Tuesday, October 15, 2024
முகப்புசெய்திகசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?

கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?

-

செய்தி-56

நீதிமன்றம்

சாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக.

குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாயா கோட்னானி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். 97 பேரை திட்டமிட்டு கொன்றதாக தெகல்காவில் பகிரங்கமாக பாபு பஜரங்கி போன்றவர்கள் ஒத்துக்கொண்ட பிறகும் கைதான 62 பேரில் 32 பேரை மட்டும்தான் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளார் நீதிபதி. ஆனால் சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையானதை விசாரித்த மத்திய அரசின் பானர்ஜி கமிசன் நடந்தது விபத்து எனச் சொன்னதும், அதன் அறிக்கையை 2005-இல் சட்டவிரோதமானது என்றது குஜராத் உயர்நீதி மன்றம். 58 பேர் இறந்த சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையான வழக்கில் நிரபராதிகளான 11 முசுலீம்களுக்கு தூக்குத்தண்டனையும், 20 பேருக்கு ஆயுள்தண்டனையும் கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

குஜராத் இனப்படுகொலை கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா-நானாவதிக் கமிசனின் ஆட்கள் தங்களவர்கள் என முன்னாள் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியா தெகல்காவிடம் போட்டுடைத்த பிறகும் அந்த கமிசன் ஷா இறந்தபிறகும் மற்றொரு நீதிபதியோடு தொடருகிறது. மோடி வந்த பிறகு போலீசார், நீதிபதி என அனைத்து அதிகார வர்க்கமும் காவிமயமானது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் இவர்கள் கூட்டணி அம்பலமானது அனைவருக்கும் தெரிந்ததே. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிகாரியாக மாநில அரசு நியமித்த நோயல் பார்மர் முசுலீம்கள் அனைவருமே அடிப்படைவாதிகள் என முதலிலேயே வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு பின் அவரது நண்பரான ரமேஷ் படேல் எனும் அதிகாரியை நியமித்துள்ளது மோடியின் அரசு.

சபர்மதி வண்டி விபத்துக்குள்ளான 27 பிப்ரவரி 2002 அன்று நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலவரம் செய்யும் இந்துக்களை கண்டுகொள்ள வேண்டாம் என உத்தரவிடுகிறார் மோடி. இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிகாரியான சஞ்சீவ் பட் வெளிப்படையாக பேசத் துவங்கியவுடன் மோடியின் போலீசு அவர்மீது பாயத் துவங்கியது. இந்துமதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இசான் ஷாப்ரியின் மனைவி ஜாகியா ஷாப்ரி இதனை சுட்டிக்காட்டியவுடன், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளை வைத்து பொய் சாட்சியம் சொல்ல வைத்தும், ஞாபகமில்லை என சொல்ல வைத்தும் சஞ்சீவ் பட்டையே வில்லனாக்கினர் மோடியின் புலனாய்வுக்குழுவினர். 3 வழக்குகளையும் அவர் மீது பதிவு செய்தனர்.

97 பேரைக் கொன்ற நரோடா பாட்டியா வழக்கில் குற்றவாளிகள் பலரும் ஆம், நாங்கள் அப்படித்தான் கொன்றோம் என்பதை தெகல்விடம் பெருமையோடு ஒப்புக் கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் எதுவும் 20 ஆண்டுகளுக்கு மேல் போகாது. ஆனால் சபர்மதி வண்டி விபத்துக்கான பகுதியில் வசித்தவர்கள் முசுலீம்களாக இருந்த காரணத்துக்காக தூக்குத் தண்டனையும், மரண தண்டனையும்.

2000 க்கும் மேற்பட்டோரை கொன்ற கொலைகாரன் மோடிக்கு பிரதமர் பந்தயக் குதிரை பதவி. இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும். கசாப்பை தூக்கிலடக் கோருவோருக்கு பாபு பஜ்ரங்கியும், மோடியும் தூக்கிலிடப்பட வேண்டியவர்களாக படாமல் போன காரணத்தை அவர்கள் ஆராய வேண்டும். பாபர் மசூதியை இடித்து கலவரம் நடத்திய அத்வானியும், மும்பை கலவரத்தை நடத்திய பால் தாக்கரேவும் கொல்லப்பட்டவர்களுக்கு பொறுப்பேற்று என்ன தண்டனை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________

  1. மும்பை தாக்குதலில் பாதித்தவர்கள், தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறிய கருத்து:
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=23873

    • பையாஜி அப்படியே மோடியை தூக்கில் போடுமாறு தீர்ப்பு வழங்கினால் குஜராத்தில் கலவரத்தில் பாதிக்கபட்ட பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் அந்த தீர்ப்பை வரவேற்கும்.

  2. இவ்வுலகில் இறைவன் இந்த அயோக்கியர்களுக்கு தண்டனை தரலாம் அல்லது தராமலும் போகலாம்…ஆனால் அணு அளவு நன்மை செய்தாலும் அதை அடைந்து கொள்வார்…அணு அளவு தீமை செய்தாலும் அதை அடைந்து கொள்வார்…என்று தீர்ப்பு நாளை பற்றி இறைவன் கூறுகின்றானே..அந்த நாளை நம்பி தான் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்கிறோம்…யாரும் யாரையும் காப்பாற்ற முடியாத நாள் .அந்த நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களுடைய கண்கள், கைகள் இன்ன பிற உறுப்புகளே சாட்சி சொல்லும்… அந்த நாளை நம்பும் மக்களாகிய நாம் நம் இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டும்….தாயின் கண் முன்னே மகளையும் , மகளின் கண் முன்னே தாயையும் வன் புணர்வு செய்து கொன்றொழித்த அந்த படு பாவிகளின் நரக வேதனைக்காக நாம் ஆசை படுவோம்…நரக வேதனையின் மிக சிறிய வேதனை என்னவென்றால் அவனுக்கு காலில் நெருப்பு வைக்கப்படும் அந்த வெப்பத்தால் அவனுடைய மூளை உருகும்…ஆகவே நிச்சயமாக அந்த நாளை நம்பியே நாம் அனைவரும் இருப்போம்..

    இந்த நேரத்தில் தின மலருடைய வெப்சைட்டில் மருந்துக்கு கூட இந்த செய்தி இடம் பெற வில்லை என்பதை கவனிக்க வேண்டும்… இவர்களெல்லாம் உண்மையின் உரைகல்லாம்…? கிராமப் பகுதியில் சிறுவர்கள் காலை நேரத்தில் மல ஜலம் கழிக்கின்ற பாறை கூட இவர்களின் உரைகல்லை விட சிறந்தது….

  3. தீர்ப்பை யாருக்கும் பயமில்லாமல் இவர்கள் வரவேற்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பைப் பெற்ற குஜராத் முஸ்லீம்கள் இல்லையே. தீர்ப்பு கிடைத்தவர்களுக்கு ஜால்ரா தட்டும் விதமாக அந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் சொல்வதையும் பாருங்கள். அதற்கு கீழே முஸ்லீம்களின் மனநிலையையும் பாருங்கள். இது தான் இந்தியா!!!

    A total of 327 witnesses and 2,500 documented evidence were presented to the court.

    The Gujarat government said the conviction of Kodnani did not in any way mean that the BJP regime was linked to the killings during the 2002 riots.

    “Mayaben Kodnani was not a minister when the massacre took place… her conviction cannot be linked to the government,” Gujarat government spokesperson Jai Narayan Vyas told reporters after the special court convicted Kodnani and 31 others.

    Vyas also said it was not the first time that a minister was convicted and that there had been many instances in the country of former state ministers being convicted.

    “The same thing has happened in all the states,” he said.

    Vyas said that the state government needed to study the fine print of the judgment before commenting on it.

    ———————————————————————-

    Shakeela Banu Ansari cannot forget the horror of the night of February 28, ten years ago when she lost her entire family to a murderous mob in Naroda Patiya. Though she is happy with the court verdict convicting 32 people for the massacre of 97 Muslims, including her kin, she wonders why the mayhem had to happen.

    “I was living in Naroda Partiya in 2002 (when the riots happened), and I still live there. I lost my whole family, my mother, my brother, four innocent children. I stayed in Naroda Patiya because we did not want to leave before we get justice,” said Shakeela, who testified in the case.

    A special court in Ahmedabad Wednesday convicted 32 people, including former minister Mayaben Kodnani, in the Naroda Patiya massacre.

    Where ever we went to seek help, they said you have to die, this is the order from above,” she said.

    “They poured petrol and burned them. My two-month-old nephew was burnt alive… what was his mistake,” she asked.

    Another witness, Jannat Biwi Kallubhai wondered what will happen to them.

    “In the court we said whatever had happened with us (during the riots). But now we are a little afraid, the atmosphere is such… what will happen to us, we don’t know,” she said.

    “Till last night I was tense, I had to hide,” said another witness Umrao Sayyed, adding that he was happy with the verdict.

    Shakeela said: “We were women who never stepped out of our homes, but we went to court after 2002. We were threatened for days, they said we would meet a worse fate than what happened to our families.”

    Citizens for Peace and Justice (CJP) Secretary Teesta Setalvad said they have applied for security for the witnesses.

    “There is some concern over their security over the next one week, with a bandh being called at Patiya tomorrow (Thursday) so we have appealed to the SIT to ensure their protection and we are sure that will be complied with,” said the activist.

    A statement from CJP said 11 eyewitnesses have deposed in testimonies assigning in detail the role played by former minister Maya Kodnani, in inciting the mob to murder; 15 witnesses deposed against Bajrang Dal leader Babu Bajrangi, and 48 witnesses testified to the crimes committed by Suresh Langda Chara.

  4. நான் மேலே கொடுத்திருக்கும் பின்னூட்டம் பையாவின் (1) பின்னூட்டத்திற்கான பதில்.

  5. நண்பர்களே..உங்கள் தத்துவச் செரிவில் தவறுள்ளது.. தினகரனில் இன்று (தினமலர் இல்லை) வெளியான போட்டோவைப் பாருங்கள். அந்த ரயில் நிலையத்தில் நீங்கள்கூட வந்திருககலாம்.. உம் தோழர்கள் ஏதாவது பொதுக்கூட்டத்துககு சென்றிருக்கலாம்.. எந்தசாதி மதம் என்று தெரியாத மக்கள் உழைத்துப பிழைக்கும் மக்கள் சென்றிருக்கலாம்.. அவர்களை க்ண் மண் தெரியாமல் சுட வேண்டிய அவசியம் என்ன..? எந்த மதத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது. ஆக கசாபை ஒரு மதம் தாண்டிய மிருகம் என்றே சொல்லவேண்டும்.. நீங்கள் அவனை மதத்துடன் சம்பந்தப்படுத்தி பாழாய்ப் போன முற்போக்குப் பட்டத்துக்காக குஜராத்துடன் இணைக்கிறீர்.. குஜராத்தைப் பற்றி தனியாக சவட்டி எடுத்து ஒரு கட்டுரை எழுதலாம்.. ஆனால் உங்கள் தத்துவத்தின் உள்ள ஓட்டையால் இதை செய்திருப்பது அருவருப்பாகயிருக்கிறதை வருத்ததுட்ன் பகிர்கிறேன்….

  6. உண்மை குற்றவாளி எவனாக இருப்பினும் தண்டிக்க படக்கூடியவனே , தூக்கில் தொங்க தகுதியானவனே . காவி புழுதி கண்ணை மறைக்கும் போது ரத்தம் குடித்து தாகம் தணிக்க வேண்டியிருக்கிறது. பெண்மையை போற்றி புகழும் இந்த சமூதாயதில்தான் ஒரு பெண் அரக்கியும் வாழ்கிறாள் . இதே நரோடா பாடியாவில்தான் கர்ப்பிணி பெண் வயிறு கிழிக்க பட்டு உள்ளிருக்கும் சிசு கூட எரித்து சாம்பலாக்கப்பட்டது. இதனை செய்ய கூடியவர்கள் எவ்வளவு அரக்கர்களாக இருக்க வேண்டும். ஏன் இந்த அரக்கர்களுக்கு தூக்கு தண்டனை இல்லை…காவி மயமாகிவிட்ட அரசில் நீதி செத்து பல ஆண்டுகளாகிவிட்டது. நடுநிலை தவறாத ஒவ்வொரு இந்துவும் சிந்திக்க கடமை உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க