மாஞ்சோலை: தொடரும் அநீதி..
தமிழ்நாடு அரசு மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து காப்புக் காடுகளாக அறிவித்தது. பல்வேறு கட்டப் போராட்டம், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியும் தொழிலாளிகளின் வாழ்வில் இன்னும் விடியல் வரவில்லை.
8 புதிய துறைமுகங்கள்: தமிழ்நாட்டைக் கூறுபோடும் தி.மு.க அரசு!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துறைமுகங்கள் 30 ஆண்டு முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட குத்தகைக்கு விடப்படும் என்றும் அதற்கு ஏற்றார் போல் ”நெகிழ்வான துறைமுக கொள்கை” உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
தனியார்மயம்-தாராளமயம்-உலகமய கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.
சென்னை மின்சாரப் பேருந்து: நிறுவப்படும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
நட்டத்திற்குக் காரணமாக உள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்துத் துறைக்குள் கார்ப்பரேட்களை திணிக்கிறது தி.மு.க. அரசு.
பரந்தூர் விமான நிலையம்: மக்களை மிரட்டி நிலங்களைக் கையகப்படுத்தும் தி.மு.க அரசு!
"வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களைக் கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்."
தொடரும் பேருந்து விபத்துகள்: தி.மு.க அரசின் கார்ப்பரேட் கொள்கையே காரணம்!
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையப் போகிறோம் என்று சூளுரைத்து கல்வித்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.
நீட் தேர்வு: மாணவர்கள் பலியும், தி.மு.க அரசின் துரோகமும்!
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது.
அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு: தி.மு.க. அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை
இது சென்னை நகர உழைக்கும் மக்கள் மட்டும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையல்ல. லட்சக்கணக்கான மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி தங்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் பேரபாயம் தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கிறது.
ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம்: வாழத் தகுதியற்ற இடமாக்கப்படும் வடசென்னை!
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், தற்போது ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
லெட்டர் பேட் போக்குவரத்து தொழிற்சங்கங்களும், தி.மு.க அரசின் துரோகமும்
லெட்டர்பேட் சங்கங்களின் தலைவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் சிரமமில்லாத வேலைகளை ஒதுக்கி செல்லப் பிள்ளையாகப் பராமரிப்பது, அதன் மூலம் தங்களது கையாட்களாக மாற்றிக் கொள்வது என்பதுதான் போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் நடைமுறையாக உள்ளது.
அரசு மருத்துவர்களை வஞ்சித்துவரும் தி.மு.க அரசு!
"கரோனா தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்யாமல் உள்ளனர். இதனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது."
பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு
விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது
கீழடியை கருவறுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தொல்லியல் துறை!
கண்முன்னே கிடைத்த கீழடி தமிழ் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரீகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!
பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.