Sunday, July 21, 2024
முகப்புஅரசியல்ஊடகம்கருணையும் - வெறியும்! - தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!

கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!

-

செய்தி-63

தினமலர்“166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இது தினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி” என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது.

நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்பது தினமலரின் அவா. அநேகமாக இன்றைய தினசரிகள் பல பெரும்பான்மை இப்படித்தான் வெளியிட்டிருக்கின்றன.

முதல் பக்க கசாப் செய்திக்கு மேலே வேளாங்கண்ணி கொடியேற்று விழாவை போட்டிருப்பதன் மூலம் தினமலர் தனது சர்வமத நேயத்தை வெளிப்படுத்துவதாக காட்டுகிறது. ஆனால் அது பொய் என்பதற்கு அது முன்னிலைப்படுத்தாமல் விட்ட ஒரு செய்தி உண்டு. கசாப்புக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிய தினமலர் குஜராத் கலவரம் குறித்த நரோடா பாட்டியா கொலை வழக்கு தீர்ப்பை 13 ஆம் பக்கத்தில் காலரை பக்க செய்தியாக பத்தோடு ஒன்றாக வெளியிட்டிருக்கிறது.

தலைப்பு என்ன தெரியுமா? “மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்”. கசாப் செய்தி பாணியில் வெளியிடுவதாக இருந்தால், “97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு” என்றல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்? கசாப் மீதான தீர்ப்புக்கு முழு இந்தியாவுமே வரவேற்பதாக காட்டிய தினமலர் இந்த செய்தியில் தீர்ப்பை வரவேற்பதாக யாருடைய கருத்தையும் சொல்லவில்லை. ஏனெனில் தினமலருக்கே கூட இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்?

கசாப்புக்கு தூக்குக்கயிறு போட்ட படத்தை போட்ட தினமலர் இங்கு குடும்பப் பெண் போன்ற அடக்கத்துடன் சோகமாக நடக்கும் கோட்னானி படத்தை வெளியிட்டிருக்கிறது. நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்ட ஒருவரது படம் கூடவா தினமலரிடம் இல்லை? மற்றபடி இந்த தீர்ப்பினால் பா.ஜ.க, மோடிக்கு பின்னடைவாகவெல்லாம் தினமலர் நினைக்கவில்லை. அதனால் இந்தச் செய்தியில் அந்த இதழின் கருத்தாக ஒன்றுமில்லை.

இணையத்தில் தினமலரின் தலைப்பு என்ன தெரியுமா? ” பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போகிறார்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உறுதி செய்தனர் !”  இதே போன்று பாபு பஜ்ரங்கிக்கும் தலைப்பு கொடுப்பார்களா? பொதுவில் கசாப்பு கடை யார் வைத்திருப்பார்கள்? தினமலரின் கொண்டாட்டத்தை இதை விட சிறப்பாக எந்த தலைப்பும் கொடுத்துவிடாது.

தூக்குக் கயிற்றில் தொங்கும் கசாப்பின் படத்தோடு “கசாப் தூக்கு தண்டனை உறுதி” என்று தலைப்புச் செய்தியாக தினமணியும் வெளியிட்டிருக்கிறது. இங்கும் வழக்கு கடந்து வந்த பாதை, தீர்ப்பை வரவேற்ற தலைவர்களின் கருத்து எல்லாம் உண்டு. ஆனாலும் தினமணி ‘நடுநிலை’ பத்திரிகையாக காட்டிக் கொள்ள வேண்டுமென்பதால் முதல் பக்கத்தின் கீழேயே நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பு குறித்த செய்தியும் வெளிவந்திருக்கிறது.

“கரசேவகர்கள்” கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரம் என்று ‘வரலாற்றை’ கவனமாக ஆரம்பிக்கிறது தினமணி. வி.இ.பரிஷத் நடத்திய பந்தில் ஒரு கும்பல் நடத்திய வன்முறையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக எச்சரிக்கையாக தெரிவிக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று இரு காங்கிரசு தலைவர்கள் கூறியதை வெளியிட்டிருக்கும் தினமணி, பா.ஜ.கவிற்கு இது பின்னடைவாக இருக்குமென்று கருதப்படுவதாக கூறுகிறது. யார் அப்படி பின்னடைவு என்று கருதுகிறார்கள்? நிச்சயம் தினமணி இல்லை என்பதால்தான் அந்த படுகிறது எனும் அனாமதேய முகம்.

தினமணிஇதெல்லாம் கூடப் பரவாயில்லை. இந்தச் செய்திக்கு தினமணி போட்டிருக்கும் படம் என்ன தெரியுமா? “நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, தன் மகளைக் கண்டு கண்கலங்குகிறார்” என்ற வரிகளுடன் ஒரு படம். போலீசு வாகனக் கம்பி வலைக்குள்ளே அழுதுகொண்டிருக்கும் தந்தை; கம்பியை எட்டிப்பிடித்தபடி அப்பாவைப் பார்த்துக் கலங்கும் ஒரு சிறுமி. நரோடா பாட்டியாவில் 97 முசுலீம்கள் கொல்லப்பட்ட கொடுமையை மறக்கச் செய்ய இந்த படம் ஒன்றே போதும்.

பார்ப்பவர்கள் அந்த சிறுமியின் கதறலில் இந்து தர்மத்திற்காக சிறைக்குச் செல்லும் அந்த ‘தியாகி’யை நினைத்து வருந்துவது உறுதி.

பஜ்ரங் தள் தலைவரலான பாபு பஜ்ரங்கி சிறைக்குச் செல்லும் போது தனது கட்டை விரலை உயர்த்தி இறுமாப்புடன் செல்கிறார். இன்னும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், முக்கியமாக தேசத்தின் மனசாட்சி, தினமணி, தினமலர் போன்ற ஊடகங்களின் காவி ஆதரவு….. எல்லாம் இருக்கையில் அவர் ஏன் வருந்த வேண்டும்?

கசாப்புக்கு தண்டனை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம். தினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்தனை பெருக்குத் தெரியும்?

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. கண்டிப்பாக புரியாது, பெரும்பான்மை ‘படித்த’ இந்துக்களின் மனதில் காவிக்கொடி பட்டொளி
  வீசிப் பறக்கிறது அவர்கள் திராவிட இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட.இந்த காவிமயப்படுத்தலை அவர்கள் மெல்ல மெல்லவே செய்கிறார்கள்,அதிகம் எதிர்பின்றி. இந்தளவிற்கு நுட்பமாக யாரும் கவனித்து அவர்களை விமர்சிப்பதில்லை.

 2. சரி என்னைக்காவது ஒருனாள் முஸ்லீம் தீவிரவாதம் பற்றி ஒரு கட்டுரையோ அத்னால் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்தியர்கள் பற்றி ஒரு கட்டுரையோ வந்ததுன்டா??

  ஏன் இந்தியாவில் இந்த பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் பற்றி வினவில் ஒரு கட்டுரை வந்ததுன்டா??

  தினமணி, தினமலர் செய்தித்தாளில் செய்தால் அது இந்து மதவெறி,நீங்கள் இனையத்தில் செய்தால் அதுநடுனிலைமையா??

 3. விகடனும் இதே போல் தான் செய்தி வெளியிட்டு இருந்தது

  “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 2002 ம் ஆண்டு குஜராத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது.பல இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் ஒன்றாக நரோடா பாட்டியா என்ற இடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
  இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், முன்னாள் பஜ்ரங் தள தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.அதே சமயம் 29 பேர்களை விடுவித்து உத்தரவிட்டது.”

   • ஆர்டர் சரிதான். ஆர்டர் ஆரம்பிச்ச இடம் தான் சரியில்ல.

    வழியெல்லாம் ரவுடித்தனம் செய்து வந்த ராம பக்த வானரங்கள், கோத்ரா ரயில்நிலையத்தில் டீ காபி விற்க வந்த வயது முதிர்ந்த வியாபாரிகளிடம் வம்பு செய்து, தாடியைப் பிடித்து இழுத்து ‘ஜெய் சிறி ராம்’ சொல்லவைத்தது… புர்கா அணிந்த இரு முஸ்லீம் பெண்களை ரயில் பெட்டிக்குள் கடத்த முயன்றது…

    இதிலிருந்து ஆரம்பித்தால் உங்கள் அறிவு நாணயத்தைப் பாராட்டலாம்.

 4. இந்து மத வெறியர்கள் இந்த நாட்டை டிராகன் போல் சுற்றி நசுக்குகிறார்கள், பார்ப்பினியம் புற்றுநோய் போல் உள்ளுக்குள்ளே பரவி தனது வீரியத்தை காட்டி மிரட்டுகிறது,
  இவைகளை அழித்தால் தான் ஓரளவுக்கு மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

  இஸ்லாமியர்களை கொன்று கட்சியை வளர்க்கிறார்கள், ஒருவேளை இந்த நாட்டில் இஸ்லாமியர்கள இல்லை என்றால், இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொன்று தங்களது வெற்றியை நிலை நாட்டுவார்கள்…..

 5. விகடன்.காமில் இன்று ஸ்பெசல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தி

  “ரத்தம் குடிக்கும் புத்தம்!”

  தமிழ் பிரபாகரன் ஐயாவின் கட்டுரை. புத்த துறவிகளை தோளுரித்து காட்டிய ஒரு அருமையான கட்டுரை.

  அதற்கு நான் அளித்த பின்னூட்டமாக விகடனார் வெளியிட்டிருப்பது

  “விகடனாருக்கு என்ன முஸ்லீம்கள் மீது திடீர் பாசம். ஓ கொலை செய்பவர்கள் சங்பரிவாரங்கள் இல்லையெல்லவா.. அதுதான்!”

  ஆனால் உண்மையில் எனது முழு பின்னூட்டம் என்ன தெரியுமா.. கீழே படியுங்கள்

  “விகடனாருக்கு என்ன முஸ்லீம்கள் மீது திடீர் பாசம். ஓ கொலை செய்பவர்கள் சங்பரிவாரங்கள் இல்லையெல்லவா.. அதுதான்!

  “ரத்தம் குடிக்கும் புத்தம்!”

  எவ்வாறு விகடன் இந்த தலைப்பை அனுமதித்தது..

  அந்த “புத்த” மதத்தை இவ்வளவு வெளிப்படையாக விமர்சிக்கும் தலைப்பை அனுமதிக்கும் விகடன் தமது சொந்த மதமான பிராமணத்தை பற்றி யாரும் கூறினால் அதை அனுமதிப்பதில்லை.

  குறைந்தபட்சம் பிராமணர், பார்ப்பணர், அவாள் என்ற வார்த்தைகள் தென்பட்டாலே அதனை மறைத்துவிடுவார்கள்.

  எனக்கு ஒரு சந்தேகம் – பிராமணர், பார்ப்பணர் என்ற வார்த்தைகள் அவ்வளவு நாகரிகமில்லாத கீழ்க்த்தரமானதா? விகடனார் அதை மறைக்க காரணம்!!

  வாழ்க இவர்களின் பத்திரிக்கை தர்மம்.”

 6. தினதந்தியில் கவனித்தீர்களா….?அந்த கொலைகார படு பாவிகளின் மேல் பரிதாபம் வரும் பொருட்டு அவர்களின் குடும்பத்தார்கள் அழும் கட்சியை போட்டு இருக்கிறார்கள்…அடே பாவிகளா..அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்றொழித்த போது அவர்கள் சிந்திய கண்ணீரை போட்டீர்களா…நான் பின்னூட்டமாக இட நினைத்ததை செய்தியாக வெளியிட்ட வினவிற்கு எங்கள் நன்றிகள்…

  //இஸ்லாமியர்களை கொன்று கட்சியை வளர்க்கிறார்கள், ஒருவேளை இந்த நாட்டில் இஸ்லாமியர்கள இல்லை என்றால், இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொன்று தங்களது வெற்றியை நிலை நாட்டுவார்கள்…..//

  இதை நான் ஆதரிக்கிறேன்….

  • ஆயிரம் வருஷமாக ஹிந்து மக்களை கொன்றழித்த முஸ்லிம்களை பற்றி உங்களுக்கு தெரியாத இல்லை தெரியடது போல் நடிகிரீர்களா ?

   • இதே கேள்வியை ஆதிக்க சாதி இந்துக்களை நோக்கி தாழ்த்தப்பட்டவர்களும் கேட்கலாமா? ஐயாயிரம் வருடங்களாக அவர்களை தாழ்ந்த நிலையில் வைத்திருக்க உதவும் பார்ப்பனீயத்தை இந்தியாவை விட்டே துடைத்தெறிய ஒத்தாசை பண்ணுவீர்களா?

    • Thaazthapattavargal kolla padavillai. Athargu thaan theendamai endra solle thondriyathu.

     Avargalukku ellam thozil irunthathu,kodumai irunthathu,aanal kollapadavillai.

     muslims killed all hindus,especially the upper castes as they will not convert.Basically,if you will not convert,they ll kill you,thats all.

   • ஆயிரம் வருசமாகவா..?சற்று சிந்தியுங்கள் நண்பரே ..இந்த குண்டுவெடிப்பு , கலவரம் எல்லாம் இந்துத்வா சக்திகள் தோன்றியதற்கு அப்பறம் தான் சுதந்திர இந்தியாவில் நடைபெற்று வருகிறது…கொலை நடக்கிறது …ஆனால் அதை யார் செய்கிறார்கள்..?காந்தியை கொன்ன முதலே இவர்களின் சிந்தனை வெளிய தெரிய ஆரம்பிக்கிறது. ஒரு இந்துத்வா ஊழியன் காந்தியை கொன்று அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்றனர். இன்னும் இது போன்று நிறைய உள்ளது…விரிவஞ்சி தவிர்க்கிறேன் ..என்னுடைய ஊராகிய தென்காசியில் நடந்த சம்பவம் …தானே தனது அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்து விட்டு கலவரத்தை உண்டாக்க நினைத்தனர்…இறைவன் அருளலும் சில நல்ல அதிகாரிகளின் மூலம் தோலுரிக்கப்பட்டார்கள்.இவர்களின் ஒரே நோக்கம் இவர்களின் வர்ணாசரம் சிந்தனையை அடித்து தகர்கின்ற, எல்லா மக்களும் சமம் என்று கூறுகின்ற ஒரே காரணத்தால் இஸ்லாமையும் இஸ்லாமியர்களையும் பூண்டோடு அழிக்க துடிக்கின்றனர்., ஆனால் இதுவெல்லாம் பாசிச ஊடகங்கள் மறைத்ததன் விளைவு இன்று உங்களது இந்த அறியாமை….. எடுத்து சொல்வது, ஒவ்வொன்றாக விளக்கி சொல்வது சற்று கடினமான ஒன்று ..ஏன் என்றல் ஒவ்வொருவருக்கும் தனி தனியே சொல்ல வேண்டி இருக்கிறது….இதுவரை எத்தனை விளக்கங்கள் எத்தனை ஆதாரங்கள் …ஆனாலும் அறியாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது.. சொல்வதற்கு எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை…ஆனால் கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்கள்…உங்களை இஸ்லாமை ஏற்றுகொள்ள சொல்லி இங்கு யாரும் கட்டாய படுத்தவில்லை…குறைந்த பட்சம் இஸ்லாமை எதிர்க்காதீர்கள்…

    இஸ்லாத்தின் சில கட்டளைகள்

    “பக்கத்துக்கு வீட்டு காரன் பசியோடு இருக்கும் போது நீ மட்டும் வயிறு புடைக்க உண்ணாதே”

    “பிறர் வணங்குகிற அலலாஹ் அல்லாத அவர்களின் தெய்வங்களை நீங்கள் ஏசாதீர்கள் ”

    “அநியாயமாக ஒரு உயிரை கொல்பவன் மக்கள் அனைவரையும் கொன்றவன் போலாவான்…ஒரு உயிரை வாழ வைப்பவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போலாவான்…” …………………………………………..
    …………………………………………………நேரமின்மையால் வருந்துகிறேன்…

    • A;; this is chumma comedy.Invasions into India by muslims came in the name of islam,kaffirs were asked to convert or die.Thats a real fact.

     Moreover,even the sufis used atharvana vedam to hypnotize and convert innocent people,the real thing is the brahmins and many other castes never fell for these sithu velai.

     I am not against islam or any religion or anyone’s form of worship but if some religion or a group of people decide that they have an agenda for political upheaval,dar ul islam and such political motives,then others start thinking of it as a threat to their lifestyle.

     Moreover,this country has already seen a partition due to this,so i cant view it neutrally.

     I have relatives in ayikudy myself and i know the situation there.Basically Muslims have slaughtered hindus a lot in India in the past and even recently in kerala also and you have people like pazhani baba talking like a moron asking people to kill others,convert etc etc.

     what u speak and what happens in reality are not one and the same.

     • //Invasions into India by muslims came in the name of islam,kaffirs were asked to convert or die.Thats a real fact.//

      “இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டது என்று யாராவது கூறுவாரானால் அது மடத்தனத்தின் உச்சக்கட்டம்… ”
      – விவேகானந்தர்

      நான் கேட்கிறேன் …இப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெரியார் தாசனை (நடிகர்) ,இஸ்லாத்தை ஏற்றுக்கொள் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்று யார் மிரட்டினார்கள்… இன்னும் ஆயிரம் ஆயிரம் மக்கள் தினமும் உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்று கொண்டு தான் உள்ளனர்….யார் வாளை கொண்டு கிட்டு சுத்திகிட்டு இருக்கார்… எவனோ ஏதோ சொன்னான் என்பதை ஆதாரம் இன்றி பேசாதீர்கள்…இந்த விளக்கம் உங்களுக்கு மட்டும் அல்ல …உங்களை போன்ற சிந்தனை உள்ள அறியாத மக்களுக்காகவும்….

      • I dont know if Vivekananda said that but go to Punjab and Sindh and ask the people there as to how Islam was propogated.

       Sufis did their hypnotism and converted many people and spoke of peace and all,when the king was slaughtering the minorities at the same time.

       You dont try to call me ignorant and all,I know very well the history behind all these political religions like islam/christianity and you dumb ideas.

       Judaism is the only original religion that stands up with Hinduism,rest are all derivatives.

       Peiryar Dasan? We dont care about periyar only and you are talking about some vetti pechu veerar called periyar dasan who makes a fool out of himself and wants to make a living.I am sure he got some good money for converting.The fool that he is.

       You can convince layman and innocent people like this but not us.

    • மீரான் பாய்,

     தாருல் Hஅரப்னா என்னா பாய். தாருல் இஸ்லாம்னா என்ன பாய்?

     ஜிHஆத் எங்கே இருந்து பொறக்குது பாய்?

     கொஞ்சம்நேரம் எடுத்து சொல்லுங்களேன்.

     நாகூரிலெ அந்த போஸ்டல் பாம் அனுப்பினாங்களே அது எந்த லட்ஷியம் பாய்.
     “அநியாயமாக ஒரு உயிரை கொல்பவன் மக்கள் அனைவரையும் கொன்றவன் போலாவான்”… அதுக்கு இது எப்டி பாய் பொறுந்தும்.

     எனக்குநாகூர் பாய். ஒண்ணா இருந்தவங்க அதுக்கப்புறம்தான்நாம ஒண்ணு இல்லெ வேறெ வேறென்னு புரிந்துகொண்டு ஒட்டாம போய்ட்டாங்க.

     கந்தூரிக்கு எங்க மண்டகப்படியும் உண்டு.இப்போல்லாம அவ்ளோ ஆர்வம் யாரும் காட்ற்மாதிறி தெரியலை பாய். என்ன சொல்ல. கொள்ளிக்கட்டை சும்மா இருக்கேன்னு…. தலையை சொறியிர மாதிரி ஆயிக்கிட்டு இருக்கு பாய். என்ன சொல்றீங்க.

     தென் காசி கதையும் தெரியும் பாய்.

 7. வினவு மரணதண்டனைக்கு ஆதரவான முடிவை கட்டுரையின் முடிவில் எடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. முடிந்தால் மரணதண்டனைக்கு ஆதரவான ஒரு கட்டுரை வெளியிடுங்கள், பரந்துபட்ட விவாதத்தை அது உருவாக்கும்.

  • சீனிவாசன், நீங்க ஏன் மரண தண்டனையை எதிர்க்கறீங்கன்னு மறுமொழியெழுதி அந்த விவாதத்தை துவங்கிவைக்க்க்கூடாது?

  • சரவ் குறிப்பா சொல்லுங்க வினவு மதானியை ஆதரிச்சாங்களா? இல்லை நீங்கள் குறிப்பிடும் மதானி லைக் பீப்பிள் என்பதில் யாரெல்லாம் வருவாங்க?

   இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், உங்க(ளைப்)போன்றோருடன் பெரும் அக்கப்போற் என்னான்னா, ஏன்யா பீயையை துண்றேன்னு கேட்டா நான் மட்டுமா தின்னேன் எங்கண்ணனும்தான் தின்னான்னு சொல்றது.

   ஒரு விசயம் பேசப்படுதுன்னா அதுல இருக்குற சரி தவறை பேசி தம் தரப்பை முன்வைக்கனும், அது முடியாதபோது எதுக்கு கருத்து சொல்றீங்கன்னே புரியல.

 8. For your kind information Madhani was acquitted from the coimabtore case. But still he is in jail. He may be acquitted after 10 years from this case too. But another case will be prepared.

  What about Modi. Still finding his way to create another riot through his satanic speech. Recent one is his independence day speech to create a communal clash in the whole nation. Kill Modi and his group – India will be peaceful.

  • இதிலிருந்தே தெரிகிறதே உங்களின் நேர் கொண்ட, நியாயமான் பார்வை!!!!! உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி கேட்கும் ஆளில் நீங்களும் ஒருவர் தான் என்பது முன்னமே தெரியும். இப்போது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அது தெரிகிறது.

   • dont speak random confusing statements and think of yourself to be some literary guy.Talk straight and simple,We have seen people like Pazhani baba etc give empty statements like naan veetiduven,naan kuthi puduvan,edu en por vaalai and all that.

    Madhani went ahead and did something and this is the result.

    • தமிழிலில் எழுதினால் உங்களுக்கு படித்தவன் போல் தெரிகிறதென்றால் நான் அதற்கு என்ன செய்ய முடியும்?

  • மதானியிம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சப்போர்ட் செய்ய இங்கு யாரும் இல்லை. ஆனால் மோடியின் மேல் குற்றம் கூறினாலே ” என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்று கதறிக் கொண்டு முதல் ஆளாக நீங்கள் வந்து விடுகிறீர்களே.

 9. Modi has had a media campaign running against him for 11 years and that too a serious crazy politically motivated heavily funded media campaign and he has been fighting all that and winning elections since then.

  so,kutram kooriyavudan engira tharunam ellam malayeri pochu,kutram saatapattu niroobikka padavillai engira nilamai undaagivitta piragum kutram saati konde irunthaal ithu thaan badhil.

 10. ” தினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்தனை பெருக்குத் தெரியும்?”

  அருமையாய்ச் சொன்னீர்கள். இன்று பெரும்ம்பாலும் இப்படிப்பட்ட குள்ள நரிகள்தான் பத்திரிகைகளிலும் ஆரசியலிலும் இருக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க