Tuesday, December 3, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் 'கனிவு'!

அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!

-

செய்தி -108

கூடங்குளம்-தடியடி

கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.

இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.

பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ஆராய்ந்து அணுமின்நிலையம் செயல்படலாம் என்று தீர்ப்பினை அளித்த பிறகு அணுமின்நிலையத்தை முடக்குவது பொருத்தமாகாது என்றும் ‘சட்டத்தின்’ ஆட்சியை நினைவு படுத்துகிறார் ஜெயா. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று இதே உயர்நீதிமன்றம் சொன்ன பிறகும் நடுராத்திரியில் உச்சநீதிமன்ற நீதிபதியை எழுப்பி தடை வாங்க முயன்றவர்தான் இந்த ஜெயலலிதா. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தையே வாய்தா மன்றமாக ஆக்கி வாய்தா ராணி என்று பட்டமும் பெற்றவர் நீதிமன்றத்தை எதிர்க்கக் கூடாது என்று சொல்வதற்கும் சாத்தான் வேதம் ஓதுவதற்கும் என்ன வேறுபாடு?

போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும்  மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?

“தங்களையும், அணுமின்நிலையத்தையும் காப்பாற்ற வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்” என்கிறார் ஜெயலலிதா.  இடிந்தகரையிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளைக் கொடிகளுடன் அமைதி வழியில் முற்றுகை நடத்துவதாகத்தான் அறிவித்தார்கள், செய்தார்கள். அவர்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள் என்பதை இப்போது அல்ல கடந்த ஓராண்டுகளாகவே பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது வன்முறையை யார் கட்டவிழ்த்தார்கள்?

அணிதிரண்டு வந்த மக்களிடம் பேசிய போலீசு அதிகாரிகள் அனைவரும் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது, கலைந்து செல்லுங்கள் என்றுதான் மிரட்டியிருக்கிறார்கள். இது தொலைக்காட்சிகளிலும் வந்திருக்கிறது. போராடவே கூடாது என்று தடை போட்டு விட்டு பிறகு வன்முறை என்று திரிக்க வேண்டிய அவசியம் என்ன?

அணுமின்நிலையம் வந்தால் அப்பகுதி மக்கள் அனைவரின் வாழ்க்கையும் மரண அபாயத்தில் தள்ளப்படும். அந்த அபாயத்தை எதிர்த்து போராடுவதை ஒடுக்கி அணுமின்நிலையத்தை காப்பாற்றுகிறோம் என்றால் என்ன பொருள்? அணுமின்நிலையம் வந்தாலும் மரணம், அதை எதிர்த்து போராடினாலும் மரணம் என்று மிரட்டுவது யார்?

இத்தனை ஆயிரம் மக்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசு நடத்திய திட்டமிட்ட தாக்குதல்தான் அந்த தடியடி. இதைத்தான் நாசுக்கான நயவஞ்சக மொழியில் பாசிச ஜெயலலிதா நியாயப்படுத்துகிறார். இதற்கு அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட்டு அணுமின்நிலையத்தை சேமமாக நடத்தலாமே?

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. இதற்கு அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட்டு அணுமின்நிலையத்தை சேமமாக நடத்தலாமே?

    Thats a good idea…. hats off to vinavu team.. First time in your life you have given a valuable suggestion.

  2. இனி யோசிக்க வேண்டியது உதயகுமார் அவர்களே! நீங்கள்தான். உங்களது மனப்பூர்வமான, சித்தாந்தரீதியான நம்பிக்கையும் கொள்கையும் என்பது எவ்வளவு கற்பனையானது என்பதை இன்னும் சில அந்தோணிசாமிகள்தான் வந்துதான் நிரூபிக்கவேண்டுமா? வை.கோவும், நெடுமாறனும் எப்படி தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடாமல் இவ்வளவு நாளாக அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல்தான் இனி நீங்கள் இடிந்தகரை மக்களையும் காப்பாற்றப்போகிறீர்களா? மக்கள் சொல்கிறார்கள், “போலீசே! கம்பைப்போட்டுவிட்டு வா! பார்த்துவிடுவோம்” என்று. ஓடினால் 1000 பேர் சாகலாம். திருப்பியடித்தால் 10 பேர்தான் சாவார்கள். ஆனால், வெற்றி நிச்சயம். 1908 -ல் வ.உ.சிதம்பரம் நடத்திய கோரல் மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் என்ன செய்தார்களோ, அதை இப்போதும் அவர்கள் செய்வார்கள். ஆனால், அதற்கு உதயகுமார் வ.உ.சிதம்பரமாக மாறவேண்டும். மாறுவீர்களா உதயகுமார்?

      • இப்போது நடப்பது போலீசு மக்களிடம் நடந்துகொள்வதின் எதிர்வினைதான். கூடங்குளம் மக்கள் இதுவரை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துதான் வந்திருக்கிறார்கள். அவர்கள் போராடத்தொடங்கினால், இந்தப் பத்தாயிரம் போலீசும் எந்த மூலைக்கு?

  3. உதயகுமார் அவர்களே, ஒருபோதிலும் உழைக்கும் மக்களுக்கு உதவாத அந்த அண்ணல், அற்பன் காந்தி வழியில் போராடுவதாக கூறிக்கொண்டு, அவர்களின் போராட்டத்தை வீண்செய்து விடாதீர்கள், முதலாளிய காவலர்களின் பால் இனியும் வேண்டுகோள் வைக்காதீர், முழி விழிப்புடன் நக்சல்பாரிப் பாதையில் வீழ்ச்சியடையாத போராட்டத்தில் ஒன்றுபடுங்கள், உழைக்கும் மக்களின் போராட்டம் வெல்லட்டும், நன்றி…

    • /*/வீழ்ச்சியடையாத போராட்டத்தில்/*/ ஆமா அது என்ன போராட்டம்… குழந்தைகளையும் பெண்களையும் மட்டும் போராட்டக்களத்தில் விட்டுவிட்டு அவர் மட்டும் எஸ்கேப் ஆவதா?

      அவரது மனைவி குழந்தைகள் எல்லாம் எங்கோ சேப்பா வைத்து விட்டு அப்பாவி மீனவர்களை மட்டும் பிரச்சாரம்(வழக்கமான மதமாற்றம் அல்ல) செய்து குடும்பத்தோடு பங்கேற்க்க செய்வதா?

      பொலீஸ் வந்தால் அப்பீட்டு ஆவது தான் போராட்டமா???

      • பாவம் பையா நீ, ஒரே முட்டாள் தனமான கருத்தை எத்தனை தடவை தான் சொல்லுவ? பொய் உட்கார்ந்து புதுசா யோசி…….

        • னீயும் எத்தனனாள் தான் சம்பந்தாசன்பந்தமில்லாம உளறுவ….னீ முதல்ல பழய கேள்விக்கு பதில் சொல்…

      • பையா! மீனவர்கள் அப்பாவிகள், உன்னைப்போன்ற மூளைக்கோளாறுக்கேசுகள் எல்லாம் புத்திசாலிகளா! நெட்டுல டைப் அடிக்கத்தெரிஞ்சதுக்கே அப்துல்காலாம் மாதிரி பேசுர!

        • சரி மயிலு நீ தான் அறிவாளி….டென்சன் ஆவாம கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுப்பா…கேள்வி டப்பா இருந்தா இப்படி டென்சன்ல உளறப்படாது…

  4. //அணிதிரண்டு வந்த மக்களிடம் பேசிய போலீசு அதிகாரிகள் அனைவரும் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது, கலைந்து செல்லுங்கள் என்றுதான் மிரட்டியிருக்கிறார்கள்.//

    அதென்னங்க? போலீஸ் சொன்னா மட்டும் ‘மிரட்டியிருக்கிறார்கள்’?

    • பி.ஆர்.பியிடம் இப்போது கூட என்ன செய்கிறது உங்கள் போலீசு? அது என்ன 144. கீழவளவு கிரானைட் குவாரிகளில் போட்டிருந்தது என்ன? 145ஆ? போலீசு பேசும்போது பார்த்திருப்பீர்கள். அய்யா சீனு மிரட்டும் போது பார்த்திருக்கிறீர்களா?

    • சீனுவும் பையாவும் எப்போதுமே கோமாளி அப்துல் கலாமை போல பெரும்பாண்மை மக்களுக்கு எதிராக தான் பேசுவார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க