privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?

-

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது
சன்சீவ் பட் - படம் தெஹெல்கா

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும், இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும், அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.

அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.

கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு  ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை  எப்படியாவது  தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.

முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத  அளவுக்கு எரித்துள்ளனர்.

இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த  அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”

2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.

ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்  என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.

குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”

(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.

வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும்  அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.

ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.

நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?

கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில்  போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?

___________________________________________________________________________

தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் அவசியம் அவற்றை வாசித்துப் பார்க்க வேண்டும்.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. அடுத்து வரவிருக்கும் மறுமொழிகள்,
  1. ஆயிரம் த்லைவாங்கினாலும், டாடா அம்பானியை வாழவைத்து தொழில்புரட்சி செய்ய வைக்கும் மோடி ஈடு இணையற்ற தலைவர்.
  2.முசுலிம்களை கொன்றால் என்ன குஜாராத் செழித்தோங்குகிறது என்று பொய்யை ஏன் நம்ப மறுக்கிறீர்கள்.
  3. மோடி இந்தியாவின் முக்கிய த்லைவர் நெறு சீமான் முதல் அன்னா ஹசரே வரை சான்றிதழ் கொடுத்தாயிற்று, அட நம்ம சிவகுமார் கூட கொடுத்தாரே..
  4. ரஷிய சீனாவில் நடக்காத கொலைகளா? அந்த பொய்களை பற்றி நீங்களும் எழுதுங்களேன், இண்டர்நெட்டில் அதை பற்றியெல்லாம் நிறைய எழுதப்பட்டிருக்கிறது.

 2. நரவேட்டை நாயகன் ஸ்டாலினை தூக்கிலா போட்டார்கள்?
  கம்யூமினிஸ கடவுள் அல்லவா அவர்!
  அவரின் ஸ்கோர் – 30 லட்சம் கொலைகள்!

  http://en.wikipedia.org/wiki/Gulag

 3. கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? //

  பேசாம கசாப் போன்ற குற்ரவாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே முதல்வராக.. அவர்களும் நல்லது செய்யலாமே?..

 4. கார்ப்பரேட் உலகத்தால் லாபம் பெரும் எவரும் மோடி நல்லவர் வல்லவர் என்றே சொல்வார்க்ள். ஆனால் மனசாட்சி உள்ள எவரும் மோடியின் மரணத்தைத்தான் விரும்புவார்கள்.

 5. இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்

  naan நரெந்திர மோடிய தூக்கிலுடும் நாலுக்காக காதிருக்கிரென்

 6. அரசாங்கம் நரமோடியை தண்டிப்பதை விட ஜாதிபேதமற்று வாழும் பொதுமக்களே இவரை நரபலி கொடுக்க வேண்டும்.

 7. கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்

  வாழ்த்துகள்.

  • ஜோதிஜி!

   வரவேற்கத்தக்க , மெச்சத்தகுந்த , காலம் கடந்த நடவடிக்கை!

 8. ‘தோழர் ஸ்டாலின்’ – அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். — //அசுரன்!//

  ஸ்டாலின் தவறுகள் செய்தார். எவர்தான் தவறுகளே செய்யாதவர்?

  ‘தவறுதல் மனித இயல்பு’ ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ, தேவதூதரோ அல்ல. ஆனால் ஒரு மனிதரை மதிப்பிடும்போது அவரது தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதும், அவரது மேன்மைகளையும் வரலாற்று பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்வதும் சரியல்ல.–//ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?//

  மறுப்பு எழுத்துக்கள் மட்டுமே ஸ்டாலின் காலத்திய பயங்கரவாதத்திற்கு தடுப்புஅளிக்க முடியாது!

  வின்வு அய்யா! மோடி மட்டுமல்ல! தவறிழைத்தவர் யாராகினும் தண்டனைக் குறியவரே!

  நேரடியாக மக்களைக் கொல்லும், பச்சை பயங்கரவாதம்!
  ரயிலுக்கு குண்டு வைக்கும்/ அழித்தொழிப்பு செய்யும் சிகப்பு பயங்கரவாதம்!
  இனப் படுகொலை செய்யும் காவி பயங்கரவாதம்! – அனைத்தும் தண்டிக்கப் பட வேண்டியவையே!

  கம்யுனிஸ விரும்பிகள் எவ்வாறு ஸ்டாலினை, சிறந்த ஆட்சியாளர்/ நிர்வாகத் திறன் மிக்கவர் என்று வர்ணிக்கின்றனரோ அதைப் போன்றதே மோடி ஆதரவாளர்களின் வர்ணிப்பும்!
  இருவரின் அரசு ந்டக்கும்போது நடத்திய பயங்கரங்களும், ஒப்பிடத் தக்கவையே!

  • இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கின்றன. அசுரன்,புரட்சியின் நோக்கங்களை (பாட்டாளி வர்க்கப்) நேசிப்பதன் மூலம் ஸ்டாலினை நேசிக்கிறார். மோடி ஆதரவாளர்கள், பார்ப்பனீயத்தை நேசிப்பதன் மூலம் மோடியை நேசிக்கின்றனர்.

 9. இந்த்துத்துவா பயங்கரவாதத்தின் தீவிரவாதமுகம் சங்பரிவார்கள் என்றால் மிதவாத முகம் காங்கிரஸ்.இரண்டாயிரம் பேரைக் கொன்றவன் இந்திய அரசியலில் ஆராதிக்கப்படுவது சமூகம் பாழ்பட்டு வருவதைக் காட்டுகிறது. இந்துத்துவா என்பது ஒரு சீழ் பிடித்த வக்கிர சிந்தனை என்பதுநிரூபிக்கப்பட்டு வருகிறது. மோடி தூக்கிலிடப்படாத வரை இந்திய சட்டங்கள் சாக்கடைக்கு சமம்.

 10. India’s growth is only industrialists growth. It applies to gujarat too. an ordinary gujarati is still suffering to make a living whereas rich became richer in that state. it will soon happen in TN (already happened!) and also in other states too. modi is guilty, he must be punished severely.

 11. ஹ்ம்ம்… இந்த IPS அதிகாரி இதனை நாள் எங்கு சென்றார். சரி 2004 வரை மட்டுமே பிஜேபி ஆட்சியில் இருந்தது. அதன் பின்பு காங்கிரஸ் தானே ஆட்சியில் உள்ளது. இவர் மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்தால் சிகப்பு கம்பள வரவேற்ப்பை காங்கிரஸ் மற்றும் ஆங்கில தொலை கட்சிகள் வழங்கி இருக்குமே? இந்த திடீர் ஞான உதயம் எங்கு இருந்து வந்தது. சரி, கீழே உள்ள லிங்கில் அதற்கான விடை உள்ளது.

  http://www.dailypioneer.com/334703/Why-IPS-Bhatt-hates-Narendra-Modi.html

  ” Bhatt was directed by the Government on August 31 last year to report to Principal, SRP Training College, Junagadh in DIG grade. But so far he has not resumed his duties despite repeated instructions by his superiors. Bhatt applied for leave claiming his mother was ill. The Gujarat DGP has asked a senior officer to look into the whole episode regarding Bhatt not joining the service.

  Through a “Confidential” Memorandum number ENQ/2520101931/G, the Home department of Gujarat served a show-cause notice on Bhatt on December 29, 2010 to hold an inquiry into the role in the recruitment scam “.

  டிசம்பர் 29 ஆம் ஆண்டு இவருக்கு நோட்டீஸ் கொடுத்த உடனேயே இவர் அம்னிசியாவில் இருந்து வெளி வந்து ஒரு ப்ரமான பத்திரத்தை ஏப்ரல் 2011 அன்று தானாக முன்வந்து தாக்கல் செய்து உள்ளார்.

  அண்ணா ஹசாரே நாடகம் மார்ச் இறுதியில் நடந்து கொண்டு இருந்ததால் மீடியா கவரேஜ் கிடைக்காது என்பதால், காங்கிரஸ் கை கூலியும் இவாங்களிஸ்ட் கிறித்துவ மதமாற்ற அமைப்பின் அதிகார பூர்வ தொலை காட்சியும் ஆன, CNN – IBN இப்பொழுது வெளியிட்டு உள்ளது,

  பாமரர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் போகலாம் ஆனால் பகுத்தறிவு கம்யூனிஸ்ட் வாதிகளுக்கு தெரியாமல் போனது வியப்புக்கு உரியது.

  2002 இல் இவருடைய உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் கூறியதாவது, இந்த IPS அதிகாரி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என்று.

  http://articles.timesofindia.indiatimes.com/2011-04-23/india/29466229_1_ips-officer-godhra-train-sanjiv-bhatt

  இந்த பதிவு இந்த IPS அதிகாரியின் உச்ச நீதிமன்ற ப்ரமான பத்திரத்தை பற்றியது என்பதால், எனது கருத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

  இனி நடுநிலையாளர்கள் முடிவு செய்யட்டும் எது உண்மை எது பொய் என்று…

  ஒரு விஷத்தை பற்றி பொது வலை தளங்களில் போடும் முண்டு அதன் நம்பக தன்மையை பற்றி குறைந்த பட்சமாவது யோசிக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்காதவர் என்ற காரணத்துக்காக நம்பக தன்மை அற்ற கருத்துக்களை போடுவது குறுகிய எண்ணத்தை காட்டுகிறது.

  • இந்த அதிகாரியை இன்னொரு போலீஸ் ஆப்பீசர் அரசு வாகனத்தில், எந்த இடத்தில் ஆலோசனை கூட்டம் நடந்ததோ அங்கு இறக்கி இருக்கிறார், அதை கோர்டில் இறக்கியவர் சாட்சியமாக கூறி இருக்கிறார்

 12. சோழன்,
  கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள ஆதாரம் ஏற்கத்தக்கதல்ல.பயிரை மேய்ந்த வேலிக்கு ஆதரவாக ஓணான் சாட்சி சொல்லுவது போல மோடி நடத்திய முசுலிம் இனப்படுகொலைக்கு ஒத்துக்கையாக செயல்பட்ட காவல் துறை தலைவர் இப்போதும் மோடியை பாதுகாக்க எத்தணிக்கிறார்.கூட்டத்தில் பட் கலந்து கொண்டார் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் சுட்டியில் உள்ளது.

  http://www.thehindu.com/todays-paper/tp-national/article1719763.ece

  கொலைகாரர்களை நம்புவதா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையிலும் உண்மையை சொல்லும் அந்த காவல்துறை ஓட்டுனரை நம்புவதா என்பதை நடுநிலையாளர்கள் முடிவு செய்யட்டும்.

  \\இந்த IPS அதிகாரி இதனை நாள் எங்கு சென்றார். சரி 2004 வரை மட்டுமே பிஜேபி ஆட்சியில் இருந்தது. அதன் பின்பு காங்கிரஸ் தானே ஆட்சியில் உள்ளது. இவர் மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்தால் சிகப்பு கம்பள வரவேற்ப்பை காங்கிரஸ் மற்றும் ஆங்கில தொலை கட்சிகள் வழங்கி இருக்குமே? இந்த திடீர் ஞான உதயம் எங்கு இருந்து வந்தது//

  தனது வாக்குமூல பத்திரத்தில் ஏன் தாமதம் என்பதற்கான காரணத்தை சொல்லியுள்ளார்.பார்க்க சுட்டி.
  http://www.thehindu.com/todays-paper/tp-national/article1719761.ece

  மேலும், இப்போது பட் சொல்வதை எட்டு ஆண்டுகளுக்கு முன் சொன்ன அரண் பாண்ட்யா வுக்கு என்ன நேர்ந்தது என்ற பின்னணியில் இந்த தாமதத்தை பார்க்கவேண்டும்.உண்மையை ”மக்கள் நீதிமன்றத்தில்”சொன்ன பாண்ட்யா சட்டப்படியான நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளிக்கும் முன் கொல்லப்பட்டார்.தில்லியில் ஆட்சி மாறி விட்டாலும் குசராத்தில் அதே நல்லவர்கள்தானே ஆட்சியில் நீடிக்கிறார்கள்.மேலும் பா.ச.க.வுக்கும் காங்கிரசுக்கும் இந்துத்துவா கொள்கையில் பெரிய வேறுபாடு கிடையாது என்பதையும் காங்கிரசு கும்பல் தனது நலனுக்காக ப.ச.க.வுடன் சமரசம் செய்து கொள்ளவும் அதற்காக யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமாலும் பலி கொடுப்பார்கள் என்பதையும் உங்களை விட காவல்துறையினர் நன்கறிவார்கள். எவ்வளவு பெரிய மனப்போராட்டத்திற்கு பின் நண்பர்கள்,உறவினர்கள்,மற்றும் குடும்பத்தினரை ஒப்புக் கொள்ளவைத்து இப்படி உயிரே போனாலும் சரி உண்மையை சொல்வது என்ற முடிவுக்கு பட் வந்திருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

  மோடியின் மீதான வெறுப்பு காரணமாகவும்.,துறை சார்ந்த கார்ணங்களாலும் பட் இப்படி ஒரு வாக்குமூலம் தந்துள்ளார் என்று குற்றம் சொல்வதும் நியாயம் அல்ல.பதவி உயர்வையும் பணி நிலைமைகளையும் பெரிதாக கருதும் ஒரு காவல் துறை உயர் அலுவலர் உயிரையே பணயம் வைத்து ஆள்வோரை பகைத்துக் கொள்ள துணிவாரா.

 13. \ மேலும் பா.ச.க.வுக்கும் காங்கிரசுக்கும் இந்துத்துவா கொள்கையில் பெரிய வேறுபாடு கிடையாது என்பதையும் காங்கிரசு கும்பல் தனது நலனுக்காக ப.ச.க.வுடன் சமரசம் செய்து கொள்ளவும் \\

  இத்தாலிய சோனியா ஹிந்து தர்மத்தில் நாட்டம் உள்ள்ளவரா? நல்ல நகை சுவை.

  \\மோடியின் மீதான வெறுப்பு காரணமாகவும்.,துறை சார்ந்த கார்ணங்களாலும் பட் இப்படி ஒரு வாக்குமூலம் தந்துள்ளார் என்று குற்றம் சொல்வதும் நியாயம் அல்ல.பதவி உயர்வையும் பணி நிலைமைகளையும் பெரிதாக கருதும் ஒரு காவல் துறை உயர் அலுவலர் உயிரையே பணயம் வைத்து ஆள்வோரை பகைத்துக் கொள்ள துணிவாரா.\\

  எனது பின்னுட்டத்தை முழுமையாக படித்தீர்களா? இப்பொழுது மட்டும் இவருக்கு எப்படி தைரியம் வந்தது. சரி இதற்க்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

 14. \\இத்தாலிய சோனியா ஹிந்து தர்மத்தில் நாட்டம் உள்ள்ளவரா? நல்ல நகை சுவை.//

  ”இத்தாலிய சோனியா”வின் காங்கிரசுதான் 2002 குசராத் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் ஆங்கில வடிவத்தில் இடம் பெற்றிருந்த இந்துத்துவா என்ற சொல்லை நீக்கி விட்டு குசராத்தி மொழி வடிவ அறிக்கையை வெளியிட்டது.மேலும் அந்த தேர்தலை யாருடைய தலைமையில் காங்கிரசு சந்தித்தது.நினைவிருக்கிறதா. முன்னாள் ஆர்.எசு.எசு.காரர்,இந்துத்வா அரசியல்வாதி சங்கர் சிங் வகேலா தலைமையில்தான் காங்கிரசு களம் இறங்கியது.இந்துத்வா அரசியல் என்ற ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் பா.ச.க.வும் காங்கிரசும். அதற்கான குருதி சாட்சியம்தான் பாபர் மசூதி விவகாரம்.

  \\எனது பின்னுட்டத்தை முழுமையாக படித்தீர்களா? இப்பொழுது மட்டும் இவருக்கு எப்படி தைரியம் வந்தது.//

  உங்கள் பின்னூட்டத்தை முழுமையாக படித்து விட்டுத்தான் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறேன். உண்மையை உலகுக்கு சொல்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கான பட்டின் விளக்கத்தையும்,அது குறித்த எனது விளக்கத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.எனது பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

 15. லட்சகணக்கான ஹிந்துக்களை கொன்ற பருக்கு அப்துல்லாவை பற்றி எதுவும் சொல்ல மாட்டர்கள்? ஆயிரகணக்கான ஹிந்துக்களை ஒவ்வொரு வருடமும் கொல்லும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பற்றி வாயே திறக்க மாட்டர்கள். ஆயிர கணக்கான ஹிந்துக்களை கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, பீகார் மற்றும் சத்திஸ்கரில் கொல்லும் கம்யுனிச மற்றும் அதன் பரிவார் அமைப்புகளை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். கேட்டால் நாங்கள் எந்த மதமும் சார்தவர்கள் அல்ல என்று போலி மதவாதம் பேசுவதே இந்த கம்யூனிஸ்ட்களுக்கு பிழைப்பாக உள்ளது. மே 13 இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற கட்சியே காணாமல் போகும். விரைவில் இவர்கள் கட்சி கோடியை தொல் பொருள் அருங்காட்சி அகத்தில் காணலாம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிக பெரிய தோல்வி, அவர்களின் போலி மத சார்பின்மையே அன்றி வேறு எதவும் இல்லை.

  @ திப்பு,

  நீங்கள் மோடிக்கு எதிரான பட்டை நம்புகிறீர்கள். நான் அவருடைய உயர் அதிகாரியை நம்புகிறேன். அவ்வளவு தான். இவர் மீது கடந்த டிசம்பர் மாதம் அவர் செய்த ஊழலுக்கு சம்மன் வழங்கிய உடனேயே தான் இவர் இது போன்று பேசி உள்ளார். இனி தீர்ப்பு நீதிமன்றத்தில் தான் உள்ளது, தீர்ப்பு மோடிக்கு எதிராக இருந்தால் நீதி மன்றத்தை பற்றி ஏதும் பாராட்ட மாட்டார்கள். ஆனால் ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், நீதிமன்றம் காவி மயமாகி உள்ளது என்று தம்பட்டம் அடிப்பது.

  ராமர் கோயில் பிரச்சனை ஒரு சாதாரண பிரச்சனை. முஸ்லிம்களுக்கு மெக்கா எப்படியோ ஹிந்துக்களுக்கு அயோத்தி, முஸ்லிம்கள் எப்படி மெக்காவில் பிற வழிபாடுகளை அனுமதிக்க மாட்டார்களோ? கிருத்துவர்கள் வடிகானில் எப்படி பிற பிற வழிபாடுகளை அனுமதிக்க மாட்டார்களோ? அது போலவே அயோத்தியில் பிற வழிபாடுகள் அனுமதிக்க மாட்டது,

  ஹிந்துக்கள் இந்தியாவின் 45 சதவிகித நிலத்தை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் என்ற பெயரில் கொடுத்து உள்ளனர். இந்த நிலத்தில் ஆயிர கணக்கான கோயில்களும் அடங்கும். ஆனால் முஸ்லிம்கள் ஒரு சில ஏக்கர் நிலத்தை அதுவும் ஹிந்துக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலத்தை கொடுக்க மாட்டேன் என்று சொல்வது ரொம்ப ஓவர்? பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஹிந்துக்களின் சதவிகிதம் எவ்வளவு குறைந்து உள்ளது, இந்தியாவில் இவர்கள் சதவிகிதம் எவ்வளவு அதிகரித்து உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.

  காஷ்மீரில் எத்தனையோ கோயில்கள் இடிக்கப்ட்டு உள்ளன. அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்படும் உள்ளன. அதற்கு எல்லாம் குமரியில் என்ன போராட்டம் நடந்ததா என்ன?

  • சோழன்,

   சமீபமாகத்தான் வினவுக்கு வருகிறீர்கள் போலும். ஒரு கோரிக்கை பார்ப்பனியம், பா.ஜ.க தலைப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் படிக்கவும். ஒவ்வொரு முறையும் “முதல்ல இருந்தா….” என்பது கொஞ்சம் போரடிக்கிறது. பிரச்சாரக் ஜிக்கள உங்கள் சிந்தனையில் நிறைய பொய்களை விதைத்திருக்கிறார்கள். அதை வளர விடுவது கேன்சர் வருவதற்கு சமம். அந்த நோயை சரிபடுத்த வேண்டுமென்றால் தொடர்ந்து வினவு வாசிக்கவும். மருந்து நன்கு வேலை செய்யும்.

   தற்போது ஒரு காட்டமான மருந்து படித்து பாருங்கள்…..https://www.vinavu.com/2011/01/14/indian-rights/ காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி !

 16. 1) லட்சகணக்கான ஹிந்துக்களை கொன்ற பருக்கு அப்துல்லா

  2) ஆயிரகணக்கான ஹிந்துக்களை ஒவ்வொரு வருடமும் கொல்லும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்

  3)ஆயிர கணக்கான ஹிந்துக்களை கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, பீகார் மற்றும் சத்திஸ்கரில் கொல்லும் கம்யுனிச மற்றும் அதன் பரிவார் அமைப்பு

  4) முஸ்லிம்களுக்கு மெக்கா எப்படியோ ஹிந்துக்களுக்கு அயோத்தி,

  5) ஹிந்துக்கள் இந்தியாவின் 45 சதவிகித நிலத்தை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் என்ற பெயரில் கொடுத்து உள்ளனர்.

  6) பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஹிந்துக்களின் சதவிகிதம் எவ்வளவு குறைந்து உள்ளது,

  7) காஷ்மீரில் எத்தனையோ கோயில்கள் இடிக்கப்ட்டு உள்ளன. அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்படும் உள்ளன.

  அடப்பாவி மனுஷா, வாயில பொய்யும் அவதூறையும் தவிர வேற ஒரு எழவும் வராதா?

  ஆர்.எஸ்.எஸ்க்கு உங்க மூளையை அடகு வச்சீங்களா இல்ல மொத்தமா வித்துட்டீங்களா? இதுல எதையாவது நிரூபிக்க நீங்க எடுக்கும் முயற்சியில உங்களுக்கே அந்த விசயம் தெரியவரும் அப்ப வந்து இங்க சொல்லுங்க

 17. பொதுவாக எனக்கு நிறைய கம்யூனிஸ்ட் தோழர்கள் பூணுல் போட்டு இருக்கின்றனர். இப்பொழுது என்னை RSS அமைப்புடன் இணைத்து பேசி உள்ளனர் :). இதற்கு நான் முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். .

  எங்கள் ஊரில் முஸ்லிம்கள் ஐந்து வருடம்முன்பு ஆறு தெருவில் மட்டுமே வசித்து இருந்தனர். இப்பொழுது அவர்கள் இருப்பது 12 தெருவில். இது ஒன்றே போதும் இவர்கள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு. சரி அவர்கள் வாழ்கை அவர்கள எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் அவர்கள் மதம் கூறிய படி பெற்று கொள்ளட்டும். நான் இங்கு சொல்ல விரும்புவது, ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தை ஒப்பிட்டு பேசுகிறேன்.

  http://en.wikipedia.org/wiki/Kashmiri_Pandit#Ethnic_Cleansing.2C_Genocide_and_Exodus_from_Kashmir_.281985-1995.29

  http://en.wikipedia.org/wiki/1998_Wandhama_மச்சச்ரே

  http://www.kashmiri-pandit.org/sundry/genocide.html

  http://www.mukto-mona.com/human_rights/ethnic_clensing_Bangladesh.html

  இவ்வளவு பேசியும் நீங்கள் இந்த லிங்கெல்லாம் பொய் என்று சொல்வர்கள். இருந்தாலும் கொடுக்க வேண்டியது எனது கடமை. நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். நீங்கள் ஏன் ஒரு பேச்சுக்கு காஷ்மீர், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு வினவு அமைப்பின் சார்பில் சென்று வரக்கூடாது, உண்மையில் வினவு போன்ற அமைப்புகள் இருக்க சிறந்த இடம் பாகிஸ்தான் தான்.

  • சோழன்,

   \\நீங்கள் மோடிக்கு எதிரான பட்டை நம்புகிறீர்கள். நான் அவருடைய உயர் அதிகாரியை நம்புகிறேன். அவ்வளவு தான். இவர் மீது கடந்த டிசம்பர் மாதம் அவர் செய்த ஊழலுக்கு சம்மன் வழங்கிய உடனேயே தான் இவர் இது போன்று பேசி உள்ளார்.//

   மோடிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விட முடியுமா.ஆட்சியாளருக்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டு மீதான நடவடிக்கைகள் தீவிரமடையுமே தவிர குறைந்து விடாது.இதை ஒரு உயர்நிலை பள்ளி மாணவன் கூட அறிவான்.உங்களுக்கு தெரியாதா.

   \\ஒரு விஷத்தை பற்றி பொது வலை தளங்களில் போடும் முண்டு அதன் நம்பக தன்மையை பற்றி குறைந்த பட்சமாவது யோசிக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்காதவர் என்ற காரணத்துக்காக நம்பக தன்மை அற்ற கருத்துக்களை போடுவது குறுகிய எண்ணத்தை காட்டுகிறது.//

   இது நீங்கள் சொன்னதுதான்.நம்பகமான ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்ற சத்திய ஆவேசம் பொங்க வினவின் இந்த பதிவு நம்பகமானது அல்ல என நிறுவ முயன்றீர்கள்.ஆதாரங்கள் அளித்து விளக்கமும் தந்த பின் அவற்றை மறுக்க முடியாமல் அவதூறுகளை அள்ளி இறைக்கிறீர்கள்.

   \\லட்சகணக்கான ஹிந்துக்களை கொன்ற பருக்கு அப்துல்லாவை பற்றி எதுவும் சொல்ல மாட்டர்கள்? ஆயிரகணக்கான ஹிந்துக்களை ஒவ்வொரு வருடமும் கொல்லும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பற்றி வாயே திறக்க மாட்டர்கள். ஆயிர கணக்கான ஹிந்துக்களை கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, பீகார் மற்றும் சத்திஸ்கரில் கொல்லும் கம்யுனிச மற்றும் அதன் பரிவார் அமைப்புகளை பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.//

   கூசாமல் இவ்வளவு பொய்களை அவிழ்த்து விட உங்களால் முடிகிறதே என ஆச்சரியமாக உள்ளது..இதற்கும் சத்திய ஆவேசம் பொங்க நம்பகமான ஆதாரங்கள் தரமுடியுமா உங்களால்.

   \\எங்கள் ஊரில் முஸ்லிம்கள் ஐந்து வருடம்முன்பு ஆறு தெருவில் மட்டுமே வசித்து இருந்தனர். இப்பொழுது அவர்கள் இருப்பது 12 தெருவில். இது ஒன்றே போதும் இவர்கள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு. //

   பொய் சொல்வது என முடிவு எடுத்து விட்டோம்.அதை அறிவுக்கு பொருத்தமாக சொன்னால் என்ன,சும்மா அடித்து விட்டால் என்ன என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது.பாருங்கள்.ஆறு தெருக்களில் வாழ்ந்தவர்கள் ஐந்தே ஆண்டுகளில் அப்படியே இரண்டு மடங்கு ஆனால்தான் 12 தெருக்களில் வாழ்வார்கள்.அதாவது ஆயிரம் பேர் ஆயிரம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.என்ன ஒரு கேலிக்கூத்தான கூற்று.

   \\என்னை RSS அமைப்புடன் இணைத்து பேசி உள்ளனர் . இதற்கு நான் முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.//

   ஆம்,அந்த அமைப்பின் பரப்புரை வித்தைகள் அனைத்தும் உங்களுக்கு கை வந்த கலையாக உள்ளன.

 18. @ vinavu:

  \\ காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி \\

  hmm.. How does it relate to my comments? I have already given my comments on this. Dont want to repeat again. If you are very much interested, Please search with my email id available in your databse. By the way, i dont prefer the intercaste marriage. it is not possible for me to marry a person who doesn’t follow my way of living. Is it possible for you to marry a girl / boy who belongs to ireland? Marriage is not about sex. We Hindus doesn’t go with intercaste marriage. what about yout leaders? what about prakash karat, brinda karat and budda dev?

  \\பார்ப்பனியம், பா.ஜ.க தலைப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் படிக்கவும். ஒவ்வொரு முறையும் “முதல்ல இருந்தா….” என்பது கொஞ்சம் போரடிக்கிறது\\

  BJP rules more than 6 states. None of these states are ruled by bhramin BJP leaders. At last, Modi and Advani (potentional PM candidate) doesn’t belong to Bhramin community. Infact Bhramins in general dont vote for BJP. I have answered for your questions n number of times in your website. As like any other politcal party, we too have bhramin leaders like susma shivraj… in our party. Most of top communist leaders belongs to upper caste. Dont you know that 🙂 I am not the BJP member. Because of my interest on international and national level pollitics, I too have some basis knowledge about each and every political party. I dont belong to bhramin community, still i dont have any prolem in supporting Susma shivraj.

  \\தற்போது ஒரு காட்டமான மருந்து படித்து பாருங்கள்…..https://www.vinavu.com/2011/01/14/indian-rights/ காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி ! \\

  your comments exposes your immature behaviour. I lost my respect on vinavu after reading this comment. It shows your childish behaviour. I wouldn’t have taken it seariouly.. if some anonymous writes like this. But, the website owner himself replies in such a uncivilized manner.

  I have read this topic long back. especially, i enjoyed a lot while reading the comments written by Republic Indian.

  ஹிந்து மத்தம் என்ற கொள்கையில் இருந்து ஹிந்து மதம் என்ற வகையில் நான் செல்ல காரணமே உங்களை போன்ற ஒரு போலி நாத்திக வாதியால் தான் என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன். நான் ஒன்றும் பகுத்தறிவை குத்தகைக்கு எடுத்து டாக்டர் பட்டம் வாங்கியவன் கிடையாது. இறைவனே சொன்னாலும் அது சரியா தவறா என்று யோசிக்க சொல்லும் நக்கீரர் வாழ்ந்த பாரத பண்பாட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். ஒரு RSS பிரசாரக் சொல்லியா நான் மாறிவிட போகிறேன்.

  நான் ஹிந்து வலை தளங்களை காட்டிலும், உங்களை போன்ற போலி மதவாதிகள் வலைதளங்களுக்கு தான் செல்கிறேன். ஒரு நாளும் நான் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ வலை தளங்களுக்கு செல்வது இல்லை. ஏன் எனில் அவர்கள், அவர்கள் மதத்தில் உண்மையாக உள்ளனர்.

  அவரவர் மனசாட்சிக்கு தெரியும் யார் போலி யார் உண்மையானவர் என்று? நான் எனது கோட்பாட்டின் படி தான் இருக்கிறேன். நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்களா அல்லது கிறித்துவ யுரோவுக்கும் , சௌதி ரியால்களுக்கும், கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்று சொல்லும் விசயத்திற்கு முற்றிலும் புறம்பான சீனா யுவான்களுக்கும் சலாம் போடும் அடியாட்களா என்று?

  கடைசியா நீங்கள் எல்லாம் போலி கம்யூனிஸ்ட்கள்.

 19. //நக்கீரர் வாழ்ந்த பாரத பண்பாட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். ஒரு RSS பிரசாரக் சொல்லியா நான் மாறிவிட போகிறேன்.//

  மேற்படி நக்கீரர் பரம்பரை அவர்கள், இதே பதிவின் பின்னூட்டத்தில் அவர் சொல்லிய கீழ் வரும் பொய்க்கு ஒரு ஆதாரம் கொடுத்தால் ஆத்மா சாந்தியடையும்.

  சோழன் அவர்களின் பொய்:

  //
  3)ஆயிர கணக்கான ஹிந்துக்களை கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, பீகார் மற்றும் சத்திஸ்கரில் கொல்லும் கம்யுனிச மற்றும் அதன் பரிவார் அமைப்பு//

 20. சோழன் அ க அ நக்கீரன் பரம்பரையின் அடுத்த பொய்

  //எங்கள் ஊரில் முஸ்லிம்கள் ஐந்து வருடம்முன்பு ஆறு தெருவில் மட்டுமே வசித்து இருந்தனர். இப்பொழுது அவர்கள் இருப்பது 12 தெருவில்//

  முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆர் எஸ் எஸ் சாராயம் அடித்த மூளை மட்டுமே இதனை நம்பும். நாட்டின் தலைவிதியை பக்கத்துத் தெருவில் தேடும் ஒருவர் இவ்வாறு பேசுவதில் ஆச்சர்யம் இல்லை.

 21. ஆனாப் பாருங்க நம்ம சோழன் அவர்கள் மோடியின் படுகொலை பற்றி எதுவுமே சொல்ல மாட்டார். ஏன்னா அவர்தான் நக்கீரார் ஆயிற்றே…

 22. @ asuran ( i dont know why you are using so called aryan word)

  நான் எந்த இடத்தில சொன்னேன் நக்கீரர் பரம்பரை சேர்ந்தவன் என்று ? ஒரு பின்னூட்டத்தில் கூடவா பொய் பேசுவது? தமிழ் தெரியுமா அல்லது தெரியாதா?

  \\ முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆர் எஸ் எஸ் சாராயம் அடித்த மூளை மட்டுமே இதனை நம்பும். நாட்டின் தலைவிதியை பக்கத்துத் தெருவில் தேடும் ஒருவர் இவ்வாறு பேசுவதில் ஆச்சர்யம் இல்\\

  உங்கள் அறிவை நினைத்தால் எனக்கு அச்சர்யமாக உள்ளது. பூனை கண்ணை மூடி விட்டால் உலகமே இருண்டு விடுமாம் 🙂

  http://en.wikipedia.org/wiki/Islam_in_India
  http://www.kashmirherald.com/featuredarticle/indiacensus.html
  http://www.cfr.org/india/indias-muslim-population/p13659

 23. @ thippu,

  \\ இது நீங்கள் சொன்னதுதான்.நம்பகமான ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்ற சத்திய ஆவேசம் பொங்க வினவின் இந்த பதிவு நம்பகமானது அல்ல என நிறுவ முயன்றீர்கள்.\\

  உங்கள் பேருக்கும் நீங்கள் சார்ந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லையே 🙂

  • சோழன்,

   உங்கள் வாதங்களின் போலித்தனத்தை தோலுரித்து காட்டிய எனது வாதங்களுக்கு பதில் சொல்ல வகையற்று அவதூறுகளை அள்ளி வீசுகிறீர்கள்.

 24. உங்கள் லட்சணத்தை நான் வேறு ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமா? சிங்குரில் நீங்கள் செய்த அட்டுழியத்தை தான் ஆங்கில தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ததே? youtube தொடங்கி விக்கிபீடியா வரைக்கும் உங்கள் புகழ் தான் உலகம் எங்கும் பரவிக்கொண்டு இருக்கிறதே. இருந்தாலும் என்வழியாக இந்த தகவல்களை அறிய விருப்ப படுவதால், நான் இதுநாள் வரை உங்களை பற்றி படித்த லிங்குகளை தொகுத்து இங்கு வழங்குகிறேன்.

  உங்கள் கம்யூனிஸ்ட் அமைப்பை சார்ந்த உலக அளவிய terrorist குழுக்கள் பற்றி இங்குள்ள வலை தலத்தில் தெளிவாக உள்ளது.
  http://en.wikipedia.org/wiki/List_of_designated_terrorist_organizations
  http://en.wikipedia.org/wiki/Communist_terrorism

  இந்தியாவில் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் அமைப்புகள்:
  http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/index.html
  http://www.satp.org/satporgtp/countries/india/index.html

  எத்தனையோ ஆதரங்கள் பத்திரிகை செய்திகள் இருந்தாலும் உங்களை பற்றி மிக சிறப்பாக தெளிவாக ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வாறு எல்லாம் கொலை வெறி பிடித்து மக்களை கொன்று குவித்து உள்ளீர்கள், அப்பாவி பெண்களை எவ்வாறு வன்புணர்வு செய்து காம கொடுரத்தை அரங்கு ஏற்றினீர்கள் என்று தெளிவாக ஒருவர் கூறியுள்ளார்.

  i understand your difficulty in getting the right things. So, i would like to brief about this website well. Let us start now.

  உங்களை பற்றிய ஒரு சிறப்பான assesment , மாநில வாரியாக கொடுக்க பட்டு உள்ளது.
  http://www.satp.org/satporgtp/countries/india/maoist/Assessment/index.html

  மேலே கொடுக்க பட்ட விஷயங்கள் உங்கள் இயக்கத்தை சேர்ந்த வெறி நாய்களை எவ்வாறு எல்லாம் காவல் துறையினர் தங்கள் இன்னுயிர் நீத்து வேட்டை ஆடி அப்பாவி மக்களை காப்பாற்றியதை பற்றியே அதிகமாக சொல்கிறது. சரி உங்கள் ரத்த வெறியாட்டத்தின் பக்கங்களை கொஞ்சம் பார்ப்போம்

  நீங்கள் நடத்திய வெடி குண்டு தாக்குதல்கள் அதில் உயிர் நீத்த அப்பாவி கிராம புற ஏழை விவசாயிகள், மலை சாதியினர், உங்கள் பொய் பிரசார மொழியில் தலித்துக்கள் பற்றிய விவரங்கள்.

  http://www.satp.org/satporgtp/countries/india/maoist/data_sheets/bombblast2011.htm

  சரி குண்டு வெடிப்பு மட்டுமா, மிருகமாவது பசிக்க கொல்லும். நீங்களோ?

  http://www.satp.org/satporgtp/sair/Archives/sair9/9_25.htm#assessment1
  http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/PWG.htm

  கடைசியாக கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் இஸ்லாமிய, கிறித்துவ மற்றும் கம்யூனிஸ்ட் தீவிரவாத குழுக்கள் பற்றிய ஒரு தெளிவான கட்டுரைகள்.
  http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/index.html

  அமைதியாக வாழும் பூடான் புத்த மத நாட்டை கூட உங்கள் மிருக பசிக்கு தப்பவில்லையே?
  http://www.satp.org/satporgtp/countries/bhutan/index.html

  இந்த லட்சணத்தில் நீங்கள் மோடியை பற்றி குறை சொல்கிறீர்கள். நான் கொடுத்தது நீங்கள் இந்தியாவில் செய்த கொடுமைகளை பற்றி மட்டுமே. உலக அளாவிய விசயங்களை பற்றி நான் எடுத்தல் அவ்வளவு தான். ஒரு வாரம் முழுக்க நான் எனது கணினி முன்பு உட்கார வேண்டும்.

  சாத்தான் வேதம் ஊதுகிறது என்பதை போல் நீங்கள் மோடியை பற்றி பேசுகிறீர்கள். மோடி இந்த நாட்டின் பிரதமர் ஆகா தான் போகிறார். உங்கள் வெறி பிடித்த கோட்பாடுகளை விட்டு, மக்கள் மகிழ்ச்சியாக வாழ தான் போகிறார்கள்.

  கடைசியாக எனக்கு பிடித்த ஒரு வசனம்… பிரகாஷ் ராஜ் ஒரு கம்யூனிஸ்ட் ஆகா இருந்து ஒரு அரசியல் வாதியாக ஊழல் செய்து பணக்காரராக மாறி ஒரு டயலாக் அடிப்பார்.

  நான் தொழிலாளியாக இருந்த பொழுது பணக்காரர்களை பார்த்தல் எனக்குள் ஒரு தீ எறியும். அது புரட்சி தீ என்று நினைத்தேன். இப்பொழுது தான் தெரிகிறது அது புரட்சி தீ இல்லை வயிற்றெரிச்சல் என்று 🙂

 25. சட்டாப்புலேருந்து லிங்கு எடுத்து போடுறத பாரு, இதுக்கு பேசாம மோடிகிட்டேருந்தே மோடிக்கு ஒரு நன்னடத்தை சர்டிபிகேட்டு வாங்கி போடலாமே. சரியான காமெடி பீசுகளப்பா

  • பயங்கரவாத தாக்குதல்கள் யார் நடத்தியதாக இருந்தாலும் அவை நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியவையே.முசுலிம் பெயர்தாங்கிகள் சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டபோது அவற்றை முசுலிம் இயக்கங்கள்,அமைப்புகள் மற்றும் முசுலிம்கள் அவற்றை கண்டித்துள்ளனர். முசுலிம் சமூகம் பயங்கரவாத செயல்களை அங்கீகரிக்கவில்லை.

   ஆனால் சங்பரிவார் அமைப்புகள் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை நாட்டுப்பற்று நடவடிக்கையாக உயர்த்தி பேசவும் அந்த காலிகளை போற்றி பாராட்டவும் இந்தியாவில் ஒரு கும்பல் ஆயத்தமாக இருப்பது இந்த நாட்டுக்கு பெருமை சேர்ப்பதா,இழிவு தருவதா.

   சரி சோழன்,உங்களிடம் சில நேரடியான வினாக்கள்.விடையும் நேரடியாக இருந்தால் நல்லது.

   1 .குசராத் இனப்படுகொலையின் போது சங் பரிவார் காலிகள் மூன்றே நாட்களில் இரண்டாயிரம் முசுலிம்களை கொன்றது குறித்து என்ன சொல்கிறீர்கள்.[கோத்ரா தொடர்வண்டி எரிப்பை காட்டி விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.அது குறித்து வினவில் நடந்த விவாதங்கள் தனியாக உள்ளன.விரும்பினால் அங்கு சென்று விவாதிக்கலாம்]

   2.அரியானா மாநிலம் லச்சார் நகரத்தில் செத்த பசு மாடு ஒன்றின் தோலை உரித்த ”கொடிய பாவத்திற்காக” ஐந்து தலித் இளைஞர்களை சங் பரிவார் காலிகள் அடித்தே கொன்றார்களே.அது குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   3.லச்சார் நிகழ்வு குறித்து வி.இ.பரிசத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்த கருத்து. ”கோமாதாவின் உயிர் எங்களுக்கு புனிதமானது”.இதன் பொருள் என்ன.தோலுரிக்கப்பட்ட அந்த மிருகத்தின் உயிர் ஐந்து தலித் மனித உயிர்களை விட மேலானது.இந்த கூற்றுக்காக அசோக் சிங்காலை கண்டிக்கிறீர்களா.பாராட்டுகிறீர்களா.

   4. சிடைன்சு பாதிரியாரை அவரது குழந்தைகளோடு சேர்த்து எரித்து கொன்றானே தாராசிங் என்ற அயோக்கியன்.பாதிரியார் வேண்டுமானால் சாவுத்தண்டனைக்குரிய மதப்பரப்புரை என்ற ”பாவத்தை” செய்தார்.[நல்வாய்ப்பாக அரசியல் அமைப்பு அவை உறுப்பினர்கள் யாரும் உயிரோடு இல்லை.இருந்திருந்தால் ”ஏண்டா மதப்பரப்புரை உரிமையை அரசியல் சட்டத்தில் வழங்கினீர்கள்”என்று அவர்களையும் போட்டு தள்ளி இருப்பார்கள் உங்கள் பெரு மதிப்பிற்குரிய சங் பரிவார் காலிகள்]. பாதிரியாரின் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.அவர்களையும் கொன்றார்களே. இந்த கொடூர செயல் குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   5.மத்திய பிரதேசத்தில் கிறித்துவ கன்னித் துறவிகள் மீது பாலியல் வன்முறையை ஏவிய சங் பரிவார் குண்டர்களின் மாபாதகத்தை ”கோபம் கொண்ட இந்து இளைஞர்களின் நாட்டுப்பற்று மிக்க நடவடிக்கை” என்று நியாயப்படுத்திய சங் பரிவார் கும்பலின் திமிர்வாதம் குறித்து என்ன சொல்கிறீர்கள்.

   6.மாலேகான்,அச்மீர்,ஐதராபாத் என சங் பரிவார் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதல்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்

  • இல்லயா பின்ன கொலகாரப்பயலுவலா பாத்து இல்ல ஐனா சர்டிபிகேட்டு கொடுக்கும், ரத்தவெறி பிடித்த மோடி வரிசையில், ராஜபட்சேவுக்கு கூட சர்டிபேகேட்டு கொடுத்தாய்ங்க.

 26. இலங்கை தமிழர் சாவுக்கு முழு முதற் காரணம் உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அயோகியர்கள் தான் காரணம். எரியிற நெருப்புலே என்னையே ஊத்தி, ரெண்டு பெரும் அடிசிகிட்டு சாவுரப்ப BJP கூட நாடாளு மன்றத்துல பெரிய பிரச்சனை செய்தது. உங்கள் கம்யூனிஸ்ட் கட்சி என்ன கிழித்து. உங்கள் சீனா தான் அங்கு முழுமையான LTTE நிலைகளை தெளிவாக கூறியது. இதற்காக நீங்கள் சீனா அதிபர் வந்த பொழுது என்ன போராட்டம் நடத்தினீர்கள். இந்த நிலையில் சினிமா நடிகர் மக்களுக்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை என்று அவர் மீது வசவு வாரி பொழிகிறீர்கள். சோனியாவின் முழு உதவியால் தான் இலங்கையில் அதிக அளவு உயிர் சேதம் நடந்தது என்று தெரியாதா? ஐயோ பாவம் பல ஆயிரம் தாண்டி இருக்கும் கியூபா பற்றி வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்ட்கள், பக்கத்தில் இருக்கும் இலங்கை பற்றி மறந்தது எனோ?

  மேற்கு வங்கத்தில் நடக்கும் கொலை கொள்ளைகளுக்கு புத்ததேவ் பட்டச்சார்யா எப்படி பொறுப்பு ஏற்க மட்டரோ, அப்படியே மோடியும் குஜராத் கலவரத்திற்கு பொறுப்பு ஏற்க்க மாட்டார். இத்தனைக்கும் காவல் துறை சுட்டு 400 மேற்பட்ட ஹிந்துக்கள் இறந்தது யாருக்கும் தெரியவில்லை பாவம்.

  http://www.rediff.com/news/2003/sep/16godhra.htm
  http://www.gujaratriots.com/37/attacks-on-hindus/
  http://www.dailypioneer.com/335216/Teesta-lured-me-into-lying-Best-Bakery-witness-to-HC.html

  முப்பது வருடம் இவர்கள் கம்யுனிச ஆட்சியில் மேற்கு வங்கம் எவ்வளவு பின் தங்கி உள்ளதே இதற்கு ஒரு சாட்சி. வாய் கிழிய உலக வங்கி மற்றும் அதன் போக்கை கண்டிப்பார்கள். அதன் பிறகு அவனிடமே பொய் அய்யா தாயே பிச்சை போடுங்கய்யா என்று சூடு சுரணை வெக்கம் மானம் ரோசம் எதுவும் இன்றி நிற்பார்கள். இவர்கள் நடத்திய இந்த சிறந்த ஆட்சியில் மாநிலம் திவால் ஆகிவிட போகிறது 🙂
  உங்களை பார்க்கும் பொழுது, ஊழலுக்கு பேர் போன திராவிட கட்சிகள் கூட ஓரளவுக்கு நல் ஆட்சியை தான் கொடுத்தது.

  ஒழுங்காக படிக்காமல், ஒழுங்காக வேலை செய்யாமல் சோம்பேறி ஆட்கள் யார் என்று கேட்டல் உங்களை தான் சொல்ல வேண்டும். ஏன் நானே பார்த்து உள்ளேனே? நான் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சிக்காக சென்றபொழுது வேலை செய்வேன். அப்பொழுது தான் முதன் முதலாக இந்த தொழிற் சங்க தலைவர்களின் அய்யோகியே தனம் அனைதும் நேரடியாக தெரியவந்தது.

  இதை பற்றி கேட்டால் அவன் பார் எவ்வளவு சோம்பேறி தனமாக இருக்கிறன்? இவன் பார் ஒரு வேலையும் செய்யாமல் ஊழல் செய்து சம்பாதிக்கிறான் என்று கொடி பிடிப்பது.

  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதற்கு திவாலாகி மேற்கு வங்க கம்யூனிஸ்ட் மாநிலத்திற்கு தான் முழுமையாக பொருந்தும் 🙂

 27. @ Thippu,

  \\ கூசாமல் இவ்வளவு பொய்களை அவிழ்த்து விட உங்களால் முடிகிறதே என ஆச்சரியமாக உள்ளது..இதற்கும் சத்திய ஆவேசம் பொங்க நம்பகமான ஆதாரங்கள் தரமுடியுமா உங்களால்.\\

  முதலில் நான் சொல்வதை பொய் என்று சொன்னிர்கள். இப்பொழுது,

  \\அவற்றை முசுலிம் இயக்கங்கள்,அமைப்புகள் மற்றும் முசுலிம்கள் அவற்றை கண்டித்துள்ளனர். முசுலிம் சமூகம் பயங்கரவாத செயல்களை அங்கீகரிக்கவில்லை.\\

  நல்ல நகை சுவை 🙂 முதலில் எதுவுமே நடக்கவில்லை என்று சொன்னிர்கள். இப்பொழுது நடந்தது, ஆனால் அதை நாங்கள் கண்டிக்கிறோம்.

  your comments exposes you well. I would request you to get training from your western missionary masters again… for writing the comments in blog.

  • மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எனபது இதுதானோ.

   \\லட்சகணக்கான ஹிந்துக்களை கொன்ற பருக்கு அப்துல்லாவை பற்றி எதுவும் சொல்ல மாட்டர்கள்? ஆயிரகணக்கான ஹிந்துக்களை ஒவ்வொரு வருடமும் கொல்லும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பற்றி வாயே திறக்க மாட்டர்கள். ஆயிர கணக்கான ஹிந்துக்களை கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, பீகார் மற்றும் சத்திஸ்கரில் கொல்லும் கம்யுனிச மற்றும் அதன் பரிவார் அமைப்புகளை பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.//

   ஐயா கில்லாடி சோழன்,உங்களுடைய இந்த உளறலுக்கு சொன்ன பதில்தான் இது.

   \\கூசாமல் இவ்வளவு பொய்களை அவிழ்த்து விட உங்களால் முடிகிறதே என ஆச்சரியமாக உள்ளது..இதற்கும் சத்திய ஆவேசம் பொங்க நம்பகமான ஆதாரங்கள் தரமுடியுமா உங்களால்.//

   இந்த கூற்றை பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சொன்னதாக திரிக்கிறீர்கள்.

  • Cholan, its really good. All your references are speaking of its own. If you read their replies, they never talked about different links provided by you – rather simply scolding you !!.. Poor guys. Ellane neenga kudutha link ellam ‘poi’ – aana avanga ethavathu link kudutha, neenga keetukanum. Avangala madakiningana, Mr. adiyamanku nadanthathuthan nadakum – ooooram kattiruvanga.

   Finally, i read vinavu site, whenever i feel bored – many such funny articles has been written by them. Ore comedia erukum. Ofcourse,they too have some very nice articles like BR Brinjal, Cong. scandals, US dictarship on many regions.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க