இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கையோடு ஆர்.எஸ்.எஸ். சிவசேனா கும்பல் மும்பய் நகரில் நடத்திய கலவரத்தின்பொழுது, அந்நகரின் வடாலா பகுதியில் அமைந்துள்ள ஹரி மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்கள் மீது மும்பய் மாநகர போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் ‘காணாமல்’ போனார். மும்பய் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்படுகொலை சம்பவத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக விசாரித்து வந்த மையப் புலனாய்வுத் துறை, “இத்துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சுதந்திரமான சாட்சியங்கள் (Neutral witnesses) எதுவுமில்லை” என நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அறிக்கை அளித்திருக்கிறது. இத்துப்பாக்கிச் சூடு சம்பவமும், அது பற்றி மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி முடிவுக்கு வந்த விதமும் இந்து மதவாதம் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் எத்துணை ஆழமாக ஊடுருவி நிறைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
ஜனவரி, 1993 இல் ஆர்.எஸ்.எஸ். சிவசேனை கும்பல் தலைமையில் நடந்த இந்து மதவெறிக் கலவரம் மும்பய் நகரெங்கும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு மதிய வேளையில், போலீசு உதவி ஆய்வாளர் நிகில் காப்சே தலைமையில் வந்த போலீசு பட்டாளமொன்று ஹரி மசூதியைச் சுற்றி வளைத்தது. மதிய வேளை தொழுகை நடந்துகொண்டிருந்த நேரமது. அக்காக்கிச் சட்டை கிரிமினல் கும்பல் எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாது, மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்களை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் மசூதிக்குள்ளேயே குண்டடிபட்டு இறந்து போனார்கள். ஒருவர் மசூதியிலிருந்து வெளியேற முயன்றபொழுது, நேருக்கு நேராக மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட முசுலீம்களின் உடல்களை போலீசு வேனில் எடுத்துப்போட்டு அப்புறப்படுத்திய மற்றொரு முசுலீம் அதற்குப் பின்‘காணாமல்’ போனார். பலர் படுகாயமடைந்தனர். இத்துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக, ஹரி மசூதிப் பகுதியில் முசுலீம்கள் கலவரத்தில் இறங்கியதாகவும் கொலைவெறியோடு இந்துக்களைத் தாக்கியதாகவும் மும்பய் போலீசாரால் கதை புனையப்பட்டதோடு, அப்பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் 50 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.
இத்துப்பாக்கிச் சூடு நடந்த ஒருசில நாட்களிலேயே அது பற்றி விசாரணை நடத்திய சர்வதேச பொதுமன்னிப்புக் கழகம் (Amnesty International) மும்பய் போலீசின் கட்டுக்கதையை அம்பலப்படுத்தியதோடு, நிகில் காப்சேயின் தலைமையில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு பட்டாளத்தைக் குற்றவாளியாகவும் அறிவித்தது. மும்பய்க் கலவரம் பற்றி விசாரணை நடத்துவதற்காக மகாராஷ்டிர மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறீகிருஷ்ணா கமிசனும், “மனிதத்தன்மையற்ற முறையிலும் மிகக் கொடூரமாகவும் நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பளித்தது.
இத்துப்பாக்கிச் சூடு பற்றிய கிருஷ்ணா கமிசனின் பரிந்துரையை மகாராஷ்டிரா மாநிலத்தைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்ட பா.ஜ.க. சிவசேனா கூட்டணியும் சரி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணியும் சரி, ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. கலவரத்தின்பொழுது இந்து மதவெறி கிரிமினல் கும்பலுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவிக்கும் வேலையை இவ்விரண்டு அரசுகளுமே சிரமேற்கொண்டு செய்தன.
இந்நிலையில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த ஃபரூக் மாப்கர், அப்பாவி முசுலீம்களைச் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்த போலீசாரைத் தண்டிக்கக் கோரிப் போராடத் தொடங்கினார். இதனையடுத்து, நிகில் காப்சே உள்ளிட்ட போலீசார் மீது துறைரீதியான விசாரணை என்ற நாடகத்தை நடத்தி, அவர்களை உத்தமர்களாக அறிவித்தது, மாநில அரசு. இதன் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹரி மசூதி படுகொலை உள்ளிட்டு, அக்கலவரத்தின்பொழுது நடந்த பல படுகொலை சம்பவங்களை விசாரிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளைக் கொண்டே உருவாக்கப்பட்ட இச்சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஹரி மசூதி உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளை ஊத்தி மூடும் வேலையைச் சட்டப்படியே செய்து முடித்தது. இனி மாநில அரசை நம்ப முடியாது என்ற நிலையில் இப்படுகொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஃபரூக் மாப்கர் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கு மும்பய் உயர் நீதிமன்றத்தில் நடந்தபொழுது, “இது சாதாரணமான வழக்கு” எனக் கூறி, இவ்வழக்கு விசாரணையை மீண்டும் மகாராஷ்டிரா போலீசிடமே தள்ளிவிட முயன்றது, சி.பி.ஐ. எனினும், ஹரி மசூதி படுகொலையை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மும்பய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டின்பொழுது, “போலீசு அதிகாரி நிகில் காப்சே இவ்வழக்கின் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாகப் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக” வாதாடியது, காங்கிரசு கூட்டணி அரசு.
இத்துணை இழுத்தடிப்புகள், எதிர்ப்புகளுக்குப் பின் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிர் பிழைத்த முசுலீம்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது. “அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்; எனவே, அவர்களின் சாட்சியத்தை சுதந்திரமான சாட்சியமாகவோ, நம்பகமான சாட்சியமாகவோ கருத முடியாது” என அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து அந்த சாட்சியங்களை நிராகரித்தது. மேலும், நிகில் காப்சே உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த முசுலீம்கள் அனைவரின் மீதும் கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற காரணத்தையும் வலிந்து சுட்டிக்காட்டியது. அவ்வழக்குகள் பொய் வழக்குகள் என்பதையோ, அந்த உண்மை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டதையோ ஒதுக்கி வைத்துவிட்ட சி.பி.ஐ., பாதிக்கப்பட்ட முசுலீம்களைக் குற்றவாளிகளாகவே கருதி ஒருதலைப்பட்சமாகவே தனது விசாரணையை நடத்தியது.
இவ்விசாரணையின்பொழுது, பக்க சார்பு அற்றவர்கள் என்று தன்னால் மதிப்பிடப்பட்ட இரு சாட்சிகளும் சி.பி.ஐ.ஆல் விசாரிக்கப்பட்டனர். அதிலொருவர் இந்து; மற்றொருவர், முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர். அந்த இந்துவின் சாட்சியம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஃபரூக் மாப்கர் அளித்த சாட்சியத்திலிருந்து வேறுபட்டிருந்தது. முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர் அளித்த சாட்சியமோ, பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அளித்த சாட்சியங்களை ஒத்திருந்தது. ஒரு இந்து அளித்த சாட்சியத்தை நம்பத்தக்கது என்று ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., மற்றொரு சாட்சியம் அளித்த வாக்குமூலத்தை, அவர் முசுலீம் என்பதனாலேயே நிராகரித்தது.
இவை அனைத்தும் சி.பி.ஐ. நடத்திய விசாரணை ஆர்.எஸ்.எஸ். சார்பு இந்து மதவாதக் கண்ணோட்டத்தில், அதாவது, இந்து பொய் சொல்லமாட்டான், துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமாக நடந்திருந்தாலும், துப்பாக்கியால் சுட்டவன் நம்ம ஆளு என்ற முசுலீம் வெறுப்பு அரசியல் அடிப்படையிலும்; இந்து மதவெறி கொண்ட போலீசாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும்தான் நடத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன. ஃபரூக் மாப்கர் சி.பி.ஐ. அளித்துள்ள இந்த அறிக்கையை நிராகரிக்கக் கோரி தற்பொழுது வழக்கு தொடுத்திருக்கிறார்.
குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த குல்பர்க் சொசைட்டி படுகொலைகளுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, மோடிக்கும் அப்படுகொலைக்கும் தொடர்பில்லை என அறிக்கை அளித்திருப்பதாகக் கூறப்படுவதையும், ஹரி மசூதி படுகொலை வழக்கில் தொடர்புடைய காக்கிச்சட்டை கிரிமினல்களை விடுவித்து சி.பி.ஐ., இறுதி அறிக்கை அளித்திருப்பதையும் வெவ்வேறானதாகப் பிரித்துப் பார்க்க முடியாது.
அதுபோல, குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலையும், மும்பய்க் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் காங்கிரசையும் இருவேறு துருவங்களாகப் பார்க்க முடியாது.
அப்சல் குருவுக்கும், கசாபுக்கும் தூக்கு தண்டனை விதிப்பதில் காட்டப்பட்ட நீதிமன்ற முனைப்பும் வேகமும், பால் தாக்கரே, அத்வானி, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கிரிமினல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்கூடக் காட்டப்படுவதில்லை. நரேந்திர மோடி மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஜாகியா ஜாஃப்ரி கடந்த பத்தாண்டுகளாகவும், நிகல் காப்சே மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஃபரூக் மாப்கர் கடந்த இருபது ஆண்டுகளாகவும் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதவெறிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குச் சட்டப்படியான உரிய நீதியை வழங்காமல் அலைக்கழிப்பதன் மூலம், அவர்களை இந்திய அரசு இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது என்பது மட்டுமல்ல, முசுலீம் பயங்கரவாதம் வளர்வதற்கான வாய்ப்பினையும் வாரி வழங்கி வருகிறது.
___________________________________________
– புதிய ஜனநாயகம், மார்ச் – 2012
___________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
//எதிர்ப்புகளுக்குப் பின் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிர் பிழைத்த முசுலீம்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது. “அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்; எனவே, அவர்களின் சாட்சியத்தை சுதந்திரமான சாட்சியமாகவோ, நம்பகமான சாட்சியமாகவோ கருத முடியாது” என அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து அந்த சாட்சியங்களை நிராகரித்தது.//
உலகத்திலே ஒரு நாட்டின் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவர்களை சிறுபான்மை மக்களாக மாற்றி போலி இந்து மதத்தை உருவாக்கி அப்பாவி இஸ்லாமிய மக்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அதற்குக் காரணம் அவர்களே என்று பொய்ப் பகட்டினை உண்டாக்கி அம்மக்களை அனு தினமும் அச்சத்தில் வாழ செய்து கொண்டு இருக்கும் இந்த வல்லரசு சொல்லுவது மட்டும் சத்திய மவ ஜெயத்தே.
உலகத்திலே ஒரு நாட்டின் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவர்களை சிறுபான்மை மக்களாக மாற்றி ////
.
.
அப்போ இந்தியாவிலும் முஸ்லிம்கள் பெரும்பானமைதானா?அப்போ அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேண்டாம்னு சொல்றேங்களா?ரைட்டு விடு!
அப்படி பார்த்தா எண்ணிக்கையில் நம்பர் ஒன்னில் இருக்கும் கிறித்துவர்களும் சிறுபான்மை இல்ல!அப்படிதானே?சரி அந்த சலுகைகளும் எதுக்கு?
எது நீதி மறுப்பு, சமுதாயத்தில் ஒடுக்கப் பட்ட நிலை, இஸ்லாமியர்களின் மீது பொய் பிரச்சாரம் இதனே நீங்க சொல்லும் சலுகை. இந்த சலுகை தான் வேண்டாம் என்று சொல்கிறோம்.
அப்படியே பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் நடை பெறும் கட்டாய மத மாற்றங்கள், இந்து கோவில் இடிப்புகள!அதை பூசி மெழுகுதல்!மேலும் Blasphemy law குறித்து விமர்சித்த உங்களை போன்ற ஒரு மத சார்பற்ற(என சொல்லிகொள்ளும்) பாகிஸ்தான் மந்திரி கொலை செய்யப்பட்டது இதையெல்லாம் வினவு எழுத மாட்டீங்களா?
ரவி வினவிற்கு செலக்டிவ் அம்னீஸியா…
குறைந்த பட்சம், இந்தியாவில் தொடர்கதையான முஸ்லீம் தீவிரவாதத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்ததுன்டா…
இதன் வேர் 1900 லிருந்து “அகண்டு” ஆரம்பிக்கும், ப்பீ யா அதை ஆராயலாமே?
ஏன் 1900 லிருந்து “அகண்டு ஆரம்பித்தால் அதை ஆராயும் அறிவும் திறன் உமக்கு இல்லையா…க்ரப்பான்
நண்பரே கட்டுரையை நன்றாக படியுங்கள். இந்தியாவுல உள்ள முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று இந்த கட்டுரை சொல்கிறது.. அதை பற்றி கருத்து சொல்லாமல் எதோ உளறி கொட்டி இருக்கிறீர்கள்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பற்றி பேசுவது போல பாகிஸ்தானில் இந்துக்கள் எப்படி நடத்த படுகின்றனர் என்பதை வினவு வசதியாக மறந்துவிட்டதை நியாபக படுத்துவதே எங்கள் நோக்கம்!
பாஸ் இந்த “மதச்சார்பற்ற” நாட்டில்தான் வெள்ளைக்காரனுக்கு கா(கூ)ட்டி குடுத்தவன் பிரதமராக முடியும். இதுவரை மதவெறியை தூண்டியதற்காக ஒரே ஒரு “இந்து”வின் மயிரையாவது புடுங்கிருக்கிங்களா? ஆனால் பொடா சட்டத்தில் கைதானோரில் பெரும்பாலானோர் அப்பாவிகள்னு உச்ச நீதிமன்றமே சொல்லியது. அதற்கு காரணமானோரில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்.இவ்வளவு ஏன் கோத்ரா வழக்கை குஜராத்தில் நியாயமாக விசாரணை செய்யக்கூட முடியாது- இதையும் நான் சொல்லலை… இந்த நாட்டில் எஅடைபெற்ற அநீதிக்கு பதில் சொல் அப்புறம் பேசு பாகிஸ்தான், கிர்கிஸ்தானு?
தீவிர வாதம் இஸ்லாமியர்களின் தனித்துவம் கிடையாது. அது எல்லா மதங்களிலும் இருக்கிறது. இந்தியாவில் அதிஹமாக தீவிரவாத செயலில் இடுப்பகுடியவர்கள் இஸ்லாமியர்கள் கிடையாது. பழி மட்டும் இஸ்லாமியர்கள் மீது….
http://www.youtube.com/watch?v=6C-onz-CGXk&feature=relmfu
இதை பார்த்து விட்டு சொல்லுங்கள். அதற்க்கு மேலும் உங்களுக்கு புரியவில்லை என்றால் உங்களுக்கு அறிவும், காது கேட்கவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
ஷியா சன்னி முஸ்லிம்கள் மாறி மாறி தங்கள் மசூதிகளில் வெடிகுண்டு வைத்து கொள்வது போலவா?குண்டு வெடிச்சதில் காது கேக்கல அய்யா!
இப்ப பிரச்னை இந்தியாவுல தான். அத முதலில் பார்போம். பெற மாற்றி பின்னுட்டம் போட்ட ஆளு தான நீங்கா. உங்களூட யோக்கியதை நல்லாவே தெரியுது.
எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் கிடையாது, ஆனால் தீவிரவாதிகளில் பெரும்பான்மையானோர் முஸ்லீம்லளே…
நண்பரே நீங்கள் சொல்லுவது பொருத்தமற்றது. வேண்டுமானால் இப்படி சொல்லலாம். அனைத்து இந்து சகோதரர்களும் பயங்கரவாதிகள் கிடையாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் சரி தானே.
கட்டுரையின் மையக் கருத்துக்கு வாருங்கள். பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்தவனின் வாக்குமூலம் பொய் என்றும், பாதிப்பை ஏற்படுத்தியவனின் பொய்யை உண்மை என்றும் சொல்வதைப் பற்றி என்ன கூறப்போகிறீர்கள்? முஸ்லீம் என்றால் தீவிரவாதி என்ற மாயையில் மூளை மழுங்கியவர்களாக மாற்றப்பட்டதாலேயே நீங்கள் இவ்வாறு பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் தெளிந்த மனதுடன், விருப்பு வெறுப்பின்றி பார்ப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள்.
ஆமாமா நீங்க ரொம்ப தெளிந்த மனதுடன் விருப்பு வெறுப்பின்றி எழுதுகிறீர்கள்…
பம்பாயிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வருசம் வருசம் ஏதோ பண்டிகை போல குண்டு வைக்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றிப்பேசத்தயாரா?
இங்கே பிறந்து வளர்ந்து, சிற்பான்மையெனரென அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, இந்தியாவிற்கே துரோகம் செய்யும் கயவர்களைப் பற்றிப் பேசத்தயாரா?
காஸ்மீர் மண்ணின் மைந்தர்கள், காஸ்மீர் பண்டிட்டுகள் பற்றிப் பேசத்தயாரா??
உங்க கண்ணுக்குத்தான் அதெல்லாம் தெரியாதே…உஙகளுக்குத்தான் செலக்டிவ் அம்னீசியாவாச்சே(வினவு & கோ)…னல்ல வேளை மும்பையில கசாப் பயல ஒரு வீரம் மிகுந்த காவல் துறை வீரர் பிடித்து விட்டார், இல்லையென்றால் இன்னேரம் வினவு வந்துவிடும் இது இந்துத்தீவிரவாதம் என்று…
ஏணி மடம் என்றால் திரும்பத் திரும்ப —- மடம் என்றே சொல்கிறீர்களே. கட்டுரையைப் பற்றி பேசுங்கள் என்றால், அதை விடுத்து தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறீர்களே. தீவிரவாதத்தைப் பற்றி அதற்குரிய இடத்தில் பேசுவோம்.
எத்தனை இஸ்லாமியர்கள் சலுகைகளை அனுபவித்துவிட்டு இந்தியாவிற்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொல்லுங்களேன். ஆனால் அதேசமயம் ராணுவத்தில் பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்து நாட்டைக் கூட்டிக்கொடுத்த் பாரத மைந்தர்கள் என்று நீங்கள் கூறும் ஜாதியைச் சேர்ந்தவர்களின் பட்டியல் மிக நீளம் என்பதை மறவாதீர்கள்.
காஸ்மீரைப் பற்றி பல கட்டுரைகள் வினவிலேயே இருக்கிறது. அவற்றைப் படித்தாலும் நீங்கள் இப்படித் தான் பின்னூட்டமிடுவீர்கள். என்னமோ போங்கள்.
“பம்பாயிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வருசம் வருசம் ஏதோ பண்டிகை போல குண்டு வைக்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றிப்பேசத்தயாரா?”
மணிரத்னம் படத்தில் வெண்டுமானால் உங்க பப்பு வேகும், கலவரத்தின் வேர் பால்தாக்கரே என்பது அந்த கிலட்டு நாயின் வாக்குமூலமே சாட்சி.. பாவம் பையா பம்பாய் பற்றியெல்லாம் தெரிந்திருப்பாரோ என்னவோ.
வாஜ்பாயை விட மிகப் பெரிய துரோகியை வசதியாக மறந்துவிட்டு எத்தனை நாளைக்கு இதே கொயபல்ஸ் வேலையை செய்வதாக உத்தேசம்… உங்க ரோல் மாடல் இந்துத்வா கும்பல் வெள்ளைக்காரனுக்கு செய்த வெலைக்கு பெயை என்ன வைப்பதாக உத்தேசம் ப்பீ யா அவர்களே?
முதலில் காசுமீர் பற்றி தெரிந்து கொன்டு பேசுங்கள், அரசியலமைப்பில் 370 வந்தது எப்படி, கரிசிங் எதனால் இந்தியாவுடன் சேர்ந்தான், தேசிய மாநாட்டு கட்சி, ஐ.நா வில் 1950களில் இந்தியா சொன்னது என்ன இதைப்பற்றியெல்லம் குறைந்த பட்சம் யாரிடமாவது கேட்டுவிட்டாவது வாங்க ப்பீ யா… இல்லைனா இடஒதுக்கீடெ பற்றி உங்க “ம்ணி” எடுத்த இருவர் படம் மாதிரி கேவலமா இருக்கும்.
கசாப் பயலை பிடித்த காவல் துறை வீரரை போட்டுத் தள்ளிய கூட்டதைச் சேர்ந்தவரல்லவா நீஙகள்.
நம் அனைவர் மீதும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
.
இதெற்கெல்லாம் ஒரே தீர்வு இஸ்லாமிய ஆட்சி அமைவதுதான்!அப்போதுதான் அமைதி நிலவும்!ஒழுக்கம் பிறக்கும்!சமத்துவம் பேணப்படும்!இன்ஷா அல்லாஹ் அது கூடிய விரைவில் நடப்பதாக!
Then only u people can marry 4 wives(including 3 year old kid) and enjoy slave girls so ISLAMIC rule shud come immediately… Ithellam Oru Polapu
jenil இசுலாமிய ஆட்சி வேணுமுன்னு மறுமொழி போட்டவருதான் சுரேஷ்ங்குற பேருலயும் போட்டுருக்காரு. பொம்மையைப் பாருங்க!
இவங்க வேறு யாருமில்லை. பிள்ளையார் சிலை உடைத்துவிட்டு அதை முசுலிம் உடைத்தானு பிரச்சாரம் செய்யும் யோக்கியவாஙள்.
yes , U r right..I didn’t notice.
நம் புனித மதத்தில் சலுகை இல்லையேத் தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அதிகம் செய்திருப்பவர்கள் இங்கேதான் மிக அதிகம். அதிலும் கட்சிவாரியாக கணக்கெடுத்தால், ஏக பத்தினி விரதனைப் போற்றுவதாய் சொல்லி பிழைப்பு நடத்தும் காவிக் கட்சியில் மிக மிக அதிகம்.
இது போன்ற பின்நூட்டங்களுக்காகவே வினவு கட்டுரை எழுதுறாரு போல!
பாகிஸ்தானில் மத துவேஷ சட்டம் இதை எதிர்த்த ஒரு பாகிஸ்தான் மந்திரி அவரது காவலாளியாலேயே கொல்லப்பட்டார்(இதற்கு அந்த அரசே துணை போனது).அதே போல ஒரு அப்பாவி கிறித்துவ பெண்மணியும் இதில் சிக்க வைத்து தூக்கில் போட்டானர்!இதை பற்றி வினவு ஒரு முறை எழுதி உள்ளதா?
http://dharumi.blogspot.in/2011/01/466.html
பாகிஸ்தானில் கம்யூனிசத்தை வளர்க்கவே முடியாது!கம்யூனிசத்தின் ஒரு அங்கம கடவுள் மறுப்பு!அப்படி கடவுளை மறுத்து ஒரு வார்த்தை அங்கு பேசினாலே Blasphemy law படி தூக்கு தண்டனை!அதனால் வினவு இந்தியாவில் ஒளிந்து கொண்டு பொழப்பை நடத்துகிறார்கள்!
ரவி,ரஹீம்,சுரேஷ் – இன்னும் கிருத்துவ மத்தில் ஒரு பெயர், சீக்கிய மத்தில் ஒரு பெயர், புத்த மததில் ஒரு பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.
உன் யோகியதைதான் சற்று முன்பே அம்பலப்படுத்தப்ப்ட்டுள்ளதே… வெக்கமில்லாம பின்னூட்டம் வேற….
இதுக்குதான் எங்க அய்யா அப்பவே பார்ப்பன இந்து மதத்தை விட்டொழித்து இஸ்லாமை தழுவலாம் என்றார்!என்ன சொன்னார் எங்க அய்யா?பார்ப்பன சமூகம் மறந்திருக்கும்!எனவே மீண்டும் ஒரு முறை அவர் வார்த்தைகளில்:
***********************************************************************************
21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-
‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’
26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-
‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’
04-06-1959 ‘விடுதலையில்’ எழுதுகிறார்:-
‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’
ஆகா வாழ்க போலி நாத்திகர் பெரியார் சாமி!
வாழ்க உனண்மை ஆத்திகர் சங்கராச்சாரிதசன் ரவி
ஆம்! தமிழை காட்டு மிரான்டி பாஷை என்றும் தமிழை படித்தால் எவனும் உருப்பட மாட்டான் என்றும் கூரியவர்தான் பெரியார். முஸ்லீம்கள் தஙகள் பெண்களை முழுமையாக முக மூடி அனைந்து கொன்டு அழைத்து வருகிரார்கள்! பென்னுருமையைப் பற்றி என்ன பேசியும் பிரயொசனம் இல்லை. ஒரு பெண் உலகத்தை பார்க்கவே முடியாது!! என்ன கொடுமை பாருங்கள் என்று பெரியார் கூரியிருக்கிரார்.!!!!!!! கிருத்துவர்கள் பாவிகலே பாவிகளே என்று பிரச்சாரம் செய்கிரார்கள்!!! ஒருமனிதனைநல்லவன் என்று கூரினால்தான் அவன் மனமாறி நால்லவ்னாவான். பாவி யென்று விலம்பரப்ப்டுத்திணால் அவனும் பாவியாகவே மாரிவிடுவான். இது பெரியாரின் பொன்மொழிகள்!!!!
போலி இந்து பார்ப்பனிய மதத்தில் உடன் கட்டை ஏறுவது, தேவதாசி கலாச்சாரம் அது தப்பே இல்லை என்று வாதிட்ட சுகபோகிகள், தாலி கலாச்சாரம் இது போன்ற முற்போக்கான பெண் உரிமை பற்றி பெரியார் சொன்னதை விட்டுவிட்டிர்கள் இதையும் சேத்து சொல்லுங்க.
அதெல்லாம் இந்த காலத்தில் இருக்கா?இந்து மதம் காலத்துக்கு தகுந்தாற்போல தன்னை மாற்றிகொண்டது!ஆனால் இசுலாமிய மதத்தில் அப்படியா?600 AD இல் சொன்ன சட்ட திட்டங்கள் பெண்ணடிமை சட்டங்கள் இன்னும் உள்ளதே!அதை பற்றியும் சொல்லுங்கோ!
“அதெல்லாம் இந்த காலத்தில் இருக்கா?இந்து மதம் காலத்துக்கு தகுந்தாற்போல தன்னை மாற்றிகொண்டது”
மாத்தலேனா பரேடு வாங்கணும்,- ப்ராமணாள் கபே ஒழிந்தது எப்படி- நீங்க வயிறெரியும் அதே ராமாசாமியால்….காலத்துக்கு தகுந்தாற்போல பார்ப்பான் உச்சி மயிர் கூட மாறாது….
இந்து மதத்தில் உடன்கட்டை ஏறுவதும் தேவதாசி முறையும் இப்போது எங்கே உள்ளது? ஆனால் முஸ்லீம் மதத்தில் இப்போது “பர்தா” அணிந்துகொண்டுதான் வெளியே வருகிறார்கள். எதோ ஒரு காலத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த செயலை இப்போது கூறி உங்கள் செயலை நியாயப்படுத்த நினைக்கிறீர்கள். பார்பனியம் என்று கூறி நான் கூறிய கருத்திற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. உங்கள் பெண்களையும் “பர்தா”யுடன் அலைய சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் “பாவிகள்” என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்!!!!!! அற்புதமான் தமிழை “காட்டுமிராண்டி” பாஷை என்று கூறியதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்! இதுதான் உங்கள் தமிழ் பற்று! முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள்!!!!
//ஆனால் முஸ்லீம் மதத்தில் இப்போது “பர்தா” அணிந்துகொண்டுதான் வெளியே வருகிறார்கள். எதோ ஒரு காலத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த செயலை இப்போது கூறி உங்கள் செயலை நியாயப்படுத்த நினைக்கிறீர்கள். பார்பனியம் என்று கூறி நான் கூறிய கருத்திற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. உங்கள் பெண்களையும் “பர்தா”யுடன் அலைய சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் “பாவிகள்” என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்!!!!!! //
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து கொள்வது போல் இந்து பெண்கள் தாலி அணிந்து கொள்கிறார்கள். என்னமோ நீங்க எல்லாம் சீர்திருத்த சிகாமணி போல் பேசுறிங்க. நீங்க ஒருவிதத்தில் பெண் அடிமை தனத்தை பேனிக் காப்பது போல் அவர்களும் ஒரு விதத்தில் செய்கிறார்கள். எல்லாம் ஒரே குட்டையில ஊர்ன மட்ட தானே. அடுத்தவன பாவினு சொல்லுவதற்கு முன்னாடி நீங்க புனிதமானவர் தானா என்று பாருங்கள்.
//அற்புதமான் தமிழை “காட்டுமிராண்டி” பாஷை என்று கூறியதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்! இதுதான் உங்கள் தமிழ் பற்று! முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள்!!!!//
அப்படி பட்ட செம்மொழியான தமிழை நீச மொழி அது கடவுளுக்கு புரியாது என்று சொன்ன பார்ப்பனிய வழி வந்த ஆர் எஸ் எஸ் நாட்ராயனே. முதலில் அடுத்தவனை குறை சொல்லுவதற்கு முன்பு உங்கள் குறைப்பாட்டினை திருத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்ப் பற்று உங்களுக்கு பொங்கி வழிகிறது என்றால் முதலில் கோயில்களில் தமிழில் மட்டும் அர்ச்சனை செய்யுமாறு உங்கள் பார்ப்பனிய அர்ச்சகர்களை சொல்ல வேண்டியது தானே.
போலியான தமிழ் பற்றுயுடை நீங்கள் எல்லாம் என்னை பெயர் மாற்ற சொல்லாதீர்கள். உங்க ஆர் எஸ் எஸ் பம்மாத்து வேலையேல்லாம் உங்க டிரவுசர் கூட்டத்தோட நிப்பாட்டீக் கொள்ளுங்கள்
இங்கு ஒரு காவி அம்பி வேறு ஒரு முகமூடியில் வந்து வாய் தவறி சொன்னாலும் உண்மையையே சொல்லியிருக்கிறான்!இஸ்லாமிய சமூகமே இதற்கு தீர்வு!
அப்புறம் இந்த பேரில்லா பிச்சைக்கு இன்னும் பத்து முஸ்லிம் பசங்க நேம் கிடைச்சிடுச்சு… அப்ரிடி, அன்வர் னு ஆரம்பிப்பாரு.. சொந்த பேருல எழுத துப்பும் வக்கும் இல்லாத இவர்கள் தான் RSS இன் குழந்தைகள்.
தென்காசியில் RSS பில்டிங் மீது அவர்களே வெடிகுண்டு வைத்து விட்டு முஸ்லிம்களை கோர்த்து விட்டு கலவர பூமி ஆக்கியவர்கள். பச்சை துரோகிகள். தினமும் ‘சாகா’ சென்று அப்பாவிகள் மீது பழி போட்டு அவர்களை கொல்வது, கற்பழிப்பது எப்படி என்று பாடம் கற்பவர்கள். பெண்களின் வயிற்றை கிழித்து கொலை செய்து விட்டு பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள். அப்பாவிகள் மலம் தின்ன வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு கரம் நீட்டுபவர்கள். இதற்கு பெயர்தான் தேச பக்தி என்று பிதற்றுபவர்கள். மொத்தத்தில் இந்தியாவை பாரத மாதா என்று கூறி விட்டு பின்பு அந்த மாதாவை கூட்டி கொடுப்பவர்கள்.
பழைய இத்து போன மசூதியை இடிச்சதுக்கு பல நூறு பேர்களை குண்டு வைத்து கொள்வதுதான்(மும்பை) சாந்தியும் சமாதானமுமா?அப்படி பட்ட சாந்தி பூந்தி எல்லாம் எங்களுக்கு வேணாம்!
அதுசரி.. அடிதான் உங்களுக்கு தீர்வு… அப்படியே நிறைய இத்திப்போன கொயில்கள் இருக்கே அதையெல்லாம் எத்தனாம் தேதி இடிக்கலாம்.
இந்த மதம் தீவிரவாத மதம்…அந்த மதம் அமைதியான மதம் என்று எந்த மதத்தையும் கூற முடியாது…
எல்லா மதத்தினரும் ‘எங்கள் மதம் அமைதியைத்தான் போதிக்கிறது’ என்று கூறி பிற மததினரின் மீது கலவரம் செய்கிறார்கள்…
உதாரணம் பெளத்த மத சிங்களவர் தமிழர் மீது செய்தது, க்ரூஸேட் என்று கிருத்தவர்கள் செய்தது, பல இஸ்லாம் / இந்து என்ற பெயரில் வெடித்த குண்டுகள்….
ஒரே தீர்வு உண்மையான கம்யூனிஸம்…(சீனா பொன்ற போலி கம்யூனிஸம் அல்ல)
சிதம்பரம் கோயிலை அரசு கட்டுப்பட்டில் கொண்டுவந்தபின் குளத்தை சுத்தம் செய்த போது சகதியோடு நிறைய நிரோத் பாக்கெட்டுகள் கிடைத்தன. எல்லாம் தில்லைவாழ் அந்தணர்தம் திருவிளையாடல்கள்…..இந்த சாந்தி பூந்தி மட்டும் வேணுமா?
கஷ்டப்பட்டு சம்பாதிப்பவனுக்கு ஆயிரம் கவலைகள்..ஆயிரம் கடமைகள்…ஆயிரம் பிரசினைகள்…
உட்கார்ந்த இடதில் உணவு,நோகாமல் வேலை, மூளைக்கும் வேலை இல்லை, பின்ன என்ன தான் செய்வது கருப்பன் அவர்களே 🙂
போச்சு என்னோடு சேர்த்து உங்களையும் பாகிஸ்தான் ஆள்னு பையா சொல்லப்போறாரு……
என்னடா கருப்பாநான் உன்ன என்னைக்குடா பக்கிஸ்தான் ஆளுன்னு சொல்லியிருக்கிறேன், என்றுமே உனக்கு ஏர்வாடி தான்…
//தில்லைவாழ் அந்தணர்தம் திருவிளையாடல்கள்//… வாய்ப்பு கம்மி தான்.. அந்த நிரோத் பாக்கெட் கூட கூட்டி கொடுப்பதற்காக வாங்கப்பட்டிருக்கும்.
athu eppadi aatharotha solreenga? Idhukku enna aatharam,anga nirodh packet irunthichunnu? Avunga thaan atha senjaangannu enna aaatharam?
ஒரு கருத்திற்கு ஆணித்தரமாக மறு கருத்து கூறுங்கள். அதை விடுத்து “நிரோத்” என்று கூறி உங்களது தொழிலை இங்கு கூறாதீர்கள். ஒரு வலை தளத்தில் எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து எழுதுங்கள். ஜாதியை வைத்து பேசாதீர்கள். ஜாதி, மதம், இனம், மொழி நிறம், இல்லாத சமுதாயம் அமைக்க பாடுபடுங்கள். அனைவரும் மனிதர்களே! எதெற்கெடுத்தாலும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டிவிடுதல், தேவையற்ற போராட்டத்தை ஊக்குவித்தல்! இதெல்லாம் கோழைகளின் செயல். மக்களை துன்புருத்துவதர்க்காக செய்யும் அராஜகம். எதாவது செய்து பணம் பண்ண வேண்டும் என்ற வெறி!!!! அவ்வளவுதான்.
//அதை விடுத்து “நிரோத்” என்று கூறி உங்களது தொழிலை இங்கு கூறாதீர்கள்.//
அது தான் அவர் தொழில் என்று உங்களுக்கு எப்படி தெறியும்?
// ஜாதியை வைத்து பேசாதீர்கள். ஜாதி, மதம், இனம், மொழி நிறம், இல்லாத சமுதாயம் அமைக்க பாடுபடுங்கள்.//
இப்படி பேசுரவரு தமிழன் என்றால் எந்த சாதி என்று கேட்டவரு. இவர்களுக்கு வேண்டும் என்றால் சாதியை இழுத்து கொள்வார்கள் வேண்டாம் என்றால் சமதர்ம சிகாமணிகள் போல் வேடம் இடுவார்கள். இது தான் ஆர் எஸ் எஸ் பாடசாலையின் முதல் அறிவு மோதனை.
//அனைவரும் மனிதர்களே! எதெற்கெடுத்தாலும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டிவிடுதல், தேவையற்ற போராட்டத்தை ஊக்குவித்தல்! இதெல்லாம் கோழைகளின் செயல்.//
பார்ரா… கஸ்மீர்ல இவனுங்க பன்னுவது அகிம்சை அப்பாவி இஸ்லாமிய மக்களை தீவிரவாதம் என்னும் பெயரில் கொன்று குவிப்பது பயங்கரவாதம் இல்லாம பயபக்த்தியா?
சில நாள்ளுக்கு முன்னாடி கர்நாடகத்தில பாக்கிஸ்தான் கொடியை ஏற்றி பயங்கரவாதத்தை தூண்டியது யாரோ? இதை செய்த இந்து வெறி கும்பல் மாபெரும் வீரர்கள் தான்.
இல்லாத ஒரு கோவிலுக்கு இருந்த மசுதியை இடித்து போராட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் அடி வண்முறையை ஊக்குவித்தது மட்டும் என்ன தேவையான செயல்பாடா என்ன?
vERY OOTAPATTAVARGAL IVAGAL THIRUNTHA MATTARGAL,
http://www.youtube.com/watch?v=1rzcS-fowLE&feature=related
http://thathachariyar.blogspot.in/2010/10/1.html
/////கர்நாடகத்தில பாக்கிஸ்தான் கொடியை ஏற்றி பயங்கரவாதத்தை தூண்டியது யாரோ? இதை செய்த இந்து வெறி கும்பல் மாபெரும் வீரர்கள் தான்//////.
/////கஸ்மீர்ல இவனுங்க பன்னுவது அகிம்சை அப்பாவி இஸ்லாமிய மக்களை தீவிரவாதம் என்னும் பெயரில் கொன்று குவிப்பது பயங்கரவாதம் இல்லாம பயபக்த்தியா?/////
ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி உண்மையாக்க முயர்சிக்கிரிர்கள்!! அய்யோ பாவம்!! எங்காவது குண்டு வெடிப்பு நடந்தால் அது இஸ்லாமிய பயங்கர வாதிகலால்தான் நடக்கிறது என்பதை உலகமே உணர்ந்துள்ளது. “கோயாபல்ஸ் தியரி”
சில ஆண்டுகளுக்கு முன் மும்பாய் தாஜ் ஓட்டலில் இஸ்லாமிய பயங்கர வாதிகளால் 200 க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டது. நினைவில்லையா? அதுவும் இந்துக்கள்தான? ஒருவர் கைது செய்யப்பட்டு அவன் விசாரணையின் போது உண்மையை ஒத்துக்கொள்ளவில்லையா? இன்னும் விசாரணை நடந்து கொண்டுதானே உள்ளது. இது ஒரு காட்டு மிராண்டமான செயல் இல்லையா? இவர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குவது எதற்கோ? “பெட்ரோ டாலர்” பிழைப்பிற்கு வழி! அவ்வளவுதான்!!!!
Vinavu,First you have to clarify one thing, weather you are supporting for muslim terrorism or not? it has been spreaded every corner of world. I am not denying that terrorism should be opposed in every shape. but We have to think about godra incident,shindu region issue in pakistan and etc while we are discussing about gujarat riot and other things. Can a non-muslim person get prime minister or president post in Pakistan, gulf and other muslim countries?