தூத்துக்குடி படுகொலையில் 13 பேரைக் கொலை செய்த குற்றவாளியான போலீசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தூத்துக்குடியில் வன்முறையைத் தூண்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு மற்றும் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர்தான் என்று ஜோடிக்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்றாற் போல பல்வேறு பொய்வழக்குகளை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோரின் மீது போட்டுள்ளது.
 
இந்த பொய்வழக்குகள் எதுவும் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்திற்கோ அல்லது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கோ எதிரான கருத்தை உருவாக்க முடியாத காரணத்தால், தூத்துக்குடி மக்களையே தற்போது ஆயுதமாக உபயோகிக்கத் தயாராகிவிட்டது போலீசு.
 
மூன்று நாட்களுக்கு முன் தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகளை வைத்து மாநில சட்டப்பணிகள் ஆணையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான் மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டினர் என்று கூறியுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும் அதன் பின்னரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனும், அரிராகவனும் எங்கு சென்றார்கள் என்றும் கேட்டிருக்கின்றனர்.
 
கூடுதலாக, வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் மற்றும் அரிராகவன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மீனவர்கள்தான் போராட்டத்தைத் தூண்டியதாக எழுதிக் கொடுத்திருப்பதாகத் தாங்கள் அறிய வருவதாகக் கூறியிருக்கின்றனர் மீனவர்கள்.
 
இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்.
 
மீனவர்களின் மனுவில் இனி வரும் காலங்களில் போலீசு தங்களை தொல்லை செய்யக் கூடாது என்று கோரியிருப்பதில் தொடங்கி, போலீசின் வன்முறைச் செயல்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படாமலிருப்பது வரை அனைத்தையும் விரிவாக அலசுகிறார் மில்டன்.
 
மேலும் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதனும், அரிராகவனும் போராட்டக் களத்தில் இருந்ததையும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னும் அங்கு அவர்கள் அப்பாவி மக்கள் மீதான வழக்குகள் முறியடிக்கும் விதமாக செயல்பட்டதையும் விளக்குகிறார் மில்டன்.
 
கூடுதலாக, அந்த மனுவின் சாரம் எப்படி தொடக்கத்திலிருந்து போலீசு கூறும் பொய்களுக்கு துணை போவதாக இருக்கிறது என்பதையும், இது போன்ற புகார்கள், எப்படி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உதவும் என்பதையும் விளக்கிப் பேசி, மீனவர்கள் இது போன்ற போலீசின் மிரட்டலுக்குப் பலியாக வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார் மில்டன்.
 
பாருங்கள், பகிருங்கள்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க