Wednesday, September 28, 2022
முகப்பு செய்தி தினமலரின் காசுவெறி - காமவெறி!

தினமலரின் காசுவெறி – காமவெறி!

-

செய்தி -28

தினமலர்-லோகோ

ஓரிரு நாட்களாக தமிழ் ஊடகங்களுக்கு கிடைத்த சென்சேஷன் ஜாக்பாட்டாக அந்த கேரளத்துப் பெண் மாறிவிட்டார். செய்திகளை நீங்களும் படித்திருக்கலாம். கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன. இது குறித்த அனைத்து செய்திகளையும் படித்துப் பார்க்கும் போது தெரிய வருவது என்ன?

நம்பிக்கை மோசடி, பணத் திருட்டு, ஜேப்படி என்ற வகையினங்களுக்குள் மட்டும் வரும் இது ஒரு குற்றச் செய்தி மட்டுமே. அந்தப் பெண் சிலரையோ இல்லை பலரையோ – எண்ணிக்கை ஊகங்களாகவும் கிளுகிளுப்புக்காகவும் பெரிது படுத்தப்படலாம் – திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி பணம், நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியிருக்கிறாள். வழக்கமாக ஆண்கள்தான் பல திருமணங்களை செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றியதை படித்திருக்கிறோம். இங்கு ஆணுக்குப் பதில் ஒரு பெண், அவ்வளவுதான். வினவில் கூட சமீபத்தில் மாற்றுத்திறனாளி பெண்களை ஏமாற்றி மணம் செய்து பணம் திருடிய ஒரு மோசடிப் பேர்வழியை எழுதியிருந்தோம்.

ஆனால் ஆண்கள் வரும்போது வெறுமனே குற்றச் செய்தியாக எழுதும் ஊடகங்கள் பெண்கள் என்றால் மட்டும் காம அரக்கியாக கொச்சைப்படுத்தி எழுதுகின்றன. இதில் தினமலர் முன்னணி வகிக்கிறது. இந்தச் செய்தி குறித்து தினமலர் வைத்திருக்கும் தலைப்பு:

‘செக்ஸ்’ வெறிக்கு திருமண பந்தத்தை கொச்சையாக்கி பெண்ணின் ‘திடுக்’ பின்னணி….

இந்தக் கட்டுரையில் தினமலர் குறிப்பிடும் சில வரிகளைப் பாருங்கள்:

” அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்”

” யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத்,”

” செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார்”

“அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். மொத்தத்தில் அவர் மீது சந்தேகமே வரவில்லை. ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். திருமணமான பெண்கள் இளம் வயதில் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து நினைத்து நானும், அவரது ஆசைகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்தேன்”

“செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர்”

மற்ற பத்திரிகைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்ளும் – இதுவும் விமரிசனத்திற்குரியதே – போது தினமலர் மட்டும் அதை செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது. அந்தப் பெண் முசுலீம் பின்னணி கொண்டவராக இருப்பது பார்ப்பன தினமலரின் போதையை வெகுவாக ஏற்றியிருக்கலாம். ஏனெனில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் சிறுவன் ரஞ்சன் இறந்து போன செய்தியை திருமதி ஒய்ஜிபி மற்றும் பிற அவாள் கோஷ்டிகள் சற்றும் மனம் தளரக்கூடாது என்று வெகுவெகு கண்ணியமான மொழியில் எழுதியதும் இதே தினமலர்தான்.

குற்றவாளியான இந்தப் பெண் தான் ஒரு அனாதை என்று பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பொருட்க்ளை திருடி சென்றிருக்கிறாள். ஆண்கள் செய்யும் திருமண மோசடிகளும் இத்தகைய சென்டிமெண்ட்களோடும் இன்னும் பணக்காரன், ஐ.ஏ.எஸ் என்ற பில்டப்புகளோடும் நடக்கும். இது பாலினத்தால் சமூகத்தின் யதார்த்தம் பிரிந்து கிடப்பதற்கேற்ப நடக்கிறது, அவ்வளவுதான். ஆக ஒரு ஜேப்படி மேட்டரை ஏன் செக்ஸ் வெறி என்று வெறி பிடித்து எழுத வேண்டும்? ஒரு திருட்டுப் பெண்ணை நீலப்பட நாயகி போலவும், விலைமாது போலவும் ஏன் தூற்ற வேண்டும்?

அங்குதான் தினமலரின் வர்த்தக வெறி வருகிறது. இத்தகைய மோசடிகளை இப்படி எழுதினால்தான் அந்த பெண்ணிடம் ஏமாற வாய்ப்பில்லாத இளைஞர்கள் கனவில் அவளோடு வாழ்ந்து முக்கியமாக செக்ஸ் வைத்துக் கொண்டு திளைக்க முடியும். அப்படி எழுதினால்தான் மேட்டர் நன்றாக ஹிட்டாகும். கோபம் வரவேண்டிய ஒரு கற்பழிப்புச் செய்தியைக் கூட ஒரு நீலப்பட விவரணையாக எழுதுவதுதான் தினமலர் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களின் லேகிய ஊடக தந்திரம்.

தினமலரின் எழுத்தைப் படிப்பவர்கள் அந்தப் பெண் உடம்பு சுகத்திற்காகத்தான் பலரை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறாள் என்றே முடிவுக்கு வருவார்கள். ஆனால் அதுதான் நோக்கமென்றால் அந்தப் பெண் கேரளாவில் ஒரு வீட்டுப் பெண்ணாகவே வாழ்ந்து அடைந்திருக்க முடியும். மேலும் எத்தகைய நபராக இருந்தாலும் நாள் முழுக்க, வாழ்க்கை முழுக்க காமவெறி பிடித்து அலைய முடியாது. அது சாத்தியமும் அல்ல.

பார்ப்பனிய நரித்தனம் மட்டும் தினமலர் அல்ல. இத்தகைய ஆபாச வெறியை, பச்சையான ஆணாதிக்கத்தை, பகிங்கமான காசு வெறியையும் சேர்த்தால்தான் அதன் பரிமாணம் விளங்கும். இத்தகைய தினமலர்தான் கோவை என்கவுண்டருக்கு வாசகரிடையே அற உணர்ச்சி சாமியாடலை கிளப்பியது. ஆனால் இந்த இரண்டு மேட்டர்களையும் ஒரு வாசகன்தான் படிக்கிறான். ஆம். அந்த வாசகர்களது தரத்தை கீழே பாருங்கள். இவை கேரளப் பெண் மோசடி குறித்த தினமலரின் செக்ஸ் கட்டுரைக்கு வந்த வாசகர் கருத்துக்கள்:

“ஒரு மொக்க பிகரு கிட்ட ஏமாந்த மொக்க பயலுக”

“கேரளாவில் இது மாதிரி கேஸ் நிறைய உண்டு. நமக்குத்தான் இது புதுசு.”

“கேரளாவுல இதுக்கெல்லாம் ஸ்பெசல் கோர்ஸ் நடத்துறாங்களா என்ன…அங்க இந்த விசயத்துல ஆணும் பெண்ணும் கலக்கத்தான் செய்யுறாங்க…..இதுல ஆச்சரியம் என்னதுன்ன கேரளாவுல இவ மேல போலிஸ் கம்ப்ளயன்ட் எதுவும் இருக்குற மாதிரி தெரியல….ம்ம்ம் …தாராளமா மனசிருந்தா கேரளானு தெரிஞ்சிக்கோ…..”

“கண்டிப்பாக இவள் ஒரு வாழ தெரிந்த பெண் தான். இவளை இப்படியே விட்டு விடுங்கள் இன்னும் பல நூறு ஆண்கள் இன்பம் பெறுவார்கள்”

“இந்த மொக்க கிட்ட என்னத்த பார்த்து போனான்னு தெரியல நம்ம (காம) மன்னர்கள்.”

“அடடா சூப்பர் பெண், இவளை சந்திக்க விரும்புகிறேன்”

“பல ஆண்களிடம் தாம்பத்திய உறவு வைத்துள்ள இந்த பெண்ணிற்கு கண்டிப்பாக எயிட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது…மேலும் பல ஒழுங்கான அப்பாவி வாலிபர்கள் இந்த பெண்ணால் ஏமாந்து அவர்களும் இந்நோயிற்கு ஆளாவதை தடுக்க வேண்டும்… பெண்ணை பிடித்து விசாரித்து பின் எயிட்ஸ் மறுவாழ்வு இல்லத்தில் அடைக்க வேண்டும்…”

“(அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார்.) தாயைப்போல பிள்ளை நூலை போல சேலை பழமொழி சரிதான்.”

_____________________________

இந்த தினமலர்தான் காவிக் கும்பலை ஆதரித்தும், பாசிச ஜெயவாக்கு பல்லக்கு தூக்கியும், கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், மூவர் தூக்கை ஆதரித்தும், தீக்குளித்த செங்கொடி காதலுக்காக செத்தார் என்றும் இன்னும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை அவதூறு செய்திருக்கிறது. அவையும் இந்த செக்ஸ் மேட்டரும் வேறு வேறு அல்ல. இதுதான் தினமலர். இப்படித்தான் தினமலர்.

பார்க்க

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. வினவு,
  முதலில் இந்த செய்தியை நான் தினமலர் இதழில் தான் படித்தேன்! நீங்கள் குறிப்பிட்டு உள்ளது போல் படிக்க முடியாத அளவிற்கு வார்த்தைகள் வன்மையாக உள்ளதையும் உணர்ந்தேன். ஊடகங்கள் எந்த திசையை நோக்கி நகர்கிறது? மக்களிடம் உண்மையை சேர்க்க வேண்டியவை, வியாபார நோக்கத்தில் இப்படி கொடூரமாக, கொச்சையாக வார்த்தைகளை உபயோகித்திருப்பது உண்மையில் வருத்தத்துக்கு உரியதே!

 2. ஒரு மானிலத்தின் மீதுள்ள கோபத்தினை ஒரு பெணிணின் மீது காட்டியுள்ளனர். இது அந்த பெண்ணுக்கு அல்ல கேரளமானிலத்துக்கே………..

 3. சப்பைக் கட்டு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்கவும்.

  ///G.mathu August 24, 2012 at 7:10 pm said…ஒரு மானிலத்தின் மீதுள்ள கோபத்தினை ஒரு பெணிணின் மீது காட்டியுள்ளனர். இது அந்த பெண்ணுக்கு அல்ல கேரளமானிலத்துக்கே…//

 4. அத விடுங்கப்பா.. ஐம்பது பெண்களை ஏமாற்றியவன் பொறுக்கியாம்.. ஐம்பது ஆண்களை ஏமாற்றியவள் அழகியாம்.. என்ன கொடும சார் இது? 🙁

  • மஞ்சள் பத்திரிகையான‌ தினமலரின் பொறுக்கித்தனத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லையா இந்தியன் ?

 5. தினமலர் கிடக்கட்டும் வினவு, நாளைக்கு விசாரணையில அந்த சகானா ஒரு முஸ்லீம் அல்ல ஒரு கேரளப் பாப்பாத்தின்னு கண்டுபிடிச்சுத் தொலைஞ்சாங்கன்னு வெச்சுக்கும், அப்பறம் நீர் பல்டி அடிச்சு தினமலரை ஓவர்டேக் பண்ற அழகை கண்டுகளிக்க வேண்டியிருக்குமே ஓய்..

  • சஹானா ஒரு முஸ்லீம்னு நீங்க எப்புடி அம்பி முடிவு பண்ணுனீங்க ?..

   தினமலம் தான் இதுக்கும் காரணமா ?..

   • // அந்தப் பெண் முசுலீம் பின்னணி கொண்டவராக இருப்பது பார்ப்பன தினமலரின் போதையை வெகுவாக ஏற்றியிருக்கலாம். //

    சாதி,மதம் கடந்த டுபாக்கூர் பார்ட்டிகளுக்கு சாதி,மத அடிப்படையில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது சரியல்ல..

    • அறிவாளி(?) அம்பீ அவர்களே, நீங்கள் கூறுவது போல் வினவு சாதி, மதம் அடிப்படையில் எல்லாம் ஆதரவு, எதிர்ப்பு எல்லாம் தருவதில்லை.நீங்கள் தூற்றுவதற்கேற்ப வினவு அப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போலும்.

     தினமலரின் இஸ்லாமிய எதிப்பையும், ஆணாதிக்க, வர்த்தக வெறியையும் வைத்துதான் அதை எதிர்க்கிறர்கள்.மற்றபடி அனைத்து மதவாதிகளும் வினவுக்கு ஒன்றுதான் என்பதற்கு வினவில் வந்துள்ள பல இஸ்லாமிய மதவெறி பற்றிய கட்டுரைகளே சாட்சி.

   • அந்த பெண் ஒரு முஸ்லீமா? வினவு தளத்துக்கு வந்தாத்தான் இதெல்லாம் தெரியுது நமக்கு… :)))))

 6. ஏற்கனவே விற்பனை சரிந்து வரும் நிலையில் பிரிண்ட் மீடியாக்கள்… அதுவும் இந்த நாளிதழ் இப்படி செய்தி வெளியிடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை…

 7. அம்மிக்கல்லு கொலை
  ஒண்ணுக்காக மட்டுமே
  ஒரு நா தவறாம
  டெய்லியும்
  தந்தி வாங்கினேன்.
  வெகுளின்னு
  யாரோ சொன்ன
  வெளங்காதவன் புரளியால
  தினமணி தினமலருக்கு
  திடுதிப்புன்னு
  தாவ நேர்ந்துச்சி.
  அப்புறம்
  கொஞ்சம்போல
  ஃபைனான்ஸ் பிராப்ளத்துல,
  ரெண்டே ரூவாய்னு
  ராவோட ராவா
  தினகரனுக்கு தாவிட்டேன்.

  இப்போ…
  வினவுல செய்திய
  விலாவரியா போடுறான்.
  தந்தியும் மலரும்
  தப்புன்னு சொன்னா
  இவன் ரைட்டுங்கறான்.
  அவங்க ரைட்டுன்னா,
  இவன் தப்புங்கறான்.

  படிச்சப்புறம்தான்
  பளீர்னு புரியுது.
  இதுவர்லியும்
  நான் படிச்சு கீச்சது
  வெறும்
  கன்னித் தீவு
  கதைன்னு!!

 8. தின மல த்த இன்னும் தமிழ் நாட்டு லூசுங்க படிகுதா !
  நான்ல இத படிக்கறத நிறுத்தி பல வருஷம் ஆச்சி அப்ப நீங்க ?

  • உங்க பதிவுக்கு வந்த கருத்துக்கள் எல்லாம் எங்கேயோ ஆரம்பிச்சு;அப்புறம் பார்ப்பனியம்,பாப்பான்,ஆர்.எஸ்.எஸ் என்று எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது…இதுல நடுவில ஒரு அதிமேதாவி ஒருவர் “கடைசியில் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் என்று யாராவது மதவெறியர்கள் இந்து மதத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று கையில் எடுப்பதில் போய் இது முடிகிறது.” என்று வேதனை வேறு படுகிறார் பாவம் சகானாவின் சொந்தக்காரங்க இங்க நெறையா இருக்காங்க போலிருக்கு.

 9. தினமலர் போன்ற பத்திரிகைகளில் கருத்துக்களை பதிவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டும் தங்களுடன் ஒத்து போகும் கருத்துக்களை மட்டும் பதியவிட்டு அதையே கூடுதலான வாசகர்கள் விரும்புவதாக காட்டி நரி தனம் செய்யும் கும்பல்கள் இவர்கள்

 10. இவர்கள் நிர்ணயித்திருக்கும் கற்பு, ஒழுக்கம் என்பதெல்லாம் பெண்ணை தெய்வமாக மதிப்பதாகச் சொல்லும் இந்திய ஆண்களுக்கு இல்லையா?
  எழுத்தாளர் அனுராதா ரமணனின் வாக்குமூலப்படி சங்கரமடம் சங்கரனுக்கு இல்லையா? கதவைத் திற காற்று வரும் என்று பெரும் தத்துவ விளக்கத்தைச் சொன்ன நித்திக்கு இல்லையா? அல்லது தினமலர் அந்துமணிக்கும் இல்லையா?
  பஞச பாண்டவர்களை என்ன கூறி அழைப்பது? பஞச பாண்டவர்களின் பத்தினித் தெய்வத்திற்கு என்ன வெறி என்று கூறுவது?

  • // பஞச பாண்டவர்களை என்ன கூறி அழைப்பது? பஞச பாண்டவர்களின் பத்தினித் தெய்வத்திற்கு என்ன வெறி என்று கூறுவது? //

   பாஞ்சாலி ஏமாற்றவில்லை.. ஏமாந்தவள்…

   • விபச்சாரி என்றே தாராளமாய் கூப்பிடலாம்..
    அம்மா சொல்லிட்டானு அவளை அஞ்சு பெரும் கல்யாணம் பண்ணினானுகளாம். அப்புறம் ஒவ்வொருதானுக்கும் தனி தனியா வேற பொண்டாட்டி..
    நல்ல வேலை அவளுக எல்லோரும் இந்த அஞ்சு பேரையும் கல்யாணம் பண்ணனும்னு சொல்லாம போய்ட்டா..
    அவனுக கடவுள்கள் எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி.. கலியுக கடவுள்கள் (சங்கராச்சாரி முதல் நித்தி வரை) எல்லோருக்கும் பல பொண்டாட்டிகள்.. ஆனா ஒருவனுக்கு ஒருத்தி தமிழ் கலாச்சாரமாம்.. அது மட்டும் எங்க இருந்து வந்துச்சு?

    நியாயமா ஒருத்திக்கு பலபேர் என்பது தான் மகாபாரத கலாசாரம்..

    • அட ஆணாதிக்கவாதிகளா..

     5 பேர் சேர்ந்து கும்மியடிச்சா விபச்சாரி, 50 பேருக்கு மேல்னா நீங்க என்ன சொல்வீங்களோ அதைத்தானே தினமலரும் சொல்லுது, என்ன வினவு சரியா…?!

     • விபச்சாரினு ஒற்றை வார்த்தைல சொன்னாக்கூட பரவாயில்லை. ஆனா மஞ்சப்பத்திரிக்கை ரேஞ்சுக்கு விவரிச்சு எழுதிருக்கானுக.

    • அப்போ நாலு பொண்டாட்டி வச்சிருக்கவனுக்கு என்ன பேர்? 5 கணவன் (விருப்பத்திற்கு மாறாக அல்லாமல்) வச்சிருக்க கூடாது. ஆனால் ஆம்பிள்ளை 4 பொண்டாட்டி வச்சுக்கலாம். நல்ல நியாயம்.

     • பாலு ,நாலு பொண்டாட்டிக்காரன் நாலு பொண்டாட்டிகளுக்கும் ஒரே சமயத்திலோ குறைந்த பட்ச இடைவெளிகளோ நாலு பொண்டாட்டிகளுக்கும் குழந்தை கொடுக்க முடியும் ,
      ஆனால் ஐந்து கணவர்காரி ,ஐந்து கணவர்களுக்கும் குழந்தை கொடுக்க வேண்டும் என்றால் பத்து வருடம் ஆகுமே ,பரவாயில்லையா?
      என்னதான் நீங்களோ மற்ற பெண் ஆதிக்க விரும்பிகளோ ஆணாதிக்கம் எதிர்த்தாலும் அவர்கள் ஏகபத்தினி விரதம் கடைபிடிக்காவிட்டாலும் ,தங்களது வீட்டு பெண்கள் ஏக புருஷ விவகாரத்தில் விட்டுக் கொடுப்பதில்லையே ,ஏன்?

      • Nobody is allowed to have more than one spouse according to Hinduism.Draupadi is an exception, frankly more than one spouse for a person doesnt help him.

       Even Pandavar and Draupadi were critcized heavily when it happened.

       • எதேச்சகரமான அதிகாரம் எதேச்சகரமாக அழிக்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம் இல்லையா?

        • I dont know what that means,but there are exceptions to every rule as the situation demands.

         Generally kings were allowed to have more wives,perhaps to have children.

         • அது தான் நான் சொல்ல வருவதும்.

          எதேச்சகரமான அதிகாரம் எதேச்சகரமாக அழிக்கப்படும். தனக்கு தேவையென்றால் விதிமுறைகளை தளர்த்திக் கொள்வது. அல்லது திருத்திக் கொள்வது. அதற்கு சப்பையான காரணங்களை கூறி மூளையை சலவை செய்வது. அதற்கு உங்களைப் போன்ற மெத்த படித்தவர்கள் சப்போர்ட் செய்வது.

      • Hi Ibrahim,

       நிக்கா என்றால் ‘உவத்தல் ஒப்பந்தம்’ என்று பொருள் ‘குழந்தை கொடுத்தல் ஒப்பந்தம்’ என்று பொருள் அல்ல. குழந்தைக்காக மட்டும் யாரும் ‘உவப்பது’ இல்லை. போதிய குழந்தைகளைப் பெற்ற பிறகு அதை விட்டு விடுவதும் இல்லை. அதனால் தான் முஸ்லிம்களுக்கு தாக்குதல்களில் (அல்லாவை வணங்காத மற்ற மதத்தினரின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் )ஆண்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பெண்களை கைப்பற்றி அவர்களில் எத்தனை பேரை வேண்டுமானாலும் காமப்பதுமைகளாக வைத்துக் கொள்ள முகமதினால் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.அவர்களிடம் இருந்து வாரிசுகள் எதிர் பார்த்து அல்ல. (கரு உருவாவதும் உருவாகாமல் போவதும் நம் கையிலா இருக்கிறது?) இஸ்லாமிய சுல்தான்கள் 4 மனைவிகளுடன் 400 அந்தப்புரத்துத் துணைவிகளையும் கைப்பற்றி வைத்திருந்தார்களே, அதெல்லாம் வாரிசுகளுக்காகவா? ‘உவத்தல்’ ஆண்களுக்கு எவ்வளவு உவப்பாக இருக்கிறதோ அவ்வளவு உவப்பாகத் தான் பெண்களுக்கும் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரர்களை துணையாகக் கொண்ட பாஞ்சாலிகளும் த்ரோபதிகளும் வெறும் கதைகள் அல்ல. ஆதி காலத்தில் எங்கும் இருந்த வழக்கு தான். ஹவாயி தீவுகளில் இந்த முறை அவர்கள் வெள்ளையர்களால் கண்டு பிடிக்கும் போது கூட இருந்தது. பொலினேசிய தீவுகளில் சிலவற்றில் இன்றும் இம்முறை பயன்பாட்டில் தான் இருக்கிறது. உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் இந்த உரிமையை இன்றும் எடுத்துக்கொள்ளும் பெண்கள் இருக்கத் தான் செய்வார்கள் (இந்த முஸ்லிம் பெண் போல). அவர்களிடம் செல்லும் ஆண்கள் வாரிசுகளுக்காக் செல்வதில்லை.

  • நண்பர்கள் ஓடும் தமிழும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டுகிறோம்! திரௌபதி கதைகள் பண்டை தமிழரின் நூல்கள் பலவற்றில் விவரித்து இருக்கிறது, இன்றும் பெரும்பாலான தெக்கத்தி கிராமங்களில் திரௌபதி அம்மன் கோயில்கள் உண்டு, இங்கு பிற சாதியினரே அர்ச்சகர்கலாய் உள்ளனர்! இது ஓடுக்கும் தமிழ் தெரியாத ‘தமிழுக்கும்’ தெரியாதது ஆச்சர்யமில்லை, ஆனால் அம்பிக்கும் தெரியவில்லையா? அக்னி குண்டத்தில் இருந்து திரௌபதி வந்தால் என்று ஏற்று கொண்டால் தானே அவள் ஐந்து கணவர்களை மணந்தாள் என்று ஏற்க முடியும்? அவள் பிறப்பின் கதை : When Krishna visits the family, he explains to Draupadi that her unique position as the wife of five brothers results from a certain incident in her previous birth, She was born as Nalayani (daughter of Nala and Damayanti) She had in that lifetime prayed to Shiva to grant her a husband with fourteen desired qualities. Shiva, pleased with her devotion, tells her that it is very difficult to get a husband with all fourteen qualities that she desired. But she sticks to her ground and asks for the same. Then Lord Shiva grants her wish saying that she would get the same in her next birth with five husbands: The just Yudhisthira for his wisdom of Dharma; The powerful Bhima for his strength that exceeded that of a thousand elephants combined; The valiant Arjuna for his courage and knowledge of the battlefield; the exceedingly handsome Nakula and Sahadeva, for their love. The five Pandava brothers were said to have the fourteen qualities desired by Draupadi in her previous birth.

   • உங்கள் எச்சரிக்கையைப் பார்த்தால் கிலி ஏற்படுகிறது. “அடக்கி வாசிக்க வேண்டுகிறோம்!” என்று பன்மையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    ஏதோ எனக்குத் தெரிந்த தமிழில் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கே தவறு என்று சொன்னால் திருத்திக் கொள்கிறேன்.
    “பண்டை தமிழரின் நூல்கள் பலவற்றில் விவரித்து இருக்கிறது”, என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் கடாசி விட்டீர்களே!!. பண்டை தமிழ் நூல்களின் அட்டவணையைக் கொடுத்தால் நாங்களும் படித்து தெரிந்து கொள்வோம் அல்லவா?!
    எனக்கு இப்படிப்பட்ட விஷயங்களில் சந்தேகம் ஏற்பட்டால் நான் போகும் இடம் தாத்தாச்சாரியாரின் ப்ளாக் ஸ்பாட் தான்.

 11. தினமலருக்கு அப்பன் ஒருத்தன் இருக்கான பேரு நக்கீரன். இன்னிக்கு இதே மேட்டர்ல நக்கீரன் வால்போஸ்டர். பார்த்தா சும்மா அதிருதுல. வினவுக்கு அதையும் விலாவாரியா எழுதுற யோக்கியதை உண்டா.

  • நக்கீரனை கோபால சாஸ்திரி நடத்தியிருந்தா அந்த பத்திரிகை பெயரையே மலம் நக்கீனு வினவும் அதன் விடையற்ற வினாக்களில் கனாக்களை கரைத்துகொண்டிருக்கும் வாசகர்களும் மாத்தியிருப்பர்கள்… நடத்துவது தேவராய் திரிந்த கோபால் பிள்ளை அல்லவா…

 12. முன்பு குஷ்பு திருமணத்திற்கு முன் உடலுறவு தவறில்லை என்று கூறினார். அப்போது தினமலர் இப்படி எழுதியது,

  “குஷ்பு ஒரு முஸ்லிம் பெண்ணாம். அதனால் முஸ்லிம் பெண்கள் எல்லாம் குஷ்புவின் இந்த கருத்தை ஆதரிக்கிறார்களாம்.”

  இன்னும் ஒரு படி மேலே போய் இப்படி எழுதியது,

  “முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் குஷ்புதான் முன் மாதிரியாம்.”

  ஒரு சமூகத்திற்கெதிராக எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் தன்னால் சிந்திக்க முடியும் என்று நிரூபித்தது தினமலர்.

 13. தின மலம் உருப்படியா எதாவது செய்தி போட்ருந்தா அதா பத்தி பேசலாம், அவன் வழக்கம் போல குப்பையத்தான போட்ருக்கான். ஆனா என்ன இந்த முறை கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிருச்சு. வீகேண்டுல வாசகர்களுக்கு ஒரு கிக்கு வேணும்ல. தின மலம் படிக்கும் நல்லவர்கள் சிலர் இதுக்கு அப்புறம் திருந்தி அந்த பீ தொடைக்க்குற காகிதத்த விட்டால் நல்லது தான் .

 14. அவாள் பத்திரிக்கை மட்டுமா தரம் கேட்டுவிட்டது ? பார்பன அரசு இருக்கும் தைரியம், ஜமாய் கிறார்கள் கண்டுகாம ஒதுகிடிங்கோ

 15. வினவு கட்டுரையில் சொல்லப்பட்ட தினமலரின் அறுவருக்கத்தக்க செய்தி பற்றிய எல்லா விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மை. இவ்வாறு எழுதும் தினமலரை வாசகர்கள் நிச்சயம் புறக்கணிக்கவேண்டும்.

  தவிர, இந்தச் செய்தியின் தனித்தன்மை இதுவரை இவ்வாறு போலியாகத் திருமணம் செய்வது பெரும்பாலும் ஆண்களாக மட்டுமே இருந்ததால். பெண்கள் பொதுவாக இவ்வாறு செய்வதில்லை. செய்ததில்லை. அப்படி ஒரு செய்தியை எனக்குத் தெரிந்து படித்தது இல்லை. ஆனால் இன்று இத்துறையில் ஒரு பெண் நுழைந்திருக்கிறார்.. இதை பெண்ணியத்தின் பெருமையாக நாம் கருத முடியுமா? முடியாது.

  அதே சமயம் நமது பண்பு, கலாச்சாரம் போன்றவை முழுக்க முழுக்க பெண்ணியத்தை அடிமைப் படுத்தும் நோக்கம் மட்டுமே கொண்டவை என்கிற பார்வையிலுள்ளவர்களுக்கு(வினவு உட்பட) பெண் திருமணம் என்கிற பெயரில் ஏமாற்றுவது பெரிய அதிர்ச்சியல்ல.

  ஆணும், பெண்ணும் உடலில் சில உறுப்புக்கள் வேறு வேறாய் இருப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஒன்று தான் என்று வரையறை செய்வது இன்றைய நவீனப் பெண்ணியத்தின் முக்கியப் பார்வை; இது முதலாளியம் மக்களைச் சமூகமாக வாழ விடாமல் தனித்தனி ஆட்களாக வாழ வைப்பதற்கு செய்யும் முயற்சிக்கு முக்கிய தூண்டுகோல்.

  நம் பண்பாடு, கலாச்சாரத்தில் நிறைய பிற்போக்குத்தனங்களும் பெண் அடிமைத்தனமும் இருந்திருக்கின்றன. அதற்கெல்லாம் மாற்று மேற்கத்திய பாணி சமத்துவம் தான் என்று முடிவு பண்ணும் பட்சத்தில் இந்தப் பெண் செய்த இந்த ஏமாற்று ஒரு கலாச்சார அதிர்ச்சியாக உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

  சில மாதங்களுக்கு முன் மதுரையில் தன் காதலனுடன் சேர்ந்து 18 வயது மகனைக் கொன்ற பெண்மணி கொடுத்தது இதே போன்ற(சற்று ஆழமான) கலாச்சார அதிர்ச்சி.

  ஏமாற்றும் ஆண்கள் என்றால் தனிக் கட்டுரைகளை மிக விளக்கமாக எழுதும் வினவு. ஏமாற்றும் பெண்கள் என்றால் மட்டும் ஏன் சாப்டாக அணுக வேண்டும் ?

  இதே போன்ற கூத்து தான் சமீபத்தில் அஸ்ஸாமில் பாரில் நண்பர்களுடன் குடித்துவிட்டு இரவு பத்துமணிக்கு தெருவில் நின்று அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்ணை இன்னொரு ஆண்கள் ரவுடி கும்பல் புகுந்து உடைகளைக் கிழித்து அத்து மீறலில் ஈடுபட ஆரம்பித்து விட்டது. அவளுடன் வந்த ஆண் நண்பர்கள் எஸ்கேப். பின் ஒரு போலீஸ்காரர் வந்து அப்பெண்ணை காப்பாற்றினார். அடுத்த நாள் குடிமகன்கள் முதல், மாதர் சங்கங்கள் வரை ஒரே போராட்டம். பாரில் பெண் நடு இரவு குடித்து விட்டு வந்த கலாச்சார மாற்றத்தை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

  கடைசியில் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் என்று யாராவது மதவெறியர்கள் இந்து மதத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று கையில் எடுப்பதில் போய் இது முடிகிறது.

 16. மலம் கழித்தப்பிறகு க்ழுவ தண்ணீர் இல்லை என்று யாறும் தினமலர் நாளிதழை வைத்துத் துடைத்துவிடாதீர்கள்…..அதற்குப்பதில் அப்படியே காயவிட்டுவிடலாம்! ஏனென்றால் மலத்தைவிட கேவலமானவை தினமலரில் அச்சிடப்பட்டு இருப்பவை! தவறித்துடைத்துவிட்டால் பின்புறம் மலத்தைவிட நாறிவிடும்…….

 17. தினமலர் பத்திரிக்கையை அவன் வீட்டு வயசுப்பொண்ணுகலயே படிக்க விடமாட்டனுக! மீறிப்படிச்சா அந்தப்பொண்ணுக என்னவாகும்னு அவனுக்குதான் நல்லா தெறியுமே! த்தூ………………இந்தப்பொளப்புக்கு………..

 18. எங்க ஏரியா பதிப்புல சிற்து நாட்டகளுக்கு முன்னர் ஒரு புதிதாக மணமான தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். அதை இந்த அறிவு கெட்ட பத்திரிக்கைக்காரன் படம் எடுத்து பெருச போடுரான்! இதைப்பார்க்கும் சிறுகுழந்தைகளின் மனநிலையைப் பற்றி இந்த நாதாரிக்கு கொஞசமாவது அறிவு இருக்கா? இநத பொளப்பு பொளக்குறதுக்கு இந்த நாதாரியும் தூக்குப்போட்டு சாவலாம்…..

 19. இந்த ல்ட்சனத்துல அறிவாளி அந்துமணியோட அட்ராசிடி வேர ! தாங்கமுடிலடா சாமி…………. இந்த கேவலத்த படிச்சுப்புட்டு அரவேக்காட்டு மூதேவிக லெட்டர் எழுத ஆரம்பிச்சுடுதுக. இந்த மூதேவிகளுக்கு எல்லாம் தமிழ்நாட்டுல வேர செய்தித்தாள், டிவி சேனல்கள் இருப்பது எல்லாம் தெரியவே தெரியாதா?……தங்கள் சிந்தனையின்(ஐயோடா சாமி!) அச்சு வடிவத்தை இந்தக் குப்பையில் கண்டிட இவர்கள் அந்நாளிதழ் ஆசிரியரின் காலைக்( ஆமா கால்னு தான சொன்னேன்!)கூட ந்க்கத் தயங்க மாட்டார்கள்…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க