Sunday, October 13, 2024
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!

-

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முசுலீம்களுக்குத் தூக்கு!!கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்” என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பது முஸ்லிம்களால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்ற தங்களது கூற்றை இந்தத் தீர்ப்பு நிரூபித்து விட்டதாகவும், மதச்சார்பின்மை பேசுவோர் முகத்தில் கரி பூசப்பட்டு விட்டதாகவும் கூறி எக்காளமிடுகிறது பாரதிய ஜனதாக்கட்சி. விபத்தா, தீ வைப்பா என்று தெரிவதற்கு முன்னாலேயே, அதனை‘ ஐ.எஸ்.ஐ சதி’ என்று பிரகடனம் செய்தார் அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி. “வினை ஒன்று நடந்தால் அதற்கு எதிர்வினை வரத்தான் செய்யும் என்று கூறி, குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகள் நடத்திய இனப் படுகொலையை நியாயப்படுத்தினார் மோடி.

“கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்திய படுகொலை  அதன்பின்  குஜராத் முழுதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையோ, கோபம் கொண்ட இந்துக்களின் திட்டமிடப்படாத எதிர்வினை”  இதுதான் குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கு சங்கபரிவாரத்தினர் முன்வைத்து வரும் வாதம். தற்போது வந்துள்ள தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்இன் வாதத்தைத்தான் வழிமொழிகிறது.

கோத்ராவைத் தொடர்ந்து குஜராத் முழுதும் பார்ப்பன பாசிச குண்டர்கள் நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவிகள், திரட்டப்பட்டிருந்த கொலைப்படைகள், உடல்களும் தடயங்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது, முஸ்லிம் மக்களின் வீடுகளும், தொழில்களும், குடியிருப்புகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட முறை, இவை அனைத்தும் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.. போன்றவற்றை அவதானித்த பிறகுதான் பல்வேறு ஊடகவியலாளர்களும், சிவில் உரிமை அமைப்பினரும், ஜனநாயக சக்திகளும் குஜராத்தில் நடைபெற்றது கோத்ரா சம்பவத்தின் விளைவாகத் திடீரென்று வெளிப்பட்ட எதிர்வினை அல்ல, மாறாக, அது வெகு நீண்ட காலமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என்ற முடிவுக்கு வந்தனர்.

பின்னர் தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் நடத்திய புலனாய்வு, சங்கபரிவாரத்தின் தலைவர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை இந்த இனப்படுகொலை நடவடிக்கையில் எப்படி திட்டமிட்டு இயங்கியிருக்கின்றனர் என்பதை அவர்கள் வாயாலேயே வீடியோ வாக்குமூலமாக வரவழைத்தது. ஆகவே, கோத்ரா சம்பவம் என்பது குஜராத் முழுதும் சங்கபரிவாரத்தினர் நடத்த திட்டமிட்டிருந்த இனப்படுகொலைக்குத் தேவைப்பட்ட முகாந்திரம் மட்டுமே; கோத்ரா என்பது குஜராத் என்ற வெடிமருந்துக் கிடங்கைப் பற்ற வைப்பதற்குப் பயன்பட்ட  திரி மட்டுமே என்பது நிரூபணமானது.

தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எத்தகைய கொடிய பயங்கரவாத செயல்களைச் செய்வதிலும் தேர்ந்த கிரிமினல்களே இந்து பாசிஸ்டுகள் என்பதற்கு வரலாறு முழுவதும் பல ஆதாரங்கள் உண்டு. அசீமானந்தாவின் வாக்குமூலம் இதற்கு சமீபத்திய சான்று. சங்கபரிவாரத்தின் உறுப்பினராயினும், பாஜக அமைச்சராயினும் அவர்களைக் கொலையும் செய்யத் தயங்காதவர்களே பார்ப்பன பாசிஸ்டுகள் என்பதற்கு பிரக்யா சிங் தாகூரும் மோடியுமே சிறந்த எடுத்துக் காட்டுகள்.  ஆகவே, இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும். இந்த ஊகம் அடிப்படையற்றதல்ல. கோத்ரா முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுதான் அடிப்படையற்றது.

தற்போதைய கோத்ரா வழக்கு விசாரணையின் யோக்கியதையே அதனை நிரூபிக்கிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல வழக்குகளில் இனப்படுகொலையை முன் நின்று நடத்திய மோடியும், குஜராத் போலீசும் நடத்திய மோசடிகள் மறைக்க முடியாத வண்ணம் அம்பலமாயின. தீஸ்தா சேதல்வாத் போன்றோரின் பெருமுயற்சியின் விளைவாக, குஜராத் படுகொலை தொடர்பான பல வழக்குகளில் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத் போலிசின் பொறுப்பில் இருந்த 9 முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டன.

26, மார்ச், 2008இல் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் இராகவன் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்களும் குஜராத் போலீசு ஐ.ஜிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலன் விசாரணைக்குத் தேவையான அதிகாரிகளையும் இந்தக் குழு குஜராத்திலிருந்தே பொறுக்கி எடுத்துக் கொண்டது.

கோத்ரா வழக்கில் ஏற்கெனவே குஜராத் போலீசு நடத்தியிருந்த புலன் விசாரணையையும், போலீசு தரப்பு சாட்சிகளையும் தாங்கள் முற்றிலுமாக பரிசோதித்து பார்த்து விட்டதாகவும், குஜராத் போலீசின் விசாரணை சரியான பாதையில்தான் அமைந்திருக்கிறது என்பதால், தாங்கள் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் சிறப்புப் புலனாய்வுக்  குழுவின் தலைவர் இராகவன் பிப்ரவரி 2009-இல் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார். இவர்கள் ‘முற்றிலுமாகப் பரிசீலித்து சான்றிதழ் அளித்த’ குற்றவாளிகள் 94 பேரில் 63 பேரை நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்திருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.

இது சிறப்புப் புலனாய்வுக் குழு மோடி அரசுடன் சேர்ந்து அரங்கேற்றியிருக்கும் கூட்டுக்களவாணித்தனம்தான் என்பதற்கான ஆதாரங்களை தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் அடுக்கடுக்காக முன்வைக்கிறார். இந்த சதியின் முதன்மைக் குற்றவாளியாக போலீசால் சித்தரிக்கப்பட்ட மவுல்வி உமர்ஜியை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. இது முன்கூட்டி திட்டமிடப்பட்ட சதி என்ற தீர்ப்பு, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரின் சாட்சியத்தை சார்ந்து இருக்கிறது. அந்த இரு சாட்சிகளும் “துணை போலிசு சூப்பிரெண்டு நோயல் பார்மர், தங்களுக்கு தலா 50,000 கொடுத்து பொய் சாட்சி சொல்லச் சொன்னதாகவும் அந்த அடிப்படையில் தாங்கள் பொய் சாட்சி கூறியதாகவும் தெகல்கா நிருபரிடம் 2007-இல் வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவும், தெகல்கா நிருபர் கேதான் கோத்ரா வழக்கின் மற்ற சில சாட்சிகள் பற்றி அளித்த வாக்குமூலமும், வீடியோ பதிவுகளும் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் திட்டமிட்டே வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. லஞ்சம் கொடுத்து பொய் சாட்சி கூறச் சொன்னதற்காக, குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டிய  நோயல் பார்மர் எனும் போலீசு அதிகாரியை, கோத்ரா வழக்கின் விசாரணை அதிகாரியாக சேர்த்துக் கொண்டு, இதற்கு கடுமையான எதிர்ப்பு எழவே, பின்வாங்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு.

ரயில் பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிப்யூலைக் கிழித்து உள்ளே நுழைந்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர் என்ற குற்றச்சாட்டு கூட சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், வெஸ்டிப்யூல் கிழிக்கப்படவில்லை என்று கூறிய தடய அறிவியல் அறிக்கை ரத்து செய்யப்பட்டு, மோசடியாக இரண்டாவது அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதையும் தெகல்கா நிருபர் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார்.

கோத்ரா தொடர்பாக நியமிக்கப்பட்ட பானர்ஜி குழுவின் அறிக்கை, ‘பெட்டி வெளியிலிருந்து கொளுத்தப்படவில்லை’ என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறது. ஆனால், குஜராத் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இந்த அறிக்கையை முடக்கியுள்ளது மோடி கும்பல். அரசியல் ரீதியிலும் சரி, ஒரு கிரிமினல் குற்ற வழக்கு என்ற முறையிலும் சரி, கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது, இந்து பாசிஸ்டுகள் அரங்கேற்றிய சதித்திட்டம் என்பதற்கான ஆதாரங்களே மிகுந்திருக்கின்றன.

ஆனால் குஜராத் படுகொலை குறித்து மோடியிடம் விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு, இப்படுகொலையில் மோடியை குற்றம் சாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்று கூறியிருக்கிறது அதே நேரத்தில், கோத்ரா வழக்கில் மீதமுள்ள 20 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது. கோத்ரா எரிப்புதான் ‘ஆதிமுதல் சதி’ என்று சட்டப்படி நிறுவுவதன் மூலம்தான் நரோதா பாட்டியா, பெஸ்ட் பேக்கரி உள்ளிட்ட மற்ற கொடூரமான இனப்படுகொலைகள் அனைத்தையும் இந்துக்களின் தவிர்க்கவியலாத எதிர்வினையாகக் காட்டமுடியும்.

ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது குழந்தைகளும் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் தூக்குதண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “என்ன இருந்தாலும், இது கட்டாய மதமாற்றத்துக்கான  எதிர்வினை என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டது நினைவிருக்கிறதா, “2002 குஜராத் படுகொலை என்பது ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றுதானே மோடியும் வலியுறுத்தி வருகிறார். சிறப்புப் புலனாய்வுக் குழு, மத்திய காங்கிரசு அரசு, நீதித்துறை ஆகிய அனைவரும் மோடி காட்டும் திசையில்தான் செல்கின்றனர் என்று இதனைக் கூறலாமா, அல்லது இந்து மனச்சாட்சிகளிடையே நிலவும் தற்செயலான ஒற்றுமைதான் இது என்று புரிந்து கொள்ளவேண்டுமா?

  1. ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து ! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு !!…

    இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும்….

  2. அனைவரும் மோடி காட்டும் திசையில்தான் செல்கின்றனர் என்று இதனைக் கூறலாமா, அல்லது இந்து மனச்சாட்சிகளிடையே நிலவும் தற்செயலான ஒற்றுமைதான் இது என்று புரிந்து கொள்ளவேண்டுமா?//

    திட்டமிடப்படும் ஒற்றுமைதான்.. அன்னா ஹசாரேவையும் விட்டுவைக்கவில்லை இவர்கள்..

    Hazare is being used, exploited: Digvijaya

    http://ibnlive.in.com/news/hazare-is-being-used-exploited-digvijaya/149451-3.html

  3. Digvijaya Singh: Well, again I feel he has been used, he’s been exploited. Mr. Narendra Modi, who he said is a great Chief Minister has not appointed Lokayukta since last eight years. There is no forum in Gujarat where people can complain against corruption. Mr. Narendra Modi’s Home Minister was charged in a false encounter case. He (former Gujarat Home Minister Amit Shah) has been known to be an extortionist, he’s been asked not to enter Gujarat for a long time and there were so many other allegations against Mr Narendra Modi and his government, how can he be termed as an honest man?

    http://ibnlive.in.com/news/hazare-is-being-used-exploited-digvijaya/149451-3.html

  4. // தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எத்தகைய கொடிய பயங்கரவாத செயல்களைச் செய்வதிலும் தேர்ந்த கிரிமினல்களே இந்து பாசிஸ்டுகள் என்பதற்கு வரலாறு முழுவதும் பல ஆதாரங்கள் உண்டு.//

    எத்தனை காலம்தான் இந்த மோடி வகையறாக்கள் கொடுங்கோல் ஆட்சிபுரிவார்கள் என்று பார்ப்போம். சர்வாதிகார ஆட்சியாளர்கலெல்லாம் வீழ்தப்படுகின்ற காலமிது , இவர்களின் முடியும் வெகு தூரமில்லை . இந்த மோடி வகையறாக்கள் மிகமிக மோசமான முடிவையே சந்திப்பார்கள் .

  5. 2008இல் உச்சா நீதி மன்றத்தால் புலனாய்வு குழு தலைவராக்கப்பட்ட ராகவன்… 1998இல் பாஜக அரசால் சிபிஐ இயக்குனாராக ஆக்கப்பட்டவர்… பார்ப்பனாரான ராகவன்… பார்ப்பன பாஜகவுக்கு ஆதரவாக இருப்பது இயற்கையான ஒன்றே…

    இன்னொன்றை தேடி பார்த்தோம் என்றால் 2008இல் ராகவனை நியமித்த நீதிபதி கூட 1990களில் பாஜகவினரால் ம.பி., உ.பி.,ராஜஸ்தான் மாநில உயர் நீதி மன்றங்களில் நீதிபதியாகி, பின்னர் உச்சா நீதி மன்றத்திற்கு அனுப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஆளாக இருக்கும்.

  6. நீங்கள் ஹிந்து தீவிரவாதத்தை பற்றி எழுதுவது போல் அணைத்து மத தீவிரவாதத்தை பற்றியும் எழுத வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.

    • இந்து தீவிரவாதம் என்பது கர்பனையில் எழுதப்படும் ஒரு கட்டுக்கதை!! இந்து மதத்தில் தீவிவாதமோ பயங்கர வாதமோ கிடையாது. உலகம் முலுவதும் பயங்கர வாதத்தை கட்டவில்த்துவிட்டு மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தினசரி செய்திகளில் தெரிந்து கொல்லலாம். அல்கொய்தா, அல்கஜேத, சிமி, பாபுலர் பிடன்டாப் இந்தியா, தலிபான்கள் மற்றும் பலபல இயக்கங்கள்!!!!!!!! இந்த உலகத்தையும் குரிப்பாக இன்டியாவில் பயங்கர வாத தக்குதல் இந்த இயக்கங்கள் தயார்நிலையில் உள்ளன. இதர்கான தலைமை பொருப்பு “வினவின்” பத்திரிக்கை குழுதான்.

      • //இந்து தீவிரவாதம் என்பது கர்பனையில் எழுதப்படும் ஒரு கட்டுக்கதை!! இந்து மதத்தில் தீவிவாதமோ பயங்கர வாதமோ கிடையாது.//

        அப்படி எழுதபட்ட கட்டுகதையான மகாபாரதம் முழுவதும் சொல்லி தருவது இந்து தீவிரவாதம் தான். அப்ப மகாபாரதம் போலியா?

        //உலகம் முலுவதும் பயங்கர வாதத்தை கட்டவில்த்துவிட்டு மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.தினசரி செய்திகளில் தெரிந்து கொல்லலாம். அல்கொய்தா, அல்கஜேத, சிமி, பாபுலர் பிடன்டாப் இந்தியா, தலிபான்கள் மற்றும் பலபல இயக்கங்கள்!!!!!!!! இந்த உலகத்தையும் குரிப்பாக இன்டியாவில் பயங்கர வாத தக்குதல் இந்த இயக்கங்கள் தயார்நிலையில் உள்ளன //

        அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், இராக் படை எடுப்பு, இஸ்ரேலின் பாலஸ்தீன அத்துமீரல், இந்தியாவின் காச்மீர் ஆக்கிரமிப்பு, இலங்கையின் ஈழ தமிழர் படுகொலை; மலேகான் சதி; பாபர் மசுதி இடிப்பு கலவரம் செய்த இந்துகள்; குசராத் மத கலவரம் செய்த மோடி; காந்தியை கொன்ற ஆர் எஸ் எஸ் உறுவாக்கின கோத்சே இவங்களை மறந்துட்டீங்க. அதான் நியாபக படுத்தலாம் என்று எழுதினேன்.

        //இதர்கான தலைமை பொருப்பு “வினவின்” பத்திரிக்கை குழுதான்.//

        இது தான் இந்த வாரம் ஆர் எஸ் எஸ் செயற்குழு தீர்மானம்.

  7. தோழரே இதே சிறப்பு புலனாய்வு அமைப்பு தானே போலி encounter வழக்கில் மோடி அரசை குற்றம் சாட்டியது. அப்போதும் ராகவன் தானே தலைவராக இருந்தார் . அப்போது ஏன் எவரும் பார்பனன் என்று கூறவில்லை .

    • ஏஞ்சாமி?. இதச்சொல்லவுமா அனானியா வரணும்..?:)

      இறைவா இவரை மன்னியும் .. ஆமேன்..( திருப்தியா..)

      //ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது குழந்தைகளும் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் தூக்குதண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “என்ன இருந்தாலும், இது கட்டாய மதமாற்றத்துக்கான எதிர்வினை என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டது//

      🙂 என்ன இருந்தாலும் இந்தியா இல்லையா?..

  8. இந்து இந்து என்று சொல்லி அது ஒரு மதம் என்று மக்களின் எண்ணங்களில் பதிக்காதீர்கள் அப்படி ஒரு பெயரில் ஒரு மதம் இந்தியாவில் என்றுமே இருந்தது இல்லை. பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு அணுகினால் தீட்டு என்று ஒதுக்கப்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபடாதோர் எல்லோரையும் அவர்கள் கிருத்துவத்தையும் இஸ்லாத்தையும் தழுவும் போது மற்றும் வெள்ளைக்காரன் மக்கள் தொகை கணக்கெடுத்தபோது அவசரமாக பிராமணர்கள் கண்டுபிடித்த சொல்லே இந்து என்கிற வார்த்தை.புத்தம் இங்கே தழைத்ததை அறிவோம் அவர்கள் எங்கே? புத்த விஹாரங்கள் எங்கே? என்ற கேள்வியே எல்லாவற்றிற்கும் விடை…….பிராமண மதம் என்று தான் சொல்லவேண்டும் இந்து மதம் என்ற சொல்லாடலே மிகவும் தவறானது.

    • இப்பதிவு கோத்ரா சம்பவத்திற்குதண்டனை அளிக்கப் பட்ட இஸ்லாமியர்களை பற்றி பேசுகிறது.எதற்கு தேவையில்லாமல் தொடர்பற்ற வேறு விஷயங்களை பேச வேண்டும்? சரி இந்து மதம் என்பது கிறித்தரல்லாத, இஸ்லாமியரலத, நீக்கியரல்லாத ஒரு பல் தெய்வ நம்பிக்கை குழு என்றால் பரவாயில்லை.பிடித்த வகையில் மத நம்பிக்கை கொள்ள அவர்களுக்கும் உரிமை உண்டு.இந்துக்கள் அனைவரும் இந்துத்வவாதிகள் அல்ல.

      பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அக்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..இதில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 63 பேர் சுமார் 9 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டார்கள்.

      எவராக இருந்தாலும் குற்றவாளிகள் தாண்டிக்கப் படவேண்டும்,நிரபராதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப் பட வேண்டுமென்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.மேஏஎல் முறையீடு தீர்ப்பு என்றி இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

      • //எதற்கு தேவையில்லாமல் தொடர்பற்ற வேறு விஷயங்களை பேச வேண்டும்? //

        MR.SHANKAR நீங்களா பேசுரது?????????? ரொம்ப மாரிட்டீங்க போல???

        🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

    • தமிழ்நாட்டில் சிலர் வெளினாட்டிலிருந்து இங்கு இரக்குமதி செய்யப்பட்டுள்ள கிருத்துவ மற்றும் முசிலீம் மதத்திற்கு மாறினார்கள். ஆனால் தமிழனான நான் இந்து மத்திற்கு மாறியுல்லேன். இதில் என்ன தவறு. வெளினாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! இந்து மதத்தில்தான் தமிழனின் கடவுள் வழிபாட்டுமுறைகளும் பண்பாடும் கால்க்கிடைக்கிறது.. தமிழ் கடவுள் “முருகப் பெருமான்” அருலாசியும் உள்ளது. தமிழ் (இந்து) மதத்தின்நூலாக திருக்குறலும் கந்தசஷ்ட்டி கவசமும் உள்ளது. உன்மைத் தமிழர்கள் அனைவரும் நம் தாய் மதமான தமிழ் (இந்து) மத்த்திற்கு வந்து நமது தமிழ் கடவுள் “முருகப்பெருமானை” வழிபட்டு நல்லமுரையில் வாழ வாழ்த்துகிரேன்!!!

      • அய்யா நாட்ரேயன் நீங்க 100% ஆர் எஸ் எஸ் தெயர்ச்சி பெற்றவருனு புரிந்துக் கொண்டோம் மிக்க நன்றி.

        // ஆனால் தமிழனான நான் இந்து மத்திற்கு மாறியுல்லேன்//

        இந்து மதம் எங்கு இருந்து வந்தது என்று சொல்லுங்கலேன். ஒரு வேலை மறந்து போய்யிருப்பீர்கள், நினைவுட்டுகிறேன் வாழ்கா நதிக்கரயில் இருந்து வந்தது.

        //இதில் என்ன தவறு. வெளினாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! //

        அதான் ஏற்கனவே வெளினாட்டு மதத்துக்கு மாறியாச்சே. எதை கொடுத்தால் மீண்டும் மாறுவீர்கள்.

        //இந்து மதத்தில்தான் தமிழனின் கடவுள் வழிபாட்டுமுறைகளும் பண்பாடும் கால்க்கிடைக்கிறது.. //

        முதலில் தமிழனின் வழிபாட்டுமுறை எது என்று தெறியுமா?

        // தமிழ் கடவுள் “முருகப் பெருமான்” அருலாசியும் உள்ளது.//

        உங்க முருகப் பெருமானுக்கு அப்ப ஏன்னப்பா சமஸ்கிரதத்தில் மந்திரம் ஓதுகின்றீர்கள்? தமிழ் கடவுளை தமிழன் கோவில்களில் தொட்டு வழிப்பட முடிவதில்லையே ஏன்?

        //தமிழ் (இந்து) மதத்தின்நூலாக திருக்குறலும் கந்தசஷ்ட்டி கவசமும் உள்ளது//

        திருக்குறள் இந்து மதத்தின் நூலா? நல்ல வேலை இதை கேட்ப் பதற்கு வள்ளுவர் உயிரோடு இல்லை.

        உலகத்திலே ஒரு போலியான மதம் என்றால் அது இந்து மதம் தான் என்று நீங்கள் அடிக்கடி மேற்கோல் காட்டும் “பெரியார்” சொல்லியிருக்கிறார். தமிழன் போலியை நம்ப மாட்டானே அப்ப நீங்க நிசமாவே தமிழர் தானா?

        //உன்மைத் தமிழர்கள் அனைவரும் நம் தாய் மதமான தமிழ் (இந்து) மத்த்திற்கு வந்து நமது தமிழ் கடவுள் “முருகப்பெருமானை” வழிபட்டு நல்லமுரையில் வாழ வாழ்த்துகிரேன்!!!//

        முதல்ல போங்க தமிழ் கடவுள் என்று சொல்லும் முருகனை சமஸ்கிரித மொழியில் வழிபடுங்கள்.

        இதில இருந்தே தெறியவில்லையா இந்து மதம் தமிழனின் மதம் என்று சொல்லுவது எவ்வலவு போலியானது என்று.

        அது எப்படி தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழ் நாட்டுக்கு தொடர்பே இல்லாத விநாயகர் உடன் பிறப்பாக முடியும்.

        போலி தமிழனை அடையாலம் கண்டு கொள் தமிழா;
        இல்லை என்றால் அவன் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் போலியாக்கிவிடுவான்

  9. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் வினவின் கண்களுக்கு இந்துக்கள் எல்லாரும் அயோக்கியர்கள் மற்ற மதத்தினரெல்லாம் மிகவும் உத்தமர்கள். அடுத்த வினவின் பதிவு இப்படியாகவும் இருக்கலாம்.

    [obscured]

  10. Vinavu

    First you folks needs to understand the basis of Hinduism. Unlike other religion, we don’t have single GOD and never push people to follow certain rules, regulations or pray only one god. Its a FREEDOM given to all caste in India. In all your Anti-Hindu context, your blaming Brahmins in such a way that THEY ARE THE ONLY folks in the religion. Coming to Brahmin community, did they every asked you not to start your own ‘MADAM’ for every caste? did they stopped u? did they asked all non-brahmin t visit their madam daily and bow in their legs? neengala poi viluvinga, aaana avangala thitunvinga, parpaniumnu pesuvinga…

    Appuram entha ‘keel jathi’ kodumai – did u every heard that brahmins poi SC/ST peoplea vettitanga, kundu vachutanganu…all these criminal acitivites are done by non-brahin caste people and its a on-going fight between those communities. in the past (till 1950-60), some 10-20% of brahmin folks are stating that don’t touch me, don’t come inside my house…its their faith…why u folks want to go there? what is in for u? neengathan peria ulaipaligam aache, what are u expecting from them?

    You always ‘critize’ brahmin community (Prapaniam) simply because these folks never ‘attack’ UUUU…..right? Not only u – even many films…its the nature of Brahmins and they meant for different set of activities…not to fight with you folks…even if u see period of kings their job is to give ‘advice’ to Kings…nothing more…

    Appuram entha kothra valaku – muslimsla ennavo peria porumai sali mathirium, onnumue thappu pannatha mathirium…only RSS is the criminal HQ mathiri solringa…after babri masjid in 1992, every year how many security forces are deployed during Dec 5th? why? so called muslim brothers ellam ethavathu kundu vachutuvangalonu bayam…so oru thadava kuda they are not ready to tolerate …i m not blaming entire muslims…very minor % of total muslims are supporting terrorism, since they are all brain washed…

    kadasia oru kelvi – in most of the blogs your blaming ‘parpaniam’ – at least in last 25 years, this so called ‘parpaniam’ is controlled to a great extent…literllay no-job for ‘iyer’ folks in Govt. jobs…and more than 90% occupied by non-brahmins…BUT IS THE INDIA/TN turned so GREAT? pallum thenum oodutha…corroptione ellaya…? ella keel jathium munneriracha? Mr. Ambedkar said clearly that only for 10 yrs, the quota system should be in force…but now its more than 50 yrs..how long u need? what is your achievement? again don’t say reason as ‘Brahmins’ – TODAY till CM till all vard counselors are non-brahmins..whom do u blame now?

  11. எப்படியாவது இந்துக்கள் மேல் பழி போடவேன்டும் என்ற் தவரான குரிக்கொலைக்கொன்டு திட்டமிட்டு போலி செய்திகளை பரப்பி வருகிறீர்கள். முஸ்லீம்கல் இந்துக்களை கொன்றார்கள். அதனால் எதெர் தாக்குதல்நடத்தவேண்டிய கட்டயம் ஏற்ப்பட்டுவிட்டது. முஸ்லீம்களுக்காக பரிந்து பேசி பெட்ரோ டாலருக்கு அடிபோடுகிரீர்கள். வாழ்க வளமுடன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க