசப்படவில்லை. ஆயினும், அதைப் பற்றிய அக்கறை எதுவுமின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெருக்கிப் பிடித்து அதைக் கட்டிக் காத்த பெருங்கடமையை முடித்து விட்டதாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் தேர்தல் துறை.
தேர்தலை புறக்கணித்த வீராம்பட்டினம் மீனவர்கள்.
புதுச்சேரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துவிட வேண்டும் என்பதற்காக, எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்தும், அந்த அனுமதி மறுப்பை எழுத்துப் பூர்வமாக தர மறுத்தும் என்னென்ன வித்தைகளோ செய்து பார்த்தது. ஆனால், மக்களோ அவர்களது ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டனர்.
நாம் இந்த அனுமதிக்காக சென்றிருந்த போது, தேர்தல் துறையால் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட நோட்டோவைப் பற்றி மக்களீடம் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி கேட்டு வந்த சில மனித உரிமை அமைப்பினர், அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்புகளிடம், ” நாங்க எதுக்கு இருக்கிறோம். நாங்களே தேவைப்படும் அளவுக்குப் பிரச்சாரம் செய்கிறோம். நீங்க என்ன புதுசா? அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீங்க எதாவது புதுசாப் பண்ணி குட்டையக் கொழப்பாதீங்க. உங்களுக்கு அனுமதி கிடையாது.” என்ற தேர்தல் அதிகாரியிடம், “என்ன சார், அரசாங்கம் அறிவித்ததைத் தானே பிரச்சாரம் செய்யப் போறோம்.” என்ற அந்த அமைப்பினர் பதில் கூறியவுடன், “எதுவா இருந்தாலும் நாங்க முடிவு பண்றது தான்.” என்று தாங்கள் சொல்லும் ஜனநாயகத்தைப் பட்டென்று போட்டுடைத்தார்.
ஏற்கனவே இந்த 100 சதவீத வாக்குப்பதிவிற்கு புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் பகுதி மக்கள் ஆப்பு அறைந்து விட்டனர். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் இப்பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. பெருவாரியான வீடுகள் சேதமடைந்தது. ஆனால், இன்று வரை அம்மக்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட வில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி பல முறை முறையிட்டபோதும் அரசோ, அரசியல் கட்சிகளோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த அம்மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்து அறிவித்திருந்தனர்.
இதனால் தங்களது 100 சதவீத வாக்குப் பதிவுக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதியில் துணை ராணுவப் படைகளைக் குவித்திருந்தது தேர்தல் துறை. இது ஏதோ இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்பகுதி மக்கள், தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக நடத்தினர். இப்பகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,000-த்திற்கும் மேல் இருந்தாலும் 500-க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியது.
ஆனால், தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என மிரட்டும் விதமாகத் தான் இந்த துணை ராணுவப் படைக் குவிப்பு என்பதை நிரூபிக்க, தேர்தல் நாளன்று நடந்த கீழ்க்கண்ட சம்பவமே சாட்சி.
துப்பாக்கி முனையில் தேர்தல்
இதே, புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் பால் பேட் என்ற பகுதியில் ஏற்கனவே பல முறை பல்வேறு விசயங்களையொட்டி நாம் பிரச்சாரம் செய்துள்ளோம். அதனால், நமது அரசியலைப் புரிந்து கொண்டு கருத்துக்களை ஏற்று அப்பகுதி மக்கள் வரவேற்பு அளிப்பார்கள். அதனடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் பாதையை அம்பலப்படுத்தி தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தி பிரசுரங்களை விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது. நாம் சொல்கின்ற விசயங்களில் உள்ள உண்மைகளை அனுபவத்தில் உணர்ந்த அப்பகுதி மக்களில் பெரும்பாலோர் வாக்குச் சாவடி பக்கமே போகவில்லை என்பதை அங்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கையே நிரூபித்துவிட்டது. அந்தப் பகுதி வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மொத்தம் 1872. இதில் பதிவான மொத்த வாக்குகள் 170 மட்டுமே.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையில் இந்த 170 வாக்குகளும் பதிவாகி விட்டன. அதன் பின் அப்பகுதி மக்கள் யாருமே ஓட்டுப் போட போகவில்லை. இதைக் கவனித்த அப்பகுதி ஓட்டுக்கட்சிகள், அந்த மக்களிடம் கெஞ்ச ஆரம்பித்தனர். அங்குள்ள நமது ஆதரவாளர் ஒருவர் தான் மக்களை ஓட்டுப் போட தடுப்பதாக நினைத்து அவரிடம் சென்று, “நீங்க ஓட்டுப் போடச் சொல்லுங்க. நீங்க சொன்னாப் போடுவாங்க” என கெஞ்ச ஆரம்பித்தனர். உடனே அவர், “இது மக்களின் விருப்பம். இதில் நான் ஒன்றும் சொல்லக் கூடாது. மேலும், யாரையும் தூண்டவோ, நிர்ப்பந்திக்கவோ கூடாதுன்னு தேர்தல் துறையே சொல்லியிருக்கு. அதனால மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திப்பது தவறு.” என்று சொன்னவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் மக்களிடமே சென்று கெஞ்ச ஆரம்பித்தனர். மக்கள் வெயில் குறைந்தவுடன் வருவதாகவும், மதிய உணவை முடித்து வருவதாகவும் சொல்லி காலம் கடத்தினர்.
இப்படியெல்லாம் கெஞ்சினால் மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த தேர்தல் அதிகாரி, தனது தலைமை அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கவே சற்று நேரத்திற்கெல்லாம் சுமார் 50 துணை ராணுவப்படை வீரர்களை இறக்கியது தேர்தல் துறை. துப்பாக்கி முனையில் ஜனநாயகம் காக்கும் கேவலம் அரங்கேற ஆரம்பித்தது. இது வரை நாம் இந்த அரசியலமைப்பு, அதிகார அமைப்பு பற்றி மக்களிடம் சொன்ன விசயங்கள் தங்கள் கண் முன்னாலேயே நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தனர் மக்கள்.
இந்த அரசு மக்களுக்கு சேவை செய்வதற்கான கருவி அல்ல; அது மக்களை ஒடுக்கும் கருவி என்ற அரசியல் உண்மையை எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைத்ததற்கு ஒருவகையில் நாம் தேர்தல் துறைக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலளர் முன்னணி – புதுச்சேரி
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு.
கவுத்தி வேடியப்பன் மலை
என்று இயற்கையின் மகத்துவத்தையும், நாட்டிற்கு உறுப்பாக மலையும், மழையும், ஆறுகளும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர். இந்த பூமி பந்து தோன்றிய காலத்தில் முதலாவதாக உருவெடுத்த, பழமையான நமது நாட்டின் கிழக்கு, மேற்குதொடர்ச்சி மலைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வாழ்ந்துள்ள காடுகள், உயிர்காக்கும் அற்புத மூலிகைகள், அளவிடற்கரிய கனிம வளங்களையும், இயற்கையோடு இணைந்து வாழும் பறவைகளையும், விலங்குகளையும், மலைகளையும் காத்துவரும் உழைக்கும் மக்களையும் தனது லாப வெறிக்காக பெயர்த்தெடுத்து வீசியெறிய புறப்பட்டுள்ளனர் பன்னாட்டு- உள்நாட்டு முதலாளிகள்.
இந்த மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையை பாக்சைட் கனிம வள கொள்ளைக்காகவும், ஜவ்வாது மலையை சந்தன கட்டை, செம்மரக்கட்டை கொள்ளைகளுக்காகவும் சூறையாடியதை போல தற்போது கவுத்தி வேடியப்பன் மலைகளை தகர்த்து, அதன் அடியில் புதைந்து கிடக்கும் 935 மில்லியன் டன் இரும்பு தாதுகளை கொள்ளையடிக்க வெறியுடன் கிளம்பியுள்ளது ஜின்டால் என்ற பன்னாட்டு நிறுவனம்.
அன்று ஈஸ்ட் இன்டியா! இன்று ஜின்டால்!
சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட காலத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளின் கனிம வளங்களை சூறையாடிய முதலாளிகள் இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் ஒன்றுக்கொன்று தொடர்ச்சி இல்லாமல் மேற்கு வங்காளம் முதல் நீலகிரி வரை நீண்டு பரவியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் தரம் வாய்ந்த பாக்சைட், இரும்பு தாது, சுண்ணாம்பு கற்களை கொள்ளையடிக்க கிளம்பியுள்ளனர்.
2005-ம் ஆண்டு போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி, கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வந்த போது போர்க் குணத்துடன் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடி விரட்டியடித்தோம். ஆனால், அந்த கொலைகார ஜிண்டால் உச்சநீதிமன்றத்தின் ஆசியுடன் மீண்டும் நமது மண்ணிற்குள் நுழைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 680 மாவட்டங்களில் 238 -வது இடத்தில் கிடக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த திட்டத்தையும் போடாத மத்திய, மாநில அரசுகள் ஒரு முதலாளியின் லாப வேட்டைக்காக நமது மலைகளை தாரை வார்த்து கொடுத்துள்ளனர்.
நமது மாவட்டத்தை சுற்றிப் பாயும் செய்யாறும், துரிஞ்சலாறும் இப்போதே வறண்டு மணலாறாகத்தான் காட்சியளிக்கிறது. இந்த லட்சணத்தில் ஜிண்டாலின் இரும்புக் கொள்ளைக்காக 2 இலட்சம் மரங்களை வெட்டப் போகிறார்களாம். கம்பெனியை இயக்க அன்றாடம் தேவையான 560 கனமீட்டர் தண்ணீரை இயற்கை கொடையான சாத்தனூர் அணையிலிருந்தும், கவுத்தி-வேடியப்பன் மலைகள் தேக்கி வைத்திருக்கும் ஊற்று நீரிலிருந்தும் உறிஞ்சி கொள்ளப் போகிறார்களாம். கடினமான பாறை தன்மை கொண்ட மலைகளை 6,000 அடி துளை போட்டு தகர்க்க போகிறார்களாம். 600 லட்சம் டன் இரும்பை சூறையாடிவிட்டு மனித குலத்திற்கே கேடு விளைவிக்கும் 24 லட்சம் டன் கழிவுகளை மலைக்கு அடியிலேயே கொட்டப் போகிறார்களாம்.
இந்த பாதிப்புகளை மக்களின் மீது சுமத்தி வளர்ச்சித் திட்டம் என்ற போர்வையில் கொள்ளையிடுவதற்கு கவுத்தி-வேடியப்பன் மலைகளில் பரந்து கிடக்கும் 1,500 ஏக்கர் இரும்பு படுகையை கொண்ட நிலப்பரப்பை குறிவைத்துள்ளனர். தற்போதைக்கு 900 ஏக்கர், 20 ஏக்கர் என்று கூறிக் கொண்டாலும் மொத்தத்தையும் கொள்ளையிடுவதே கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கம்.
ஜிண்டாலின் இரும்பு கொள்ளைக்காக கவுத்தி – வேடியப்பன் மலைகளை சுற்றி வாழும் 51 கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களையும், மலைக்காடுகளில் உள்ள 30 வகையான அரிய வகை மூலிகைகளையும் , பறவைகள் சரணாலயத்தையும், பலிகொடுத்து அவர்களின் சாம்பல் மேட்டிலிருந்து கிடைக்கும் இரும்பை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் போகிறார்கள். இந்த படுபாதக செயல்களின் மூலம் கிடைக்கும் இரும்பு நமக்கு ஒரு பைசாவிற்கு கூட பலனை தராது. ஆனால் ஏற்கனவே அலுமினிய உற்பத்தில் கொழித்து திரியும் ஜிண்டாலின் பாக்கெட்டிற்கு கோடிக்கணக்கான டாலர்களை கொட்டப் போகிறது.
களம்பூர் பொன்னி உள்ளிட்ட பெயர் பெற்ற ரக நெல்லையும், வட மாவட்டத்தில் நெற்களஞ்சியமாக திகழ்ந்து நெல் உற்பத்தி செய்து கொடுத்தும் மணிலா கரும்பையும், பலவகை நவதானிய பயிர்களையும் விளைவிப்பதற்கு, இடதுபுறமாக 35 கிமீ பாய்ந்து 41 ஏரிகளை நிரப்பி 24,000 ஏக்கர் பாசனத்தையும், வலதுபுறமாக 28.6 கி.மீட்டர் பாய்ந்து 49 ஏரிகளை நிரப்பி 21,000 ஏக்கர் பாசனத்தையும் கொடுத்து லட்சக் கணக்கான விவசாயிகளை வாழவைத்த சாத்தனூர் அணை வரண்டு பாலைவனமாக போகிறது. அதுமட்டுமின்றி கவுத்தி-வேடியப்பன் மலைகளில் உற்பத்தியாகும் துறிஞ்சலாறும், செய்யாறும் ஒழியப் போகிறது. அன்றாடம் நூற்றுக்கணக்கான டம்பர் லாரி மூலம் இரும்புத்தாதுக்களை கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மலைகளை தகர்க்கும் வெடிகளால் ஏற்படும் அதிர்வுகள் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும், நகர மக்களுக்கும் பாதிப்பு என்று நாசத்தை விளைவிக்க போகின்றனர். இந்த பாதிப்புகள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்குத்தான்.
இந்த பாதிப்புகளை எதிர்த்து கவுத்தி-வேடியப்பன் இரட்டை மலைகளை சுற்றியுள்ள 20 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் இதை உணர்ந்துள்ள மக்கள் நமது பிரச்சாரத்தை வரவேற்று வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தையும் தனது உறவினர்களுக்கு செய்து தருவதை போல செய்தனர்.
ஜிண்டாலின் கனிம வள கொள்ளையை தடுக்க தேர்தல் பாதை உதவாது. இந்த போலி ஜனநாயக தேர்தலை புறக்கணித்து புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரளும் படி பிரச்சாரம் நட்த்தினோம். அதன் தொடர்சியாக உண்மையான ஜனநாயகத்தை படைக்கவும், அதற்கு மாற்று அதிகாரம் கொண்ட அமைப்புகளை கட்டி எழுப்புவோம் என்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களைத் திரட்டி மே தினத்தை போராட்ட தினமாக்கியுள்ளோம்.
மே தினப் பேரணி, முற்றுகை
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம் !
கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!
பேரணி துவங்கும் இடம் : திருவள்ளுவர் சிலை நேரம் : காலை 10 மணி, 01.05.2014 முற்றுகை : மாவட்ட வனத்துறை அலுவலகம், திருவண்ணாமலை
[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, திருவண்ணாமலை-விழுப்புரம்-கடலூர் மாவட்டங்கள்
“சிவன் சொத்து குல நாசம்”, என்பது ‘இந்து மத காவலர்களுக்கு’ கிடையாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சொத்துக்களை அதன் அறங்காவலர்களான மன்னர் குடும்பத்தினரே கொள்ளையடித்து வருவது உச்சநீதிமன்றத்தின் விசாரணை மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் கோவிலின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து மன்னர் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான ஐந்து நபர் கமிட்டிக்கு நிர்வாக அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலின் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு முன்னாள் மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் விநோத் ராயை நியமித்த நீதிமன்றம், பத்மபநாபா கோயிலின் செயல் அதிகாரியாக குருவாயூர் கோவில் தேவஸ்தானத்தில் முன்னாள் ஆணையரான சதீஷை நியமித்திருக்கிறது.
பத்மநாபா கோவில்
பத்மநாபசாமி கோவிலின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்ற கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரச குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு வழக்கில், முன்னாள் அரசு வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) கோபால் சுப்பிரமணியத்தை நீதிமன்ற நண்பனாக நியமித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி ஒரு மாதத்திற்கும் மேல் கோவிலில் ஆய்வு செய்து அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. கோவிலை நிர்வகித்த மன்னர் குடும்பத்தினர், சிதம்பரம் தீட்சிதன்களைப் போல எந்த வித கணக்குகளையும் பாராமரிக்காமல் இதுவரை கொள்ளையடித்து வந்ததும், கொள்ளைக்கு தடையாக இருக்கும் நபர்கள் மீது நடந்திருக்கும் ஆசிட் தாக்குதல் சம்பவங்களும், கோவிலில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும் இந்த அறிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தங்க கடத்தல் முதல் யானை வாங்குவதில் நடந்த மோசடி வரை பல்வேறு ஊழல்கள் அம்பலமாகியுள்ளது.
கோவில் நகைகளை மணலுக்குள் வைத்து வெளியே கடத்திச் செல்லப்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாக்கு மூலமளித்துள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த நகையாளர் ராஜூ, இதுவரை பல்வேறு தருணங்களில் 17 கிலோ நகைகளை கோவிலிலிருந்து தான் பெற்றிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்னர் கோவிலின் அதிகாரபூர்வ நகை செய்பவர்களாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்தவர்கள், மணல் லாரியில் மண்ணுடன் கலந்து தங்கத்தை கடத்தியது தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். கோவிலுக்கு நகை செய்வதற்காகத்தான் தான் நகைகளை பெற்றதாக அவர் கூறினாலும், நகை செய்யும் ஆர்டர் பெற்றதற்கும், கொடுத்ததற்கான எந்தவித ஆதாரமும் அவரிடம் இல்லை.
நகைகள் கடத்தப்படுவதை தடுத்த கோவில் ஊழியர் பத்மநாபதாசன் என்பவர் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீட்சிதர்களும் இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்டவர்களை ஆள் வைத்து அடித்திருக்கிறார்கள்.
2012-ம் ஆண்டு பத்மநாபா கோவிலுக்குச் சென்ற “நீதிமன்றத்தின் நண்பன்” கோபால் சுப்பிரமணியனும், மேற்பார்வை கமிட்டியின் தலைவர் எம்.என்.கிருஷ்ணனும்.
இதுவரை நான்கு அறைகளில் மட்டுமே தங்கம் வெள்ளி உள்ளிட்ட செல்வங்கள் இருப்பதாக அரச குடும்பம் சொல்லி வந்தது. ஆனால் “முதல்படி அறைகள்” என்ற இரண்டு அறைகளிலும் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின் போது பூட்டப்பட்டிருந்த இந்த இரு அறைகளையும் சுட்டிக் காட்டி விசாரித்த போது, அவை சாதாரண அறைதான் என்றும் சோதனையிட தேவையில்லை என்று மன்னர் தரப்பு நிர்வாகத்தினர் மழுப்பியிருக்கின்றனர். சாவியை கேட்டபோது தங்களிடம் சாவி இல்லை என்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறனர். அதையும் மீறி பூட்டை உடைத்து பார்த்ததில் இரு அறைகளிலும் ஏராளமான தங்க வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் ரகசிய ‘பி’ அறையை திறந்து தணிக்கை செய்ய மன்னர் குடும்பத்தினர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆனால் மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவரும் கோவில் செயல் அதிகாரியும் அந்த ரகசிய ‘பி’ அறையை சில ஆண்டுகளுக்கு முன்னர் திறந்ததை நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளை தங்களின் தனிப்பட்ட சொத்தாக மன்னர் குடும்பத்தினர் கருதுவதால் அதை புகைப்படமெடுத்து அதைக் காட்டி வியாபாரிகளிடம் பேரம் பேச இந்த அறையை போல பலமுறை திறந்திருக்கிறார்கள்.
கோவிலின் பெயரில் தனலெட்சுமி வங்கியில் பராமரிக்கப்படுவதாக அரச குடும்பம் கணக்குக் காட்டியுள்ள வைப்புத்தொகை மற்றும் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் வைப்புத்தொகை மற்றும் வங்கி கணக்குகள் கோவில் பெயரில் தங்களிடம் பராமரிக்கப்படுவதாக தனலெட்சுமி வங்கி விசாரணையின் போது தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து அரச குடும்பத்தினர் தங்கள் வசமுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது, விசாரணை ஆணையம்.
கோவிலின் அசையா சொத்துக்களை அரச குடும்பத்தினர் விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவிலின் வரவு செலவு கணக்குக்கான நிர்வாக புத்தகங்களை பராமரிக்கவே இல்லை. செலவுகள் செய்யப்பட்டதற்கு எந்த இரசீதுகளும் கிடையாது. வரவு செலவு தொடர்பான புத்தகங்களை இரகசியமானது என்று கூறி அதை பார்க்க விடாமல் அரச குடும்பம் தன்னை தடுத்துவருவதாக கோவில் தணிக்கையாளர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற விசாரணை ஆணையத்தின் முடிவுகளை வதந்தி என்று கூறும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.
உண்டியலில் விழும் வெளிநாட்டு கரன்சிகளை வங்கியில் மாற்றாமல் திருச்சியை சேர்ந்த தொழிலதிபரிடம் மாற்றி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கோவில் ஊழியர்கள் மீது நடந்த பாலியல் தாக்குதல்களையும் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. மீனா குமாரி என்ற ஊழியர் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பாக புகார் அளித்ததால் அவரை கோவில் நிர்வாகம் வேலை நீக்கம் செய்துள்ளது.
கோவிலின் அருகில் இருக்கும் கடைகளுக்கு உரிமை வழங்குவது, சிறப்பு தரிசனம் என்று மக்களிடம் பிடுங்கியது என எவற்றுக்கும் முறையான கணக்குகள் எதுவும் இல்லை.
விசாரணையின் போது கோவிலின் ஸ்ரீகாயம் அலுவலகத்தில் கண்டுபிடித்த தங்க லாக்கெட்டுகளுக்கு எந்த கணக்கும் இல்லை.
மேலும் கோவிலினுள் தங்க முலாம் பூசும் கருவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தை வெளியில் கடத்திவிட்டு அதற்கு பதில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை பெட்டகத்தில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
கோவில் ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உச்சிகுடுமிமன்றம் நியமித்த விசாரனை கமிசனே இவ்வளவு சொல்கிறது என்றால் உண்மையில் எவ்வளவு நடந்திருக்கும் என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம்.
தங்களின் தனியுடைமை போல கருதிக்கொண்டு அரச குடும்பம் கொள்ளையடித்துள்ள இவ்வளவு சொத்துக்களும், இன்னும் கோவிலின் நிலவறைகளில் பதுக்கிவைத்துள்ள பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க பொக்கிசங்களும் எப்படி வந்தது? நிச்சயமாக அரச பரம்பரையினர் நாத்து நட்டோ, கொத்து வேலை பார்த்தோ சம்பாதித்ததல்ல. பார்ப்பனிய இந்துமதவெறி கும்பல் சொல்வது போல இவை முழுவதும் பத்மநாபசாமிக்கு வந்த காணிக்கை மட்டுமே என்று கூறினால் கேரளாவில் தங்க ஆறும், தேனருவியும் தெருவுக்கு ஒன்று ஓடுவதாக பொருள். பிறகு இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதை அறிய நாம் அன்றைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் வரலாற்று பக்கங்களை புரட்ட வேண்டும்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் அரச குடும்பத்துக்கு ஆதரவாக நடந்துகொண்ட சி.பி.எம்மின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனன்.
நிலவுடமைச் சமூகங்களில் கடவுள்களின் பிரதிநிதியாக ஆட்சி செலுத்துவதாக தான் மன்னர்கள் தங்கள் குடிகள் மீது அதிகாரத்தை செலுத்தினார்கள். இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவ சாதி அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில்கள் மூலமே மக்கள் மீது ஏவப்பட்டன. மக்களை சுரண்டிச் சேர்த்த செல்வங்களை பாதுகாக்கும் பெட்டகமாகவும் கோவில்களே இருந்தன. இதனால் தான் இராசராச சோழன் முதல் முகமது கஜினி வரை பிற நாடுகளின் கோவில்களை குறிவைத்து தாக்கி கொள்ளையடித்தனர். திருவிதாங்கூர் அரசர்களும் தங்களை பத்மநாபதாசர்கள் என்றே கூறிக்கொண்டு அடிமைமுறையை தங்கள் குடிகள் மீது ஏவினர். முலை வரி, தலை வரி என்று உடல் உறுப்புகளுக்கு கூட வரி விதித்து தங்கள் அரண்மனைகளையும், செல்வங்களையும் பெருக்கிக் கொண்டனர்.
1845-ம் ஆண்டில், சட்டப்படி கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிமை முறையை ஒழித்த பின்னரும் திருவிதாங்கூர் அரசு 1853 வரை அடிமை முறையை நீட்டித்து மக்களை சுரண்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழமைபோல இப்படி சுரண்டி சேர்த்த செல்வத்தை கோவில்களில் தான் பதுக்கி வைக்க முடியுமே அன்றி இன்று போல ஹவாலாவும், ஸ்விஸ் வங்கியும் அன்று கிடையாது.
மேலும் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும், தஞ்சை சரபோஜியும், எட்டப்பன் போன்றோரும் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக இருந்தனர். ஆங்கிலேயர்களின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
இப்படி உருவானது தான் இவ்வளவு செல்வங்களும். அடிமை உழைப்பினால் விளைந்த இந்த செல்வம் அரச பரம்பரைக்கோ இல்லை, பரதேசி பத்மநாபசாமிக்கோ சொந்தமானது இல்லை. சுரண்டப்பட்ட அடிமைகளுக்கு தான் சொந்தம். இப்போது கேரளம் மற்றும் இந்திய உழைக்கும் மக்களுக்கு தான் அவை சொந்தம்.
இது மட்டுமல்ல, இனி சட்டப்படியும் கூட அரசகுடும்பம், கோவிலில் பரம்பரை உரிமை கோர முடியாது. இதை திருவனந்தபுரம் கீழமை நீதிமன்றமும் கேரள உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளன.
2007-ல் திருவனந்தபுரம் கீழமை நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தினர் நகை பெட்டகங்களை புகைப்படம் எடுப்பதையும், திறப்பதையும் தடுக்கவேண்டும் என்று இரண்டு பக்தர்கள் தொடுத்த வழக்கில் பெட்டகங்களை திறக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் நியமிக்கும் இரு நபர் கமிசனுக்கு வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.
உழைக்கும் மக்களின் சொத்து
இதை எதிர்த்து அரச குடும்பம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அரச குடும்பத்திற்கு எதிராக பினவரும் முக்கியமான தீர்ப்பை அளித்தது கேரள உயர்நீதிமன்றம்.
“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991-ல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோவிலின் மீது உரிமை கோர முடியாது…. எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.”
இந்த தீர்ப்புக்கு எதிராக அப்போதைய ‘அரசர்’ மார்த்தாண்ட வர்மா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில் கோவில் நகைகளை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் அன்றைக்கு தலைப்பு செய்தியானது. அதை தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் தான் தற்போது இந்த கொள்ளைகளும் முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக அரசியல் ரீதியிலும், சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் எந்த உரிமையும் இல்லாத கோவில் மீது ஆதிக்கம் செலுத்தத்தான் அரச குடும்பம் துடித்து வருகிறது. கேரள மாநில அரசும் இதற்கு உறுதுணையாக உள்ளது. இதை விசாரணை அறிக்கையே பின்வருமாறு ஒத்துக்கொள்கிறது. “கோவிலின் முறைகேடுகளை தீர்ப்பதற்கு அரசு இயந்திரம் தடையாக உள்ளது. திருவனந்தபுரம் கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் சமூக மனநிலையில் மன்னராட்சிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த பிரச்சனையில் போலீசார் போதுமான விசாரணை செய்யாமல் இருப்பது இதை தான் குறிக்கிறது”.
விசாரணை அறிக்கையின்படி சமூக மனநிலையில் மன்னராட்சி தான் கோலோச்சுகிறது என்பதை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மீண்டுமொருமுறை கேரள அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி “உச்சநீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவோம், அதே சமயத்தில் அரச குடும்பத்தை அவமதிக்கும் வண்ணம் செயல்பட மாட்டோம். வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு அரச குடும்பத்தை எதிர்க்கக் கூடாது” என்று உச்சநீதிமன்ற விசாரணை ஆணையத்தின் முடிவுகளை வதந்தி என்று கூறியுள்ளார்.
மாநில உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னிதலா இன்னும் ஒரு படி மேலே போய் “அரச குடும்பத்தின் உணர்ச்சிகளை மாநில அரசு புண்படுத்தாது. பாரம்பரியம் மிக்க திருவிதாங்கூர் அரச குடும்பம மற்றும் பத்மநாபசாமி பக்தர்கள் ஆகியோரின் உணர்வுகளை கணக்கில் கொள்வோம். குருவாயூர் கோவில் நிர்வாகத்தில் கூட அதன் மன்னர் சமோரின் ராஜாவுக்கு இடம் அளித்துள்ளோம். அதுபோல திருவிதாங்கூர் அரசர்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்” என கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் போலிகம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவருமான வி.எஸ். அச்சுதானந்தன் “2011ல் கோவில் நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அப்போதைய எங்கள் இடது முன்னணி அரசு தீர்ப்பை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் அரசாங்கம், மன்னர் குடும்பத்துடன் கள்ளக்கூட்டு வைத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகிறது” என்று அழகிரி பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் அரச குடும்பத்துக்கு ஆதரவாக நடந்துகொண்டதை வெட்கமே இல்லாமல் நியாயப்படுத்துகிறார் இந்த போலிக் கம்யூனிஸ்டு தலைவர்.
அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை அனைவரின் ஆசீர்வாதத்தோடு ஆட்டம் போடும் அரச குடும்பத்தின் கைகளிலிருந்து கோவில் நிரந்தரமாக பிடுங்கப்படவேண்டும். அரசு கோவிலை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கோவிலின் சொத்துக்கள் மக்களுக்கு தான் சொந்தம். எனவே அவை அரசுடைமையாக்க வேண்டும். இதை மக்கள் போராட்டமன்றி நிறைவேற்ற முடியாது.
ஆனால் கேரளாவில் இருக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும், அவை காங்கிரசோ, போலிக் கம்யூனிஸ்டுகளோ மன்னர் விசுவாச அடிமைத்தனத்தை மக்கள் மத்தியில் பராமரித்து வைத்திருக்கவே விரும்புகின்றனர். இது மலையாளிகளின் தேசிய உணர்வாக அவர்கள் நாடகமாடினாலும் உண்மையில் இது தேசிய உணர்வுக்கு எதிரானதாகும். கேரளாவில் இடதுசாரிகளின் செல்வாக்கில் சில நல்லதுகள் நடந்திருந்தாலும், தமிழகத்தைப் போல பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டம் மக்களிடையே நடக்கவில்லை. அரசியல்ரீதியில் இந்துமதவெறியை வீழ்த்துவதற்கு பண்பாட்டு ரீதியில் மக்களிடம் பார்ப்பனிய ஆதிக்கத்தை அம்பலப்படுத்துவது அவசியம். ஸ்ரீரங்கத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய கருவறை நுழைவு போராட்டம் போல குருவாயூரிலும், பத்மநாபா கோவிலிலும் நடத்தப்படவேண்டும்.
அடுத்து இந்த மோசடி பிரச்சினையில் மற்றொரு முக்கியமான அம்சமும் உள்ளது. கேரளாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களும் முறையாக இயங்கும் போது இந்து அறங்காவலர்களான திருவிதாங்கூர் அரச பரம்பரை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் மட்டும் இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது என்றும், அதை இந்துக்களிடம் விட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி, சுப்ரமணியசாமி, சோ உள்ளிட்ட பார்ப்பனிய பாசிசக் கும்பல்கள் கோருவதும் அதற்கு பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பணக்கார “அறங்காவலர்கள்” துணை நிற்பதற்கும் கொள்கை மட்டுமல்ல வருங்கால கொள்ளையும் ஒரு காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கோவில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏதோ ஒரு விதத்தில் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதால், கொள்ளையடிப்பதில் சற்று சிரமம் இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்குத்தான் திருடன் கையிலேயே சாவியை கொடு என்று கோரி இந்து முன்னணி போராடுகிறது. அதற்கு இந்து மதவெறியை ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதை கொள்ளையடிக்கப்படும் ‘இந்துக்கள்’ புரிந்து கொள்ள வேண்டும்.
இதை நாம் சிதம்பரம் கோவில் வழக்கிலேயே பார்த்திருப்போம். உச்சிக்குடுமி மன்றத்தின் தீர்ப்பு வந்த உடன் இங்கே பார்ப்பனிய பாசிஸ்டுகள் எப்படி ஆனந்தக் கூத்தாடினார்கள் என்பதறிவோம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழக கோவில்களை அறங்காவலர்கள் என்ற இந்து ஆதிக்க சாதி மேட்டுக்குடி கூட்டம் கொள்ளையடித்ததும், அதை மக்கள் எதிர்த்த பிறகே கோவில்கள் அரசுடமையாக்கப்பட்டதும் வரலாறு. ஆனாலும் தில்லைக் கோவில், பத்மநாபா கோவில் போன்ற விதிவிலக்குகள் இன்று தொடர்வது மற்ற கோவில்களையும் கொள்ளையடிக்கலாம் என பார்ப்பனிய ஆதிக்க சாதிகளுக்கு எச்சிலை ஊற வைக்கிறது. அந்த நாக்கின் சுவை நீர் நரம்பை நாம் அறுக்க வேண்டும். இல்லையேல் கொலைவெறி ஓநாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கும்.
தனது காலடியில் உள்ள செல்வத்தை காப்பாற்ற துப்பில்லாத கடவுள்தான் உலகத்தையும் தன்னையும் காப்பாற்றுவான் என்று அறியாமையில் மூழ்கி கிடக்கும் மக்களிடம் மன்னர் குல கொள்ளையை அம்பலப்படுத்தவதும், இந்து மத வெறிக்கு எதிராக அணிதிரட்டுவதும் வேறு வேறு அல்ல.
இந்தியாவைக் கடைந்தேற்றுவதே தாங்கள் அவதரித்ததன் ஒரே நோக்கம் என்று பறைசாற்றிக் கொள்ளும் காங்கிரசு கூட தங்கள் அணி வரிசையில் லோக்கல் ரவுடிகளை பின்னால் நிற்க வைத்து விட்டு கோட்டு சூட்டு அணிந்த டூன் ஸ்கூல் கேடிகளைத் தான் முன்னே நிற்க வைக்கிறார்கள். அது நூற்றாண்டு கால பயிற்சி!
கோரக்பூரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் உள்ளூர் தாதா யோகி ஆதித்யநாத்
இந்துத்துவ முகாம் அந்த வகையில் சோலார் ஸ்டாரை விட மட்டமான நடிப்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால் அவரது அணிவரிசையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்று அலறும் சுடுகாட்டு கஞ்சா சாமியார்களே தென்படுகிறார்கள்.
நேபாளத்தின் லும்பினியில் இருந்து சாலை வழியாக இந்தோ-நேபாள் எல்லையைக் கடந்து கிழக்கு உத்திரபிரதேசத்துக்குள் நுழைந்தால் சுமார் 80 கிலோ மீட்டர்கள் தொலைவில் எதிர்ப்படும் முதல் பெரிய நகரம் கோரக்பூர். குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையைக் கடந்தால் அதை நகரம் என்று அழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கோரக்பூரை நகரம் என்கிறோம். ரயிலடி ஒன்று இருப்பதை தவிர்த்துப் பார்த்தால் நம் வேப்பூர் கிராமத்தில் இருக்கும் வசதிகள் கூட இல்லாத ஒரு ஊர். அனேகம் பேர் படிப்பறிவில்லாதவர்கள். இருந்த ஒரே ஒரு உரக்கம்பெனியும் 1990-ம் ஆண்டே மூடப்பட்டு விட்டது. அடுத்த சில ஆண்டுகளிலேயே மிஞ்சியிருந்த சில சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டு விட்டன. சுமார் 70 சதவீத வீடுகளில் கழிவறை இல்லை. ராப்தி நதிக் கரையில் அமைந்துள்ள கோரக்பூர் வலதுசாரி இந்துத்துவ அரசியலின் தளமாகவும், கூடவே வருடத்துக்கு நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கும் யானைக்கால் நோயின் உறைவிடமாகவும் விளங்குகிறது.
கோரக்பூரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது யோகி ஆதித்யநாத். 1999-ம் ஆண்டிலிருந்து அவர் கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து வென்று வருகிறார். இம்முறையும் அவரே வேட்பாளர், அவரே வெற்றி பெறுவார் என்று பரவலாக கருதப்படுகிறது. கோராக்நாத் மடத்தின் தலைமை பூசாரியாகவும் இருக்கும் ஆதித்யநாத், ஹிந்து யுவ வாஹினி என்கிற குண்டர் படை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.
ஹிந்து யுவ வாஹினியின் மூலமாக சிறு சிறு உள்ளூர் தகராறுகளில் தலையிடும் ஆதித்யநாத் கடந்த பத்தாண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சில பத்து கலவரங்களை நடத்தியிருக்கிறார். தானே முன்னின்று 2007-ம் ஆண்டு கோரக்பூரில் கலவரம் ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தி அதற்காக சிறை சென்றும் திரும்பியிருக்கிறார். கலவரங்களின் ஊடாக இந்து முசுலீம் மக்களிடையே பிளவுண்டாக்கி இந்துக்களின் காப்பாளராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். தற்போது கிழக்கு உத்திரபிரதேசத்தின் சில பல சட்டமன்றத் தொகுதிகளது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிலான செல்வாக்கையோ ஆதிக்கத்தையோ அவர் அடைந்துள்ளார்.
நீங்கள் ஒருவேளை நன்றாக படித்தவராகவோ, ’மெல்லிதயம்’ கொண்டவராகவோ இருக்கலாம். என்னவாகவோ இருந்து விட்டுப்போங்கள்; ஆனால், மோடி சொல்கிறாரே என்று ஆதித்யநாத்திடம் போய் ‘நாட்டின் வளர்ச்சி, சிறந்த அரசாளுகை…’ என்றெல்லாம் இழுத்தீர்கள் என்றால் செவுள் பிய்ந்து போக எல்லா வாய்ப்புகளும் உள்ளது. ”உத்திரபிரதேசத்தையும் (!) இந்தியாவையும் இந்து ராஷ்டிரமாக்கும் வரை நான் ஓயமாட்டேன்’ என்பது தான் அவரது சூளுரை லட்சியம் இலக்கு நோக்கம் எல்லாம். அந்த லட்சியத்துக்கு தோதுபட்டவராக மோடி இருப்பார் என்பது ஆதித்தியநாத்தின் நம்பிக்கை.
மோடிஜி எனப்படும் பிராணியை பாபா ஆதித்யநாத் தெரிவு செய்திருக்கிறார்.
மற்றபடி பாரதிய ஜனதாவிடம் இந்துத்துவத்தை கொடுப்பதும் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுப்பதும் ஒன்று தான் என்பது ஆதித்யநாத்தின் தனிப்பட்ட கருத்து. தனது சொந்த கம்பேனியான ஹிந்து யுவ வாஹினியின் பலத்தில் தானே இந்து ராஷ்டிரத்தை உருவாக்கி விடமுடியும் என்கிற தன்னம்பிக்கை இருப்பதால் தாய்க் கட்சியுடனான அவரது உறவு அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்றாலும், கழுத்தை அறுப்பதாக இருந்தாலும் ஈரத்துணி போட்டு நாசூக்காக அறுக்க வேண்டும் என்கிற நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவ்வப்போது பஞ்சாயத்து பேசி ஆதித்தியநாத்தை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த முறை உத்திரபிரதேச மாநில பாரதிய ஜனதாவின் தேர்தல் பணிக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவி ஆதித்ய நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மோடியால் உபியை வளைக்க அனுப்பப்பட்ட அமித் ஷா கூட ஆதித்யநாத்தின் தம்பி போன்றவர்தான். எனவே தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆதித்யநாத் காவிப் பட்டையை கிளப்ப எந்த தடையும் இல்லை.
கோரக்பூர் மற்றும் கிழக்கு உத்திரபிரதேசத்தைப் பொருத்தவரை மோடிஜி எனப்படும் பிராணியை பாபா ஆதித்யநாத் தெரிவு செய்திருக்கிறார் என்பதே வாக்காளர்களிடம் பாரதிய ஜனதா வைத்திருக்கும் வளர்ச்சி குறித்த பம்மாத்து ஒரு மோசடி என்பதைக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சி சிறந்த அரசாளுகை என்பதெல்லாம் எங்கோ மருதைக்கு அங்கிட்டு திண்டுக்கல் பக்கமாக இருக்கிறது என்பதாக பாவ்லா காட்டுவது தான் அந்த பிராந்தியத்தில் பாரதிய ஜனதாவின் தேர்தல் செயல் தந்திரம்.
கோரக்பூரின் பெரும்பான்மை வாக்காளர்கள் யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக தோன்றினாலும், சிறுபான்மை மதத்தினரும், தலித்துகளும் இதில் சேர்த்தியில்லை. கோரக்பூரில் உள்ள 20,000 கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் ஆதரவாளர்கள், இந்த முறை சிலர் ஆம் ஆத்மி கட்சிக்கும், சிலர் சமாஜ்வாதி கட்சிக்கும் வாக்களிக்கப் போவதாக சொல்கின்றனர். “முஸ்லீம்களைப் போலவே கிறிஸ்தவர்கள் பா.ஜ.கவின் வாக்கு வங்கியாக இல்லை” என்கிறார் செயின்ட் ஜான் சர்ச்சின் ரெவரண்ட் ரோஷன் ஆல்.
லோக்நீதி மற்றும் சி.எஸ்.டி.எஸ் அமைப்பு கடந்த 15 ஆண்டுகளில் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக யார் நிற்கிறார்கள், அவர்களைச் சுற்றி அலை அடிக்கிறதா, சூறாவளி வீசுகிறதா என்பதைப் பற்றியெல்லாம் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களுக்கு எந்த கவலையும் இருப்பதில்லை. வேட்பாளர்கள் மற்றும் வட்டார விவகாரங்களை முன்னிறுத்தியே அவர்கள் வாக்களிக்கிறார்கள் என்று இந்த ஆய்வு சொல்கிறது. பாரதிய ஜனதா என்ன தான் மோடி அலை மோடி சுனாமி என்று மேல்மட்டத்தில் சீன் போட்டாலும் கீழ் மட்டத்தில் தனக்கு எது பயன்படுமோ அதையே செய்து வருகிறது.
உலகளாவிய சிந்தனை, உள்ளூர் அளவில் செயல்படுதல் (Think Global act local) என்கிற அதே பழைய கார்ப்பரேட் தாரக மந்திரம் தான். பிராந்திய அளவில் மத மோதல்களைத் தூண்டி விட்டு வாக்காளர்களை மத ரீதியில் பிளவு படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையைத் தான் செய்து வருகிறது. எழவு வீட்டில் ஓட்டுக் கேட்கப் போனால் கொள்கை விளக்கப் பாட்டு போட்டா கேட்க முடியும்? ஒப்பாரி ராகத்தில் தானே ஓட்டு கேட்க முடியும். அதனால் தான் மேலே ஓவர் கோட்டும் கீழே லங்கோடும் அணிந்த வினோத ஜந்துவாக பாரதிய ஜனதா காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
தொகாடியா, ”முசாஃபர் நகரை மறந்து விடாதீர்கள், அசாமில் கோக்ரஜாரை மறந்து விடாதீர்கள், குஜராத்தை மறந்து விடாதீர்கள்” என்று நேரடியாக இசுலாமியர்களை மிரட்டுகிறார்
இது பாரதிய ஜனதாவின் தனிச்சிறப்பான பிரச்சினை. காங்கிரசைப் பொருத்தவரை வந்தால் மலை போனால் மயிர் என்ற ஜென் நிலைக்குப் போய் விட்டதால் எந்தக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் மினு மினுக்கும் சிலுக்கு ஜிப்பாவும் கட்கத்தில் லெதர் பேக்குமாக ’பார்த்தீர்களா எங்கள் கடந்த பத்தாண்டு கால சாதனையை’ என்று நெடுஞ்சாலைகளை வெள்ளைக்காரனுக்கு விற்றதையெல்லாம் சாதனை என்று ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் பாரதிய ஜனதா பக்கமே வருவோம். ஒருபக்கம் வளர்ச்சி, சிறந்த அரசாளுகை, ஊழல் ஒழிப்பு என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் ப்ரவீன் தொகாடியா இசுலாமியர்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் வீடோ நிலமோ வாங்குவதை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறார். கேரளாவில் பிரசாரம் செய்ய வந்த தொகாடியா, ”முசாஃபர் நகரை மறந்து விடாதீர்கள், அசாமில் கோக்ரஜாரை மறந்து விடாதீர்கள், குஜராத்தை மறந்து விடாதீர்கள்” என்று நேரடியாக இசுலாமியர்களை மிரட்டுகிறார். பீகார் மாநில பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் சிங் , மோடி பிரதமராக வரகூடாது என்று நினைப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போகட்டும் என்கிறார்.
பால்கோவாவை சுவைக்கும் போது பல்லில் தட்டுப்படும் கல்லுக்கு முகம் சுளிப்பது போல் இந்தப் பேச்சுக்களை முதலாளித்துவ ஊடகங்கள் எதிர்கொள்கின்றன. டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் ‘இன்னுமா இவிங்க திருந்தலை’ என்று ஆச்சர்யப்படுவது போல் நடிக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. ஆனால், இவர்கள் தான் இந்துத்துவத்தின் உண்மையான முகங்கள் என்பது நம்மை விட கோஸ்வாமிகளுக்குத் தான் நன்றாகத் தெரியும். பாரதிய ஜனதாவின் தேர்தல் வெற்றிக்காக பிரதேச அளவில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, அதன் வேட்பாளர்களும் இத்தகையவர்கள் தான்.
“இல்ல பாஸ், அதான் மோடி இப்பல்லாம் வளர்ச்சி பத்தி மட்டும் தானே பேசறாப்ல” என்று வைக்கோத்தனமாகவோ கேணத்தனமாகவோ சிலர் கேட்கக் கூடும். காமக் கொடூரர்கள் எல்லா நேரங்களிலும் வல்லுறவுக்கு ஆயத்தமான கோலத்திலேயே திரிவதில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம். பல் விளக்கும் போதோ, ஆய் கழுவும் போதோ அவர்களும் சராசரி மனிதர்களைப் போலவே நடந்து கொள்வார்கள். இதற்கு மேலும் அப்பிராணிகளாக இருப்பவர்களுக்கு அதிரடிப்படை திரைப்படத்தில் அமாவாசையின் சுயரூபம் வெளிப்படும் காட்சியை பரிந்துரைக்கிறோம்.
வெற்றி உறுதிப்படுத்தப்படும் வரை அடக்கி வாசிக்கும் கட்டாயம் மோடிக்கு இருக்கிறது. நாற்காலியில் அவர் அமர்ந்த பின் தான் அந்த டிசைனர் குர்த்தா, டிசைனர் கூலர்ஸ், நாசூக்கான சிகையலங்காரத்துக்குப் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் பிணந்தின்னும் நாகா அம்மணச் சாமி வெளிப்படுவான். அதாவது கீழே பீறிடத் துடிக்கும் எரிமலையின் முனையின் மேல் தடுப்பாக தனது புட்டத்தையே பொருத்தி அமர்ந்திருப்பவனின் நிலை அது.
ஆயிரம் அவஸ்தைகள் இருந்தாலும் மோடியைப் பொறுத்த வரையில் நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும், பேய் வேஷம் போட்டால் முருங்கை மரம் ஏறியாக வேண்டும் என்று தொழில் தர்மத்தை பேணுபவராகவே இருக்கிறார். கிரிராஜ் சிங் மற்றும் ப்ரவீன் டொகாடியாவின் கருத்துக்கள் பற்றி ட்விட்டர் தளத்தில் “தங்களை பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள் பிரச்சாரத்தை வளர்ச்சி மற்றும் சிறந்த அரசாளுகையில் என்கிற கேந்திரமான பிரச்சினையில் இருந்து விலகச் செய்கிறது” என்றும் ”இது போன்ற பொறுப்பற்ற பேச்சுக்களை நான் ஒப்புக்கொள்வதில்லை. அவ்வாறு பேசுபவர்கள் இனிமேல் அப்படிப் பேசக்கூடாது” என்றும் எழுதியிருக்கிறார்.
அவர் வார்த்தைகளில் இருக்கும் நாசூக்கான கொலைவெறியை கவனித்தீர்களா… “ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாம்”. பிரவீன் தொகாடியாவை ஹரேன் பாண்டியாவைப் போல் அட்டு பீசு என்று நினைக்கும் அளவுக்கு மோடி மொக்கை அல்ல. இந்தப்பக்கம் ட்விட்டரில் இப்படி எழுதி விட்டு அந்தப்பக்கம் தனியே அவருக்கு போன் போட்டு ‘கொஞ்ச நாள் பொறு தலைவா…” என்று சுதி சேர்த்திருப்பார். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் மோடியிடம் நாம் காணும் அந்த அவஸ்தை இருக்கிறதே.. அது தான் வரலாற்றின் பக்கங்களில் பதியப்படாத யூதாஸ் இஸ்காரோத்தின் உணர்ச்சி.
கிழவியை கட்டிப் பிடித்து முத்தமிட்ட பின் வாயைப் பன்னீரில் கொப்பளிக்கும் தலைவர்கள் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா… மோடியைப் பொறுத்தவரையில் இது வளர்ச்சி பற்றி பேசும் சீசன், அடுத்து வென்ற பின் அவர் இந்துத்துவ பன்னீரால் வாயைக் கொப்பளித்து துப்புவார் – அது இந்நாட்டு மக்களின் தலையில் அமிலமாகப் பொழியும்.
வைகோ போன்றவர்களுக்கு அது பிரச்சினையில்லை மலத்தில் ஊறவைத்த செருப்பால் அடிவாங்கிய பின்னும் தோளில் தொங்கும் அந்த ரேமாண்ட் பேண்ட் பிட்டை இழுத்து விட்டுக் கொண்டு ‘அய்யகோ.. ரோமாபுரியில் அன்று ஏமாந்தானே ஸ்பார்ட்டகஸ்’ என்று எதையாவது உளறிக் கொட்டுவார். ‘அட நம்ம கலிங்கப்பட்டியாரு நல்லவருதேங்.. ஆனா பாவம் பொழைக்கத் தெரியாதவரு’ என்று அதையும் நம்ப அவருக்கு தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள்.
இதனால் பாரதிய ஜனதாக் கட்சியை வெறும் இந்துமதவெறிக் கட்சியாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. ஆளும் வர்க்கங்களும் குறிப்பாக முதலாளிகளும் மோடியை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று வெறியாய் வேலை செய்யக் காரணம் என்ன? புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் இந்தியாவை வேகமாக சுரண்டும் வேலையை மோடி மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். இதனாலேயே அவர்கள் மன்மோகன் காங்கிரசு கும்பலை கடாசி விட்டு மோடியை கையில் எடுத்திருக்கிறார்கள்.
முதலாளிகளுக்கு இந்த கடமையை செய்ய உறுதி பூண்டுள்ள மோடி மறுபுறம் தனது இந்துத்துவ கட்சி, அணிகளின் வெறிக்கும் தீனி போடுவது அவசியம். இதை ஒரு வரம்புக்குட்பட்டு முதலாளிகளும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஏனெனில் இத்தகைய மத ரீதியான செல்வாக்கும், சிந்தனையும் மக்களை பிளவுபடுத்தும் என்பதால் அவர்களுக்கும் ஒகேதான். அதே நேரம் இதை ‘தொழில் அமைதி’க்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படுத்தக் கூடாது.
அடுத்து நகர்ப்புறங்கள், தென்மாநிலங்களில் வளர்ச்சி குறித்து பேசும் பாஜக இந்தி பேசும் மாநிலங்களில் இந்துமதவெறியையே முதன்மையாக பேசிவருகிறது. இது முரண்பாடில்லை, ஒத்திசைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த பின்னணியில்தான் இந்த கோரக்பூர் கொலைவெறி சாமியார் எம்பியாக போட்டியிடுகிறார். ஆக பாஜக இரண்டு முனைகளிலும் இந்திய மக்களின் எதிரியாக வலம் வருகிறது.
நாட்டின் உயிர் விவசாயம். அந்த உயிரை அரசு வதைப்பதால் அதில் பாடுபடும் விவசாயியின் நிலை பரிதாபத்துக்குரியது. அரும்பாடு பட்டு வெயிலுன்னும் மழையின்னும் பாக்காம வேல செஞ்சு, ஒரு நெல்லு வெளையவைக்க வீட்டுக்கும் வயலுக்கும் ஒம்பது நடைநடப்பான் விவசாயி. வயல் பொருக்குக்கும் அவன் கால் வெடிப்புக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது.
நாட்டுக்கே முதுகெலும்பா இருக்குற விவசாயி அவனோட முதுகுல சுமக்குற கஷ்டங்கள் பலபேருக்கு தெரியாது. போன வருச வெள்ளாம நஷ்டத்துல இருந்து மீள முடியாம, இந்த வருச தசுகூலிக்கி (விவசாய செலவு) என்ன செய்றதுன்னு புரியாத நேரத்துல யூரியாவும் பொட்டாசும் கிடுகிடுன்னு வெல ஒசந்து நிக்கும். வீட்ல உள்ள பொம்பளைங்க காதுல மூக்குல கெடக்குறதெல்லாம் அடகு கடைக்கி போயிரும். கால நேரம் தெரியாம மழையும் வெய்யிலும் தேவைக்கி அதிகமா வந்து அவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கும். கொண்ட கதுரா இருக்குற நேரம் பாத்து ஆத்து தண்ணிய இழுத்து மூடிடுவான் கெவுருமெண்டு. நெறமாச புள்ளத்தாச்சி நல்லபடியா வயித்துப் பிள்ள வெளிய வரணுண்டா சாமின்னு ஐயனாருட்ட வேண்டிக்கறது போல மழ பெஞ்சு கதுரு வெளிய வரனுண்டா சாமின்னு வேண்டிக்கனும். அப்ப இப்ப சாமிகளுக்கு மவுசு குறைஞ்சிருக்கணுமேன்னு தோணுதா? அது வேற கதை.
இத்தன எடஞ்சலுக்கு மத்தியில, சிட்டுக் குருவி போல ஒண்ணு ஒண்ணா பாடுபட்டு சேத்த நெல்ல விக்கிறதுக்கு அரசு ஏற்படுத்துன எடம்தான் அரசு நெல் கொள்முதல் நிலையம்.
கஷ்டமில்லாம லாபகரமான முறையில விற்பனை செய்றதுக்கு விவசாயிகள் நலனுக்காக உருவாக்கப்பட்டதுதான் அரசு நெல் கொள்முதல் நிலையம். ஆனால் அது விவசாயிகள் நலனுக்காக செயல் படுதான்னு பார்த்தா இல்ல. விவசாயிகளுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி அரசு நடத்தும் சூதாட்ட வசூல்தான் நெல் கொள்முதல் நிலையம் என்று ஒரு விவசாய பகுதியைச் சேர்ந்த நெல் கொள்முதல்ல் நிலைய ஊழியர் ஒருவரிடம் பேசும் போது ஒப்புக்கொண்டார். அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இல்லாம பதில் சொன்னார்.
“அரசு நேரடி கொள்முதல் நிலையம் வருசம் முழுவதும் செயல்படுதுங்களா? இல்ல சீசனுக்கு மட்டும் தொறப்பாங்களா?”
“சீசனுக்கு மட்டும் தாங்க தொறந்துருக்கும். நெல்லு அறுப்பு சீசன்ல தொறப்பாங்க. அறுவடையெல்லாம் முடிஞ்சதும் மூடிடுவாங்க. அறுப்பறுக்குற காலத்த பொருத்து சில இடங்கள்ள கொஞ்சம் தாமதமாகூட மூடுவாங்க.”
“உங்களுக்கு வருசம் பூராவும் வேலை இருக்குமா? சீசனுக்கு மட்டுந்தான் வேலை இருக்குமா?”
“எங்களுக்கு சீசனுக்கு மட்டும்தான் வேலை. இத நம்பியெல்லாம் இருக்க முடியாதுங்க. மூடிட்டாங்கன்னா எங்களப்போல ஊழியரும் சரி, மூட்ட தூக்குற லோடுமேனும் சரி வேற பொழப்பு தேடிக்க வேண்டியதுதான். வானம் பாத்து, மழை பெஞ்சு, ஆத்துல தண்ணி வந்தா விவசாயம் செழிப்பா இருக்கும். அதுபோலதான் அரசாங்கத்துலேருந்து நெல்லுப் புடிக்க சொல்லி ஆர்டர் வந்தா எங்களப் போல ஊழியரோட வாழ்க்கையும் செழிப்பாருக்கும். கையில நாலு காசு பாக்கலாம் பாருங்க”
“மாச சம்பளம் எவ்ளோ வாங்குவிங்க?”
“எங்களப் போல ஊழியருக்கு 3550 ரூபாதான் சம்பளம். வேலை இல்லாத நாட்கள்ல அதுவும் கெடையாது. வயல்ல உள்ள எலியெல்லாம் கதுரு வந்தோன அதோட தேவைக்கி நெல்ல வளையில கொண்ட சேமிச்சு வச்சுக்கும். அதுபோல தான் நாங்களும் வேல இருக்கும்போதே சம்பாரிச்சு வச்சுக்க வேண்டியதுதான்.”
“உங்களுக்கே இவ்வளவு குறைவான சம்பளம்னா மூட்டை தூக்குற தொழிலாளிக்கு என்ன சம்பளம்?”
“ஒரு மூட்டை நெல்ல விவசாயிகிட்ட எடை போட்டு வாங்கி, மூட்டைய தைச்சு, லாரில ஏத்துறதுக்கு மூட்டைக்கி ஒரு ரூபா தான் அரசாங்கம் தருது. நாளு பூரா மூட்டை தூக்குனாலும் நூறு ரூபா சம்பாதிக்க முடியாது. ஒரு ரூவாயிக்கி யாருங்க வருவா மூட்டை தூக்க.”
“சுமைதூக்கும் தொழிலாளர்களுக்குன்னு சங்கம் இருக்குல்ல. அதுல அவங்க குறையை சொல்ல வேண்டியதுதானே?”
“என்னாது சங்கமா? ‘உழுகுறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்குறபோது அரிவாளோடு வருவா’ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. பிரச்சனைக்கி வரமாட்டான் ஆதாயத்துக்கு வருவானுவோ. தொழிலாளி பிரச்சனைக்காக போராட்டம் நடத்துறோம், மீட்டிங் போட்றோம், காசு குடுன்னு சங்கத்துக்காரனே வந்து நிக்கிறான். அவங்க வாங்குற சம்பளத்துல எப்புடிய்யா காசு குடுக்க முடியும்னா, ஈரப்பதம் இருக்குன்னு சொல்லி இன்னைக்கி வர்ற நெல்லுல எங்களுக்கு மூட்டைக்கி ஒரு கிலோ கூடுதலா நெல்ல புடின்னு வாங்கிட்டு போறான். இவங்களா தொழிலாளிக்காக குரல் கொடுப்பானுவோ, ஏதோ மூட்டை தூக்கும் போது கை, கால் ஒடிஞ்சா ஏதாவது வைத்திய செலவுக்கு நஷ்ட ஈடு வாங்க சங்க உறுப்பினரா இருக்கணுமேன்னு தான் சங்கத்துல இருக்காங்க.”
“இவனுங்க மட்டும் கிடையாது எந்த கட்சிக்காரன் கூட்டம் போட்டாலும் இங்க ஒரு கைய நீட்டாம இருக்க மாட்டாய்ங்க. கோயில் திருவிழான்னா பாட்டுக் கச்சேரி, கூத்துன்னு ஒரு நாள் செலவு நெல் கொள்முதல் நிலையத்தோடது. அதுக்கு ஒரு கிலோ நெல்லு சேத்துப் புடிக்க சொல்றானுவோ ஊர் பெரிய மனுசனுங்க. என்னையா இது ஏதோ பொது சொத்துப் போல, ஆன்னா ஊன்னா எதுக்கெடுத்தாலும் இங்க வந்து பணம் கேக்கறீங்க. வெவசாயி தலையில கை வைக்கறது பாவம்ங்கன்னு சொன்னா, ஏன் நீ வாங்கல அப்புடின்னு கேப்பாங்க. கடத் தோங்காய வழி புள்ளையாருக்கு ஒடைக்கிற கணக்கா அவனவனும் வந்து வாங்கிட்டு போறாய்ங்க. என்னத்த சொல்ல!”
“கேக்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க விவசாயிங்க கிட்ட மூட்டைக்கி இவ்வளவுன்னு கமிஷன் புடிக்கிறீங்கன்னு சொல்றாங்களே?” ( ரகசியமான குரலில் கேட்டதற்கு அவர் சத்தமாக பதில் சொன்னார்)
“இத ஏங்க குசுகுசுன்னு கேட்டுகிட்டு, சத்தமாதான் கேளுங்க. கமிஷன் புடிக்குறது அதிகாரிங்கள்லேருந்து அரசியல்வாதி வரைக்கும் யாருக்குதான் தெரியாது. திடீர்னு ஒரு நாள் மேலதிகாரி என்கொயரிக்கு வருவாரு. அப்பன்னு பாத்து நாலு மூட்டையில கருக்கா (அரிசி இல்லாத பதர் நெல்) கலந்துருக்கும், நெல்லுல பச்சை பதம் கூட இருக்கும். ரெக்கவரிங்கற பேருல லம்பா 5000 ரூபா, கட்டணும். அவருக்கு கைக்கி கீழ மூவாயிரம் நாலாயிரம்னு தரணும். 3500 ரூபா சம்பளம் வாங்கற நான் 5000 ரூபா கப்பம் கட்ட முடியுமா, யோசிங்க பாப்போம்.”
“நீங்களே கமிஷன் புடிக்கறத ஒத்துக்கிட்டதால கேக்கறேன். மூட்டைக்கி எவ்வளவு பணம் புடிக்கிறிங்க, யாருக்கெல்லாம் பணம் கொடுக்குறீங்க?”
“ஒரு மூட்டைக்கி 20-லேர்ந்து 25 ரூபா வரைக்கும் புடிக்கிறோம். லோடு மேனுக்கு மூட்டைக்கி 5 ரூபா தரணும். இது மொத்தமா சேர்ந்ததற்கு பிறகு அவங்க பிரிச்சு எடுத்துக்குவாங்க. நெல் வாங்க எங்களுக்கு பணம் பட்டுவாடா செய்ற மேலதிகாரிக்கு 1 லட்சத்துக்கு 200 ரூபா வீதம் கொடுக்கணும். அந்த பணத்த தாமதிக்காம கொடுத்தனுப்புற அவருக்கும் மேல உள்ள மேலதிகாரிக்கு ஒரு தடவைக்கி 1000 ரூபா கொடுக்கணும். நெல் தரத்தோடதான் வாங்குறேனான்னு பாக்க வரும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு 2000, 3000 கொடுக்கணும். லாரி காண்டிராக்டருக்கு 500, 1000 கொடுக்கணும். லாரி டிரைவருக்கு ஒரு லோடுக்கு 500 ரூபா கொடுக்கணும். மீதி இருக்கறதுக்கு தக்கன உதவியாளருக்கும், வாட்ச்மேனுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டு மீதிய நான் எடுத்துக்குவேன்”னு ஒழிவு மறைவு இல்லாம கணக்க கச்சிதமா ஒப்படைச்சாரு.
“ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு பணம் தாறீங்க சரி. லாரி காண்டிராக்டர், லாரி டிரைவர் இவங்களுக்கு எந்த கணக்குல பணம் கொடுக்குறீங்க?”
“கொள்முதல் நிலையத்துல எடுக்குற நெல்ல சேமிப்பு கெடங்குக்கு அனுப்ப கெவ்ர்மெண்டு லாரி உரிமையாளர்ட்ட ஒப்பந்தம் போட்ருப்பாங்க. நெல்லு ஏத்திக்கிட்டு போறதுக்கு நாங்க பணம் கொடுக்க வேண்டியது இல்ல. ஆனா நாங்க சொன்ன நேரத்துல லாரி வரணும்னா காண்டிராக்டர கவனிக்கனும். இல்லன்னா ஒரு வாரம், பத்து நாளு இழுத்தடிப்பாரு. அதுக்குள்ள காச்சல் பதம்(காய்ந்து போன) அதிகமாயி ஒரு மூட்ட நெல்லுக்கு 1 கிலோ, 2 கிலோ கொறஞ்சு போயிரும். நெல்ல எறக்குற எடத்துல சரியான எடை இல்லன்னா அதுக்கு ரெக்கவரியும் நாங்கதான் கட்டணும். ரெக்கவரி கட்றதவிட காண்டிராக்டருக்கு கொடுக்கறது கொஞ்சம்தான்.
லாரி ட்ரைவருக்கு காசு கொடுக்கலன்னா நெல்லு எறக்க வேண்டிய எடத்துல ஒரு ஓரமா லாரிய நிறுத்திட்டு கண்ணுக்கு தெரியாம எங்கெனயாவது போய் படுத்துடுவான். பின்னாடி வர்ற லாரியெல்லாம் முன்னாடி போயி நெல்ல எறக்கிகிட்டே இருக்கும். அவன் முன்னாடி லாரி நிக்கிது முன்னாடி லாரி நிக்கிதுன்னு சொல்லிகிட்டே இருப்பான். அவனோட பங்குக்கு மூட்டைக்கி ஒரு கிலோ கொறைய ஆரம்பிச்சுரும். அதுக்கும் சேத்து நாங்கதான் தெண்டம் அழுவனும்.”
“ஒரு மரக்கா நெல்லு கூடுதலா விளையாதான்னு பாடுபடுறான் விவசாயி. அவங்க வயித்துல அடிக்கிறாப்போல இப்படி பண்றீங்களே, இது சரியா?”
“இந்த வேலையில இருக்குற எல்லாருமே விவசாயிதாங்க. விவசாயத்துல உள்ள கஷ்ட நஷ்டம் என்னண்ணு தெரியும். இந்த கேள்விய எங்களப் பாத்து கேக்கக் கூடாது. நாட்டையே தூக்கி சொமக்குற விவசாய பொருளுக்கு விலையில்லாம, விவசாயி உழைப்புக்கு மரியாதையில்லாம ஒடுக்கி வச்சுருக்க அரசையும் அரசாங்த்தையும் கேக்கணும். இங்க நடக்குற எல்லா திருட்டுத் தனத்துக்கும் விவசாயிங்க தலையில கை வைக்கிறது. நாங்க வேணுன்னு செய்றதில்ல, அவங்க மறைமுகமா செய்யச் சொல்றது.”
“நீங்க ஒரு விவசாயியா இருந்துகிட்டு செய்ற தப்ப நியாயப் படுத்தி பேசுறீங்கலே சரியா?”
“நியாயப்படுத்தலைங்க, தப்பு செய்யாம இந்த வேலை செய்ய முடியாதுன்னுதான் சொல்றேன்.”
“இந்த தப்புல உள்ள நியாயத்த கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”
“ஈரப்பதம் 17 முதல் 20 % சதவீதம், காச்சல் 20% மேல எவ்வளவு வேணுன்னாலும் இருக்கலாம். நெல்லுல பச்ச இருக்க கூடாது. கருக்கா (பதரு) இருக்க கூடாதுன்னு நெல்லு தூத்துற மிஷின் வச்சு தூத்தி எடுக்கனுன்னு வரம்பு வச்சுதான் மேலிடத்துல நெல்லு எடுக்க சொல்றாங்க. அப்படியே நூறு சதவீதம் கடைபிடிக்க முடியாதுங்க.
காலத்துல ஆத்துல தண்ணி வந்து மொறையா நடவு நடறதே பெரிய விசயம். எப்படியோ பாடுபட்டு நடவு நட்டாலும், நெல்லு பூவும் பாலுமா இருக்கையில பாத்து மழைப் பேஞ்சு கைக்கெட்டுனது வாய்க்கெட்டாத நெலையா போயிரும். எல்லாரும் ஒரே நாளையில நடவு நட்றதும் இல்ல, அறுப்பு அறுக்குறதும் இல்ல. முன்ன பின்ன நடவு செய்றதால நாலு வயல் காஞ்சுருக்கும், நாலு வயல் கொஞ்சம் பச்சையா இருக்கும். அதிக நெலம் உள்ளவங்க அறுக்கும் போதே கொஞ்சமா நெலம் உள்ளவங்களும் பச்சையா இருந்தாலும் அறுத்துறனும். இல்லன்னா கொஞ்ச நெலத்துக்கு மிசின் வராது. நாத்து விட்றதுல ஆரம்பிச்சு அறுத்த நெல்லு வீட்டுக்கு கொண்டு வர்ர வரைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்கு.
விவசாயிகள்கிட்ட அரசு நெல் கொள்முதல் நிலையம் மூலமா நெல்ல எடுக்குறதுல இருந்து அரசுகிட்ட ஒப்படைக்கிற வரைக்கும் சிந்துறது செதர்றது அத்தனைக்கும் விவசாயிகள் கிட்டயே இழப்பீடு வாங்க மறைமுகமா சொல்லிட்டு கண்டுக்காம இருக்குது அரசு. நாங்க என்ன செய்ய முடியும். விவசாயிகளும் வெளஞ்ச வெள்ளாமையில ஒரு மூட்டை கருக்காயா வெளைஞ்சுச்சுன்னு நெனச்சுக்கிட்டு போறாங்க. நூறு சதவீதம் சுத்தமான நெல்லா தரம் பாத்து வாங்கச் சொல்லும் அரசுக்கு இதில் உள்ள கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியாம போகாது. தெரிஞ்சாலும் விவசாயி நலன பத்தி அக்கற படாத நெலமதானேங்க காலங்காலமா இருக்கு.”
விவசாயிகிட்ட இப்படி சுரண்டுற அரசையும், அதனோட கொள்முதல் நிலையங்களையும் இந்த தேர்தல் அரசியல்ல, இல்ல நம்ம ஆதிக்க சாதி கிராம கட்டமைப்புல திருத்த முடியுமா? இல்ல நல்ல ஆபிசரைப் போட்டுத்தான் தரத்த கூட்டமுடியுமா? ஒரு இழவும் நடக்காது. விவசாயி சம்பந்தப்பட்ட எல்லா எழவுமே அழுகி நாறிக்கிட்டிருக்கப்போ நாம யோசிக்க வேண்டியது வேற மாதிரி இருக்க வேணாமா? தேர்தல் புறக்கணிப்பு அதனோட துவக்கமா இருக்கணும், உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரமுங்கிறது முடிவா இருக்கணும்.
விகடன் பத்திரிகை தன்னை நட்டநடு சென்டராக காட்டிக் கொண்டு பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவது போன்ற ‘சிரமம்’ தினமலருக்கு இல்லை. பாஜக-வின் சின்னமான தாமரை மலரையே, ராமசுப்பையர் ஆரம்பித்த தினமலரும் கொண்டிருப்பது தற்செயலான ஒற்றுமை மட்டுமல்ல, அவசியமான உள்ளச் சேர்க்கையும் கூட.
மோடிக்கும், பாஜகவிற்கும் ஆதரவாக செய்தி போன்ற கருத்துக்கள், கருத்து போன்ற பொய்கள், கட்டுரை போன்ற அபாண்டங்கள், கேலிச் சித்திரத்தின் பெயரில் விளம்பரங்கள், நேர்காணல் வழியாக நியாயப்படுத்தல்கள், அனைத்தையும் வாசகர் வாயில், கடப்பாறை கொண்டு திணிக்கிறது தினமலர். பாபர் மசூதியை இடித்த கடப்பாறையும், பத்திரிகை வாசகர்களை வாட்டும் இந்த கடப்பாறையும் ஒரே குருகுலத்தில் வார்க்கப்பட்டவையே!
வாரணாசியில் காவி மயம் என்று பரவசப்படும் தினமலர்
இந்த புனைவு புருடாக்களை தினமலரின் வாசகர் வட்டமே பின்னூட்டத்தில் காறித் துப்பினாலும் கூட அவாளுக்கு வெட்கமோ மானமோ இருப்பதில்லை. ராஷ்ட்ர தர்மத்தை நிலை நாட்டும் போது ராஜ குருக்கள் சூடு சொரணையை பிடிவாதமாக தூக்கி ஏறிந்து விடுவார்கள். தற்போது தினமலரின் காவி வெறி பாசிச ஊளையாக பரிணமித்திருக்கிறது. இது ஏதோ தினமலர் மட்டும் விசேடமாக மாறிவிட்டது என்றல்ல, ஆர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டு சோ ராமசாமி வரை அநேக ஊடகங்களும் அப்படித்தான் முழு அம்மணமாக குத்தாட்டம் போட்டு வருகின்றன. இந்த பாசிச ஊளையின் சவுண்ட் மற்றும் அமவுண்ட் சர்வீஸ் சப்ளை சாட்சாத் மோடி&கோ தான்.
ஒரு கட்சியை ஒரு பத்திரிகை ஆதரிக்கிறது என்று இதை குறுக்கி புரிந்து கொள்வது தவறு. முதலாளிகளுக்கும், பார்ப்பனியத்திற்கும் ஒரு சேர பணியாற்றத் துடிக்கும் ஒரு கயவனையும், கட்சியையும் இவர்கள் எந்த நிலை சென்றும் ஆளாக்கத் துடிக்கிறார்கள் என்பதே முக்கியமான விசயம்.
வாரணாசியில் மோடி மனுத் தாக்கல் செய்திருக்கும் நிகழ்வை இன்றைய தினமலர் 25-04-2014 வருணித்திருக்கும் ‘அழகை’ பாருங்கள்! நூற்றாண்டு கடந்தும் பார்ப்பனியத்தின் கொலைவெறி நாக்குகளை தரிசியுங்கள்!
தினமலரின் காவி கவரேஜிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே வெளியிடுகிறோம்.
பிரதமர் வேட்பாளராக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி, நேற்று, வாரணாசியில் உணர்ச்சி பெருக்காக காட்சியளித்தார்.
குஜராத்திலிருந்து விமானத்தில், வாரணாசி வந்த மோடி, இந்துக்களின் புனித நகரமான வாரணாசியின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
‘வாழ்நாளில் ஒரு நாளாவது காசி சென்று, அங்கிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட வேண்டும்; கங்கையில் மூழ்கி பாவங்களை களைய வேண்டும்’ என்பது, இந்துக்களின் எதிர்பார்ப்பு. அத்தகைய புனித காசி நகருக்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பா.ஜ.,வினருடன், உள்ளூர் மக்களும் உற்சாகமாக கலந்து கொண்டதால், குறுகிய வாரணாசி நகர வீதிகள் காவி நிறத்தில் காட்சியளித்தன. ஆன்மிக மாநாடு நடைபெறும் இடத்தில் காணப்படும், இறை வணக்கம், கோஷ்டி கானம், வேத மந்திரங்கள் ஓதுதல் போன்றவற்றுடன், அணி அணியாக, கலைஞர்களும் வந்து, தங்கள் திறனை காண்பித்தவாறு மோடியின் ஊர்வலத்தில் வந்தனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 2 கி.மீ., தூரம் திறந்த வேனில், பா.ஜ., மூத்த தலைவர்களுடன் மோடி, வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார். செல்லும் வழியில் இருந்த, தேசத் தலைவர்கள் (இவர்கள் அனைவரும் ஜனசங்கம் எனும் பாஜகவின் முந்தைய அவதாரத் தலைவர்கள் மற்றும் சாமியார்கள் – வினவு) பலரின் சிலைகளுக்கு மாலையணிவித்து, உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சியளித்தார்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன், கூடியிருந்தவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது: வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என, பா.ஜ., மேலிடம் தான் என்னை பணித்தது என, இது நாள் வரை நான் நினைத்திருந்தேன். ஆனால், என்னை இந்த தொகுதிக்கு, இந்த புனித நகருக்கு அழைத்து வந்தது, இங்கே பாயும் கங்கா மாதா தான். அவள் தான் என்னை இந்த புண்ணிய நகருக்கு அழைத்து வந்துள்ளாள். ஆண்டவன் புண்ணியத்தில், நான் இந்த நாட்டின் பிரதமர் ஆனால், இதற்கு நன்றிக் கடனாக, புனித கங்கை நதியையும், பாரம்பரிய வாரணாசி நகரையும் போற்றி பாதுகாப்பேன்; முன்னேற்ற என்னென்ன வேண்டுமோ அவற்றை மேற்கொள்வேன். எனக்கு இன்று ஒரு புது உணர்வு ஏற்படுகிறது. என் தாயின் மடியில் மீண்டும் வந்து சேர்ந்தது போல், ஓர் உணர்வு என்னை ஆழ்த்துகிறது. அதற்கு காரணம், கங்கை மாதாவும், இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானும் தான். குஜராத்தில் நான் பிறந்த வாத்நகருக்கும், வாரணாசிக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளது. அங்கும் சிவபெருமான் தான் வீற்றிருக்கிறார்; இங்கும் சிவபெருமான் தான் வீற்றிருக்கிறார். இரண்டுமே புகழ்வாய்ந்த சிவஸ்தலங்கள். ‘காசி’ என்ற இந்த பாரம்பரிய நகரை, இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக ஆக்குவேன். அதற்கான பலத்தை ஆண்டவன் எனக்கு அளிக்க வேண்டும்.”
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இங்கே யாராவது பைத்தியகாரத்தனமாக நினைத்துக் கொண்டிருந்தீர்களென்றால் அந்த நினைப்பை மண் மூடி சமாதியாக்கிவிடுங்கள். காங்கிரசு ஆண்டாலும், உச்சநீதிமன்றம் தில்லை கோவில் தீர்ப்பு வழங்கினாலும் கூட இது இந்து நாடாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் பாஜக மட்டும் அதை ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக பறைசாற்றுகிறது.
சுடுகாட்டை மறைக்கும் வளர்ச்சி காமராக்கள்
காசிக்கு சென்று, கங்கையில் குளித்து, பாவம் தொலைத்து, புண்ணியம் தேடும் இந்துக்களின் புண்ணிய பூமியில் மோடியின் உணர்ச்சி பெருக்கை அப்படியே உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறது தினமலர். பாம்பின் கால் பாம்பறியும், பார்ப்பனியத்தின் பரவசத்தை தினமலர்தான் உணரும். இதிலிருந்தாவது மோடி காசியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதையம் அவர் இந்திய மக்களில் மற்றவர்களை ஒதுக்கிவிட்டு ‘இந்து’க்களை மட்டும் ரத்த பந்தமாக கருதுகிறார் என்பதும் வெளிப்படையானது. ஆனால் காசிக்கு, சூத்திர மற்றும் பஞ்சம இந்துக்களும், பழங்குடி மக்களும் போவதில்லை, கங்கை புனிதத்தை அறிந்ததில்லை என்பதால் காசி வாழ் புண்ணிய பூமியின் இந்துக்கள் யார் என்றால் பார்ப்பன-ஷத்திரிய-வைசிய வருண பிரிவுகள் மட்டும்தான். அந்த வகையில் மோடியும் அவரது கட்சியும் பார்ப்பன ‘மேல்’சாதிகளைத்தான் தமது கலாச்சாரம் மற்றும் வர்க்க அடிப்படைகளாக கொண்டிருக்கிறார்கள். அதனால் மோடி வெற்றி பெற்றால் அவர் சிறுபான்மை ‘இந்துக்களின்’ பிரதமர்தான். பெரும்பான்மை இந்திய மக்களுக்கு அல்ல.
அவர் பிறந்த ஊரிலும் சிவபெருமான், போட்டியிடும் ஊரிலும் சிவபெருமான் என்ற இந்து ஞான மரபின் ஆன்மீக உணர்ச்சி பரவசத்தில் திளைக்கும் மோடியின் மனது அல்லாவையும், கர்த்தரையும், புத்தரையும், குரு நானக்கையும் தொழும் இதர சிறுபான்மை மக்களை எப்படி கருதும்? ஆதாரம் வேண்டுவோர் குஜராத் 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலை கதைகளை உற்று நோக்கலாம். அல்லது அசீமானந்தாவின் தொண்டு பணிகளில் மூலம் சிறுபான்மை மக்களை குண்டுகள் வைத்து அழிக்க முயன்ற காவி-ய கதைகளையும் வாசிக்கலாம்.
பாஜகவின் தெருப் பேச்சாளர்கள் போல மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று மோடி பேசவில்லை. மாறாக ‘நேர்மறையில்’ காசி, புனித பூமி, சிவபெருமான், ஆன்மீகத் தலைநகர் என்று அடுக்குகிறார். இந்த நேர்மறைகளை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மோடி அரசு கொண்டு வர இருக்கும் புதிய தடா,பொடா சட்டங்கள் கவனித்துக் கொள்ளும்.
இத்தகைய பார்ப்பனிய படிமங்களில் பரம்பொருளை தரிசித்த பரவசம் கொள்ளும் மோடி, மற்றொரு புறம் சிறுபான்மை மக்களின் அடையாளங்களையோ இல்லை கம்யூனிஸ்டுகளின் திட்டங்களையோ எவ்வளவு அறுவெறுப்புடனும், ஆத்திரத்துடனும் நோக்குவார் என்பது இயல்பான ஒன்று.
இந்த காவி மயம் மக்களுக்கு பய பயம்
வாரணாசி முழுக்க காவி மயம் என்று புல்லரிக்கிறது தினமலர். இந்த காவி மயம் எத்தனை மக்களை கொன்று அழித்திருக்கிறது என்பதை அறிந்த மக்களும் கூட இந்த காவி மயத்தை பயங்கரவாத மயம் என்று அச்சத்தோடு பார்க்கிறார்கள். மோடியின் மனுத்தாக்கல் ஆன்மீக மயமாகவும் இருந்தது என்று தினமலர் ‘புனிதத்தை’ தோண்டிக் கொண்டு வருகிறது. இந்த பார்ப்பனிய ஆன்மீக மயம் எத்தனை சூத்திர-பஞ்சம மக்களின் தலையெழுத்தை அடிமைகளின் இலக்கணமாக மிரட்டுகிறது என்பதையும் வரலாறு பதிந்தே வந்திருக்கிறது.
மோடியின் அரசியல் வெற்றியை அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு முதலாளிகளும், அம்பானி-அதானி முதலான தரகு முதலாளிகளும், அதிகார வர்க்கமும், ஊடகங்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு தங்களது அஜெண்டாவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ்-ஸும் காத்திருக்கிறது.
இப்படி இரு எதிரிகளும் ஒன்றாக சேர்ந்து இந்திய மக்களை ஆட்டிப் படைக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
வாரணாசி தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின் போது மோடியிடமும், தினமலரிடமும் வெளிப்பட்டிருக்கும் இந்த ‘ஆன்மீக’ உணர்ச்சியை கட்டுடைத்துப் பார்த்தால் பார்ப்பனிய பயங்கரவாதத்தை பார்க்கலாம்.