ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிப்போம் | வைகோ | மில்டன் பேட்டி | காணொளி

சென்னை எழிலகத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு முன்னிலையில் தங்களது வாதங்களை வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.உ.பா.மை சென்னை ஒருங்கிணைபாளர் மில்டன் ஆகியோரின் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆலைக்கு எதிராக போராடிய மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, கண் துடைப்பு நடவடிக்கையாக ஆலையை சீல் வைத்தது. அதனை எதிர்த்து வேதாந்தா மேல்முறையீடு செய்து, அவ்வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வரும் சூழலில், தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவினரை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தரச் சொன்னது தே.ப.தீர்ப்பாயம்.

தூத்துக்குடி மக்கள் திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என ஆய்வுக் குழுவிடம் மனு அளித்தனர். சுமார் 93% மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகத் தெரிவித்தார் ஆய்வுக்குழு தலைவர்.

இது தொடர்பாக மீண்டும் ஒரு கருத்துக்கேட்புக் கூட்டத்தை சென்னையில் நடத்தி வருகிறது ஆய்வுக் குழு. பிரச்சினை தூத்துக்குடி மக்களுக்கு எனும் நிலையில், ஆய்வுக் குழு சென்னையில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ?

ஆய்வுக் குழு முன்னர் தங்கள் வாதங்களை வைக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சென்னை எழிலகத்தில் நேற்று குவிந்தனர். அங்கு வந்திருந்த மதிமுக-வின் பொதுச்செயலாளர் வைகோவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் ஜிம்ராஜ் மில்டனும் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி – காணொளி.
***

*****

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்

சந்தா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க